23 ஆகஸ்ட் 2013

சேரன் மகள் தாமினியின் மனமாற்றத்திற்கு யார் காரணம்?


ரெண்டு மாசமா ஊரையே கலக்கிக்கிட்டிருந்த சேரன் - தாமினி - சந்துரு விஷயம் ஒருவழியா க்ளைமாக்ஸ் முடிஞ்சி சுபம்னு போட்டாச்சி.

ஆனா இதுக்கு பின்னால யார், யாரெல்லாமோ சதி செஞ்சிருக்காங்கன்னு சந்துரு சைட் வக்கீல்ங்க புலம்பிக்கிட்டிருக்காங்க. 

ஒருவேளை அவங்களுக்கு வந்துக்கிட்டிருந்த ஃபீசும் இலவசமா கிடைச்சிக் கிட்டுருந்த பப்ளிசிட்டியும் போயிருச்சேங்கற ஆதங்கமும் (வயித்தெரிச்சல்னு சொன்னா நல்லாருக்காதே!) ஒரு காரணமாருக்கும்.

இதுல ஒரு பெரிய பங்கும் நீதிமன்றமும் ப்ளே பண்ணியிருக்காங்கன்னும் சொல்றாங்களாம்.  சந்துரு ஹேபஸ் கார்பஸ் மனு போட்டதும் தாமினிய ஆஜராக்கியாச்சி. உடனே அத தள்ளுபடி செஞ்சி தீர்ப்பளிக்காம எதுக்கு கேஸ ரெண்டு வாரத்துக்கு தள்ளி வச்சாங்க? கேஸ் நிலுவையிலருக்கறப்போ தாமினிய அரசு காப்பகத்துல வைக்காம சேரன் அன்ட் கோ ஈசியா அப்ரோச் பண்ணி அவர ப்ரெய்ன் வாஷ் பண்றதுக்கு வசதியா அவரோட நண்பர் வீட்லயே தங்க வச்சது எதுக்காக?  நீங்களும் வேணும்னா தாமினிய பாத்து பேசலாம்னு சந்துரு அன்ட் கோவுக்கும் பர்மிஷன் இருந்தாலும் எதிராளியோட
நண்பர் கஸ்டடியில இருக்கறப்போ அவங்களால எப்படிங்க அந்த பொண்ணோட பேச முடியும்னு கேக்கறாங்களாமே?  சேரனுக்கு ஆதரவா ஒட்டுமொத்த கோலிவுட்டே தாமினிய டெய்லி போயி பாத்து பேசி ஒருவழியா அவர இந்த முடிவுக்கு வரவச்சாங்களாமே?

இதெல்லாம் இப்போதைக்கி விடை தெரிஞ்சிக்க முடியாத கேள்விங்க...

எப்படியோ இப்போதைக்கி இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துருச்சி.... இது நல்ல முடிவா இல்ல இந்த முடிவுலயே தாமினி நிலைச்சி நிப்பாங்களா?

இந்த கேள்விகளுக்கும் காலந்தாங்க பதில் சொல்லணும்....

சரி... நா இன்னைக்கி சொல்ல வந்த விஷயத்த சொல்றேன்...

என்ன இது அதுக்குள்ள முடிச்சிட்டீங்கன்னு கேக்கறீங்களா? என்னங்க பண்றது?

இந்திய ரூபாயின் மதிப்பு ஏன் தொடர்ந்து வீழ்ந்து வருகிறது
 
இந்த பதிவுக்கு இப்படி தலைப்பு குடுத்துருந்தா எத்தனை பேர் படிச்சிருப்பீங்க?

அதனாலதான் இந்த பம்மாத்து வேலை...!

தலைப்ப பாத்துட்டு வந்து மாட்டிக்கிட்டீங்க இல்ல.... திட்டறத திட்டிட்டு வந்ததுக்கு முழுசா படிச்சிட்டு போயிறுங்க..

போன ஒரு மாசமாவே நம்ம நாட்டு பணத்தோட மதிப்பு விழுந்துக்கிட்டே வர்றத பார்த்துக்கிட்டு இருக்கோம். குறிப்பா அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பு கழுத தேஞ்சி கட்டெறும்பான கதையா குறைஞ்சிக்கிட்டே போவுது.

இதுக்கு உண்மையிலேயே என்னங்க காரணம்?

அதையெல்லாம் பாக்கறதுக்கு முன்னால எதுக்கு இந்த மாதிரி ஏறுது, இறங்குதுன்னு நமக்கு புரியற பாஷையில  பாக்கலாம்.

சாதாரணமா சந்தையில எந்த பொருளோட மதிப்பும் (மதிப்புன்னா விலைன்னு வச்சிக்கலாம்) ஏறவோ இறங்கவோ செஞ்சா அதுக்கு நம்மள மாதிரி ஜனங்க, குறிப்பா வாங்கறவங்க மத்தியில இருக்கற அந்த பொருள் மேல இருக்கற விருப்பும் வெறுப்பும்தான் முக்கிய காரணம். அதாவது, ஒரு பொருள் எனக்கு ரொம்ப தேவைன்னா அது எவ்வளவு விலை இருந்தாலும் வாங்கிறணும்னு தோனும். அதுக்கு நேர் மாறா ஒரு பொருள் எனக்கு தேவை இல்லைன்னா அது எவ்வளவு சீப்பா கிடைச்சாலும் வாங்கணும்னு தோனாது.

ரெண்டாவது, அது சந்தைக்கு வர்ற அளவு. சந்தையில ஒரு பொருள் ஜாஸ்தியா கிடைக்குதுன்னா அதாவது அத விரும்பி வாங்கறவங்களோட எண்ணிக்கையை விட அதிகமா கிடைச்சிதுன்னா அதோட விலை இறங்கத்தான் செய்யும்.

உதாரணத்துக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னால நார்த்ல பல இடங்கள்லயும் மழை அடிச்சி கொளுத்திச்சி. இதனால வெங்காய சாகுபடி நினைச்சபடி நடக்கல. அதனால வெங்காய சப்ளைக்கு நார்த் இந்தியாவையே நம்பியிருந்த நம்ம சந்தையிலயும் வெங்காய வரத்து கணிசமா குறைஞ்சிருச்சி. வரத்து குறைஞ்சிதே தவிர நம்மோட தேவை குறையல.  அதனால கிலோ பதினோரு ரூபாய்க்கு வித்துக்கிட்டிருந்த வெங்காயம் படிப்படியா அதிகரிச்சி இப்போ அறுபது ரூபாய எட்டிப் புடிச்சிருக்கு.

இத ஆங்கிலத்துல சொன்னா the prices of a commodity goes up when the supply is unable to meet the demand. இன்னும் சிம்பிளா சொல்லணும்னா ஒரு பொருளோட சந்தை வரத்து அதன் தேவையைக் காட்டிலும் அதிகமா இருந்தா அதன் விலை குறையும். அதுக்கு நேர் எதிரா தேவை வரத்தை விட அதிகமா இருந்தா அதன் விலை உயரும் (when the suplly is more than the demand the prices go down. It goes up when demand is more than the supply.). 

இதுதான் விலைவாசி ஏறி இறங்குவதன் அடிப்படை நியதி (basic principle)

இதை அப்படியே இந்திய ரூபாயின் மதிப்புடன் ஒப்பிட்டு பாக்கலாம்.

அன்னிய செலவாணி சந்தையில் (forex market) டாலருக்கு (ஏனெனில் இப்போதும் உலக வர்த்தகத்தில் வாங்கல் விக்கல் எல்லாமே டாலரில்தான் நடக்கிறது) ஏற்படும்  தேவைகள்தான் அதன் மதிப்பை (விலையை) நிர்ணயிக்கின்றன.

இந்தியாவில் டாலருக்கு தேவை எப்போதெல்லாம் ஏற்படுகிறது?

1. நாட்டின் Trade deficit அதிகரிக்கும்போது. அதாவது நாட்டின் இறக்குமதி அதன் ஏற்றுமதியை விட அதிகரிக்கும்போது. ஒரு நாட்டின் ஏற்றுமதி மதிப்பிற்கும் அதன் இறக்குமதி மதிப்பிற்கும் இடையிலுள்ள வித்தியாசம்னு சொல்லலாம். ஆனா இந்த இரண்டுமில்லாத விஷயங்களும் இருக்கு. அத அப்புறம் பாக்கலாம். (இந்திய இறக்குமதியில் 35% பெட்ரோல் போன்ற எரிபொருட்களும் அதற்கு அடுத்தபடியாக 11% தங்கமும் இடம் பெறுதாம்).

2.அன்னிய முதலீட்டாளர்கள் தங்களுடைய இந்திய முதலீட்டை மீண்டும் தங்கள் நாட்டுக்கு திருப்பி எடுத்துக்கிட்டு போகும்போது.

இது ரெண்டும்தான் இன்றைய பரிதாப நிலைக்கு முக்கிய காரணங்கள்னு சொல்றாங்க.

இந்த ரெண்டுக்கும் அப்புறமும் விஷயங்கள் இருக்கு:

1. இந்திய நிறுவனங்கள் அன்னிய நாடுகளில் செய்யும் முதலீடுகள். (டாட்டா இங்கிலாந்துலருக்கற கோரஸ்னு ஒரு பெரிய ஸ்டீல் கம்பெனிய வாங்குனத இதுக்கு உதாரணமா சொல்லலாம்).

அதுமட்டுமில்லாம

2..மந்தமான இந்திய பொருளாதார சூழல். இங்க வந்து முதலீடு பண்ணா லாபம் வருமான்னு அன்னிய முதலீட்டாளர்கள் மனசுல ஏற்படற ஒரு தயக்கம். சமீப காலத்துல டாலர் முதலீடுகள் குறைஞ்சி போறதுக்கு இதுதான் முக்கிய காரணம்.  ஏற்கனவே செஞ்சிருந்த முதலீட்டையும் திருப்பி எடுத்துக்கிட்டு போய்கிட்டிருக்கறப்போ புது முதலீட்ட எதிர்பாக்கறது முட்டாள்தனம் இல்லையா?

3. அமெரிக்க மத்திய வங்கியின் பொருளாதார கொள்கைகளில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள்.

இந்தியாவுலருக்கற முதலீட்டையெல்லாம் மறுபடியும் அமெரிக்காவுக்கே கொண்டு போனதுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்? எங்க லாபம் ஜாஸ்தியோ அங்கதான முதலீட்டாளர்கள் போவாங்க? அதுதான் இப்ப நடக்குது. சமீபத்திய கணக்கெடுக்கின்படி இந்தியாவுல சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டிருக்காம். அதாவது சுமார் ரூ.90,000 கோடி!  இதுல பெரும்பங்கு இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. போன மூனு மாசமா இந்திய ஷேர் மார்க்கெட் யோயோ (yoyo)மாதிரி ஏறவும் இறங்கவும் அன்னிய முதலீட்டாளர்கள் எடுக்கறதும்
போடறதுமா இருக்கறதுதான் காரணம்.

உலக பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றங்கள்.

நேரு காலத்துலருந்து நரசிம்மராவ் காலம் வரைக்கும் இந்திய பொருளாதாரம் உலக பொருளாதாரத்துலருந்து விலகியே இருந்துதுங்கறது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்பல்லாம் உலக சந்தையில ஏற்படற எந்த மாற்றமும் நம்மை அவ்வளவா பாதிச்சதில்லை. ஆனா நரசிம்மராவ் காலத்துல இந்திய பொருளாதரத்துல தாரளமயமாக்கல்னு ஒரு புது கொள்கைய கொண்டு வந்ததுக்கப்புறம் இந்திய பொருளாதாரம் உலக சந்தையோட ஒருங்கிணைக்கப்பட்டாச்சி (integrated). அதாவது அன்னிய நாட்டுக்காரங்க அவங்க பணத்த இந்திய சந்தையில முதலீடு செய்றதுக்கு தாராளமா அனுமதிக்கப்பட்டாங்க. அத்தோட இந்திய கம்பெனிங்கள்ல ஒரு குறிப்பிட்ட விழுக்காடு முதலீடு செய்யவும் பர்மிட் செஞ்சாங்க. அதனால அமெரிக்க டாலர் அதிக அளவுல இந்தியாவுக்குள்ள வர ஆரம்பிச்சிது. இந்தியாவோட அன்னிய செலவாணி கையிருப்பும் ரிக்கார்ட்னு சொல்ற அளவுக்கு கட்டுக்கடங்காம அதிகமாச்சி. இதுக்கு நாங்கதான் காரணம்னு நரசிம்மராவ் அரசு மட்டுமில்லீங்க அவங்கள தொடர்ந்து வந்த NDAவும் சொல்லி எலெக்‌ஷன்ல ஓட்டு வாங்குனதும் உண்மை.

அப்பவே இந்த கொள்கை எதிர்காலத்துல இந்தியாவுக்கு எதிரா திரும்பும்னு எப்பவும் மாதிரியே கம்யூனிஸ்ட்காரங்க கூப்பாடு போட்டாங்க. அவங்க மட்டுமில்லாம அதுவரைக்கும் சந்தையை ஆட்டிப்படைச்சிக்கிட்டிருந்த டாட்டா, பிர்லா, அம்ம்பானி போன்ற இந்திய முதலாளிங்களும் இது சரியில்லைன்னாங்க. அன்னிய நாட்டு முதலீட்டாளர்கள் லாபம் கிடைக்கும்னுதான் இங்க வராங்க அது இல்லேன்னு ஆயிருச்சின்னா கண்ண மூடி திறக்கறதுக்குள்ள தங்களோட பணத்தை தூக்கிக்கிட்டு பறந்துருவானுங்க, ஆனா நாங்க அப்படியில்ல லாபம்னாலும் நஷ்டம்னாலும் நாங்க தொடர்ந்து சந்தையிலதான் இருப்போம்னாங்க. ஆனா வந்து குவிஞ்ச டாலரோட மயக்கம் அன்னைக்கி ஆட்சியிலிருந்தவங்களுக்கு - அது காங்கிரசானாலும் பிஜேபியானாலும் (இந்த ரெண்டு ஆட்சியிலயும் சில சமயங்கள்ல கம்யூனிஸ்ட்டும் பார்ட்னரா இருந்தாங்கங்கறதும் உண்மைதான். ஆனா அது அவங்களுக்கு மறந்து போச்சி) - புரியல, இல்லன்னா புரியாத மாதிரி பாவலா பண்ணாங்க.

அவங்க சுயநலத்தோட சொன்னாங்களோ இல்ல பொதுநலத்தோட சொன்னாங்களோ இப்ப அவங்க அன்னைக்கி சொன்னதுதான் நடக்குது. இங்க நிலமை சரியில்லேன்னு தெரிஞ்சதும் அன்னிய முதலீட்டாருங்க பணத்தோட
பறந்துக்கிட்டே இருக்காங்க.

இதுதான் இந்திய பணத்தின் வீழ்ச்சிக்கு காரணம்.

இதவிட சிம்பிளா சொல்லுங்களேன்ன்னு நீங்க சொல்றது கேக்குது.

அமெரிக்க டாலர் இந்தியாவுல யாருக்கெல்லாம் வேணும்னு பாக்கலாம் (அதாவது டிமான்ட் பண்றவங்க).

1. இறக்குமதி பண்றவங்களுக்கு. இவங்க இறக்குமதி பண்ற பொருட்களுக்கு காசு குடுக்கணும்னா டாலர்லதான் குடுக்கணும். அத அவங்க கணகு வச்சிருக்கற பேங்க்லருந்துதான் வாங்கணும். பேங்க் சந்தையிலருந்து வாங்கணும்.

அதாவது இன்னொரு பேங்க்லருந்து. எல்லா பேங்குகளும் சேர்ந்து நடத்தறதுதான் அன்னிய செலவாணி சந்தை (forex market).

2.அன்னிய முதலீட்டாளர்கள் தங்களோட முதலீட்டை மறுபடியும் எடுத்துக்கிட்டு போறப்பவும் அவங்களுக்கு டாலர்லயே திருப்பி குடுத்தாகணும். இதுக்கும் அன்னிய செலவாணி சந்தையிலருந்துதான் டாலர வாங்கணும்.

3.வெளிநாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்கள். இவங்களும் இந்த சந்தையிலதான் இந்திய பணத்த டாலரா மாத்தணும்.

இவங்க மூனு பேரும்தான் இந்த சந்தையிலருந்து டாலர வாங்கறதுல முக்கியமானவங்க.

இந்த சந்தையில டாலர விக்கறவங்க (அதாவது சப்ளை பண்றவங்க)
 
 
1. இந்திய ஏற்றுமதியாளர்கள்
 
இவங்க ஏற்றுமதி செஞ்ச பொருட்களோட விலை வெளிநாட்டுக்காரங்கக் கிட்டருந்து அவங்க பேங்க் வழியா டாலரா வரும். அத அப்படியே கையில வச்சிக்க முடியாது. குறிப்பிட்ட நாளுக்குள்ள சந்தையில வித்தாகணும்.

2.அன்னிய முதலீட்டாளர்கள்
 
இந்திய நிறுவனத்திலோ இல்ல பங்கு சந்தையிலோ முதலீடு செய்ய விரும்பற அன்னிய கம்பெனிங்க அவங்களோட டாலர், யூரோ, பவுன்ட் ஸ்டர்லிங் மாதிரி பணத்தையும் இந்த சந்தையிலதான் வித்தாகணும். அதாவது அவங்க முதலீடு எந்த கம்பெனிக்கு போய் சேருதோ அந்த கம்பெனிங்க அவங்க பேங்க் வழியா சந்தையில வித்துருவாங்க. பங்கு சந்தையில முதலீடு செஞ்சா அந்த பங்குகள அவங்களுக்கு வித்த ஆளுங்க (கம்பெனிங்க) அவங்களோட பேங்க் வழியா சந்தையில வித்துருவாங்க.

இவங்க ரெண்டு பேரும்தான் இந்த சந்தையில டாலர விக்கறதுல முக்கியமானவங்க.

டாலர விக்கறவங்கள சப்ளையருங்கன்னும் டாலர வாங்கறவங்கள டிமான்ட் பண்றவங்கன்னும் சொல்லலாம்.

இந்த சந்தையில டாலர் சப்ளையர்ங்கள விட டிமான்ட் பண்றவங்க ஜாஸ்தியானா டாலர் விலை கூடும். நேர் எதிரா இருந்தா டாலர் விலை குறையும்.

இதுதாங்க மேட்டரே... இத விட சிம்பிளா சொல்ல முடியாதுன்னு நினைக்கறேன்.

இந்த ஏத்த இறக்கத்துல தலையிட்டு ஏதாச்சும் செய்ய முடியும்னா அது இந்திய மத்திய ரிசர்வ் வங்கி இல்லன்னா ஆட்சியிலருக்கற மத்திய அரசு - குறிப்பா சொல்லணும்னா நாட்டின் நிதி மந்திரி.

ரிசர்வ் வங்கி நினைச்சா டாலர் எப்பல்லாம் விலை ஏறுதோ அப்போ தங்களோட கையிருப்புலருக்கற டாலர சந்தையில விக்கலாம். அதாவது டாலர் தேவைப்படற வங்கிகளுக்கு குடுக்கறது.

சந்தையில டாலர் எப்பல்லாம் அதிகமா வருதோ அப்பல்லாம் அத பேங்குகள்கிட்டருந்து வாங்கிக்கிறது.

அவங்க இல்லாம மத்திய அரசு செய்யக் கூடியது என்னன்னா இங்கருந்து போனாப் போறும்னு நினைக்கற அன்னிய முதலீட்டாளர்கள திருப்திப்படுத்தற விஷயமா ஏதாச்சும் செய்யிறது. சாதாரணமா டாலர் ஒரே சீரா உள்ள வந்துக்கிட்டே இருக்கறதுக்கு அன்னிய முதலீடு கொள்கையை ஒரே சீரா வச்சிக்கிட்டிருக்கறது ரொம்ப அவசியம். அது இல்லாம நினைச்சா நீங்க இஷ்டம் போல வரலாம்னு சொல்றது கொஞ்ச நாள் கழிச்சி நீங்க வரத்தேவையில்லேங்கறா மாதிரி புதுசு புதுசா கண்டிஷன் போடறதுன்னு ஒரு அரசு செஞ்சா இவனுங்கள நம்பி எப்படிறா நம்ம பணத்த இங்க வச்சிக்கிட்டிருக்கறது நினைச்சி இருக்கறவணும் ஓடிருவான்.

அதான் இப்ப மெயினா நடக்குது. புதுசா வரலாம்னு நினைச்சவனும் மனச மாத்திக்கிட்டா இங்க இருக்கறவனும் விட்டாப் போறும்னு ஓடிக்கிட்டிருக்கான்.

உதாரனத்துக்கு சில்லறை வணிகத்துல அன்னிய முதலீட்டாளர்களை அனுமதிக்கறதா வேணாமான்னு தெரியாம மத்திய அரசு ஆடுன ஆட்டத்த அவ்வளவு சீக்கிரம் அவங்க மறந்துருவாங்களா?

அதனால இப்பத்தைக்கி அன்னிய முதலீட்டாளர்கள் தாஜா பண்ணி இந்தியாவுக்குள்ள வரவைக்க முடியாதுங்கறது மத்திய அரசுக்கு தெரிஞ்சி போச்சி. வருமானம் குறைஞ்சி போச்சின்னா செலவ குறைச்சித்தான ஆகணும்? டாலர் உள்ள வர்றது குறைஞ்சிட்டதால வெளிய போற டாலரையாவது முடிஞ்ச மட்டும் குறைப்போம்னு நினைச்சி  செஞ்சதுதான்:
 
1. தங்க இறக்குமதி வரிய இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ஏத்துனது. இந்த வருசத்து மொத்த தங்க இறக்குமதி 850 டண் மேல போகக் கூடாதாம். ஆனா தங்கத்துக்கு இந்தியாக்காரங்க மத்தியில இருக்கற டிமான்ட் குறையவே இல்லையாம். அதனால இனியும் வரிய கூட்டறதுக்கு சான்ஸ் இருக்காம்! தங்கம்தான் அதிக லாபம் தரும்னு நினைச்சா அதிக விலையும் குடுத்துத்தான் ஆவணும், வேற வழியில்லை.

2. அதே மாதிரி பெட்ரோல் இறக்குமதியும். இந்திய மதிப்பு குறைஞ்சிக்கிட்டே இருக்கறவரைக்கும் பெட்ரோல் விலை ஏறிக்கிட்டேதான் இருக்கும். புலம்பி பிரயோஜனம் இல்லை. வேணும்னா வாரத்துக்கு ஒரு நாள் பஸ்லயோ, ஷேர் ஆட்டோவுலயோ இல்லன்னா சைக்கிள்லயோ ஆஃபீஸ்க்கு போங்க... உடம்பும் இளைக்கும்.

2. இந்திய கம்பெனிங்களோட அன்னிய முதலீட்டு அளவை குறைச்சது. இனி எந்த இந்திய கம்பெனியும் மத்திய அரசோட அனுமதியில்லாம அன்னிய கம்பெனிங்கள வாங்கிற முடியாது.  அவங்கக்கிட்ட டாலர் கையிருப்பு ஜாஸ்தியாருந்தா இந்திய சந்தையிலதான் விக்கணும்...

இந்த மூனையும்தாம் இந்திய அரசாங்கம் இப்பத்தைக்கி செய்ய முடியும்.

இன்னொன்னும் செய்யலாம். நிறைய இந்திய ஐ.டி. கம்பெனிங்க (இன்ஃபோசிஸ் இதுல முக்கியமான கம்பெனி) தங்களோட டாலர் பணத்த அயல்நாட்டு வங்கிகள்ல குவிச்சி வச்சிருக்கறதா கேள்வி. அதையெல்லாம் திரும்ப இங்க கொண்டு வரணும்னு ஒரு கன்டிஷன் போடலாம். அதுக்கு ஏதாச்சும் வரி விலக்கு அளிச்சாலும் அது உடனே ரிசல்ட் குடுக்க வாய்ப்பிருக்கு. ஆனா அவ்வளவு நாட்டுப்பற்று உள்ளவங்க இல்லை நம்ம முதலாளிங்கங்கறது வேற விஷயம்.

இது தேர்தல் வருடம். அதனால பார்லிமென்டையே ஒழுங்கா நடத்த முடியாம தடுமாறுற ஒரு அரசாங்கத்தால அன்னிய முதலீட்டாளர்கள மறுபடியும் இந்தியாவுக்குள்ள வர வைக்கிற மாதிரி பெரிய பொருளாதார முடிவுகள் எடுக்க முடியாதுங்க. அப்படியே எடுத்தாலும் இப்ப இருக்கறவங்க வர்ற தேர்தல்ல தோத்துட்டா அடுத்த வர்ற அரசு என்ன செய்யுமோன்னு அன்னிய முதலீட்டாளர்க நினைப்பாங்க இல்ல?

அதனால காருக்கு டிங்கரிங் பண்றா மாதிரி இப்பத்தைக்கி இத தட்டி, அத தட்டி மேனேஜ் பண்ண வேண்டியதுதான்.

அதத்தான் ப.சிதம்பரம் செஞ்சிக்கிட்டிருக்கார்.

இன்றைய நிலமையில யார் அந்த பதவியில இருந்தாலும் இதத்தான் செய்ய முடியுங்க...

வீணா புலம்பி எந்த பிரயோஜனமும் இல்லை....

அன்னிய செலவாணி சந்தையில ரூபா மதிப்பு விழுந்தா ஆட்டோமேட்டிக்கா நேரடிய பலனடையப் போறது யாருன்னு தெரியுதா? இன்னைக்கி இதப்பத்தி கொஞ்சம் சத்தமாவே புலம்பற அயல்நாட்டுல வேலை செய்யிற நம்ம ஆளுங்கதான்.

டாலர்ல சம்பாதிக்கறவங்களுக்கு இது ஒரு எதிர்பார்க்காத வரப்பிரசாதம்தானே.... போன மாசம்வரைக்கு, 500 டாலர் (25,000/-) வீட்டம்மாவுக்கு அனுப்பிக்கிட்டுருந்த இந்தியாகாரர் இந்திய ரூபா இப்படியே விழுந்து ஒரு டாலருக்கு ரூ.70/-ன்னு ஆவுதுன்னு வையிங்க... அப்போ அவர் அனுப்பற 500 டாலரோட மதிப்பு ரூ.35,000/- ஆயிருமே... அவரோட வீட்டம்மாவுக்கு ஒரேயடியா ரூ.10000/- இன்க்ரிமென்ட் கிடைச்சா மாதிரிதானே?

அத நினைச்சி சந்தோஷப்படறத விட்டுப்போட்டு... எதுக்கு நாட்டப் பத்தி கவலைப்படறீங்க?

சரிங்க, என்னெ மாதிரி இந்தியாவுல சம்பாதிக்கறவங்களுக்கு இதனால பெருசா இழப்பிருக்கா? பெட்ரோல் விலை ஏறும். அத தவிர பெருசா இழப்பு நமக்கு இருக்கப்போவதில்லை... தங்கம் விலை ஏறும். அதால பாதிக்கப்படப் போறவங்க எத்தனை சதவிகிதம் இருப்பாங்க? விடுங்க கவலைய.

இன்னொரு விஷயமும் சொல்றேன்.. இந்த பண வீழ்ச்சி இந்தியாவுல மட்டுமில்லீங்க BRICS நாடுகள்னு சொல்ற நாடுகள்ல சீனா மற்றும் கனடாவ தவிர பிரேசில், ரஷ்யா மட்டுமில்லாம இந்தோனேஷியா, தாய்லாந்து மாதிரியான நாடுகள்லயும் நிலையும் இதேதான்....

எங்கல்லாம் பொருளாதாரம் மந்த நிலையிலோ இருக்கோ... யாரெல்லாம் அன்னிய முதலீட்டாளர்களை நம்பி பொழப்ப நடத்தறாங்களோ அங்க எல்லாமே இதே நிலைதான்...
********

 

27 கருத்துகள்:

 1. இந்த பதிவுல டாலர், டாலர்ன்னு வருதே, அது என்ன முருகன் டாலரா இல்ல பெருமாள் டாலரா?!

  பதிலளிநீக்கு
 2. ‘இந்திய ரூபாயின் மதிப்பு ஏன் தொடர்ந்து வீழ்ந்து வருகிறது’ என்று பலரும் புரியாமல் விழித்துக்கொண்டிருக்கும்போது, மிகவும் எளிதாக புரியும் வகையில் எடுத்துக்காட்டுடன் விளக்கியமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்!

  ‘சேரனின் மகளின் மனமாற்றத்திற்கு யார் காரணம்’ என்ற தலைப்பைப்பார்த்து மாட்டிக்கொண்டவர்களும் இந்த பதிவை படித்ததும் உங்களை பாராட்டுவர் என்பது உறுதி.

  தொடுங்கள் இது போன்ற சிக்கலான விஷயங்களை உங்கள் பதிவில். .

  பதிலளிநீக்கு

 3. முதலில் தலைப்பை பார்த்ததும் ஒதுங்கி விட நினைத்தேன். இருந்தாலும் நம்ம ஜோசப் என்ன சொல்றார்னு பார்க்க வந்தேன். பல விஷயங்கள் புரிகிற மாதிரி இருந்தாலும் எனக்கு என்னவோ நேரத்துக்கு நேரம் ரூ. மதிப்பு மாறுவதும் , பங்கு சந்தையில் புள்ளிகள் ஏறுவதும் குறைவதும் பெரும்பாலும் SPECULATION ஆல்தான் என்று தோன்றுகிறது. சாமானியனைப் பொறுத்தவரை நேற்றைக்கும் இன்றைக்கும் பெரிய மாறுதல் இல்லை. பொருட்களின் விலையும் சப்லை டிமாண்ட் என்று மட்டும் இருந்தால் , ஏன் ஏறத்தாழ எல்லா தொலைக் காட்சிப் பெட்டிகளும் கிட்டத்தட்ட ஒரே ரேஞ்சில் விற்கின்றன. ? புரியாதவை நிறையவே இருக்கு சார்.

  பதிலளிநீக்கு
 4. Great post Boss ...! Thank u very much for a detailed post .

  ரெம்ப விசயங்கள விவரமா இப்பத்தாங்க தெரிஞ்சுகிட்டேன் . ரெம்ப எளிமையா , என்ன மாதிரி மரமண்டைக்கே புரியுற மாதிரி எழுதீருக்கீங்க . ரெம்ப ரெம்ப நன்றி பாஸ் .


  பதிலளிநீக்கு
 5. மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்...
  நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம் ...!!

  தொடு வானம் இனி தொடும் தூரம்
  பல கைகளை சேர்க்கலாம்...

  விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்
  அதில் கள்ளிப்பூ முளைக்குமா....?

  பதிலளிநீக்கு
 6. //என்னெ மாதிரி இந்தியாவுல சம்பாதிக்கறவங்களுக்கு இதனால பெருசா இழப்பிருக்கா? பெட்ரோல் விலை ஏறும். அத தவிர பெருசா இழப்பு நமக்கு இருக்கப்போவதில்லை..//

  This is a chain reaction. Once the Petrol price increases all the commodity prices will go up. Whoever brings money from overseas may be willing to pay more price for properties as they bring the same amount in dollars but higher in Rupees. Here we buy better rice from India. But even, if I am willing to pay the same equivalent Rupees in India, I won’t be getting the same quality stuff. Overall, it is not good for the locals, as we are importing more than exports.

  பதிலளிநீக்கு
 7. சேரன்மகள் விஷயத்தில் நாணயமான ஒரு நல்ல தீர்ப்பை சொல்லி விட்டார்கள். முடிந்துபோன விஷயம்.

  ரூபாய் மதிப்பு ஏறுகிறதா இறங்குகிறதா என்று யாரும் கவலைப்படுவதில்லை. பத்திரிக்கைக்காரர்களும் டீவியில் விவாதம் செய்பவர்களும்தான் இதுபற்றி பேசுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 8. ராஜி said...

  அது என்ன முருகன் டாலரா இல்ல பெருமாள் டாலரா?!//

  எப்படி வேணும்னால் வச்சிக்கலாம். காசேதான் கடவுளடா அது அந்த கடவுளுக்கும் தெரியுமடான்னு சும்மாவா சொன்னாங்க:)

  பதிலளிநீக்கு
 9. வே.நடனசபாபதி said...
  ‘இந்திய ரூபாயின் மதிப்பு ஏன் தொடர்ந்து வீழ்ந்து வருகிறது’ என்று பலரும் புரியாமல் விழித்துக்கொண்டிருக்கும்போது, மிகவும் எளிதாக புரியும் வகையில் எடுத்துக்காட்டுடன் விளக்கியமைக்கு நன்றி. //

  நன்றி சார்.

  ‘சேரனின் மகளின் மனமாற்றத்திற்கு யார் காரணம்’ என்ற தலைப்பைப்பார்த்து மாட்டிக்கொண்டவர்களும் இந்த பதிவை படித்ததும் உங்களை பாராட்டுவர் என்பது உறுதி. //

  பாராட்டறாங்களோ இல்லையோ இனி இந்த விஷயத்தைப் பற்றி தெரிந்துக்கொள்ளாமலேயே தங்கள் மனம் போன போக்கில் எழுத மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. தொடுங்கள் இது போன்ற சிக்கலான விஷயங்களை உங்கள் பதிவில். .//

  சட்டம், பொருளாதாரம், போன்றவைகளை 'பாமரனின் பார்வையில்...' என்ற தலைப்பில் அவ்வப்போது எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்....

  பதிலளிநீக்கு
 11. ஜீவன்சுப்பு said...
  என்ன மாதிரி மரமண்டைக்கே புரியுற மாதிரி எழுதீருக்கீங்க . //

  அப்படியொரு மண்டை இருக்கா என்ன? அப்படிப்பார்த்தா நானும் ஒரு ம.ம.தான்:)

  பதிலளிநீக்கு
 12. திண்டுக்கல் தனபாலன் said...//

  என்னமோ சொல்லியிருக்கீங்க ஆனா இந்த மரமண்டைக்கி என்னன்னு புரியல...

  வருகைக்கும் புரியாத மாதிரி சொன்ன கருத்துக்கும் நன்றி:))

  பதிலளிநீக்கு
 13. முதலில் தலைப்பை பார்த்ததும் ஒதுங்கி விட நினைத்தேன். இருந்தாலும் நம்ம ஜோசப் என்ன சொல்றார்னு பார்க்க வந்தேன். //

  நல்லவேளை. இல்லன்னா இப்படியொரு அருமையான கேள்வி வந்திருக்குமா?

  பல விஷயங்கள் புரிகிற மாதிரி இருந்தாலும் எனக்கு என்னவோ நேரத்துக்கு நேரம் ரூ. மதிப்பு மாறுவதும் , பங்கு சந்தையில் புள்ளிகள் ஏறுவதும் குறைவதும் பெரும்பாலும் SPECULATION ஆல்தான் என்று தோன்றுகிறது.//

  Speculation இருக்கத்தான் செய்யிது. ஆனா அதனால இந்த அளவுக்கு பாதிப்பு இருக்காது.

  பொருட்களின் விலையும் சப்லை டிமாண்ட் என்று மட்டும் இருந்தால் , ஏன் ஏறத்தாழ எல்லா தொலைக் காட்சிப் பெட்டிகளும் கிட்டத்தட்ட ஒரே ரேஞ்சில் விற்கின்றன. ? புரியாதவை நிறையவே இருக்கு சார்.//

  இந்த மாதிரி luxury பொருட்கள் இந்த அடிப்படை நியதிக்கு அப்பாற்பட்டவை. அதைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் ஒரு தனிப் பதிவே எழுத வேண்டும். திங்கள் அல்லது செவ்வாய் அன்று எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 14. This is a chain reaction. Once the Petrol price increases all the commodity prices will go up.//

  True. But price of petrol has been steadily increasing over the past several years. The common man has by now learned the art of survival despite rise in prices of almost all commodities.

  Here we buy better rice from India. But even, if I am willing to pay the same equivalent Rupees in India, I won’t be getting the same quality stuff.//

  I don't how far it is true unless you have lived in India for a while. I've a different experience. I buy finest possible rice (not basmati) available in the market for Rs.60/- per kilo. Whenever I travel to Malaysia where my daughter is settled I carry a 5 Kilo packet my consumption as I could not find rice of the same quality leave alone the price. It will last for about a month. I never stay for more than that. You can't find a decent quality of rice at that price in KL! There the lowest quality boiled rice cost 7 ringitt which is equivalent to Rs.140/-!

  Compared to any foreign country Indian commodity is cheap only in India.

  பதிலளிநீக்கு
 15. தி.தமிழ் இளங்கோ said...
  சேரன்மகள் விஷயத்தில் நாணயமான ஒரு நல்ல தீர்ப்பை சொல்லி விட்டார்கள். முடிந்துபோன விஷயம்.//

  இதையும் காலம்தான் சொல்ல வேண்டும். நீதிமன்றங்கள் யாருடைய வாழ்விலுள்ள பிரச்சினைகளையும் தீர்த்துவிடுவதில்லை.

  பத்திரிக்கைக்காரர்களும் டீவியில் விவாதம் செய்பவர்களும்தான் இதுபற்றி பேசுகிறார்கள்.//

  இவர்களுடன் ப்ளாகர்களும், முகநூல் ஆசாமிகளும் என்று எழுதலாம். ஒருசிலர் இதைப்பற்றி தவறாக எழுதியதால்தான் நானும் இதைப்பற்றி எழுதலாம் என்று நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
 16. சேரனுக்கு ஆதரவா ஒட்டுமொத்த கோலிவுட்டே தாமினிய டெய்லி போயி பாத்து பேசி ஒருவழியா ???? இந்திய மதிப்பு குறைஞ்சிக்கிட்டே இருக்கறவரைக்கும் பெட்ரோல் விலை ஏறிக்கிட்டேதான் இருக்கும். //கவலையா இருக்கு

  பதிலளிநீக்கு
 17. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்.

  பதிலளிநீக்கு
 18. கவியாழி கண்ணதாசன் said...

  கவலையா இருக்கு//

  அதுதான் நமக்கு ஈசியா வர்றதாச்சே:)

  பதிலளிநீக்கு
 19. இப்படியொரு தமிழில் வந்த நல்ல பொருளாதார கட்டுரையை சேரன் என்ற பெயர் வந்ததாலே சினிமா பகுதிக்கு மாத்திட்ட தமிழ்மணத்தை என்னன்னு சொல்வது.
  சேரன் மகள் காதல் தமிழ்சமுதாயத்தின் காதல் வெறுப்பு கொள்கை படி காதல் கொலையில் முடிஞ்சிருக்கு.

  பதிலளிநீக்கு
 20. தலைப்பில் சேரன் பேரைப் பார்த்து படிக்காம போயிட்டேன். வெகநரி கமென்ட் பார்த்து தான் படித்தேன்.

  பதிலளிநீக்கு
 21. //Indian commodity is cheap only in India//

  We are using India gate classic basmathi rice, for which the price for 10 kg’s varies from 25 to 30 A$. And for cashew we pay 11 to 16 $ per kg, for good a quality. An A$ was 40Rs and now it is about 60 Rs. I checked the price in Chennai online stores, I found for rice it is 140 Rs per kg. & for cashews it is 800 Rs per kilo. As I know the prices should be cheaper in US than Australia. Now days, we are buying stuffs like apparels, shoes in online from US and other countries. When India banned Ponni rice for exports, we were still getting the rice in different name. I guess the exporters get some tax benefit or something, in selling the produce in dollars. Here, Ponni and idlyrice all around the same price as the basmathi rice. I remember reading a story “Sevvazhai” , where a farmer’s kids give up their home grown bananas to the rich man than eating themselves.

  பதிலளிநீக்கு
 22. நல்ல பொருளாதார கட்டுரையை சேரன் என்ற பெயர் வந்ததாலே சினிமா பகுதிக்கு மாத்திட்ட //

  ஒரு பொருளாதார கட்டுரைக்கு சினிமாக்காரர் பேரை தலைப்புல போட்டதும் தப்புத்தானே. இந்த கட்டுரை அதிகம் பேரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த தலைப்பை வைத்தேன். படித்தார்களோ இல்லையோ சுமார் 2500 வந்திருந்தனர். ஆனாலும் இது ஒரு மோசடி வேலைதானே...

  மேலும் தமிழ்மணத்தில் பதிவுகளை பிரித்து பட்டியலிடுவதுதன் systemதானே தவிர manualஆக யாரும் செய்வதில்லை என்று நினைக்கிறேன். தலைப்பு மற்றும் லேபிள்களை வைத்து அதனதன் ப்ரிவில் மென்பொருள் பட்டியலிட்டுவிடுகிறது.

  பதிலளிநீக்கு
 23. தலைப்பில் சேரன் பேரைப் பார்த்து படிக்காம போயிட்டேன். வெகநரி கமென்ட் பார்த்து தான் படித்தேன்//

  எப்படியோ வந்துட்டீங்க... நன்றி.

  இனி இப்படிப்பட்ட தலைப்புகளை வைத்து பதிவர்களை ஏமாற்றுவதில்லை என்று உறுதிமொழி எடுத்திருக்கிறேன்:)

  பதிலளிநீக்கு
 24. We are using India gate classic basmathi rice, for which the price for 10 kg’s varies from 25 to 30 A$. And for cashew we pay 11 to 16 $ per kg, for good a quality. An A$ was 40Rs and now it is about 60 Rs. I checked the price in Chennai online stores, I found for rice it is 140 Rs per kg. & for cashews it is 800 Rs per kilo.//

  At Rs.60/- per Aus$ 10 kg basmati rice @ Aus$30=1800/- i.e. per kg.Rs.180/- whereas the same quality basmatice rice at Reliance Fresh is only Rs.120/- ie. 2/3rd of Rs.180/- is not cheaper? However, who is using basmatic rice for everyday use in India? It is used only fried rice and biriyani. Here most of us use Ponni which is easily available in almost all the malls/stores 5kg packs and 20 kg sacks @ Rs.50 to 60/- per kg.

  பதிலளிநீக்கு