29 செப்டம்பர் 2005

எங்கே போகிறது இந்த தலைமுறை?

சுத்தமாய் புரியவில்லை எனக்கு!

ஒருவேளை, வயசாகிவிட்டதோ!

நான் கோவலனாய்த்தான் இருப்பேன் நீ கண்ணகியாய் இரு என்று ஆணும், ஏன் நீ கோவலனாய் மாறும்போது நானும் மாறக்கூடாதா, என்று பெண்ணும்..

என்ன வாக்குவாதம் இது?

கேட்டால் மேலைநாட்டில் பெண்களுக்கு இந்த சுதந்திரம் இருக்கிறதே, ஏன் இங்கு மட்டும் இந்த பாசாங்குத்தனம் ( hypocrisy)? என்ற கேள்வி.

இதற்கு என்ன பதில் சொல்லமுடியும்? தெரியவில்லை.

என்னுடைய பணியிலே இதுவரை இந்தியாவில் ஒன்பது மாநிலங்களில் பணிபுரிந்திருக்கிறேன்.. சுமார் 23 வருடங்கள்.. பெரும்பாலும் மனைவி, மற்றும் குழந்தைகள் இல்லாமல்..

பலதரப்பட்ட மக்கள், கலாச்சாரங்கள்..

முக்கியமாய் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் எனப்படுகிற மும்பையில் ஏழு வருடங்கள்..

பொருளாதரத்திலும் சரி, வாழ்க்கை முறையிலும் சரி தமிழகத்திலிருந்து வெகுவாய் மாறுபட்ட நகரம்..

இருபத்துமூன்று வருட வனவாசத்திற்குப் பிறகு இப்போதுதான், கடந்த ஒரு வருடங்களாக, சென்னையில் மனைவி, மகள்களோடு சந்தோஷமாய்...

ஓய்வு நேரங்களில் தமிழில் எழுதிப் பார்ப்போமே என்று விளையாட்டாய் துவங்கியது இதோ இளைஞர்களோடு இளைஞனாய் தமிழ்மணம் வலைப்பூக்களின் குழுவிலே பதிவு செய்துக்கொண்டு உங்களைப் போன்ற நண்பர்களோடு உரையாடுவதில் ஒரு தனி இன்பம்..

இரவு நேரங்களில் தமிழ்மன்றம் தளத்தில் பதிவாகியுள்ள பதிவுகளை உலாவருவது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு..

நல்ல இலக்கிய சிந்தனைகளை தமிழில் நயத்தோடு எழுத இன்றைய இளைஞர்களுக்கு (ஆனெண்ண, பெண்ணென்ன எல்லோரும் இளைஞர்கள்தானே)எத்தனை இலகுவாய் வருகிறது!

ஆனால் கடந்த சில நாட்களாக, முக்கியமாய் ஒரு நடிகையின் சர்ச்சைக்குரிய பேட்டிக்குப்பிறகு, நம்மில் சிலர் தடம் புரண்டு போகிறோமோ, முக்கியமாய் இளம் பெணகள், என்ற ஐயப்பாடு ..

அதைத்தான் 'புரியவில்லை எனக்கு' என்று மேலே ஆரம்பித்தேன்..

பெண்ணியம் என்கின்ற வாக்கு இதையா உணர்த்துகிறது?

பத்து, பதினைந்து கேள்விகளைக் கேட்டுவிட்டு இதில் உனக்கு அதிக 'ஆம்' என்று வந்தால்தான் நீ பெருந்தன்மையான ஆண், இல்லையென்றால்..

அதை ஆதரித்து பலரும், எதிர்த்து சிலரும்...

எங்கே செல்கிறது இந்தத் தலைமுறை?


உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இன்றைய நிஜவாழ்க்கையிலே பெரும்பாலான குடும்பங்களில் (வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களைத் தவிர) பெண்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், முக்கியமாய் நடுத்தரக் குடும்பங்களில்..

எனது தகப்பனார் மற்றும் தாய்வீட்டு குடும்பங்கள் மிகப்பெரிய்வை..

எனக்கு பத்துக்கும் மேற்பட்ட மாமன்மார்களும், பெரியம்மா, சித்தி, சித்தப்பா என.

என் மனைவி வீடும் அப்படித்தான்..


வெட்கத்தை விட்டு சொல்கிறேன்,என் குடும்பம் உட்பட எல்லா குடும்பங்களிலும் மனைவி வைத்ததுதான் சட்டம்!

நான் மேலே சொன்ன பதிவில் கேட்டிருந்த பதினைந்து கேள்விகளில் ஒன்று உங்கள் மனைவி உங்களிடம் அனுமதி பெறாமல் அவரின் பெற்றோருக்கு அல்லது யாருக்காவது பணம் அனுப்பியதுண்டா?

எந்த உலகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள்?


இப்போதெல்லாம் மனைவிக்குத் தெரியாமல் கணவன் தன் பெற்றோருக்கு பணம் அனுப்புவதுதான் கடினம்!


நடைமுறை விதிகளுக்கு நேர் மாறாக சிந்திப்பதுதான் பெண்ணியம் என்றால் I simply do not know what to say!!


பெண்களைப் போன்று நீங்களும் தாலி அணிந்துக் கொள்வீர்களா என இனியொரு கேள்வி..


பொதிகையில் தமிழில் செய்திகள் வாசிக்கும் ஒரு பிரபல பெண் இப்போதெல்லாம் தாலியே அணிவதில்லையாம். படுக்கும்போது குத்துகிறது என்று கழற்றி வைத்தார்களாம் பிறகு நாளடைவில் தாலி அணிவதையே நிறுத்திவிட்டார்களாம்..

பகிரங்கமாய் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி இது..

தமிழகப் பெண்கள் அசுரவேகத்தில் கலாச்சார மாற்றங்களைக் கொண்டு வருகின்ற இவ்வேளையில் அயல் நாட்டில் வசித்து வரும் இளம் பெண்கள் இப்படியெல்லாம் கேட்டுக்கொண்டு...

நல்ல இலக்கிய சிந்தனைகளையும், கருத்துக்களையும், உலகிலுள்ள நாடுகளில் நடைபெறும் விஞ்ஞான மற்றும் பொருளாதார வளர்ச்சிகளைக் குறித்து எழுதுங்கள்..

அதை விட்டுவிட்டு...

அன்புடன்
டி.பி.ஆர். ஜோசஃப்

8 கருத்துகள்:

 1. அயல் நாட்டில் வாழும் 'இளம் பெண்கள்' என்பதை 'இளைஞர்கள்' என திருத்தம் செய்கிறேன்.

  ஆண்கள் பெண் புனைப்பெயரில் முற்போக்கு சிந்தனைகளை அள்ளித் தெளிப்பதில் எனக்கு உடன்பாடில்லை..

  சம்மந்தப்பட்டவருக்கு புரியும் என நினைக்கிறேன்..

  முகமூடியைக் கழற்றிவிட்டு எழுதுங்கள்..

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா12:17 பிற்பகல்

  //வெட்கத்தை விட்டு சொல்கிறேன்,என் குடும்பம் உட்பட எல்லா குடும்பங்களிலும் மனைவி வைத்ததுதான் சட்டம்!
  //
  மனைவி வைத்தது தான் சட்டம் என்பதில் வெட்கம் என்ன? கணவனின் சட்டம் அங்கு இல்லை என்பதா?

  அல்லது இரண்டுபேருமே சேர்ந்து முடிவெடுப்பதில்லை எனச் சொல்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
 3. நேற்றே என்னுடைய பதிவில் உங்களுக்கு ஒரு விளக்க பின்னூட்டமிடவேண்டுமென்று எண்ணினேன், சற்று சோம்பல்பட்டுவிட்டேன்(அது குழப்பமேற்படுத்திவிட்டது), பெண் பெயரில் எழுதுவது ஒரு அடையாளத்திற்கு தான், இங்கே வலையுலகில் பெரும்பாலும் அனைவரும் நான் யார் என அறிந்தவர்களே என் சொந்த பெயர் முதல் நான் எங்கிருக்கின்றேன் என்பது வரை பெரும்பாலானோர் அறிந்ததே, பல பதிவர்களோடு நான் நேரிலும் உரையாடியுள்ளேன்...என் பெயரினால் பால் குழப்பம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 4. வெட்கத்தை விட்டு சொல்கிறேன்,என் குடும்பம் உட்பட எல்லா குடும்பங்களிலும் மனைவி வைத்ததுதான் சட்டம்!
  //
  மனைவி வைத்தது தான் சட்டம் என்பதில் வெட்கம் என்ன? கணவனின் சட்டம் அங்கு இல்லை என்பதா?

  அல்லது இரண்டுபேருமே சேர்ந்து முடிவெடுப்பதில்லை எனச் சொல்கிறீர்களா? //

  இது மனைவி சட்டம் கணவன் சட்டம் என்று குடும்பத்தில் பிரித்து பார்ப்பதுஎன்பது இயலாது.

  இருவரும் சேர்ந்து முடிவெடுப்பது முடியும். இருவரும் முடிவைப்பற்றி ஆலோசனை செய்ய தயாராயிருந்தால்.. ஆனால் அந்த ஆலோசனையே வாக்குவாதமாய் மாறி குடும்ப அமைதியைப் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படுகிற போது பெரும்பாலான நடுத்தர வர்க்க குடும்பங்களில் விட்டுக்கொடுப்பது ஆண்களாய்தான் இருக்கும்.

  அப்படியில்லை நான் வைத்ததுதான் என் குடும்பத்தில் சட்டம் என்றோ அல்லது இருவரும் கலந்தாசித்துத்தான் முடிவெடுக்கிறோம் என்றா நான் ஒரு வேஷதாரி..

  பதிலளிநீக்கு
 5. >வெட்கத்தை விட்டு சொல்கிறேன்<

  இன்னா சார்! இப்புடி உண்மை போட்டு உடைச்சிட்டீங்களே :))

  பதிலளிநீக்கு
 6. உண்மையை ஒத்துக்கொள்ளவும் அறிக்கையிடவும் ஒரு தைரியம் வேண்டுமே!

  சில உண்மைகள் சில, பலருடைய கண்ணோட்டத்தை மாற்ற பயன்படும்என்றால் அதை போட்டு உடைப்பதில் தவறேதும் இல்லை..

  பதிலளிநீக்கு
 7. in blog anything can be discussed.ethaRkkaaka ithai mattumee peesuvoom ennum kattup paadu?

  பதிலளிநீக்கு
 8. Yes Manikandan,

  You are right. Anything can be discussed.

  I am not against that. My anxiety is not against the subject. But distortions and moving away from realities.

  tbr

  பதிலளிநீக்கு