இன்றைய பதிவில் NRI நண்பர்களுக்கு வங்கிகளிலிருந்து கிடைக்கக்கூடிய கடன்களைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்.
சேமிப்பு கணக்குகளைப் போலவே NRI வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் விஷயத்திலும் இந்திய ரிசர்வ் வங்கியின் நியமங்களின்படியே வங்கிகள் கடன் வழங்க முடிகிறது. கடன் திட்டங்கள் எல்லா வங்கிகளிலும் சமமாகவே இருக்க வாய்ப்புள்ளது.
கடன் வழங்கப்படும் தொகையின் அளவு மற்றும் வட்டி விகிதங்களில் மட்டுமே வேறுபாடுகள் உள்ளன. சில புது ஜெனரேஷன் வங்கிகள் உ.ம் HDFC Bank, ICICI Bank, UTI Bank சில கவர்ச்சிகரமான பெயர்களில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் திட்டங்களை அறிமுகப் படுத்தியிருந்தாலும் நிஜத்தில் வங்கிகள் வழங்கும் எல்லா திட்டங்களுமே அடிப்படையில் ஒன்றுதான்.
இப்போது வங்கிகள் வழங்கும் சில முக்கியமான கடன் திட்டங்களைப் பார்ப்போம்.
1. பங்கு பத்திரங்களின்மேல் கடன் வழங்கும் திட்டம் (Loans on Shares)
நிபந்தனைகள்
I. பத்திரங்கள் வாடிக்கையாளரின் பெயரில் இருக்க வேண்டும்
II. வாடிக்கையாளரின் சொந்த மற்றும் வர்த்தக தேவைக்காக மட்டுமே கடன் தொகை உபயோகிக்கப்படவேண்டும்.
III. கடன் தொகை வாடிக்கையாளரின் NRO கணக்கில் மட்டுமே வரவு (Credit) வைக்கப்படும்.
IV. கடன் தொகை அயல் நாட்டுக்கு செலுத்தப்படலாகாது (Shall not be remitted outside India)
V. கடன் தொகை அயல் நாட்டிலிருந்து திருப்பி செலுத்தப்பட வேண்டும் அல்லது வாடிக்கையாளரின் NRO/NRE/FCNR கணக்குகளிலிருந்து மாற்றப்படவேண்டும்.
VI. அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் நிபந்தனைகளுக்குட்பட்டே கடன் தொகை வழங்கப்படும்.
2. வீடு வாங்க கடன்
நிபந்தனைகள்
I. இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் அளவு, வட்டி விகிதம், தவணைகள் எல்லாம் NRI வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். (ஒவ்வொரு வங்கியிலும் வெவ்வேறு விதமான நிபந்தனைகள் உள்ளன. உதாரணத்திற்கு சில வங்கிகள் அளிக்கும் கடன் பற்றிய விவரங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள அட்டவணையைப் பார்க்கவும்)
II. கடன் தொகை வாடிக்கையாளரின் NRO கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும்
III. வாடிக்கையாளர் வாங்குவதற்கு உத்தேசித்துள்ள சொத்து கடனுக்கு ஈடாக அடகு வைக்கப்படவேண்டும் (Mortgage). அதாவது நிலம், மற்றும் வீட்டின் எல்லா பத்திரங்களும் வங்கியில் டெபாசிட் செய்யப்படவேண்டும். சில வங்கிகள் தேவைப்பட்டால் வாடிக்கையாளரின் மற்ற சொத்துக்களையும் ஈடாக கேட்க வாய்ப்புண்டு.
IV. கடன் தொகை அயல் நாட்டுக்கு செலுத்தப்படக்கூடாது (Shall not be remitted outside India)
V. கடன் தொகை அயல் நாட்டிலிருந்து திருப்பி செலுத்தப்பட வேண்டும் அல்லது வாடிக்கையாளரின் NRO/NRE/FCNR கணக்குகளிலிருந்து மாற்றப்படவேண்டும்.
VI. வட்டி விகிதம் அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் நிபந்தனைகளுக்குட்பட்டு மாற்றப்பட வாய்ப்புண்டு.
Institution Max Loan Amt .(Rs) Ceiling Max.Term ROI EMI PER LAC Basis of Calculation
ANZ 1 Crore 85% 7 Years 14.25% 1930 Monthly Reducing
CITIBANK 50 lacs 80% 7 Years 13.75% 1860 Daily Reducing
HUDCO 50 lacs 85% 10 Years 13% 1494 Monthly Reducing
ICICI 1 Crore 85% 5 Years 11.25% 2269 Annual Reducing
LIC 50 lacs 75% 10 Years 13% 1536 Annual Reducing
நீங்கள் இந்தியாவில் வாழும் உங்கள் நெருங்கிய உறவினருக்கு # கடன் வழங்க விருப்பமா?இதற்கென ஒரு பிரத்தியேக திட்டத்தை ரிசர்வ் வங்கி தயாரித்துள்ளது (இது எல்லா வங்கிகளிலும் இன்னும் அமலாக்கப் படவில்லை.)
நிபந்தனைகள்
I. அதிக பட்ச கடன் தொகை USD 2.50 lakhs அல்லது அதற்கு சமமான மதிப்புள்ள வேறு ஏதாவது அயல் நாட்டு பணம் உ.ம் பிரிட்டிஷ் பவுண்டு, டட்ச் மார்க், யூரோ. (The loan amount should be in foreign exchange only)
II. கடனுக்கு வட்டி வசூலிக்கலாகாது
III. கடனை திருப்பி செலுத்த குறைந்த பட்சம் ஒரு வருடம் அவகாசம் தரப்படவேண்டும்
IV. கடனாக அளிக்கப்படும் தொகை அயல் நாட்டிலிருந்து அனுப்பப்படவேண்டும். கடன் கொடுப்பவரின் NRE/FCNR கணக்கிலிருந்தும் கடன் பெறுபவரின் வங்கிக் கணக்குக்கு காசோலை வழியாக மாற்றப்படலாம்.
V. கடன் தொகை கடன் பெறுபவரின் சொந்த தேவைகளுக்காகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட சட்ட பூர்வமான தொழில் செய்யவோ உபயோகிக்கப்படவேண்டும். ஆனால் விவசாயத்திற்கோ, வீடு, மணைகள் வாங்கவோ, பங்கு பத்திரங்கள் வாங்கவோ அல்லது வேறு யாருக்கேனும் கடன் வழங்கவோ உபயோகிக்கப்படலாகாது.
# நெருங்கிய உறவினர் என்றால் யார்?
இந்திய கம்பெனிகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி. இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.
The Companies Act 1956 - Sec 6 - Meaning of " relative".
A person shall be deemed to be a relative of another, if, and only if,
(a) they are members of a Hindu undivided family ; or
(b) they are husband and wife ; or
(c) the one is related to the other in the manner indicated in Schedule IA.
இந்திய ரூபாயில் நெருங்கிய உறவினருக்கு கடன் வழங்கவும் தனி திட்டம் உண்டு.
நிபந்தனைகள்
I. கடன் தொகை வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படவேண்டும் அல்லது வாடிக்கையாளரின் NRO/NRE/FCNR கணக்குகளிலிருந்து மாற்றப்படவேண்டும்.
II. கடன் தொகை மூன்று வருடங்களுக்குள் திருப்பி செலுத்தப்படவேண்டும்.
III. திருப்பி செலுத்தப்படும் கடன்+வட்டித் தொகை வாடிக்கையாளரின் NRO கணக்கில் மட்டுமே திருப்பி செலுத்தப்படவேண்டும். எக்காரணம் கொண்டும் இந்தியாவுக்கு வெளியே செலுத்தப்படலாகாது. (The Loan repayment shall not be repatriated outside India)
IV. Foreign Exchange கடனைப் போன்றே இத்திட்டத்தில் நீங்கள் வழங்கும் கடனையும் கடன் பெறுபவர் அவருடைய சொந்த தேவைக்கோ அல்லது சட்டத்துக்குட்பட்ட வணிகம் செய்யவோ மட்டுமே உபயோகிக்கவேண்டும்.
இன்னும் விவரங்களுக்கோ அல்லது உங்கள் சந்தேகங்களுக்கு என்னை மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ள:
tbrjoe@yahoo.co.uk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக