சமீபத்தில் காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து சிறப்பு சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேவங்களாக பிரிக்கப்பட்டதையொட்டி நாடு முழுவதும் பலவகையான விமர்சனங்கள் எழுந்தன.
நாட்டின் பிரதான எதிர் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் இதை முழுமூச்சுடன் எதிர்த்து வந்தாலும் அவை ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஆளும் பாஜக அல்லாது ஆட்சியாளர்களும் இதை மறைமுகமாக ஆதரித்ததால்தான் இந்த மசோதா மாநிலங்கள் அவையிலும் மிக எளிதாக நிறைவேற்றப்பட்டது.
எதற்காக இந்த அவசர முடிவு என்கின்றனர் பலரும்.
ஆனால் உண்மையில் இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்பதை இந்த முடிவின் பின்னணியை சற்று ஆராய்ந்தால் தெரியும் என்று நான் கருதியதன் விளைவே இந்த பதிவு.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்த சிற்றரசுகள் இருந்தனவாம். அவற்றை அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் அவருக்கு உறுதுணையாக அப்போது உள்துறையில் உயர் அதிகாரியாக இருந்த கேரளத்தைச் சார்ந்த திரு வி.பி.மேனன் ஆகியோரின் விடா முயற்சியாலும் இந்த சிற்றரசுகள் இந்தியாவுடன் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டன. இவற்றுள் இவ்விருவரின் எவ்வித முயற்சிகளும் பிடிகொடுக்காமல் இருந்துவந்தவை ஹைதராபாத் மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசுகள்.
இவ்விரண்டு அரசர்களையும் தன்னுடைய புத்திக் கூர்மையாலும் நாவண்மையாலும் வழிக்கு கொண்டு வந்தவர் திரு வி.பி. மேனன் அவர்கள்தான் என்கிறது வரலாறு. பட்டேலுக்கு நூறடியில் உருவச் சிலை வைத்து போற்றும் பாஜக அவருக்கு வலதுகரமாக இருந்து இயங்கிய விபி மேனனை முற்றிலுமாக மறந்து போனது வியாப்பாக உள்ளது.
ஜம்மு காஷ்மீர் அரசின் அப்போதைய மன்னராக இருந்த ஹிரிசிங்கிற்கு இந்தியாவுடனோ பாக்கிஸ்தானுடனோ இணைவதில் தயக்கம் இருந்தது. ஆனால் இந்தியா சுநந்திரம் அடைந்த போது காஷ்மீரை தன் வசம் எடுத்துக்கொள்ள முடியாத ஏமாற்றத்தில் இருந்த பாக்கிஸ்தான் காஷ்மீரிலுள்ள பஷ்த்தூன் இனத்தவர்களை தூண்டிவிட்டு காஷ்மீரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதனைக் கண்ட மன்னர் இனிமேலும் தனித்து ஆட்சி நடத்த முடியாது என்று அஞ்சி இந்தியாவுடன் இணைவது என முடிவு செய்தார். ஆனால் இதில் பல நிபந்தனைகளை மன்னர் முன் வைத்ததால் அவருடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மனமில்லாதிருந்த நேரு அவர்கள் இணைப்பில் தீவிரம் காட்டவில்லை. இந்த இடைபட்ட காலத்தில் பஷ்த்தூன் மக்களுடைய தாக்குதலில் காஷ்மீரின் வடக்கு மற்ரும் மேற்கு பகுதிகளை பாக்கிஸ்தான் கைப்பற்றியது. இவை இப்போதும் பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காஷ்மீராக கருதப்படுகிறது.
வழிக்கு வராமல் முரண்டுபிடித்த மன்னரை சமாதானப்படுத்தி இணைப்பு ஆவணத்தில் அவருடைய கையொப்பத்தை பெற இந்திய அரசு திரு வி.பி. மேனனை அனுப்பி வைத்தது. அவருடைய தொடர் முயற்சியின் பலனாக 1947 வருடம் அக்டோபர் மாதத்தில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.
ஆனால் மன்னரின் முக்கிய நிபந்தனைகளான தங்களுக்கு என்று தனி கொடி, நாடாளுமன்றம், தனி குடியுரிமை போன்ற நிபந்தனைகளை இந்திய அரசால் நிராகரிக்க முடியவில்லை. இத்துடன் வெளியுறவு, இராணுவம் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றை தவிர மற்ற அனைத்தையும் முடிவு செய்துக்கொள்ளும் உரிமையும் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு அளிக்கப்பட்டது. இந்த சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்க வசதியாகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 370 வது பிரிவு சேர்க்கப்பட்டது. இதன்
படி இம்மூன்று துறைகளைத் தவிர மற்ற அனைத்து துறைகளையும் பாதிக்கும் இந்திய அரசின் எந்த சட்டட்மானாலும் அவை ஜம்மு காஷ்மீர் அரசின் ஒப்புதலுடன் மட்டுமே இயற்றப்பட வேண்டும். இல்லையெனில் இத்தகைய சட்டங்கள் எதுவும் காஷ்மீர் மக்களை கட்டுப்படுத்தாது/ மேலும் காஷ்மீரில் அப்போது நிரந்தரமாக வசித்து வந்த மக்களே அந்நாட்டின் நிரந்தர குடிமக்களாக கருதப்பட்டனர். அவர்களுக்கு மட்டுமே அந்த மாநிலத்தில் அசையா சொத்துக்களை வாங்கவோ விற்கவோ முடியும் என்ற சலுகையும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. காஷ்மீர் பெண்களை மணக்கும் வெளி மாநிலத்து கணவர்களுக்குக் கூட இந்த உரிமை மறுக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மன்னரின் இத்தனை நிபந்தனைகளையும் விருப்பமில்லாவிட்டாலும் அப்போதைய பிரதமாரக இருந்த நேரு ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் காஷ்மீரை பாக்கிஸ்தானிடம் இழந்துவிக் கூடாது என்பதுதான்.
இந்த சிறப்புச் சலுகைகளை 1951ம் ஆண்டு துவக்கப்பட்ட பாரதீய ஜனசங்க கட்சி துவக்க முதலே எதிர்த்து வந்தது. இமயம் முதல் குமரிவரை இந்தியா ஒரே நாடு என்பது அக்கட்சியின் தாரக மந்திரமாக இருந்தது. ஆகவேதான் காஷ்மீர் மக்களுக்கு இதுவரை அளித்து வந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டபோது ஜனசங்க கட்சியின் நிறுவனர் (founder)ஷ்யாம பிரசாத் முகர்ஜியின் கனவு நனவானது என்று மறைந்த தலைவர் பெயரில் இன்றும்
இயங்கிவரும் ஆய்வு மைய இயக்குன அனிர்பன் கங்குலி கூறியதாக செய்திகளில் பார்த்தோம். பாரதிய ஜனசங்கத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியாக பெயரளவில் மட்டும் மருவிய பாஜக தங்களுடைய நெடுங்கால கனவுத் திட்டத்தை இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கும் காலத்திற்காகவே காத்திருந்தது. தற்போது அந்த கட்சிக்கு மாநிலங்களவையில் இதை நிறைவேற்ற போதிய பெரும்பான்மை இல்லாவிடினும் ஒடிசா., தில்லி ,ஆந்திரா, தெலுங்கான மற்றும் நம்முடைய தமிழகம் ஆகிய மாநிலங்களைச் சார்ந்த உதிரி கட்சிகளின் துணையுடன் அதை மிக எளிதாக நிறைவேற்றி சுமார் எழுபதாண்டுகால போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ளது.
இதுதான் உண்மை.
இதற்கு இமயம் முதல் குமரி வரை இந்தியா ஒரே நாடுதான் ஆகவே இதில் எந்த மாநில மக்களுக்கும் தனி அரசாங்கம் தனி கொடி, குடியுரிமை போன்ற
சலுகைகள் தேவையற்றவை என்பது மட்டுமே இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுக்கு பிண்ணனியாக இருக்க வாய்ப்பில்லை. காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளில் மிக முக்கியமாக கருதப்படுவது வெளிமாநிலத்தவர்கள் அங்கு அசையா சொத்துக்களை வாங்க முடியாது என்பதும் இந்த முடிவின் ஒரு முக்கிய காரணமாக எடுத்துரைக்கப்படுகிறது.
சமீபத்திய பண மதிப்பிழப்பு முடிவு அமலுக்கு வருவதற்கு முந்தைய ஒரு சில மாதங்களில் பாஜக வட இந்தியாவில் பல விலை மதிப்பு மிக்க அசையா
சொத்துக்களை பாஜக வாங்கி குவித்ததாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியானதை படித்திருப்பீர்கள். அது போன்றதொரு நிகழ்வுகள் அடுத்த சில
ஆண்டுகளில் காஷ்மீரில் நடக்க வாய்ப்புள்ளது. கோடிக்கணக்கில் பணத்தை சேமித்து வைத்திருக்கும் பாஜக காஷ்மீர் மாநிலத்தில் தங்கள் விருப்பப்படி அசையா சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போவது நிச்சயம். நில அளவை மற்றும் நில மாற்றம் (transfer of property) மாநில ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளபடியால் இவர்கள் நினைப்பதை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். இங்கு அம்மையார் காலத்தில் அவரின் பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் தமிழக சொத்துக்களை அடுமாட்டு விலைக்கு வாங்கினார்களே அதுபோல பாஜகவின் இரட்டை தலைவர்களின் பெயரை பயன்படுத்தி தற்போது ஆளுங்கட்சியினரின் ஆதரவைப் பெற்றுள்ள பல அடாவடி கார்ப்பரே நிறுவன முதலாளிகளும் காஷ்மீர் மாநிலத்தின் பெரும்பகுதியை வாங்கி குவிக்க வாய்ப்புண்டு என்றாலும் மிகையாகாது.
அதுமட்டுமல்ல அந்த மாநிலத்தில் கொட்டிக் கிடக்கும் கனிமவளங்களை இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை ஏவிவிட்டு கொள்ளையடிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். கீழ் காணும் வரைபடத்தை பார்த்தாலே இதன் தீவிரம் உங்களுக்கு புரியும்.
************

வரைபடத்தில் உள்ள விடயங்கள் யோசிக்க வைக்கின்றது ஐயா.
பதிலளிநீக்குஎல்லாவற்றுக்கும் பின்னணியில் ஏதாவது விசயம் இருக்கத்தான் செய்கிறது.
இது தான் பாஜக வின் முடிவுக்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணம். தாமிரம், தங்கம்... அத்தனையும் காசு...இலட்சம் கோடிகள்!
பதிலளிநீக்குநான் எதிர்பார்த்ததற்கும் முன்னதாகவே காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மாநாடு விரைவில் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது !
பதிலளிநீக்குஅரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்...
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள்.
நீக்குஇந்திய மாநிலங்கள் எல்லாம் ஒரு போல் இயங்க வேண்டுமென்றல்பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரும் இதில் சேர வேண்டும் அல்லவா அதைக் கைப்பற்றும் நோக்கமிருக்கும்போல தெரிகிறது அதை நோக்கியே காய்கள் நகர்த்தப்படுகிறதா
பதிலளிநீக்குஅது அத்தனை எளிதான காரியமல்ல என்பது இப்போதைய ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.
நீக்கு// ஆளுங்கட்சியினரின் ஆதரவைப் பெற்றுள்ள பல அடாவடி கார்ப்பரே நிறுவன முதலாளிகளும் காஷ்மீர் மாநிலத்தின் பெரும்பகுதியை வாங்கி குவிக்க வாய்ப்புண்டு என்றாலும் மிகையாகாது.
பதிலளிநீக்குஅதுமட்டுமல்ல அந்த மாநிலத்தில் கொட்டிக் கிடக்கும் கனிமவளங்களை இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை ஏவிவிட்டு கொள்ளையடிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.//
சரியான மதிப்பீடு.
‘தூண்டில்காரனுக்கு மிதப்பு மேல் கண்’ என்பது போல இவர்களுக்கு அசையா மற்றும் அசையும் சொத்துகளை கைப்பற்றுவதுதான் குறிக்கோள்.
கடவுள்தான் நாட்டைக் காப்பாற்றவேண்டும்.
நேற்றைய செய்தியில் காஷ்மீரில் முதலீடு செய்ய அம்பானி சகோதரர்கள் உள்பட பல முன்னனி நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக வந்தது. ஏன் காட்டமாட்டார்கள்? இதை எதிர்பார்த்துதானே பாஜகவுக்கு தேர்தல் நேரத்தில் கோடி கோடியாக கொட்டி கொடுத்தார்கள்?
பதிலளிநீக்குநாம் கொடுத்த வாக்குறுதிகள், அவைகளைக் கடைசி வரை நிறைவேற்றாமை போன்றவைகளைக் குறிப்பிட விட்டு விட்டீர்களே. அது தான் காங் அரசின் தவறுகளைசு சுட்டிக் காண்பிக்கும்.
பதிலளிநீக்குஇராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு தவிர மற்ற அனைத்திலும் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமை மற்றும் அதிகாரமும் மாநில அரசிடம் தான் இருந்தது. ஆகவே அங்கு தொழில் வளர்ச்சி அடையவில்லை என்றால் அதற்கு அவர்களே பொறுப்பு. அங்கு தீவிரவாதிகளை தவறிவிட்டது தான் காங்கிரஸ் செய்த தவறு.
பதிலளிநீக்குஆனால் பாஜக வின் முடிவுக்கு தீவிரவாதம் மட்டுமே காரணம் அல்ல. ஏனெனில் துவக்கத்தில் இருந்தே ஜனசங்கம் கட்சியும் அதனை தொடர்ந்து பாஜக வும் எதிர்த்து வந்துள்ளது. இதன் பின்னணியில் என்ன ஒளிந்துள்ளது என்பதைத்தான் என்னுடைய பதிவில் காட்டிதிருந்தேன்.
தீவிரவாதிகளை வளரவிட்டது தான் காங்கிரஸ் செய்த தவறு.
பதிலளிநீக்கு