21 அக்டோபர் 2005

வலைப் பூக்களில் என்ன எழுதலாம், என்ன எழுதக்கூடாது!

வலைப்பூக்கள்!

என்ன அழகானப் பெயர்!

அழகான பூக்களைத் தொடுத்து, மாலையாக்கி வாசகர்களுக்கென கடை பரப்பி, முகர்ந்து பார்த்து இன்புறுங்கள் என்று தொடுத்து வழங்கிவரும் தமிழ்மணம் பதிவர்களின் சங்கமம்.

இதில் தொடுக்கப்பட்டுள்ள வலைப்பூக்கள் யாவுமே ஒரு எழுதப்படாத எல்லைகளுக்குட்பட்டே (Unwritten boundary) செயல்படவேண்டும் என்பது பொறுப்புள்ள பதிவர்கள் அறிந்திருக்க வேண்டிய நியதி.

எதை எழுதலாம், எழுதக்கூடாது என்பதை மன்றத்தை தோற்றுவித்தவர்களோ அல்லது தற்போது நிர்வகிப்பவர்களோ வரையறுத்துக் கூற உரிமையுள்ளதா இல்லையா என்பதுமட்டுமல்ல இப்போதைய பிரச்சினை.

இது என்னுடைய வீடு. இதில் குடியிருந்துக்கொள்ள பல அறைகளை பலருக்கும் ஒதுக்கியிருக்கிறேன். யார் வேண்டுமானாலும் இலவசமாக தங்கிக்கொள்ளலாம்.

ஆனால் ஒன்று! உங்களுடைய வாசம் (வசித்தல்) உங்களுடன் இவ்வில்லத்தில் உடன் வசிக்கும் யாருக்கும் இடைஞ்சல் தரும் விதத்தில் இருக்கலாகாது. அத்துடன் உங்களுக்கிருக்கும் குடியுரிமை இங்குள்ள மற்றெல்லாருக்கும் உள்ள உரிமைக்கு உட்பட்டதே.

அவ்வுரிமைக்கு பங்கம் விளைவிக்க நீங்கள் முட்படும் பட்சத்தில் உங்களுடைய குடியுரிமையை ரத்துச் செய்யும் அதிகாரம் எனக்குண்டு.

இதைத்தான் நாசூக்காக அதே சமயம் தெளிவாக

thamizmanam.com reserves the right to list any blog submitted based on its own norms of acceptance.

என்ற வாசகத்தின் மூலம் தமிழ்மணத்தில் பதிவு செய்ய விரும்பும் வலைப்பதிவாளர்களுக்கு துவக்கத்திலேயே அறிவுறுத்தப்படுகிறது.

****

நான் தமிழ்மணத்தில் இணைந்து ஒரு சில மாதங்களே கின்றன.

ஆயினும் இனைந்த நாள் முதல் என்னால் இயன்றவரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ்மணத்தில் பதியப்பட்டுள்ள பல வலைப்பூக்களையும் வலம் வந்துள்ளேன். நாள்தோறும் பதியப்படும் பல பதிவுகளையும் வாசிக்கவும் செய்திருக்கிறேன்.

ஏதோ எனக்குத் தோன்றியவற்றையும் எழுதியிருக்கிறேன். பல ஆதரவு பின்னூட்டங்களும் சில அதிகப்பிரசங்கித்தனமான பின்னூட்டங்களும் எழுதப்பட்டுள்ளன. இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் கண்டுணரும் பக்குவம் எனக்குள்ளது.

இது ஒரு புதிய அனுபவம்தான்.

கடந்த மூன்று தினங்களாக அலுவலக நிர்பந்தம் காரணமாக கொச்சிக்கு செல்ல வேண்டியிருந்ததால் வலைப்பூக்களை வலம்வரவோ அல்லது பதிவுகளை வாசிக்கவோ எனக்கு நேரம் கிடைக்கவில்லை.

இன்று காலைத் திரும்பிவந்து தமிழ்மணம் வாசகர் பகுதியை அடைந்தபோதுதான் சில பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்தேன்.

இம்முடிவுக்கு பாதகமாகவும், சாதகமாகவும் பதிவாகியிருந்த பல பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பின்னர் இதுகுறித்து திரு. காசி எழுதிய பதிவையும் பார்த்தப்பிறகுதான் இப்பதிவை எழுத வேண்டும் என்று விரும்பினேன்.

காசி அவர்கள் தமிழ்மண திரட்டியிலிருந்து பதிவுகள் விலக்கப்பட்டுள்ளதன் காரணங்களில் நான்காவதாக குறிப்பிடப்பட்டுள்ள காரணம் ‘என் தனிப்பட்ட நம்பிக்கையில் திரட்டப்படத் தேவையில்லாதவை’ என்பதாகும்.

இதன் பின்னணி என்னவாயிருக்கும்?

*****

எழுதவொரு தளம் கிடைத்துவிட்டதென்ற நினைப்பில் தங்கள் மனம் போன போக்கில் எதைத்தான் எழுதுவதென்ற வரையறையில்லாமல் எழுதுவதையும் வாசித்திருக்கின்றேன். குசும்பு என்ற சொல்லின் பொருளறியாமல் எதைப்பற்றித்தான் குசும்படிப்பது என்றில்லாமலும் நாம் எழுதுவது யாருடைய மனதையாவது புண்படுத்த வாய்ப்பிருக்கிறதோ என்றெல்லாம் நினையாமலும் சிலர் எழுதியதையும் நானும் வாசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் இதைப்பற்றி மன்றத்தில் முறையிட்டாலென்ன என்றெல்லாம் தோன்றியுள்ளது.

அப்போதெல்லாம் போகட்டும் திருந்திவிடுவர் என்று நினைத்து விட்டு விடுவேன். ஆனால் நாளடைவில் நான் வாசிக்க நேர்ந்த பதிவுகள் காசியின் கண்ணோட்டத்தை ஒத்ததாகவே இருந்து வந்துள்ளது.

இத்தகையப் பதிவுகள் திரட்டப்பட தேவையுள்ளவைதானா என்பதே அது.

என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கையிலும் நீக்கப்பட்டுள்ள பல பதிவுகளும் (ஏன் நீக்கப்படாமல் உள்ள சில பதிவுகளும் கூட) திரட்டப்பட தேவையில்லாதவைத்தான்.

நீக்கப்பட்டவர்கள் எல்லாம் இம்முடிவை ஆதரிக்க வேண்டுமென்பதில்லை.

அவரவர்க்கு அவரவர் கருத்துக்களை எழுத எவ்வளவு உரிமையுண்டோ அதேபோல் அக்கருத்துக்களை நீக்கும் உரிமை திரட்டியின் உரிமையாளருக்கும் உண்டல்லவா?

உண்டு என்பதில் இரு வேறு கருத்தகளிருக்க வாய்ப்பில்லை.

ஒரு மதத்தைப் பற்றியோ அல்லது ஒரு இனத்தைப் பற்றியோ தரக்குறைவாகவோ, இழித்தோ, துவேஷத்துடனோ எழுத எனக்கு உரிமை உண்டு என்று நான் வாதிட்டால் அதை மற்றவர் வாசிக்காமலிருக்க தடுக்கும் உரிமை அதைப் பிரசுரிப்பவுருக்கு உண்டு என்பதையும் மறுக்கவியலாதே.

அதேபோன்ற உரிமை தமிழ்மணத்தைப் பொறுப்பேற்று நடத்தும் நிர்வாகிக்கு உண்டு என்றுதான் நினைக்கிறேன்.

அதை எதிர்ப்பதை தவிர்த்து நல்லவற்றை எழுதுங்கள் நாம் எல்லோரும் பயன்பெற உதவுங்கள்.

18 கருத்துகள்:

 1. பெயரில்லா5:22 பிற்பகல்

  மிக அருமையாக மிக தெளிவாக உங்கள் கருத்துக்களை எழுதியுள்ளீர்கள்.

  ஆயினும் நீங்கள் புதியவரென்பதால் இங்கு நடப்பவற்றை முழுவதுமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லையென்றே நினைக்கிறேன்.

  இங்கு நடப்பது சர்வாதிகாரம். என்னுடைய நிலையில் திரட்டப்பட தேவையில்லாதவையென்று நினைக்க உங்களுக்கோ தம்ழிமண நிர்வாகிக்கோ உரிமையில்லையென்பதுதான் உண்மை.

  இந்நிர்பந்தத்தின் பின்னணியை அறியாமல் உங்கள் பதிவை எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

  பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் உங்கள் கருத்தை எதிர்க்க வாய்ப்புண்டு.

  Some might hit you below the belt too. Be prepared

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா5:42 பிற்பகல்

  நீங்களே பெரிய அதிகாரியாச்சே அப்படித்தான் பேசுவீங்க.

  ஆனா நீங்க சொல்றதெல்லாம் சரின்னு ஆகாதுங்க.

  பதிலளிநீக்கு
 3. அநாமதேய நண்பர்(1)

  நீங்க சொன்னது சரிதான். ஒத்துக்கறேன். நான் புதியவன்தான்.

  ஆனாலும் இந்த சர்வாதிகாரம் என்ற உங்களுடைய நோக்கு எனக்கு புரியவில்லை.

  இருப்பினும் இப்போதைக்கு மவுனம் காப்பது இனியும் வருகின்ற பின்னூட்டங்களைப் பார்த்துவிட்டு பதிலளிப்பதுதான் சரியென்று நினைக்கிறேன்.

  உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. அநாமதேய நண்பர் (2),

  நான் ரொம்பப் பெரிய அதிகாரியுமல்ல, நான் சொல்வதெல்லாம் சரியென்று வாதிடுபவனுமல்ல.

  இருப்பினும் உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. தமிழ்மணம் இவ்வளவு பாதிப்புக்குள்ளானதற்கு ஒரு முக்கியக் காரணம் போலி டோண்டு. அவன் மற்றவர்கள் பெயரில் முக்கியமாக என் பெயரில் பின்னூட்டமிட்டு தமிழ்மணத்தையே நாற அடித்துவிட்டான். நீங்களே அவன் இட்டப் பின்னூட்டத்தைப் பார்த்து http://veeravanniyan.blogspot.com/2005/10/blog-post_13.html#comments உரலில் என்னை பற்றி கோபமாக எழுதினீர்கள் அல்லவா? பிறகு குழலி உண்மையை கூற என்னிடம் மன்னிப்பு கூட கேட்டீர்களே.

  ஆனால் ஒன்று கவனித்தீர்களா? என் பெயரில் வந்துள்ள போலி பின்னூட்டத்தை அது போலி என்று உணர்ந்தபின்னரும் வீரவன்னியன் அவர்கள் நான் உங்கள் இப்பதிவில் இப்பின்னூட்டம் இடும் வரை அப்படியே எடுக்காது வைத்திருக்கிறார். இது அவருடைய பார்ப்பன எதிர்ப்பு வெறியைத்தானே காட்டுகிறது.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  பதிலளிநீக்கு
 6. டோண்டு,

  எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

  பார்ப்பன எதிர்ப்பு, முதலியார் எதிர்ப்பு, செட்டியார் எதிர்ப்பு என்பது இந்த புது யுகத்திலுமா இருக்கிறது?

  I very much doubt it.

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லா6:27 பிற்பகல்

  ஜோசப் சார்,

  டோண்டு மாமாவுக்கு தன்னுடைய ஜாதியைப் பற்றி தானே கற்பனையாக நினைத்துக்கொள்வது ஒரு பொழுது போக்கு.

  ஒருவேளை இவரே இவர் போலவே போலியாக எழுதுகிறாரோ என்னவோ. யார் கண்டது?

  பதிலளிநீக்கு
 8. ஜோசப் ஐயா,
  ரொம்ப தெளிவாக உங்க கருத்தை சொல்லியிருகீங்க! அதை வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. "பார்ப்பன எதிர்ப்பு, முதலியார் எதிர்ப்பு, செட்டியார் எதிர்ப்பு என்பது இந்த புது யுகத்திலுமா இருக்கிறது?"

  மற்ற எதிர்ப்புகளை பற்றித் தெரியாது. பார்ப்பன எதிர்ப்பு அப்படியே இருக்கிறது. இது கசப்பான உண்மை.

  வீரவன்னியன் அவர்களின் பதிவின் தோரணையும் அவர் போலிப் பின்னூட்டத்தை அப்படியே வைத்து ரசிப்பதும் வேறு எதை குறிக்கின்றன?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா10:56 பிற்பகல்

  தமிழில் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் உள்ளன. முதலில் உயிரெழுத்துக்கள் எவையெனப் பார்ப்போம்.
  அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள.
  அடுத்து மெய்யெழுத்துக்கள் என்று எடுத்துக்கொண்டால்
  க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

  மெய்யும் உயிரும் சேர்ந்து உயிர்மெய் உருவாகும். அவ்வாறு 216 உயிர்மெய்கள் உள்ளன. அத்தோடு குறைவான பாவனையிலுள்ள ஆய்த எழுத்து என்ற ஒன்றையும் வைத்துள்ளோம். எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்தம் 247 எழுத்துக்கள் தமிழில் உள்ளன.

  அடுத்த வகுப்பில் உயிர்மெய்களை எவ்வாறு எழுதுவது என்று பார்ப்போம்

  பதிலளிநீக்கு
 11. பெயரில்லா12:01 முற்பகல்

  வலைப்பதிவு மட்டுமல்ல, பொதுவாகவே யாரும் என்ன எழுதலாம், என்ன எழுதக் கூடாது என்பதை தொல். திருமாவளவனிடமும் மருத்துவர் இராமதாசிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். கேட்பது என்ன, அவர்களே விரைவில் ரவுடிக் கூட்டத்துடன் விதிமுறைகளைப் பட்டியலிடுவார்கள். அது வரை தயவுசெய்து காத்திருங்கள்.

  பதிலளிநீக்கு
 12. பெயரில்லா12:19 முற்பகல்

  காசியின் இந்த தணிக்கை முறையை க்கு ஜால்ரா அடிக்கும் சன்னாசி,குமரேஸ¥க்கு,

  இந்த பதிவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
  http://sukkukafee.blogspot.com/

  பல நடிகைகளை பற்றி கீழ்தரனாமான கிசிகிசு தொடராய் எழுதிவரும் இந்த பதிவை தமிழ்மணம் அழகாய் திரட்டி வருகிறது.
  இதன் மூலம் தமிழ் மண வாசகர்கள் என்ன பலன் பெறுகிறார்கள் ?

  இதே மாதிரி உங்கள் வீட்டு பெண்களைப்பற்றிய் கீழ்தரமான கிசுகிசுக்கள் எழுதினாலும் காசி அதை அனுமதிப்பாரா ?


  700 பதிவுகளை ஆராய்ந்து தேவையற்றதை நீகிகிய காசிக்கு இது மட்டும் பிடித்து இருக்கிறதா ?
  போங்கடா நீங்களும் உங்க தணிக்கை முறையும்..

  போய் கிசுகிசு படித்து உங்கள் அழுக்கு மேதாவி மனங்களை சொறிந்து கொள்ளுங்கள்

  பதிலளிநீக்கு
 13. கருத்துவேறுபாடுகள் இல்லாத வாழ்க்கையே இல்லை . ஆனால் அதை எதிராளி புண்படாமல் விவாதிக்கலாம் என்பதை கண்மூடித்தனமாக மறுக்கும் போக்குள்ளவர்களை மாற்ற முயற்சிப்பது வீண்

  பதிலளிநீக்கு
 14. பின்னூட்டம் இட்ட எல்லா நண்பர்களுக்கும்,

  ஆரம்பத்திலேயே பின்னூட்டமிட்ட அநாமதேய நண்பர் கூறியிருந்ததைப் போல நான் இதுவரை எழுதிய பதிவுகளில் மிக அதிக அளவில் பின்னூட்டமிடப்பட்ட பதிவாகும் இது.

  தாணு கூறியதுபோல எதிராளி புண்படாமல் விவாதிக்கலாம் என்பதை கண்மூடித்தனமாக மறுப்பவர்களை மாற்ற முயற்சிப்பது வீணே.

  சர்ச்சைக்குரிய பின்னூட்டங்களை எழுதியவர்கள் அனைவரும் தங்கள் பெயர்களில் எழுதாமல் அநாமதேயமாய் போனதால் அவர்களுடைய கருத்தையும் நிராகரித்தாலென்ன எனக்குத் தோன்றியது.

  இருப்பினும் சில பின்னூட்டங்களுக்கு மட்டும் பதிலளிக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு என்று நம்புகிறேன்.

  தமிழ்மணத்தில் எழுதப்படும் கருத்துக்களின் தரத்தையோ, அல்லது அதன் தேவைகளையோ ஓரிரு அரசியல் கட்சிகள்தான் நிர்ணயிக்கின்றன என்பதை என்னால் ஜீரணிக்க இயலவில்லை. ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிடப்பட்ட அரசியல் கட்சிகளை மட்டுமின்றி ஆளும் கட்சியினரைச் சாடி எழுதும் பதிவுகளையும் தமிழ்மணத்தில் கண்டிருக்கிறேன்.

  வேறொரு பின்னூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆபாச பதிவைக் குறித்து. அப்பதிவு திரட்டப்படத் தேவையில்லாதப் பதிவு என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை தமிழ்மணம் நிர்வாகியின் தணிக்கையிலிருந்து தப்பியிருக்கலாம்.


  For every action there would be a reaction.

  தமிழ்மணம் நிர்வாகியின் இந்த செயலுக்கும் எதிர்மறையான கருத்துகள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

  இருப்பினும் என்னுடைய கருத்துகளை ஆதரித்து பின்னூட்டமிட்ட எல்லா நண்பர்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. பெயரில்லா1:01 பிற்பகல்

  ஜோசப் அவர்களே,

  இங்கு என்னை எதிர்க் கேள்விகள் கேட்பவர்கள் எல்லாம் ஈனப்பிறவிகள். அவர்கள் இழிபிறவிகள். நான் ஐயங்கார் என்பதால் என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு காறி உமிழ்கின்றன. அவ்வாறு செய்பவர்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட தலித்துகள் என நான் நினைக்கிறேன்.

  வலைப்பூக்களில் ப்ராமண எதிர்ப்புதான் ஓங்கி ஒலிக்கிறது. எங்காவது தலித் எதிர்ப்பு இருக்கிறதா? ஏன் இல்லை? நாங்கள் தலித்துகளைக் கண்டாலே ஓரமாக ஒதுங்கி விடுவோம்!

  நாந்தான் போலி டோண்டு எனச் சொல்பவர் உண்மையில் தாழ்த்தப்பட்டா இனத்தினைச் சேர்ந்தவர்தான். என் ப்ராமண நண்பர்கள் கிச்சு, திருமலை, இராமுருகன், ப்ரகாஷ், வெங்கடேஷ், மாயவரத்தான், அருண், விஜய் போன்றவர்களுக்கு அவர் யார் எனத் தெரியும். காசியிடமும் சொல்லி இருக்கிறேன்.

  காசி தமிழ்மணத்தில் இதுபோல செயல்படுவதற்கு அந்த போலி டோண்டுதான் காரணம். எனவே காசிமேல் தவறே இல்லை.

  அதுசரி, நீங்கள் தலித்து இல்லையே?

  பதிலளிநீக்கு
 16. இதுவும் போலி டோண்டுவின் சிந்து விளையாட்டு என்று நினைக்கிறேன்.

  அதென்ன நீங்கள் தலித்து இல்லையே என்ற கேள்வி?

  நான் தலித்தா இல்லையா என்பது வேறு விஷயம்.

  அப்படியே இருக்கும் பட்சத்தில் அதில் என்ன ஐயா கேவலம்?

  நீங்களெல்லாம் எந்த யுகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
 17. ஜோசப் சார்,
  நீங்கள் தமிழ்மணத்துக்கு வந்து கொஞ்ச நாட்கள் தான் ஆகிறது ..அதனால் இங்குள்ள அரசியல் புரிய இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகலாம் .பின்னூட்டங்களிலுள்ள நக்கல் ,நையாண்டி ,வஞ்சப்புகழ்ச்சி ஆகியவை போகப்போக புரியும் என நம்புகிறேன் .அதுவரை இப்படி அனானிமஸ் கருத்துகளுக்கு பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 18. நாம் எங்கே போகிறோம்?இது என்ன பிரிந்து நிற்கும் மனோபாவங்கள்?காசி அவர்களுக்குள்ள சுதந்திரத்தை அவர் வரையறுப்பது தளம் இன்னும் மேன்படவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கலாம்.அதில் தவறென்ன இருக்க முடியும்?முகம் தெரியா எனது மொழித் தோன்றல்களே மனிதம் பழகுங்கள்.

  பதிலளிநீக்கு