30 செப்டம்பர் 2005

DRESS CODE IN ENGINEERING COLLEGES

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஒரு புதுமையான ஆணையைப் பிரப்பித்தார் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
அதன்படி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் எல்லா பொறியியல் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்கள் கல்லுரி வளாகத்திற்குள் கைத்தொலைப்பேசிகளை (மொபைல்) வைத்துக்கொள்ளக் கூடாது, பாலுணர்ச்சியைத் தூண்டும் வகையில் மாணவர்கள் (யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என ஒரு விளக்கம் பின்னர் தரப்பட்டது) உடையணிந்து வரக்கூடாது..
மாணவர்களிடையே இவ்வாணையைப் பற்றி இரண்டு வித கருத்துகள் நிலவின. கைத்தொலைப்பேசி விஷயத்தில் பெரும்பாலான மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் ஆணையை ஏற்றுக்கொண்டார்கள்.
ஆனால் ஆடை அணியும் விஷயத்தில் மாணவர்களிடையில் மட்டுமல்லாமல் கல்வி ஆய்வாளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆயினும் பெரிய அளவில் எதிர்ப்புகள், ஆர்ப்பாட்ட அளவில் வெளிப்படாத நிலையில் அதுவும் ஒருவழியாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
ஆனால் இன்றைய ஹிண்டு நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியைப் படிக்கும்போது துனணவேந்தரின் ஆணையை நினைத்துக்கூட பார்க்கவியலாத நிலைக்கு சென்னையிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரி கொண்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது!
அந்த செய்தியின் நகலை மொழிபெயர்க்காமல் தந்துள்ளேன்.
(மாணவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது)
"CHENNAI: Anna University's dress code for students bans T-shirts and jeans. But an engineering college at Thorapakkam near Chennai `improved' upon it and, on Wednesday, pulled up a first-year student for donning a dark-coloured shirt. ..... of MNM Jain Engineering College, who wore a red shirt and black trousers to college, was "detained" for questioning by five faculty members and the Principal. "Six persons in the room kept on asking me whether my dress conformed to the code. How could I say no? When I agreed, I was told to give a written undertaking accepting my `mistake', and agreeing not to breach the code in future," he recalled. pleaded that he be allowed to go, as the college bus was about to leave. It was brushed aside. He took another bus that dropped him near Adyar. Though hailing from Chennai, claimed he did not know the way to his house on St. Mary's Road in Alwarpet. He went round and round and ended up at Royapettah police station. His father filed a complaint with the Royapettah police seeking action against those who "harassed'' his son. The college authorities said it was the third time was "caught breaking the code," which says boys should wear only light-coloured shirts and dark trousers, must shave and keep their hair short. " நன்றி: ஹிந்து
இந்த நிகழ்வில் முக்கியமான மூன்று அம்சங்கள் அடங்கியுள்ளன
1. ஆடை அணிவதில் கட்டுப்பாடு
2. மாணவன் தன் வீட்டையே அடையமுடியாமல் தவிப்பு
3. மாணவனின் தந்தை கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போலீசில் குற்றச்சாட்டு
இதில்
1. ஆடை அணிவதில் கட்டுப்பாடு :
இது தேவையா இல்லையா என்பதை தீர்மானிப்பது ஒரு நம்மால் முடிவு செய்ய இயலாத விஷயம். சம்மந்தப்பட்ட மாணவர்களோ, அல்லது அவர்களுடைய பெற்றோரோ நினைத்தாலும் அத்தனை எளிதில் தீர்வு காண இயலாது. ஆகவே அதை நம்முடைய விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் விட்டு விடுவோம்.
2. மாணவன் தன் வீட்டையே அடைய முடியாமல் தவிப்பு
பத்திரிகைச் செய்தியின்படி சம்மந்தப்பட்ட மாணவர் சென்னையைச் சார்ந்தவர். பள்ளி படிப்பு முழுவதும் சென்னையில் படித்தவராயிருக்க வேண்டும். முதலாம் ஆண்டு படிப்பவராதலால் கண்டிப்பாய் பதினெட்டு வயதைக் கடந்திருக்க வேண்டும். கல்லூரிகள் துவங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இத்தகைய நிலையில் சென்னை அடையாறு வரை வர முடிந்தவர் அங்கிருந்து அருகிலிருந்த ஆல்வார்பேட்டைக்கு செல்ல வழி தெரியாமல் ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்தார் என்பதை நினைக்கும்போது வியப்பாயிருக்கிறது.
அடையாறிலிருந்து வழி தெரியவில்லையென்றாலும் ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு வீட்டை சென்றடையாமல் நிலைத் தடுமாறி நின்ற பத்தொன்பது வயது இளைஞனை என்னவென்று சொல்வது! கையில் பணம் இல்லாவிட்டாலும் வீடு வந்து சேர்ந்த பிறகு ஆட்டோவிற்கு பணத்தை பெற்றோரிடமிருந்து பெற்று தந்திருக்க முடியாதா என்ன?
I feel that there is something seriously wrong in the way they boy has been brought up by his parents!
இது பெற்றோர்களின் வளர்ப்பு முறையிலுள்ள குறையைத்தான் காட்டுகிறது!
3. மாணவனின் தந்தை போலீசில் குற்றப்பதிவு செய்வது!
மாணவனின் தந்தையின் இச்செயல் பிரச்சினைக்கு விடிவு ஏற்படுத்துமா?
இது போன்றதொரு பிரச்சினை கல்லூரி முதல் ஆண்டு படித்துக்கொண்டிருக்குகையில் என்னுடைய இரண்டாவது மகளுக்கும் நடந்தது. அவளுடைய HOD க்கும் அவளுக்கும் ஒரு சிறிய விஷயத்தில் வாக்குவாதமும், அபிப்பிராய வேறுபாடும் ஏற்பட்டது. தன்னை மதிக்கவில்லை என்று HOD யும் நான் ஒரு தவறும் செய்யாதபோது சக மாணவர்கள் முன்பு என்னைத் தகாத வார்த்தைகளால் பேசினார் என என் மகளும் வாதிட விஷயம் கல்லூரி நிர்வாகி வரை சென்றது..
நான் அப்போது சென்னையிலில்லை.. என்னுடைய வங்கியின் பயிற்சி கல்லூரியின் முதல்வராக கொச்சியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.
என் மகள் என்னைத் தொலைபேசியில் அழைத்து நான் உடனே புறப்பட்டு வந்து கல்லூரி முதல்வரை சந்திக்கவில்லையென்றால் தான் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்படுவேன் என்று கூறினாள்.
நடந்த விஷயத்தை முழுவதுமாக அறிந்துக்கொண்டு மகளிடம் மறுநாள் கல்லூரிக்கு சென்று HOD யிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னேன். என் மகள் முதலில் மறுத்தாலும் பிறகு சம்மதித்தாள். நான் கூறியவாறே அவள் செய்தபிறகும் கல்லூரி முதல்வர் பிடிவாதமாக நான் நேரில் வந்து இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்றார்.
நான் அவருடைய தொலைப்பேசி எண்ணை பெற்றுக்கொண்டு என் மகளிடம் நான் அவரிடம் பேசிக்கொள்கிறேன் பிறகு என்ன நடக்கிறதென்று பார்க்கலாம் என்று கூறிவிட்டு கல்லூரி முதல்வரை தொலைப்பேசியில் அழைத்தேன். முதல் மூன்று அழைப்புக்கு பதிலளிக்க மறுத்த முதல்வர் என்னுடைய தொடர்ந்த முயற்சிக்குப் பிறகு பேசினார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என் மகள் சிறு குழந்தையல்ல வென்றும் அவளுடைய நடத்தைக்கு அவளே பொறுப்பேற்றுக்கொள்ளும் வயது அவளுக்கு இருப்பதால் அவளுடைய நடத்தையில் தவறேதும் இருப்பின் அவளைத் தாராளமாய் இடைநீக்கம் செய்யலாம் என்றும் இந்த சிறிய விஷயத்துக்காக என்னால் லீவு எடுத்து வர இயலாது என்று கூறிவிட்டேன்.
முதல்வர் என்ன செய்தாரோ தெரியாது என் மகளை அழைத்து HOD யிடம் மன்னிப்பு கேட்க சொல்லி இனி இப்படி நடக்காலாகாது என்று எச்சரிக்கை செய்து விட்டுவிட்டார். சில மாதங்களுக்குள் HOD க்கும் என் மகளுக்கும் இடையிலிருந்த கசப்புணர்ச்சி சரியாகி அவருடைய பரிந்துரையினாலேயே கடந்த மூன்று வருடங்களாக CSC Students' Associationன் செயலாளராக இருக்கிறாள்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் மாணவர்கள் தங்கள் கல்லூரியில் நடக்கின்ற சிறு சிறு விஷயங்களைத் தாங்களாகவே துணிச்சலுடன் எதிர்கொள்ள தயாராயிருக்க பெற்றோர்கள் பயிலுவிக்க வேண்டும்.
இந்த மாணவன் விஷயத்தில் தந்தையின் தலையீட்டால் மாணவனின் அடுத்த நான்காண்டு கல்லூரி வாழ்க்கை நிச்சயம் பிரச்சினையாகத்தா னிருக்கும். எந்த ஒரு கல்லூரி நிர்வாகமும் தங்களுடைய நடத்தை தவறானதென்று ஒத்துக்கொள்ளாது.. எந்த நேரத்திலும் மாணவனை பழிவாங்க காத்துக்கொண்டேயிருக்கும்..
என் மகளுடைய விஷயத்திலும் இந்த பழிவாங்கல் நடந்தது.. இரண்டாவது செமஸ்டரில் இன்டெர்னல் மதிப்பெண்கள் எல்லா பிரிவிலும் பத்துக்கு கீழ் அளித்து HOD தன்னுடைய அதிகாரத்தைக் காண்பித்தார். அப்போதும் நான் தலையிட மறுத்து என் மகளை பல்கலைக்கழகத் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்து அதற்கு ஈடுகட்டிக்கொள் என்று கூறிவிட்டேன்..
இத்தகைய பழிவாங்கல்கள் நிச்சயம் இந்த மாணவனின் விஷயத்திலும் நடக்கும். ஒவ்வொரு முறையும் பெற்றோர்கள் தலையிட்டு தீர்வு காண்பதென்பது இயலாது. இதை பெற்றோர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
டி.பி.ஆர். ஜோசஃப்

8 கருத்துகள்:

 1. பெயரில்லா11:59 முற்பகல்

  Hi, I liked your blog its my first time here! If you are interested, go see my Tai Chi related site. Its purley for peoples health.

  All the best John

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா12:07 பிற்பகல்

  A Profile in Fug
  Heather and Jessica , local blog queens and friends of LAist, having already conquered VH-1 and trashy gossip rags with their acerbic wit and keen eye for crazy-ugly-uncool get even more blog famous today with ...
  I enjoyed your post, it was quite interesting and insightful. I have a related site that focuses on wipeout depression you may like too. It pretty much covers wipeout depression related stuff.

  Come and check it out if you get time :-)

  Thanks,
  Sonny M.

  பதிலளிநீக்கு
 3. பிள்ளைகளை பெற்றோர் வளர்க்க வேண்டிய முறை குறித்து நன்றாக எழுதி இருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா1:46 முற்பகல்

  நல்ல பதிவு. ஆனால் முதலாமாண்டு மாணவன் இத்தனை நாள் பெற்றோர்களின் hand-holding-இல் இருந்து சட்டென்று மாறி விட முடியாது.
  இந்த சூழலில், தந்தை என்ன செய்திருக்க வேண்டுமென்றால், போலிஸில் தானாக புகார் கொடுக்காமல், புகார் கொடுக்க உதவியிருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. நன்றி பார்த்தா,

  போலீசில் புகார் கொடுத்ததே தவறு என்றுதான் நான் நினைக்கிறேன். சாதாரணமாக முடியவேண்டிய விஷயம் பெரும் சிக்கலாக முடிய வாய்ப்பிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. போலீஸில் புகார் கொடுத்ததே தப்புதான்.கல்லூரியில் ஏற்படும் சிறுசிறு தர்மசங்கடங்களையும் வீட்டுக்கு எடுத்துவந்தால், வழக்காடுதல்தான் திண்மை பெறுமே அன்றி படிப்பு அடுத்தகட்டம் தாண்டுவது கடினம். கல்லூரி அதிகார வர்க்கமும் நமது வீடுகளிலிருந்து செல்பவர்கள்தானே.பகைமையை மனதிலிருந்து நீக்கமுடியாமல் மாணவந்தான் பந்தாடப்படுவான். அந்த தந்தையும், கல்லுரியில் ஒரு விளக்கம் கேட்டிருந்தால் கூட பரவாயில்லை, போலீஸில் புகார் அதிகபட்சம்.

  பதிலளிநீக்கு