இன்றைய பதிவில் NRI நண்பர்களுக்கென வங்கிகள் அளிக்கும் சேமிப்பு திட்டங்கள் என்னென்னவென்று சுருக்கமாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.
எல்லா வங்கிகளுமே ஒரே மாதிரியான சேமிப்புத் திட்டங்களையே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன என்பது NRI நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். இதற்கு முக்கியமான காரணம் நம்முடைய ரிசர்வு வங்கிதான் (Reserve Bank of India) இன்றைய பொருளாதார உலகில் பங்கு வர்த்தகத்திலும் சரி, பணப்புழக்கத்திலும் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் பல்நாட்டு வர்த்தகம் (Cross Country Trade) மற்றும் பல்நாட்டு பணபுழக்கம்(International Financial Transaction) போன்றவற்றை மட்டும் இந்திய ரிசர்வு வங்கி தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருக்கிறது!
தற்போது வங்கிகள் அளிக்கும் சேமிப்பு திட்டங்களை கீழே பட்டியலிட்டுள்ளேன்.
1. NRO A/c
2. NRE A/c
3. FCNR A/c
4. RFC A/c
1. NRO A/c.
இதை இந்திய ரூபாயில் மட்டுமே துவக்கவோ, புழங்கவோ (Operate) இயலும்.
அனுமதிக்கப்படும் கணக்கு வகைகள்
1. சேமிப்பு கணக்கு(Savings a/c)
2. மாதத் தவணை கணக்கு (Recurring Deposits)
3. நிரந்தர வைப்பு கணக்கு (Fixed Deposit)
மேலும்,
நீங்கள் அயல்நாட்டுக்கு செல்வதற்கு முன் உங்களால் வங்கிகளில் துவக்கப்பட்ட கணக்குகளையும் உங்களுடைய NRI Status வங்கிகளுக்கு தெரிய வந்ததும் உங்களுடைய விண்ணப்பம் இல்லாமலே NRO கணக்குகளாக மாற்றிவிட வேண்டும் என்பது இந்திய ரிசர்வு வங்கியின் உத்தரவு.
ஆகவே நீங்கள் வெளிநாட்டுக்கு செல்வது உறுதியாகிவிடும் பட்சத்தில் உங்களுடைய இந்திய கணக்குகளை முடிந்தவரை முடித்துவிட வேண்டும் (Close) முக்கியமாக நிரந்தர வைப்புத்தொகை (Fixed Deposits) கணக்குகளை.
இக்கணக்குகளில் கீழ்காணும் வரவுகள் (Credits) அனுமதிக்கப்படும்
1. வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் தொகை,
2. உங்களுடைய தற்காலிக இந்திய விஜயத்தின்போது வங்கியில் செலுத்தப்படும் தொகை (ரிசர்வு வங்கியால் அனுமதிக்கப்பட்ட கரன்சியாய் இருத்தல் வேண்டும் உ.ம்: USD, Pound Sterling, Yen, Sing Dollar, etc., இந்திய ரூபாயாக மாற்றப்பட்டு வரவு வைக்கப்படும்.
3. மற்ற இந்திய கணக்குகளிலிருந்து மாற்றப்படும் (Transfer from other resident a/c) தொகை,
4. கணக்கு வைத்திருப்பவருக்கு இந்தியாவிலிருந்து கிடைக்கக் கூடிய தொகை உ.ம். வாடகை, வட்டி, மற்றும் பங்குகள் விற்று கிடைக்கும் தொகை.
அனுமதிக்கப் படும் பற்று (Debits)
1. இந்தியாவில் கொடுக்கப்படவேண்டிய தொகைகள் (Local disbursements) உ.ம் குடும்ப செலவு, வாடகை, கடன் தவணை மற்றும் வட்டித் தொகை
2. இந்தியாவில் கிடைக்கும் வருமானத்திலிருந்து வெளிநாட்டிற்கு செலுத்தப்படக்கூடிய (அதாவது நிர்ணயித்துள்ள வரி கழிக்கப்பட்ட பிறகு) தொகை
கடன் எடுக்க முடியுமா?
உங்களுடைய நிரந்தர வைப்பு கணக்கு ரசீதுகளின் மேல் மட்டும் (Fixed Deposits only) கீழ் காணும் தேவைகளுக்காக கடன் எடுக்கலாம்.
1. சொந்த தேவைகளுக்காக,
2. இந்தியாவில் வணிகம் நடத்த
ஆனால்
1. பிறருக்கு கடன் கொடுக்கவோ,
2. விவசாயம் செய்யவோ அல்லது
3. நிரந்தர அசையா சொத்துக்களில் முதலீடு செய்யவோ
கடன் எடுக்க முடியாது.
வருமான வரி
NRO கணக்குகளில் உள்ள தொகைக்கு வங்கிகள் அளிக்கும் வட்டித்தொகை இந்திய வருமான தனி நபர் வரிக்கு உட்படுவதோடு அளிக்கப்படும் வட்டித்தொகையிலிருந்து வருமான வரியைப் பிடிக்கவேண்டும் (Tax would be deducted at Source) என்பதும் நியதியாகும்.
ஆகையால்தான் நீங்கள் வெளிநாட்டிற்கு செல்லுமுன் உங்களுடைய எல்லா வங்கிக் கணக்குகளையும் முடிந்தவரை க்ளோஸ் செய்துவிடவேண்டும் என்று மேலே சொன்னேன்.
2. NRE A/C
இத்தகைய கணக்குகளை NRI சார்பாக அதிகார பத்திரம் (Power of Attorney Holder) வைத்திருப்பவர் எவரும் துவக்க இயலாது.
அதாவது கணக்கை துவக்க விரும்புபவர் மட்டுமே நிர்ணயிக்கப் பட்டுள்ள சான்றுகளை சமர்ப்பித்து துவக்க வேண்டியிருக்கும்.
அனுமதிக்கப்படும் கணக்கு வகைகள்
1. சேமிப்பு கணக்கு(Savings a/c)
2. மாதத் தவணை கணக்கு (Recurring Deposits)
3. நிரந்தர வைப்பு கணக்கு (Fixed Deposit)
போன்ற எந்த வகை கணக்காகவும் திறக்கலாம்.
அனுமதிக்கப்படும் வரவுகள்
1. வெளிநாட்டிலிருந்து செலுத்தப்படும் தொகை
2. வெளிநாட்டு கணக்கிலிருந்து கணக்கை வைத்திருப்பவரின் பெயரிலோ அல்லது அவருடைய பெயரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள (Endorsed) காசோலை (cheque), வங்கி டிரா·ப்டுகள், பயணிகளின் காசோலை (Travellers cheque),
3. வெளிநாட்டு பணம் (Currency Notes), அயல் நாட்டு வங்கிகளின் பத்திரங்கள் (Bank Notes),
4. NRE/FCNR கணக்குகளிலிருந்து மாற்றப்படும் (Transfer) தொகை,
5. கணக்கிலுள்ள தொகைக்கு வங்கிகள் அளிக்கும் வட்டி,
6. இந்திய அரசாங்க கடன் பத்திரம், Mutual Fund யூனிட்டுகளிலிருந்து கிடைக்கும் இறுதித் தொகை (Maturity Procees) வட்டி மற்றும் டிவிடன்ட் தொகை. (இத்தகைய பத்திரங்கள் NRE/FCNR கணக்குகளில் உள்ள தொகையிலிருந்தோ அல்லது நேரடியாக அயல் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணத்திலிருந்தோ வாங்கப்பட்டிருத்தல் அவசியம்)
அனுமதிக்கப்படும் பற்று (Debits)
1. இந்தியாவில் கொடுக்கப்படவேண்டிய தொகைகள் (Local disbursements) உ.ம் குடும்ப செலவு, வாடகை, கடன் தவணை மற்றும் வட்டித் தொகை.
2. வெளிநாட்டிற்கு செலுத்த வேண்டிய தொகை
3. மற்றவருடைய NRE/FCNR கணக்குகளுக்கு மாற்றத் தகுதி வாய்ந்த தொகை (Transfer to other eligible NRE/FCNR a/cs)
4. இந்தியாவில் அசையா சொத்துக்கள் வாங்கவோ, பங்கு, இந்திய கடன் பத்திரங்களில் (Government Securities, Shares, Units of Mutual Funds) முடக்க தேவையான தொகை
கடன் கிடைக்குமா?
NRO கணக்குகளில் உள்ளது போலவே இக்கணக்குகளிலுமிருந்தும் கடன் எடுக்கலாம்.
NRE சேமிப்பு கணக்கில் உள்ள தொகையில் தற்காலிக கடன்கள் (Temporary overdrafts against the balance in the accounts) வழங்குவதற்கு வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடன் தொகை இரண்டு வாரத்திற்குள்ளாகவே வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் தொகையை கொண்டோ அல்லது வேறு NRE/FCNR கணக்குகளிருந்து மாற்றம் (Transfer) செய்வதன் மூலமோ அடைக்கப்பட்டுவிடவேண்டும்.
வருமான/சொத்து வரி
NRE/FCNR கணக்குகளில் உள்ள தொகைகளுக்கு அளிக்கப்படும் வட்டி வருமான வரியிலிருந்தும் சொத்து வரியிலுமிருந்தும் (Wealth Tax) முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படுகிறது.
வெளிநாட்டிலுள்ள NRI களில் பெரும்பாலோனோர் இவ்விரு கணக்குகளையே உபயோகிக்கின்றனர்.
RFC A/c
NRE/FCNR கணக்கு வைத்திருப்பவர் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு நிரந்தரமாக திரும்பிவிடும் பட்சத்தில் இக்கணக்குகளில் நிலுவையிலிருக்கும் தொகையை (Outstanding Balances) RFC கணக்குகளுக்கு மாற்றிவிடலாம்.
மற்ற கணக்குகளையும் கடன் சலுகைகளையும் வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.
மேலும் விவரத்திற்கு:
tbrjoe@yahoo.co.uk
அன்பிற்கினிய திரு. ஜோஸெப்...
பதிலளிநீக்குஉங்களுடைய வலை என்னைப் போன்றவர்களுக்கு பயனுள்ளதாயிருக்கிறது.
நன்றி
தொடருங்கள்...
நன்றி கதிரவன்.
பதிலளிநீக்குஇனியும் எழுதுவேன்.
உங்களுக்கு குறிப்பாக எதிலாவது சந்தேகம் இருந்தாலும் எழுதுங்கள்.எனக்குத் தெரியாவிட்டாலும் என்னுடைய வங்கியில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்து எழுதுகிறேன்.
தங்கள் பதிவு மிகவும்பயனுள்ளதாக இருந்தது.
பதிலளிநீக்குஎன்.ஆர்.ஐ. கணக்குகளில் ரீ-பேட்ரியபில் மற்றும் நான்-ரீபேட்ரியபில் வகைகளை விளக்கவும்.
நன்றி.
திரு. டி.பி.ஆர்.ஜோஸப்
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள கட்டுரை. நன்றி.
//NRE/FCNR கணக்குகளில் உள்ள தொகைகளுக்கு அளிக்கப்படும் வட்டி வருமான வரியிலிருந்தும் சொத்து வரியிலுமிருந்தும் (Wealth Tax) முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படுகிறது//
சொத்துவரி விலக்கு என்பதை இன்னும் சற்று விளக்க முடியுமா? உதாரணமாக Housing Loan மூலமாக NRI ஒருவர் இந்தியாவில் வாங்கும் வீட்டிற்குச் சொத்துவரி, வீட்டு வரி உண்டா? அந்த வீட்டுக் கடனுக்கான மாதத்தவணை வெளிநாட்டிலிருந்து செலுத்தப்படும் பட்சத்தில்.
அன்புடன்
சுந்தர்.
வசிகர்,
பதிலளிநீக்குசாதாரணமாக வீட்டுக் கடனில் ஒரு பகுதி - குறிப்பிட்ட விகிதாசாரத்தில் 10% டு 20% - வீட்டு மனைக்காக கொடுக்கப்படுகிறது.
ஆனால் வீட்டு மனையை மட்டும் தனியாக வாங்க கடன் வசதிபெற வாய்ப்பில்லை.
அநாமதேய நண்பருக்கு,
பதிலளிநீக்குஉங்களுடைய NRW/FCNR கணக்குகளில் வைத்திருக்கும் தொகையையும் அதன் மேல் வங்கிகள் அளிக்கும் வட்டித் தொகையையும் முழுவதுமாக Repatriate செய்துக்கொள்ள இயலும்.
NRO, NRNR கணக்குகளுக்கு அந்த சலுகை இல்லை.
சுந்தர்,
பதிலளிநீக்குநீங்கள் வெளிநாட்டிலேயே தங்கியிருக்கும் காலங்களில் நீங்கள் இந்தியாவில் கடன் பெற்றோ, சொந்த பணத்தில் (அதாவது NRE/FCNR கணக்குகளிலிருந்து) வாங்கப்படும் வீட்டிற்கு சொத்துவரி இல்லை.
வீட்டு வரி என்பது உங்களுடைய வீடு இருக்கும் Town Municipality அல்லது City Corporationக்கு செலுத்துகின்ற வரியாகும். அதில் NRI சொத்து என்ற தனியாக விலக்கு இதுவரை இல்லை.