27 செப்டம்பர் 2005

இந்தியாவில் தற்கொலைகள் - WHO கணிப்பு

தற்கொலை - பதறவைக்கும் கணிப்பு!

உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள 1997 வருடத்தில் இந்தியாவில் நடந்த தற்கொலை விகிதாசாரத்தைப் பார்க்கும்போது நெஞ்சு பதறுகிறது!

இந்தியாவிலேயே மிக அதிக அளவிலான தற்கொலைகள் தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகாவில்தான் (15 க்கும் மேல்) - அகில இந்திய விகிதம்: 10.
அதற்கு அடுத்தபடியாக 10 - 15 விகிதம் ஆந்திராவில்!
இந்த கணிப்பின்படி 14 வயது முதல் 30 வயது வரை ஆண், பெண்பாலார் இருவரும் ஒரே விகிதாசாரமுறையில் (19.8) தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். அதற்குப் பிறகு ஆண்களே அதிக அளவில்!
30 வயதிலிருந்து 45 வயதுக்குள் சுமார் 20.8 விழுக்காடு ஆண்களும் 14 விழுக்காடு பெண்களும் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்.
இதற்கு விளக்கமான காரணங்கள் கணிப்பில் வெளியிடப் படவில்லை என்றாலும் மாறிவரும் சமுதாய சூழ்நிலையும் அளவுக்கதிகமான் சுகாதாரமில்லாத போட்டிகளும் ,எதிர்பார்ப்புகளுடைய வாழ்க்கை முறையுமே காரணம் எனலாம்.
14 வயதிலிருந்து 30 வயதுக்குள் சுமார் 20 விழுக்காடு பேர் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள் என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும். இன்றைய இளையத் தலைமுறையிடமிருந்து பெற்றோரின் வரைமுறையில்லாத எதிர்பார்ப்புகளின் ஆதிக்கமே இத்தகைய விளைவுகளின் காரணம் எனக் கூறலாம்.
தங்களுடைய வாழ்க்கையில் சாதிக்க இயலாமற்போனவைகளை தங்களுடைய பிள்ளைகள் வழியாக சாதித்துவிடவேண்டுமென்ற பேராசையை பெற்றோர்கள் விட்டுவிட வேண்டும். எல்லோருமே சாதித்துவிட்டால் சாதனை என்ற வார்த்தைக்கே பொருள் இல்லாமல் போய்விடும் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து செயல்படுகின்றவரை இத்தகைய அவலங்கள் தொடரத்தான் செய்யும்.
டி.பி.ஆர். ஜோசஃப்

2 கருத்துகள்:

  1. பெரும்பாலும் பள்ளிச் சிறார்கள் தேர்வில் தவறியதால் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவருகிறது.

    பாடச் சுமைகள் படிப்பை நயம்பட சொல்லித்தருவது போய், பைத்தியம் பிடிக்குமளவுக்கு உருவேற்றப் படுவது நடைமுறையாகிவிட்டது.

    பிறந்தவர்கள் அனைவரும் வாழத்தகுதி உடையவர்களே என்ற மனப்பக்குவம் பெற்றோருக்கு வரவேண்டும். தாம் நினைத்த துறையில் சந்ததியினர் வராதபோது உலகமே அஸ்தமித்துவிடுவதாக குழம்புவதே காரணம்.

    பதிலளிநீக்கு
  2. எத்தனை சரியான வார்த்தை தாணு!

    மிகவும் பிரசித்திப் பெற்ற நிறுவனங்களான இன்ஃபோசிஸ், டிசஎஸ் கூட மனப்பாடம் செய்து மதிப்பெண்களை அதிக அளவில் பெறும் மாணவர்களைத்தான் வளாக தேர்வுகளில் விரும்புகிறார்கள்!

    அவர்கள் நடத்துகின்ற நேர்காணல்களுக்கு மாணவர்களைத் தேர்வு செய்வதே இந்த அடிப்படையில்தானே.

    நான்என்னுடைய வங்கியின் மென்பொருள் தயாரிக்கும் மையத்தின் தலைவராக பணியாற்றுகிறேன்.என் கீழ் சுமார் 40 மென்பொருள் பொறியாளர்கள் உள்ளனர்.என் அனுபவத்தில் பள்ளியிலோ, கல்லூரியிலோ மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கும் பணியாற்றும் திறனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை எப்போதுதான் இந்த நிறுவனங்கள் புரிந்துக்கொள்ளுமோ தெரியவில்லை.

    அன்புடன்,
    டி.பி.ஆர்.

    பதிலளிநீக்கு