Don't wash your dirty linen in Publicனு சொல்வாங்க.
அதத்தான் செஞ்சிக்கிட்டிருக்கார் இயக்குனர் சேரனும் அவருடைய ஆத்மார்த்த நண்பர் என்று கூறிக்கொண்டு செயல்பட்டு வரும் இயக்குனர் அமீரும்.
பிள்ளைப்பாசம் சிலரை பைத்தியமாக்கிவிடும் என்பார்கள். அது இவர் விஷயத்தில் உண்மைதான் என்று காட்டுகிறது.
இந்த விஷயத்தப் பத்தி எதுக்கு எழணும், இது அவரோட தனிப்பட்ட விஷயமாச்சேன்னுதான் இதுவரைக்கும் எழுதாம இருந்தேன்.
ஆனா போன ஒரு வாரமா ராஜ் தொலைக்காட்சியில் கோப்பியம் என்ற நிகழ்ச்சியில் இவரும் இவருடைய நண்பர் அமீரும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சேரனின் மகள் தாமினியின் காதலர் எனப்படும் சந்துருவையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி பேசுவதைக் கேட்டபோது என்ன ஆச்சி இவருக்கு என்றுதான் கேட்க தோன்றியது. அதைப் பற்றி எழுதினால்தான் என்ன என்றும் தோன்றியது.
இப்போது இளவயதில் காதல்வயப்பட்டு பெற்றோர் எத்தனை எடுத்துச் சொல்லியும் கேளாமல் தான் விரும்பியவரைத்தான் கைபிடிப்பேன் என்று அடம்பிடிக்கும் இளைஞர்கள் இல்லாத குடும்பம் இருக்கிறதா என்ன? கணக்கெடுத்துப் பார்த்தால் இன்று நாட்டிலுள்ள ஏன் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இத்தகைய பொருத்தமில்லாத காதல்கள் கோடிக்கணக்கில் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. இது வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற நிலைதான்.
சேரன் நிலையில் இருக்கும் ஒரு தந்தை என்ன செய்திருக்க வேண்டும்?
இந்த விஷயத்தை ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து இருவேறு கோணங்களிலிருந்து அணுகியிருக்கலாம்.
ஒன்று இதெல்லாம் இந்த வயதில் சகஜம் என்று கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். தாமினியைப் போன்ற இளைஞர்களுக்கு பள்ளிப் பருவத்திலோ அல்லது கல்லூரி பருவத்திலோ இனக்கவர்ச்சியால் ஏற்படுகிற ஈர்ப்பு காலப்போக்கில் காதலாக கனியாமலேயே போய்விடக்கூடும். ஆகவே இதை தங்களுடைய அனுபவத்தால் உணரக் கூடிய பெற்றோர்கள் அதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அப்படியே தெரிய வந்தாலும் என்ன நடக்கிறது என்றுதான் பார்ப்போமே என்றோ அல்லது அவர்களாக தங்களிடம் வந்து கூறட்டுமே என்று காத்திருப்பார்கள்.
இரண்டாவது வகை பெற்றோர் தன்னுடைய மகனோ மகளோ காதல் செய்கிறார் என்று தெரிய வந்ததுமே அதை ஊதி பெரிதாக்கி அடுத்து குடியிருப்போருக்கெல்லாம் கேட்கும்படி கூப்பாடுபோடுவார்கள். மகளாக இருந்தால் கேட்கவே வேண்டாம். மானமே போய்விட்டது, வானமே தங்கள் மீது விழுந்துவிட்டது, ரோட்டில் நடக்கவே முடியாதபடி செய்துவிட்டாயே என்றெல்லாம் மகளை வசைபாடியதோடு நிற்காமல் அவளை வீட்டை விட்டு வெளியில் போகக்கூடாது என்றும் அடைத்துவிடுவார்கள்.
சேரன் ஒரு ரெண்டும்கெட்டான் தந்தையாக இருந்திருக்கிறார்.
தன்னுடைய மகளுடைய முகநூலில் சந்துரு வந்து I love you என்று போட்டதைப் பார்த்துவிட்டு மகளை பெருந்தன்மையுடன் லைக் போட்டு அதை தொடர அனுமதித்திருக்கிறார். அப்போது தன்னுடைய மகள் இன்னும் படிப்பை முடிக்கவில்லை என்பதோ அல்லது அவளுடைய காதலனுக்கு ஒழுங்கான வேலை ஏதும் உள்ளதா என்பதெல்லாம் அவருக்கு பெரிதாக படவில்லை. தன்னுடைய அந்த பெருந்தன்மையை மிகப் பெருமையாகவும் பத்திரிகையாளர்களிடம் கூறியதை உலகமே பார்த்தது, கேட்டது.
பிறகு அவளுடைய காதலனுக்கு சரியான வேலையில்லை என்பதை கேள்விப்பட்டிருக்கிறார். அதை தன்னுடைய மகளிடமும் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் அவருக்கு அது ஒன்று பெரிய விஷயமாகப் படவில்லை. அந்த வயதில் காதலில் மூழ்கிப்போனவர்களுக்கு சாதாரணமாக ஏற்படும் பிரமைதான் அது. ஆனால் அது சேரனுக்கு பெரிய விஷயமாக படுகிறது.
சந்துருவை அழைத்துப் பேசுகிறார். தன்னுடைய மகளும் படித்து முடிக்க வேண்டும், நீங்களும் பொருளாதாரத்தில் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் ஆகவே ஒரு மூன்றாண்டு காலம் இருவரும் காத்திருங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறார். இதிலும் தவறேதும் இல்லை. பெண்ணைப் பெற்றவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்.
ஆனால் அதற்கும் அவருடைய மகளும் சரி சந்துருவும் சரி செவிமடுக்கவில்லை. அவர்கள் எப்போதும் போலவே மொபைலில் பேசுவதும் சேர்ந்து வெளியில் சென்று வருவதுமாக இருந்துள்ளனர். இதை அறிந்த சேரன் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர சந்துருவின் குடும்பத்தாரை அழைத்து பேசுகிறார். இருவரும் மூன்று வருடம் காத்திருக்க வேண்டும் என்றும் அதுவரை இருவரும் பேசவோ சந்திக்கவோ கூடாது என்றும் கண்டிஷன் போடுகிறார்.
பதிலுக்கு அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தாமினி-சந்துருவின் தொலைபேசி பேச்சும் வெளியில் சேர்ந்து சென்று வருவதும் சேரனுக்கு தெரியாமல் தொடர்கிறது.
அப்போதும் காரியம் ஒன்றும் விபரீதமாகவில்லை. ஆனால் சுமார் மூன்று மாதங்கள் கழித்து தாமினி தன் தந்தையிடம் 'சந்துருவிடம் என்னால் பேசாமல் இருக்க முடியல, அதுக்கு பதிலா செத்துப் போவலாம் போலருக்குப்பா' என்று கூறியதாக சேரனே பத்திரிகையாளரிடம் கூறியதை கேட்டோம். அதைக் கண்டு மனமிளகிப்போன சேரன் அவரே தன்னுடைய மொபைலில் சந்துருவை அழைத்து இருவரையும் பேச வைத்ததாகவும் ஆனால் தான் பேசாமல் இருந்ததாக தன்னிடம் தாமினி கூறிய அந்த மூன்று மாதங்களும் அவர்கள் இருவரும் தினமும் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருந்ததை தான் விசாரித்து தெரிந்துக்கொன்டதாகவும் அதே பத்திரிகையாளரிடம் கூறுகிறார்.
சந்துரு தன்னுடைய மகள் முன்பாகவே அவளைப் பற்றி அவதூறாக தன்னுடைய மற்ற பெண் சிநேகிதிகளிடம் குறை கூறினார் என்று வருத்தப்படும் சேரனும் அதையேதான் பத்திரிகையாளர் முன்னிலையில் செய்தார் என்பதை எப்படி மறந்துப் போனார்? மூன்று மாதங்களாக சந்துருவிடம் பேசவில்லை என்று தன்னிடம் உண்மைக்குப் புறம்பாக தாமினி சொன்னார் என்று பேசியது அவரை ஒரு பொய் பேசும் பெண் என்று கூறுவதுபோல் இல்லையா?
தன் மகளின் இந்த பித்தலாட்டத்தால் கொதிப்படைந்த சேரன் அவரை வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது என்று சினிமா பாணியில் கட்டளையிடுகிறார். அதே சினிமா பாணியில் சமயம் பார்த்து வீட்டைவிட்டு வெளியேறும் தாமினி சந்துருவின் வீட்டிற்கு சென்றுவிடுகிறார். பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் தன்னிடமே திரும்பி வந்து சந்துரு மிக மோசமானவன், தன்னை வைத்துக்கொண்டே மற்ற பெண்களுடன் மொபைலில் பேசுகிறான், அவன் தனக்கு எந்த சந்தோஷத்தையும் அளிக்கவில்லை என்றெல்லாம் புகார் கூறியதாகவும் கூறுகிறார்.
ஆனால் சந்துருவோ தாமினி தன்னுடன் இருந்த மூன்று மாதங்களில் அவளை நல்லவிதமாகத்தான் நடத்தினேன் என்றும் அவளுடைய உடல் மீது என்னுடைய விரல் கூட பட்டதில்லை என்றும் ஆனால் சேரனோ அவளுக்கு வர்ஜின் டெஸ்ட் கூட நடத்திப் பார்த்தார் என்றும் பத்திரிகையாளர் முன்பு கூறி மானத்தை வாங்கிவிட்டார்.
சொந்த மகளுக்கே வர்ஜின் பரிசோதனையா என்று வியந்துபோனேன் நான். இந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஒரு பொறுப்புள்ள தந்தை செய்யக் கூடிய காரியமா இது? தன்னுடைய மகளுடைய நடத்தை மீதே ஒரு தகப்பன் சந்தேகப்பட்டால் அந்த மகளின் மனது என்ன பாடுபடும்? தன்மானமுள்ள எந்த இளம் பெண்ணும் நிச்சயம் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டாள். எப்படி அவருடைய தாயும் இந்த சோதனையை நடத்த அனுமதித்தார் என்பதும் புரியவில்லை. சரி தாமினிக்கு உடல்ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை மருத்துவ பரிசோதனைகள் கூறிவிட்டிருக்கும். ஆனால் அத்தகைய சோதனைகளுக்கு அவளுடைய சம்மதம் இல்லாமல் உட்படுத்தியிருந்தால் அதனால் ஏற்படக்கூடிய மன ரீதியான பாதிப்பின் வீரியம் சேரனுக்கு தெரியுமா?
இதுபோதாது என்று சேரனின் நண்பர் அமீர் தன்னுடைய நண்பரின் குடும்பத்திற்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு சந்துருவின் குடும்ப பின்னணியை ஆராய்ந்து தினமும் ஒரு குற்றச்சாட்டை பத்திரிகையாளர் முன்னால் வைப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. இதை எதற்கு பத்திரிகையாளர்களிடமும் அவர்கள் மூலமாக உலகிற்கும் அவர் தெரிவிக்க வேண்டும்? இதை ஆதாரபூர்வமாக சேரனின் மகள் தாமினியிடம் அளித்து அவருடைய மனதை மாற்ற முயற்சிக்க அல்லவா செய்திருக்க வேண்டும்?
இவர்கள் மீதான வழக்கு விசாரணையை நீதிமன்ற கூடத்தில் வைத்து நடத்தினால் தாமினி போன்ற ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை கெட்டுவிடுமே என்ற நல்லெண்ணத்தில் தங்களுடைய தனி அறையில் விசாரணையை நடத்த சம்மதித்த நீதியரசர்கள் எங்கே சொந்த மகளென்றும் பாராமல் அவரைப் பற்றி பத்திரிகையாளர்கள் முன்னால் குறை கூறி அலையும் இவர் எங்கே?
ஒருவேளை அவருடைய இத்தகைய முட்டாள்தனமான நடவடிக்கைகள்தான் இன்று தாமினியை தன்னுடைய தந்தைக்கு எதிராக நிற்க வைத்துள்ளதோ என்னவோ?
இதுவெல்லாம் போதாது என்பதுபோல் சந்துரு மற்றும் குடும்பத்தாரைப் பற்றி உளவுதுறை அதிகாரிகள் விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் முன்வைத்து அமீர் கோரிக்கை விடுகிறார்.
இதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா?
வாருங்கள் பார்ப்போம்....
நேற்றும் அதற்கு முந்தைய தினமும் நான் இட்ட இரண்டு பதிவுகளில் நான் குறிப்பிட்டவற்றில் இருந்து Non-cognizable offences எனக் கருதப்படும் குற்றங்களில் மஜிஸ்டிரேட் வழங்கக்கூடிய கைது வாரண்ட் இல்லாமல் குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்ய முடியாது என்று கூறியிருந்தேன்.
சந்துரு மீது அமீர் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் யாவுமே இந்த வகையைச் சார்ந்தவைதான். மேலும் சந்துருவின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் மட்டுமே அவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியுமே தவிர இந்த விஷயத்தில் எந்த பாதிப்பும் அடையாத அமீர் அல்லது சேரன் போன்றவர்கள் சொல்வதையெல்லாம் வைத்து காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்க இயலாது என்பது அவருக்கு தெரியாது போல் இருக்கிறது.
இந்த வழக்கின் முடிவு எதுவானாலும் சேரனுக்கும் அவருடைய மகளுக்கும் இடையிலுள்ள உறவில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசல் அவ்வளவு எளிதில் சீராகப் போவது இல்லை என்பது மட்டும் நிச்சயம்.
சேரனின் விஷயத்தைப் பற்றி பேசியது போதும் என்று நினைக்கிறேன்.
இனி யார் குற்றவாளி தொடரில் நான் இன்று சொல்லவிருப்பதை படியுங்கள்..
இதுவரை காவல்துறை எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் மூலமாவே குற்றவாளி யாராக இருக்கக் கூடும்னு இன்வெஸ்ட்டிகேஷன் அதிகாரியால டிசைட் பண்ணியிருக்க முடியும்கறதால அடுத்த நடவடிக்கை அவரை கைது செய்வதுதான்.
கைது நடவடிக்கை.
நான் ஏற்கனவே கூறியுள்ளபடி பிடிவாரண்ட் இல்லாமல் கைது செய்யக் கூடிய குற்றங்களில் (Cognizable Offences) ஒன்று கொலைக்குற்றம். அதனால தடயங்கள் மற்றும் சாட்சிகள் மூலம் இவர்தான் குற்றவாளியாக இருக்க முடியும்கற சந்தேகத்துக்குள்ளானவரை காவல்துறை விசாரணை அதிகாரியே கைது செய்ய முடியும். காவல்துறை அதிகாரிக்கு இருக்கற இந்த அதிகாரத்தைப் பற்றி கு.மு.ச.41,42 மற்றும் 43வது பிரிவுகள் விரிவாக தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லீங்க, ஒருத்தரை கைது செய்றப்பவும் அதற்கு பிறகும் என்னவெல்லாம் செய்யணும்னுகறத கூட 43 முதல் 60 பிரிவு வரை ரொம்ப விளக்கமாக சொல்லியிருக்காங்க.
இந்த பிரிவுகள்ல சொல்லியிருக்கறத சுருக்கமா சொல்றேன்.
1. கைது செய்யப்படவர்கிட்ட எதுக்காக அவர கைது செய்யறோம்னு கைது பண்ற அதிகாரி அவர்கிட்ட தெளிவா சொல்லணும்.
2. அவர ஸ்டேஷனுக்கு கொண்டு போனதும் உடனே ஸ்டேஷன்லருக்கற டைரியில (Station Diary) அவர ஸ்டேஷனுக்கு கொண்டு வந்த தேதி, நேரம் எல்லாத்தையும் பதிவு செய்யணும்.
3. இன்னார இன்ன குத்தத்துக்காக கைது செஞ்சிருக்கோம்னு அவருடைய குடும்ப உறவினர், அப்படி யாரும் இல்லைன்னா, அவருடைய நண்பர்களுக்கு தொலைபேசி மூலமாவோ தந்தி மூலமாவோ உடனே தெரிவிச்சிறணும். (தபால் நிலைய தந்தி சேவை இதற்குத்தான் பெரும்பாலும் பயன்பட்டு வந்தது. ஆனால் செல்ஃபோன் வசதிகள் பெருகிவிட்ட நிலையில் தந்தி அனுப்பும் முறை இப்போது கைவிடப்பட்டுவிட்டது என்றே கூறலாம்.)
4. கைது செய்யப்பட்டவரை தேகப் பரிசோதனை செய்து (body search) அவர்கிட்டருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அல்லது ஆவணங்கள் எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு அதுக்குன்னு இலாக்கா வடிவமைச்சிருக்கற படிவத்தில் ஒரு ரிப்போர்ட் தயாரிக்கணும். இதுவும் மர்டர் ஸ்பாட்லருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலைப் போன்று மிகவும் முக்கியமானது. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த லிஸ்ட்ல இல்லாத எந்த பொருளையும் கேஸ் கோர்ட்ல விசாரயணையில இருக்கறப்போ குத்தவாளிக்கிட்டருந்து கைப்பற்றுனதா சமர்ப்பிக்க (produce) முடியாது. இந்த லிஸ்ட்ல கைது செய்யப்பட்டவரோட கையெழுத்தையும் அப்பவே வாங்கிறணும்.
5.கைது செய்யப்பட்ட நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள்ள அவர அருகிலுள்ள (அதிகார எல்லைக்குட்பட்ட) மஜிஸ்திரேட் முன்பு ஆஜர் பண்ணிறணும். அதுக்கப்புறம் அவர மேற்கொண்டு விசாரிக்கணும்னா நீதிபதியோட பர்மிஷனோட போலீஸ் கஸ்டடியில எடுத்து விசாரிக்கலாம். அதுக்கு நீதிபதி ஒத்துக்காத பட்சத்துல அவர் சிறையில் அடைக்கப்படுவார். ஆனால் பெண் கைதிகளுக்கு 24 மணி நேரம் வரைக்கும்லாம் காத்திருக்க தேவையில்லையாம். எவ்வளவு சீக்கிரம் அவரை மஜிஸ்திரேட் முன்னால ஆஜர் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும். இரவு நேரங்களில் பெண் கைதிகளை காவல்நிலையத்தில் வைத்திருக்கலாகாது என்ற உச்ச நீதிமன்றத்தில் ஆணையால் இந்த நியதி.
6. ஸ்டேஷன்ல வச்சிருக்கறப்போ - அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் - அவரை அடித்து துன்புறுத்தவோ அல்லது வற்புறுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி நிர்பந்திக்கவோ கூடாது. அப்படி பெறப்படும் எந்த வாக்குமூலமும் கோர்ட்ல செல்லாதுங்கறதும் முக்கியமான விஷயம். இது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துங்கறதால இந்த மாதிரியான அடாவடி நடவடிக்கையில் தகுந்த முகாந்தரம் இல்லாமல் இறங்கக் கூடாது என்று தமிழக காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பதும் உண்மை. ஆனால் குற்றவாளி தாமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவரை ஒரு மஜிஸ்டிரேட் முன்னால ஆஜர்படுத்திறணும். மஜிஸ்திரேட் அவர் எந்த வற்புறுத்தலும் இல்லாம தானா முன்வந்து ஒப்புக்கொள்றாராங்கறத உறுதிப்படுத்திக்கிட்டு அவர் சொல்ற வாக்குமூலத்தை எழுதி எடுத்துக்குவாரு. இப்படி வாங்கற வாக்குமூலத்த மட்டுந்தான் கோர்ட் ஏத்துக்கும்.
7. கைது செய்யப்படுபவரை தேவையில்லாமல் (unless it is absolutely necessary) கையில விலங்கு மாட்டியோ இல்ல கால சங்கிலியால கட்டியோ கூட்டிக்கிட்டு போகக் கூடாது (shall not be handcuffed and paraded in the street unnecessarily without the authority of the Court).
கைதியிடம் விசாரனை
கைது செஞ்சவர 24 மணி நேரத்திற்குள்ள கோர்ட்ல ஆஜர்படுத்தணுங்கற கண்டிஷன் இருக்கறதால பல சமயங்கள்ல அவர முழுமையா விசாரணை பண்ண முடியாம போறதுக்கு வாய்ப்பு இருக்கு. முக்கியமா, குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் குற்றத்தை ஒப்புக்காம இருக்கறப்போ அவர்கிட்டருந்து விசாரணை மூலமா வெளியக் கொண்டு வரவேண்டிய உண்மைகள் பல இருக்கலாம். அந்த மாதிரியான நேரத்துல அரெஸ்ட் பண்ணவர கோர்ட்ல ஆஜர் செஞ்சி தங்கள் பொறுப்பில் (Police custody) எடுத்து விசாரிக்க பர்மிஷன் கேக்கணும். சாதாரணமா இந்த மாதிரி ரிக்வெஸ்ட்ட கோர்ட் நிராகரிக்கறதில்லை. ஆனா போலீஸ் பத்து நாள் விசாரிக்கணும்னு கேட்டா கோர்ட் அதுல பாதிக்குத்தான் சம்மதிப்பாங்க. இத தெரிஞ்சி வச்சிருக்கற போலீஸ் அவங்களுக்கு எவ்வளவு நாள் வேணுமோ அதுல ரெண்டு மடங்கா கேப்பாங்களாம். ஆனா கைதிக்கு ஆதரவா ஆஜராகற வழக்கறிஞர் போலீசோட ரிக்வெஸ்ட்ட அவ்வளவு ஈசியா ஒத்துக்க மாட்டார். ஆனால் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு காவல்துறையினரின் விசாரணை இன்னும் முடிவடைஞ்சிருக்காதுன்னு நீதிபதி நினைச்சார்னா அவரை தொடர்ந்து விசாரணை செய்ய அனுமதிக்கறது வழக்கம். அப்படி மேற்கொண்டு போலீஸ் கஸ்டடி தேவையில்லைன்னு மஜிஸ்டிரேட் நினைச்சா அவர நேரடியா கோர்ட் கஸ்டடியில (judicial custody) வச்சாப் போறும்னு சொல்லிருவார். கோர்ட் கஸ்டடின்னா ஜெயில்வாசம்தான். ஆனா கொலைக்கான மேலும் சில ஆதாரங்கள் போலீஸ்க்கு கிடைக்கறபட்சத்துல கைதியை தங்கள் பொறுப்பில் எடுத்து விசாரணை செய்ய அனுமதிக்கணும்னு மறுபடியும் காவல்துறையினர் மனுதாக்கல் செய்யலாம்.
குற்றவாளியின் வீடு/அலுவலகம் சோதனையிடுதல்
கைது செய்யப்பட்டவர கோர்ட்ல ப்ரட்யுஸ் பண்றப்பவே அவரோட ஆஃபீஸ்/வீடு எல்லாத்தையும் சோதனை போடணும்னு சொல்லி போலீஸ் பெட்டிஷன் போட்டு கோர்ட்லருந்து Search Warrant வாங்கிருவாங்க. சாதாரணமா ஒருத்தர கைது செஞ்ச 24 மணி நேரத்திற்குள்ள இந்த சோதனையை செஞ்சாத்தான் அது effectiveஆ இருக்கும்னு போலீசுக்கு தெரியும். அத விட்டுட்டு சாவகாசமா searchக்கு போனா அதுக்குள்ள எல்லா தடயங்களையும் சம்மந்தப்பட்டவரோ இல்ல அவரோட ஆளுங்களோ மறைச்சிடறதுக்கு சான்ஸ் குடுத்தா மாதிரி ஆயிருமே. பல கேஸ்லருந்து குத்தவாளி தப்பிக்கறதுக்கு இந்த விஷயத்துல போலீசாரோட மெத்தனமும் ஒரு காரணம்னு பாதிக்கப்பட்டவங்க சொல்றதுக்கு வாய்ப்பிருக்கு. குற்றம் சாட்டப்பட்டவர் தடயங்களை மறைத்துவிட வாய்ப்பிருக்குன்னு போலீஸ் நினைச்சா கோர்ட் உத்தரவு கையில இல்லாமேயே கூட search பண்றதுக்கு சட்டத்துல இடம் இருக்கு. இந்த மாதிரி சமயத்துல இன்னின்ன காரணத்தால நாங்க சோதனைய துவக்கப் போறோம்னு ஒரு பெட்டிஷன கோர்ட்ல தாக்கல் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு செய்யலாம்னு கு.மு.ச. பிரிவு 165ல சொல்லியிருக்காங்க.
இந்த மாதிரி சோதனை நடத்தற போலீஸ் அதிகாரிங்க எப்படி செயல்படணும்னு கூட தமிழக காவல்துறை மிக விரிவாக தெளிவுபடுத்தியிருக்காங்க. அதுல சில முக்கியமான உத்தரவுகளை கீழ குடுத்துருக்கேன்.
1. சோதனைக்கு தேவையான நீதிமன்ற ஆணையை (search warrant) வீட்டில குடியிருக்கறவங்களுக்கு இல்லன்னா ஹவுஸ் ஓனருக்கு காட்டி அவரோட பர்மிஷனோடத்தான் சோதனை நடத்தவேண்டிய இடத்துக்குள்ள நுழையணும். அவங்க வேணும்னே பர்மிஷன் குடுக்க மாட்றாங்கன்னு போலீசுக்கு சந்தேகம் வந்தா வீட்டின் கதவு/ஜன்னல்களை உடைத்து திறக்கும் அதிகாரம்கூட போலீசுக்கு உண்டாம். ஆனாலும் கூடிய மட்டும் போலீஸ் அத தவிர்க்கணும்.
2.சோதனையை துவக்குறதுக்கு முன்னாலயே அக்கம்பக்கத்துலருக்கற இரண்டு பொறுப்பான ஆளுங்கள சாட்சியா அழைச்சிக்கணும்.
3.குற்றத்திற்கு சம்மந்தமில்லாத பொருட்களை/ஆவணங்களை அழிக்கவோ சேதப்படுத்தவோ கூடாது.
4.சோதனையின்போது வீட்டிலுள்ளவர்களை தனிநபர் சோதனைக்கு (தேகப் பரிசோதனை ) உட்படுத்த காவல்துறை ஆய்வாளருக்கு அதிகாரம் உண்டுன்னாலும் அவர்கள் பெண்களாக இருக்கும்பட்சத்தில் பெண் காவலர்கள் மட்டுமே அத்தகைய சோதனையை செய்ய வேண்டும்.
5.சோதனை நடத்தறப்போ கிடைக்கற எல்லா பொருட்களையும் அங்கேயே அதற்கென காவல்துறை இதுக்காக வச்சிருக்கற படிவத்தில் பட்டியலிட்டு கூட இருந்த சாட்சியங்களோட கையெழுத்தையும் வாங்கிறணும். இது ரொம்ப முக்கியம். ஏற்கனவே சொன்னா மாதிரி இதுல இல்லாத பொருட்களை கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ணவும் முடியாது. இதுல இருக்கற பொருட்களை ப்ரொட்யூஸ் பண்ணாம இருக்கவும் முடியாது.
6.கூடிய மட்டும் பட்டியல் அடித்தல்/திருத்தல் இல்லாமல் இருக்க வேண்டும். இல்லன்னா அதுவே கைதி கேஸ்லருந்து விடுபட வாய்ப்பாயிரும்.
இன்னும் இரண்டே பதிவுகள்தான்...
ஆரம்ப கட்டத்திலிருந்தே சேரன் போக்கு எனக்கு பிடிக்கவில்லை
பதிலளிநீக்குமகள் தவ்றே செய்திருந்தாலும் சாதாரண தகப்பன் இப்படில்லாம் வெளில சொல்லாம மனசுக்குள் போட்டு புழுங்குவான். பொண்டாட்டிக்கிட்ட பெசினாலும் பக்கத்து வீட்டுக்கு தெரிஞ்சு அதனால, தன் மகள் வாழ்வு பாதிக்குமோன்னு பொசுங்குவானே தவிர வாய் விட்டு சொல்ல மாட்டான். பணம் அப்படி அவங்களை பேச வைக்குது.
பணம் அப்படி அவங்களை பேச வைக்குது.//
பதிலளிநீக்குஅதனால்தான் அவருடைய நண்பர் அமீர் சந்துருவின் குடும்பம் ஒரு பணம் பறிக்கும் கும்பல் என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
பணமும், பிரபல பிண்ணனியும் உள்ள தகப்பன் சேரன் அதனால் இப்படி நட்ந்து கொள்கிறார்...
பதிலளிநீக்குஇதை படமாக்கமாட்டார் ஏன் என்றால் தியேட்டரை விட்டு ஓடும் என்று அவருக்கு தெரியாதா என்ன...
இதைப் பார்த்தீர்களா?
பதிலளிநீக்குhttps://plus.google.com/u/0/108861639970432914204/posts/B7WaZYurJHb
உங்களுடைய இந்த நல்ல கட்டுரை இங்கே பெரும்தொகையானவங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.
பதிலளிநீக்குசேரனின் படங்க பற்றி மற்றவங்க மூலம் அறிஞ்சிருக்கேன். அமீர் :) இப்படியான விஷயங்களில் சேரனுக்கு நல்ல தோழனாயிருப்பார்.
சேரன் நடந்த விதம் பற்றிப் பாரபட்சமில்லாத ஒரு ஆய்வு செய்து பின் சட்டத்தையும் இணைத்தவிதம் அருமை
பதிலளிநீக்குதிரைப்படங்களில் பெண்கள் ஓடிப்போய் திருமணம் செய்வதை பெருமையாகக் காட்டும் இந்த சினிமாக் கோமாளிகள் தன் பிள்ளைகள் என்றவுடன் குதிக்கிறார்கள். அதுவும் இப்போது வரும் திரைப்படங்களில் எல்லாம் ஹீரோக்கள் பெரும்பாலும் பொறுக்கிகளாகவே காட்டப்படுகிரார்கள்; பெற்றோர் வழக்கம்போல வில்லர்கள்தான். இப்போது சேரன் வில்லனாகி விட்டார்.
பதிலளிநீக்குசட்டத்தின் பார்வையில் சேரன் விவகாரத்தை அலசி விட்டர்கள்.
பதிலளிநீக்குபல்வேறு சட்ட விதிகளை அறிந்து கொண்டோம். சிறப்பான பதிவு
சேரன் பிரச்சனை முழுவதும் வர்கப் பிரச்சனைதான்... அந்தப் பையன் பிரபல டைரக்டர்ராகவோ அல்லது ஒரு கம்பெனி டைரக்டராகவோ இருந்தால் இது ஒரு விசயமாகவே ஆகியிருக்காது
பதிலளிநீக்குR சந்திரசேகரன்
பதிலளிநீக்குNon-cognizable offence என்பது என்ன என்பதை இயக்குனர் சேரன் case ஐ எடுத்துக்காட்டி புரியும்படி விளக்கியுள்ளீர்கள்.அவர் செய்துள்ள தவறுகளை இவ்வளவு விரிவாக யாரும் எடுத்து சொல்லவில்லை என நினைக்கிறேன். ‘தற்போது ஏற்பட்டுள்ள விரிசல் அவ்வளவு எளிதில் சீராகப் போவது இல்லை என்பது மட்டும் நிச்சயம்.’ என்று நீங்கள் முடித்திருப்பது நடுநிலையான கண்ணோட்டம்.
Cognizable Offence விஷயத்தில் இந்திய குற்றவியல்முறை சட்டம் சொல்வதை படிக்க நன்றாக இருக்கிறது. ஆனால் இதை எல்லா காவல்துறை அலுவலர்களும் பின்பற்றுகிறார்களா என்றால், ‘இல்லை.’ என்பதுதான் அனேகருடைய பதிலாய் இருக்கும்.
தங்களது பதிவுமூலம் இதுவரை தெரியாதவைகளை தெரிந்துகொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி! தொடர்கிறேன்
//Anonymous said... அந்தப் பையன் பிரபல டைரக்டர்ராகவோ அல்லது ஒரு கம்பெனி டைரக்டராகவோ இருந்தால் இது ஒரு விசயமாகவே ஆகியிருக்காது//
பதிலளிநீக்குமிகவும் உண்மை.
ஆனா இப்போ தந்தையின் வலி, தந்தையின் பாசம்,பெண்ணின் பிடிவாதம் என்று எப்படியெல்லாம் பில்லப்ட் கொடுக்கிறாங்கா பாருங்க:(
"மூன்று மாதங்களாக சந்துருவிடம் பேசவில்லை என்று தன்னிடம் உண்மைக்குப் புறம்பாக தாமினி சொன்னார் என்று பேசியது அவரை ஒரு பொய் பேசும் பெண் என்று கூறுவதுபோல் இல்லையா? " He said this in the context that chandru made damini to speak like that and wanted to take revenge on him.. please see his video on the net again. He accused chadru's attitude. It is very clearly seen Damini will do anything what chandru is saying. IF HIS DAUGHTER WOOULD NOT HAVE GONE TO POLICE AGAINST HIM CHERAN WOULD NOT HAVE GONE TO MEDIA FOR SURE. that is what he tired for some months.
பதிலளிநீக்குAnd I could not understand some people's mentality taking it granted of everything and advising others, if he accuses chandru has case and settlement with a girl before some "intelligent" people ask so what? if he says chandru's and his whole family change their name and religion many times (this itself a suspicious activity) same "intelligents" ask so what? I am not against Love but here does not look like real love. I do not think you have seen recent series of (this week's) Raj TV's Koppiyam regarding this issue -Nithy
பணமும், பிரபல பிண்ணனியும் உள்ள தகப்பன் சேரன் அதனால் இப்படி நட்ந்து கொள்கிறார்...//
பதிலளிநீக்குகரெக்டா சொன்னீங்க. ஆனா பணம் பாசத்தை சம்பாதிக்காது என்பதை தாமினி நிருபித்துவிட்டார்.
இதை படமாக்கமாட்டார் ஏன் என்றால் தியேட்டரை விட்டு ஓடும் என்று அவருக்கு தெரியாதா என்ன...//
இப்படியொரு படத்தை எடுக்க அவருக்கும் தைரியம் இருக்கிறதா என்ன? அதுமட்டுமல்ல இனி காதலை மையமாக வைத்து அவர் எந்த படத்தை எடுத்தாலும் மக்கள் மத்தியில் எடுபடப்போவதில்லை.
ஜோதிஜி திருப்பூர் said...
பதிலளிநீக்குஇதைப் பார்த்தீர்களா?//
அந்த லிங்கப் பாத்ததுக்கப்புறந்தான் எனக்கு இப்படியொரு பதிவை எழுதணும்னுனே தோன்றியது.
ஆனால் ராஜ் டிவியில் கோப்பியம் என்ற நிகழ்ச்சியில் இதை வைத்து ஒரு முழு கதையையே ஜோடித்திருந்தார்கள். நீங்கள் அதை பார்க்க வேண்டுமென்றால் ராஜ் டிவியின் இணையதளத்தை பாருங்கள்>
சேரன் நடந்த விதம் பற்றிப் பாரபட்சமில்லாத ஒரு ஆய்வு செய்து பின் சட்டத்தையும் இணைத்தவிதம் அருமை//
பதிலளிநீக்குநன்றிங்க. ஆனா அந்த எண்ணம் ஏதும் இந்த பதிவை எழுதும்போது எனக்கில்லை. ஆனால் சேரனைப் பற்றியும் எழுத வேண்டும் அதே நேரத்தில் நான் இட்டுக்கொண்டிருந்த தொடர் பதிவின் அடுத்த பகுதியையும் இட வேண்டும் என்று நினைத்தேன். அதற்குப்பிறகுதான் எந்த இடத்தில் சேர்த்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து கைது செய்யும் இடத்தில் அதை சேர்த்தேன்.
அதுவும் இப்போது வரும் திரைப்படங்களில் எல்லாம் ஹீரோக்கள் பெரும்பாலும் பொறுக்கிகளாகவே காட்டப்படுகிரார்கள்; பெற்றோர் வழக்கம்போல வில்லர்கள்தான். இப்போது சேரன் வில்லனாகி விட்டார்.//
பதிலளிநீக்குஇதுவே ஒரு படத்துல வந்திருந்தா இது கொஞ்சம் ஒவர்னு நினைப்போம். ஆனால் சேரனோட எப்பிசோடுக்கப்புறம் இந்த காட்சி ரொம்ப யதார்த்தமா இருந்துதுல்லேன்னு நினைப்போம். அந்த அளவுக்கு சேரனுடைய போக்கு பிரபலமடைந்துவிட்டது.
திரைப்படங்களில் பெண்கள் ஓடிப்போய் திருமணம் செய்வதை பெருமையாகக் காட்டும் இந்த சினிமாக் கோமாளிகள் தன் பிள்ளைகள் என்றவுடன் குதிக்கிறார்கள்.//
பதிலளிநீக்குஇதத்தான் ஊருக்குத்தான் உபதோசம் உனக்கில்லையடி கண்ணே. ஆனால் திரைப்படத்தில் பொருளாதாரத்தை காரணம் காட்டி ஒரு மாமனார் பெண் தர மறுத்தால் ஒரே பாட்டில் ஹீரோ பணக்காரனாகிவிடுவதாக காட்டிவிடலாம். ஆனால் நிஜத்தில் குறைந்த பட்சம் மூன்று வருடமாவது காத்திருக்க வேண்டும் என்கிறார் சேரன்.
சேரன் பிரச்சனை முழுவதும் வர்கப் பிரச்சனைதான்... அந்தப் பையன் பிரபல டைரக்டர்ராகவோ அல்லது ஒரு கம்பெனி டைரக்டராகவோ இருந்தால் இது ஒரு விசயமாகவே ஆகியிருக்காது//
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள் சந்திரசேகரன். அத வெளிப்படையா சொல்லிட்டு போயிருக்கலாம். ஆனால் சாடை மாடையாக என் பெண் காரில்தான் நண்பர்களை பார்க்ககூட போவார் என்றும் நட்சத்திர ஹோட்டல்களில்தான் சாப்பிடுவார் என்றும் கூறினாரே கவனித்தீர்களா?
‘தற்போது ஏற்பட்டுள்ள விரிசல் அவ்வளவு எளிதில் சீராகப் போவது இல்லை என்பது மட்டும் நிச்சயம்.’ என்று நீங்கள் முடித்திருப்பது நடுநிலையான கண்ணோட்டம்.//
பதிலளிநீக்குஉண்மைதான் சார். இந்த விஷயத்துல ரெண்டு பக்கத்துலயுமே தவறுகள் இருக்கின்றன. ஆகவே மூன்றாம் மனிதராக அதைப் பற்றி விமர்சிக்க மட்டுமே நம்மால் முடியும். எது சரியான முடிவு என்று கூற முடியாது, கூறவும் கூடாது.
ஆனால் இதை எல்லா காவல்துறை அலுவலர்களும் பின்பற்றுகிறார்களா என்றால், ‘இல்லை.’ என்பதுதான் அனேகருடைய பதிலாய் இருக்கும். //
பதிலளிநீக்குஇதுவும் நூற்றுக்கு நூறு உண்மை.
சட்டத்தைப் பற்றி தெரிந்து வைத்துக்கொள்ளலாமே தவிர அதை அமுல்படுத்தித்தான் தீரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது:))
ஆனா இப்போ தந்தையின் வலி, தந்தையின் பாசம்,பெண்ணின் பிடிவாதம் என்று எப்படியெல்லாம் பில்லப்ட் கொடுக்கிறாங்கா பாருங்க..//
பதிலளிநீக்குஆமாங்க. இப்படி பேசறதால தன்னுடைய மகளின் வெறுப்பைத்தான் மேலும் மேலும் சம்பாதிக்கிறேன் என்பதை அவர் உணர்ந்தால் சரி.
இப்போது அவர் செய்ய வேண்டியது மவுனமாக இருப்பது. அவர் மீது அவருடைய மகள் போலீசில் புகார் கொடுத்ததால்தான் சேரன் தன் பக்க விளக்கத்தை அளிக்க வேண்டியதாயிற்று என்று சிலர் கூறுவது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை.
ஒரு தந்தையைப் பற்றி மற்றவர்களிடம் குறைபட்டுக்கொண்டார் என்பதற்காக மகளை பற்றி தந்தையும் அவர்களிடமெல்லாம் சென்று அவளைப் பற்றி குறை கூறுவதா? என்ன நியாயம் இது?
He said this in the context that chandru made damini to speak like that and wanted to take revenge on him.. //
பதிலளிநீக்குRevenge? This is not cinema, this is family! Whether Cheran treated Chandru as a family member or not if he wants to take revenge on him he should also know that his actions are going to affect his daughter as well. Also, Damini appears to be a matured and adamant girl. I don't think there is any basis in saying that she is being forced to act like this by Chandru or anyone else. It is the rigid and irresponsible attitude of Cheran which has antagonised Damini.
please see his video on the net again. He accused chadru's attitude. It is very clearly seen Damini will do anything what chandru is saying. IF HIS DAUGHTER WOOULD NOT HAVE GONE TO POLICE AGAINST HIM CHERAN WOULD NOT HAVE GONE TO MEDIA FOR SURE. that is what he tired for some months. //
I've seen enough footage before writing this post. Cheran can't blame Chandru for all his daughter's actions. That would mean that she doesn't have a mind of her own. She does not appear to be a person of that character. If she could stand up to a high court judge and refuse to listen to his advice she can stand up to anyone else, including Chandru and her father. It is not going to be easy for Cheran or anyone else to pacify her after all this. If she finally goes back to Cheran she would do so on her own terms. Let us wait and see.
பதிலளிநீக்குnon cognizable offence என்று சொல்வதன் மூலம் சந்துருவைக் கைது செய்ய முடியாது என்று தெரிகிறது.இம்மாதிரி நிகழ்வுகள் தினம்தோறும் நடக்கிறது. சேரன் பட இயக்குனர் என்பதால் வெளிச்சம் போட்டுக் காண்கிறோம். சேரனுக்கும் மகளுக்கும் ஏற்பட்ட இடைவெளி சேர்க்க முடியாமல் போகலாம். ஆனால் எதையும் தீர்மானமாகச் சொல்ல முடியாது.
இப்போதெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு இருப்பவரின் வீடு போன்றவை சோதனை செய்வது பெரும்பாலும் காலம் கடந்த பின்னர்தான் என்று தோன்றுகிறது. தொடர்கிறேன்.
G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குசேரனுக்கும் மகளுக்கும் ஏற்பட்ட இடைவெளி சேர்க்க முடியாமல் போகலாம். ஆனால் எதையும் தீர்மானமாகச் சொல்ல முடியாது. //
உண்மைதான். ஆனால் அப்பா-மகள் உறவில் இப்படி உரசல்கள் ஏற்படுவதெல்லாம் சகஜம். இந்த மாதிரி சமயங்களில் இறங்கிப் போவது பெரும்பாலும் அப்பாக்கள்தான். சேரனும் இதற்கு விதிவிலக்கல்ல.
இப்போதெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு இருப்பவரின் வீடு போன்றவை சோதனை செய்வது பெரும்பாலும் காலம் கடந்த பின்னர்தான் என்று தோன்றுகிறது. //
சரியா சொன்னீங்க. சில சமயங்கள்ல இது ஒரு தவறாகவும் பல சமயங்களில் வேண்டுமென்றும் நடக்கக் கூடிய நிகழ்வு.