நேற்றைய பதிவில் நான் அளித்திருந்த எடுத்துக்காட்டுகளைப் படித்த பிறகும் குழப்பமாகத்தான் உள்ளது என்று சிலர் கருத்துரை இட்டிருந்ததை படித்தேன். ஆகவே இந்திய தண்டனைச் சட்டம் 300வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ள மேலும் சில எடுத்துக்காட்டுகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் தருகிறேன்.
(a) A shoots Z with the intention of killing him. Z dies in consequence. A commits murder.
ஒருவர் (A) இன்னொருவரை (Z) கொலை செய்யவேண்டும் என்ற எண்ணத்துடன் துப்பாக்கியால் சுடுகிறார். குண்டடிபட்ட நபர் இறந்துவிடுகிறார். இது கொலை. A கொலைக் குற்றவாளி. இதில் எவ்வித குழப்பமும் இல்லை என்று நினைக்கிறேன்.
(b) A, knowing that Z is labouring under such a disease that a blow is likely to cause his death, strikes him with the intention of causing bodily injury. Z dies in consequence of the blow. A is guilty of murder, although the blow might not have been sufficient in the ordinary course of nature to cause the death of a person in a sound state of health. But if A, not knowing that Z is labouring under any disease, gives him such a blow as would not in the ordinary course of nature kill a person in a sound state of health, here A, although he may intend to cause bodily injury, is not guilty of murder, if he did not intend to cause death, or such bodily injury as in the ordinary course of nature would cause death.
ஒருவருக்கு (A) அவருடைய எதிராளி (Z) உடல்நலக் குறைவாக இருக்கிறார் என்றும் தெரியும் அவரை தாக்கினால் அதனால் ஏற்படும் காயம் காரணமாக அவர் இறந்துவிடுவார் என்றும் தெரியும். இருந்தும் அவரை தாக்கி காயப்படுத்துகிறார். காயமடைந்தவர் மரித்துவிடுகிறார். A அடித்த அடியால் அவர் மரணமடைய வாய்ப்பில்லை என்றாலும் ஏற்கனவே Z உடல்நலம் இல்லாமல் இருந்தவர் என்பது தெரிந்திருந்தும் A அவரை தாக்கினார். ஆகவே A செய்தது கொலைதான்.
ஆனால் Z உடல்நலம் இல்லாமல் இருந்தது A க்கு தெரியாது என்று வைத்துக்கொள்வோம். Zக்கு ஏற்பட்ட காயம் உயிர் போகும் அளவுக்கு கடுமையானதும் அல்ல என்றும் வைத்துக்கொள்வோம். அந்த காயத்தினாலேயே அவர் உயிர் பிரிய வாய்ப்பில்லை என்று மருத்துவர்களும் கருதுகின்றனர். அவர் உடல்நலம் குன்றி இருந்ததாலேயே அந்த உடல்நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயம் அவருடைய உயிர் பிரிய காரணமாக அமைந்துவிட்டதே தவிர Aவுக்கு உண்மையில்யே Zஐ கொல்ல வேண்டுமென்ற எண்ணம் இல்லை. Zன் உடல் நலம் நன்றாக இருந்திருக்கும் பட்சத்தில் அவர் உயிர்பிழைத்திருக்க வாய்ப்புண்டு. அந்த சூழலில் A செய்தது கொலையாக கருதப்படாது!
(c). A intentionally gives Z a sword-cut or club-wound sufficient to cause the death of a man in the ordinary course of nature. Z dies in consequence. Here, A is guilty of murder, although he may not have intended to cause Z's death.
A வேண்டுமென்றே Z ஐ அரிவாளால வெட்டுகிறார். Z அதன் காரணமாக மரிக்கிறார். Aவுக்கு Zஐ கொலை செய்ய வேண்டுமென்ற எண்ணம் ஏதும் இல்லையென்றாலும் இத்தகைய அரிவாள் வெட்டு ஒருவருடைய மரணத்திற்கு காரணமாகிவிடும் என்பது அவருக்கு தெரியும். ஆகவே இதுவும் கொலைதான்.
(d) A without any excuse fires a loaded cannon into a crowd of persons and kills one of them. A is guilty of murder, although he may not have had a premeditated design to kill any particular individual.
A எவ்வித காரணமும் இல்லாமல் தன்னிச்சையாக ஒரு கூட்டத்தை நோக்கி சுடுகிறார். அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் குண்டடி பட்டு இறந்துவிடுகிறார். மரித்த நபரை கொல்ல வேண்டுமென்று A முன்கூட்டியே திட்டமிடவில்லையென்றாலும் A செய்தது கொலைதான்.
இதுக்கு மேல தெளிவா சொல்ல முடியுமான்னு தெரியலை.
இன்னமும் புரியலையா? விட்டுத்தள்ளுங்க.
கொலை நடந்திருச்சின்னு நினைச்சிக்கிட்டு மேல ஆகவேண்டியதை பார்ப்போமா?
இந்த பகுதியில கொலைக்கு காரணமாயிருந்தவரை எப்படி கண்டு பிடிச்சி கைது செய்யணும், அதுல போலீசோட பொறுப்பு என்ன அப்படீன்னு பாக்கலாம்.
ஒரு கொலையாளியை கண்டு பிடிக்கறதுக்கு போலீஸ் எடுத்துக்கற முயற்சிகளைத்தான் புலன் விசாரணைன்னு சொல்றோம். இந்த விசாரணையில போலீசுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கு, என்னென்ன கடமைகள் இருக்குன்னு இந்திய குற்றவியல் முறைச் சட்டத்துல சொல்லி வச்சிருக்காங்க.
குவிமுச:பிரிவு 154:
ஒரு கொலை நடந்ததாக கேள்விப்பட்டதுமே அந்த ஏரியா காவல்துறை நிலைய பொறுப்பு அதிகாரி (Station House Officer) - ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் - தங்களுக்கு கிடைச்ச விவரத்தை எழுத்து மூலமா பதிவு செய்யணும்னு இந்த பிரிவு சொல்லுது. அதுமட்டுமில்லாம அந்த தகவல அளிச்சவருக்கு வாசிச்சி காண்பிச்சி தகவல் குடுத்தவரோட கையெழுத்தையும் வாங்கி அதுக்குன்னு போலீஸ் ஸ்டேஷன்ல வச்சிருக்கற புத்தகத்துல எழுதி வச்சிரணுமாம். இதத்தான் முதல் தகவல் அறிக்கைன்னு (First Information Report) சொல்றாங்க. .
கொலை சம்மந்தமான தகவல் ஃபோன்லயோ இல்ல லெட்டர் மூலமா கிடைக்கற பட்சத்துல அது கிடைச்சதுமே காவல் நிலைய அதிகாரி ஒருத்தர் சம்பவம் நடந்ததா சொல்லப்பட்டிருக்கற இடத்துக்கு போயி தகவல் உண்மைதானான்னு விசாரிக்கணும். அதுக்கப்புறம் ஸ்டேஷனுக்கு திரும்பி FIR தயாரிக்கணும்னும் இந்த பிரிவு சொல்லுது.
அது மட்டும் போறாது. சில போலீஸ் ஸ்டேஷன்ல செய்யிறா மாதிரி இப்படி தயார் செஞ்ச FIRஅ ஸ்டேஷன்லருக்கற ஃபைல்ல போட்டு வச்சிறாம அதோட ஒரிஜினல் காப்பிய சம்மந்தப்பட்ட ஏரியா மஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கு அனுப்பணும். 2வது காப்பிய ஸ்டேஷன் ஃபைல்லயும் 3வது மற்றும் 4வது காப்பிகளை தங்களோட ரேஞ்ச், வட்டார காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பணும். (அப்பத்தானே இவங்க அது மேல ஏதாச்சும் உருப்படியா ஆக்ஷன் எடுத்துருக்காங்களான்னு சூப்பர்வைஸ் பண்ண வசதியாருக்கும்?) அப்புறம் FIRஓட 5வது காப்பிய ஃப்ரீயா தகவல்/புகார் அளித்தவருக்கு அவர் கேட்டாலும் கேக்காட்டாலும் குடுத்துரணும்னும் இந்த பிரிவுல சொல்லியிருக்காங்க.
இந்த முதல் தகவல் அறிக்கைங்கறது தமிழ்நாட்டு போலீஸ் இலாக்கா ஒரு பேட் (Pad) மாதிரி பைன்ட் பண்ணி ஒவ்வொரு ஸ்டேஷனுக்கு குடுத்திருக்காங்களாம். ஒவ்வொரு FIR காப்பியிலயும் முதல் ஐந்து காப்பிங்களை கிழிச்சி எடுத்துட்டு ஆறாவது காப்பிய (counter-foil) அந்த பேடிலயே விட்டு வச்சிரணுமாம். இத டிஎஸ்பியோ இல்ல ஏரியா எஸ்பியோ அப்பப்போ ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்ஷனுக்கு வர்றப்போ அவங்களோடா பார்வைக்கு குடுக்கணுமாம். அந்த பேடுல இருக்கற ஒவ்வொரு FIR formலயும் சீரியல் நம்பர் ப்ரின்ட் பண்ணியிருக்கும். இது எதுக்குன்னா கிடைக்கற இன்ஃபர்மேஷன உடனுக்குடனே பதிவு பண்ணி ரிப்போர்ட் தயார் பண்றாங்களான்னு பாக்கறதுக்காம். இல்லன்னா வேண்டியப்பட்டவங்க கேஸ்னா மட்டும் FIR போடறது இல்லன்னா பேசாம இருந்துரலாம். அப்படி இல்லன்னா எப்ப சவுகரியமோ அப்போ போட்டுக்கலாம்னு ஸ்டேஷன் ஆளுங்க இருந்துருவாங்களே. அத தடுக்கறதுக்குத்தான் இந்த சீரியல் நம்பர். அதாவது நேத்து கிடைச்ச இன்ஃபர்மேஷன பதிவு பண்ணாம இன்னைக்கி கிடைச்ச இன்ஃபர்மேஷன பதிவு பண்ணி FIR போட முடியாதாம்.
இதுமட்டும் இல்லீங்க. ஸ்டேஷன்ல கிடைக்கற புகார்களோட விவரங்கள நோட் பண்ணி வைக்கறதுக்குன்னே ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் பொது நாட்குறிப்புன்னு (Station general diary) ஒரு புத்தகம் வச்சிருக்கணுமாம். அதுல கிடைக்கற புகார்கள தேதிவாரியா ரெக்கார்ட் பண்ணி வைக்கணுமாம். அப்பப்போ ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்ஷன் வர்ற மேலதிகாரிங்க இந்த டைரிய பார்த்து அது சரிவர பராமரிக்கப்படுகிறதான்னு பார்த்து இல்லன்னா ஸ்டேஷன்ல வச்சிருக்கற மேலதிகாரி விசிட் புத்தகத்துல எழுதி வைக்கணுமாம்.
இன்னொன்னையும் இங்க முக்கியமா சொல்லணும். இப்படி கிடைக்கற புகார்களை பதிவு செய்ய முடியாதுன்னு சொல்றதுக்கு எந்த காவல்துறை அதிகாரிக்கும் அதிகாரம் இல்லையாம். அதுமட்டுமில்லாம நீங்க சொல்ற புகாரப்பத்தி தீர விசாரிச்சிட்டுத்தான் முதல் தகவல் அறிக்கையை தயாரிப்பேன்னும் சொல்ல கூடாதாம். புகார் கிடைச்சவுடனே பதிவு பண்ணி FIR போட்டுட்டுத்தான் விசாரணையிலேயே இறங்கணுமாம். அதையும் மீறி புகாரை பதிவு செய்ய முடியாதுங்கன்னு யாராச்சும் சொன்னா அவரோட மேலதிகாரியோட (ஏரியா கண்கானிப்பாளர்) ஆஃபீசுக்கு எழுத்து மூலமா தெரிவிக்கலாம்னும் கு.மு.ச.154(3) பிரிவுல சொல்லியிருக்காங்க.
ஏற்பாடு எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா அதையும் மீறி சில ஸ்டேஷன் ஆளுங்க FIR போடாமயே காலம் தள்றாங்களே அதெப்படி? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
சரிங்க, புகார் பதிவு பண்ணி. முதல் தகவல் அறிக்கையும் போட்டாச்சி.
மேக்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கணும்?
விசாரணை (குமுச. பிரிவு 156.
Cognizable Offenceனு சொல்ற வாரண்ட் கேஸ்ல (கொலைக்குற்றம் ஒரு cognizable offenceதான்னு நேத்து பார்த்தோம்) ஸ்டேஷன் அதிகாரிக்கு (ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர்) சம்மந்தப்பட்ட மஜிஸ்டிரேட்டின் எழுத்து பூர்வமான உத்தரவு இல்லாமலேயே, புகாரை விசாரிக்க அதிகாரம் உண்டு. மற்ற குற்றங்களில் மஜிஸ்டிரேட்டின் உத்தரவுக்குப் பிறகே விசாரணையை துவக்க முடியும்.
சாதாரணமா, எல்லா ஸ்டேஷன்லயும் ஒரு ஆய்வாளர் இருப்பார். அவர்தான் அந்த ஸ்டேஷனோட தலைமை அதிகாரி. அவருக்குக் கீழ சட்டம் ஒழுங்கு (Law & Order), க்ரைம் (Crime)னு ரெண்டு பிரிவுகள் இருக்கும். சின்ன ஊர்ல இருக்கற சின்ன ஸ்டேஷன்ல தலைமை அதிகாரியே துணை/உதவி ஆய்வாளராத்தான் இருப்பார். ஸ்டேஷன்ல வர்ற எல்லா புகாரையுமே இவர்தான் விசாரிச்சாவணும்.
ஆனால் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மாதிரி நகரங்கள்லருக்கற ஏறக்குறைய எல்லா ஸ்டேஷன்லயும் இந்த ரெண்டு முக்கிய பிரிவுகளுக்கும் தனித்தனியா உதவி/துணை ஆய்வாளர்கள் (Sub Inspectors) இருப்பாங்க. கொலைக் குற்றங்கள விசாரிக்க வேண்டிய பொறுப்பு க்ரைம் செல் எஸ்.ஐக்குத்தான். ஆனால் சென்சிட்டிவா (sensitive) கருதப்படற சில கேஸ்கள்ல ஆய்வாளரோ அல்லது அவருக்கும் மேல இருக்கற டி.எஸ்.பி அல்லது எஸ்.பியோ கூட நேரடியா விசாரணையில இறங்கலாம். அல்லது அவர்களுடைய தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணையை நடத்தலாம்.
கொலைக்களம் (Scene of crime)
கொலைக்குற்றங்களில் விசாரணையின் முதல் கட்டமே கொலை நடந்ததாக கூறப்படும் இடத்தை பார்வையிடுவதுதான்.
ஆனால் விசாரணை அதிகாரி கூட அங்க கொலையாகி கிடக்கறவரோட உடலையோ அங்க கிடக்கற பொருட்களையோ கையுறை இல்லாமல் தொடக் கூடாதாம். அதாவது கொலைக்குற்றத்தை நிரூபிக்க மிக முக்கியம்னு கருதப்படற எந்த ஆதாரங்களையும் கலைச்சிறக் கூடாது இல்லையா? அத்தோட குற்றவாளி அல்லது அவருடைய கூட்டாளிகளின் கைரேகைகள் ஏதாச்சும் இவர் கைபட்டு அழிஞ்சிறக் கூடாதுங்கறதுக்காகத்தான் இந்த கன்டிஷன்.
சாதாரணமா அங்க கிடக்கற தடயங்களை கலெக்ட் பண்றதுக்குன்னே தனித்தனியா டீம்ஸ் (Teams) இருப்பாங்க. ஒவ்வொரு சிட்டியிலயும் இதுக்குன்னு எக்ஸ்பேர்ட்ஸ் இருக்கற குழுக்கள் இருக்கும். கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள், ஃபோட்டோ, வீடியோ கிராஃப் எடுக்கறவங்க, மோப்ப நாய் ஸ்க்வாட் இப்படீன்னு இருப்பாங்க. ஸ்பாட்டுக்கு போற அதிகாரி இந்த டீம்கள கூப்ட்டு விஷயத்த சொல்லிட்டாலே அவங்க ஸ்பாட்டுக்கு வந்து என்னென்ன செய்யணுமோ செஞ்சிட்டு அவங்கவங்க ரிப்போர்ட்ட இன்வெஸ்ட்டிகேஷன் பண்ற அதிகாரிக்கு அனுப்பிச்சிருவாங்க. ஆனா சின்ன ஊர்ங்கள்ல ஸ்பாட்டுக்கு போற எஸ்.ஐ.யே கையில க்ளவுச போட்டுக்கிட்டு ஸ்பாட்ல கிடக்கற கேசுக்கு யூஸ் ஆவலாம்னு நினைக்கற எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிருவாரு.
அதுக்கப்புறம் பிறகு மர்டர் ஸ்பாட்டை ஒரு வரைபடமா (Rough sketch) தயாரிக்கணுமாம். சாலை விபத்து நடந்த இடத்துல கிடக்கற பாடிய (Body) சுத்தி சாக்பீஸால கோடு வரைஞ்சிருக்கறத பாத்திருப்பீங்கன்னு நினைக்கறேன். அதே மாதிரி கொலை நடந்த இடத்துல கிடக்கற உடல சுத்தியும் க்ளியரா தெரியறா மாதிரி லைன் (Line) வரைஞ்சி மார்க் பண்ணணும். அதுமட்டுமில்லாம பாடிய சுத்தி கிடக்கற எல்லாத்தையும் சோபா, மேசை, நாற்காலி அப்படீன்னு எது இருந்தாலும் ஒவ்வொரு ஐயிட்டமும் இருந்த பொசிஷன (position) குறிச்சிக்கணும். சாதாரணமா இந்த திங்ஸ் (things) கிடக்கற இடங்கள ஒரு கடிகாரத்துல ஒவ்வொரு மணியும் எப்படி அமைஞ்சிருக்கோ அதுமாதிரி குறிச்சி நோட் பண்ணுவாங்க. அதாவது பாடிக்கு வலது பக்கத்துல இருக்கறத at 3. 0' clockம்பாங்க. இடது பக்கம் கிடந்தா 9 0' க்ளாக். கீழ் பக்கம் இருந்தா 6 0' க்ளாக்.. அப்படீன்னு எல்லா பொருட்களும் கிடந்த இடத்த குறிச்சி மொத்த இடத்தையும் ஒரு டிராயிங் மாதிரி வரைஞ்சிருவாங்க. அதுல கொலை எங்க நடந்தது, கட்டடத்தோட பேர் என்ன, flatல நடந்துருந்தா அந்த flat நம்பர், எந்த தளம், ரோட்டு விலாசம், ஓனர் வேற யாராச்சும்னா அவரோட பேர் இப்படி எல்லாத்தையும் குறிச்சிக்குவாங்க. ரோட்ல கிடக்கற பாடின்னா அதுக்கு பக்கத்துலருக்கற கடைகளோட பேர், விளக்கு கம்பம் (lamp post) ஏதாச்சும் இருந்தா அதுல இருக்கற நம்பர், பக்கத்துல ஏதும் பஸ் ஸ்டாப் இருந்திச்சின்னா அது பாடி கிடந்த எடத்துலருந்து எத்தன சென்டி மீட்டர் தூரம் இப்படீன்னு ஸ்பாட்ட ஈசியா ஐடென்டிஃபை பண்றதுக்கு உதவி பண்ணக் கூடிய எல்லாத்தையும் நோட் பண்ணி அதுக்கு ரெண்டு மூனு காப்பி எடுத்து ஸ்டேஷன்ல இந்த கேசுக்குன்னு ஒரு ஃபைல் கட்டு ரெடி பண்ணி அதுல வச்சிருவாங்க.
புகைப்படம், வீடியோ
அடுத்தபடியா மர்டர் ஸ்பாட்ட ஃபோட்டோ, வீடியோ எடுக்கறது. நான் மேல சொன்ன வரைபடத்தை உடனே தயாரிக்க முடியாம போற பட்சத்தில இந்த புகைப்படங்களும் வீடியோவும் ரொம்பவுமே ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். ஏன்னா கொலைய செஞ்சிட்டு தப்பிச்சி போயிட்ட கொலையாளிய கண்டுபிடிக்கறதுக்கு ஆரம்ப கட்டத்துல ரொம்பவும் ஹெல்ப்ஃபுல்லா இருக்கறது இந்த ஃபோட்டோஸ் மற்றும் வீடியோஸ்தான். சேலம் கொலைவழக்குல இந்த ரெண்டையுமே சம்மந்தப்பட்ட போலீஸ் ஆஃபீசர்ங்க செய்யாததால மீடியா ஆளுங்க எடுத்திருந்த ஃபோட்டோவ கொஞ்சம் தரீங்களான்னு கெஞ்ச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுதாம். இது வேணும்னே செய்யப்பட்ட வேலைன்னு பிஜேபி ஆளுங்க சொன்னதுல உண்மையிருக்கோ இல்லையோ நமக்கு தெரியாது. ஆனா இப்படியாபட்ட குற்றச்சாட்டை போலீஸ் தவிர்த்திருக்கலாம்னுதான் தோனுது.
பார்வை அறிக்கை (visit report)
கொலை நடந்த இடத்த (Murder spot) விசிட் பண்ண அதிகாரி அடுத்ததா செய்ய வேண்டிய வேலை அதப்பத்திய ஒரு அறிக்கைய ரெடி பண்றது. இத விசிட் பண்ண எடத்துலயே வச்சி தயாரிச்சிறணும்னு இலாக்கா தன்னோட அதிகாரிகள்கிட்ட சொல்லியிருக்கு. அந்த ரிப்போர்ட்ல ஸ்பாட்லருக்கற ரெண்டு responsible individuls கிட்டருந்து சாட்சி கையெழுத்தும் வாங்கிறணுமாம்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை கைப்பற்றுதல் (Seizure)
ஸ்பாட்லருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயூதம், பொருட்கள் - உதாரணத்துக்கு ரத்த கறை படிஞ்ச கத்தி, ஆடைகள், கொலையாளி விட்டுட்டுபோனதுன்னு சந்தேகப்படற எதுவானாலும் அத விசாரணைக்கு போற அதிகாரி கைப்பற்றி அத உடனே ஒரு பட்டியல் மாதிரி தயார் பண்ணி அதுலயும் ஸ்பாட்லருக்கற ரெண்டு பேரோட சாட்சி கையெழுத்தையும் வாங்கிரணுமாம். இந்த பட்டியல தயாரிக்கறதுக்குன்னு தமிழ்நாடு போலீஸ் ஒரு தனி படிவம் (printed form)வச்சிருக்கு. இந்த லிஸ்ட்டும் ரொம்பவும் முக்கியமான டாக்குமென்டா கருதப்படுது. இந்த லிஸ்ட்ல இல்லாத எதையுமே கேஸ் கோர்ட்டுக்கு வரும்போது போலீஸ் produce பண்றதுக்கு கோர்ட்டோ இல்ல defense வக்கீலோ அனுமதிக்கமாட்டர்ங்கறதால இது ரொம்பவும் முக்கியமான வேலைன்னு போலீஸ் இலாக்காவோட பல சர்க்குலர்கள் (circulars) சொல்லுது . இத சீரியசா எடுத்துக்காததாலேயே தள்ளுபடியான பல கேஸ்களும் இருக்காம், இதாலேயே இதுவரைக்கும் கொலையாளி யாருன்னு கண்டுபிடிக்க முடியாத கேஸ்களும் இருக்காம்.
வாக்குமூலங்கள் (statements) - குமச.161- 162
கொலைய நேர்ல பாத்த அல்லது கேள்விபட்ட நபர்கள் போலீஸ் கிட்ட சொல்ற விஷயங்களத்தான் அவங்களோட வாக்குமூலமா ரிக்கார்ட் பண்ணி கோர்ட்ல தாக்கல் பண்ணுவாங்க. நேரில் கண்ட சாட்சியங்களை Eye Witness என்றும் கேள்விப்பட்டத போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்றவங்களை Informerனும் போலீஸ் சொல்றாங்க.
இவங்க சொல்றத சேகரிக்கும் காவல்துறை அதிகாரிகள் எப்படி செயல்படணும்னு கு.மு.ச 161-162 பிரிவுகள் விலாவாரியா சொல்லுது.
அதன்படி சாட்சிகள் சொல்றத தெளிவா குறிச்சிக்கறதோட அத அவங்களுக்கு படித்து காண்பித்து சரிபார்த்துக்கொள்றதும் அவசியமாம். அத்துடன் கொலை நடந்த இடத்துலருந்து அவர் எவ்வளவு தூரத்துல இருந்தார், இருந்தார், அப்போ இரவா, பகலா? இரவு என்றால் அங்கு போதிய வெளிச்சம் இருந்துதான்னுல்லாம் விசாரிச்சா மட்டும் போறாது, அவங்களோட வாக்குமூலத்திலயும் அது க்ளியரா சொல்லப்பட்டிருக்கணுமாம்.
இந்த சந்தர்ப்பத்துல நா ரொம்ப நாளைக்கி முன்னால பார்த்த ஒரு ஆங்கில படத்துல வந்த சீன் ஒன்ன சொல்றேன். அந்த படத்தோட பேரு My Cousin Vinny. அமெரிக்காவிலுள்ள அலபாமா ஸ்டேட்ல ஒரு கடையில நுழைஞ்சி கவுன்டர்ல இருந்த கேஷியர்கிட்டருந்து பணத்தை எடுத்துக்கிட்டு அவர சுட்டுட்டு ரெண்டு பசங்க கார்ல தப்பிச்சி போயிருவாங்க. ஏறக்குறைய இருட்டற நேரம். நடந்த கொலையை சுமார் நூறடி தூரத்துல கடைக்கு எதிர்ல இருக்கற flatல குடியிருக்கற ஒரு அறுபது வயது லேடி பாத்ததா சாட்சியம் சொல்வாங்க. ஆனா அவரோட வயச வச்சி பாக்கறப்போ அவ்வளவு தூரத்துலருந்து அதுவும் ராத்திரி நேரத்துல தப்பிச்சி போனவங்கள க்ளியரா பாத்து அடையாளம் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லைன்னு defense வக்கீல் வாதாடுவார். அத proof பண்றதுக்கு கோர்ட்டுக்குள்ளவே அந்தம்மா நிக்கற சாட்சி கூண்டுலருந்து டேப்ப வச்சி நூறடி தூரம் அளந்து அங்க போயி நின்னுக்கிட்டு தன் இரு கை விரல்களை காட்டி இது எத்தனைன்னு கேப்பார். கண்ணாடி இல்லாம பாக்க முடியாத அந்த லேடி கண்களை சுருக்கிக்கிட்டு பார்த்துட்டு மூனு விரல்னு சொல்லுவார். அதை வைத்தே அந்த சாட்சி அளித்த சாட்சியம் சொல்றத நம்பமுடியலைன்னு proof பண்ணி கேச ஜெயிச்சிருவார். ஆகவே நேரில் பார்த்ததா சொல்ற ஆளோட வயசும் அவர் ஸ்பாட்லருந்து எவ்வளவு தூரத்துல இருந்தார் அப்போ சூரிய ஒளி இருந்துதா இல்லன்னா போதிய வெளிச்சம் இருந்துதான்னுல்லாம் பாக்கறதும் ரொம்பவும் முக்கியம்.
மேலும், ஏற்கனவே தயாரிச்சி ஃபைல்லருக்கற FIR காப்பியிலருக்கற விஷயத்தோட சாட்சி சொல்றதுல ஏதாச்சும் பெரிசா வித்தியாசம் இருந்தா அதைப் பற்றியும் விவரமா விசாரிச்சி குறிச்சிக்கணும். அதுக்கு ஏத்தா மாதிரி வாக்குமூலத்துல கரெக்ஷன் பண்ண வேண்டியதிருந்தா வாக்குமூலம் எடுக்கறப்பவே செஞ்சிரணும். போலீஸ் ஸ்டேஷன்ல வச்சி எடுக்கற வாக்குமூலத்துல சாட்சியோட கையெழுத்து வாங்க தேவையில்லைன்னும் சட்டம் (கு.மு.ச. பிரிவு 162) சொல்லுது. சாதாரணமா போலீஸ் எடுக்கற வாக்குமூலத்த கோர்ட்ல சாட்சியமா யூஸ் பண்ண முடியாது. ஆனா இத அரசு தரப்பு வக்கீல் சாட்சி கூண்டுல வச்சி விசாரிக்கறதுக்கு பயன்படுத்திக்கலாம்.
அதுமட்டுமில்லை. வாக்குமூலத்தை பதிவு செய்த விசாரணை அதிகாரியின் பெயரும் அவருடைய கையொப்பமும் கூட ஒவ்வொரு வாக்குமூலத்திலும் இருந்தா நல்லதுன்னு சொல்லுது காவல்துறையோட கையேடு. இல்லைன்னா குற்றப் பத்திரிகை தாக்கல் செய்றப்போது அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரே கூட அத்தகைய வாக்குமூலத்தால் பயன் ஏதும் இல்லை என்று கூறி குற்றப்பத்திரிகையுடன் இணைத்து தாக்கல் செய்ய மறுத்துவிடக் கூடும். வாக்குமூலங்கள் எழுத்தில் தயாரிக்கப்படும்போது அதில் அடித்தல் திருத்தல் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும். இல்லைன்னா அந்த கரெக்ஷன்சையே குற்றவாளிக்கு சாதகமாக defense வக்கீல்ங்க திருப்பிறுவாங்களாம்.
இதுவரைக்கும் போலீஸ் எடுத்த நடவடிக்கைகள் மூலமாவே குற்றவாளி யாராக இருக்கக் கூடும்னு இன்வெஸ்ட்டிகேஷன் அதிகாரியால டிசைட் பண்ணியிருக்க முடியும்கறதால அடுத்தது அவரை கைது செய்வதுதான்.
அத நாளைக்கி பாக்கலாம்.
தொடரும்..
பதிலளிநீக்குஇதுவரை படித்ததில் சந்தேகம் இல்லை. தொடர்கிறேன். கடைசியில் கேள்விகள். இப்போது மாதிரிக்கு ஒன்று, சட்டத்தில் இருப்பதும் நடைமுறையில் இருப்பதும் வித்தியாசமாக இருக்கிறதே..இல்லையா.?
//இதுக்கு மேல தெளிவா சொல்ல முடியுமான்னு தெரியலை. //
பதிலளிநீக்குதெளிவாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். இப்போது குழப்பம் ஏதும் இல்லை. பகிர்ந்தமைக்கு நன்றி.
இந்திய குற்றவியல் முறைச் சட்டத்தில் சொல்லியுள்ளபடி நமது காவல்துறையினர் செய்தால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். ஆனால் நடைமுறையில் அவ்வாறு நடப்பதில்லையே!
கடைசியில் கேள்விகள்.//
பதிலளிநீக்குகண்டிப்பா கேளுங்க சார். ஒரு பதிவு முழுமைப் பெறுவது அதற்கு கருத்துரைகள் மூலமாகத்தான். சில சமயங்களில் நம் மனதில் உள்ள அனைத்துமே எழுத்தில் வடித்துவிட முடிவதில்லை. அவற்றை முழுமையாக வெளிக்கொணர்வது உங்களை மாதிரி உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளாலதான்.
இப்போது மாதிரிக்கு ஒன்று, சட்டத்தில் இருப்பதும் நடைமுறையில் இருப்பதும் வித்தியாசமாக இருக்கிறதே..இல்லையா.?//
நான் இந்த பதிவை சுமார் இரண்டு மாத காலம் ஆய்வு செய்து எழுத இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வெறும் பொழுதுபோக்கிற்காகவே எழுதிக்கொண்டிருக்காமல் பயனுள்ள எதையாவது எழுதலாமே என்ற எண்ணம். இரண்டாவது காரணத்தை இந்த மினி தொடரின் இறுதிப்பதிவில் சொல்கிறேன்.:))
இந்திய குற்றவியல் முறைச் சட்டத்தில் சொல்லியுள்ளபடி நமது காவல்துறையினர் செய்தால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். ஆனால் நடைமுறையில் அவ்வாறு நடப்பதில்லையே! //
பதிலளிநீக்குஇதையேதான் GMB சாரும் கேட்ருக்கார்.
உண்மைதான். சட்டத்தில் ஓட்டை நிறைய இருக்கிறது. அதன் வழியாகத்தான் பல குற்றவாளிகள் தப்பித்துக்கொள்கின்றனர் என்பதுதான் போலீஸ் தரப்பினர் பொதுவாக கூறும் குற்றச்சாட்டு. ஆனால் எனக்கென்னவோ சட்டம் மிகத் தெளிவாகத்தான் உள்ளது. நாட்டில் நடைபெறும் அனைத்து குற்றங்களையும் இப்போதுள்ள சட்டங்களை வைத்தே எந்த குற்றவாளிக்கும் தண்டனை பெற்றுத் தந்துவிட முடியும். அதை சரிவர செயல்படுத்தும் திறன் யாருக்கு இருக்க வேண்டுமோ அவர்களுக்கு இல்லாமல் இருப்பதுதான் பெரிய குறை.
முதலில் சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு நம்மைப் போன்றவர்களிடம் இருக்க வேண்டும். இந்த எண்ணத்தோடுதான் இதை எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் இதுவரை இதை நூறு பேர் கூட படிக்கவில்லை என்பதை பார்க்கும்போது எதற்கு இந்த தேவையில்லாத வேலை என்று தோன்றுகிறது. படித்தவர்களே இப்படியென்றால் பாமரனை சொல்லி என்ன பயன். இந்த அறியாமைதான் சில அத்துமீறல்களுக்கும் காரணமாகிவிடுகிறது.
விரிவான விளக்கங்கள்......
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
இந்திய தண்டனைச் சட்டத்தை மிக அற்புதமாய் விளக்கி இருக்கிறீர்கள்
பதிலளிநீக்குவந்து படித்து பார்த்து உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்த வெங்கட் நாகராஜ் மற்றும் கண்ணதாசன் அவர்கள் இருவருக்கும் மிக்க நன்றி... இன்னும் மூன்று பதிவுகள்தான்.....
பதிலளிநீக்குவிறுவிறுப்பா, ராஜேஷ்குமார் நாவல் படிக்கிற மாதிரியே இருக்கு.. இன்னும் மூணு பதிவு இருக்கா? சீக்கிரம் போடுங்க.
பதிலளிநீக்குAs a common citizen, I have not come across so much information about the law and police force. I believe basic rights and duties of a good citizen to be taught in the school as a compulsory subject. In my view, you are lucky if you never happen to deal with law and police. Because, I never heard anything good about such experience. Expecting the next portion of this article. Thanks.
பதிலளிநீக்குபிரமாதம் ஜோசப் சார் . ரொம்ப Informative.
பதிலளிநீக்குபதிவின் நீளம் கொஞ்சம் அதிகமா இருக்கு. நிறைய பதிவுகள் ஆனாலும் பரவாயில்லை.
நாங்கள் படிக்க தயார்.
இது போன்ற தகவலகளை இதுவரை வலையில் தமிழில் படித்ததா ஞாபகம் இல்லை
தொடருங்கள்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கருண். அடுத்த பகுதி நாளைக்கே.. வெள்ளிக்கிழமை முடிந்துவிடும்.
பதிலளிநீக்குnever heard anything good about such experience//
பதிலளிநீக்குYou are absolutely right. Not only you no one has. People are afraid of the Police mostly because of their ignorance of law and what Police can or cannot do. They use this ignorance to their advantage.
பதிவின் நீளம் கொஞ்சம் அதிகமா இருக்கு.//
பதிலளிநீக்குஅஞ்சி நாளைக்கி மேல தொடர்ந்தா படிக்கறவங்களோட ஆர்வம் குறைஞ்சிப்போயிருமேன்னுதான் கொஞ்ச நீளமா போடவேண்டியதாயிருச்சி.
இது போன்ற தகவலகளை இதுவரை வலையில் தமிழில் படித்ததா ஞாபகம் இல்லை //
ஆங்கிலத்தில் நிறைய இருக்கு. தமிழில் இல்லை என்பதுதான் உண்மைதான். தமிழில் சட்டப்புத்தகங்கள் கூட அவ்வளவாக இல்லை. ஏன் என்று தெரியவில்லை.