நேற்று நான் எழுதியிருந்தது, அதாவது காமன்வெல்த் போட்டி கிராமத்தில் (Games Village) பத்திரிகைகளும் ஊடகங்களும் கூறியிருந்ததுபோன்று அவ்வளவு மோசமாக இல்லை என்பதற்கு நேற்று வந்திறங்கிய வெளிநாட்டு வீரர்களின் பேட்டிகளிலிருந்து உண்மைதான் என்பது தெளிவாகிறது.
'Impressed with Games Village' என்ற தலைப்பில் ஹிந்து தினத்தாளில் வெளியாகியுள்ள சில கருத்துக்கள்:
இங்கிலாந்தின் ஹாக்கி அணியின் வீரர்களுள் ஒருவரான அலெக்சாண்ட்றா:
"நான் என்னுடைய நாட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகளை படித்துவிட்டு எப்படி இருக்குமோ என்று இங்கு வந்தேன். ஆனால் அப்படி ஏதும் குறைகள் இல்லை என்பதுடன் நான் இதுவரை பார்த்த ஏற்பாடுகளை விடவும் இங்கு மிகவும் சிறப்பாகவே உள்ளன. வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து அறைகளும் விசாலமாகவும், தூய்மையாகவும் உள்ளன. உங்களுடைய உள்ளூர் பத்திரிகைகள் சற்று அதிகமாகவே எதிர்மறையாக இதைப்பற்றி எழுதியுள்ளன என்றே தோன்றுகிறது. அதை அப்படியே எங்களுடைய பத்திரிகைகளும் பிரசுரித்துவிட்டன என்று நினைக்கிறேன்."
கடந்த உலகைக் கோப்பை ஹாக்கியின் சிறந்த கோல்கீப்பர் என்ற பட்டத்தை வென்ற பெத் என்னும் வீராங்கனை:
"வீரர்கள் உணவருந்தும் பகுதி மிகவும் சிறப்பாக உலகதரம் வாய்ந்ததாக அமைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த போட்டிகள் மிகவும் சிறப்பாக அமையும் என்று நினைக்கிறேன். இங்கு வந்து இவற்றைக் கண்டவுடனே என்னுடைய குடும்பத்தினருக்கு 'இங்கு எல்லாமே சிறப்பாக உள்ளது கவலைப்படாதீர்கள்' என்று மின்னஞ்சல் செய்தேன்.'
கடந்த இரண்டு நாட்களில் போட்டி கிராமத்திற்கு வந்து சேர்ந்துள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாண்ட், நைஜீரியா, மலேசியா வீரர்கள் பலரும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர். இதிலிருந்து NDTV மற்றும் CNN-IBN தொலைக்காட்சிகள் ஒரு வார காலமாக அளித்து வந்த எதிர்மறை செய்திகள் அனைத்தும் உண்மையல்ல என்பது தெளிவாகிறது. அவ்ர்களுடைய செய்திகளை அப்படியே காப்பியடித்து ஒளிபரப்பி வந்த சன் நெட்வொர்க் இப்போதும் அதே பல்லவியை பாடிக்கொண்டிருப்பது வேதனை.
அதுமட்டுமா கடந்த சில நாட்களாக தமிழ்மணத்தில் வெளியாகியிருந்த எதிர்மறை பதிவுகளை எழுதிவந்த பதிவர்களும் வெட்கப்பட வேண்டும். விஷயம் என்னவென்றே புரிந்துக்கொள்ளாமல் சகட்டுமேனிக்கு எழுதி வந்தவர்களை என்ன சொல்வது? அந்த பதிவுகளுக்கு பின்னூட்டத்தில் வெறுப்பை உமிழ்ந்தவர்களுடைய எண்ணிக்கையைப் பார்த்தால் நாட்டில் எதிர்மறை கருத்துக்களுக்குத்தான் மவுசு அதிகம் என்பதும் தெளிவாகிறது. என்று மாறும் இந்த இழிநிலை?
********
செய்திகளைப் பார்க்கும்போது காமன்வெல்த் போட்டியே ரத்து செய்யப்படும் என்பதுபோல இருந்தது. எல்லாம் பரபரப்புக்காக செய்யப்படுவதுதான் போலிருக்கிறது. //அதுமட்டுமா கடந்த சில நாட்களாக தமிழ்மணத்தில் வெளியாகியிருந்த எதிர்மறை பதிவுகளை எழுதிவந்த பதிவர்களும் வெட்கப்பட வேண்டும். // கடந்த சில நாட்களாக அல்ல நீண்ட நாட்களாக தமிழ்மணத்தில் எதிர்மறைப் பதிவுகளே அதிகமாக வருகின்றன.
பதிலளிநீக்கு//விஷயம் என்னவென்றே புரிந்துக்கொள்ளாமல் சகட்டுமேனிக்கு எழுதி வந்தவர்களை என்ன சொல்வது? // பிரபல பதிவர்கள் என்று சொல்லுங்கள் :)
வாங்க ராபின்,
பதிலளிநீக்குகடந்த சில நாட்களாக அல்ல நீண்ட நாட்களாக தமிழ்மணத்தில் எதிர்மறைப் பதிவுகளே அதிகமாக வருகின்றன.
//
இத்தகைய பதிவுகளுக்கு கிடைத்துவரும் அபிரிதமான ஆதரவே இதற்கு காரணம்.
இதுவரை ஆக்கபூர்வமான பதிவுக்ளை எழுதி வந்த பதிவர்களூம் கூட இத்தகைய sensationalised பதிவுகளள எழுத துவங்கியுள்ளத்துஆன் வேதனை.
உண்மைதான் சார். இன்றைய ஹிந்துவிலும் ஆஸ்திரேலிய குத்துச் சண்டை வீரர்கள் தங்களுடைய அறைகள் மிகவும் விசாலமாகவும் தூய்மையாகவும் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் உணவருந்தும் கூடம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் இதுவரை அவர்கள் பங்குபெற்ற போட்டி கிராமங்களை விட அதிக வசதியுடன் இருப்பதாகவும் கூறியுள்ளதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
பதிலளிநீக்கு