03 ஆகஸ்ட் 2013

என் முதல் பதிவு அனுபவங்கள் (தொடர் பதிவு)

முதலில் என்னை இந்த தொடரில் என்னுடைய பழைய நினைவுகளை அசைபோட அழைத்த பதிவுலக நண்பர் ராஜி அவர்களுக்கு நன்றி.

2005ல் பதிவுலகில் நுழைந்தேன் என்றாலும் அதிலிருந்து சுமார் இரண்டாண்டு காலம் விலகியிருந்துவிட்டு மீண்டும் நுழைந்திருப்பதால் இதை 'புதிதாய் மீண்டும் ஒரு பிறப்பு' என்று கூறலாம்.

இந்த மறுபிறப்பில் இன்று பிரபலமானவர் என கருதப்படும் ஒரு பதிவரால் ஒரு தொடர்பதிவில் எழுத அழைக்கப்பட்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

2005ல் பதிவுலகிற்குள் நுழைந்தது ஒரு விபத்து என்றுதான் கூற வேண்டும்.

2003ல் எங்களுடைய வங்கியில் துவக்கப்பட்ட ஒரு கணினி ப்ராஜக்ட் (இதற்கு தமிழில் என்ன என்று தெரியவில்லை) வெற்றிகரமாக முடிக்கப்பட்டு அடுத்ததாக என்ன செய்யலாம் என்று திட்டமிட துவங்கியிருந்த காலம் அது. நான் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தது எங்களுடைய வங்கியின் கணினி இலாக்கா என்பதால் வங்கிக் கிளைகளில் உள்ளது போன்று தினசரி அலுவல்கள் என்று ஏதும் இருக்காது.

ஆகவே ஒரு ப்ராஜக்ட் முடிந்து அடுத்த ப்ராஜக்டை துவக்கும்வரையிலுள்ள இடைபட்ட காலத்தில் காலையில் அலுவலகத்திற்கு வந்தால் அங்கிருந்து செல்லும்வரையிலும் அடுத்து செய்யவிருக்கும் ப்ராஜக்டை பற்றிய அலசல் கூட்டங்களே நடந்துக்கொண்டிருக்கும். அத்தகைய கூட்டங்களில் எனக்கு கீழ் பணியாற்றிய பொறியாளர்கள்தான் அதிகம் பேசுவார்கள். அவர்கள் கூறுவதில் பெரும்பாலானவை எனக்கு புரியவே புரியாது. ஏனெனில் நான் ஒரு காமர்ஸ் பட்டதாரி. கொஞ்சம், கொஞ்சம் கணினி தெரியும். Database என்றால் என்ன என்று தெரியும். முந்தைய ப்ராஜக்ட்டை வழிநின்று நடத்தியிருந்ததால் ரவுட்டர், ஃபையர்வால், சர்வர், நெட்வொர்க்கிங் என்றால் என்ன என்பதையும் தெரிந்து வைத்திருந்தேன். அதுபோலவே ஆரக்கிளில் (Oracle) query எழுதவும் சுமாராக தெரிந்து வைத்திருந்தேன்.

ஆகவே என்னுடைய ஜுனியர்கள் சீரியசாக திட்டத்தைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கும்போது நான் என்னுடைய லேப்டாப்பில் இணையத்தை மேய்ந்துக்கொண்டிருப்பது வழக்கம். நாம இங்க மூச்ச புடிச்சிக்கிட்டு பேசிக்கிட்டிருக்கோம் இந்த மனுஷன் லேப்டாப்பையே பாத்துக்கிட்டிருக்காரேன்னு அவங்க நினைக்கறது அவங்க முகபாவனையிலிருந்தே தெரிஞ்சிக்க முடிஞ்சாலும் அத கண்டுக்காம என் கர்மத்திலேயே கண்ணாயிருப்பேன். அவங்க எல்லாரும் என் மேசைக்கு முன்னாலருக்கற சேர்ல ஒக்காந்திருந்ததால நான் என்ன செஞ்சிக்கிட்டிருக்கேங்கறது அவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லைன்னாலும் இவருக்கு இதவிட்டா வேற என்ன வேலை இருக்க முடியும்னு தெரியாமயா இருக்கும்? இருந்தாலும் டிப்பார்ட்மென்ட் ஹெட்டாச்சே! என்னத்தையாவது செஞ்சிக்கிட்டு போவட்டும்னு அவங்க பாட்டுக்கு டிஸ்கஸ் பண்ணுவாங்க. மீட்டிங் முடியற நேரத்துல 'எல்லாத்தையும் மினிட் பண்ணி ஃபர்ஸ்ட் டிராஃப்ட் என்கிட்ட அனுப்பிச்சிருங்கப்பா.. நா பாத்ததுக்கப்புறம் ஃபைனலைஸ் பண்ணிக்கலாம்'னு சொல்லிருவேன். அத பார்த்தாலே அன்னைக்கி நடந்த மீட்டிங்ல பசங்க என்ன டிஸ்கஸ் பண்ணாங்கன்னு தெரிஞ்சிக்கலாமே... அதான்.

அப்படி இணையத்த மேஞ்சிக்கிட்டிருந்தப்போ ஆக்சிடென்டா நா போய் விழுந்த தளம்தான் தமிழ்மணம். அட! இது நல்லாருக்கேன்னு நினைச்சேன். அப்புறம் என்ன, அன்னையிலருந்து டெய்லி ஆஃபீஸ் வர்றதுக்கு ஒரு எக்ஸ்யூஸ் கிடைச்சிது. காலையில வந்ததும் என்னத்த செய்யிறதுன்னு தெரியாம இருந்தவனுக்கு ஒரு நல்ல டைம்பாஸ் கிடைச்சிதுன்னு நினைச்சி தெனமும் ஒரு ரெண்டு மணி நேரமாவது அன்னைக்கி பாப்புலரா இருந்த பலருடைய பதிவர்களோட பதிவுகள படிப்பேன். அப்ப இருந்தவங்கள்ல நெறைய பேர் இப்ப ஆக்டிவா இல்லன்னு நினைக்கிறேன், அதாவது இணையத்துல. ரெண்டே ரெண்டு பேர தவிர: ஒன்னு அப்பப் போலவே இப்பவும் வாரத்துல ரெண்டு பதிவாவது போடற துளசி. அப்புறம் கேள்விங்க கேக்கறதுல எக்ஸ்பர்ட்டான தருமி.

இப்படி படிக்க ஆரம்பிச்சப்புறம்தான் நமக்கும் எழுதலாமேங்கற ஆசை வந்துச்சி. தமிழ்மணத்துல புது ப்ளாக் எப்படி ஆரம்பிக்கிறதுன்னு நல்லாவே எழுதி வச்சிருந்தாங்க. ஏற்கனவே கொஞ்சம் கணினி ஞானம்! இருந்ததால ஈசியா செய்ய முடிஞ்சது. அதுக்கப்புறம் என்ன பேர் வைக்கலாம்னு யோசனை. அதுக்கே ரெண்டு நாளாச்சிது. என்னென்னவோ யோசிச்சேன். ஆனா 'என்னுலகம்'னு ஏன் வச்சேங்கறது மறந்துபோயிருச்சி. இப்ப அது தெரிஞ்சி என்ன பண்ண போறீங்க? எப்படியோ வச்சாச்சி.

அப்புறம், எப்படி தமிழ்ல எழுதறதுங்கற கன்ஃப்யூஷன். அப்போ யூனிகோர்ட்னா என்னான்னே தெரியாது. அப்புறம் 'உன் கோடு, என் கோடு, யூனி கோடு'ங்கற தலைப்புல ஒரு ஆர்ட்டிகிள படிச்சேன். நாம எந்த எழுத்துருவ யூஸ் பண்ணி எழுதுனாலும் அத யூனிகோட் கன்வர்ட்டர்ல மாத்திக்கலாம்னு எங்கயோ படிச்சேன். அத டவுன்லோட் பண்ணி வேர்ட்ல எங்கிட்ட ஏற்கனவே இருந்த எழுத்துருவுல அடிச்சி இந்த கன்வர்ட்டர்லருக்கற மேல் பொட்டியில அடிச்சி மாத்தி போஸ்ட் பண்ணேன். அப்புறம் அப்போ பிரபலமாருந்த டோண்டு ராகவன் நேரா நோட்புக்ல யூனிகோட்லயே அடிச்சிரலாம் சார்னு சொல்லிக்கொடுத்தார். அப்படித்தான் அவர் கூட பழக்கமாச்சி. அவர் அவரோட நண்பர் ஜெயரமன அறிமுகப்படுத்தினார். அப்புறம் மா.சிவக்குமார், தருமி, துளசி, ஜி.ராகவன், தமிழினி, சிங்கை ஜோ, கோவி. கண்ணன் அப்படின்னு நிறைய நண்பர்கள். அப்புறம் பாலபாரதி அவருடைய நண்பர்கள்னு வட்டம் விரிஞ்சிக்கிட்டே போச்சி.

ஆரம்பத்துல எனக்கு புடிச்சித மட்டுந்தான் எழுதிக்கிட்டிருந்தேன். ஓரிரண்டு நண்பர்களைத் தவிர வேறெந்த பின்னூட்டமும் வராது. அப்புறம்தான் மத்த பதிவர்களுக்கும் புடிச்சத எழுதணும், அப்பத்தான் நிறைய பேர நம்ம பக்கம் இழுக்க முடியும்னு ராகவன் சொல்லிக்குடுத்தார். சரி நம்மோட வேலையப் பத்தி எழுதலாம்னு நினைச்சி துவங்குன சீரியல்தான் 'திரும்பிப் பார்க்கிறேன்.' ஏறக்குறைய மூனு வருசம் தொய்வில்லாம போச்சி. நிறைய வாசகர்களையும் பின்னூட்டங்களையும் எனக்கு தந்து... ஒரு காலத்துல 'என்னுலகம் ஜோசப்' பேர் மாறி 'திரும்பிப்பார்க்கிறேன் ஜோசப்'னு ஆகற அளவுக்கு அந்த சீரியல் பாப்புலராச்சி.

Rest is history.

இதான் நம்மளோட பதிவுலக என்ட்றி அனுபவங்கள்.

இதான் என்னோட முதல் பதிவு... இதுல ஒரு ஆச்சரியம். நான் 2005ல் போட்ட முதல் பதிவுக்கு வந்த முதல் பின்னூட்டம் நண்பர் பாலராஜன் கீதா அவர்களிடமிருந்து - 2007ல்!!!!!!!!!!! அவ்வளவு பிரபலம் நான், அப்போது!!


இது தொடர் பதிவுன்னாலும் யார், யார யார், யார் இதுவரைக்கும் அழைச்சிருக்காங்கன்னு தெரியாததால மறுபடியும் என்னோட ஆரம்பகால பதிவர் நண்பர்களான தருமி மற்றும் துளசியையே இந்த தொடர் பதிவுலயும் என்னைத் தொடர்ந்து எழுதுமாறு அழைக்கிறேன். இருவரும் சிரமத்திற்கு மன்னிக்கவும்!





20 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான அனுபவம்... இனிய நட்புகளின் பதிவுகளும் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. Computer Project என்பதை கணினி செயல் திட்டம் என சொல்லலாம். தங்களது முதல் பதிவு அனுபவங்களை சுவைபட பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. சுவாரசியமான அனுபவம் தான்.....

    துளசி டீச்சர் என்ன எழுதப் போகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள நானும் ஆவலோடு.....

    பதிலளிநீக்கு
  4. அலுவலகத்தில் நடைமுறையில்தான் நானும் கற்றுக்கொண்டேன்

    பதிலளிநீக்கு
  5. இந்த மறுபிறப்பில் இன்று பிரபலமானவர் என கருதப்படும் ஒரு பதிவரால்
    >>
    ஏன் இந்த கொலை வெறி?!

    பதிலளிநீக்கு
  6. இப்ப அது தெரிஞ்சி என்ன பண்ண போறீங்க? எப்படியோ வச்சாச்சி.
    >>
    இதுக்குதான் ரிஷிமூலம், நதி மூலம் பார்க்க கூடாதுன்னு சொல்றது?!

    பதிலளிநீக்கு
  7. அனுபவங்களை சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  8. எல்லாம் பெரியவங்களும் முன்னாடி ஆளுங்க உட்காந்து இருகுரப்ப்போ இப்படி தன நியூஸ் படிகிரங்க போல நான் கூட வேலை தான் பார்பங்கலோன்னு நினைத்து விட்டேன்

    பதிலளிநீக்கு
  9. நினைவு கூறியதற்கு நன்றி.
    உங்கள் வடிவேலு - பார்த்திபன் நகைச்சுவைகள் எனக்கு பெரிய தூண்டுகோள்.

    பதிலளிநீக்கு
  10. சுவாரஸ்யமான அனுபவம்... இனிய நட்புகளின் பதிவுகளும் தொடரட்டும்//

    முதலில் வந்தவருக்கு முதலில் நன்றி. அன்று கிடைத்த நண்பர்களில் பலரும் இப்போது அவ்வளவாக எழுதவில்லையென்றாலும் அவர்களுடனான நட்பில் எனக்கு கிடைத்த மகிழ்ச்சி அளவிட முடியாதது.

    பதிலளிநீக்கு
  11. Computer Project என்பதை கணினி செயல் திட்டம் என சொல்லலாம்.//

    ஆமாம் சார். ஆனால் ஒவ்வொரு திட்டத்திற்கும் மென்பொருளை உண்டாக்குவதற்கு (development) செலவழிக்கும் நேரத்தில் நான்கு மடங்கு அதற்கு தேவையான (requirements))என்னென்ன என்று வரையறுக்கப்படுவதற்குத்தான் அதிக நேரத்தை செலவிடுவார்கள். அந்த துவக்க காலங்களில் நம்மைப் போன்ற பேங்கிங் மட்டும் தெரிந்தவர்களுக்கு எப்படி நேரத்தை செலவிடுவது என்றே தெரியாமல்.... அதுவும் கிளைகளில் படு பிசியாக இருந்தவர்களுக்கு அது ஒரு பெரிய கொடுமை... அதை நான் மூன்று வருடங்களுக்கு அனுபவிக்க வேண்டியிருந்தது. அந்த சமயங்களில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இந்த பதிவுலகம்தான் மிகவும் உதவியது.

    பதிலளிநீக்கு
  12. துளசி டீச்சர் என்ன எழுதப் போகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள நானும் ஆவலோடு..//

    அவங்க எனக்கு சீனியராச்சே... அதாவது பதிவுலகில்... அதுவும் அவங்க எழுத்து பாணியே தனி.. பக்கத்துல ஒக்காந்து சொல்றா மாதிரி இருக்கும்... சிறப்பாத்தான் இருக்கும்.. ஆனா அவங்க இன்னும் நான் அழைத்த முதல் தொடர் பதிவுக்கே (முதல் கணினி அனுபவங்கள்) இன்னும் எழுதலையே. எந்த நாட்டுல டூர்ல இருக்காங்களோ. அவங்க திரும்பி வர்ற வரைக்கும் பொறுத்துத்தான் இருக்கணும் போல..

    பதிலளிநீக்கு
  13. அலுவலகத்தில் நடைமுறையில்தான் நானும் கற்றுக்கொண்டேன்//

    கவியாழி, நீங்க மட்டுமில்ல இங்கருக்கற நாம எல்லாருமே அப்படித்தான்... ஆஃபீஸ்லதான நம்ம வாழ்நாள்ல பெரும்பாதிய கழிக்கிறோம்.. வீட்டுக்கு தூங்க மட்டுந்தான வர்றோம்?

    பதிலளிநீக்கு
  14. ஏன் இந்த கொலை வெறி?!//

    ஐயையோ கொலை வெறி, கிலை வெறில்லாம் இல்லைங்க... உண்மையிலேயே நீங்க பிரபலமானவர்தான்.. நம்புங்க.

    பதிலளிநீக்கு
  15. இதுக்குதான் ரிஷிமூலம், நதி மூலம் பார்க்க கூடாதுன்னு சொல்றது?!//

    கரெக்ட். அன்னைக்கி ஆஃபீஸ்ல சம்பளத்த வாங்கிக்கிட்டு இந்த மாதிரி வேலையத்தான் செஞ்சிக்கிட்டுருந்தேன்னு தெரிஞ்சா ஒருவேளை என் பென்ஷன நிறுத்திட்டா? அதான் சட்டுன்னு நிறுத்திட்டேன்...

    பதிலளிநீக்கு
  16. அனுபவங்களை சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்//

    உங்களை விடவா சார்? என்ன அழகா சாதாரண விஷயங்கள கூட சின்னதா, சுருக்கமா சொல்றீங்க? அதுல உங்கள மிஞ்ச முடியாது சார்.

    பதிலளிநீக்கு
  17. எல்லாம் பெரியவங்களும் முன்னாடி ஆளுங்க உட்காந்து இருகுரப்ப்போ இப்படி தன நியூஸ் படிகிரங்க போல நான் கூட வேலை தான் பார்பங்கலோன்னு நினைத்து விட்டேன்//

    இருக்கும், இருக்கும்... அவங்க பின்னால நைசா போயி பார்த்தீங்கன்னா தெரிஞ்சிரும்... லாப்டேப்ல அன்னைக்கி வந்த நீயூஸத்தான் படிச்சிக்கிட்டிருப்பார்...

    பதிலளிநீக்கு
  18. நினைவு கூறியதற்கு நன்றி.//

    அத எப்படி கண்ணன் மறக்க முடியும்? ஆனா அப்படியொரு காலம் மறுபடியும் தமிழ்மணத்துல வந்துருக்குன்னு நா நினைக்கிறேன். இப்ப நிறைய பதிவர்கள் ரொம்ப அழகா எழுதறாங்க. வாங்க, வந்து ஜோதியில மறுபடியும் முழு வீச்சா கலந்துக்குங்க!

    உங்கள் வடிவேலு - பார்த்திபன் நகைச்சுவைகள் எனக்கு பெரிய தூண்டுகோள்.//

    அந்த மாதிரி இப்ப எழுத வரமாட்டேங்குதுங்க... ஏன்னு தெரியல!

    பதிலளிநீக்கு

  19. 2005 லேயே பதிவுலகம் வந்தாச்சா.?எழுத வருபவர்களுக்கு இந்த பின்னூட்டங்கள் தெம்பு தருபவைதான்.. இருந்தாலும் அதற்கு வேண்டி நாம் எழுத விரும்புவதைச் சொல்லாமல் பிறர் விருப்பப்படி எழுத மனம் வருவதில்லை. அப்படிப் பிறர் படித்துக் கருத்துரைகள் இடுவதும் பல நேரங்களில் உண்மையாக இல்லாமல் போலியாக இருக்கிறதே. பதிவுகள் ஆரோக்கியமான கலந்தெழுத்தாடல்களுக்கு வழிவகுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. இருந்தாலும் அதற்கு வேண்டி நாம் எழுத விரும்புவதைச் சொல்லாமல் பிறர் விருப்பப்படி எழுத மனம் வருவதில்ல//

    உண்மைதான் சார். என்னுடைய முந்தைய பல பதிவுகளைப் படித்தாலே என்னுடைய எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது/இருக்கிறது என்பது புரியும். எந்த சூழலிலும் பின்னூட்டங்களுக்காக நான வருத்தப்பட்டதே இல்லை. எனக்கு என்ன தோன்றுகிறதோ அது எவ்வளவு சர்ச்சைக்குரிய விஷயமானாலும் அதை எழுதி வந்திருக்கிறேன். அநானி பின்னூட்டங்களியும் வெகுநாட்களாக அனுமதித்ததில்லை.

    ஆனால் காலப்போக்கில் நானும் ஒருவகையில் மாறித்தான் போனேன் என்பதும் உண்மை. என் கருத்துடன் ஒத்துப்போகாதவர்களை பர்சனல் எதிரிகளைப் போல் கருதி ஒதுக்குவதை பார்த்தப்பிறகு என்னையுமறியாமல் அப்படிப்பட்ட கருத்துக்களை பதிவிடுவதை தவிர்த்துவருகிறேன்.

    எந்த கருத்துக்கும் ஒரு மாற்றுக் கருத்து உண்டு என்பதில் நம்பிக்கையுள்ளவன் நான். இன்றும் அப்படித்தான்.

    பதிலளிநீக்கு