24 செப்டம்பர் 2005

பெண்களே அனிமீக்காக இருக்கின்றீர்களா?

அன்புள்ள ...

பெண்களே அனிமீக்காக இருக்கின்றீர்களா?

சமீபத்தில் நடைபெற்ற கருத்து கணிப்பில் கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள நேரமின்மைக் காரணமாக காலை சிற்றுண்டியை புறக்கணிக்கிறார்கள் என்று அறியப் பட்டிருக்கின்றது!

கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவிகளில் பெரும்பாலோர் காலையில் உண்ண முடியாமல்போன உணவிற்கு ஈடு செய்யும் முகமாக மதிய வேளையில் கணமான உணவை - அதிலும் பெரும்பாலானோர் சாட் ·புட் மற்றும் ·பாஸ்ட் ·புட் எனப்படும் பிஸ்ஸா, ஹாம்பர்கர், சாண்ட்விச் - உண்கிறார்கள் என்று அறியப்பட்டுள்ளது.

அலுவலகம் செல்லும் பெண்களோ அதிலும் மோசம். எளிதில் செய்யக்கூடிய தயிர் சாதம், புளி சாதம், சிப்ஸ் போன்றவைகளை உண்டே மதிய உணவை முடித்துவிடுகிறார்கள்!

அலுவலக வேலைப் பளுவிற்கிடையில் அடிக்கடி காபி குடிப்பது தென்னிந்திய பெண்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது என்றும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பெரும்பாலோனோர், படித்தவர்கள் உட்பட, அறிந்திருப்பதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது!

இதைப் பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இத்தகைய உணவு முறை பெரும்பாலோரை, முக்கியமாக குடும்பத்தலைவிகளை, அனிமீக்காக மாற்றிவிடுகிறதென்றும் வயதான காலத்தில் ஏற்படும் எலும்பில் பலவீனம், ஆர்தரைடீஸ் எனப்படும் மூட்டு வலி போன்ற நோய்களுக்கும் வித்திடுகிறது.

ஆகவே பெண்களே!

எத்தனை வேலையிருந்தாலும் காலை உணவை புறக்கணிப்பதை இனியாவது நிறுத்துங்கள்.

இரவு நாம் உண்ணும் உணவு அதிக பட்சம் நான்கு மணியளவில் முழுவதுமாய் சீரணித்துவிடுவதால் காலை உணவு மிக அத்தியாவசியமாகிறது!

முதல் நாள் ஒன்பது மணிக்கு உண்டுவிட்டு அடுத்த நாள் பகல் ஒரு மணி வரை வெறும் வயிரோடு இருப்பது மிகவும் ஆபத்து என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்,
டி.பி.ஆர்


3 கருத்துகள்:

  1. காலை உணவை தவிர்ப்பது மூளை செயல்பாட்டை பாதிக்கும் என்றும் நான் கேளிவிப்பட்டு இருக்கிறேன். இது அனைவருக்கும் பொருந்தும் பெண்கள் மட்டும் அன்று ஆண்களுக்கும்தான்.

    பதிலளிநீக்கு
  2. வருக நலம் தருக

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள,

    நீங்கள் சொல்வது சரிதான். காலை உணவு ஆண்களுக்கும் அத்தியாவசியமானதுதான். ஆனால் ரத்தசோகை (அனிமிக்) பெண்களைத்தான் மிக அதிக அளவில் பாதிக்கின்றது, முக்கியமாக கருத்தரித்த பெண்களை, என்று மருத்துவ ஆய்வில் கண்டிருக்கிறார்கள்.

    டிபிஆர்

    பதிலளிநீக்கு