06 அக்டோபர் 2005

ஆணா, பெண்ணா - இன்றைய தேவை இதுவல்ல

இன்றைய ஹிண்டு (மெட்ரோப்ளஸ்) செய்தித்தாளில் ஆண், பெண் உறவினைப் பற்றி மிக அருமையான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
இயற்கை, அதாவது Nature, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரத்தியேகமான உரிமைகளையும் கடமைகளையும் நிர்ணயித்துள்ளது.
வணவிலங்குகளின் வாழ்க்கை முறையை ஊன்றி பார்த்தவர்களுக்கு இந்த உண்மை தெளிவாகப் புரிந்திருக்கும்!
வணவிலங்குகளின் மன்னன் எனப்படும் சிங்கமாயிருந்தாலும் அல்லது மற்றெந்த வகை விலங்குகளானாலும் ஆணினம் மிக அரிதாகவே இரையைத்தேடி போகின்றது. பெண்ணினமே அந்த கடமையை ஏற்றுக்கொள்கிறது.
கருத்தாங்கியிருக்கும் சமயத்திலும் கூட தன் ஜோடியின் எந்தவித உதவியும் இன்றி பிரசவிக்கும்நேரம் வரும்வரை இரைத்தேடி அலையும் பெண் விலங்கு பிரசவம் முடிந்த அடுத்த நாளே மீண்டும் இரையைத் தேடி அலைய ஆரம்பித்துவிடுகின்றது.
தன் வீட்டையும் தன் குட்டிகைகளையும் எதிரிகளிடமிருந்து காப்பது ஆணினத்தின் கடமை . சுருக்கமாகச் சொன்னால் ஒரு வீட்டின் சுற்றுச்சுவரைப் போல தன் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு உறுதியளிப்பது ஆணினத்தின் கடமை!
இருப்பினும் இருபாலாரிலும் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பாகுபாடோ அல்லது ஆணினம் பெண்ணினத்தை இழிவு படுத்துவது என்ற நிலையோ விலங்குகளிடையே இல்லை.
ஆனால் மனித இணத்தை எடுத்துக்கொண்டால் பெண்கள் தங்களுடைய இல்லங்களில் காலை கண்விழித்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் நேரம் வரையிலும் (பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி என்று சொல்லிச் சொல்லியே ஆண்கள் தப்பித்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது) செய்யும் வேலை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
அலுவலகப் பணிக்கு செல்லாத பெண்களை 'நீங்க என்ன பண்றீங்க' என்று கேட்டுப் பாருங்கள். 'சும்மாத்தான் இருக்கேன்' என்று பதில் வரும். அவர்களே தங்களுடைய வீடுகளில் செய்யும் வேலையை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் உணவகங்களில் சமையல் வேலை செய்யும் ஆண்கள் தங்கள் வீட்டில் சமைப்பதையோ அல்லது பியூட்டி பார்லரில் முடிஅலங்காரம் செய்யும் ஆண்கள் தங்களுடைய மனைவிக்கோ அல்லது தங்கள் பெண் குழந்தைக்கோ அலங்காரம் செய்வதை கேவலமாகவே நினைக்கிறார்கள்!
விலங்கினத்தில் இல்லாத வேறொன்று அகங்காரம் (Arrogance) மற்றும் வரட்டுக் கவுரவம் (Ego). இது இரண்டும் இல்லாததாலோ என்னவோ விலங்குளிடையே உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பாகுபாடும் இல்லை அவைகளுக்கிடையே தர்க்கங்களும், சச்சரவுகளுமில்லை..
வரட்டுக் கவுரவம் பெரும்பாலும் படித்தவர்களிடையேத்தான் காணப்படுகின்றது. எந்த ஒரு ஆணும் தன்னைவிட அதிகம் படித்த, அதிக திறமையுள்ள பெண்ணை தன் எதிரியாகவே பார்க்கிறான். அது தன் மனைவியாயினும்!
ஆணும் பெண்ணும் ஊதியம் ஈட்டும் பெரும்பாலான குடும்பங்களில் தன் கணவனைவிட அதிகம் ஊதியம் ஈட்டும் பெண்கள் தங்கள் கணவனுடைய வரட்டுக் கவுரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சோர்ந்துபோய் விவாகரத்துவரை செல்லுவதை இன்று மிகச்சாதாரணமாகக் காணமுடிகிறது.
கல்வியில் பெண்களுக்கு முன்னுரிமை என்ற மத்திய, மாநிலங்களின் கொள்கை இந்திய பொருளாதாரத்தில் பெருமளவு வளர்ச்சியை ஏற்படுத்தியதென்னவோ உண்மைதான். ஆனால் அதேசமயம் அது தனிமனித சந்தோஷத்தையும், குடும்பங்களில ஒற்றுமையையும் சீர்குலைத்து விட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை!
இதற்கு காரணம் ஆணா, பெண்ணா என்று தர்க்கிப்பதற்கு மாறாக, தவறு யார் பக்கம் இருந்தாலும் திருத்திக்கொள்வதுதான் இன்றைய தேவை.

9 கருத்துகள்:

 1. பெயரில்லா4:24 பிற்பகல்

  நீங்களே சொல்லுங்களேன்!

  ஆண்கள் திருந்தினால்தான் இந்த இழிநிலையிலிருந்து சமுதாயம் மாற முடியும்.

  நீங்க சொல்றதப் பார்த்தா பெண்கள் அதிகம் படிச்சதுதான் பிரச்சினை போலருக்குது!

  அதில்லைங்க பிரச்சினை.

  ஆண்களோட ஈகோதான்..

  புரிஞ்சிக்கிட்டா சரி.

  இருந்தாலும் நல்ல சூடான டாப்பிக்கைத்தான் பதிஞ்சிருக்கீங்க

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு. நல்ல கருத்து. அனைவருக்கும் புரிந்து நடந்தால் சரி.

  பதிலளிநீக்கு
 3. பெண் பெண் தான், ஆண் ஆண் தான் என்பதை இயற்கை நியதிகளுடன் விளக்கியிருக்கிறீர்கள்.

  பெண்ணுரிமை பேசுபவர்களின் உச்சபட்ச எதிர்கால கோரிக்கை: "கருப்பப்பையை ஆணுக்கு மாற்றி வைக்க வேண்டும்" என்று இல்லாதிருக்கும் என்று நம்புவோமாக.

  அதேபோல், ஆண், தான் தான் பெண்ணின் கண் கண்ட தெய்வம் என்ற பழைய பஞ்சாங்கத்தை இனியேனும் தூரப்போடுவானாக!

  பதிலளிநீக்கு
 4. பெயர் சொல்ல விரும்பாத சிநேகிதனே (சிநேகிதியா?)

  இந்த பிரச்சினைக்கு ஆண்தான் காரணம்னு முடிவு பண்ணிட்டா மாதிரியிருக்கு உங்க கருத்து.

  இருக்கலாம்.

  நாங்க மாத்திக்கறோம்.

  பதிலளிநீக்கு
 5. ராகவன்.

  நன்றி.

  நாம எல்லோரும் புரிஞ்சிக்கணும்.

  அப்பத்தான் விடிவுகாலம்!

  பதிலளிநீக்கு
 6. ஜமாலுதீன்.

  உங்க ரெண்டாவது கருத்துக்கு நோ கமெண்ட்ஸ்.

  மூணாவது கருத்தை வழிமொழிகிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. புரிந்து கொள்ளவேண்Dஉம் என்ற ஆர்வம் வந்துவிட்டாலே அது ஒஉர் படி முன்னேற்ராத்தை நோக்கி செல்கிறது. மாற்றங்கள் வரும் நிச்சயமாக

  பதிலளிநீக்கு
 8. தேன் துளி,

  மாற்றங்கள் வரும் என்று காத்திருப்பது ஒரு நம்பிக்கைவாதியின் (Positive Person)எதிர்பார்ப்பு. இதுவரை வரவில்லையே என்பதுதான் பலரின் அங்கலாய்ப்பு.

  உங்கள் வலைப்பூவை சென்று பார்த்தேன். உங்களுடைய சில பதிவுகள் மிக அருமையாக இருந்தன. நீங்கள் ஏன் இப்போதெல்லாம் எழுதுவதில்லை? நேரமின்மைதான் காரணமா?

  If that be the case I would request you to spare some time to write from now onwards.

  Please do it. You've also not provided your email add in your profile.

  பதிலளிநீக்கு
 9. ஜமாலுதீன்

  உங்கள் வலைப்பூ 'கருத்து கந்தசாமி' என்ன ஆனார்? விலாசத்தை மாற்றி விட்டீர்களா?

  பதிலளிநீக்கு