30 செப்டம்பர் 2010

நிஅயோத்தி தீர்ப்பு சாராம்சம்

அலகாபாத் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் சாராம்சம்:

1. 2.5 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை நிர்மோகி அகாரா அமைப்புக்கும், பாபர் மசூதி அமைப்புக்கும் மற்றும் இந்து மகாசபை அமைப்புக்கும் வழங்க வேண்டும்.

2. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மூன்று மாத அவகாசம்.

3. அதுவரை தற்போதைய நிலை தொடர வேண்டும்.

ஆனால் சர்ச்சைக்குரிய இடம் உண்மையில் ராமர் பிறந்த இடம்தான் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிஜேபி வழக்கறிஞர் பேட்டி. இஸ்லாமிய சகோதரர்கள் இதை ஏற்றுக்கொண்டு அங்கு மசூதி கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை!

தீர்ப்பின் முழு விவரமும் வெளிவராத நிலையில் அவருடைய இந்த பேட்டி சரிதானா என்று தெரியவில்லை.

7 கருத்துகள்:

  1. இப்போதான் டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் தீர்ப்பு மேலே ஓடுச்சு.

    நிலம் எவ்வலவு பெருசுன்னு தெரியாமல் இருந்துச்சு. உங்க இடுகை மூலம் ரெண்டரை ஏக்கர்ன்னு புரிஞ்சது.

    இனிமே அவுங்கவுங்க இடத்துலே கோவிலோ மசூதியோ கட்டிக்கட்டும்.

    நாடு நிம்மதியா இருந்தாச் சரி.

    வழிபாட்டுக்கு கட்டிக்கிட்டு காம்பவுண்டுக்கு அந்தப்பக்கம் இவுங்க யாருமே 'வேலை காமிக்காம' இருக்கணும்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க துளசி,

    தீர்ப்பு சரியோ தவறோ ஆனால் அதை ஏற்றுக்கொண்டு இதுவரைக்கும் அமைதி காத்த நம்ம நாட்டு மக்களுக்கு ஒரு 'ஓ' போட்டுத்தான் ஆகணும்.

    அதுவும் இளைய தலைமுறை இந்த சச்சரவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது டைம்ஸ் ஆப் இந்தியாவில் இன்று வந்த பேட்டிகள் எடுத்துக்காட்டுகின்றன.


    இதில் வேடிக்கை என்னவென்றால் அயோத்தியா எந்த மாநிலத்தில் உள்ளது என்பதே பேட்டி கண்ட பல இளைஞர்களுக்கு தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. //தீர்ப்பு சரியோ தவறோ ஆனால் அதை ஏற்றுக்கொண்டு // புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. தீர்ப்பு சரியோ தவறோ ஆனால் அதை ஏற்றுக்கொண்டு //

    இந்த தீர்ப்பு சரியானதுதான் என்று ஒரு சாராரும் தவறு என்று ஒரு சாராரும் கூறுவதை நீங்கள் கேட்கவில்லலயா/படிக்கவில்லையா?

    ஆகவேதான் என்னால் இதை சரி என்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை தவறு என்றும் கூற முடியவில்லை. இதை ஒரு compromise judgement முழுக்க, முழுக்க சட்ட கோணத்தில் மட்டுமல்லாமல் மூன்று நீதியரசர்களுமே மன ரீதியாகவும் இந்த பிரச்சினைய்யை அனுகியுள்ளனர் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. எனக்கு இந்த தீர்ப்பு சரியாதாங்க படுது.

    ஒருபக்க சார்பா இருந்துருந்தா இன்னிக்கு நாடே அல்லோலகல்லோலப்பட்டுருக்காதா?

    சிலர் தீர்ப்பு சரி இல்லைன்னு சொல்றதைப் பார்த்தா..... பயங்கரவாதம் மறைஞ்சுறக்கூடாதுன்ற கவலையோன்னு தோணுது.

    உடனே என் மேலே பாயாதீங்க.

    ஊர் ரெண்டு பட்டா...... பழமொழி நினைவுக்கு வந்து தொலைக்குதுங்க.

    இனி வரும் சந்ததிகளாவது மதம் பிடிச்சு அலையாம ஒருத்தரோடு ஒருத்தர் சச்சரவு இல்லாம வளரட்டுமே.

    பதிலளிநீக்கு
  6. எனக்கு இந்த தீர்ப்பு சரியாதாங்க படுது.//

    இப்போ ஒன்னும் சொல்லப் போறதில்லை. கொஞ்ச நாள் போகட்டும். இதைப் பற்றி விவாதிக்கலாம்.

    உடனே என் மேலே பாயாதீங்க.//

    கண்டிப்பா யாரும் உங்க மேல பாயமாட்டாங்க ப்யப்படாதீங்க :))

    பதிலளிநீக்கு