சிங்கை D. ராஜ் (என்ன ராஜ் இப்படி மாட்டி விட்டுட்டீங்க?) அன்புத்தொல்லையால் (!) வந்த வினை..
இச்சங்கிலிப் பதிவில் அடுத்த வளையம் நான்..
எனக்குப் பிடித்த நாலு விஷயங்கள்..
Four Jobs I have had:
லெதர் குட்ஸ் தயாரிப்பு நிறுவனம்: வருடம்: 1967-69. இது என்னுடைய உறவினர் ஒருவருக்கு சொந்தமானது. ஆல் இன் ஆல் என்பார்களே அதுபோன்ற பதவி இருந்தேன். சுமார் ஒன்றரை ஆண்டுகள்..
ஹிக்கின்பாதம்ஸ்: வருடம் 1969-1970. சென்னையில் அப்போது இருந்த புத்தகக் கடைகளில் மிகப் பெரியதாகக் கருதப்பட்டது.. சென்னையில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கிளைகளைக் கொண்ட நிறுவனம். Amalgamations என்ற தென்னிந்தியாவில் உள்ள மிகப் பெரிய நிறுவன குழுவில் சேர்ந்தது.. சுமார் பதினெட்டு மாதங்கள் குமாஸ்தாவாக பணியாற்றினேன்.. பணி நிரந்தரம் அடைய வாய்ப்பில்லை என்பதால் விலகினேன்.
இப்போதுள்ள வங்கி: 1971 ஏப்ரல்: குமாஸ்தாவாக சேர்ந்தேன்.. இன்று Deputy General Manager..
நான்காவது? தேவைப்பட்டால் பணி ஓய்வு பெற்ற பிறகு..
Four Movies I would love to watch over and over again..
1. உதிரிப் பூக்கள்
2. மவுன ராகம்
3. சேது
4. தவமாய் தவமிருந்து
Four Places I have lived
1. சென்னை
2. தஞ்சை
3. மும்பை
4. மதுரை
Four places I would rather be (now)
1. என் மூத்த மகளுடன் (சிறிது காலமாவது) மலேசியாவில்
2.என் அம்மாவுடன் (திருத்துறைப் பூண்டியில்)
3.தனிமையில் (பழைய சிந்தனைகளை அசைபோட)
4.என் அலுவலகம் (வேறு வழியில்லாமல்)
Four TV serials I love to watch
உண்மையா சொல்றேன் எனக்கு அதுக்கு நேரமே கிடைச்சதில்லை.. இருந்தாலும், தமிழ்ல ஒன்னுமே சொல்றதுக்கில்லை.. ஆங்கிலத்தில்? வீட்ல செட் டாப் பாக்ஸே இல்லை..
Four Places I have been on vacation
1. லோனாவாலா, மும்பை,
2. ஊட்டி,
3. கொடைக்கானல்
4. மூனார், கேரளா
Four of my favourite Foods (ரொம்ப முக்கியம்!)
1. வெங்காய ஊத்தப்பம்,
2. வெண் பொங்கல்,
3. ரவா தோசை
4. கேசரி (ஒரு காலத்தில். இப்பவும் சைதான்.. ஆசை இருந்து என்ன பண்ண?)
Four sites I visit Daily
1. என்னுடைய வங்கியின் இணைய தளம்
2. கூகுள்
3. தமிழ்மணம் (வேற வழி?)
4. Tamilnetmalaysia.com (என்னுடைய படைப்புகளை தெரியாத்தனமாக வெளியிடுவதால்)
Four People I would like to tag (மன்னிச்சிருங்கய்யா)
1. கோ. ராகவன்,
2. ஜோ மில்டன்
3. சோம்பேறிப்பையன்
4. டோண்டு (சாரி, போலி டோண்டு இல்லை)
Wow! Im am honoured!Thanks Sir!
பதிலளிநீக்குவாங்க ஜோ,
பதிலளிநீக்குஎன்னது ஹானரா?
அப்படீன்னா சரி.. உங்க பின்னூட்டம் கூகுள் பாப் அப்ல வந்தப்போ எங்க அடிக்க வந்துட்டீங்களோன்னு பயந்துட்டேன்.
///
பதிலளிநீக்குடோண்டு (சாரி, போலி டோண்டு இல்லை)
///
sema nakkal sir ungkaLukku
//தவமாய் தவமிருந்து//
பதிலளிநீக்குதங்களுக்குப் பிடித்தமான பட வரிசையில் 'தவமாய் தவமிருந்து' பார்த்ததும் உங்களின் பாசம் புரிகிறது ஐய்யா.
நல்ல பதிவு.
வாங்க மூர்த்தி,
பதிலளிநீக்குஎனக்கு பிடித்த நான்கு படங்களையுமே பாருங்கள்..
எல்லாமே ஏதாவது ஒரு உறவை உணர்ச்சியுடன், லேசான சோகத்துடன் கூறப்பட்டவையாகவே இருக்கும்..
நடிகர்களைவிட கதையமைப்பும், கருத்தும்தான் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்..
வாங்க சோழநாடன்,
பதிலளிநீக்குsema nakkal sir ungkaLukku //
கொஞ்சூண்டு நாள் கோயம்புத்தூர்ல ஒர்க் பண்ணியிருக்கேன்.. அதான் காரணம்
//கொஞ்சூண்டு நாள் கோயம்புத்தூர்ல ஒர்க் பண்ணியிருக்கேன்.. அதான் காரணம்//
பதிலளிநீக்குசார், மதச் சண்டை, சாதிச் சண்டை யெல்லாம் முடிந்தது; ஊர்ச் சண்டையை ஆரம்பிக்காதீர்கள் :))
எங்கூராளுங்களுக்கு நக்கல் என்றால் என்னவென்றே தெரியாது :)
அப்படியா மணியன்,
பதிலளிநீக்குஅப்போ உங்கூர்க்கார சத்யராஜ் பண்றது என்னவாம்?
ஓ! அது லொள்ளோ..
கேசரியை தவிர உங்களுக்கு பிடிச்ச அந்த மூணு ஐட்டம் நமக்கும் ரொம்ப பிடிக்கும்.
பதிலளிநீக்குவாங்க ராஜ்,
பதிலளிநீக்குநீங்க இட்ட அன்புக் கட்டளையத் தட்ட முடியுமா? அதனாலத்தான் லஞ்ச் டைம்ல கம்ப்ளீட் பண்ணி போட்டுட்டேன்.
உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி.. ஆனால் அதிகார பிரமிடின் உச்சிக்கு மிக அருகில் வந்துவிட்டதால் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன் இப்போதுள்ள பதவியிலிருந்து உயர்வது சற்று சிரமம்தான்..
என்னுடைய வங்கியில் ஐந்து பொது மேலாளர்களே உள்ளனர்.. அதற்கு போட்டியாக என்னுடன் சேர்த்து சுமார் இருபது பேர் உள்ளோம்..
பார்ப்போம்.. இறைவன் சித்தம்..
வாங்க வெ.நாதர்,
பதிலளிநீக்குஎனக்கு கேசரிதான் ரொம்ப பிடிக்கும்.. ஆனா என்ன பண்றது? உடம்புக்குள்ளவே சுகர் ஃபேக்டரி இருக்கே.. அதான் கடைசி ஐட்டமா போடவேண்டியதாயிருச்சி..
சங்கிலி ஜோவிலிருந்து ஆரம்பித்து வருகிறேன். உங்க நாலு படங்களும் ஜோர்
பதிலளிநீக்குநன்றி தாணு.
பதிலளிநீக்குசார்,
பதிலளிநீக்குசிரிச்சுகிட்டே வம்பிழுக்கறதுல நீங்க கில்லாடி சார்...பிசியாமே பிசி...உங்ககிட்ட எல்லாம் இந்த வார்த்தையை நாங்க சொல்லமுடியுமா...
(ஆபிசுலே வைரஸ் வம்புனாலே இப்பல்லாம் முன்ன மாதிரி நெட் கனெச்சன் இல்லை சார்.வீட்ல கனெக்சன் வெச்சு கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்.பதிவெல்லாம் காலைல 5 மணிக்கு போடறேன்.பின்னூட்டம் மட்டுறுத்தல் எல்லாம ஆள் வைச்சு பண்றேன்.அப்பப்ப ஆபிஸில் நெட் அட்மின் கிட்டே போய் வழியறேன்...என்ன பண்றது
தமிழ்மணத்துக்கு அடிக்ட் ஆயிட்டா இப்படித்தான்)
வாங்க முத்து,
பதிலளிநீக்குITல இருக்கற ஆளுங்களையே வைரஸ் புடிச்சிக்குதா? தேவைதான்..
பிசின்னு நான் சொன்னது உங்க வேலைய இல்ல.. அதான் சூடா தினமும் அரசியல பத்தி எழுதி கலக்குறீங்களே.. அதச் சொன்னேன்..
நன்றி ஜோசப் சார், என்னை சங்கிலிப்பதிவில் அழைத்ததற்கு..
பதிலளிநீக்குஎனக்கு பிடித்த 4 விஷயங்கள்னு ஒன்னுமே போடலையே ?? பார்த்த வேலைகள சொல்லியிருக்கீங்க, நல்லாயிருக்கு..
அடுத்த பதவி உயர்வு பெற வாழ்த்துகள்.. அப்புறம் உங்க கவிதை சிச்சுவேசனை இப்பதான் படிச்சேன்.. எழுதி அனுப்புகிறேன்..
தவமாய் தவமிருந்து, உங்களூக்கு பிடித்ததில் எனக்கு பிடித்தது..