24 செப்டம்பர் 2005

இன்று புதிதாய் பிறந்தேன்!

நண்பனே, நண்பியே,

முதன் முதலாய் ஒரு புதிய உலகத்தில் பிரவேசித்த ஒரு புத்துணர்ச்சி! ஒரு சந்தோஷமான சந்தோஷம்!!

நண்பர்களே, என் தாய்மொழி தமிழில் எழுதி அதை உலகெங்கும் என் மொழி பேசும் உங்களுக்கு என் உலகத்தை, அதில் உள்ளவற்றை திறந்து காண்பிக்க எனக்கு ஒரு வாய்ப்பு!

இதை செயல்படுத்தத்தான் எத்தனை பாடு! உலகிலுள்ள எல்லா இணைய தளங்களையும் சுற்றித் திரிந்து, பல நூறு நண்பர்களின் தளங்களில் தேடி, அப்பப்பா, ஒரு இமாலய சாதனையை நடத்தி முடித்த நிறைவு இன்று என் மனதில்!

ஆம், நண்பர்களே! இனி, என் உலகத்தில் நடப்பதையெல்லாம் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள முடியுமே!

அத்துடன் என்னுடைய சிந்தனைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் அறிந்துக்கொள்ள முடியுமே! 

இன்று மீண்டும் புதிதாய் பிறந்துவிட்டதுபோன்ற ஒரு சந்தோஷம்..!

இனி என்ன! எழுத வேண்டியதுதான்!

தினமும், இல்லாவிட்டால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சந்திப்போம்..

அன்புடன், 
டி.பி.ர். ஜோசப்

5 கருத்துகள்:

 1. 24-9-07 அன்று தமிழ் வலைப்பதிவுலகத்தில் மூன்றாம் ஆண்டினைத் துவக்கும் தங்களுக்கு எங்கள் அன்பு கனிந்த வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. அட! எனக்கே மறந்து போச்சுங்க பாலராஜன்.

  மிக்க நன்றி :-))

  பதிலளிநீக்கு
 3. அட நீங்களும் செப்டம்பர் மாதத்தில் தான் முதல் பதிவு எழுதியிருக்கீங்க! என்ன நான் ஒரு நாலு வருஷம் லேட்!

  பதிலளிநீக்கு
 4. 2005-லேயே வலைப்பூ தொடங்கி விட்டீர்களே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி! இடையில் சில வருடங்கள் பதிவுலகிலிருந்து விலகி இருந்தென்...

   இதை தேடிப் பிடித்து கருத்துரை இட்டதற்கு மிக்க நன்றி ஜி!

   நீக்கு