24 June 2008

பதிவாளர்கள் எழுத்தாளர்களா?

ஒவ்வொரு காலக்கட்டத்துல ஒவ்வொரு விஷயம் பிரபலமா இருக்கும். சரியான சொல்லணும்னா craze ஆ இருக்கும்.

பதிவெழுதறதுதான் இப்ப craze. இதுக்குன்னு இலவசமா இடமும் (space) சூப்பரா வடிவமைச்ச பலகையும் (design templates) கிடைச்சிருது. அலுவலகத்தோட தயவுல கணினியும் வலை இணைப்பும் (Internet connection)கிடைச்சிருது.

அப்புறம் என்ன? ப்ளாக் ரெடி.

எழுதறதுக்கு (கிறுக்கறதுக்குன்னு சொல்றதுதான் சரி)விஷயம்?

அப்படீன்னு ஒன்னு தேவையே இல்லீங்க. கண்ணால பாக்கறது, காதால கேக்கறதுன்னு எதப்பத்தி வேணும்னாலும் கிறுக்கலாம்.

ஆனா அதெல்லாம் எழுத்தாயிருமா இல்ல நாமதான் நம்மள எழுத்தாளர்னு நினைச்சிக்கலாமா?

இதுதான் இன்றைய கேள்வி.

சிலரோட பதிவு தலைப்புல ஒரு mission statement இருக்கும்.

'இது என்னை ஒரு எழுத்தாளனாக்க நான் எடுத்துக்கொள்ளும் முயற்சி'

அதாவது இப்ப நான் எழுத்தாளன் இல்லை. ஆனா ஒரு காலத்துல எழுத்தாளனாயிருவேன். அதுக்காக இன்னையிலருந்து முயற்சி பண்ணப்போறேன்னு சொல்றாங்க.

இதுதான் நிதர்சனம்.

நம்ம எல்லார் மனசுக்குள்ளயும் இருக்கற ஒரு சின்ன ஆசை.

இந்த மாதிரி வந்து தினம் ஒரு பதிவு எழுதி ஆரம்பத்துல பிரமாத பேசப்பட்டு தன்னைத்தானே ஒரு பெரிய எழுத்தாளனா கற்பனை செய்துக்கிட்டு பிறகு அட்ரஸ் தெரியாம ஆன பதிவர்கள் ஏராளம், ஏராளம்.

இத்தகைய பதிவர்கள் அநேகம் பேர் அவங்க இடுகைகளுக்கு வர்ற பின்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்து 'அட! இவ்வளவு பேர் நம்ம எழுத்த படிச்சி அவங்களோட கருத்த எழுதறாங்களே. அப்ப நம்ம எழுத்துலதான் ஏதோ இருக்கு போலருக்கு.'ன்னு நினைச்சி தங்களையும் எழுத்தாளராளர்களாக கற்பித்துக்கொண்டவர்கள்.

அதில் தவறேதும் இல்லை. ஆனா அத ரொம்ப சீரியசா எடுத்துக்குறக் கூடாதுன்னுதான்...

ஆயிரம் பதிவர்கள்ல ஒரு பத்து பேர் எழுத்தாளரா வரலாம்னு வேணும்னா சொல்லலாம். அதாவது தொடர்ந்து ஒரு பத்து வருசம் எழுதுனா. அதாவது வெறும் கும்மி பதிவா எழுதாம... பின்னூட்ட எண்ணிக்கைகளைப் பத்தியெல்லாம் கவலைப்படாம...

அதுக்கு ரொம்ப பொறுமை வேணும். நிறைய படிக்கணும் (ஒரு எழுத்தாளனுக்கு மிக முக்கியம் இந்த படிக்கும் ஆர்வம்), ஆய்வு செய்யணும், etc, etc. அதுக்கு நிறைய நேரம் வேணும். அதுதானே இப்ப பிரச்சினையே.

அதனால நா சொல்ல வர்றது என்னன்னா ஆஃபீஸ் நேரத்துல மட்டும் பதிவுல எழுதறவங்க எல்லாம் எழுத்தாளர்களாகி விட முடியாதுங்க.

வேணும்னா நாம எல்லாம் கத்துக்குட்டி எழுத்தாளர்ங்கன்னு வேணும்னா சொல்லிக்கலாம்.

ஆனா ஒன்னு. ஒரு முழுநேர எழுத்தாளனுக்கு இல்லாத சுதந்திரம் நமக்கு இருக்கு. நாம எதப்பத்தி வேணும்னாலும், எப்படி வேணும்னாலும் எழுதலாம். ஒரு கட்டுப்பாடும் இல்லை.

அதனால எழுத்தாளன்னு எந்தவித pretensionம் (பாவனை செய்துக்கொள்ளாமல்) இல்லாம மனம்போன போக்குல எழுதி, தப்பு, தப்பு, கிறுக்கி தள்ளுங்க.

நம்ம பதிவுல நாம கிறுக்கறதுக்கு யார் பர்மிஷன் வேணும்?

எச்சரிக்கை: யாராவது உங்களை ஒரு எழுத்தாளனாக்குகிறேன் என்றால் அவர்கள் பின்னால் சென்றுவிடாதீர்கள். They will take your ideas, dress them up in such a way that you won't recognise your own work when it is published, would take the cake and give you only the crumbs. Beware of such parasites.

நாளைய பதிவு: இனியும் பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையா?

19 comments:

SP.VR. SUBBIAH said...

////அதுக்கு ரொம்ப பொறுமை வேணும். நிறைய படிக்கணும் (ஒரு எழுத்தாளனுக்கு மிக முக்கியம் இந்த படிக்கும் ஆர்வம்), ஆய்வு செய்யணும், etc, etc. அதுக்கு நிறைய நேரம் வேணும். அதுதானே இப்ப பிரச்சினையே.////

அருமையா சொன்னீர்கள் நண்பரே!
எல்லாம் இல்வசமாகக் கிடைக்கும் - ஆனால்
பணம் கொடுத்தாலும் நேரம் கிடைக்காது
அதுதான் தலையாய பிரச்சினை!

டி.பி.ஆர் said...

வாங்க சுப்பையா சார்,

பணம் கொடுத்தாலும் நேரம் கிடைக்காது//

உங்க நேரத்தை நானோ இல்ல என்னுடைய நேரத்தை நீங்களோ வாங்கிக்க முடிஞ்சா எவ்வளவு நல்லாருக்கும்!

அதிஷா said...

சரியாச்சொன்னீங்க.........

G.Ragavan said...

உண்மைதான் ஜோcஅப் சார். எல்லா பதிவும் எழுத்தல்ல. ஆன நல்ல எழுத்துகளும் பதிவில் இருக்கு

கோவி.கண்ணன் said...

//அலுவலகத்தோட தயவுல கணினியும் வலை இணைப்பும் (Internet connection)கிடைச்சிருது. //

கூடவே ஊதியமும் கொடுத்து என்று இருக்க வேண்டும்.
:)

பதிவர்கள் மட்டுமில்லை ஐயா, பிரபல எழுத்தாளர்களும் எழுதிக் கொண்டே இருந்தால் தான் பேசப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். இப்ப ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்திவிட்டார்...அவரைப்பற்றி பேசுவதும் குறைந்துவிட்டது.

இன்றைக்கு எத்தனைப் பட்டம் பறக்குது என்பதுதான் எதிரே தெரியும். நேற்று யார் யாரெல்லாம் பட்டம் விட்டார்கள் என்று நினைப்பது கடினம் தான்.

இது பேருந்து பயணம் போன்றதுதான் கூடவே வருபவர்களுடன் இறங்கும் வரை உரையாற்றிக் கொண்டு இருக்கலாம்.

SP.VR. SUBBIAH said...

///அதனால எழுத்தாளன்னு எந்தவித pretensionம் (பாவனை செய்துக்கொள்ளாமல்) இல்லாம மனம்போன போக்குல எழுதி, தப்பு, தப்பு, கிறுக்கி தள்ளுங்க.

நம்ம பதிவுல நாம கிறுக்கறதுக்கு யார் பர்மிஷன் வேணும்?/////

ஆனால் ஒரு முறை படிப்பவன் மறுமுறை வர வேண்டாமா? அதானால் கிறுக்குவதை சுவாரசியம் குறியாமல் கிறுக்குங்கள்!
படிப்பவனுடைய சுவாரசியம் கெடக்கூடாது

அசோகர் குளம் வெட்டினார், மரம் நட்டார், சாலைகளைப் போட்டார் என்று எழுதாமல், அசோகர் காலத்தில் டெண்டர் இல்லை, காண்ட்ராக்டர் இல்லை, பொக்லைன் இல்லை, ஆனாலும் மனம் தளராமல் அவர் செய்த பணிகள் என்னென்ன?
அவரை மாமன்னர் என்று ஏன் அழைக்கின்றோம்?... இப்படித்துவங்கினால் வாசகன் லயித்துப் போவான்!:-))))

டி.பி.ஆர் said...

நன்றி அதீஷா

டி.பி.ஆர் said...

வாங்க ராகவன்,

ஆன நல்ல எழுத்துகளும் பதிவில் இருக்கு//

அருமையா சொன்னீங்க. உண்மைதான்.

டி.பி.ஆர் said...

கூடவே ஊதியமும் கொடுத்து என்று இருக்க வேண்டும்.//

வருங்காலத்தில் அதுவும் கிடைக்குமோ என்னவோ:))

பதிவர்கள் மட்டுமில்லை ஐயா, பிரபல எழுத்தாளர்களும் எழுதிக் கொண்டே இருந்தால் தான் பேசப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். இப்ப ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்திவிட்டார்...அவரைப்பற்றி பேசுவதும் குறைந்துவிட்டது.//

உண்மைதான். ஆனால் காலத்தைக் கடந்த எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் ஜெயகாந்தன். அவருடைய கதைகளைவிட கட்டுரைகள் இன்றும் பேசப்படுகின்றனவே.

இன்றைக்கு எத்தனைப் பட்டம் பறக்குது என்பதுதான் எதிரே தெரியும். நேற்று யார் யாரெல்லாம் பட்டம் விட்டார்கள் என்று நினைப்பது கடினம் தான்.//

சிறந்த நடிகட் பட்டம் மாதிரி. போன வருசத்தின் சிறந்த நடிகரே இந்த வருடமும் சிறந்த நடிகராக வேண்டும் என்றில்லை.

இது பேருந்து பயணம் போன்றதுதான் கூடவே வருபவர்களுடன் இறங்கும் வரை உரையாற்றிக் கொண்டு இருக்கலாம்.//

சூப்பர் உதாரணம். சகபதிவாளர் என்பதும் இத்தகைய உறவுதான், இல்லையா?

டி.பி.ஆர் said...

ஆனால் ஒரு முறை படிப்பவன் மறுமுறை வர வேண்டாமா? அதானால் கிறுக்குவதை சுவாரசியம் குறியாமல் கிறுக்குங்கள்!
படிப்பவனுடைய சுவாரசியம் கெடக்கூடாது//

உண்மைதான். வாசிப்பவர்களுக்கு என்ன தேவையோ அதை உணர்ந்து அளிப்பவந்தான் புத்திசாலி. ஆனால் அதுவே சில சமயங்களில் வியாபாரமாகிவிடுகிறது.

SP.VR. SUBBIAH said...

////இன்றைக்கு எத்தனைப் பட்டம் பறக்குது என்பதுதான் எதிரே தெரியும். நேற்று யார் யாரெல்லாம் பட்டம் விட்டார்கள் என்று நினைப்பது கடினம் தான்.////

பலருடைய பட்டங்கள் இன்னும் சீராக வானில் பறந்து கொண்டுதான் இருக்கிறது.

கல்கி, சாண்டில்யன், சுஜாதா, பாலகுமாரன், கண்ணதாசன் என்று பலரைச் சொல்லலாம்

பதிப்பகங்களையும், புத்தக விற்பனையாளர்களையும் கேட்டுப் பாருங்கள் தெரியும்!

துளசி கோபால் said...

அட தேவுடா.......

என்னங்க இப்படி ஒரே உ.கு?

SP.VR. SUBBIAH said...

நமது பதிவுகளை அதிகம் போனால் 200 அல்லது 300 பேர்கள் படிக்கலாம். இன்றைய நிலை அவ்வளவுதான். எல்லோரின் கவனத்தையும் ஈர்க்க முயன்றால் நம் எழுத்தின் தரம் குறையும் அபாயம் இருக்கிறது!

அதை மனதில் கொள்ளவும்!

ஆனால் பத்திரிக்கையில் எழுதுபவர்களுக்கு ஆயிரக் கணக்கில் வாசகர்கள். அங்கே வாய்ப்புக் கிடைக்கத் தொங்க வேண்டும்.

இங்கே அந்தப் பரச்சினை இல்லை!
மாறாக யாரை வேண்டுமென்றாலும் நாம் தொங்க விடலாம்:-))))

டி.பி.ஆர் said...

வாங்க துளசி,

உள்குத்தா? ச்சேச்சே அப்படியெல்லாம் இல்லை. ஓ! கடைசி ஆங்கில வரிகளை சொல்கிறீர்களா? அது சொந்த அனுபவம்! அது மற்றவர்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாதே என்கிற ஆதங்கம். சற்று சூடாக வெளிவந்துள்ளது.

டி.பி.ஆர் said...

எல்லோரின் கவனத்தையும் ஈர்க்க முயன்றால் நம் எழுத்தின் தரம் குறையும் அபாயம் இருக்கிறது!//

சரியா சொன்னீங்க.

மிக அருமையாக எழுதிக்கொண்டிருந்த சிலர் இன்று எழுதாமல் இருப்பதற்குக் காரணம் வாசகர்கள் விரும்பியதை அவர்களால் தரமுடியாமற் போனதுதான். தரமுடியாமல் என்பதை விட தர விரும்பாமல் என்பது இன்னும் சரியாக இருக்கும்.

SP.VR. SUBBIAH said...

////துளசி கோபால் said...
அட தேவுடா.......
என்னங்க இப்படி ஒரே உ.கு?////

டீச்சரம்மாகாரு, இக்கட உ.கு ஏமி லேதண்டி! உட்டிகா ப்ளாக்ஸ் குறிஞ்சி டிஸ்கசன்ல உண்டுன்னோமண்டி. கிரிகிரி லேதண்டி.
மீரு ஏமி பாத படக்கண்டி!

புருனோ Bruno said...

பதிவாளர்கள் எழுத்தாளர்களோ இல்லையோ, அவர்கள் பழக்க அடிமைகளாக மாறி வருவது தெரிகிறது :) :) :)

1998 - 2002 ஒருவர் கணினி முன் அதிக நேரம் அமர்ந்திருந்தால் அவர் Chat செய்கிறார் என்று அர்த்தம்

இன்று கணினி முன் இருப்பவர் பதிவு எழுதுகிறார், அல்லது மறுமொழி எழுதுகிறார் :) :) :)

-

பழக்க அடிமை , தீராப் பழக்கம், பழக்கத்தில்தோய் ஆகிய சொற்கள் அடிக்ட் என்ற ஆங்கில சொல்லிற்கு இணையானவை

டி.பி.ஆர் said...

வாங்க ப்ரூனோ,

பதிவாளர்கள் எழுத்தாளர்களோ இல்லையோ, அவர்கள் பழக்க அடிமைகளாக மாறி வருவது தெரிகிறது //

உண்மைதான்.

கண்மணி said...

ஆஹா...எங்களை மாதிரி கும்மிப் பதிவர்களை யாரும் ஏமாத்த முடியாதே:))