26 செப்டம்பர் 2005

பேச்சுத்திறன்

நன்பர்களே,

போட்டிகள் நிறைந்த இன்ன்றைய உலகில் பேச்சுத்திறமை ஒரு இன்றியமையாத தேவையாகிறது.


முக்கியமாக, நாம் பணிபுரியும் அலுவலகங்களில் நம்மைப் பற்றி, நம்முடைய திறமைகளைப் பற்றி நம்முடைய அதிகாரிகளோ, அல்லது நம்முடைய சக ஊழியர்களோ அறிந்துக்கொள்ள வேண்டுமெனில் பேச்சுத்திறமை மிக, மிக அவசியம்.


பேச்சுத்திறன் என்பது மேடைப் பேச்சல்ல. மாறாக, மற்றவர்களுடன் பேசும் திறன். ஆங்கிலத்தி கூறவேண்டுமென்றால் (Communication Skill).


பேச்சுத்திறமை எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள பெரிதும் உதவிபுரியும். ஒரே அடிப்படைப் படிப்பும், திறமையுமுள்ள மற்றும் ஒரே நாளில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களுள்ள ஒரு குழுவிலிருந்து வெகு சிலர் மட்டும் கிடு கிடுவென பதவி உயர்வோ அல்லது ஊக்கத்தொகையோ பெறுகிறார்களென்றால் அது அவர்களைத் தனியே எடுத்துக்காட்ட உதவிய பேச்சுத்திறனே.


ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் சிலருக்கு மட்டும் காம்பஸ் ரெக்ரூட்மன்டில் வேலை கிடைப்பதும் பேச்சுத்திறனால் தான்.

இவ்வருட சென்னை அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்ட நேர்காணலில் 50:1 என்ற விகிதத்தில் மட்டுமே தெரிந்தெடுக்கப்பட்டனர் என்ற செய்தி நம்முடைய மாணவர் சமுதாயம் பேச்சுத்திறனில் எத்தனை பின்தங்கியிருக்கின்றனர் என்பதையே காட்டுகிறது.


இந்தியாவின் நம்.1 மென்பொருள் நிறுவனம் என்று பெயர் பெற்ற டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரியின் கூற்றுப்படி "A student's employability is decided primariy on his ability to communicate with the recruiting authority."

ஆகவே பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்கள் இத்திறனை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்தல் வேண்டும்.

அன்புடன்,

டி.பி.ஆர்.

1 கருத்து:

  1. ///"ஆகவே பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்கள் இத்திறனை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்தல் வேண்டும்.அன்புடன்,டி.பி.ஆர்.///
    இதில் பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம்
    பிள்ளைகளைக் க்ட்டிப்போடாமல் வளர்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு