இன்றைய பதிவுலகின் முதுகெலும்பே இந்த பின்னூட்டங்கள்தான் என்றால் மிகையாகாது.
ஒரு பதிவாளரின் எண்ணச் சிதறல்களை தாங்கி வரும் இடுகைகளை படித்து அதற்கு தங்களுடைய கருத்தை அது மாற்றுக் கருத்தாக இருப்பினும், ஆக்கப்பூர்வமான முறையில் (constructive) விமர்சனம் செய்ய இந்த பின்னூட்டங்கள் மிகவும் உதவுகின்றன.
எந்த ஒரு கருத்துக்கும் மாற்றுக் கருத்து உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த மாற்றுக் கருத்தையும் நேர்மையான முறையில் ஒருவர் முன் வைக்கும்போது பதிவாளர் அதை சரியான, அதாவது அதே நேர்மையான முறையில் எதிர்கொண்டு தன்னுடைய கருத்தை சார்ந்து வாதிடும்போது அந்த வாதமே சூடு பிடித்து மற்ற பதிவர்களுடைய கவனத்தையும் ஈர்த்து 'சூடான இடுகைகள்' பட்டியலில் இடம் பிடித்துவிடுகிறது. இதற்கு கருத்து எழுதுபவர்கள் (பின்னூட்டம் இடுபவர்கள்) தங்களை முழுமையாக அடையாளம் காட்டிக்கொள்வது மிக, மிக அவசியமாகிறது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஒரு சிலர் இதை தவறாகப் பயன்படுத்தி அநாமதேயங்களாக வந்து பதிவாளரின் கருத்துக்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு அவரையே விமர்சித்தனர். மேலும் சிலர் தேவையில்லாத அதாவது சாதி, மத, இனம் சார்ந்த இடுகைகளை எழுதி பதிவர்களிடையே ஒருவித 'கலவர சூழலை' உருவாக்கினர் என்பதும் உண்மை.
அப்போதுதான் தமிழ்மணம் தலையிட்டு தங்களுடைய திரட்டியில் பதிவு செய்திருந்த பதிவர்களை ப்ளாகர் அளித்துள்ள பின்னூட்ட மட்டுறுத்தல் வசதியை பயன்படுத்திக்கொள்ள பரிந்துரைத்தது.
அந்த பரிந்துரை பயனளிக்கத் தவறியபோது மட்டுறுத்தல் வசதியை பயன்படுத்தாத பதிவுகளை நீக்கிவிடவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக வேண்டிவரலாம் என்ற சூழலும் எழுந்தது.
ஆகவே ஏறத்தாழ அனைவருமே தங்களுடைய பதிவுகளில் பின்னூட்ட மட்டுறுத்தலை அறிமுகப்படுத்தினர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக தமிழ்மணத்தில் நிலவும் சூழல் ஒரு நட்புச் சூழலாகவே எனக்குப் படுகிறது. இடுகைகளும் சரி, அதற்கு பிறகு வரும் பின்னூட்டங்களும் சரி அமைதியானதொரு சூழலை காட்டுகிறது. இடுகைகளின் தரமும் சற்று உயர்ந்துள்ளது என்பதையும் மறுக்கவியலாது. துறைசார்ந்த பதிவுகள், படு ஜாலியான பதிவுகளுடன் கும்மியடிக்கும் பதிவுகளும் வந்தாலும் எவரும் எவருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக பதிவுகளோ அல்லது இடுகைகளோ வரவில்லை அல்லது வெகுவாக குறைந்துள்ளது என்பது உண்மை. உண்மைத் தமிழன் போன்றவர்களுடைய பின்னூட்ட அன்பு தொல்லையும் யாரையும் எந்தவிதத்திலும் சங்கடத்திற்குள்ளாக்கியதாக தோன்றவில்லை.
பின்னுட்டங்கள் வந்தவுடன் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள 'கூகிள்' மின்னஞ்சல் விலாசத்தை பதிவு செய்துக்கொண்டால் 'கூகிள் டாக்' வழியாக அவற்றை உடனுக்குடன் அறிந்துக்கொள்ளவும் தேவைப்பட்டால் விரும்பத்தகாத பின்னூட்டத்தை நீக்கிவிடவும் வசதியுள்ளதால் நான் மட்டுறுத்தல் வசதியை நீக்கிவிட்டேன். நாம் இடும் பின்னூட்டத்தை உடனடியாக பதிவில் காண்பதும் ஒரு மகிழ்ச்சியை அளிக்கத்தான் செய்கிறது! அநாமதேய ஆப்ஷனை நீக்கிவிட்டால் யாரும் தேவையில்லாத பின்னூட்டங்களை இட வாய்ப்பில்லை.
ஆகவே இனியும் இந்த பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையில்லை என கருதுகிறேன்.
தமிழ்மணமும் இதற்கு மறுப்பு தெரிவிக்காது என நம்புகிறேன்.
வரவேற்கிறேன்.
பதிலளிநீக்குதேவைன்னு தான் நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவீணான மன உளைச்சலைத் தவிர்க்கலாமே.
குணப்படுத்த முடியாத பைத்தியங்கள் இருக்கின்றன. தரக்குறைவான் பின்னூட்டங்கள் சில வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றைப் பெருகிறவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாவிட்டாலும், படிப்பவர்கள் முகம் சுழிக்க வண்ணம் இருப்பதற்கு மட்டுறுத்தல் இன்னும் கூட ஒரு சிலருக்கு தேவை என்றே நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஇனியும்.. இல்லை இனிமேல் தான் கண்டிப்பாக தேவை என்று நினைக்கிறேன்..
பதிலளிநீக்குநன்றி முகவை மைந்தன்
பதிலளிநீக்குவாங்க துளசி,
பதிலளிநீக்குவீணான மன உளைச்சலைத் தவிர்க்கலாமே.//
இப்பவும் தவிர்க்கலாம். பின்னூட்டத்தின் நகல் google talkல் வருகிறதே. தேவையில்லையென்றால் டெலிட் செய்துவிடலாமே.
வாங்க கண்ணன்,
பதிலளிநீக்குஇப்பவும் நீங்க அந்த பின்னூட்டங்கள படிச்சதுக்கப்புறம்தான் ரிஜெக்ட் செய்ய முடியும்.
மட்டுறுத்தலை நிறுத்தினாலும் பின்னூட்டம் வெளியானதுமே கூகுள் டால்க் மூலம் அதனுடைய நகல் உங்களுக்கு வந்துவிடும். நீங்கள் ஊரில் இல்லாதபோதோ அல்லது கணினியை பயன்படுத்தாத சூழலில் உள்ளபோதோ மீண்டும் தாற்காலிகமாக மட்டுறுத்தலை பயன்படுத்திக்கொள்ளலாமே.
எப்படியோ இது என்னுடைய எண்ணம் மட்டுமே.
//இப்பவும் தவிர்க்கலாம். பின்னூட்டத்தின் நகல் google talkல் வருகிறதே. தேவையில்லையென்றால் டெலிட் செய்துவிடலாமே.
பதிலளிநீக்கு12:02 PM
//
24 மணி நேரம் ஆன்லைனில் யாரும் இருப்பதில்லை. அதற்குள் அந்த தரக்குறைவான பின்னூட்டங்கள் வாசிக்கப்பட்டு பலர் முகம் வாடி இருக்கக் கூடும்
வாங்க கயல்விழி,
பதிலளிநீக்கு'இனிமேல்தான் தேவை' என்று ஏன் கூறுகிறீர்கள் என்று புரியவில்லை.
இருப்பினும் உங்களுடைய விருப்பத்தை மறுத்துச் சொல்ல நான் யார்?
கோவி கண்ணன் அவர்கள் கூறுவதை 100% ஆமோதிக்கிறேன். இப்போதைய நிலை என்னவென்றால் பின்னூட்ட மட்டுறுத்தல் குறித்து தமிழ்மணத்தின் ஷரத்து இல்லை. ஆனாலும் பின்னூட்டத்தின் சௌகரியம் கருதி சம்பந்தப்பட்ட பதிவர்கள் அதை வைத்து கொண்டுள்ளனர். நானும் அவர்களில் ஒருவன்.
பதிலளிநீக்குஎனக்கு இன்னமும் அசிங்க பின்னூட்டங்கள் வருகின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கோவி.கண்ணன் said...
பதிலளிநீக்குகுணப்படுத்த முடியாத பைத்தியங்கள் இருக்கின்றன. தரக்குறைவான் பின்னூட்டங்கள் சில வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றைப் பெருகிறவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாவிட்டாலும், படிப்பவர்கள் முகம் சுழிக்க வண்ணம் இருப்பதற்கு மட்டுறுத்தல் இன்னும் கூட ஒரு சிலருக்கு தேவை என்றே நினைக்கிறேன்.
//
கோவியாரை வழிமொழிகிறேன்.
ஹைதராபாத், பெங்களூர் நகரங்களில் இருந்து இரு பைத்தியங்கள் எல்லார் பதிவிலும் இன்னமும் ஆபாசமாக கழிந்துவிட்டு தான் செல்கின்றன.
டோண்டு சார் மற்றும் லக்கிலுக்.
பதிலளிநீக்குபேசாம இதுக்கே ஒரு ஓட்டெடுப்பு நடத்தலாம் போலருக்கு.
எனது பதிவின் பின்னுட்டங்கள் மட்டுருத்தல் செய்தால் பிறகும் இன்றுவரை ம திரட்டியில் திரட்டபடவில்லை
பதிலளிநீக்குஇதற்கு என்ன செய்யவேண்டும்???
பட்டவங்க சொல்றதைப் பாத்தா என்னோட ஆதரவை மறுபரிசீலனை பண்ணனும் போல இருக்கே ;-(
பதிலளிநீக்குதற்போது தமிழ்மண சூழல் மாறியிருப்பது ஓரளவு உண்மைதான்.எனினும் முழுமையாக மாறிவிட்டதா என்பது ஐயமே.
பதிலளிநீக்குஅனானியாக வந்து எழுதுபவர்கள் இருக்கும்வரை மட்டுறுத்தல் தேவையே.
எந்தக் கருத்தாயினும் தைர்யமாக சொந்தப் பெயரில் எழுதத் துணியும்வரை இது அவசியமே.
''எப்போது ஒரு பெண் நள்ளிரவில் பாதுகாப்பாக தனியாகச் செல்லக்கூடிய நிலைமை வருகிறதோ அப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகப் பொருள்' என்ற மகாத்மாவின் மொழிகள் தமிழ்மண பின்னூட்டத்துக்கும் பொருந்தும்
ஆனா எரிதங்களை தடுக்கிறதுக்கு கட்டாயம் மட்டறுத்தல் ஒருக்கிறது நல்லம். இன்னும் உங்களுக்கு அந்த பிரச்சனை வரவில்லை போல இருக்கு.
பதிலளிநீக்குதேவையில்லாத பின்னூட்டங்களை நிராகரிக்க மட்டுறுத்தல் என்பது ஒரு வசதி. அதை ஏன் உபயோகிக்கக் கூடாது ?
பதிலளிநீக்கு////
பதிலளிநீக்கு1. Blogger பகீ said...
ஆனா எரிதங்களை தடுக்கிறதுக்கு கட்டாயம் மட்டறுத்தல் ஒருக்கிறது நல்லம். இன்னும் உங்களுக்கு அந்த பிரச்சனை வரவில்லை போல இருக்கு.
2. ஜ்யோவ்ராம் சுந்தர் said...
தேவையில்லாத பின்னூட்டங்களை நிராகரிக்க மட்டுறுத்தல் என்பது ஒரு வசதி. அதை ஏன் உபயோகிக்கக் கூடாது///
இருவர் சொல்வதுமே உண்மை!
நானும் பட்டிருக்கிறேன்!
மட்டுறுத்தல் தேவைதான் என்ற கருத்தே அதிகம் வருகின்றன என்பதால் அப்படியே வைத்துக்கொள்வோம்.
பதிலளிநீக்குஆனால் இதனால அனானிகளின் தொல்லை தீர வழியில்லை அதாவது அந்த ஆப்ஷனை பதிவர்கள் எடுத்தெறியாத வரை. மட்டுறுத்தலைக் காட்டிலும் மிகவும் தேவையானது அனானி ஆப்ஷனை எடுத்துவிடுவது.
ஆனா எரிதங்களை தடுக்கிறதுக்கு கட்டாயம் மட்டறுத்தல் ஒருக்கிறது நல்லம். இன்னும் உங்களுக்கு அந்த பிரச்சனை வரவில்லை போல இருக்கு.//
பதிலளிநீக்குநிறையவே வந்திருக்கிறது. இப்போதல்ல 2006-2007ல். ஆனால் மட்டுறுத்துவதற்கு முன்பு அந்த கேவலமான வார்த்தைகளை காணத்தான் வேண்டி இருநதது. மட்டுறுத்தலை நிறுத்தினாலும் அதே நிலைதான். ஒரேயொரு வித்தியாசம் அப்போது அவற்றை நான் மட்டுமே படித்துக்கொண்டிருந்தேன் இப்போது மற்ற ஒரு சிலரும் படிக்க வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட பின்னூட்டங்களை எடுத்துவிடாமல் சிலர் வைத்துக்கொண்டிருந்ததால்தான் மட்டுறுத்த வேண்டிய அவசியம் வந்தது. இப்போதும் பல பதிவர்கள் அனானி ஆப்ஷனை திறந்துதானே வைத்திருக்கின்றனர்?
////ஆனால் இதனால அனானிகளின் தொல்லை தீர வழியில்லை அதாவது அந்த ஆப்ஷனை பதிவர்கள் எடுத்தெறியாத வரை. மட்டுறுத்தலைக் காட்டிலும் மிகவும் தேவையானது அனானி ஆப்ஷனை எடுத்துவிடுவது.///
பதிலளிநீக்குஒரு அனானி பினாமி பெயரில் ஒரு ப்ளாக்கர் கணக்குத் திறப்பதற்கு
ஐந்து நிமிடங்களுக்குமேல் ஆகாது. Blank Profile மட்டுமே கண்ணில் படும்
//ஒரு அனானி பினாமி பெயரில் ஒரு ப்ளாக்கர் கணக்குத் திறப்பதற்கு
பதிலளிநீக்குஐந்து நிமிடங்களுக்குமேல் ஆகாது. Blank Profile மட்டுமே கண்ணில் படும்//
திருடனை பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது....
//திருடனை பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.... //
பதிலளிநீக்குதிருடனாப் பார்த்து.
திருடன் தானாகவே பார்த்து
ஒரு அனானி பினாமி பெயரில் ஒரு ப்ளாக்கர் கணக்குத் திறப்பதற்கு
பதிலளிநீக்குஐந்து நிமிடங்களுக்குமேல் ஆகாது. Blank Profile மட்டுமே கண்ணில் படும்//
திருடனை பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது....//
திருடனாப் பார்த்து.
திருடன் தானாகவே பார்த்து//
சுப்பையா சார் சொல்றதை ஒத்துக்கறேன். ஆனால் சில பதிவர்களே இதை ஆதரிப்பதும் நடக்கத்தானே செய்கிறது. அனானிகளுடைய பின்னூட்டங்களை தவிர்ப்பதுபோலவே இவற்றையும் தவிர்க்க வேண்டும். செய்வதில்லையே.
ஐயா
பதிலளிநீக்குபின்னூட்ட மட்டுறுத்தல் பதிவுக்கு பதிவு வேறுபடுகின்ற ஒன்று .
அது நாம் எப்படிபட்ட பதிவை எழுதுகிறோம் என்பதை பொறுத்தே உள்ளது .
அது நாம் எப்படிபட்ட பதிவை எழுதுகிறோம் என்பதை பொறுத்தே உள்ளது ./
பதிலளிநீக்குசரியா சொன்னீங்க அதீஷா. என்னுடைய பதிவுகள் எவற்றிற்கும் தரக்குறைவான பின்னூட்டங்கள் வந்ததில்லை. முன்பு (2006-07ல்)நான் ஒரு குறிப்பிட்ட பதிவரை சார்ந்திருந்தேன் என்ற எண்ணத்தால் ஒரு குறிப்பிட்ட நபர் அத்தகைய கேவலமான பின்னூட்டங்களை எழுதி வந்தார்.
இப்போது அந்த சூழல் சற்றே மாறியுள்ளது என்பதை நான் காண நேரிட்டதால்தான் மட்டுறுத்தல் வேண்டாமே என்ற யோசையை முன் வைத்தேன்.
\\
பதிலளிநீக்குஇப்போது அந்த சூழல் சற்றே மாறியுள்ளது என்பதை நான் காண நேரிட்டதால்தான் மட்டுறுத்தல் வேண்டாமே என்ற யோசையை முன் வைத்தேன்.
\\
ஐயா
அந்த சூழல் அப்படியேதான் இருக்கிறது .
3 நாட்களுக்கு முன் நான் இட்ட கலைஞரை பற்றிய பதிவிற்கு அதுவரை நான் பார்த்திராத அளவுக்கு ஆபாச பின்னூட்டங்கள் . அப்பதிவு வெறும் நகைச்சுவைக்காக எழுதியதாக இருப்பினும் இன்னும் கூட தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
அந்த மனநிலை பிறழ்ந்தவர்களை என்ன செய்வது .
மனத்தாங்கலை தவிர்க்க இது அவசியம் என்பது என் கருத்து
பதிலளிநீக்குஅதிஷா அவர்கள் கூறியது போல் எப்படி பதிவு எழுதுகிறோம் என்பது ஒரு முக்கிய காரணம்.
3 நாட்களுக்கு முன் நான் இட்ட கலைஞரை பற்றிய பதிவிற்கு அதுவரை நான் பார்த்திராத அளவுக்கு ஆபாச பின்னூட்டங்கள் . அப்பதிவு வெறும் நகைச்சுவைக்காக எழுதியதாக இருப்பினும் இன்னும் கூட தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.//
பதிலளிநீக்குஅப்படியா? நான் நினைத்ததுபோல் அல்ல போலிருக்கிறது.
இந்த பதிவில் வந்த அனைத்து கருத்துக்களுமே மட்டுறுத்தல் வேண்டும் என்பதாகவே உள்ளதால் நானும் இதை ஏற்றுக்கொள்கிறேன். கருத்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
க்ளிக் ஹியர் போன்ற ஸ்ப்பேம் கமெண்ட்டுகள்.. எக்கச்சக்கமாக குவிகிறது..டெலிட் செய்ய இயலாத வண்ணம். பதிவர் கணக்கு இல்லாமல் எத்தனையோ பேர் கமெண்ட் போட நினைக்கிறார்கள் ...முன்பைவிட இப்போது தான்பதிவு பத்தி அதிகம் பேர் தெரிந்து கொண்டு வருகிறார்கள்.. கொஞ்சம் பேர் இருக்கும் போதே ப்ரச்சனை என்றால் நிறைய பேர் வரும்போது எப்படி இருக்கும்.. வீட்டுக்கதவை பூட்டியே வைப்பது போல் தான் இதுவும். கண்மணி சொல்வது போலத்தான்..
பதிலளிநீக்குஅதனால் தான் இனிமேல் தான் அவசியம் என்று சொன்னேன்..