15 அக்டோபர் 2005

ஆண்களின் ஆதிக்கத்தை முறியடிப்பது எப்படி?

இப்பிரச்சினையை மேலோட்டமாக (Superficial) இல்லாமல் நிதர்சனமான (யதார்த்தமான) கோணத்திலிருந்து அணுகிப் பார்த்தால் எப்படியிருக்கும் என்று யோசித்ததன் விளைவே இப்பதிவு.

உலகம் படைக்கப்பட்ட நாள் முதலே, அதாவது ஆதாம், ஏவாள் காலத்திலிருந்தே இப்பிரச்சினை தலையெடுத்துவிட்டது என்றால் மிகையாகாது.

ஆதாமின் விலா எலும்புகளிலிருந்து ஒன்றை எடுத்து மண்ணால் (இன்றும் ஆணுக்கு பெண்ணைக் காட்டிலும் ஒரு விலா எலும்பு குறைவு என்பது விஞ்ஞான உண்மை) மூடி இறைவன் தன் ஆவியை அதனுள் ஊதி பெண்ணைப் படைத்ததாக பைபிள் கூறுகிறது.

ஆனால் அதற்கு முன்பே இந்து சமயம் இந்திய மண்ணில் தோன்றிவிட்டது என்கிறது சரித்திரம்.

சிவன் பெரிதா? பார்வதி பெரிதா? என்ற வாக்குவாதங்கள் இந்து மதத்திலும் எழுந்துள்ளன என்பதையும் மறுக்கவியலாது.

ஏன் இந்த பிரச்சினை?

ஆணால் எல்லாம் முடியும் என்றால் பெண்ணால் அதுவும் முடியும் அதற்கு மேலும் முடியும் என்பதுதான் நாம் சமீப காலங்களாக உணர்ந்துக் கொண்டிருக்கும் உண்மை.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற வாக்கிலிருந்தே பெண்ணால் எல்லாம் முடியும் என்பது தெளிவாகிறதே.

உடல் வலிமை (Physical Strength) என்ற அடிப்படையைத் தவிர்த்து வேறெந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஆணால் முடிகின்ற செயல்கள் யாவுமே பெண்ணாலும் திறம்பட (ஏன் ஒருப்படி மேலேயும் போய்) செய்ய முடியும் - இது இன்று யதார்த்த வாழ்க்கையில் நாம் காண்கின்ற உண்மை.

பெண்ணினம் ஒரு மெல்லினம் என்பதெல்லாம் இன்றைய உலகில் அடிபட்டுப்போன உண்மை. இன்று கணரக வாகனங்களை செலுத்தும் பெண்களையும், கணரகத் தொழிற்சாலைகளில் ஆண் செய்கின்ற அதே வேலையைச் திறம்படச் செய்யும் பெண்களையும் காண்கின்றோம்.

அதேபோல் பெண்ணியம் என்ற ஒரு இயக்கத்தின் தேவையும் நாளடைவில் அவசியமில்லாமல் போய்விடும்.

படைப்பிலிருந்தே ஆணும், பெண்ணும் (உடல் வலிமையைத் தவிர) எல்லா உடற்கூற்றிலும், முக்கியமாய் மனித உடலின் மூலதாரமான மூளையிலும், ஒத்திருந்ததிலிருந்தே தெரிகிறது படைத்தவனின் நோக்கம் என்னவாயிருந்ததென்று!

படைத்தவனின் எண்ணத்தில் அவனுடைய படைப்புகள் யாவுமே ஒன்றுதான் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

உலகிலுள்ள ஜீவராசிகளுள் மனிதப்பிறவியைத் தவிர, எல்லாம் இவ்வுன்னைமயைச் சரியாகப் புரிந்துவைத்திருப்பதால் அவற்றுள் ஆண் பெரிசு அல்லது பெண் சிரிசு என்கின்றபேதம் எழுந்ததேயில்லை.

இயற்கை ஆணுக்கென்றும் பெண்ணுக்கென்றும் விதித்துள்ள உரிமைகளையும் கடமைகளையும் கூடுதலாக சிந்திக்காமல் எல்லா ஜீவராசிகளும், முக்கியமாய் மனித இணம், உணர்ந்து நடந்துக்கொள்கிற பட்சத்தில் பிரச்சினை எங்கிருந்து வந்தது?

இங்கே கண்ணியம், கடமை, கட்டுப்பாடு என்பதும் கற்பு என்பதும் ஓரிணத்துக்கு மட்டுமே மற்றவருக்கில்லை என்பதிலிருந்துதான் பிரச்சினையே எழுகிறது.

இப்படியே போனால் இப்பிரச்சினை எங்கு சென்று முடியும் என்று நினைக்கிறீர்கள்? அநாச்சாரத்தில்தான். சந்தேகமேயில்லை.

ஆணும் பெண்ணும் சம தகுதியுள்ள நிலையில் பெண்களுக்கு மட்டும் நோபல் பரிசுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து இங்கே அர்ஜுனா பட்டம் கொடுப்பதுவரை இந்த பாகுபாடு இப்போதும் ஆட்டிப் படைக்கிறதே!

எங்களுக்கு தனியிடம் வேண்டும், தனித்தொகுதி வேண்டும், எல்லாவற்றிலும் ஒதுக்கீடு, முன்னுரிமை வேண்டும் என்று கேட்டுக் கேட்டே பெண்கள் தாங்களாகவே சம தகுதியுள்ள ஆணுடன் சமுதாயத்தின் உதவியில்லாமல் போட்டியிட இயலவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதுதான் வேதனை!

எனக்கொன்றும் சமுதாயத்தின் கரிசனம் தேவையில்லை. என்னை எனக்கிருக்கின்ற தகுதிகளை வைத்து, சமுதாயத்தில் எனக்குரிய அந்தஸ்த்தை எனக்குக் கொடுத்தாலே போதும் என்று அவர்கள் வாதிடுவார்களானால் அதுதான் இந்த பாகுபாட்டை சமுதாயத்திலிருந்து முற்றிலுமாக, நிரந்தரமாக ஒழிக்க இயலும்.

செய்வார்களா?

செய்ய வேண்டும் என்பதுதான் இன்றைய தேவை!

5 கருத்துகள்:

  1. (இன்றும் ஆணுக்கு பெண்ணைக் காட்டிலும் ஒரு விலா எலும்பு குறைவு என்பது விஞ்ஞான உண்மை// -
    - நண்பரே,
    இந்த எந்த விஞ்ஞானத்தில் உண்மையென்று கூற முடியுமா? அப்படியே இங்கு போய் அந்த ஐந்தாவது பாயிண்ட்டையும் தெளிவு படுத்துங்களேன்!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா9:44 PM

    இதேபோல இனி சாதி வேறுபாட்டை காரணம் காட்டி முன்னுரிமை தராதே என்றும் ஆண்டாண்டு ஏழ்மையின் பிடியில் இருப்பவர்களும் மற்றவர்களை போல பொது கோட்டாவில் போட்டி போடட்டும் என்றும் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு