24 செப்டம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - PDF கோப்பு (சிறப்புப் பதிவு)

என்னுடைய சொந்த செலவில் சூன்யம் என்ற க்ரைம் தொடரை தினமும் படிக்கும் சில பதிவ-நண்பர்கள் முந்தைய பதிவுகளின் சுட்டிகளை அளிக்குமாறு கேட்கின்றனர். வேறு சிலர் இந்த தொடரின் ஒவ்வொரு பதிவையும் காப்பி/பேஸ்ட் முறையில் தங்களுடைய கணினியில் சேமித்துக்கொள்வதாகவும் தொடர் முடிந்ததும் அனைத்தையும் படிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 

இத்தொடரில் வெளியாகும் அனைத்து பதிவுகளையும் ஒருங்கிணைத்து ஒரே கோப்பாக பதிவிறக்கம் (Download) செய்து படிக்க ஏதுவாக கூகுள் டாக்ஸ் (Google Docs) தள்த்தின் உதவியுடன் ஒரே PDF கோப்பாக தரவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ள வசதி செய்து கொடுத்துள்ளேன். 

ஆனால் இதை எப்படி தரவிறக்கம் செய்வது என சிலர் விளக்கம் கேட்டுக்கொண்டதால் இந்த சிறப்புப் பதிவு. 

முதலில் ஒவ்வொரு பதிவின் துவக்கத்திலும் உள்ள 'முன்கதை' சுட்டியை தெரிவு செய்யுங்கள் (Click the link).

தெரிவு செய்ததும் காணப்படும் திரையில் தெரியும் 'File' மெனுவை தெரிவு செய்யவும்.  

'File' மெனுவிலிருந்து விழும் பட்டியலின் அடியிலிருந்து மூன்றாவதாக தெரியும் 'Download' optionனை தெரிவு செய்யவும்.

''Download' optionனை தெரிவு செய்ததும் 'Crime Novel.pdf' என்ற கோப்பு உங்களுடைய கணினியில் தரவிறக்கம் செய்யப்பட்டு சேமிப்பு செய்யப்படும்.  உங்கள் கணினியிலுள்ள PDF READERஐ பயன்படுத்தி வாசிக்க முடியும். 

இந்த கோப்பை தினமும் update செய்வதால் உங்களுடைய கணினியிலுள்ள கோப்புக்கு பதிலாக தினமும் இந்த முறையை பயன்படுத்தி updated கோப்பை தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.



6 கருத்துகள்:

  1. நான் தினமும் உங்கள் பதிவை ‘சூட்டோடு சூடாக’ படித்து விடுவதால் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை எனக்கு. இருப்பினும் தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. மரியாதைகுரிய டிபிஆர் ஜோ அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் எழுதி வந்த “ சொந்த செலவில் சூன்யம்” தொடரினை தொடர்ந்து படிக்க இயலாமல் போய்விட்டது. காரணம் வாசற் படிக்கட்டில் நான் விழுந்து விட்டதன் காரணமாக எனக்கு ஏற்பட்ட கடுமையான முதுகு வலிதான். தொடரையும் ஞாபகமாக தொடர்ந்து வர இயலவில்லை. அதனால்தான் இந்த தொடருக்கு என்னால் கருத்துரை எழுத முடியாமல் போய்விட்டது. பின்னாளில் ஒரு சேரப் படித்துக் கொள்கிறேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  3. நடுவே பயணத்தின் காரணமாக பல பகுதிகளைப் படிக்க வில்லை. அதனால் தொடர்ந்து படிக்க இயலவில்லை. பிடிஎஃப் வடிவில் மொத்தமாய் படித்து விடுகிறேன்....
    நடுவே பயணத்தின் காரணமாக பல பகுதிகளைப் படிக்க வில்லை. அதனால் தொடர்ந்து படிக்க இயலவில்லை. பிடிஎஃப் வடிவில் மொத்தமாய் படித்து விடுகிறேன்....

    பதிலளிநீக்கு
  4. வே.நடனசபாபதி said...
    நான் தினமும் உங்கள் பதிவை ‘சூட்டோடு சூடாக’ படித்து விடுவதால் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை எனக்கு. இருப்பினும் தகவலுக்கு நன்றி!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  5. தி.தமிழ் இளங்கோ said...
    மரியாதைகுரிய டிபிஆர் ஜோ அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் எழுதி வந்த “ சொந்த செலவில் சூன்யம்” தொடரினை தொடர்ந்து படிக்க இயலாமல் போய்விட்டது. காரணம் வாசற் படிக்கட்டில் நான் விழுந்து விட்டதன் காரணமாக எனக்கு ஏற்பட்ட கடுமையான முதுகு வலிதான். தொடரையும் ஞாபகமாக தொடர்ந்து வர இயலவில்லை. அதனால்தான் இந்த தொடருக்கு என்னால் கருத்துரை எழுத முடியாமல் போய்விட்டது.//

    பரவாயில்லை சார். உடம்ப பார்த்துக்குங்க. படிகட்டு மேல கூரை இல்லையோ. வாணம் பார்த்த படிக்கட்டுகளில் ஏறும்போது, குறிப்பாக மழைக்காலங்களில், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என் உறவினர் ஒருவருக்கும் இவ்வாறு அடிபட்டுள்ளது.
    அறுபது வயதுக்கு மேல் ஆகியிருந்ததால் சரியாவதற்கு பல மாதங்கள் பிடித்தன. இத்தனை வலியிலும் இங்கு வந்து தகவல் அளித்ததற்கு மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  6. வெங்கட் நாகராஜ் said...
    நடுவே பயணத்தின் காரணமாக பல பகுதிகளைப் படிக்க வில்லை. அதனால் தொடர்ந்து படிக்க இயலவில்லை. பிடிஎஃப் வடிவில் மொத்தமாய் படித்து விடுகிறேன்....//

    நன்றிங்க.

    பதிலளிநீக்கு