கலைஞர் காட்டுல மழை!
கோபாலபுரம் வீடு.
கலைஞரின் சக்கர நாற்காலியை சுற்றிலும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள். அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி வெள்ளம்.
ஆற்காட்டார்: எப்படி தலைவரே திடீர்னு ரெண்டு பேரும் மனச மாத்திக்கிட்டாங்க?
மு.க.: (பதிலளிக்காமல் புன்னகையுடன் தன் வலது கை மாறனை பார்க்கிறார்) எல்லாம் உன் ப்ளான் தான?
(மாறன் பதிலளிக்காமல் ஒரு மர்ம புன்னகையை உதிர்க்க விஷயம் தெரிந்த ஸ்டாலினைத் தவிர மற்றவர்கள் கலைஞரை குழப்பத்துடன் பார்க்கின்றனர்.)
அன்பழகன்: என்ன தலைவரே சொல்றீங்க?
மாறன்: அது ஒன்னுமில்லை சார். தலைவர் சஜஸ்ட் பண்ணாமாதிரி நேத்து ரெண்டு, மூனு ஃபோன் கால் பண்ணேன். அதனோட பலந்தான் இதுன்னு நினைக்கேன். ஷ்யூரா சொல்ல முடியாது.
ஆற்: டாக்டர் ஐயாகிட்டருந்து இத எதிர்பார்த்ததுதான். ஆனா கேப்டனோட ஸ்டாண்ட்தான் புதுரா இருக்கு.
கலைஞர் (புன்னகையுடன் மாறனை நோக்கி கண்சாடை செய்கிறார்): யார், யார எப்படி டீல் பண்ணணுங்கற வித்தைய இந்த காலத்து பசங்கதான் நல்லா தெரிஞ்சி வச்சிருக்காங்க. நம்மள மாதிரி ஆளுங்கதான் கவுரத்த புடிச்சிக்கிட்டு தொங்கறோம். (மாறனை பார்க்கிறா) என்னப்பா நா சொல்றது சரிதானே?
மாறன்: தெரியலைய்யா, ஏதோ எல்லா இடத்துலயும் நண்பர்கள் இருக்கறதால ஈசியா முடிஞ்சிருச்சி...
(ஆற்காட்டார் பொறாமையுடன் மாறனைப் பார்க்கிறார். 'இந்த பயல ஒழிச்சிக் கட்டலாம்னு பாத்தா முடியமாட்டேங்குதே. மறுபடியும், மறுபடியும் மொளச்சி வந்துர்றானே. ஊர்ல இருக்கற கம்பெனிங்களையெல்லாம் இங்க கூட்டி வந்து பவர் ப்ராப்ளத்த உண்டாக்கி நம்ம தலையையே உருட்ட பார்த்தான். இப்ப ஊர்ல இருக்கற ஆளுங்களையெல்லாம் கூட்டணியில கொண்டுவந்து... புதுசா என்ன ப்ராப்ளத்த கொண்டு வரப்போறானோ...')
பேராசிரியர்: (மாறனுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் பிடிக்கவில்லை என்றாலும் அதை வெளிக்காட்டாமல்) இவங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தர, ஒருத்தர கட்டோட பிடிக்காதே எப்படி தலைவரே இவங்கள வச்சிக்கிட்டு பிரச்சாரம் பண்றது?
ஆற்காட்டார்: பேராசிரியர் சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. சீட் அலாட்மெண்ட்டுலயும் பிரச்சினை பண்ணுவாங்க. நாற்பது இடத்தையும் புடிச்சிருவோம்னுல்ல கேப்டன் சொல்லிக்கிட்டிருந்தாரு நேத்து வரைக்கும்...
கலைஞர்: (புன்னகை மாறாமல் ஆற்காட்டாரைப் பார்க்கிறார்) உன் சங்கடம் புரியுதுய்யா. ஒன் கோட்டாவுல கைய வச்சிருவேனோன்னுதான பயம்? பயப்படாதே. போன தரம் வைகோவுக்கும் கம்யூனிஸ்டுங்களுக்கும் நாலு, நாலு குடுத்தோம். டாக்டர் ஐயாவுக்கு அஞ்சி. மொத்தம் பதிமூனு. அதுல பாதிய நாம எடுத்துக்குவோம். மீதிய புதுசா வந்தவங்களுக்குன்னு வச்சிருவோம். இருந்தாலும் நானா போயி டாக்டர் ஐயாகிட்ட பேசப் போறதில்லை. கேப்டன் கிட்டயும் அப்படித்தான். ரெண்டு, மூனு நாளைக்கி நா ஒன்னுமே ரியாக்ட் பண்ணப் போறதில்லை. மேலுக்கு சரியில்லைன்னு எல்லா ப்ரோக்ராமையும் கேன்சல் பண்ணிற சொல்லிட்டேன். தங்கபாலுவே இத டீல் பண்ணிக்கட்டும். (மாறனைப் பார்த்தவாறு) இதுவும் இவன் சொன்னதுதான்.
(ஆற்காட்டாருக்கு உள்ளூர கொதிக்கிறது. இருந்தும் வாய்மூடி மவுனியாக அமர்ந்திருந்தார். இந்த முடிவில் தளபதிக்கும் உடன்பாடுதான் என்றாலும் இந்த விஷயத்தில் தலைவர் மாறனை முழுவதுமாக சார்ந்திருப்பதில் சற்று மனவருத்தம் இருந்ததை அவர் தலைவரைப் பார்த்த பார்வையிலிருந்தே தெரிகிறது. பேராசிரியர் லேசான புன்னகையுடன் அமர்ந்திருந்தார் எப்போதும் போல. )
தொடரும்..
லோக்சபாவில் அத்வானியின் தீர்க்கதரிசனம்!
கடந்த ஆண்டு மே மாதம் 5ம் நாள் எதிர்கட்சித் தலைவர் அத்வானி அவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாடுகையில் ஆளுங்கட்சி தலைவ ப்ரனாப் அவர்களை 'மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே' என தவறாக அழைத்துவிட்டு தன்னை திருத்திக்கொள்ள முயல்கையில் நகைச்சுவை குறுக்கீடுகளுக்கு பெயர்போன சபாநாயகர் குறுக்கிட்டு 'திரு அத்வானி அவர்கள் ஆளுங்கட்சித் தலைவராக வரப்போவதை சூசகமாக தெரிவிக்கிறார் போலிருக்கிறது' என வேடிக்கையாக சொல்ல சபையே சிரிப்பொலியால் அதிர்ந்ததாம்! அது தீர்க்கதரிசனமாக மாறாமல் இருந்தால் சரி!!
வணக்கம் ஜோசப் சார். நலம்தானே. ஒங்களையும் பதிவுல பாத்து ரொம்ப நாளாச்சு.
பதிலளிநீக்குபதிவைப் படிச்சாச் சிரிப்பா வருது. ஆனா சிரிச்சோம்னு நெனச்சா வேதனையா இருக்கு.
போன தேர்தலுக்கு நான் எழுதுன பதிவுல.... நான் திமுகவை நெறைய தாக்குறேனோன்னு நெனைச்சீங்களே. இப்பவும் அப்படித்தான் நெனைக்கிறீங்களா? இல்ல ஏதாச்சும் மாறுதல் இருக்கா? உண்மையிலேயே ஒங்க கருத்தைத் தெரிஞ்சிக்கத்தான் கேக்குறேன். :-)
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குபோன தேர்தலுக்கு நான் எழுதுன பதிவுல.... நான் திமுகவை நெறைய தாக்குறேனோன்னு நெனைச்சீங்களே. இப்பவும் அப்படித்தான் நெனைக்கிறீங்களா? //
இன்றைய சூழ்நிலையில Lesser evilனு பார்த்தா அது திமுக கூட்டணிதான். இதுக்கு ரெண்டு காரணம் இருக்கு.
1. எதிர்தரப்புல ஜெயலலிதாவோட ஆணவத்தால சரியான கூட்டணி இன்னும் அமையல. பாமக வும் கலைஞர் ஒப்புக்கு அழைப்பு விடுத்தா போறும்னு காத்திருக்காங்க. ஜெயலலிதா கூட சேர்ந்தாலும் அங்க அவருக்கு சரியான முக்கியத்துவம் நிச்சயம் கிடைக்காது. அன்புமணிக்கும் மேடத்தோட நிச்சயம் ஒத்துப்போகாது.
2. காங்க்ரஸுக்கு மத்தியில இருக்கற மதிப்பு. அதுக்கும் எதிர்தரப்புல ஒற்றுமை இல்லாத நிலைதான் முக்கிய காரணம். பிஜேபியில உட்பூசல், சேனா கூட சரியான உறவு இல்லாத நிலை. மூன்றாவது அணியோட விசித்திர முடிவுகள்.
இது எல்லாமே மத்தியில் இப்ப இருக்கற கூட்டணிதான் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்குன்னு நா நினைக்கிறேன்.
ஆகவே என்னுடைய ஓட்டு இந்த தடவ திமுக கூட்டணிக்குத்தான்.