வங்கியினுடனான வாடிக்கையாளர்களுடைய வணிகத் தொடர்பு (Business relationship), அவருடைய வணிகத்தின் தற்போதைய நிலை ( Current Financial Status), அவருடைய கடன் பெறுவதற்கான தகுதி (Eligibility) ஆகியவற்றை மதிப்பிட்டு கடன் வழங்குவதற்கு மேலாளர்களுக்கு அவர்கள் மேலாளர்களாக நியமிக்கப்படுவதற்கு முன்பே பிரத்தியேக பயிற்சி ஒன்று அளிக்கப்படும்.
பெரிய கிளைகளிலுள்ள உதவி மற்றும் துணை/இணை மேலாளர்களுக்கும் இத்தகைய பயிற்சி அளிக்கப்படுவதுண்டு. என்றாலும் அவர்கள் கிளை மேலாளர் (Branch Manager) விடுப்பிலோ (On leave) அல்லது பணியின் காரணமாக கிளையை விட்டு (on official duty) வெளியே சென்றிருக்கும் சமயத்திலோ மட்டுமே அவர்கள் இப்பிரத்தியேக பணியை (கடன் வழங்குவது) ஆற்றுவார்கள். அப்போதும் கிளை மேலாளர் பணிக்கு திரும்பியதும் அவருடைய உதவியாளர்கள் வழங்கிய கடன்களின் தன்மையையும், உதவியாளர்கள் கடன் வழங்கும்போது கவனிக்க வேண்டிய அல்லது கடைபிடிக்கவேண்டிய நியதிகளையும் சரிவர கடைபிடித்தனரா என்பதையெல்லாம் ஆராய்ந்து குறைகள் இருப்பின் உடனே வட்டார அல்லது தலைமையலுவலகத்துக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பு உண்டு.
ஆனால் என்னுடையதைப் போன்ற சிறிய கிளைகளில் அதுவும் புதிதாய் திறக்கப்பட்ட கிளைகளில் தங்க நகைகள் மீது கடன் வழங்குவது மட்டும் மேலாளருடைய தனிப்பட்ட பொறுப்பாகும். இருப்பினும் சில தவிர்க்க முடியாத சமயங்களில் அதாவது, அலுவலக பணியின் நிமித்தம் வணிக நேரத்தில் (Business Hours) வங்கியை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் சமயங்களில் இந்நியதியை தளர்த்தவேண்டிய சூழ்நிலை ஏற்படுவதுண்டு.
அன்றும் அப்படித்தான்.
என்னுடைய கிளைக்கு அருகாமையில் கடை வைத்திருந்த Pawn Brokersல் ஒருவர் அவருடைய Pawn Broker நண்பர் ஒருவரை தங்க நகைகளின்மேல் கடன் பெற அழைத்து வந்திருந்தார்.
ஒரு முக்கியமான வாடிக்கையாளரை நான் சந்திக்க வேண்டி வெளியே சென்று வர புறப்பட்டுக்கொண்டிருந்தேன். எனவே என்னுடைய உதவி மேலாளரை அழைத்து அவருடைய தேவையை பூர்த்தி செய்யுங்கள் என்று கூறிவிட்டு வெளியே சென்று இரண்டு மணி நேரம் கழித்து திரும்பி வந்தேன்.
ஒவ்வொரு நாளும் இறுதியில் அன்றைய தினம் கடனளித்த எல்லா தங்க நகைகளையும் எடை, எண்ணிக்கை ஆகியவற்றை அதனதன் கடன் பத்திரங்களோடு (loan pledge forms) ஒப்பிட்டு பார்ப்பதுடன் நகைகளின் Purity ஐயும் நானும் என்னுடைய உதவி மேலாளரும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்து வைப்பது வழக்கம்.
முதலில் நான் இல்லாத நேரத்தில் என்னுடைய உதவி மேலாளர் வழங்கிய கடன்களுக்கு அடகு வைத்திருந்த நகைகளை சரிபார்க்கலாம் என்று அவரையும் அழைத்து ஒவ்வொரு நகையாக பரிசோதிக்க ஆரம்பித்தோம்.
முதல் மூன்று நான்கு நகை கடன் கணக்குகளை சரிபார்த்துவிட்டு கடைசியாக - அதாவது நான் வெளியே இறங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வந்தவரின் - கொடுக்கப்பட்ட கடனுக்கு ஈடாக வைக்கப்பட்டிருந்த நகைகளை சரிபார்க்க ஆரம்பித்தேன்.
கடன் தொகை ரூ.25,000/-. இரண்டு கெட்டி வளையல்களும், இரண்டு நால்வரி (Four line Chain) மாலைகளும் என்று நினைக்கிறேன். மாலைகளை உரைத்து பார்த்ததில் மாற்று சற்றே குறைவாயிருந்தது. பிறகு வளையல்களை எடுத்தேன் .
சாதாரணமாக வளையல்களை உரைப்பதற்கு முன் உள்ளங்கையில் வைத்து வளைகிறதா என்று விரல்களால் அழுத்தி பார்ப்பது வழக்கம். அசல் தங்கம் என்றால் உடையாமல் ஒரு Spring Reaction இருக்கும். மாற்று குறைவாயிருந்தால் வளைந்துபோகுமே தவிர உடையாது. பிறகு வளையலை உரை கல்லில் தட்டி பார்ப்போம். தங்க வளையல்கள் ணங், ணங், என்ற ஒலியெழுப்பும். இல்லையென்றால் தக், தக் என்ற ஒலி வரும். இது பயிற்சி வகுப்பில் கற்றுக்கொண்ட அடிப்படை பாடம். உரைகல்லின் மாதிரியை கீழே படமாக கொடுத்திருக்கிறேன். (கூகுள் தேடுதல் என்ஜினின் கைங்கரியம்)
இந்த இரண்டு வளையல்களையும் வளைக்க முயற்சித்தபோது உடையவில்லை. கல்லில் தட்டி பார்த்தபோதும் தங்க நகையின் ஓசையே வந்தது. இந்த இரண்டு பரிசோதனையிலும் திருப்தியடைந்து கடன் பெற்றவரும் வங்கிக்கு நன்கு அறிமுகமானவாயிருந்தால் அநாவசியமாக உரைத்து பார்க்க மாட்டேன். ஆனால் அன்று என்னவோ ஒரு சிறு சந்தேக பொறி தட்ட இரண்டையுமே உரைத்து பார்ப்பதென தீர்மானித்தேன்.
என் நல்ல நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் பரிசோதனையில் ஆசிட் ரியாக்ஷன் ஒன்றும் பெரிதாய் தெரியவில்லை. ஆனால் உரைத்த இடம் சட்டென்று கறுத்துப் போகவே இரண்டு வளையல்களையும் தனியே பிரித்தெடுத்து வைத்துவிட்டு அருகிலிருந்த நகைக்கடை உரிமையாளரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவருடைய ஆசாரிகளுள் (Goldsmith) ஒருவரை உடனே அனுப்ப சொல்லி கேட்டேன். அவரும் எனக்கு நன்கு அறிமுகமானவராதலால் உடனே அனுப்பி வைத்தார்.
அவருடைய முதல் பார்வையிலேயே, ‘சார், உங்கள நல்லா ஏமாத்திட்டாங்க சார்..இது தங்கமே இல்ல.. நல்லா கெட்டியா தங்க முலாம் பூசியிருக்காங்க.. அவ்வளவுதான்’ என்று கூறிவிட்டார். சரி என்று மாலைகளை எடுத்து கொடுத்தேன். நான்கைந்து இடங்களில் பரிசோதித்துவிட்டு, ‘சார் படே கில்லாடிங்க சார். செயின்ல சில இடங்கள் மட்டும்தான் தங்கம். மற்றதெல்லாம் போலி. நீங்க உரைச்ச இடம் தங்கம்தான். அதான் நீங்க ஏமாந்துட்டீங்க.’ என்றார்.
எங்களுடைய கணக்குப்படி அந்த நகைகளில் இருந்த தங்கத்திற்கு சுமார் ரூ.5,000/- கொடுக்கலாம். உடனடியாக அடகு வைத்தவரை பிடித்து மீதமுள்ள தொகையை வசூலிக்காவிட்டால் எங்கள் இருவருடைய கையிலிருந்தும் அடைக்க வேண்டியதுதான்.
கடன் வழங்கியது காலை 11.00 மணி. இப்போது மணி மாலை ஐந்து. அடகு வைத்தவன் வேண்டுமென்றே செய்திருந்தால் இடைபட்ட ஆறு மணிநேரத்தில் பிடிபட காத்திருப்பானா என்ன?
‘இப்ப என்ன செய்யறது சார்? தப்பு என்மேலதான், நான் வேணும்னா பணத்தை கட்டிடறேன் சார்.’ என்று என்னுடைய உதவி மேலாளர் பதற்றமடையவே எனக்கும் அந்நேரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை.
உடனே அருகிலிருந்த தொலைபேசியை எடுத்து எனக்கு தெரிந்த ஒரு எண்ணை சுழற்றினேன்..
தொடரும்
டென்ஷனாகாதீங்க ராஜ்..
பதிலளிநீக்குரிலாக்ஸ் பண்ணிக்கறதுக்கு என்கதையுலகம் வலைப்பூக்கு போய் இன்றைய பதிவை படிங்க..
இங்க நாளைக்கி பாக்கலாம்.
ஆனால் அன்று என்னவோ ஒரு சிறு சந்தேக பொறி தட்ட இரண்டையுமே உரைத்து பார்ப்பதென தீர்மானித்தேன்//
பதிலளிநீக்குசரியான நேரத்துல வருகிற இந்த மாதிரி இன்ட்யூஷன்ஸ் (Intuitions)தான் நம்மள நிறைய சமயத்துல ஆபத்திலருந்து காப்பாத்துது.
சரிதானே சார்?
சாதாரணமா நடந்த சம்பவங்களை கூட நல்லா சஸ்பென்சோட சொல்றீங்க ஜோசப்.
பதிலளிநீக்குகன்டினியூ பண்ணுங்க.
தங்க வளையல்கள் ணங், ணங், என்ற ஒலியெழுப்பும். இல்லையென்றால் தக், தக் என்ற ஒலி வரும். /
பதிலளிநீக்குநல்ல ஐடியா சார். நேத்தைக்கி கல்ல பத்தி கேட்டேனே.. அது வேணாம். இந்த எக்ஸ்பிரிமென்ட வச்சி வளையலையெல்லாம் டெஸ்ட் பண்ணிரலாம் இல்ல? இன்னைக்கே செஞ்சிடரேன்.
தாங்க்ஸ் சார்.
உரைகல்லின் மாதிரியை கீழே படமாக கொடுத்திருக்கிறேன். (கூகுள் தேடுதல் என்ஜினின் கைங்கரியம்)
பதிலளிநீக்குநீங்க சொல்றது சரிதாங்க. கூகுள் சார்ச்ல கிடைக்காததே இல்லேன்னு சொல்லலாம்.
ஆமாம் சம்பத்
பதிலளிநீக்குஎன்னுடைய நல்ல நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். நானாக கண்டுபிடிக்காமல் என்னுடைய தலைமை அலுவலகத்திலிருந்து வருகிற ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்திருந்தார்களேயானால் விஷயம் விபரீதமாக போயிருக்கும்.
என்னுடைய மேலாளர் பதவியே பறிபோனாலும் போயிருக்கும்.
இந்த எக்ஸ்பிரிமென்ட வச்சி வளையலையெல்லாம் டெஸ்ட் பண்ணிரலாம் இல்ல? இன்னைக்கே செஞ்சிடரேன்.
பதிலளிநீக்குஇப்பவும் பேர் சொல்ல மாட்டேங்குறீங்க?
பரவாயில்லை.. டெஸ்ட் பண்ணுங்க.. ஆனா ரிசல்ட் தப்பாயிருந்தா என்னை திட்டாதீங்க.
இந்த எக்ஸ்பிரிமென்ட வச்சி வளையலையெல்லாம் டெஸ்ட் பண்ணிரலாம் இல்ல? இன்னைக்கே செஞ்சிடரேன்./
பதிலளிநீக்குஉண்மைதான் அண்ணாசாமி. கூகுள் ஒரு அருமையான டேட்டா மைனிங் எஞ்சின்தான். சந்தேகமேயில்லை.
நன்றி.
எங்க ஃபோன் பண்ணீங்கன்னு சொல்லட்டா? போலீசுக்கு. ரைட்டா?
பதிலளிநீக்கு. .
|
---
எங்க ஃபோன் பண்ணீங்கன்னு ..
பதிலளிநீக்குநாளைய பதிவை பாருங்கள். தெரியும்.
உங்கள் பதிவு நான் படித்ததில் பிடித்தது. உங்கள் கதைகளும் நன்றாக உள்ளன.
பதிலளிநீக்குமிகவு நன்றி மணியன்.
பதிலளிநீக்கு