03 அக்டோபர் 2005

நம் குணாதிசயங்கள் - ஒரு பார்வை

நான் யார்?

இது எனக்கே தெரியவில்லையென்றால் மற்றவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது?


ஆனால், நம்மில் பலருக்கும் இப்பிரச்சினை எப்போதுமில்லாவிட்டாலும் எப்போதாவது தோன்றத்தான் செய்கிறது.


என்னுடைய கடந்தகாலத்தில் ஒரு விடயத்தை நான் எப்படி அணுகினேனோ அதே விடயத்தை அதே அணுகுமுறையில் இன்றோ நாளையோ அணுகுவேனா என்பதை உறுதியாய் சொல்லவியலாது!

நேற்று அந்த அணுகுமுறையால் எனக்குக் கிடைத்த அனுபவம் என்னுடைய இன்றைய அணுகுமுறையை ஒருவேளை மாற்றியிருக்கலாம். அதன் பயனாக என்னுடைய இன்றைய முடிவு கடந்தகால முடிவிலிருந்து மாறுபடவும் வாய்ப்பிருக்கிறது.


A person's personality, though each one is destined to a kind of behaviour depending on his date and time of his birth, is subject to undergo a series of changes as he goes through his life!
நம்முடைய அடிப்படை குணாதிசயங்கள் (Basic Personality ) நம்முடைய பிறப்பு நட்சத்திரத்தையே (Birth Star) சார்ந்திருக்கிறது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.


ஆனாலும் நம் வளர்ப்பு முறை, நம் அன்றாட வாழ்வில் நமக்கு கிடைக்கும் பலதரப்பட்ட அனுபவங்கள் நம்முடைய குணாதிசயங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.


நம்முடைய குணாதிசயங்களை நாமே கண்டு கொள்ள பல பரிசோதனைகள் உள்ளன. அச்சோதனைகள் அடங்கிய சில இணையத்தளங்களின் பெயர்களை கீழே கொடுத்துள்ளேன்.


இன்னும் இது போன்ற பல இணையத்தளங்கள் உள்ளன.


இச்சோதனைகளில் வினாக்கள் அடங்கிய சோதனைகள் நம்முடைய அடிப்படைக் குணாதிசயங்களை ஓரளவிற்கு துல்லியமாக அறிந்துக்கொள்ள உதவுகின்றன.


நான் இதை என்னுடைய வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் பயில வரும் ஊழியர்களின் குணாதிசியங்களை அறிந்துகொள்ள வெற்றிகரமாக பயன்படுத்தியிருக்கிறேன்.


அதே சமயம் ஒரே சோதனையை ஒரு ஆறு மாத கால இடைவெளியில் அப்போதைய மனநிலையில் எதிர்கொள்ளும்போது கிடைக்கக்கூடிய விளைவு (ரிசல்ட்) முந்தைய விளைவிலிருந்து மாறுபடுவதையும் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.


அதனால்தானோ என்னவோ இறைவனின் படைப்புகளில் அளவிடவியலாதது மனிதமனம்தான் என்று கூறுகிறார்கள்!
நீங்களும் உங்களுடைய குணாதிசயங்களை அறிந்துக்கொள்ள மேலே குறிப்பிட்டுள்ள இணையத்தளங்களை சென்று பாருங்களேன்!
இப்பதிவை வாசிப்பவர்கள் தங்களுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துக்கொள்ளுமாறு அழைக்கிறேன்.

நன்றி!



அன்புடன்
டி.பி.ஆர். ஜோசஃப்

1 கருத்து:

  1. பெயரில்லா2:08 PM

    நல்ல பதிவு!

    நீங்கள் பரிந்துரைத்த இரண்டு தளங்களும் நல்ல பயனளித்தன!


    பயிற்சி வினாக்களின் இறுதியில் கிடைத்த என்னுடைய குணாதிசயங்களின் விளக்கம் என்னையே வியப்படையச் செய்தன.

    இப்பதிவைக் காணும் நண்பர்கள் இத்தளங்களுக்கும் சென்று பயனடையுமாறு வேண்டுகிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு