02 டிசம்பர் 2005

சென்னைக்கு புயல் அபாயம்!!

இது முகமூடி இன்று பதித்த பதிவுக்கு பதில் பதிவு!

நம்முடைய வானிலை ஆராய்ச்சியாளர்கள் யாருக்கும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கும் பதிவு.

Image hosted by Photobucket.com

நன்றி: தினமலர்


ஆராய்ச்சியாளர்கள் கணித்ததுபோலவே இப்போது சென்னையில் மழை கொட்டிக்கொண்டிருக்கிறது!

4 கருத்துகள்:

 1. இங்கே பெங்களூரில் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. புயலை அங்க திருப்பி விட்டுட்டா போச்சி. சேப்பாக்கத்துக்கும் மழைக்கும் ரொம்ப ராசி.

  முகமூடியோட பதிவ படிச்சீங்களா?

  பதிலளிநீக்கு
 3. ஜோசஃப்,

  சும்மானாச்சும் நம்மளையே நாம குறை சொல்லிக்கறது ஒரு ஃபாஷன்க்றதால சொல்லலைங்க..

  முன்னாடி எல்லாம் நம்மூருல வானிலை அறிக்கைன்னா தூர்தர்சன்ல இந்தியாவின் முக்கிய நகரங்களின் தட்பவெட்பம்னு ஒரு ஸ்லைடு காமிப்பாங்க.. அதுல தில்லி, சென்னையின் அதிகபட்ச, குறைந்தபட்ச செல்சியஸ் இருக்கும். அப்புறம் பொதிகை பரவலான நேரத்துல தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களின் வெப்பநிலை காமிக்க ஆரம்பிச்சாங்க. அதுல பாத்தீங்கன்னா பெரும்பாலான நாட்கள் உதகமண்டலம், கொடைக்கானல் குறைந்த பட்ச வெப்பநிலை வெறுமையாவே இருக்கும்.. அப்புறம் கொஞ்சம் முன்னேறி க்ராபிக்ஸ் (ஸாட்டிலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்) காமிச்சப்போ நானும் ரொம்ப குதூகலிச்சி எப்பா எவ்ளோ முன்னேறிட்டோம்டா நாமன்னு பெருமைத்தான் பட்டுகிட்டு இருந்தேன்...

  ஆனா அயல்நாடுகளுக்கு போக ஆரம்பிச்சப்புறம்தான் நம்மூரு இந்த விஷயத்துல எவ்வளவு பின் தங்கி இருக்குன்னு உணர முடிஞ்சது... இங்கே வானிலை ஆய்வுங்கறது ஒரு பெரிய துறை.. அதன் முக்கிய பிரிவு forecasting. அடுத்த 5 நாட்களுக்கு கிட்டத்தட்ட துல்லியமாக வானிலை அறிக்கை கொடுக்கிறார்கள். அதிலும் பல நாடுகளில் காலநிலை மாற்றம் என்பது தறிகெட்ட அளவில் இருக்கும். வெயில் திடீரென மாறி மழையும் அது திடீரென பனியாகவும் மாற ஆரம்பிக்கும். இது மக்கள் வாழ்வு முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். கிழக்கு அமெரிக்காவில் குளிர் காலங்களில் காலையில் எழுந்தவுடன் நியூஸ் பார்த்துவிட்டு அதற்கு ஏற்றார்போல் அலுவலகம் கிளம்பும் அளவு வானிலை அறிக்கை வாழ்வோடு இணைந்தது. அந்தளவு அது துல்லியமாகவும் (கொஞ்சம் முன்னே பின்னே,ஆனால் சகிக்கக்கூடிய அளவில்) இருக்கும்... இது சுலபமான வேலையல்ல.. இவர்கள் காலம் காலமாக தட்பவெட்ப தகவலை சேமித்து வைத்திருக்கிறார்கள். அதனை சூப்பர் கம்ப்யூட்டர் உதவியோடும், weather modeler உதவியோடும் உண்மையிலேயே ஆய்வு செய்து தகவல் தருகிறார்கள். மேலும் இதை இவர்கள் தனியாக செய்யாமல் பல நாடுகளின் கூட்டமைப்போடு செய்கிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன். அதனால்தான் நாளை மறுநாள் காற்று வீசும் திசையென
  வளைந்து வளைந்து செல்லும் காற்றின் பாதையை இவரக்ளால் 80% துல்லியமாக சொல்ல முடிகிறது...

  இந்தியாவிலிருந்து இதுவரை அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் அனைத்தும் தொலைதொடர்பு மற்றும் இந்திய நில/கடல் பரப்பு + புவியியல் தகவல் ஆராய்ச்சிக்காகவே அனுப்பப்பட்டவை என்பது என் எண்ணம்... இந்நிலையில் தமிழகமே வெள்ளக்காடாக இருக்க, இங்கே மழையே பெய்யலையே எப்படி நம்மூர் தண்ணியில மூழ்கிச்சின்னு ஊரே பரிதவிச்சி இருக்க, ஏரி, குளம், அணைகளின் தண்ணீர் பிடிப்பு பகுதிகளில் எங்கே எந்தளவு மழை பெய்தால் அது ஏரி அணைகளுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தும், அதற்கேற்றார் போல் எப்படி மக்களை கையாளலாம் என முக்கிய தகவல்கள் எல்லாம் வானிலை ஆய்வை எதிர்நோக்கி இருக்க வானிலை ஆய்வு நிலைய இயக்குனர் தொலைக்காட்சியில் தோன்றி இவ்வாறு சொல்கிறார் : அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யலாம்...

  முன்னேறும் நாடான (எப்ப முன்னேறிய நாடுன்னு அச்சுல பார்ப்போம்) நமக்கு மேற்கத்திய நாடுகள் அளவு மாடல்கள் வைத்து ஆராய்ச்சி செய்யும் வசதிக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஆகும் செலவை விட நிவாரண நிதிக்கு ஆகும் செலவு குறைந்ததுதானே... இன்னும் பல யுகங்களுக்கு 2000 ரூபாய் + 100 ரூ சேலை/வேட்டிக்கு உயிர்ப்பலி என்ற நியூஸ¤ம் அறிவிப்பு கொடுக்கறதுக்கு முந்தி அவசரப்பட்டு கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற, கதி என்னவென்று தெரியாத மீனவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் ரிலீஸ் செய்த நிவாரண நிதி பற்றிய நியூஸ¤ம் வானிலை ஆய்வு மையத்தின் பொத்தாம் பொதுவான அறிக்கையும் பஞ்சமில்லாமல் கிடைக்கும்...

  பதிலளிநீக்கு
 4. வாங்க முகமூடி,

  எனக்குக்கூட பென்ஸ் இல்லன்னா அட்லீஸ்ட் மாருதி எஸ்டீம் வாங்கி ஓட்டணும்னு ஆசைதான். என்ன பண்ண இப்பத்தான் ஃபியட்டுலருந்து மாருதி 800 வந்திருக்கேன். ஆசையிருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்கன்னு கேட்டதில்லை.

  நம்ம நாடு இப்பத்தான் பின்தங்கிய நாடுங்கற ஸ்டேட்டஸ்லருந்து கடந்த சில வருஷங்களா தொடர்ந்து வளரும் நாடா மாறியிருக்கு.. இதுல வளர்ச்சியடைஞ்ச நாடுகளோட நிலைய எட்டணும்னு ஆசைப்பட்டா எப்படீங்க? நம்ம நாட்டோட அரசியல் மற்றும் ஆட்சி முறையும் இன்னும் மாறலையே..

  மாறுங்கற நம்பிக்கை உங்களமாதிரி இளைஞர்களைப் பார்க்கும்போது நிச்சயம் இருக்கு. கடந்த இருபது ஆண்டுகள்ல நாம அடைஞ்ச முன்னேற்றம் மற்ற வளரும் நாடுகளோட முன்னேற்றத்துக்கு எந்த வகையிலும் குறைஞ்சதுல்லங்கறதுதான் என்னோட வாதம். சில துறைகள்ல அப்படி இப்படின்னு இருக்கலாம். இல்லேங்கல.. ஆனா வளரேயில்லங்கறத என்னால ஒத்துக்க முடியலை. ஒரு வேளை கிணத்துத் தவளையா இருக்கறதுனால அப்படி தோணுதோ என்னவோ.

  பதிலளிநீக்கு