பணியிலிருந்து ஓய்வு பெற்ற துவக்க நாட்களில் (initial post-retirement days) மனம் எதையோ பறிகொடுத்துவிட்டதுபோல் தோன்றுவது மிகவும் இயல்பான விஷயம். அதுபோலவே, 'எதற்கு இந்த ஓய்வு, என்னால் இன்னும் குறைந்தபட்சம் ஐந்தாறு வருடங்களுக்காகிலும் இதே திறமையுடன் பணியாற்ற முடியுமே' என்ற எண்ணம் தோன்றுவதும் மிகவும் இயற்கை. இது ஏதோ நமக்கு மட்டும்தான் ஏற்படுகிற ஒருவித நோய் என்று நினைத்து, நினைத்து மருகுவதை முதலில் தவிர்க்க வேண்டும். இத்தகைய சூழலுக்கு நம்மை நாமே தயாரிப்பதற்கு மிகவும் தேவையான ஒன்று பணியிலிருந்து ஓய்வுபெற்றாக வேண்டும் என்கிற நிதர்சனத்தை மனதளவில் நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.
இதில் இன்னொரு கோணமும் உண்டு. பணியிலிருந்து ஓய்வுபெறும் சமயத்தில் ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு இலாக்காவின் தலைமை பொறுப்பில் இருக்க நேர்ந்தால் அவர்களுக்கு நாம் இல்லாவிட்டால் அந்த நிறுவனம், இலாக்கா சரிவர இயங்க முடியாது என்கிற எண்ணம் உள்மனதில் பதிந்திருக்கும். அத்தகையோர் ஓய்வு பெற்றபிறகு அந்த நிறுவன/இலாக்காவை சார்ந்தவர்கள் எந்த நிர்வாக அலுவல்கள் சார்பாகவும் அவர்களை தொடர்புகொள்ளவில்லையென்றால் அதுவே அவர்களுக்கு பெரிய அளவில் மன அழுத்தத்தை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு. இத்தகைய மன அழுத்தத்திற்கு ஒய்வுபெற்ற முதல் இரண்டு, மூன்று வாரங்களுக்கு நானே ஆளாகியிருக்கிறேன். அத்தகைய எண்ணத்தை முழுவதுமாக என் மனதிலிருந்து அகற்றுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.
இத்தகைய மன அழுத்தம் மிகவும் இயல்பான விஷயம்தான் என்பதை ஒப்புக்கொண்டு அதிலிருந்து எப்படி மீள்வது என்பதில்தான் அவர்களுடைய கவனம் முழுவதும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். அதை விடுத்து சிலர் தங்களுடைய முன்னாள் சகாக்களை தொலைபேசியில் அழைத்து 'இப்பத்தான் நிம்மதியா எந்த டென்ஷனுமில்லாம சந்தோஷமா இருக்கேன்.' என்று உண்மைக்கு புறம்பாக கூறி தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வார்கள். இது 'அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதுபோல்தான்.
பணியிலிருந்து ஓய்வுபெறுபவர்களை இத்தகைய துவக்கக்கால மன அழுத்தத்திற்கு (post-retirement anxiety) தயாரிப்பதற்கென்றே இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் 'Exit Counselling'ஐ நடத்துகின்றனர். இதில் மிகவும் முக்கியமாக இடம் பெறுவது ஓய்வு நேரத்தை எப்படி செலவழிப்பது, உண்மையைக் கூற வேண்டுமென்றால், எப்படி வீணடிப்பது என்பதை கற்பிப்பதுதான். ஆக்கபூர்வமான எந்த ஒரு சிந்தனையுமில்லாமலும் அல்லது எந்த ஒரு வேலையிலும் ஈடுபடாமலும் ஓய்வு நேரத்தை வீணடிப்பதில் தவறேதும் இல்லை என்பதை மிகவும் இயல்பாக உணரவைப்பதும் இதில் அடக்கம்.
ஆமாங்க. நிர்வாக பொறுப்பில் இருக்கும் பலருக்கு நேரத்தை வீணடிப்பது என்பது முற்றிலும் ஒத்துக்கொள்ள முடியாத ஒரு 'குற்றம்'. அத்தகையோரை இந்த 'குற்ற உணர்விலிருந்து' விடுவிப்பதுதான் இத்தகைய ஆலோசனை கூட்டங்களின் மைய நோக்கம். இசையை ரசிப்பது, புத்தகங்கள், பத்திரிகைகள் வாசிப்பது, உள் மற்றும் வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடுவது இவை எதிலும் நாட்டம் இல்லாதவர்களை எவ்வித சிந்தனைகளுமில்லாமல் தொடர்ந்து பல நிமிடங்கள் அமர்ந்திருப்பது என்பதுபோன்ற பல உத்திகளை பயிலவும், சுருக்கமாக கூற வேண்டுமென்றால் பரபரப்பான அலுவலக சூழலிலிருந்து அமைதியான குடும்ப சூழலுக்கு பணியிலிருந்து ஓய்வுபெறுபவர்களை தயாரித்துக்கொள்ளவும் இத்தகைய பயிற்சி வகுப்புகள் வெகுவாக உதவுகின்றன.' Walkingஆ அதுக்கு எங்கங்க நேரம்?' என்பவர்களை மனம்போன போக்கில் காலாற நடப்பதே மனதை லேசாக வைத்துக்கொள்ள உதவும் ஒரு மருந்து என்பதை உணர்த்துவதும் இதன் நோக்கங்களில் ஒன்று.
பணியிலிருந்து ஓய்வுபெறுபவர்களை பலவிதமாக பிரிக்கலாம். அவற்றில் முக்கியமான இரு பிரிவுகள்: பணிக்கு செல்லாத மனைவியை உடையவர் அல்லது பணிக்கு செல்லும் மனைவியை உடையவர். முதலாமவருக்கு வீட்டிலிருக்கும் மனைவியே ஒரு பிரச்சினை என தோன்றும். மற்றவருக்கு பேச்சு துணைக்குக் கூட ஆளில்லாத தனிமையே ஒரு பெரிய சுமையாக தெரியும். இரண்டிலும் exceptions எனப்படுபவர்களும் உண்டு. அலுவல், அலுவல் என மனைவியை பிரிந்திருந்ததை ஒரு குறையாக நினைத்திருந்தவர்களுக்கு மனைவியின் அருகாமை விவரிக்க முடியாத மகிழ்ச்சியை அளிக்கும். தனிமையே ஒரு அலாதியான விஷயம் என நினைத்து மோனத்தில் ஆழ்ந்துப்போக கிடைத்த சந்தர்ப்பத்தை எண்ணி மகிழ்பவர்களும் உண்டு. என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் தன்னுடைய நாற்பத்தைந்தாவது வயதிலேயே விருப்ப ஓய்வுக்கு எழுதிக்கொடுத்தார். 'என்னங்க இந்த வயசுல ரிட்டையர் ஆகி வீட்ல எப்படி டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க?' என்று கேட்டேன். 'இந்த ஹரிபரியிலருந்து விடுபட்டு தனியா இருக்கணும்னு கொஞ்ச நாளாவே தோனுதுங்க. ஒய்ஃபும் வேலைக்கு போயிருவாங்க. பசங்களும் ஹாஸ்டல்ல இருக்கறதால வீட்ல யார் தொல்லையுமில்லாம இருக்கலாம்.' என்றார். ஆனால் அவர் எந்த நேரத்தில் அப்படி சொன்னாரோ அவர் ஓய்வு பெற்ற இரண்டாண்டுகளுக்குள் சுறுசுறுப்பாக இருந்துவந்த அவருடைய மனைவி ஒருவார ஜுரத்திலேயே யாரும் எதிர்பாராத விதமாக மரித்துப்போனார். அதற்குப் பிறகு அவருடைய இரண்டு ஆண் பிள்ளைகளும் வேலை கிடைத்து வெளிநாடு சென்றுவிட உண்மையிலேயே வாழ்க்கையில் தனித்துதான் போனார்.
வீட்டிலிருக்கும் மனைவியை அனுசரித்து செல்வது மிகவும் சிரமம் என நினைப்பவர்கள் அவர்களும் தங்களைப் பற்றி அப்படித்தான் கருதுகிறார்கள் என்பதை உணர்வதில்லை. அதை உணர்ந்துக்கொண்டு அந்த எண்ணத்தை எப்படி அவர்களுடைய மனதிலிருந்து அகற்றுவது என ஆலோசித்து அந்த முயற்சியில் இறங்கினாலே போதும், தீர்வு கிடைப்பது நிச்சயம். இதற்கு முதலில் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஆண்கள் அதுவரை வகித்துவந்திருந்த அலுவலக பதவியிலிருந்து இறங்கி வந்துவிட வேண்டும். காலையில் குளிப்பதிலிருந்து எல்லாம் அப்பாவுக்குதான் முன்னுரிமை என்பதும் எந்த டென்ஷனும் இல்லாமல் அவர் அலுவலகம் புறப்பட்டுச் செல்வதற்கு ஏதுவான சூழலை வீட்டில் ஏற்படுத்துவதுதான் குடும்பத்திலுள்ள அனைவருடைய தலையாய கடமை என்பதுபோலவும் பரபரப்புடன் இயங்கும் பல குடும்பங்களை நான் கண்டிருக்கிறேன். அத்தகைய ஆண்கள் தங்களுடைய கற்பனை அதிகார பீடத்திலிருந்து இறங்கி வருவது என்றால் அத்தனை எளிதல்ல. ஆனால் அதை எத்தனை விரைவில் உணர்ந்து இறங்கி வருகிறார்களோ அத்தனை விரைவில் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்திற்கும் நல்லது.
தொடரும்..
பி.கு: பி.எஸ்.என்.எல் இன் குளறுபடியால் கடந்த மூன்று நாட்களாக Internet இணைப்பே இல்லாதிருந்தேன். உலகமே இருண்டதுபோலாகிவிட்டது!
ரிட்டையர்மெண்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 ஜூன் 2010
11 ஜூன் 2010
பணியிலிருந்து ஓய்வு 3
நிரந்தர பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மாற்று பணிக்கு செல்லும் எண்ணம் உள்ளவர்களும் தங்களுடைய எண்ணத்திற்கேற்றாற்போல் ஒரு பணி கிடைக்கும் வரையிலாவது வீட்டில் 'சும்மா' இருந்துதானே ஆகவேண்டும்?
பணியிலிருந்து ஓய்வு பெறுபவர் ஆண் என்ற கோணத்தில் மட்டுமே இதை அணுகுகிறேன் என்பதை நினைவில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் பணியிலிருந்து ஓய்வு பெறும் பெண்கள் பெரும்பாலும் அத்தகைய ஓய்வை வரவேற்கவே செய்கிறார்கள். ஆகவே அலுவலகத்திலிருந்து வீட்டிற்கான இந்த மாற்றத்தை அவர்களால் மிக எளிதாக எதிர்கொள்ள
முடிகிறது என்கின்றன பல ஆய்வுகள்.
ஆனால் ஆண்களுள் பெரும்பாலானோர் அப்படியல்ல. அவர்களைப் பொருத்தவரை அவர்களுடைய உத்தியோகம்தான் வாழ்க்கையின் பிரதானமாக உள்ளது. என்னுடைய உத்தியோகம்தான் என்னுடைய முதல் மனைவி என்று பலரும் பெருமையுடன் கூறிக்கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். இதற்காகவே முந்தைய தலைமுறை ஆண்கள் பெரும்பாலும் அலுவலகத்திற்கு செல்லாத பெண்களையே விரும்பி திருமணம் செய்துக்கொண்டனர் என்பதும் உண்மை.
இத்தகையோரில் பலருக்கும் அலுவலக பணியைத் தவிர வேறெதிலும் நாட்டமும் இருப்பதில்லை. அதாவது இசையை ரசிப்பதிலோ, அரசியலைப் பற்றி பேசுவதிலோ, அல்லது கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பங்குகொள்ளாவிட்டாலும் அவற்றை பார்ப்பதிலோ, விமர்சிப்பதிலோ கூட அவர்களுக்கு நாட்டம் இருக்காது. இவ்வாறு சுமார்
முப்பதாண்டுகாலம் அலுவலக பணியே கதியென்று இருந்தவர்கள் சட்டென்று அது இல்லை என்றாகிவிடும் சூழலை சந்திக்கையில் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்பது இயற்கைதானே!
இத்தகையோர் அத்தகைய சூழலுக்கு எப்படி தங்களை தயார் செய்துக்கொள்வது?
பெரும்பாலான ஆண்கள் வீட்டையும் அலுவலகம் போன்றே கருதுவதாக பரவலானதொரு குற்றச்சாட்டு பெண்கள் மத்தியில் உண்டு. வீடு வீடுதான் அலுவலகம் அலுவலகம்தான் என்பதை ஆண்கள் உணர்வதில்லை. அலுவலகத்தில் நாம் எடுக்கும் பெரும்பாலான முடிவுகள் நம்முடைய பெர்சனல் வாழ்க்கையை அதிகம் பாதிப்பதில்லை. நாம் எடுக்கும் முடிவுகள்
வெற்றிபெறாத சமயங்களில் அதிகபட்சம் அதிகாரிகள் முன்பு தலைகுணிய வேண்டிவரும். நம்முடைய முடிவில் என்ன தவறு இருந்தது, ஏன் வெற்றிபெறவில்லை என்பதை ஆராய்ந்து அவற்றை தவிர்த்தால் தோல்வியை வெற்றியாகவும் மாற்றிவிட முடிகிறது. ஆனால் குடும்பத்தில் நாம் எடுக்கும் சில முடிவுகள் தோல்வியில் முடிந்தால் அவற்றால் நாம் மட்டுமல்ல
நம்மைச் சார்ந்திருக்கும் ஒட்டுமொத்த குடும்பமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. ஒரு சில தவறான முடிவுகள் சரிசெய்யவே முடியாத முடிவுகளாகி வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடுவதை நம்மில் பலரும் அனுபவித்து உணர்ந்திருக்கிறோம்.
அலுவலக வாழ்க்கையில் பெரும் வெற்றிகளைப் பெற்று மிக உயர்ந்த பதவியை பிடிக்க முடிந்த என்னுடைய நண்பர்கள் சிலர் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் தோற்றுப்போனதை என்னுடைய வாழ்க்கையில் கண்டிருக்கிறேன். ஆகவே அலுவலகமும் குடும்பமும் எப்போதும் ஒன்றாகிவிட முடியாது. 'ஏன் எடுத்தத எடுத்த இடத்துல வைக்க மாட்டேங்கறீங்க?' என்றுசிடுசிப்பார் ஓய்வுபெற்ற கணவர். ஏனெனில் முந்தைய நாள் வரை அவருக்கு தேவையான அனைத்தையுமே மனைவிதான் எடுத்து கொடுத்திருப்ப்பார். 'எது எங்க இருக்கும்னு ஒங்களுக்கு தெரிஞ்சாத்தானே. இது ஆஃபீஸ் இல்லை, பிள்ளைங்க இருக்கற வீடு. அதது அங்கங்க இருக்கத்தான் செய்யும். சும்மாத்தான இருக்கீங்க, எடுத்து எங்க வைக்கணுமோ அங்க வைங்க' என்று பதிலடி கொடுப்பார் மனைவி.
மேலும், ஆண்கள் எவ்வாறு அவர்களுடைய அலுவலகத்தில் அவர்கள்தான் ராஜா எனவும் அவர்கள் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்றும் எண்ணுகிறார்களோ அப்படித்தான் வீட்டுப் பெண்களும். குடும்பத்தைப் பொருத்தவரை அவர்கள்தான் எல்லாம் என்கிற எண்ணம் பெரும்பாலான குடும்பப் பெண்கள் மனதில் வேரூன்றியுள்ளதை ஆண்கள் பெரும்பாலும் கருத்தில் கொள்வதில்லை. அலுவலகம், அலுவலகம் என்று ஆண்கள் அலைந்துக்கொண்டிருந்த வேளையில் குடும்பத்தை திறம்பட நடத்தியது பெண்கள்தானே என்பதை மறந்துவிட்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் குடும்ப விஷயங்களிலும் இனி நாந்தான் ராஜா, இனி நான் சொல்வதுபோலத்தான் எதுவும் நடக்க வேண்டும் என நினைக்க ஆரம்பித்தால் வேறு வினையே வேண்டாம்.
மேலும் கணவர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றதும் ஏற்படுகிற அமைதியான சூழலை அனுபவித்து பழகிப்போன பெண்கள் பலரும் 'ஐயோ இனி இவர் இருபத்திநாலு மணி நேரமும் வீட்லயா இருக்கப் போறார்? 'சனி, ஞாயிறுல வீட்ல இருந்தாலே மனுஷன் பாடா படுத்துவாரே, இனி கேக்கணுமா? இத நா எப்படி சமாளிக்கப் போறேன், ஈஸ்வரா!' என்ற
எண்ணத்திலேயே மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகின்றனர். கணவர் இல்லாத எட்டு மணி நேரத்தில் தங்கள் மனம் போனபடி வீட்டு அலுவல்களை நிதானமாக செய்து பழகிப்போகும் பெண்கள் 'காலை பதினோரு மணிக்கு காப்பி, மதியம் ஒரு மணிக்கு லஞ்ச், பிற்பகல் மூன்று மணிக்கு காப்பி' என தங்களுடைய தனிமை சுதந்திரத்தில் தலையிட வந்துவிடும் கணவர்களை தங்களுடைய சுதந்திரத்திற்கு எதிராக முளைத்த எதிரிகளாகவே வரித்துக்கொள்கின்றனர் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த சுதந்திரத்தை பணியிலிருந்து ஓய்வுபெறும் பெரும்பாலான ஆண்கள் புரிந்துக்கொள்ளாமல் தங்களுடைய மனைவியரின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் குற்றம் காண்பதில் குறியாய் இருப்பதை தவிர்த்தால் நல்லது. 'இவ்வளவு நாளும் நீங்களா இத செஞ்சுக்கிட்டிருந்தீங்க? நீங்க பேசாம அக்காடான்னு இருங்க. எல்லாத்துலயும் மூக்க நீட்டாதீங்க!' இது
பெரும்பாலான வீடுகளில் மனைவியர் கூறும் குற்றச்சாட்டு.
இந்த குற்றச் சாட்டை தவிர்க்க ஆண்கள் செய்ய வேண்டியது என்ன?
அதை அடுத்த பதிவில் கூறுகிறேன்.
தொடரும்

10 ஜூன் 2010
பணியிலிருந்து ஓய்வு - 2
பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பே மீண்டும் பத்திலிருந்து ஐந்து வரை என்கிற ஒரு உத்தியோகத்திற்கு செல்வதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால் அதற்காக வீட்டில் 'சும்மா' இருக்காமல் சென்னையிலுள்ள ஏதாவது ஒரு அரசு சாராத தொண்டு நிறுவனத்துடன் எவ்வித ஊதியமும் இல்லாமல் ஒரு பகுதி நேர தொண்டனாக (Volunteer) இணைந்துகொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் என்னைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்னுடைய முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். 'உன்னுடைய குணத்துக்கு அதெல்லாம் சரிவராது டிபிஆர். நீ நினைக்கறா மாதிரி தொண்டு என்ற நோக்கத்துடன் மட்டும் எந்த நிறுவனமும் இயங்குவதில்லை. நெருங்கி பார்த்தாத்தான் அவர்களுடைய உண்மை சுயரூபம் தெரியும்.' என்றனர். ஆனால் அவர்களுடைய கருத்துடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. ஏனெனில் என்னுடைய மனதில் நான் நினைத்திருந்த சமூக நிறுவனங்களைப் பற்றி சென்னைவாசிகள் மத்தியில் நல்ல எண்ணம் இருந்தது.
ஆகவே பணியிலிருந்து ஓய்வு பெற்ற சில வாரங்களில் ஒரு நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் என்னுடைய எண்ணத்தை தெரிவித்து அவர்களுக்கு ஆட்சேபனையில்லையென்றால் அவர்களுடைய அனுதின அலுவலில் ஏதாவது ஒரு நிலையில் என்னை இணைத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தேன். என்னுடைய மின்னஞ்சல் கிடைத்ததுமே அவர்களுடைய மேலாண்மை அதிகாரியிடமிருந்து (நான் எதிர்பார்த்திராத அளவுக்கு இளைஞி அவர்) அழைப்பு வந்தது. நானும் அவர்கள் குறிப்பிட்டிருந்த தினத்தன்று சென்று நேர்காணலில் கலந்துக்கொண்டேன். ஏற்கனவே அவர்களுடைய நிறுவனத்தைப் பற்றி ஊடகங்கள் வாயிலாக நான் அறிந்து வைத்திருந்தவற்றை அந்த அதிகாரி சுருக்கமாக கூறிவிட்டு நிறுவனத்தைப்பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு சில கோப்புகளுடன் கடந்த ஆண்டின் நிதியறிக்கை நகலையும் அளித்தார். அந்த நிதியறிக்கையை அவர்கள் அச்சடித்திருந்தவிதமே அசத்தலாக இருந்தது. அவர்கள் செயல்படுத்திவந்த சேவை திட்டங்களுக்கென பல பிரபல நிறுவனங்களிடமிருந்து கிடைத்து வந்த பிரத்தியேக நன்கொடைகளின் அளவு என்னை பிரமிக்க வைத்தது. அதுபோன்றே அவர்கள் வங்கிகளில் முதலீடு செய்திருந்த வைப்பு நிதி கணக்குகளின் (Fixed Deposit) அளவும் பிரமிக்க வைத்தது. அதாவது நன்கொடைகள் முழுவதும் அவர்களுடைய திட்டங்களுக்கு செலவிடாமல் வைத்திருந்ததைக் கண்டபோது எதற்காக என்று கேள்வி கேட்க தோன்றியது. இருப்பினும் ஒருவேளை எதிர்கால திட்டங்களுக்கென வைக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன்.
நேர்காணலில் என்னால் எந்த விதத்தில் அவர்களுக்கு உதவ முடியும் என்று சுருக்கமாக கூறிவிட்டு fieldworkஐ தவிர எந்த அலுவலானாலும் அதற்கு நான் தயார் என்றேன். சென்னையிலுள்ள சேவை மையங்களுள் ஒன்றின் இயக்கத்தை சீராக்க மேலாண்மை அனுபவம் பெற்ற ஒருவர் அவர்களுக்கு தேவைப்படுவதாகவும் என்னால் அதை ஏற்றுக்கொள்ள இயலுமா என்று கேட்டதும் நான் உடனே சம்மதித்தேன். அந்த மையம் நான் குடியிருந்த வீட்டிற்கு மிகவும் அருகில் இருந்ததும் எனக்கு உதவியாக இருந்தது. அடுத்த சில தினங்களில் என்னை அந்த மையத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள பணியாளர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி மையத்தின் அலுவல்கள், அதன் நோக்கம் அனைத்தையும் சுருக்கமாக கூறிவிட்டு 'You can suggest the ways to improve the functioning of this centre, Sir.' என்றார் அந்த அதிகாரி.
என்னுடைய முதல் பார்வையிலேயே அந்த மையத்தின் செயல்பாடுகளில் திருப்தியில்லாமல் போயிற்று. அதற்கு முக்கிய காரணம் நான் நேற்றைய பதிவில் கூறியிருந்ததுதான். என்னுடைய இருபதாண்டு மேலாண்மை அனுபவத்தில் எதை எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் என்னுள் உருவாகியிருந்தது. அந்த எண்ணத்தை குழிதோண்டி புதைத்தது போலிருந்தது அந்த இயக்கத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும். எதிலும் ஒரு professionalism காணப்படவில்லை. குறிப்பாக ஊழியர்களின் நடவடிக்கைகளில் எதிலும் ஒரு தொண்டு நிறுவனத்தின் சாயல் தென்படவில்லை. மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அலைந்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்க வெளியிலிருந்து வந்த மருத்துவர்களும் அனுபவமற்றவர்களாகவும் தொண்டு மனப்பான்மையில்லாதவர்களாகவும்யி தென்பட்டனர். இதை நான் அங்கு சென்ற முதல் நாளே வெளிப்படையாக எடுத்துரைக்க அங்கிருந்த ஊழியர்களில் சிலர் என்னை ஒருவித குரோதத்துடன் பார்த்தனர். அவர்கள் பார்வையே, 'நீ யார்யா இத சொல்றதுக்கு?' என்பது போலிருந்தது. என்னை அழைத்து சென்றிருந்த அதிகாரிக்கோ அந்த ஊழியர்களுடைய வயதில் பாதி கூட இல்லை.ஆகவே நிச்சயம் அவரால் இவர்களை கட்டுப்படுத்த முடிந்திருக்காது என்று நினைத்தேன். என் மனதில் பட்டதை அடுத்த சில தினங்களில் ஒரு அறிக்கையாகவே தயாரித்து அனுப்பினேன். அதற்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எவ்வித Responseம் வரவில்லை. இறுதியில் என் நெருங்கிய நண்பர்கள் கூறியபடியேதான் நடந்தது. அந்த நிறுவனத்தில் மேலும் தொடர்ந்து இருக்க விருப்பமில்லாமல் விலகிக்கொண்டேன். இத்தனைக்கும் அந்த சேவை நிறுவனத்துடன் சென்னையின் பல வர்த்தக நிறுவனங்களின் அதிபர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் டிரஸ்டிகளாக இருந்தனர். இந்த நிறுவனத்தை நிறுவிய மற்றும் டிரஸ்டிகளாக இருந்தவர்களின் நோக்கம் வேண்டுமானால் சேவையாக இருக்கலாம். ஆனால் அது அடிமட்டத்தில் உள்ள பணியாளர்கள் உணரவில்லை என்பதே நான் அங்கு பணியாற்றிய ஒரு சில மாதங்களில் நேரில் அனுபவித்தது. அங்கு சேமித்து வைத்திருந்த சில உணவுப் பொருட்கள், மளிகை சாமான்கள் சந்தையில் விற்கும் முதல் தர பொருட்களின் விலையைக் காட்டிலும் அதிகமான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டிருந்ததையும் கண்டபோது நல்ல உள்ளங்கள் அளிக்கும் நன்கொடைகளை சில புல்லுருவி ஊழியர்கள் கொள்ளையடிப்பதை உணர முடிந்தது. ஆனால் அவர்களை இனம் கண்டு களையெடுக்கக் கூடிய நெஞ்சுரம் கொண்ட அதிகாரிகள் அங்கு இல்லை என்பதுதான் வேதனை.
இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்க முடிந்திருந்தால் அங்கு தொடர்ந்து என்னால் இயன்ற சேவையை செய்ய முடிந்திருக்கலாம். ஆனால் என்னால் முடியவில்லை. இதற்கு என்னுடைய அடிமனதில் ஆழமாய் ஊறிப்போன மேலாண்மை ஸ்டைல்தான் காரணம். அதிலிருந்து அத்தனை எளிதில் வெளிவர முடியாது என்பதால்தான் மேற்கொண்டு வந்த பல அழைப்புகளையும் ஏற்க மனமில்லாமல் மறுத்துவிட்டேன். ஒருவேளை எதிர்காலத்தில் என்னுடைய கொள்கைகளுக்கு ஏற்ற வகையில் இயங்கும் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு ஏற்படலாம்.
இத்தகைய அனுபவங்கள் மூத்த அதிகாரிகளாக பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்ற பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். மாலை நேரங்களில் அருகிலுள்ள பூங்காவில் நடக்க செல்லும்போது சிமெண்ட் பெஞ்சுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் முதியவர்கள் சிலருடன் பேசிப் பார்த்ததில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சொல்கிறேன். அறுபது வயதுக்குப் பிறகு சட்டென்று தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக்கொள்ள முடியாமல்தான் பலரும் வீட்டில் அடைந்து கிடக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். நல்ல படிப்பும், ஞானமும், மேலாண்மைத் திறனும் உள்ள பல முதியவர்களும் இந்த நிலையில்தான் உள்ளனர் என்பதையும் உணர முடிந்தது. ஆகவே பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கவே ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தை துவங்கினாலும் தவறில்லை என்றே கருதுகிறேன்.
இப்படி வேறு வழியில்லாமல் வீட்டில் 'சும்மா' இருக்க வேண்டிய சூழலுக்கு தங்களை முன்கூட்டியே எப்படி தயாரித்துக்கொள்வது?
அடுத்த பதிவில் சொல்கிறேன்...

09 ஜூன் 2010
பணியிலிருந்து ஓய்வு - சுய தயாரித்தல் 1
.
நாம் அனைவருமே என்றாவது ஒரு நாள் பணியிலிருந்து ஓய்வுபெற வேண்டியவர்கள்தான். அது பலருக்கு சூப்பர் ஆன்யுவேஷன் எனப்படும் அவர்களுடைய 60வது வயதில் ஏற்படுகிறது. சிலருக்கு விருப்ப ஓய்வு வாயிலாக எந்த வயதிலும் ஏற்படலாம். இப்போதெல்லாம் விருப்பஓய்வுக்கு தகுதிபெற தேவையான குறைந்தபட்ச பணிக்காலம் முடிந்ததுமே பலர்,
குறிப்பாக பெண்கள், ஓய்வுபெறுவதில் குறியாயிருக்கின்றனர். நாற்பது வயதை கடந்ததுமே எப்போதுடா விருப்பஓய்வு வாய்ப்பு வரும் என காத்திருக்கும் நடுத்தர வயதைக் கடந்த பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது என்றால் மிகையல்ல.
இதற்கு என்ன காரணம்? அலுவலகத்தையும் குடும்பத்தையும் பாலன்ஸ் செய்ய இயலாமைதான். முன்பெல்லாம் எந்த அலுவலகத்திலும் பெண்களுக்கென பல சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தன. என்னுடைய வங்கியிலேயே பெண்கள், குறிப்பாக சிறிய குழந்தைகள் உள்ள பெண்கள் பணிக்கு சற்று தாமதமாக வந்தாலோ அல்லது மாலையில் சற்று முன்னராகவே செல்வதற்கு விரும்பினாலோ அவர்களுடைய ஆண் அதிகாரிகள் கண்டுக்கொள்ள மாட்டார்கள். மேலும் குழந்தைக்கோ, கணவருக்கோ ஏன் மாமனார், மாமியாருக்கோ கூட உடல்நலமில்லை என்ற
காரணம் கூறி விடுப்பு எடுத்துக்கொண்டாலும் பெருந்தன்மையாக விட்டுவிடுவார்கள். ஆனால் இப்போது ஆண், பெண் என்ற எந்தவித பாகுபாடும் இன்றி அலுவலகத்தில் 'டார்ச்சர்' செய்யப்படுவது மிக, மிக சாதாரணமாகிவிட்டது. இதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று அதிகார வர்க்கத்திற்குள் அடியெடுத்து வைத்திருக்கும் பெண்கள் என்றால் தவறில்லை என கருதுகிறேன். அதுவும் நேரடியாக அதிகாரியாக நிறுவனங்களுக்குள் அடியெடுத்து வைக்கும் இளம் பெண்கள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் பெண்கள் மீதுதான் அதிக வேலைப்பளுவை சுமத்துகிறார்கள், வீண் அதிகாரம் செய்கிறார்கள் என்பதும் உண்மை. இதை என்னுடைய வங்கியிலேயே பல கிளைகளில் நேரில் கண்டிருக்கிறேன். 'இந்த பொண்ணுங்கக்கிட்ட வேலை
செய்யறதுக்கு பாதி சம்பளம் பென்ஷனா கிடைச்சா போறும்னு போயிரலாம்னு தோனுது சார்.' என பல நடுத்தர வயது பெண் குமாஸ்தாக்கள் புலம்புவதை கேட்டிருக்கிறேன்.
ஆனால் இத்தகையோர் உண்மையிலேயே ஓய்வு பெறுவதற்கு தயாராயிருக்கிறார்களா என்று ஆய்வு செய்தால் இல்லையென்றே தோன்றுகிறது. இத்தகையோரில் பலர் அலுவலக தொல்லையிலிருந்து விடுபட்டால் போறும் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்று கருதியே விருப்ப ஓய்வில் செல்கின்றனர். ஆனால் சுமார் இருபதாண்டுகாலம் ஒரு அலுவலகத்தில் சுமார் எட்டு மணி நேரம் ஓய்வில்லாமல் பணியாற்றிவிட்டு வீட்டில் ஒருவேலையும் செய்யாமல் 'சும்மா' இருப்பது அத்தனை எளிதல்ல என்பதை உணரும்போது பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்கின்றன பல ஆய்வுகள். தமிழ் திரைப்படம் ஒன்றில் வடிவேலு 'சும்மாத்தானடா ஒக்காந்திருக்கே.' என்று தன்னை ஏசும் தந்தையிடம் 'சும்மா
உக்காந்திருக்கறது லேசுன்னு நினைச்சியா? நீ ஒரு வேலையும் செய்யாம ஒரு நாள் முழுக்க சும்மா ஒக்காந்திரு பாப்பம்' என்பார். தோற்றவருக்கு பத்து சாட்டையடி என்றும் பந்தயம் வைப்பார். போட்டி துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே அவருடைய தந்தையின் 'சும்மா' இருத்தலுக்கு சோதனை மேல் சோதனையாக வந்து சேர அவர் தோல்வியை ஒப்புக்கொண்டு சாட்டையடியை பெற்றுக்கொள்வார்.
உண்மைதான். பணியிலிருந்து ஓய்வுபெற்றதும் ஒரு நாள் முழுக்க ஒரு வேலையும் செய்யாமல் 'சும்மா' அமர்ந்திருப்பது அத்தனை எளிதல்ல. இதில் ஆண், பெண் என வேறுபாடு ஒன்றும் இல்லை.
இந்த சூழலில்தான் ஓய்வு பெறும் ஒவ்வொருவரும் அதற்கு தங்களை தயார் செய்துக்கொள்வது அவசியமாகிறது.
சுய தயாரிப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1. உணர்வுபூர்வமான தயாரிப்பு.
2. பொருளாதார ரீதியான தயாரிப்பு.
சூப்பர் ஆன்யுவேஷன் எனப்படும் தங்களுடைய அறுபதாவது வயதில் ஓய்வு பெறுபவர்கள் ஓரளவுக்கு உணர்வுபூர்வமாக ஓய்வுக்கு தயாராக இருப்பார்கள். அவர்களிலும் சிலர் 'இந்த வேலையிலிருந்து ரிட்டையர் ஆனதும் இன்னொரு வேலைக்கு எப்படியாச்சும் போயிரணும். என்னாலல்லாம் வீட்ல சும்மா ஒக்காந்திருக்க முடியாது' என்கிற மனநிலையில் இருப்பதை கண்டிருக்கிறேன். இதில் தவறில்லைதான். ஏன் நானும் கூட அவ்வாறு நினைத்திருக்கிறேன். ஆனால் அது அத்தனை எளிதல்ல என்பது ஓய்வு பெற்ற பிறகுதான் தெரியவரும். குறிப்பாக ஓரளவுக்கு உயர் பதவியிலிருந்து ஓய்வு பெறுபவர்களால் ஓய்வுக்குப் பிறகும் அதே நிலையிலுள்ள பதவியில் அமர்வது என்பது எளிதல்ல. ஊதியத்தைவிட உயர்பதவியில் அனுபவித்திருந்த Perks எனப்படும் கூடுதல் வசதிகள், சலுகைகள், அதாவது ஓட்டுனருடன் கூடிய அலுவலக வாகனம், விமான பயணம் மற்றும் ஐந்து நட்சத்திர விடுதி வாசம்,
வழியனுப்ப, வரவேற்க வரும் ஊழியர் பட்டாளங்கள் இத்யாதி, இத்யாதிகள் தந்து வந்த சுக அனுபவம் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கும் வேலையிலும் கிடைக்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு அது இல்லை என்று தெரியவருகிற சூழல்...அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் அதனுடைய இழப்பு தெரியும்.
இந்த கோணத்தில் இனியும் ஒன்றைப் பற்றி இங்கு தெரிவித்தாக வேண்டும். உயர்பதவியிலிருந்து அனுபவம் பெற்ற பலருக்கும் தங்களுடைய அலுவலகம் இப்படித்தான் இருக்க வேண்டும் அல்லது ஒரு அலுவலை இப்படி செய்தால்தான் அதை வெற்றிகரமாக முடித்திட முடியும் என்றெல்லாம் ஒரு கருத்து இருக்கும். அவர்களுடைய பதவி அளித்திருந்த முடிவெடுக்கும் சுதந்திரம், உரிமை அவர்கள் மனதில் நினைத்ததை அப்படியே செயலில் வடிக்கவும் உதவியிருக்கும். ஆனால் பணியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு அவர்கள் இணையும் நிறுவனத்தில் முடிவெடுக்கக் கூடிய உரிமை அவர்களுக்கு இல்லாமல் போனால் அதுவே அவர்களை உணர்வுபூர்வமாக மிகவும் பாதித்துவிட வாய்ப்புள்ளது.
ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே அதற்கு என்னை உணர்வுபூர்வமாக தயாரித்திருந்த எனக்கே இப்படியொரு அனுபவம் ஏற்பட்டது. அதைப் பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்.
தொடரும்...

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)