15 ஜனவரி 2006

பிரியாவிடை - தாற்காலிகமாக!

என் அன்பு தமிழ்மண - நந்தவன நண்பர்களுக்கு,

இது என்னுடைய நூறாவது பதிவு!

கடந்த ஒரு வார காலத்தில் உங்களுடன் நட்சத்திர அந்தஸ்த்துடன்(!) என்னுடைய எளிய படைப்புகளை பரிமாறிக்கொள்ள வாய்ப்பளித்த நிர்வாகி திரு. காசி மற்றும் அவருக்கு உறுதுணையாய் நின்று இத்திரட்டியைத் திறம்பட நடத்திவரும் திரட்டியின் அனைத்து அதிகாரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.

தமிழ்மண விலாசத்தில் நட்சத்திரமாக இவ்வாரத்தைத் துவங்கி நந்தவன விலாசத்தில் நட்சத்திரமாக முடிப்பது ஒரு அபூர்வ அனுபவம்தான்.

தற்செயலாக நடந்த விஷயம் என்றாலும்.. இதில் எனக்கு எந்தவித பங்கும் இல்லையென்றாலும்.. I feel strangely honoured!

கடந்த வாரத்தில் நான் எழுதிய பதிவுகளையும் அதற்கு கிடைத்த பின்னூட்டங்களையும் குறித்து ஆலோசித்தேன்.

Image hosted by Photobucket.com

பின்னூட்டங்களின் எண்ணிக்கை ஒரு இடுகையின் தரத்தை நிர்ணயிக்கும் அளவையாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இத்தனைக் குறைவான பின்னூட்டங்களைப் பெற்ற நட்சத்திர வலைப்பதிவாளர் நானாகத்தானிருக்க வேண்டும்!!

ஒருவேளை நான் தமிழ்மணத்தில் அங்கத்தினராகி மூன்று, நான்கு மாதங்களே ஆகியுள்ளன என்பதுதான் காரணமோ.. தெரியவில்லை.

இதென்ன அத்தனைப் பெரிய பிரச்சினையா? இல்லைதான்.

பிறகெதற்க்கு இந்த புள்ளி விவரங்களைத் தருகிறீர்கள் என்று கேட்கிறீர்களா?

ஏதோ தோன்றியது.. தந்திருக்கிறேன்.. இத்தனைக் குறைந்த எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் பெற்றதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டுமே என்று சிந்தித்துப் பார்க்கிறேன்.

ஒன்றும் புலப்படவில்லை..

ஆனால் என்னுடைய எல்லா நட்சத்திர இடுகைகளையும் வாசித்து அறிவார்ந்த பின்னூட்டங்களை இட்டு எனக்கு ஆதரவளித்தவர்களுள் முக்கியமானவர்கள் இருவர்.. ஒன்று துளசி, மற்றவர் கோ.ராகவன்.

இருவருக்கும் என் மனமார்ந்த, உள்ளார்ந்த நன்றி..

என்னுடைய பெரும்பாலான நட்சத்திர இடுகைகளை வாசித்து பின்னூட்டம் இட்டவர் டி.ராஜ் மற்றும் ஜோ. இவர்களுக்கும் என் நன்றிகள்.. என்னுடைய சில இடுகைகளுக்காவது பின்னூட்டம் இட்ட மற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்..

இவ்வாரத்தில் என் பதிவை தேசிபண்டிட் இணைய தளத்திற்கு அறிமுகப்படுத்திய பிரேமலதாவுக்கும் நன்றி.

நான் ஒரு வலைப்பதிவைத் துவக்கி எழுதத் துவங்கியதே ஒரு பொழுதுபோக்காகவும், என்னுடைய ஆத்ம திருப்திக்காகவும்தான்..

ஆனால் என் பதிவையும் வாசகர்கள் தொடர்ந்து வாசிக்கிறார்களே என்பதையறிந்தபோது ஒரு சந்தோஷம் மனதில் தோன்ற தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

நான் என் அலுவலக வாழ்க்கையில் சந்தித்த இன்னல்களையும், சிக்கல்களையும் அதை நான் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெற்றேன் என்பதையும் எழுதுவதன் மூலம் அது மற்றவர்க்கு, முக்கியமாய் இளைஞர்களுக்கு உதவியாயிருக்கக் கூடும் என்பதாலேயே 'திரும்பிப் பார்க்கிறேன்' என்ற தொடரை எழுத ஆரம்பித்தேன். இதுவரை அது தொடர்ந்து தமிழ்மண பதிவாளர்களைக் கவர்ந்திருக்கிறது என்று நினைத்துத்தான் தொடர்ந்து எழுதுகிறேன். இனியும் எழுதுவேன்..

பின்னூட்டங்கள் அதிகம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் என் பாதையை விட்டு நிச்சயம் விலக மாட்டேன். சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் கேலி செய்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தவரை குறை சொல்லியோ அல்லது இல்லாத ஒரு எதிரியைக் கற்பனை செய்துக் கொண்டோ அதையே திருப்பி, திருப்பி எழுதி ஒரு சர்ச்சையை எழுப்பும் வகையில் நிச்சயம் எழுத மாட்டேன்.

நான் எதிர்பார்த்த அளவுக்கு பின்னூட்டங்கள் வரவில்லையென்றாலும் நட்சத்திர வாரத்தில் சராசரியாக 150 பேர் என்னுடைய பதிவிற்கு வரவு தந்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியுடன்..

என் பதிவிற்கு வருகை தந்த எல்லா தமிழ்மண பதிவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி கூறி நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன்..

உங்கள் அன்புள்ள,
டிபிஆர். ஜோசஃப்

44 கருத்துகள்:

 1. டிபிஆர்,

  நான் உங்களின் திரும்பிப் பார்க்கிறேன் தொடர் அளவுக்கு விறுவிறுப்பாக வலைப்பதிவுகளில் வேறெதும் படித்ததில்லை. தொடர்ந்து படித்து வந்தாலும் பின்னூட்டிடாத்தற்கு என் சோம்பலே காரணம். உங்கள் புதிய 'மாமனிதர்கள்' தொடரும் நன்றாக இருக்கிறது.மிக நன்றாக எழுதுகிறீர்கள், மேலும் பல எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. ஜோசப் சார்,
  உங்கள் எல்லா பதிவுகளையும் படித்தேன் என்றாலும் ,நான் தற்போது இருக்கின்ற இடத்தின் வசதி குறைவினால் வழக்கம் போல பின்னூட்டம் இட முடியவில்லை.

  மற்ற நட்சத்திரங்களுக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசம் .மற்றவர்கள் நட்சத்திர வாரத்திற்கென பிரத்யேகமாக மெனக்கெட்டு அதிக பதிவுகள் போட வேண்டியிருந்தது .நீங்களோ பல காலமாக நட்சத்திரமாகவே இருந்து வருகிறீர்கள் .உங்கள் பதிவுகளை நிறைய பேர் தொடர்ந்து படித்து வருகிறார்கள் .பிடித்த மனிதர்கள் தொடர் நிறைய பேர் படித்தாலும் ,அதில் விவாததிற்கு இடமில்லாததால் பின்னூட்டங்கள் குறைவாக இருக்கலாம்.

  தமிழ்மண மாற்ற நேரத்தில் மட்டுமல்ல ,நீங்கள் பொங்கல் சிறப்பு நட்சத்திரம்.

  உங்கள் அருமையான இந்த வாரத்துக்கு நன்றி!

  தொடர்ந்து எங்களையெல்லாம் மகிழ்வியுங்கள்!

  பதிலளிநீக்கு
 3. ஜோசப் சார், சிலசமயம் பதிவுகள் மிக நன்றாய் இருந்தால் என்ன சொல்வது வெறுமனே நன்றாக இருக்கிறது, சூப்பர் என்று சொல்ல தயக்கமாய் இருக்கும். இருமுறைத்தான் உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டேன் என்று நினைக்கிறேன். காரணம், இந்த நந்தவனத்தில்
  நுழையப்பட்டப்பாடு, பொங்கல் மற்றும் அடுத்து ஏற்பட்ட சலசலப்புகள். தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 4. தங்களின் இடுகைகள் வரும்போதெல்லாம் பட்டை போடுவதெப்படி என்னும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த நேரம். அத்துடன் என் ஞானவேள்வி பதிவில் 12 வலைப்பூக்கள் உள்ளன. அத்தனையிலும் பட்டை போடவேண்டியிருந்தது.
  இவையெல்லாம் முடிந்தபின் பொங்கல் வந்துவிட்டது. நேரம் போதவில்லை. என்ன செய்வது?
  இப்பொழுதுதான் படித்துப்பார்த்தேன்.
  நன்றாக உள்ளது.
  "ஆத்ம திருப்திக்காகவும், நம் அநுபவங்களை இளைய தலைமுறைக்கு விட்டுச் செல்லவேண்டும்" என்பதே நமது குறிக்கோளாயிருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 5. ஆஹா...ஜோசஃப் சார். நீங்கள் இப்படி பின்னூட்டக் கணக்கைக் கொடுப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் தவறாமல் பின்னூட்டம் இட்டிருப்பேனே. ஜி.டி. நாயுடு, கலாம் பற்றி எழுதிய பதிவுகளுக்கு முதல் பின்னூட்டம் கொடுத்தது நான் தானே. உங்கள் பதிவுகளை நிறைய பேர் படிக்கிறார்கள். நீங்களே சொன்ன மாதிரி அதில் விவாதத்திற்குரிய தேவையில்லாத விஷயங்கள் இல்லாததால் பெரும்பாலோனோருக்குத் தங்கள் கருத்தினைப் பதிய வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. இது தான் முக்கியக் காரணம் என்று எண்ணுகிறேன். இரண்டாவது காரணம் எல்லோரும் பட்டையைப் போட்டு அது சரியாக வேலைப் பார்க்கிறதா என்பதிலேயே தங்கள் வலைப்பதிவு வாசிக்கும் நேரத்தைச் செலவிட்டிருப்பார்கள் என்று எண்ணுகிறேன். அதனாலும் பின்னூட்டம் குறைந்திருக்கலாம்.

  நிச்சயமாக பின்னூட்டங்களின் எண்ணிக்கை ஒரு இடுகையின் தரத்தை நிர்ணயிக்கும் அளவை இல்லை. ஏற்கனவே ஒரு சில நடசத்திரங்கள் இந்த எண்ணிக்கையைத் தொட்டுள்ளார்கள். இனியும் சில நட்சத்திரங்களுக்கு இந்த அனுபவம் நிச்சயமாகக் கிடைக்கும்.

  நிறைய பேர் இங்கு தமிழ்மண அங்கத்தினராகி மூன்று நான்கு மாதங்களே ஆகிறது - என்னை முதற்கொண்டு.

  நான் உங்கள் எல்லாப் பதிவுகளையும், இந்த வாரப் பதிவுகள் உட்பட எல்லாவற்றையும் பார்த்துவிடுவேன். சில நேரங்களில் அப்புறம் படிக்கலாம் என்று ப்ரின்ட் அவுட் எடுத்து வீட்டிற்குக் கொண்டுவந்துவிடுவேன். அந்த நேரங்களில் படித்துவிட்டு பின்னூட்டம் இடாமல் இருந்திருக்கிறேன்.

  இதெல்லாம் உங்களிடம் நல்ல பெயரை வாங்குவதற்காக (மட்டும்) எழுதவில்லை. நீங்கள் இப்படி வருந்தியிருக்கிறீர்களே என்பதால் எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. பின்னூட்டம் கிடைக்கவில்லை என்பது ஒன்றுமேயில்லை. இத்தனை ஆக்கங்கள் தந்தாவர் (ஒரு கிழமையில்) நீங்கள் ஒருவராகத்தான் இருக்கும். தூள் பண்ணீட்டிங்க....

  திரும்பிப் பார்க்கின்றேன் ..தொடர்ந்து படிக்கின்றேன். நன்றாக சுவையாக எடுத்துச் செல்ல்கின்றீர்கள்.

  சமூகம்/அரசியல் சார்ந்த உங்கள் எண்ணங்களையும் பதிவாக்கி இருக்கலாம்.

  -அன்புடன் இளந்திரையன்

  பதிலளிநீக்கு
 7. அடடா. இந்தப் பின்னூட்ட விளக்கம் கொடுப்பதில் எல்லோரும் இது உங்கள் 100வது பதிவு என்பதை மறந்துவிட்டோம். 100வது பதிவுக்கு நல்வாழ்த்துகள் சார். விவகாரமான விஷயங்கள் எழுதாமலே மூன்று நான்கு மாதங்களில் 100 பதிவு போட முடியும் என்பதற்கு நீங்களும் ஒரு எடுத்துக் காட்டு. வாழ்த்துகள். வணக்கங்களுடன்.

  பதிலளிநீக்கு
 8. என்னுலகம், என் கதையுலகம் என்ற கணக்கில் இரட்டைக் குதிரை மேல் திறமையாக சவாரி செய்து அலை அலையாகப் பதிவு போட்டதே ஒரு ரிகார்ட்தான்.

  மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள டி பி ஆர்,

  உங்கள் அனுபவத்தொடரை விட்டுவிட்டு வாசிப்பேன். நகைச்சுவையிலும் கலக்குகிறீர்கள். எண்ணிக்கையைப் பார்க்கவேண்டாம். நிறைவான வாரத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. 100க்கு வாழ்த்துக்கள் ஜோசப் சார்!

  உங்களுக்கு என்னைப்போல தவறாமல் படித்துவிட்டு பின்னுட்டமிட சோம்பல்படும் வாசகர்கள்தான் அதிகம் என நினைக்கிறேன்!

  உங்க வாசகர்களில் இந்த சோம்பேறியும் ஒருவன் என்பதை இந்தவேளையிலே சொல்லிக்கொள்ளும் அதே நேரத்திலே...( தேர்தல் வரப்போகுதுங்க.. :) )

  பதிலளிநீக்கு
 11. ஐயோ! ஜோசப் சார். இது அநியாயம். அக்கிரமம். ஒரு விஷயம் சொல்கிறேன் கேளுங்கள். இன்றைக்குக் காலை என்னுடைய நண்பனை நீண்ட நாட்கள் கழித்துச் சந்தித்தேன். சண்முகம் என்ற நண்பன் புதிதாக வலைப்பூ தொடங்கியிருக்கிறான். தமிழ் எண்களை இட்டதும் அவந்தான். அவனிடம் என்னுடைய பிளாகில் உள்ளவைகளைப் படித்தானா என்று கேட்டேன். அதற்கு அவன் என்ன தெரியுமா சொன்னான்? "ஜோசப் சாரின் பிளாகுக்குப் போனேன். என்னால் எதையும் விட முடியவில்லை. அத்தனையையும் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து படித்ததில் உன்னுடைய பதிவுகளை நான் படிக்கவில்லை. உன்னுடையவைகளை நான் நேரம் கிடைக்கும் பொழுது படிக்கிறேன். பகலில் வந்த பூர்ணிமாவும் திருச்செந்தூரின் கடலோரத்தில் மட்டும் படித்தேன். தேவலாம். ஆனால் அவர் அளவுக்கு எழுத நீ ரொம்ப தூரம் போக வேண்டும்." என்றான். இதை உங்களுடைய நாளைய பதிவில் சொல்லலாம் என்றிருந்தேன். அதற்குள் இப்படி ஒரு பதிவு உங்களிடமிருந்து. இதை ஏற்க முடியாது என்று உரிமையோடு சொல்லிக் கொள்கிறோம். தற்காலிகம் என்று நீங்களே சொன்னதால் அதை ஒரேயொரு நாள் என்று கொண்டு நாளைக்கு உங்கள் பதிவை எதிர் நோக்கும், கோ.இராகவன்

  பதிலளிநீக்கு
 12. // உங்களுக்கு என்னைப்போல தவறாமல் படித்துவிட்டு பின்னுட்டமிட சோம்பல்படும் வாசகர்கள்தான் அதிகம் என நினைக்கிறேன்!

  உங்க வாசகர்களில் இந்த சோம்பேறியும் ஒருவன் என்பதை இந்தவேளையிலே சொல்லிக்கொள்ளும் அதே நேரத்திலே.. //

  இதைக்கூட காப்பி பேஸ்ட் செய்யும் இன்னொரு சோம்பேறி

  பதிலளிநீக்கு
 13. டிபிஆர் ஜோ,

  முதலில் இந்த வாழ்த்தைப் பிடியுங்க. இது உங்க 100வது பதிவுக்கு.

  உங்க நட்சத்திரவாரம் சிறப்பா இருந்துச்சு. அதிலும் நீங்க எழுதுன வடிவேலு பார்த்திபன்
  'கா கா கா' தூள்!

  மத்தவங்க சொன்னதேதான் நானும் சொல்லணும். உங்க எழுத்துக்கு கருத்து வேறுபாடு
  இல்லாததால் அநேகர் படிச்சுட்டுமட்டும் போயிருக்கங்க.
  நாம படிக்கிற விகடன், குமுதத்துக்கெல்லாம் வாசகர் கடிதம் எழுதிக்கிட்டா இருக்கோம்?
  ஆனா வாராவாரம் வாங்காமலோ/படிக்காமலோ இருக்கோமா? அப்படித்தான் இதுவும்.

  பின்னூட்டத்தை வச்சு ஒரு எழுத்தோட தரத்தை நிர்ணயிக்க முடியாது. இன்னும் சொல்லப்போனா
  'வலைபதியாத நியூஸிலாந்து வாசகர் ஒருவர்' உங்களுக்கு ஸ்பெஷலா ஒரு பின்னூட்டம் கொடுத்திருந்தாரே:-)
  அதே வாசகர், நம்ம பினாத்தல் சுரேஷோட சில பதிவுகளும் படிச்சு வியந்து என்னிடம் பாராட்டியிருக்கார் என்பதைச் சொல்லிக்
  கொள்ளும் நேரத்திலே....( தேர்தல் வருதாமே, அதான்)

  போகட்டும், இந்தப் பிரியாவிடை, தற்காலிகம் எல்லாம் இன்னிக்கு மட்டும் தானே?
  நாளைக்கு உங்க தி.பா. வழக்கம்போல வந்துரும்தானே?

  அநேக நண்பர்கள் சொன்னதுபோல எல்லாரும் பட்டை அடிச்சுக்கிட்டு இருந்தோம்லெ. அதான் இப்படி......

  நானும் இன்னும் சூரியனையும், கொத்தவால்சாவடி நகைச்சுவையும் படிக்கவில்லை. நிதானமாகப் படிக்கவேண்டும்.

  உங்கள் வாரம் நன்றாக இருந்தது என்று கூறி சிலமணி நேரங்களுக்கு உங்களிடமிருந்து பிரியாவிடை பெற்றுக்கொள்ளும்
  இந்த நேரத்திலே.....

  அடடா, தேர்தல் வருதுன்னதும் சொல்ற வாக்கியங்களை முடிக்கவே முடியலையே:-)

  பதிலளிநீக்கு
 14. அன்புள்ள ஜோசப் சார்:
  துளசி சேச்சி சரியா சொல்லிட்டாங்க.

  //நாம படிக்கிற விகடன், குமுதத்துக்கெல்லாம் வாசகர் கடிதம் எழுதிக்கிட்டா இருக்கோம்?
  ஆனா வாராவாரம் வாங்காமலோ/படிக்காமலோ இருக்கோமா? அப்படித்தான் இதுவும்//

  நான் தவறாம படிக்கிற பதிவுகளில் ஒன்று உங்களது. எனவே நீங்க தற்காலிக பிரியாவிடை ன்னு தலைப்ப பாத்ததும் எங்கடா கொஞ்ச நாள் பதிவேதும் போடும் எண்ணம் இல்லையோன்னு நெனச்சுட்டேன். தொடர்ந்து எழுதுங்க சார்.
  அன்புடன்
  ராஜ்

  பதிலளிநீக்கு
 15. சார்,

  நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்....

  மேலே ஒரு போலி பின்னூட்டம் உள்ளது..அதை டெலிட்செய்யவும்....

  பதிலளிநீக்கு
 16. இன்னைக்கி காலைல எழுந்ததுமே என்னுடைய இளைய மகள் 'என்னப்பா எழுதுனீங்க? காசி சார்லருந்து எல்லாரும் பின்னூட்டம் போட்ருக்காங்க?' என்றாள்.

  நான் அவளிடம் என்னுடைய பிரியாவிடை பதிவைப் படிக்கச் சொன்னேன்.

  அவளும் அதைப் படித்துவிட்டு, 'என்னப்பா நீங்க, சின்ன குழந்தையாட்டம்? பின்னூட்டம் போடலேன்னு இப்படி புலம்புவாங்களா?' என்று கோபித்துக் கொண்டாள்.

  சரி, இப்ப நீங்க பின்னூட்டம் போட்ட எல்லாருக்கும் தனித்தனியா பதில் போட முடியுமா? அப்படி போடலேன்னு யாராச்சும் கோச்சிக்கிட்டா? சரி, போடறதுன்னு ஆரம்பிச்சா இன்னைக்கி நீங்க ஆஃபீஸ்ல வேல பார்த்தா மாதிரிதான்.' என்றாள்.

  அடடா,

  நான் சொன்ன ஒரு சொல்லுக்கு இத்தனை ரெஸ்பான்சா?

  உங்க அன்பு மழையில நனைஞ்சி எனக்கு ஜலதோஷம் பிடிச்சிருச்சி..

  ஹச்சூ!!

  நான் தாற்காலிகம்னு சொன்னது ஒரு சிம்பாலிக்காத்தான்.. தினம் மூனு பதிவுன்னு போட்டு கை விரலெல்லாம் சுளுக்கிக்கிச்சி. லாப் டாப் கீஸ்ல ரெண்டு மூனு தேய்ஞ்சி கூட போயிருச்சி. அதான்..

  சரி விஷயத்துக்கு வருவோம்..

  என் பொண்ணு சொன்னா மாதிரி எல்லோருக்கும் தனித்தனியா நன்றி சொல்லலைனா கோச்சிக்க மாட்டீங்க தானே...

  ஏன்னா இன்னைக்கி வாரத்துல முதல் நாளாச்சே கொஞ்சம் ஆஃபீஸ் வேலயும் பாக்கணும்தானே..

  அதனால

  காசி (எண்ணிக்கைய மறந்துட்டேன்),
  துளசி (எவ்ளோ பெரிய பின்னூட்டம்! உங்க அவருக்கும் சேர்த்துத்தான்:-)),
  டோண்டு (உங்க போலிய சேர்க்கலை),
  கோ ராகவன் (உங்க பதிவை படிக்காத நண்பருக்கும் சேர்த்து),
  ஜோ (உங்க ஜூனியருக்கும் சேர்த்து),
  சுதர்சன்,
  குமரன் (ரெண்டு நன்றிகள்),
  இளந்திரையன்,
  ரா.உஷா,
  இளவஞ்சி,
  முகமூடி,
  ஞானவெட்டியான்,
  டி.ராஜ் மற்றும்
  தமிழினி முத்து (போலிய தூக்கிட்டேன்)

  ஆகிய
  எல்லாருக்கும் ஒட்டு மொத்தமா நன்றி, நன்றி, நன்றி..

  தாற்காலிக விடைபெறுதல் என்றால் நட்சத்திர அந்தஸ்த்திலிருந்து..

  நீங்க போடான்னாலும் நான் போமாட்டேன்.

  என்றென்றும் அன்புடன்,
  டிபிஆர். ஜோசஃப்

  பதிலளிநீக்கு
 17. சார்,

  முதலில் 100-வது பதிப்பிற்கு வாழ்த்துக்கள். பின்னூட்டங்களை விடுங்கள். எத்தனை பேர் உங்கள் பதிப்புகளை காண வந்துள்ளார்கள் என ஒரு கணக்கு எடுங்கள். அந்த எண்ணிக்கை கணிசமாகவே இருக்கும். அது மட்டுமல்லாது உங்கள் கதையுலகம் பின்னூட்டங்களை எண்ணிக்கையில் விட்டுவிட்டீர்களே. என் போன்ற புதியவர்களுக்கு உங்களைப் போன்றவர்களே வழிகாட்டிகள். எனது முதல் 5 பதிப்புகளுக்கு முறையே 11, 0, 0, 6 மற்றும் 12 பின்னூட்டங்கள். இதில் நானெழுதியவை 3, 0, 0, 2, 6. நட்சத்திரமானதே பெரிய அங்கீகாரம்தானே.

  முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தனே மீண்டும் முருங்கைமரம் ஏறுங்கள்.

  பதிலளிநீக்கு
 18. இ.கொ,

  முருங்கைமரம் ஏறுவது வேதாளம் இல்லையா?

  பதிலளிநீக்கு
 19. ஆனாலும் இப்படி முன்னுக்கு பின் முரணாய் பேசக்கூடாது ஜோசப் சார், :-) பின்னூட்டம் போடலை என்று சொல்லிவிட்டு,
  போட்டவர்கள் அனைவருக்கும் மொத்தமா ஓரே ஒரு நன்றி சொன்னா எப்படி? தனி தனியா சொன்னா பின்னூட்ட எண்ணிக்கை
  எகிறியிருக்கும் இல்லே? ஆஹா! ராகவன், துளசி இருக்காங்களா, வரேன் ஜூட் :-))))))))))))))))))))))))))))

  பதிலளிநீக்கு
 20. வாங்க இ.கொத்தனார்,

  அதாவது பின்னூட்டங்கள் கொஞ்சமா வாங்கறதும் ஸ்டார் ஆவறதுக்கு ஒரு க்ரைட்டீரியான்னு சொல்றீங்க..

  சும்மா தமாஷ். கோச்சிக்காதீங்க..

  துளசி சொன்னா மாதிரி.. அது வேதாளம்தானே.. வி.மாதித்தனோ, வேதாளமோ.. ஏறிக்கிட்டேத்தான் இருப்பேன்.. இறங்குடான்னு இறக்கிவிடறவரைக்கும்.

  பதிலளிநீக்கு
 21. வாங்க துளசி,

  வேதாளம்கறது.. பேயாங்க?

  பதிலளிநீக்கு
 22. வாங்க ரா.உஷா.

  நேத்தைக்கி அலுவலக நாளாயிருந்திருந்தா பின்னூட்டங்கள் வரவர கூகுள் டாக்ல பாப் மெசேஜா வந்ததும் பதில் போடறதுக்கு ஈசியா இருக்கும். ஏன்னா ஆஃபீஸ்ல லீஸ் லைன் இருக்கு..

  வீட்லயும் broadband எடுக்கலாம்தான்.. ஆனா என் பொண்ணுக்கு பேசறதுக்கு மட்டும்தான் வீட்ல ஃபோன் இருக்குன்னு அவளுக்கு நினைப்பு. என்ன பண்றது.. ஆஃபீஸ்லதான் நம்ம அதிகாரம் செல்லும். வீட்ல, அதுவும் என் பொண்ணுக்கிட்ட ஒன்னும் நடக்காது..

  அதான் மொத்தமா சேர்த்து நன்றி சொல்லிட்டேன்.. இப்ப உங்களுக்கு தனியோ சொல்லிட்டேன்ல..

  இப்போ விடுங்க ஜூட்..

  பதிலளிநீக்கு
 23. சாரைப்போய் வேதாளம் அப்படீன்னு சொல்ல கஷ்டமாய் இருந்தது. அதான் வேதாளத்தை பிடிக்கப்போன விக்கிரமாதித்தனாய் கொஞ்சம் மாத்திட்டேன். சொதப்பிட்டேனோ?ஆமாம் சார் வேதாளம்ன்னா பேய்தான்.
  வீட்டுல அகலத்தட்டை (broadband. ஹிஹி) எடுப்பதற்கும் உங்கள் மகள் ஃபோன் பேசுவதற்கும் என்ன தொடர்பு? புரியலையே.

  பதிலளிநீக்கு
 24. வாங்க இ.கொத்தனார்,

  சரி பேய்னா என்ன இப்போ.. பணப்பேய், அதிகாரப்பேய்னு இல்லாம மரம் ஏர்ற பேய்தானே..

  அகலத்தட்டை.. நல்லாத்தான் இருக்கு.. ஆனா சரியான்னுதான் தெரியலை..

  அ.தட்டை எடுத்தா ஒரே நேரத்துல நெட்டையும் பாக்கலாம், பேசவும் செய்யலாம்னு சொன்னாலும் அது நடைமுறைக்கு சாத்தியப்படுவதில்லை.. நெட் பார்த்துக்கிட்டிரூந்தா பரவாயில்லை.. எதையாவது download செய்யும் நேரத்தில் பேசுவது சரியாகவே கேக்காது. அதுவும் என் மகள் ஃபோன் எடுத்துட்டா வைக்கறதுக்கு எத்தனை மணி நேரமாவுமோ.. அதனால அவ பேசாம இருக்கற நேரத்துலதான் நெட்டுக்குள்ள போக முடியும்..

  பதிலளிநீக்கு
 25. Pochu, Unga ponnukku Kovam varappoguthu, PC ya ethavathu panna poranga, Unga thodar konja nal nirka pokirathu,nanga ellam mandai kaya porom!!

  Already I m using the lessons u taught in your serial. The rewards are there to be seen. Thanks a lot for the nice articles.

  பதிலளிநீக்கு
 26. Sir, my humble personal opinion. U amde a mistake of putting this as your 100th one. Most of us missed that point and tried to explain about the situation as regards the remaining issue. Anyhow, we are sure that we will see/read many many more centuries from u.

  பதிலளிநீக்கு
 27. வேதாளம்னா பேய் இல்லீங்க. தப்பா சொல்றாங்க.

  நாம்தான் வேதாளம்:-)

  பதிலளிநீக்கு
 28. வாங்க துளசி,

  கரெக்ட். நம்ம மனசுல இருக்கறதுதான் பேய்.. ஆணவப் பேய், பொறாமைப் பேய்.. இன்னும் எத்தனை, எத்தனையோ..

  பதிலளிநீக்கு
 29. வாங்க கிருஷ்ணா,

  we are sure that we will see/read many many more centuries from u.//

  உங்க நம்பிக்கை வீண் போகாதுன்னு நினைக்கிறேன்..

  தொடரின் 59 வது பகுதியைப் போட்டுட்டேன்..

  பதிலளிநீக்கு
 30. அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்க...மீண்டும் முருங்கை மரம் ஏறிய...சேச்சே! மீண்டும் தமிழ்மணத்தில் வலைபூக்க வந்திருக்கும் கலியுக சுகர், விளங்கச் சொல்லும் வியாசர், திருந்தச் சொல்லும் திருவள்ளுவர், இனிமையாகச் சொல்லும் இளங்கோவடிகளாம் நமது ஜோசப் சார் அவர்களை வருக வருக என இரு கரங்கள் கூப்பி வரவேற்று மகிழ்வதில் உண்டாகும் மகிழ்ச்சியை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதன் பெருமை என்னவென்று இன்று உணர்ந்து கொள்வதற்கு வாய்ப்பளித்தமைக்கு உளப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை வரவேற்கிறேன். வருக. வருக. பதிவுகளைத் தருக. தருக.

  பதிலளிநீக்கு
 31. // ஆஹா! ராகவன், துளசி இருக்காங்களா, வரேன் ஜூட் :-)))))))))))))))))))))))))))) //

  உஷா நீங்க இதுக்குக் காரணம் சொல்லியே ஆகனும்? என்ன என்ன என்ன எனஎனன்னு கே.பி.சுந்தராம்பாள் மாதிரி என்னால பாட முடியாது. தொண்ட கிழிஞ்சிரும். அதுனால நீங்களே சொல்லீருங்க.

  பதிலளிநீக்கு
 32. வாங்க ராகவன்,

  என்ன விட்டா ஒரு பெரிய வரவேற்புரையே வாசிச்சிருவீங்க போலருக்கு? நீங்க நல்ல எழுத்தாளர்னு மட்டும்தான் நினைச்சிக்கிட்டிருந்தேன்.. நல்ல பேச்சாளராவும் இருப்பீங்க போல..

  சகலகலா வில்.. சாரி வல்லவன் தான்..

  பதிலளிநீக்கு
 33. மறுபடியும் வாங்க ராக.. சாரி இது உஷாவுக்குருக்கற பின்னூட்டமோ..

  ஒன்னுமில்லை உங்க ரெண்டு பேரோட பேரையும தனியாஎன் பிரியாவிடை பதிவில போட்டதுலருந்து என்னைப் பற்றி யாராவது ஏதாவது சொன்னா உங்க ரெண்டு பேர்ல ஒருத்தார் யாராவது 'போட்டு தள்ளி'ருவீங்களோன்னு நினைச்சிருப்பாங்க..

  என்னங்க உஷா..

  பதிலளிநீக்கு
 34. //// ஆஹா! ராகவன், துளசி இருக்காங்களா, வரேன் ஜூட் :-)))))))))))))))))))))))))))) //

  உஷா நீங்க இதுக்குக் காரணம் சொல்லியே ஆகனும்? என்ன என்ன என்ன எனஎனன்னு கே.பி.சுந்தராம்பாள் மாதிரி என்னால பாட முடியாது. தொண்ட கிழிஞ்சிரும். அதுனால நீங்களே சொல்லீருங்க.

  //

  இராகவன். உஷா என்ன சொல்ல வர்றாங்கங்கறது ஊருக்கே தெரியுமே. ஒன்னும் தெரியாத மாதிரி கேக்கறீங்க?

  உஷா, இராமநாதனை விட்டுட்டீங்க? அவரும் துளசியும் தானே இந்த பின்னூட்டக் கலையை வளர்த்தவங்க. இராகவன் அவங்க ரெண்டு பேர் பதிவுகளையும் படிச்ச பழக்கத்துல அப்படி பின்னூட்டப் பதில் போட ஆரம்பிச்சிருக்கார். அதனால அவருக்கு நீங்க என்ன சொல்றீங்கன்னு டக்குன்னு புரியலன்னு நெனைக்கிறேன்.

  ஆனால் டோண்டு இராகவனை யாராலும் மறக்க/மறுக்க முடியாதுன்னு நினைக்கிறேன் இந்த விஷயத்தில். ஏன்னா அவர்தான் இந்த பின்னூட்டக் கலையின் பிதாமகர்.

  பதிலளிநீக்கு
 35. குமரன், ஆனாலும் நீங்க என்னோட கவிதைக்குப் பொருள் தேடுகிறா மாதிரி, சாதாரணமா துளசியையும், ராகவனையும் விசாரிச்சதற்கு இந்தளவு உள் அர்த்தம் கண்டுப்பிடிக்கக்கூடாது :-))))))

  சின்ன பிள்ளை இரஷ்யாக்காரரை விடுங்க, இதுல பின்னூட்ட மன்னன் டோண்டு சாரை நான் குறிப்பிடவில்லை என்னும்பொழுதே, நீங்க இது ஒரு சாதாரண விசாரிப்புன்னு நெனச்சிருக்க வேண்டாம்? குப்புற விழுந்தாலும், மீசையில மண் ஒட்டவில்லை என்று யாரும் நினைக்கவேண்டாம், ஏன் என்றால் எனக்கு மீசையே இல்லை:-)))))

  துளசி, ஜீரா நான் சொல்வது உண்மை என்று உணர்ந்தீர்களா?
  பயத்துடன்,
  உஷா

  பதிலளிநீக்கு
 36. // இராகவன். உஷா என்ன சொல்ல வர்றாங்கங்கறது ஊருக்கே தெரியுமே. ஒன்னும் தெரியாத மாதிரி கேக்கறீங்க? //

  குமரன், இது அறியா வினாதான். அரியா வினா அல்ல. :-)

  // உஷா, இராமநாதனை விட்டுட்டீங்க? அவரும் துளசியும் தானே இந்த பின்னூட்டக் கலையை வளர்த்தவங்க. இராகவன் அவங்க ரெண்டு பேர் பதிவுகளையும் படிச்ச பழக்கத்துல அப்படி பின்னூட்டப் பதில் போட ஆரம்பிச்சிருக்கார். அதனால அவருக்கு நீங்க என்ன சொல்றீங்கன்னு டக்குன்னு புரியலன்னு நெனைக்கிறேன். //

  ஓ இதுதான் சமாச்சாரமா? இப்பப் புரிஞ்சது. புரிஞ்சது. நம்ம பதிவுக்கு வந்து பின்னூட்டம் போடுறவங்களுக்குப் பதில் போடாம இருக்க முடியுமா? குறைந்த பட்சம் நன்றியாவது சொல்ல வேண்டாமா?

  பதிலளிநீக்கு
 37. வாங்க ராகவன்,

  நீங்க போட்டது ராகவனுக்குத் தான் என்றாலும் என் வீட்டுக்கு வந்த விருந்தாளிய வரவேற்கறதுதான முறை..

  இனி ஓவர் டு ராகவன்..

  என்ன ராகவன் ஏதாவது புரிஞ்சிதா.. எனக்கு சுத்தமா புரியலை..

  பதிலளிநீக்கு
 38. வாங்க உஷா..

  ஏதோ உங்க புண்ணியத்துல பின்னூட்டங்களின் எண்ணிக்கை கூடிக்கிட்டே போது..

  இப்ப இந்த பதிவுதான் பரிந்துரை லிஸ்ட்ல நம்பர் ஒன்.. அடடா என் எழுத்தாற்றலுக்கு(!?) கிடைச்ச அங்கீகாரம்னு பாக்கறவங்க நினைச்சிப்பாங்க.. உள்ள வந்து பார்த்தாத்தான தெரியும்..

  இருந்தாலும் நன்றிங்க.. ராகவன்..
  இவங்க எழுதுனதும் புரியலை..

  நீங்களாவது எனக்கு புரியறா மாதிரி பதில் போடுங்க.. வருது உங்க பின்னூட்ட பாப் அப்.. இருங்க படிச்சிட்டு வந்துடறேன்.

  பதிலளிநீக்கு
 39. ஊஹும்.. இப்பவும் ஒன்னும் புரியலை ராகவன்.

  சரி போட்டும். ஏதோ ஒன்னு..

  ஒரு வேளை உஷாவுக்கு தனியா பதில் போடலைன்னு கோபமா இருக்குமோ..

  உஷா அவர்களே, இதையே உங்களுடைய பின்னூட்டத்திற்கு தனி பதிலாக நினைத்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  அன்புடன்
  டிபிஆர்.

  பதிலளிநீக்கு
 40. // துளசி, ஜீரா நான் சொல்வது உண்மை என்று உணர்ந்தீர்களா?
  பயத்துடன்,
  உஷா //

  உஷா...பயமெல்லாம் எதுக்கு. இப்ப எல்லாம் புரிஞ்சது. தெரிஞ்சது. நீங்கள் சொல்வதெல்லாம் சத்தியமான உண்மை என்று இப்பொழுது தெரிந்தது. சரிதானா?

  பதிலளிநீக்கு
 41. தம்பி, (ஹா! வேறு யார் தமிழ் வலைஞர்களுள் உங்களை இப்படிக் கூப்பிட முடியும்??!! :-)
  நூத்துக்கு முதலில் வாழ்த்துக்கள் - அதுவும் குறுகிய காலத்தில் - பயங்கர innings தான்!

  நிறைய ஆட்கள் பட்டையை வெற்றிகரமா அடிச்சாலும், என்ன மாதிரி சில(? சில கேசுகளா, இல்ல நான் மட்டும்தானான்னு தெரியலை) கேசுகள் பட்டை அடிக்கத்தெரியாம, விடவும் மனசு இல்லாம அதிலேயே 'ஊறி'ப்போய்ட்டோம்னு நினைக்கிறேன்.
  எப்படியோ பட்டைக்கும் உங்கள் பின்னூட்ட அளவிற்கும் ஒரு correlation இருக்குன்னு நினைக்கிறேன். அதோடு நீங்க தொடரா எழுதுறதினால, ஒரு பதிவுக்கு ஒரு பின்னூட்டம் அப்டிங்கிற கணக்கு சரியா வராது. இல்லியா?

  உங்கள் 'என் பைபிள்' தொடர்ந்து வாசிக்கப் போறேன். ஆனா, இப்பவே சொல்லிடறேன் - அங்க பின்னூட்டம் இடக்கூடாதுன்னு நினச்சிருக்கேன். சரியா?

  பதிலளிநீக்கு
 42. அடடா, வாங்க அண்ணா (இதுக்கு கடைசியில பதிலளிக்கிறேன்) உங்கள நம்ம வீட்ல பார்த்து எத்தன மாமாங்கம் ஆயிருச்சி!!

  நீங்க பட்டையப் பத்தி கேட்டதும்தான் ஞாபகத்துக்கு வருது. நீங்க இதுக்கு முன்னால இதப்பத்தி ஒரு தனி பதிவு போட்டீங்களே நான் அப்பவே அதுல பின்னூட்டம் போட்டிருந்தேன். பேசாம ப்ளாக்கர் சைட்டுக்கு வந்து ஒரு புது Blog Create பண்ணிரூங்கன்னு.. இனியாவது அத செய்யுங்க.. உங்க ப்ராப்ளம் எல்லாம் சால்வாயிரும்..

  அப்புறம் என்னுடைய பிரியாவிடை நூறாவது பதிவு.. சின்ன பசங்கள பாத்திருக்கீங்கதானே (!). தரையில ஏதாச்சும் ஒரு பேப்பர் கிடந்தாக்கூட எடுத்து வச்சி கிருக்க ஆரம்பிச்சிருவாங்க.. அதுமாதிரிதான் நானும் தமிழ்ல எழுதறதுக்கு ஒரு ஓசி சாஃப்ட்வேரும், ஒரு ப்ளாக்கும் கிடைச்ச சந்தோஷம்.. தலைகால் புரிய மாட்டேங்குது.. அதான் மூனே மாசத்துல நூறு பதிவு..

  இதே வேகத்துல போமுடியுமா, உங்களையும், டோண்டு அப்புறம் துளசி மாதிரி நிலைச்சி ஒரு ரெண்டு மூனு வருஷம் நிக்க முடியுமான்னு போக போகத்தான் தெரியும். இருந்தாலும் உங்க வாழ்த்துக்கு நன்றி.

  இப்ப தம்பி, அண்ணா பற்றி...

  நான் மதுரை, தூ..டியில வேலை செஞ்சப்போ நிறைய பேர் இப்படி அன்போட, பாசத்தோட அண்ணான்னு கூப்டு பார்த்திருக்கேன். ரெண்டு பேர் பேசிக்கிட்டிருப்பாங்க. இவர் அவரை அண்ணாம்பார், அவர் பதிலுக்கு இவரை அண்ணாம்பார். நான் பார்ப்பேன் அப்ப யார்தான் தம்பின்னு..

  அதான் நீங்க தம்பின்னு கூப்டதும் ஆச்சரியாம இருந்திச்சி..

  சார், சார்னு கூப்டறதுக்கு இந்த அண்ணாங்கறது என்னமோ கொஞ்சம் நெருங்கி வந்துட்டா மாதிரியிருக்கு..

  கடைசியா என் பைபிள் பதிவைப் பற்றி..

  அது என்னுடைய நீண்ட கால கனவு.. பைபிளை நம்மைப் போன்றோர் அறிந்திருப்பதை நம்மைச் சுற்றியுள்ள நண்பர்களும் அவர்கள் எம்மதத்தைச் சார்ந்தவர்களாயினும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே இத்தனிப் பதிவைத் துவக்கினேன். நம்முடைய மதத்தைப் பரப்பவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல..

  இங்கிருந்து இன்னும் எவ்வளவு தூரம் போகமுடியும் என்பது இறைவனின் சித்தம்.. உங்கள் கருத்தைப் பின்னூட்டமாகத்தான் போடவேண்டும் என்பதில்லை.. தனி மெயிலாகவும் அனுப்பலாமே.. எனக்கு அது மிகவும் உதவியாயிருக்கும்..

  அப்பாடா.. இது ஒரு பதிவுக்கு மேல போயிருச்சி..

  நன்றி அண்ணா!

  அன்புடன்,
  டிபிஆர்.

  பதிலளிநீக்கு
 43. I never missed your comedies, although I gave comments only a few times.

  All are awesome. I am sure, you are being noted by cine people and expecting your comedies in films.

  பதிலளிநீக்கு