21 ஜூலை 2007

தி.பா.தொடர் - நிறுத்தம்!!

ஆங்கிலத்தில் jinxed என்ற வார்த்தையை கேட்டிருப்பீர்கள்.

நாம் சில விஷயங்களை செய்ய நினைக்கும்போதே நம் உள்ளுணர்வு 'இது தேவையா?' என்ற கேள்வியை எழுப்பும். அதை பொருட்படுத்தாமல் நாம் அந்த விஷயத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் நாம் சற்றும் எதிர்பாராத சங்கடங்கள், தடங்கல்கள் ஏற்படும்.

சஞ்சய்கான் திப்பு சுல்தான் வாழ்க்கையை தொலைக்காட்சி தொடராக எடுக்க முயன்றபோதும் பல தடங்கல்கள், சிரமங்கள் ஏற்பட்டன என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். திப்புசுல்தானின் வாளை விஜய் மல்லையா பொது ஏலத்தில் எடுத்தபோதும் பலரும் 'இது தேவையா?' என்றார்கள்.

ஏனெனில் அது ஒரு jinexd வாள் (அதாவது சாபத்தை சுமந்துள்ள) என்று பலரும் நினைத்தார்கள்.

அதுபோலத்தான் நம்முடைய சூப்ரீம் ஸ்டாரின் மருதநாயகம் திரைப்படமும். அந்த கதையும் ஒரு jinxed கதை என்பது திரையுலகில் பலருடைய கருத்து. ஆகவேதான் எலிசபெத் ராணியே க்ளாப் அடித்து துவக்கி வைத்தும் அது ட்ரெய்லரோடு நின்றுபோனது. அதில் ஏற்பட்ட விரிசல் அவருடைய திருமணத்தையே முறித்துப்போட்டது...

என்னுடைய மும்பை அனுபவங்களும் இந்த வகையைச் சார்ந்ததுதானோ என்று நினைக்கின்றேன். அவற்றை எழுதலாம் என்று துவங்கும்போதெல்லாம் எங்கிருந்தாவது தடங்கல்கள், சங்கடங்கள் வருகின்றன.

ஆங்கிலத்தில் எழுதியபோதும் சில indirectஆக சிலர் இது வேணாம் டிபிஆர் என்றார்கள். துவக்கத்தில் வருவது வரட்டும் என்று நினைத்தாலும் நாளடைவில் நானே அதை நிறுத்தினேன்.

சுமார் ஒரு வருட காலத்திற்குப் பிறகு தமிழில், ஆங்கிலத்தில் எழுதியதுபோன்று விலாவாரியாக எழுதாமல் தேவைப்பட்டதை மட்டும் எழுதினால் என்ன என்று நினைத்துத்தான் துவங்கினேன்.

பணியில் இருக்கும்போதே இப்படி எழுதினால் சங்கடங்கள் வருமே என்று ஒரு நண்பர் எந்த நேரத்தில் கேட்டாரோ தெரியவில்லை மீண்டும் ஒரு indirectஆன தடங்கல், வேண்டுகோள் உருவத்தில்.

ஆகவே தி.பா.தொடர் நிறுத்தப்படுகிறது, தாற்காலிகமாக. அதாவது பணியில் இருந்து ஓய்வுபெறும் வரை....

ஆனாலும் எழுத ஆரம்பித்த கை சும்மா இருக்காதே...

என்னுடைய வாழ்க்கை அனுபவங்களை எழுத யாரும் தடை செய்ய முடியாதல்லவா?

ஆகவேதான் தி.பா. தொடரின் அடுத்த பகுதி வாழ்க்கைப் பயணம் என்ற புதிய நாமத்தில்... எதிர்வரும் திங்கள் முதல்..

ஆனால் இதில் ஒரு கற்பனை குடும்பத்தை அறிமுகப்படுத்தி அதன் வழியாக நான் சொல்ல நினைப்பதை சொல்லலாம் என்று எண்ணம்...

கற்பனை குடும்பத்தினர் இவர்கள்தான்.

குடும்பத் தலைவர்: ராகவன். ஏன் இந்த பெயர் என்று நினைக்கிறீர்கள் அல்லவா? இன்றைய தமிழ்மண சூழலில் இந்த பெயர் இருவருக்கு சொந்தம். ஒருவர் வலைப்பதிவர்கள் மத்தியில் ஹீரோ... அவருடைய எழுத்துத் திறமையாலும் மற்றவர்களுடைய எழுத்தை உளம் திறந்து பாராட்டுபவர் என்பதாலும் பலராலும் விரும்பப்படுபவர்... மற்றவர்... அவரும் பிரபலம்தான்.. ஆனால் வேறொரு காரணத்திற்காக... அது நமக்கு தேவையில்லாத ஒன்று.. இருந்தாலும் அவரையும் எல்லோருக்கும் தெரியும்.... ஆகவே என்னுடைய கற்பனை பாத்திரத்திற்கும் அதே பெயர்....

குடும்பத் தலைவி: கற்பகம். இந்த பெயருக்கு எந்த காரணமும் இல்லை. வேறொரு வலைப்பதிவாளரின் பெயரைத்தான் முதலில் நினைத்தேன். ஆனால் இந்த பாத்திரத்தின் மூலமாக நான் சொல்ல நினைக்கும் பல விஷயங்களை அவருடன் தொடர்புபடுத்திவிடுவார்களோ என்ற எண்ணத்தில் அதை தவிர்த்துவிட்டேன். ஒருமுறை நம்முடைய தமிழ்மண வலைப்பதிவர் ஒருவர் என்னுடைய 'அப்பா ஒரு ஹிட்லர்' கதையில் வரும் ஹிட்லர் நீங்கதான சார் என்று கேட்டது நினைவுக்கு வருகிறது. ஆகவேதான் நடுநிலையாக கற்பகம்.

வாரிசுகள்: கமலன், கமலி... ரைமிங்காக இருக்கட்டுமே என்றுதான்... வேறொன்றுமில்லை...

குடும்பத்தலைவரின் தந்தை: மாதவன். அவருடைய மனைவி: மங்களம்.

என்னுடைய வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்வதே இதன் நோக்கம்...

இதில் உணவுமுறை, உடற்பயிற்சி, சுயமருத்துவம், வீடு மற்றும் வாகனபராமரிப்பு, பிரச்சினைகளை அணுகும் முறை, தலைமுறை பேதங்கள் என எல்லாவற்றையும் அலசலாம் என்று இருக்கிறேன்...

இதில் நான் கூற நினைத்திருக்கும் அனைத்தும் என்னுடைய அனுபவங்களின் மூலமாக நான் கற்று தெளிந்துக்கொண்டவைகள் மட்டுமே. இது சரி என்றோ அல்லது இதுதான் சரி என்ற வாதமோ, பிடிவாதமோ இருக்காது...

என்னுடைய கோணத்திலிருந்து எனக்கு படுபவற்றை மட்டுமே எழுதுகிறேன்... சில சர்ச்சைக்குரிய விஷயங்களாகவும் இருக்கலாம்... ஆனால் நிச்சயம் பிரசங்கமாகவோ, அல்லது அதிகப்பிரசங்கமாகவோ நிச்சயம் இருக்காது....

தி.பா தொடர் வந்த அதே நாட்களில் வரும்...

31 கருத்துகள்:

  1. புரிஞ்சுக்க முடியுது.

    மனசு சரின்னு சொல்லலைன்னா கஷ்டம்தான்.

    ராகவனையும் கற்பகத்தையும் சந்திக்க நாங்கள் தயார்:-))

    பதிலளிநீக்கு
  2. புதிய தொடரை எதிர்பார்க்கிறேன். :)

    ராகவனுக்கு ஜீரான்னு செல்லப்பெயரா? (இது சும்மா ராகவனை வம்பிழுக்க. நீங்க கண்டுக்காதீங்க ஜோசப்.)

    மற்றும்படிக்கு, இந்தளவு தூரம் நீங்கள் இந்தத் தொடரை எழுதியதே அதிசயந்தான். இல்லையா?

    -மதி

    பதிலளிநீக்கு
  3. வாங்க துளசி,

    புரிஞ்சுக்க முடியுது.//

    நன்றி...

    ராகவனையும் கற்பகத்தையும் சந்திக்க நாங்கள் தயார்:-)) //

    இதற்கும் நன்றி:-)

    பதிலளிநீக்கு
  4. வாங்க மதி,

    ராகவனுக்கு ஜீரான்னு செல்லப்பெயரா? //

    அவரேதான்... அந்த செல்லப் பெயரையும் பயன்படுத்தப்போகிறேன்..
    காப்பி ரைட் எடுத்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்:-).

    மற்றும்படிக்கு, இந்தளவு தூரம் நீங்கள் இந்தத் தொடரை எழுதியதே அதிசயந்தான். இல்லையா?//

    ஆமாம்.. முள்மேல் நடப்பதுபோலத்தான்.. ஆனாலும் பெரிதாக சங்கடங்கள் ஏதும் ஏற்படவில்லை...

    ஆயினும் என்னுடைய நெருங்கிய நண்பர்களின் சிலருடைய எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியுள்ளது... நமக்கு எப்போதுமே நல்லதையே நினைக்கக் கூடியவர்கள் நண்பர்களாயிற்றே... அதனால்தான்..

    பதிலளிநீக்கு
  5. //தி.பா.தொடர் - நிறுத்தம்!! //

    தலைப்பு அதிர்ச்சி அளித்தது!!!

    பதிலளிநீக்கு
  6. நல்ல தொடர் நிற்கப் போகிறது எனக் கேட்க வருத்தம்தான். அதுவும் மும்பை அனுபவங்கள் :(

    புதிய தொடர் இதற்கு நல்ல ஒரு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. இடையில்தான் வந்தேன்.ஆயினும்
    ஒருபதிவு-ஒருவரி விடாமல் தொடர்ந்து படித்தவன்;சிலசமயம் 'வரிகளுக்கு இடையிலும்' படித்தவன் என்ற வகையில்,திரும்பிப்பார்ப்பதை நிறுத்துவது அதிச்சி அளிக்கின்றது.

    புதியபதிவு பற்றி எழுதத்தயக்கமாக உள்ளது;ஆயினும் எழுதுவதே நேர்மை என்பதால் எழுதிவிடுகிறேன்.

    எதிர்மறையாகவோ அல்லது உடன்மறையாகவோ பலருக்கும் பரிச்சயமான பெயரை, கதைமாந்தர்க்கு சூட்டுவது உசிதமா என்பதை மறுபரிசீலனை செய்யவும்

    பதிலளிநீக்கு
  8. வாங்க சிஜி!

    எதிர்மறையாகவோ அல்லது உடன்மறையாகவோ பலருக்கும் பரிச்சயமான பெயரை, கதைமாந்தர்க்கு சூட்டுவது உசிதமா என்பதை மறுபரிசீலனை செய்யவும் //

    போச்சிறா.. ஆரம்பத்துலயே சர்ச்சையா?

    சரி... நீங்க சொல்றதும் சரிதான்... ராகவான்னு வச்சிக்கறேன்...

    பதிலளிநீக்கு
  9. ஆகா! ஜோசப் சார். இதென்ன அஞ்சு ரூவாயப் பிடுங்கீட்டு அம்பது ரூவா குடுக்குறீங்க :)))))) தி.பா படிக்கும் போது தோணுச்சு. ஆனா பெருசாத் தெரியலை. இப்ப நீங்க சொல்ல வர்ரது புரியுது.

    // tbr.joseph said...
    வாங்க மதி,

    ராகவனுக்கு ஜீரான்னு செல்லப்பெயரா? //

    அவரேதான்... அந்த செல்லப் பெயரையும் பயன்படுத்தப்போகிறேன்..
    காப்பி ரைட் எடுத்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்:-). //

    :)))) இல்லங்க. காப்பி ரைட் எடுக்கலை. நீங்க தாராளமா பயன்படுத்தலாம். எங்கிட்ட கேக்கனுமா என்ன!

    நானும் ராகவன் கற்பகத்தைச் சந்திக்க..அடடா...கமலன் கமலியைச் சந்திக்க ஆவலாகக் காத்திருக்கிறேன். :)))

    பதிலளிநீக்கு
  10. வாங்க ராகவன்,

    இல்லங்க. காப்பி ரைட் எடுக்கலை. நீங்க தாராளமா பயன்படுத்தலாம். எங்கிட்ட கேக்கனுமா என்ன!//

    இத, இத, இதத்தான் எதிர்பார்த்தேன்..

    கேட்டீங்களா சிஜி!

    இனி சீனியர் ராகவன் சார்தான் சொல்லணும்... ஏதாச்சும் எதிர்ப்பு இருந்தா...

    என்ன சார்?

    பதிலளிநீக்கு
  11. அப்படியும் அடையாளம் தெரியுதே....
    பெயரில் இடம்பெறும் எழுத்துகளுக்கும்
    பெயருக்குரியவரின் குணாதிசயங்களுக்கும் சிறப்பான உடந்தொடர்பு correlation இருந்தாலன்றி மீண்டும் மறுபரிசீலனை
    செய்யலாமே?

    பதிலளிநீக்கு
  12. //இனி சீனியர் ராகவன் சார்தான் சொல்லணும்... ஏதாச்சும் எதிர்ப்பு இருந்தா...//

    தாராளமாக. ஒரு எதிர்ப்பும் இல்லை. உங்கள் கதையில் என் பெயருடையவர் செய்யப் போவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    //தி.பா தொடர் வந்த அதே நாட்களில் வரும்...//
    திக்கள் செவ்வாய் புதன்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  13. ஜோசப் சார்,

    புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்! :)

    பதிலளிநீக்கு
  14. ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் உங்கள் தைரியத்தை வியந்து கொண்டேதான் படிப்பேன். உண்மையில் நடந்த விஷயங்கள் எனத் தெரிந்ததால் வரும் வியப்பு அதிகம் தி.பா. தொடரில். மீண்டும் ஒரு சமயம் தொடர்வேன் எனச் சொன்னதில் ஒரு ஆறுதல்.

    மற்றபடி ஜிராவையும் அவர் குடும்பத்தாரையும் சந்திக்க ஆவலாய்த்தான் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. ஆகா..அருமை அருமை...

    அடுத்த தொடரா ?

    கமலியை (மட்டும்( சந்திக்க ஆவலாக இருக்கிறேன்...

    ஆமாம் மீதிப்பேரை எங்களை போன்ற இளவட்டங்கள் சந்தித்து என்ன ஆகப்போகிறது
    ?

    தி.பா தொடர் நிறுத்தம் என்றவுடன் பயந்துட்டேன்...அடுத்த தொடர் ஆரம்பம் என்றதும் மிக மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  16. ம்ம், இப்படு சாடார்னு நிறுத்துறது எங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் இன்னொரு ரூபத்துல இன்னொரு பதிவு அப்படிங்க போது சந்தோசமே

    பதிலளிநீக்கு
  17. மீண்டும் மறுபரிசீலனை
    செய்யலாமே? //

    செஞ்சிட்டேன்...

    பதிலளிநீக்கு
  18. வாங்க ராகவன் சார்,

    தாராளமாக. ஒரு எதிர்ப்பும் இல்லை. //

    நன்றி சார்.

    //தி.பா தொடர் வந்த அதே நாட்களில் வரும்...//
    திக்கள் செவ்வாய் புதன்? //

    ஆமாம்.

    பதிலளிநீக்கு
  19. வாங்க இளவஞ்சி,

    புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்! //

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  20. வாங்க கொத்தனார்,

    மற்றபடி ஜிராவையும் அவர் குடும்பத்தாரையும் சந்திக்க ஆவலாய்த்தான் இருக்கிறேன். //

    மிக்க நன்றிங்க...

    பதிலளிநீக்கு
  21. வாங்க ரவி,

    கமலியை (மட்டும்( சந்திக்க ஆவலாக இருக்கிறேன்...//

    தனியாவா:-)

    ஆமாம் மீதிப்பேரை எங்களை போன்ற இளவட்டங்கள் சந்தித்து என்ன ஆகப்போகிறது ?//

    உங்களமாதிரி இளவட்டங்கள்தான் இவர்களை சந்திக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  22. வாங்க இளா,

    ம்ம், இப்படு சாடார்னு நிறுத்துறது எங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு..//

    எனக்கும்தான்... என்ன பண்றது? நண்பர்களுடைய வேண்டுகோளை தட்ட முடியவில்லை...

    பதிலளிநீக்கு
  23. வாங்க லக்கி,

    அதிர்ச்சி அளித்தது//

    எனக்கும்தான்.... வேறு வழி தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  24. TBR Sir,

    sorry if it was mistake from my part to have posted that comment in previous post which resulted in sangatam and hence stopping of this series. It was unintentional query from my side. I am a regular reader for the complete series and I found that you had undergone so much of trouble and sharing them in public- will it not be misinterpreted by parties concerned.

    sorry again.

    (no access to tamil from this place and hence in english)

    Looking forward to Vaazkkai series.

    Nandri.

    பதிலளிநீக்கு
  25. வாங்க சாம்பார்வடை,

    sorry if it was mistake from my part to have posted that comment in previous post which resulted in sangatam and hence stopping of this series. //

    சேச்சே... நிச்சயமா அதுக்கு நீங்க காரணம் இல்லை. நான் ஒரு தமாஷுக்கு நீங்க சொன்னத குறிப்பிட்டேன்...

    Looking forward to Vaazkkai series.//

    மிக்க நன்றிங்க. நேரம் கிடைக்கறப்பல்லாம் படிங்க. கமெண்ட் அடிங்க.

    பதிலளிநீக்கு
  26. Dear TBR
    I am a regular reader of your Thi. Paa series. When I saw the tile that it is going to be stopped I was shocked too.

    Glad to know that eventually it will appear in the net later, if not sooner.

    In the meantime very much look forward to your new serial (?). I know it will be very nice.

    When I read blogs like yours I feel sorry that my daughter wont be able to enjoy the tamil language like I do. (She is just 5 years old, but I havent found a way to teach her our great tamil language.)

    Hoping some how I can instill the beauty of our language in her in the coming years.

    Murali
    USA

    பதிலளிநீக்கு
  27. தலைப்பைப் பார்த்தால் ஏதோ ஆயுதப் போராளிகள் சண்டை நிறுத்தம் என்பதுபோல இருக்கிறது ---)
    கொஞச நாளா பதிவையே கணோமே, நீங்கள் வெளியூர் சென்று விட்டீர்கள்போல நினைத்துக்கொண்டேன்.இதுதான் காரணமா? அப்ப சரி.
    <---ஆகவேதான் தி.பா. தொடரின் அடுத்த பகுதி வாழ்க்கைப் பயணம் என்ற புதிய நாமத்தில்... எதிர்வரும் திங்கள் முதல்.. -->
    தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் சரியாக ஓடாவிட்டால் அதே தயாரிப்பாளர் அதை சடாரென்று நிறுத்திவிட்டு,வேறு பெயரில் தயரிப்பதுதான் ஞாபகத்துக்கு வருது. சும்மா தமாசுக்கு சொல்ரேன்.

    பதிலளிநீக்கு
  28. வாங்க முரளி,

    (She is just 5 years old, but I havent found a way to teach her our great tamil language.)

    Hoping some how I can instill the beauty of our language in her in the coming years.//

    எப்பவுமே நாட்டுலருந்து வெளிய இருக்கறப்பத்தான் நம்ம தாய் மொழியோட அருமை தெரியும்.

    பதிலளிநீக்கு
  29. வாங்க சிவா,

    தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் சரியாக ஓடாவிட்டால் அதே தயாரிப்பாளர் அதை சடாரென்று நிறுத்திவிட்டு,வேறு பெயரில் தயரிப்பதுதான் ஞாபகத்துக்கு வருது. //

    கரெக்டா சொன்னீங்க.. செல்வி.. அரசியான மாதிரி:-)

    பதிலளிநீக்கு
  30. வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமாகத் தொடர என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு