ஐயாவின் மன(தடு)மாற்றம்.
அன்றைய தினத்தாளில் வெளியாகியிருந்த கேப்டனின் பேட்டி ஐயாவின் மேசையில் விரிந்து கிடக்கிறது. அருகில் புதல்வர் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள்.
ஐயாவின் புதல்வர் (கோபத்துடன்): இத எதிர்பார்த்துத்தான் இப்ப இருக்கற கூட்டணியிலயே இருக்கலாம்னு நா சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க கேட்டாத்தான?
ஐயா: இவன் இப்படியொரு முடிவுக்கு வருவான்னு யார்யா எதிர்பார்த்தா? கூத்தாடி பயலுக பண்ற கூத்த தாங்க முடியல. இவன் என்னமோ இலங்கை தமிழர்களுக்காக எலக்ஷனையே பாய்க்காட் பண்ணணும்னு சொல்லிக்கிட்டிருந்தான். இப்ப எதுக்கு பல்ட்டி அடிக்கான்?
க.நிர் (தயக்கத்துடன்): எல்லாம் காசுக்காத்தான்யா.
புதல்வர் (எரிச்சலுடன்): என்ன சொல்றீங்க? நாம மட்டும் என்ன?
க.நிர்:அதில்ல தம்பி.. அந்த பயலுக்கு எப்படியும் ஒரு சீட்டும் கிடைக்க போறதில்ல. இருந்தாலும் போன அசெம்ப்ளி எலக்ஷன்ல கொஞ்சம் ஜாஸ்தி பர்சண்டேஜ் ஓட் கிடைச்சிருச்சில்ல? அத வச்சி பேரம் பேசி மத்தியிலருக்கற அம்மா கிட்டருந்த ஒரு நூறு ருபாய கறந்துரலாம்னுதான். அடுத்த அசெம்ப்ளி எலக்ஷனுக்கு யூஸ் பண்ணிக்கிறலாம்லே. அதான்.
புதல்வர்: (எரிச்சலுடன்) என்னது நூறு ரூபாயா? என்னங்க சொல்றீங்க?
க.நிர் (தனக்குள்... ஆமா பால் குடிக்கற புள்ள.. ஒன்னும் தெரியாது!): அதான் தம்பி பெரீய நூறு, ஏழு சைபர்.
(ஐயா சிரிக்கிறார். புதல்வர் எரிந்து விழுகிறார்) அதை கோடின்னுதான் சொல்லுமேய்யா. இங்கன யார் இருக்கா?
க.நிர். (சுற்றிலும் பார்க்கிறார்): சொல்ல முடியாது தம்பி. அந்த மதுரக்கார தம்பி ஆளுங்க எங்கனயாச்சும் மைக்க வச்சிருந்தாலும் வச்சிருப்பாய்ங்க.
(ஐயா வாய்விட்டு சிரிக்கிறார்) சரியான ஆளுய்யா நீ. நா எதையாச்சிம் குத்தம் சொல்லணுமேன்னு சொன்னத போயி நம்பிக்கிட்டு. நம்ம கோட்டைக்குள்ள எவனாச்சும் நுழைஞ்சிர முடியுமா என்ன? (சீரியசாகிறார். தன் புதல்வரைப் பார்த்து) இப்ப சொல்லுய்யா. நீ என்னதான் சொல்ல வரே.
புதல்வர்.: இங்க பாருங்கய்யா. மத்தியில சோனியா மேடம் ஆட்சிதான். அப்படித்தான் ராவுலருந்து (RAW) ஆரம்பிச்சி சிபிஐ ஏன் எஃப்.பி.ஐ வரைக்கும் சொல்றாய்ங்க. எனக்கு இன்னும் அஞ்சி வருசம் மினிஸ்ட்ரியில இருக்கணும். நா செய்ய வேண்டியது இன்னும் எத்தனையோ இருக்கு. அதனால இங்க இருக்கற மேடத்தோட சேரலாம்ங்கற என்னத்த விட்டுருங்க.
ஐயா தன் கட்சி நிர்வாகிகளூள் மூத்தவரைப் (சுருட்டை முடி கரு,கரு நிறம்)பார்க்கிறார். அவரும் தலையை அசைக்கிறார்.)
ஐயா: சரிய்யா. நீ சொல்றது சரின்னே வச்சிக்குவம். இப்ப கலைஞர் இருக்கற மூடுல நாமளாத்தான் போவேண்டியிருக்கும். அது நல்லாருக்குமா?
புதல்வர் (எரிச்சலுடன்): ஏன் போனா என்ன? புள்ளைங்களுக்காக இத கூட நீங்க செய்யக் கூடாதா?
ஐயா: அது எப்படிய்யா? அஞ்சாறு மாசமா அவர போட்டு கொட, கொடன்னு கொடஞ்சிட்டு.. இப்ப எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு போயி நிப்பேன்.
புதல்வர்: அதான் கலைஞர ஆஸ்பத்திரியில போயி பாத்தீங்கல்லே? அப்பவே சூசகமா சொல்லிட்டு வந்துருக்காம்லே?
(ஐயா சங்கடத்துடன் தன் நிர்வாகியை பார்க்கிறார். இவனுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது என்ற தோரனையில்.. சிறிது நேரம் ச்ங்கடத்துடனான மவுனம் அந்த அறையில்..)
புதல்வர்: அப்ப ஒன்னு பண்ணுங்க.
ஐயா (ஆர்வத்துடன்): சொல்லுய்யா.
புதல்வர்: எலக்ஷன் கோலிஷன் டிசைட் பண்றதுக்கு ஒரு கமிட்டி போடுங்க, என் தலைமையில நா சொல்ற ஆளுங்க வச்சி... நா போயி கலைஞர பாத்து பேசறேன். (சுருட்டை முடிக்காரரை காட்டி) இவர்லாம் கூட வரணும்னு இல்லை. என் ஆளுங்கள கூட்டிக்கிட்டு போறேன்.
ஐயா (சோகத்துடன்): அதாவது என்னைய ஒதுங்கிக்கன்னு சொல்றே? அதானய்யா.. அத தெளிவாத்தான் சொல்லிறேன்.
புதல்வர்: அத நீங்களே புரிஞ்சிக்கிட்டா சரி.
க.நிர்: தம்பி நீங்க இப்படி பேசறது நல்லால்லை. ஒங்களுக்குன்னு ஒரு எதிர்காலத்த உண்டாக்கி குடுத்தவரே ஐயாதான்.
புதல்வர் (எழுந்து நிற்கிறார்): எனக்கு ஒங்க அட்வைஸ்லாம் தேவையில்லீங்க. எனக்கு மினிஸ்ட்ரியில செஞ்சி முடிக்கறதுக்கு இன்னும் நிறைய இருக்கு. ஒலகம் முழுசும் சிகரெட், ட்ரிங்க்ஸ் எல்லாத்தையும் ஒழிக்கணும். இன்னும் இதுமாதிரி ஐடியா நிறைய இருக்கு. எனக்கு அதான் முக்கியம். ஒன்னுத்துக்கும் ஒதவாத ஒங்க ஈகோ இல்லை. இது எங்க ஜெனரேஷன் டைம். அது மட்டுமில்ல. நா இப்ப சொல்றத சரியா கேட்டுக்குங்க. இப்ப எங்கூட மினிஸ்ட்ரியில இருக்கற யாருக்கும் மறுபடியும் சீட் குடுக்கக் கூடாது. நா யாருக்கும் சொல்றனோ அவங்களுக்குத்தான். சரியா இங்க்லீஷ் கூட பேசத்தெரியாதவன்லாம் செண்ட்ரல் கேபினட்ல கொண்டு ஒக்கார வச்சிட்டு, அவன்களால என் மானமே போவுது. தமிழ், தமிழ்னு இங்க வேணும்னா பேசிக்கிருங்க.. பார்லிமெண்ட் வரைக்கும் கொண்டு வந்து கேவலப்படுத்தாதீங்க. (ஐயாவின் பதிலுக்கு காத்திராமல் வெளியேறுகிறார்.)
க.நிர்: என்னய்யா இது இப்படி பேசிட்டு போகுது தம்பி.. நீங்களும் பதில் பேசாம இருக்கீங்க?
ஐயா (எரிச்சலுடன்): அட நீ வேறய்யா... என்னைய என்ன பண்ண சொல்றே? எல்லாம் வீட்டுலயும் நடக்குறதுதான? சரி, சரி அத விடு. இவன் எதையாச்சும் ப்ரசுக்கு அனுப்பறதுக்குள்ள நாமளும் எதையாச்சும் செஞ்சிரணும். இல்லன்னா இவனே ஒரு உட்கட்சி விரிசல உருவாக்குனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.
க.நிர் (தயக்கத்துடன்): நா வேணும்னா ஸ்டாலின பாத்து பேசிட்டு வரட்டுமா?
ஐயா (அவசரமாக): வேணாம்.. நாமளே நேரா போனா இப்ப இருக்கற சீட்டு கூட கிடைக்காம போயிரும். இந்த லட்சணத்துல இந்த கூத்தாடி பய வேற கெடந்து துள்றான்.
க.நிர்: அதனாலத்தான்யா சொல்றன். இவனும் கூட்டு சேந்துக்கிட்டு நம்ம சீட்ட பங்கு போட்டுக்கிட்டான்னா...
ஐயா (யோசனையுடன்) அதுவும் சரிதான். ஆனா நேரடியா போனாலும் நம்ம கவுரவம் போயிரும்...
க.நிர் (சுருட்டை முடிக்காரர் அல்ல) தனக்குள் 'ஆமா இப்ப மட்டும் என்னத்த வாழுதாம்.'
ஐயா (ஒரு முடிவுடன்): சாயந்தரம் ப்ரெஸ் மீட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க. அப்படியே நமக்கு வேண்டிய ரிப்போர்ட்டர்ங்கக் கிட்ட ஏடாகூடமா எதையும் கேட்டு வைக்காதீங்கன்னு சொல்லி வைங்க. நா ஜெனரலா எப்பவும் பேசறா மாதிரி பேசி வைக்கிறேன். நீங்க இப்போதைய கூட்டணியே வரும் பொதுத்தேர்தலிலும் தொடரும்னு பொதுவா சொல்லி வைங்க... கலைஞர் எப்படி ரியாக்ட் பண்றார்னு பாத்துட்டு மேக்கொண்டு என்ன செய்யலாம்னு பாப்பம். என்ன சொல்றீங்க? (சுருட்டை முடிக்காரர் தலையை அசைத்துவிட்டு தன் சகாக்களுடன் வெளியேறுகிறார்)
அடுத்த நாள் காலை தினத்தாளில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கலைஞர் தலைமியிலான கூட்டணியில் தொடர்ந்து பா.ம.க. பணியாற்றும் என பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அவர்கள் கூறியதாக செய்தி வருகிறது!
குறிப்பு: இதில் வரும் அனைத்தும் என் கற்பனையே. எவர் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.
**
தொடரும்..
ஆஹா! டி.பி.ஆர் ஐயா!
பதிலளிநீக்குரொம்ப நாள் கழிச்சி இந்தப் பக்கம்!
நலமா?
கழுத்து வலி எப்படி இருக்கு(ரொம்ப நாளா திரும்பி பார்த்துகிட்டிருந்தீங்களேன்னு கேட்டேன்)
வாங்க சிபி,
பதிலளிநீக்குகழுத்து வலி எப்படி இருக்கு(ரொம்ப நாளா திரும்பி பார்த்துகிட்டிருந்தீங்களேன்னு கேட்டேன்) //
கொஞ்ச நாளா ஜாஸ்தி வ லிக்குது. ரொம்ப நா ளா திரும்பி பாக்காம இருந்ததால :))
டிபி ஆர்.
சென்னைலதான் இருக்கீங்களா?
பதிலளிநீக்கு//கொஞ்ச நாளா ஜாஸ்தி வ லிக்குது. ரொம்ப நா ளா திரும்பி பாக்காம இருந்ததால :))
பதிலளிநீக்கு//
அது சரி!
:)
சென்னைலதான் இருக்கீங்களா?//
பதிலளிநீக்குஆமாங்க. நீங்க?
டிபிஆர்.
நானும் இப்போ சென்னைதான்!
பதிலளிநீக்கு:)
Election varuthu... joseph sirum vandhutaaru. :-)
பதிலளிநீக்குeppadi irukeenga? nalama?