கடந்த சில மாதங்களாகவே பலராலும் எதிர்பார்க்கப்பட்ட முறிவு இறுதியில் ஏற்பட்டுவிட்டது.
இதை 'விட்டது தொல்லை' என்று தி.மு.க தலைமையும் அதன் தொண்டர்களும் என நினைத்து மகிழலாம். அது ஓரளவுக்கு உண்மையும் கூட.
பா.ம.க தலைமையும் இதை 'ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்' என ஒதுக்கித் தள்ளியும் விடலாம்.
ஆனால் இந்த முடிவு சரியானதுதானா?
இந்த முடிவிற்குப் பின்னால் தி.மு.கவின் ஒட்டுமொத்த தலைமை நிற்கிறதா?
கட்சித் தலைவர்களில் ஒருவரும் மு.க.விற்குப் பிறகு முதல்வர் பதவியில் அமரக்கூடும் என பலராலும் கருதப்பட்ட ஸ்டாலின் ஊரில் இல்லாத சமயத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை வைத்துப் பார்த்தால்...
கடந்த வாரம் நடந்து முடிந்த தி.மு.க மகளிர் அணி மாநாட்டிலும் அவர் கலந்துக்கொள்ளாமலிருந்ததையும் மு.க. அழகிரிக்கும், அவருடைய மகள் மற்றும் கனிமொழிக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையும் வைத்து பார்த்தால்...
ஒருவேளை ஸ்டாலின் ஒதுக்கப்படுகிறாரோ என்கிற எண்ணமும் தோன்றத்தான் செய்கிறது...
இத்தகைய சூழலில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு சரியானதுதானா?
விட்டது தொல்லை என்று நினைத்து எடுக்கப்பட்ட முடிவே ஒரு பெருந்தொல்லையாகிவிடுமோ?
காலம்தான் பதில் சொல்லும்..
இது திமுகாவுக்கு நிச்சயம் பலவீணம்தான். அவர்களின் செயல்பாடும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. (கனிமொழி/ஸ்டாலின் - அழகிரி /அழகிரி மகள்/ராயல் கேபிள் விஷன்) - குடும்ப அரசியல் விவாதம் மறுபடியும் ஆரம்பிக்கும். இதற்கு திமுகாவிடம் சரியான பதில்கள் இருப்பதாக தெரியவில்லை.
பதிலளிநீக்குhttp://manathinoosai.blogspot.com/2008/06/blog-post_18.html
////காலம்தான் பதில் சொல்லும்..///
பதிலளிநீக்குஉண்மை!காலத்தைத் தவிர சரியான பதிலை யாரும் முன்கூட்டியே சொல்ல முடியாது!
வாங்க ம.ஓசை,
பதிலளிநீக்குஇது திமுகாவுக்கு நிச்சயம் பலவீணம்தான். அவர்களின் செயல்பாடும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. //
இதை திமுக தலைமை உணர்ந்தால் சரி. இல்லையென்றால் மீண்டும் ஜெ ஆட்சிதான். அதுதான் தமிழகத்தின் தலையெழுத்து என்றால் அதை மாற்றவா முடியும்!
வாங்க ம.ஓசை,
பதிலளிநீக்குஇது திமுகாவுக்கு நிச்சயம் பலவீணம்தான். அவர்களின் செயல்பாடும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. //
இதை திமுக தலைமை உணர்ந்தால் சரி. இல்லையென்றால் மீண்டும் ஜெ ஆட்சிதான். அதுதான் தமிழகத்தின் தலையெழுத்து என்றால் அதை மாற்றவா முடியும்!
வாங்க சுப்பையா சார்,
பதிலளிநீக்குகாலத்தைத் தவிர சரியான பதிலை யாரும் முன்கூட்டியே சொல்ல முடியாது!//
ஆனால் ஊகமா சொல்லணும்னா இது திமுகவுக்கு பாதகாமாகத்தான் முடியும்.
//இதை திமுக தலைமை உணர்ந்தால் சரி.//
பதிலளிநீக்குஉணராமலா? குடும்ப பாசமும் ஓவராக யோசித்துக்கொண்டும் எதிலும் தெளிவான முடிவெடுக்காமல் இருக்கிறார்.
//இல்லையென்றால் மீண்டும் ஜெ ஆட்சிதான். அதுதான் தமிழகத்தின் தலையெழுத்து என்றால் அதை மாற்றவா முடியும்!//
ஹும்.. என்னத்த சொல்ல.