05 ஆகஸ்ட் 2019

புதிய கல்விக் கொள்கை (நிறைவுப் பகுதி)

பொது (அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்) மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்துமே இக் கொள்கை வரைவில் குறிப்பிட்டப்பட்டுள்ள அனைத்து
ஒழுங்கு முறைகளுக்கும் கட்டுபட்டே இயங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அப்படியானால் நாட்டின் மிகப் பெரிய பொது (மத்திய அரசின்  மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குவதால் இதுவும் பொது
பள்ளியாக கருதப்படுகிறது)  பள்ளியான CBSE பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறாத தனியார் பள்ளிகளான ICSE போன்ற பள்ளிகளும் இந்த கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் படுமா என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இந்த CBSC பள்ளிகளில் மட்டும் எதற்காக பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன என்று சிலர் கேட்கலாம். இந்த பள்ளிகள் மத்திய அரசு
அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் வாரிசுகளுக்காகவே துவக்கப்பட்ட பள்ளிகளாகும். இத்தகைய பணியாளர்கள் குறிப்பாக அதிகாரிகள் நாட்டின் எந்த பகுதிக்கும் மாற்றப்படலாம் என்பதாலும் பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் தாய் மொழியாக கருதப்படும் மொழிகள் கட்டாய பாடமாக இருப்பதாலும் இவர்களுடைய வாரிசுகளுக்கு படிப்பில் சிரமம் ஏதும் இல்லாமல் இருக்கவே இத்தகைய பள்ளிகள் அனைத்து மாநிலங்களிலும் துவங்கப்பட்டன.

ஆனால் பல மாநிலங்களிலும் நடத்தப்பட்டும் வரும் அரசு நிதி உதவி பெறாத பல தனியார் பள்ளிகளும் இவர்களுடைய பாடத்திட்டத்தையே பின்பற்றுவதால் இத்தகைய ஆங்கில வழிக் கல்வி நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பரவி கிடக்கின்றன. தமிழகத்திலும் சமச்சீர்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் பல தனியார் பள்ளிகள் CBSC பாடத்திட்டத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றன. ஆகவே இத்தகைய பள்ளிகள் புதிய கல்விக் கொள்கையால் பாதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதே சமயம் அரசிடமிருந்து நிதியுதவி பெறாத (புதிய)தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அத்தகைய பள்ளிகள் அரசின் ‘ஒழுங்குமுறை சுமைகளிலிருந்து’ (Regulatory burdens) விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கொள்கை வரைவில் குரிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு என்ன பொருள்?

கொள்கை வரைவில் இதுவரை நாம் கண்ட அனைத்து ஒழுங்குமுறைகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும்தானா?

இவை அனைத்தும் அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கு மட்டும் சுமைகளாக தெரிகின்றனவா என்ற கேள்வி எழுகிறதல்லவா?

அதாவது எதிர் வரும் காலங்களில் அரசின் ஒழுங்குமுறை அனைத்தும் இனி துவங்கவிருக்கும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது போலுள்ளது.

எதை நோக்கி பயணிக்க இந்த விதிவிலக்கு? இத்தகைய தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டிலுள்ள மாணவர்களை முதல் தரம்,. இரண்டாம் தரம் என்று பிரிக்கத்தானோ?

புதிதாக துவங்கப்படும் தனியார் பள்ளிகளில் மும்மொழி கொள்கை என்கிற எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் தற்போது CBSC போன்ற பள்ளிகளில்
நடைமுறையிலுள்ள ஆங்கில வழி கல்வியே தொடரும் என்பதால் அத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அறிவாற்றலிலும் திறனிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளீலும் பயிலும் மாணவர்களை விட சிறந்தவர்களாக திகழப்போவது நிச்சயம்.

நாட்டில் நடைபெறவிருக்கும் அனைத்து நுழைவு தேர்வுகளும் இத்தகைய அரசு உதவி பெறாத தன்னார்வ நிறுவனங்களால் நடத்தப்படும் பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே நடத்தப்படப் போவதும் உறுதி,

இந்த அவலம்தானே சமீப காலமாக மத்திய அரசு நடத்தும் NEET போன்ற நுழைவுத் தேர்வுகளில் நடக்கிறது? மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் நடத்தப்பட்டு வந்த இத்தகைய தேர்வுகள் இனி பொறியியல் கல்லூரிகளுக்கும் சில வருடங்கள் கழித்து கலைக் கல்லூரிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர் கல்வி பயிலும் வாய்ப்பையே இழந்து பள்ளிக் கல்வியுடன் நிறுத்திக்கொள்ளும் காலம் வெகு விரைவில்
வரத்தான் போகிறது!

கல்வி மேலாண்மை

தற்போது தேசிய அளவில் கல்வி மத்திய அரசின் பொதுப் பட்டியலில் இருந்தாலும் மாநில அளவில் இதை ஒழுங்குப்படுத்தி மேலாண்மை செய்யும் பொறுப்பு மாநில கல்வி இயக்குனர் அலுவலகத்திடம் இருந்து வருகிறது. ஆகவேதான் 1968ல் இருந்தே நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மும்மொழி கொள்கை அமலில் இருந்தாலும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் இந்தியை கட்டாய மொழிப் பாடமாக்காமல் இயங்க முடிந்தது. பள்ளிகளுக்கான கொள்கையை வகுத்தல், பள்ளிகளை மேற்பார்வை மற்றும் ஒழுங்குப் படுத்துதல் ஆகிய அனைத்தையும் இந்த அமைப்பே கவனித்து வந்தன.

ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பவிருக்கும் புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் தேசிய அளவில் பள்ளிக் கல்வி மட்டுமல்லாமல்
உயர்கல்விக்கும் சேர்த்தே அளவிலா அதிகாரங்களைக் கொண்டஒரு ஆணையம் (தேசிய கல்வி ஆணையம் - ராஷ்ட்ரிய சிக்‌ஷா ஆயோக்!) அமைக்கப்பட்டு நாடு முழுமைக்கும் ஒரே ஆதார், ரேஷன் அட்டை என்பது போல் ஒரே கல்வி முறை அமலுக்கு வரும். இந்த தேசிய ஆணையம் இடும் அனைத்துக் கட்டளைகளையும் ஒவ்வொரு மாநில அளவிலும் அமைக்கப்படும் இவ்வாணையத்தின் அதிகாரமற்ற கிளைகளான மாநில கல்வி ஆணையம் செயல்படுத்த நிர்பந்திக்கப் படும்.

இந்த ஆணையத்தின் தலைவராக நம் பாரத பிரதமர் அவ்ர்கள் இருப்பார்.

இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பேர்பெற்ற கல்வியாளர்கள், மாநில முதலமைச்சர்கள் அல்லது கல்வி அமைச்சர்கள் ஆகியோர் இடம் பெற்றிருப்பர். இந்த ஆணையம் நாட்டின் கல்வி சம்பந்தமான அனைத்திற்கும் முடிவு எடுக்கக் கூடிய அதிகாரம் பெற்றிருக்கும்.

இந்தியாவின் அனைத்து இயக்கங்களையும் ஒவ்வொன்றாக தன் நேரடி கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்திருக்கும் மத்திய பாஜக அரசு தற்போது கல்வியையும் தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

தற்போதும் கல்வி மத்திய அரசின் பட்டியலில்தான் இருந்து வருகிறது என்றாலும் மாநில அளவில் அந்தந்த மாநில கல்வி இயக்குனர்களுக்கு தங்களுடைய மாநில அளவில் தேவையான மாற்றங்களை செய்துக்கொள்ளக் கூடிய தன்னாட்சி அதிகாரம் இருந்தது.

அது இப்போது முழுமையாக பறிக்கப்பட்டு மத்திய கல்வி ஆணையத்தின் ஆணைகளை செயல்படுத்தும்  ஒரு கிளை ஆணையமாக மாற்றப்பட்டுள்ளது.

இப்படி பல குழப்பங்களையும் குறைபாடுகளையும் நடைமுறைக்கு சாத்தியமற்ற மாற்றங்களையும் உள்ளடக்கியுள்ள கல்வித் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு மத்திய அரசு ஏன் இத்தனை அவசரம் காட்டுகிறது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

மத்தியிலுள்ள இன்றைய ஆட்சியாளர்களுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள அசுர பலத்தின் உதவியுடன் இந்த வரைவு கொள்கை எதிர்கட்சிகளின் அனைத்து எதிர்ப்ப்புகளையும் மீறி சட்டமாக்கப்படுவது என்னவோ நிச்சயம்.

அப்படியொரு நிலை ஏற்படுமானால் தமிழக மாணவர்களுக்கு குறிப்பாக கிராமப் புற ஏழை மாணவர்களுக்கு எதிர்வரும் காலம் ஒரு இருண்ட காலமாகத்தான் அமையப் போகிறது.



(நிறைவு)

8 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா
    //இந்த பள்ளிகள் மத்திய அரசு
    அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் வாரிசுகளுக்காகவே துவக்கப்பட்ட பள்ளிகளாகும்//

    இது நூறு சதவீதம் உண்மையான வார்த்தை.
    மிகச் சரியான அலசல் கட்டுரை ஐயா.

    தொடர்ந்து மேலும் பல விடயங்களை எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கும் கருத்துருக்கும் மிக்க நன்றி ஜி! தமிழ்மணம் தளம் இயங்காததால் இது வெகு சிலரையே சென்றடைந்துள்ளது. சமயம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  3. சில நாட்களுக்கு முன் ஒரு சர்வாதிகாரி உருவாகிறரா என்னும் இடுகைஎழுதி இருந்தேன் இவர்களின் ஒவ்வொரு செயலும் என்னுள் அந்தஎண்ணத்தையே ஊர்ஜிதம்செய்கிறதுஅரசு ஏதோ ஒரு எண்ணத்தின் அடிப்படயில் செயல் படுகிறது இன்று ஊடகங்களைப் பார்த்தால் இன்னும் விளங்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொன்னது மிகவும் சரி சார். அவர் ஒரு சர்வாதிகாரியே தான். அதற்கு இனன்றைய நிகழ்வுகள் மேலும் வலு சேர்க்கின்றன.

      நீக்கு
  4. தன்னாட்சியாக செயல்படும் அனைத்தும் இனி அவர்கள் கையில் தான்... அதுதான் அதிபயங்கரமான ஆபத்து...

    பதிலளிநீக்கு
  5. உண்மை தான். வட இந்திய பாமர வாக்காளர்கள் அளித்த அசுரத்தனமான பெரும்பான்மை அவர்களை எதை வேண்டுமானாலும் செய்ய தூண்டும்.

    பதிலளிநீக்கு
  6. /எதிர் வரும் காலங்களில் அரசின் ஒழுங்குமுறை அனைத்தும் இனி துவங்கவிருக்கும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது போலுள்ளது./

    அதுதான் அவர்களுடைய நோக்கமும் கூட. மாணவர்களை தரம் பிரித்து, கீழ்மட்ட நிலையில் உள்ளவரை மேற்கல்வி படிக்காதிருக்க செய்யும் வழிதான் இந்த கொள்கையின் சாராம்சம்,

    இன்னும் சொல்லப்போனால் திரு இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி வேறு வடிவில் வருகிறது என்பது தான் உண்மை.

    அசுர பலம் கொண்ட அரசு ஆட்சியில் உள்ளோர் தங்களது செயல் திட்டங்களை (Agenda) திணிக்க எதையும் செய்யும் என்பதற்கு இந்த புதிய கல்விக் கொள்கை ஒரு எடுத்துக்காட்டு. இதை பொதுமக்களும் கல்வியாளர்களும் தீவிரமாக எதிர்த்தாலொழிய எதிர்கால மாணவர்களின் கல்வி என்பது கனாவாகவே இருக்கும்.

    பி.கு கடந்த பத்து நாட்களாக எனது மடிக்கணினி மிகவும் மெதுவாக செயல்பட்டதால் என்னால் பதிவுலகம் வந்து கருத்துகளை தர இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  7. இராஜாஜி அவர்களின் குலக்கல்வி// இதை நானும் குறிப்பிட வேண்டும் என நினைத்தேன்.

    அன்றைய இராஜாஜி என்ன சொன்னாரோ அதையேத் தான் இன்றைய H.ராஜாவும் மறைமுகமாக கூறி வருகிறார். ராஜா என்று பேர் வைப்பதே தவறுதான் போலிருக்கிறது. பள்ளிகளில் சாதி கயிற்றை கட்டுவதில் என்ன தவறு கேட்பவரை என்னவெஎன்று சொல்வது?

    நீங்கள் லேட்டாக பின்னூட்டம் இட்டாலும் அத்தனையும் முத்தான கருத்துக்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு