08 செப்டம்பர் 2010

இது யார் வீட்டு சொத்தும் அல்ல, பொதுச் சொத்து!

சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சுமார் 12000 டன் உணவு தானிய இழப்பைப் பற்றி எழுதாத பத்திரிகைகள் இல்லை. உச்ச நீதிமன்றமும் இதில் தலையிட்டு இத்தகைய இழப்புகளை தவிர்க்க ஏன் உபரி தானியங்களை வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கக் கூடாது என்ற வினாவையும் எழுப்பியது.

இதற்கு மறுமொழியாக பிரதமர் இத்தகைய கொள்கை
விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும்
தானிய இழப்பு ஏற்படாவண்ணம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதும் சர்ச்சையக் கிளப்பிவிட்டது. உச்ச நீதிமன்றமே பிரதமரின் மறுமொழியை தவறாக எடுத்துக்கொள்ளாத
நிலையில் நம்முடைய 'பிரபல' பதிவாளர்கள் சிலர் நம்முடைய பிரதமரை 'யார் வீட்டு அப்பன் சொத்து'; 'எங்கிருந்து வந்தது இந்த ஆணவம்' என்றெல்லாம் தலைப்பிட்டு பதிவுகள் எழுத கொதித்தெழுந்து பின்னூட்டத்தில் பலர் பிரதமரையும், விவசாய
அமைச்சரையும் திட்டித் தீர்த்துள்ளனர்.

இதன் பின்னணி என்ன? ஏன் இத்தகைய இழப்புகள்
ஏற்படுகின்றன? அதை தவிர்ப்பதற்கு ஏன் இந்திய உணவுக்
கழகத்தால் (FoodCorporation of India) இயலவில்லை
என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் வெறும்
sensationalisation என்பார்களே அந்த வகையில் பதிவுகளை எழுதி சக பதிவர்களின் பார்வையை ஈர்ப்பதிலேயே சிலர் குறியாயிருப்பது வாடிக்கையாகி வருகிறது.

இந்தியாவில் உற்பத்தியாகும் அனைத்து உணவு தானியத்தையும் விவசாயிகளிடத்திலிருந்து கொள்முதல் செய்து அவற்றை உணவு பகிர்ந்தளிக்கும் கழகம் வழியாக (Civil Supply Corporation) குடும்ப அட்டைதாரர்களுக்கு
வினியோகம் செய்யும் பணியை காலம் காலமாக இந்திய உணவுக் கழகம் செய்து வருகிறது.

இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் கோதுமையை வடமாநில விவசாயிகளிடத்திலிருந்தும் நெல் மற்றும் பிற தானியங்களை மற்ற பகுதிகளிலிருந்தும் கொள்முதல் செய்து அதற்கு சொந்தமான சுமார்
2000 கிடங்குகளில் சேமித்து வைக்கிறது.

கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த பன்னிரண்டு மாத காலத்தில் இந்த கழகம் கொள்முதல் செய்த அளவு இவை:

கோதுமை: 2.53 கோடி மெட்ரிக் டன்
நெல் : 3.05 கோடி மெட்ரிக் டன்

ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் எத்தனை டன்
தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற இலக்கை இந்த கழகத்தின் நிர்வாகக் குழுவினருடைய பரிந்துரையின் பேரில் மத்திய அரசின் விவசாய இலாக்கா நிர்ணயிக்கிறது. இது குறைந்தபட்ச அளவு மட்டுமே.
அதிக அளவு (Maximum limit) என்ற இலக்கு ஏதும் இல்லை. அதாவது இந்த கழகத்தின் கொள்ளளவு எவ்வளவோ அந்த அளவு தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதானே அடிப்படை நியதியாயிருக்க முடியும்?

இதே கழகம் தனியார்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டால் தன்னுடைய மொத்த கொள்ளளவுக்கு மேல் ஒரு கிலோ தானியத்தைக் கூட அந்த கழகம் கொள்முதல் செய்யாது. ஏனெனில் விலை கொடுத்து தானியத்தை வாங்கி திறந்தவெளியில் வைத்து மழைக்கும், காற்றுக்கும், எலிக்கும்
அவற்றை தாரை வார்க்க லாப நோக்குடன் இயங்கும் எந்த
நிறுவனமாவது முன்வருமா?

ஆனால் அரசு நிறுவனம் அப்படி இயங்க முடியாதே. விளைச்சல் அதிகமாக இருக்கும் காலங்களில் எந்த அளவுக்கு கழகத்தின் கொள்முதல் நிலையங்களில் (Procurement outlets) தானியங்கள் வருகின்றனவோ அவை அனைத்தையும் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற அரசின் கொள்கையை தலைமேல் ஏற்று தங்களுடைய மொத்த கொள்முதல் அளவையும் மீறி இந்த கழகம் கொள்முதல் செய்கிறது.

தங்கள் வசம் உள்ள கிடங்குகள் நிறம்பியதும் எஞ்சியுள்ள
தானியங்களை வேறு வழியின்றி அரசுக்கு சொந்தமான அல்லது தனியார்களிடமிருந்து வாடகைக்கு எடுத்த நிலங்களில் அதாவது திறந்தவெளியில் தானிய மூடைகளை ஒரு சிறிய மர மேடைகளில் கோபுர வடிவில் அடுக்கி மழை நீர் புக முடியாத தார்பாய்களில் மூடி பாதுகாக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர்

ஆனால் துரதிர்ஷ்டவசமாக எதிர்பாராத காற்று, மழையால் சில சமயங்களில் இப்படி சேமித்து வைக்கும் தானியங்களில் சில பாதிக்கப்படுவதுண்டு. மேலும் விவசாயிகள் கொண்டு வரும் தானியங்களின் ஈரப்பதம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற அரசின் நியதியையும் மீறி சில உள்ளூர் அரசுகளின் நிர்பந்தத்திற்கு பணிந்து ஈரப்பதம் அதிகம் உள்ள தானியங்களையும் கொள்முதல் செய்ய நேரிடுகிறது. அத்தகைய தானியங்கள் என்னதான் பாதுகாப்புடன் சேமிக்கப்பட்டாலும் புளுத்து போகக்கூடும்.

உணவுக் கழகத்தின் தானிய பாதுகாப்பு அளவு (Storage Capacity) வருடா வருடம் அதிகரிக்கப்பட்டாலும் தானிய
விளைச்சலும் அதிகரித்துகொண்டே செல்வதால் கழகத்தின்
கொள்முதல் எப்போதுமே அதன் பாதுகாப்பு அளவை விட
அதிகமாகவே இருந்து வருகிறது.

ஆனால் கழகத்தின் ஒட்டுமொத்த கொள்முதலுடன் ஒப்பிடுகையில் அதன் இழப்பீடு மொத்த சேமிப்பில் அரை விழுக்காட்டுக்கு மேல் சென்றதில்லை என்கின்றன கழகத்தின் அறிக்கைகள். சமீபத்தில் உச்சநீதி மன்ற கண்டனத்திற்குள்ளான இழப்பின் மதிப்பு 12000
டன். இதை கழகத்தின் மொத்த கொள்முதலான 2.53 கோடி டன் ஒப்பிட்டு பார்த்தால் அரை விழுக்காட்டுக்கும் கீழ்தான் என்பது தெளிவாகும்.

என்ன இருந்தாலும் இழப்பு, இழப்புதானே என்றால், அது
உண்மைதான். அதை தடுத்து நிறுத்த மத்திய அரசும், இந்திய உணவுக் கழகமும் ஆவன செய்ய வேண்டும்.

ஆனால் இப்படி தானியத்தை வீணாக்குவதை விட அவற்றை ஏழை மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கலாமே என்பது நடைமுறைக்கு சாத்தியமாகாது.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 37 விழுக்காடு வறுமைக்கோட்டுக்கும் கீழுள்ளவர்கள் என்கின்றன சமீபத்திய கணக்கீடுகள். அதாவது சுமார் 37 கோடி. இதை ஐவர் அடங்கிய குடும்பமாக பிரித்து ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ தானியத்தை இலவசமாக வழங்கினாலும் எத்தனை கோடி டன் வேண்டும் என்று கணக்கிடுங்கள். இது சாத்தியமாகுமா!

ஆகவே அரசையும், அதன் தலைவரான பிரதமரையும்
சகட்டுமேனிக்கு சாடுவதற்கு முன்பு ஒரு அரசை நடத்திச் செல்வது எத்தனை சிரமம் என்பதை எண்ணிப் பாருங்கள்.

எதையும் உணர்வுபூர்வமாக அணுகுவதால்தான் இத்தகைய தவறுகள் ஏற்படுகின்றன. இதை நிச்சயம் தானிய இழப்பீட்டையோ அல்லது பிரதமரின் செயல்பாடுகளையும் அவர் உச்சநீதி மன்றத்திற்கு அளித்த மறுமொழியை நியாயப்படுத்தவோ எழுதவில்லை.

உணவுக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்கள் யார் அப்பன் சொத்தும் அல்ல. நம் சொத்து. அரசே முன்வந்து இலவசமாக பகிர்ந்தளிக்கிறோம் என்று முன்வந்தாலும் அதை எதிர்க்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. இதை அனுமதித்தால் ஓட்டுக்கு பணம் என்பதற்கு பதிலாக ஒரு ஓட்டுக்கு ஐந்து கிலோ அரிசி என்று புறப்பட்டுவிடுவார்கள், எச்சரிக்கை!

இலவச தொலைக்காட்சி பெட்டி, இலவச எரிவாயு மற்றும் அடுப்பு, இலவச மின் இணைப்பு என்பதுபோன்றதல்ல இலவச தானிய வினியோகம்.


*******

11 கருத்துகள்:

  1. An eye opening article... Keep writing...

    No one is really interested in analyze the reality.. Doctors & IT Engineers are just read headlines in the news papers and wrote some useless thing in their blogs.. (of course it is free.. else they won't do)

    Doctors & IT Engineers are not really interested to know anything about Indian Constitution & Directive Principle of State Policy and the role of Super Court in policy making... Without knowledge (not even half baked) just they wanted to criticize everything and next day they will move on to other stuff...

    If Supreme Court is making decision on behalf of the elected government, then what is the purpose of election & governance... simply we (we the people of India) can select the Supreme Court Judges rather than politicians..

    பதிலளிநீக்கு
  2. This Govt systematically not expanding the storage godowns of FCI for the simple reason to bring in private storage facilities and allowing the private sector to grow.Country is plundered by the private sector, in almost all sectors.And this is not an exception.The inhuman attitude of the PM is quite glaring in his statement to the Supreme Count recommendation and advice of giving free grains to the poor instead of getting it rot in the stored places.The PM said this is not possible.This shows the attitude of this western-oriented man who lost his roots as an Indian.

    பதிலளிநீக்கு
  3. நன்றி இளந்தென்றல்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க ரெங்கா,

    Thanks for your comments.

    We should not say anything about Supreme Court Judges' comments even if some of the comments are absurd and impractical for fear of contempt of court. What to do?

    பதிலளிநீக்கு
  5. வாங்க உத்தம்,

    This Govt systematically not expanding the storage godowns of FCI for the simple reason to bring in private storage facilities and allowing the private sector to grow//

    I don't know from where you got this impression.

    Country is plundered by the private sector, in almost all sectors.And this is not an exception//

    It has become a fancy to blame or accuse Private sector for every evil of this Country. But for Private operators the mobile phone would not be available with everyone. Do you use BSNL Cell one or Airtel? Or Vodaphone? Do you have a policy of flying only by Indian Airlines? Do you watch only Doordharshan? It is the Private sector which could bring in technology revolution in any country. If US and other Western Countries or even Japan and the last country which realised this China, could reach this level of economical strnegth only with the overwhelming participation of Private Sector in the building of Economy.

    The inhuman attitude of the PM is quite glaring in his statement to the Supreme Count recommendation and advice of giving free grains to the poor instead of getting it rot in the stored places.//

    There is nothing inhuman in the attitude of the PM and don't repeate this argument even after reading my article. It clearly shows that you don't want to understand the difficulties faced by the FCI and the Govt but only blame them just like any other 3rd rate politician.

    பதிலளிநீக்கு
  6. ஆஹா.... இப்படித்தான் அங்கங்கே விளை நிலங்களில் சேமிச்சு வச்சுருக்காங்களா!!!!!

    அம்ரித்ஸர் பயணத்தில் தார்பாலீன் போட்டு மூடிவச்ச தானியக் 'குன்று'களை அங்கங்கே பார்த்தேன்!!!

    பதிலளிநீக்கு
  7. வாங்க துளசி,

    இப்படித்தான் அங்கங்கே விளை நிலங்களில் சேமிச்சு வச்சுருக்காங்களா//

    ஆமாம். இன்று நேற்றல்ல முப்பது வருடங்களுக்கும் மேலாக இப்படித்தான் தங்களுடைய storing capacity க்கு கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்ட தானியங்களை சேமித்து வைக்கின்றனர்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசி.

    பதிலளிநீக்கு
  8. மாற்றுக்கருத்துக்கு நன்றி. இது பற்றி மாறுப்பட்ட பார்வையில் தற்போது தான் படிக்கிறேன்.

    நீங்கள் கூறுவது போல என்னவென்று விசாரிக்காமல் விமர்சிப்பது தவறு தான்.. அதே போல நீங்கள் கூறிய நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் வேறு ஏதாவது கமிசன் (எது எதுக்கோ அமைக்கறாங்க) அமைத்து இதை எப்படி காலம் தாழ்த்தாமல் பகிர்ந்தளிக்கலாம் என்று அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

    அரசால் முடியாதது என்று எதுவுமில்லை.

    பசியால் பலர் வாடும் போது இப்படி வீண் செய்வது ஏற்றுக்கொள்ளும்படியில்லை.

    மற்றபடி உங்கள் மாற்றுக்கருத்தை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. வாங்க கிரி,

    நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் வேறு ஏதாவது கமிசன் (எது எதுக்கோ அமைக்கறாங்க) அமைத்து இதை எப்படி காலம் தாழ்த்தாமல் பகிர்ந்தளிக்கலாம் என்று அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.//

    சரியாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு