06 அக்டோபர் 2005

வரதட்சிணைக்கு வக்காலத்து

ஆரம்பத்திலயே சொல்லிடறேன்.

இது வரதட்சிணைக்கு வக்காலத்து வாங்கற பதிவில்லை. தலைப்புல மட்டும்தான் வக்காலத்து.

வரதட்சிணைய நான் ஆதரிக்கறனா, எதுக்குறனாங்கறதல்ல பிரச்சினை. அது எப்படி, எதுக்காக நம்ம சமுதாயத்துல வேரூன்றி போயிருச்சின்னு ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணி பார்த்தா என்னன்னு தோணுச்சி..

அதுக்கு முன்னால எப்பாவோ படிச்ச ஒரு கவிதைய இப்போ ரெஃபர் பண்ணலாம்னு தோணுது!


நாள் பாத்து
நல்ல நாள் பாத்து

நேரம் பாத்து
நல்ல நேரம் பாத்து

நடப்பதுதான்
திருமணம் என்ற
விதி மாறுமா

என்நேரமும்
பொன்நேரம்தான்
எந்த நாளும்
நல்ல நாள்தான்

என்ற நிலை
வருமா

அன்றுதான்
வரும்

வராத
திரும்பி வராத
தட்சிணையாம்
இந்த
வரதட்சிணை
சாவும் நாளும்!

இது சுமார் இருபது வருஷங்களுக்கு முன்னால ஏதோ தமிழ் வாரப்பத்திரிகையில படிச்சிருக்கேன்.

அப்போ நான் நினைச்சி பார்த்தேன். கண்டிப்பா இந்த கண்றாவி இருபது, இருபத்தஞ்சி வருஷத்துல இல்லாம போயிறும்னு.

ஆனா, என்னாச்சி? இண்ணைக்கும் இந்த நாள் பார்க்கறது, நேரம் பார்க்கறதுன்னு நடந்துக்கிட்டுத்தான் இருக்கு! இன்னொரு வெட்கக்கேடு சாந்திமுகூர்த்தத்துக்கும் நாளும் நேரமும் பாக்குறது!! இதுக்கெல்லாம் முன்னால நிக்கற பெண்கள் (பெண் மற்றும் பிள்ளையை பெற்றவர்களை சொல்லுறேன்) பெண்ணுரிமையைப் பத்தி பேசறது அத விட கொடுமை.

அப்புறம் வரதட்சிணை மாத்திரம் எப்படிங்க போகும்?

சரி, இந்த கொடுமை (அதாவது பொண்ண பெத்தவனுக்கு - பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைன்னுதான் சமுதாயம் சொல்லுது. ) நம்ம நாட்லமட்டும் தானா.. அப்படீன்னா இந்த வார்த்தை Oxford Dictionaryல ஏறியிருக்காது.

இந்த பழக்கம் நம்ம நாட்ல எப்படி வந்திருக்கும்னு நினைக்கறீங்க?

நம்ம இந்து திருமணத்துல கன்னிகாதானம்னு ஒரு சடங்கு இருக்கும்.

அந்த வார்த்தைய பிரிச்சிப் பாருங்க கன்னிகா+தானம்னு வரும். கல்யாணப் பொண்ணை தகப்பனோ அல்லது தகப்பனார் இல்லாத பட்சத்தில் குடும்பத்தில் மூத்த ஆண் தன் மடியில் அமர்த்தி தாரைவார்த்து கொடுக்கற வழக்கம் இன்னமும் நம் நாட்டுல இருக்கு.

நான் இதுவரைக்கும் இந்த வார்த்தைக்கி கன்னிப் பெண் ஒருத்தியை தானமாக குடுக்கறதுங்கறதுன்னு நான் நினைச்சிக்கிட்டிருந்தேன்.

ஆனா கீழ இருக்கற விளக்கத்தைப் பாருங்க!


"Dowry (Dahej/Hunda) as we all know is paid in cash or kind by the bride's family to the groom' s family alongwith the giving away of the bride (Kanyadanam). The ritual of Kanya-danam is an essential aspect in Hindu marital rites: Kanya = daughter, danam = gift. A reason for the origin of dowry could perhaps be that the groom and his family had to take up the 'onerous' responsibility of supporting the bride for the rest of her life. "

இந்த விளக்கம் ஒரு இணையதளத்துலருந்து சுட்டது!

சரி இந்து மதத்தைச் சாராத மற்ற மதங்களிலும் இந்த கொடுமை இருக்குதே.

நம்ம நாட்ல இந்துக்கள்தானே அதிகம்? அவங்கள சுத்தித்தான மத்த மதத்தவங்களும் வாழ வேண்டியிருக்குது.. அவங்ககிட்டருக்கற நல்லதயெல்லாம் விட்டுட்டு நாள் பாக்கற, நேரம் பாக்கற, வரதட்சிணை வாங்கற கெட்டத மட்டும் நல்லா புடிச்சிக்கிட்டாங்க.

அதாவது, கல்யாணமாகி எங்க வீட்டுக்கு வர்ற பொண்ணை நாங்க காலம் பூராவும் இருக்க இடம் குடுத்து, சாப்பாடு போட்டு, துணிமணி எடுத்து குடுத்து(முடிஞ்சா நகை, நட்டெல்லாம் பூட்டி) , கண் கலங்காம பாத்துக்கறோமில்லே? எங்களுக்கு எவ்வளவு செலவாகும்? அதுக்குத்தான் கல்யாணம் பண்றப்பவே அட்வான்சா வாங்கிக்கறோம்.

அப்ப்டீங்கறது ஆண்மகனைப் பெற்ற புண்ணியவான்களின் வாதம் .

இன்னைக்கி நாங்கதான் ஆண்களுக்கு ஈக்வலா படிக்கறோம், வேலைக்கி போறோமே அப்படீங்கறது இன்றைய பெண்களோட வாதம்.

ஆனா இன்னைக்கி இந்தியாவுல படிச்சி, வேலைக்கி போற பெண்கள் இந்தியாவுலருக்கற மொத்த பெண்கள்ல எத்தனை சதவிகிதம் இருக்கும்? பத்து, இல்லன்னா பதினைஞ்சி?


அதனால இந்த நிலமை என்றைக்கி மாறுதோ அன்றைக்குத்தான் நாங்களும் வரதட்சினண வாங்குறத நிறுத்துவோம்.

பிள்ளைய பெத்தவங்களோட இந்த வாதம் சரியா, தவறா..

சரிங்க, இதுக்கு என்னதான் வழி.. அதாவது சட்டத்துக்கு புறம்பா..

சொல்லுங்களேன்!

சட்டத்தால இன்னைக்கில்ல, என்னைக்கிமே ஒண்ணும் செய்ய முடியாது..

5 கருத்துகள்:

 1. பெயரில்லா11:31 பிற்பகல்

  namma oorle andha kaalathule ponnuku parisam pottudhan kattuvanga. vaangi ille.

  பதிலளிநீக்கு
 2. நீங்க சொல்றது பெரும்பாலும் கிராமங்களில்தான். அங்கு இப்பழக்கம் இன்றும் சில வகுப்பினரிடையே இருந்து வருகின்றது.

  நான் சொல்லும் அக்கிரம வழக்கம் பெரும்பாலும் நகரங்களில்தான் நடக்கிறது.

  நாள், நேரம் பார்க்கும் பழக்கம் இப்போதும் கிராமம், நகரங்கள் என எல்லா இடத்திலும் இருக்கின்றது.

  நாம் திருமண பந்தத்திற்கு அளவுக்கதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதன் விளைவுதான் இதற்குக் காரணம்.

  உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி.

  இந்த சமுதாயத்தின் மிகப்பெரிய அக்கிரமத்தைப் பற்றிய இந்த பதிவுக்கு தமிழ்மண வாசகர்களின் மெத்தனமான ரெஸ்பான்ஸ் தான் ஒரு புரியாத புதிர்.

  பதிலளிநீக்கு
 3. ஜோசப் சார்,

  நான் என்னுடைய கதைகளையும் கட்டுரைகளையும் தமிழிலே தான் போட்டுள்ளேன். நான் என்னுடைய அறிமுக அறிவிப்பில் சொல்லியிருந்தபடி
  எனக்கு இந்த blogging concept இப்பதான் தெரியும். ஆகவே முதலில் போஸ்ட பண்ணும் போது ஆங்கிலத்தில் பண்ணி விட்டேன். தமிழ் யுனிக்கோட் டைப்பிங்
  வைத்துள்ளேன்.தமிழ் டைப்பிங் நானே கற்றுக்கொண்டு விட்டேன்.

  நான் பாம்பே பிறகு இப்போது மங்களுர் மட்டும்தான் வெளி மாநிலம் என் வயது 29. நானும் கணிப்பொறி வல்லுனர்தான்.(computer manager).

  பதிலளிநீக்கு
 4. முத்து

  தயவு செய்து சார் என்று அழைத்து என் வயதை ஞாபகப் படுத்தாதீர்கள்.

  வலைப்பூக்களில் எல்லாரும் ஒரே வயதினர்தான்!

  நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்கள்.

  மும்பையில் இருந்த சமயம் புறநகர் மின்ரயிலில் பயணித்த என் அனுபவங்களை இன்றுமுதல் ஒரு ஐந்து பாகங்களாக எழுத ஆரம்பிக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.

  தமிழ்மணம் தளத்தில் நம்மைப் போன்ற வங்கி ஊழியர்/அதிகாரிகளின் வட்டம் பெருகவேண்டும்.

  நன்றி, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா2:01 பிற்பகல்

  Sir,

  Don't worry about the lack of response to your post from the Thamilmanam readers.

  Here we have a gang of youngsters who have almost taken over this forum.

  Any stupid thing they write (at times very vulgar things are also written without fear indirectly hinting mastrubation etc.,) other members of the gang would immediately given it a 5 star rating, join in the fun and make themselves big heroes.

  They would not respond to this type of issues which really affect the society.

  Since most of them are yet to get married and they would also without doubt seeking a huge sum as dowry what will they respond.

  You keep going without worrying response from the readers.

  பதிலளிநீக்கு