03 ஆகஸ்ட் 2019

புதிய கல்விக் கொள்கை - 6

2008-2009 கணக்கெடுப்பின் படி தமிழகத்தில்

Number of Districts: 30
Number of Educational Districts: 65
Number of Blocks: 385

Number of Schools

Primary School (1-5 only) 23395
Middle School (1-8) 7597
High School (6-10) 2176
Higher Secondary School (6-12) 2100
Grand Total 35268

அரசு பள்ளிகள் உள்ளன.

இவற்றுள் கிராமப் புற மற்றும் நகர்புறங்களில்

Primary and Middle Schools - 32648
Secondary Schools - 3997 உள்ளன

ஒட்டு மொத்த இந்தியாவை எடுத்துக்கொண்டால் 2016-17ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 28 விழுக்காடு அரசு துவக்க (Primary) பள்ளிகளிலும் 15 விழுக்காடு நடுநிலைப் பள்ளிகளிலும் (Upper Primary) 30 மாணவர்களுக்கும் குறைவாகவே உள்ளனராம்! மேலும் சுமார் 1.20 லட்சம் பள்ளிகள் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளாம்! இவற்றுள் சுமார் 95,000 பள்ளிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை மட்டுமே உள்ள பள்ளிகள்!

இவ்வாறு தனித்து இயங்கும் சிறு, சிறு பள்ளிகளை நிர்வகிப்பதிலும் ஆசிரியர் நியமனங்களிலும் மிக அதிகம் சிரமங்கள் உள்ளது. ஆகவே இத்தகைய பள்ளிகள் அனைத்தும் அதாவது இருபது மாணவர்களுக்கும் குறைவாக பள்ளிகளை அவை எத்தகைய பள்ளிகளாக இருப்பினும் அருகாமையிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட வேண்டுமாம்!

தமிழகத்தைப் பொறுத்தவரை சமீபத்திய கணக்கெடுப்பின்படி 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள துவக்கப் பள்ளிகள் சுமார் 1000.

மீதமுள்ள பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் நூறு மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனராம்.

புதிய வரைவு கல்விக் கொள்கை 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை, அவை எந்த வகையைச் சார்ந்த பள்ளியாக இருப்பினும், 2020 கல்வியாண்டுக்குள் அடுத்துள்ள  பள்ளிகளுடன் இணைத்துவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழக கல்வித் துறையோ ஐம்பது மாணவர்களுக்கும் குறைவாகவுள்ள கிராமப்புற துவக்கப்பள்ளிகளை மூடுவதற்கு அல்லது அடுத்துள்ள பள்ளிகளுடன் இணைப்பதற்கு உத்தரவு பிறப்பித்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போதுள்ள அரசு பள்ளிகள் சிலவற்றில் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலும் இன்னும் சில பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலும் இருப்பதை மேல் காணும் புள்ளி விவரங்களிலிருந்து  அறிந்துக்கொள்ள முடிகிறது. இந்த பள்ளிகள் பெரும்பாலும் கிராமப்புற/சிறு நகர்புறங்களில் இயங்கி வருகின்றன. இவை எவ்வாறு பிரிக்கப்படும். அப்படிப்பட்ட சூழலில் எத்தனை பள்ளிகள் மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படும் அல்லது மூடப்படும் என்பது தெரியவில்லை.

பெரு நகரங்களான சென்னை, கோவை, மதுரை போன்றவற்றிலும் இத்தகைய குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது ஒரு பள்ளியிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் வசிக்கும் மாணவர்கள் மட்டுமே அந்த பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் என்ற எழுதப்படா விதி கடைபிடிக்கப்படுகின்றது. புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் தற்போது மழலையர் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை வகுப்புகளைக் கொண்டுள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்?

ஆக, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தற்போது இயங்கிவரும் பள்ளிகள் பிரிக்கப்பட்டால் அதிகம் பாதிக்கப்படப் போவது கிராம மற்றும் சிறு நகரங்களில் படிக்கும் மாணவர்கள்தான்

அகில இந்திய அளவில் சுமார் 1.25 இலட்சம் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மூடப்படவுள்ளது என்பதை நினைத்துப் பார்க்கவே மலைப்பாக உள்ளது!

இன்னும் சிலவற்றைப் பற்றி நாளை (திங்களனறு) விவாதிக்கலாம்






6 கருத்துகள்:

  1. பள்ளிகளை மூட லேகமாக நடவடிக்கை எடுக்க நினைக்கும் அரசு.

    டாஸ்மாக்கை மூடுவதில் சிரத்தை எடுப்பதில்லையே....

    இந்தியாலில் தினம் 16 கோடி மக்கள் மது அருந்துவதாக புள்ளி விபர கணக்குகள் சொல்கிறது ஐயா.

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாஸ்மாக் கடைகளை மூடினால் கமிஷன் போயிருமே. எப்படி மூடுவாங்க?

      நீக்கு
  2. கிராமங்கள் முன்னேறினால் தானே நாடு முன்னேற்றம் அடையும், என்றுகூட அறியாதவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள்...

    பதிலளிநீக்கு
  3. சரியாகச் சொன்னீர்கள். தமிழகத்தில் நானும் விவசாயிதான் என்று கூறிக் கொள்ளும் முதல்வருக்கே இது தெரியவில்லையே?

    பதிலளிநீக்கு
  4. // புதிய வரைவு கல்விக் கொள்கை 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை, அவை எந்த வகையைச் சார்ந்த பள்ளியாக இருப்பினும், 2020 கல்வியாண்டுக்குள் அடுத்துள்ள பள்ளிகளுடன் இணைத்துவிட வேண்டும்.//


    மலைப்பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் சிலவற்றில் ஒற்றைப்பட இலக்கத்தில் தான் மாணவர்கள் உள்ளதாக அறிகிறோம். அப்படியென்றால் அந்த பள்ளிகளை மூடிவிட்டால் அவர்கள் எவ்வாறு வெகு தொலைவு சென்று படிக்கமுடியும். இது என்னவோ எல்லோருக்கும் கல்வி என்ற கொள்கையை குழிதோண்டி புதைப்பதுபோல் உள்ளது . குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து திட்டங்கள் தீட்டுவோர்களுக்கு தெரியுமா கள நிலைமை. எக்காரணத்தைக் கொண்டும் இதுபோன்ற விதிமுறைகளை ஆரம்பத்திலேயே எதிர்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. இது அரைகுறை ஞானத்துடன் அவசரகதியில் தீட்டப்பட்ட திட்டமாக தெரியவில்லை. மிக ஆழமாக சிந்தித்து எதை செய்தால் ஏழை மற்றும் கிராமப்புற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்களோ அத்தகைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் இறஙகியுள்ளார்கள் என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு