29 ஜூலை 2019

புதிய கல்விக் கொள்கை - எனக்கென்ன வந்தது?

மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள வரைவு கல்விக் கொள்கையைப் பற்றி பலரும் பேசி வருகிறார்கள்.

சமீபத்தில் இந்த வரைவு கொள்கையைப் பற்றி நடிகர் சூரியா பேசப்போய் ‘இவருக்கு இதைப் பற்றி என்ன தெரியும்?’ என்றெல்லாம் பாஜகவினர் கேலி செய்தது நினைவிருக்கலாம்.

இந்த வரைவுக் கொள்கையைப் பற்றி பேச இந்தியக் குடிமகனாக இருந்தாலே போதும் என்று திரைத்துறையைச் சார்ந்தவர்கள் அவருக்கு ஆதரவாக பேசியதையும் படித்தோம்.

இதைப் பற்றி எனக்கென்ன வந்தது என்று இருந்துவிடாமல் நாமும் இதிலுள்ள சாதக, பாதகங்களைப் பற்றி சுருக்கமாக எழுத வேண்டும் என்ற பல நாட்கள் சிந்தித்தேன்.

ஆனால் நான் வலையுலகில் இருந்து விலகி சுமார். ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னுடைய வலைப்பதிவை மீண்டும் கண்டுபிடிக்கவே பல நாட்கள் தேவைப்பட்டது. இந்த சூழலில் மீண்டும் ஒருமுறை பதிவுலகில் நுழைய வேண்டுமா என்ற எண்ணம் தோன்றாமலில்லை.

ஆனால் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்படும் இந்த கல்விக் கொள்கை நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்தில் ஒரு பெரிய தாக்கத்தை - அது சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கலாம். அது அவரவர் பார்வையைப் பொறுத்தது - ஏற்படுத்தக் கூடும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கொள்கையை ஏன் ஒரு அரசு இத்தனை அவசரத்துடன் செயல்படுத்த முனைய வேண்டும் என்பதுதான் என் மனதில் தோன்றிய முதல் கேள்வியாக இருந்தது. ஆகவே இதைப் பற்றி நம்மால் இயன்றவரை ஆய்வு செய்து நம்முடைய கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததன் விளைவே இந்த தொடர் பதிவு.

.அது அத்தனை எளிதான காரியம் அல்ல என்பது .வரைவுக் கொள்கையின் ஆங்கிலப் பதிப்பை (சுமார் 500 பக்கங்கள்) தரவிறக்கம் செய்து படித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது.

இந்த வரைவுக் கொள்கையின் தமிழ் பதிப்பை (சுமார் 52 பக்கங்கள்) மேலோட்டமாக வாசித்த போது அதை இந்த அளவுக்கு பலரும் எதிர்க்கும் அளவுக்கு பாதகமான அம்சங்கள் இருப்பதாக தோன்றவில்லை. ஆனால் அது இந்த கொள்கையின் சாராம்சம் மட்டுமே என்பது அதன் ஆங்கிலப் பதிப்பை படித்துப் பார்த்தபோதுதான் இந்த கொள்கையை மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்த முனைவதன் உண்மையான உள்நோக்கம் தெரிந்தது.

அது என்ன?

ஆங்கில மொழியின் ஆதிக்கத்தை ஒடுக்கி இந்திய மொழிகளை, குறிப்பாக இந்திய மக்கள் தொகையில் .சுமார் 54 விழுக்காடு மக்கள் பேசும் மொழியான இந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது!

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை அனைத்து பள்ளிகளிலும் பாலப் பருவத்திலிருந்தே திணிப்பது என்பதுதான் இக்கொள்கையின் முக்கிய ஆனால் மறைமுகான திட்டம்.

ஆகவேதான் இதை நாம் முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்கிறேன்.

இது என்னை நேரடியாக பாதிக்கப் போவதில்லை என்று நான் வாளாவிருந்துவிட்டால் அது என்னுடைய மனசாட்சிக்கு எதிரான, ஒவ்வாத விஷயம் என்பதால் ஐந்தாண்டுகள் வனவாசத்தில் இருந்த என்னை மீண்டும் இங்கு வரவழைத்துள்ளது.

இது சற்றி நீண்ட தொடர் பதிவாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் வரைவு கொள்கையின் ஆங்கிலப் பதிப்பின் நீளம் சுமார் 500 பக்கங்கள். அதில் இந்த திட்டத்தில் என்னவெல்லாம் செய்யப்போகிறோம். எதையெல்லாம் முடக்கப் போகிறோம் என்று மிகத் தெளிவாக ஆழமாக எழுதியிருப்பதைக் காண முடிகிறது. இது ஏதோ அவசர கோலத்தில் வரையப் பட்ட கொள்கையாக தெரியவில்லை. மிக ஆழமாக சிந்தித்து திட்டமிடப்பட்டுள்ள கொள்கை.  ஆகவே நம்முடைய ஆய்வும் சற்று ஆழமாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

இதில் ஆர்வமுள்ளவர்கள் படித்து தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.

நாளை தொடர்ந்து விவாதிக்கலாம்.

டிபிஆர். ஜோசப்


10 கருத்துகள்:

  1. எழுதுங்கள் நாங்கள் தொடர்கிறோம்... மீண்டும் வலையுலகத்திற்கு வந்ததற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வலையுலக வரவுக்கு எமது வந்தனம்.

    நல்லதொரு ஆக்கபூர்வமான விடயத்தை கையிலெடுத்து இருக்கின்றீர்கள்.

    தொடர்ந்து எழுதுங்கள் விவாதிக்கலாம் ஐயா - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  3. உங்கள் இந்தப்பதிவு கண்ட உடன் இத்தனை நாட்களுக்குப்பின்னால் என்றுதோன்றியது நிஜம் வலைஉலகம்மூலம்நம் கருத்துகளைத் தெரிவிக்கவே முடியும் வலை எழுத்தை யாரும் சீரியசாகஎடுத்துகொள்வது இல்லை எனக்கு வயசாகி விட்டது இக்கொள்கையால்க் பாதிப்பு
    எனக்கு ஏதுமேற்படப்போவதில்லை இதுவே இன்றைய நிலை வலையில் பொழுதுபோக்கவே எழுதலாம் சீரியசாக ஏதுமெழுதினால் வரவேற்கப்படுவதில்லை முதலிலுங்கள் வாசகர்களூக்கு சென்றடைய வேண்டும் விஷ் யு லக் உங்கள் தொடர்கதை சொந்த செலவில் சூனியம் நான் ரசித்துபடித்தது

    பதிலளிநீக்கு
  4. Blogger Avargal Unmaigal said...
    எழுதுங்கள் நாங்கள் தொடர்கிறோம்... மீண்டும் வலையுலகத்திற்கு வந்ததற்கு வாழ்த்துக்கள்//

    வரவேற்புக்கு மிக்க நன்றிங்க. தொடர்ந்து எழுத வேண்டும் என்றுதான் ஆவல். இந்த புதிய கல்விக் கொள்கை ஒரு முக்கியகமான வரலாற்று மாற்றம் என்பதால் நம்மை நேரடியாக பாதிக்கப் போவதில்லை என்று ஒதுங்கி விட முடியவில்லை அதனால்தான் மீண்டும் வந்தேன். தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. KILLERGEE Devakottai said...
    வணக்கம் ஐயா
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வலையுலக வரவுக்கு எமது வந்தனம்.

    நல்லதொரு ஆக்கபூர்வமான விடயத்தை கையிலெடுத்து இருக்கின்றீர்கள்.

    தொடர்ந்து எழுதுங்கள் விவாதிக்கலாம் ஐயா - கில்லர்ஜி//

    உங்கள் கருத்துக்கு நன்றிங்க. தொடர்ந்து எழுத முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. .M Balasubramaniam said...
    உங்கள் இந்தப்பதிவு கண்ட உடன் இத்தனை நாட்களுக்குப்பின்னால் என்றுதோன்றியது நிஜம் வலைஉலகம்மூலம்நம் கருத்துகளைத் தெரிவிக்கவே முடியும் வலை எழுத்தை யாரும் சீரியசாகஎடுத்துகொள்வது இல்லை//

    உண்மைதான் சார். என்ன செய்ய? எழுதி வைப்போம். படித்து வரவேற்றால் மகிழ்ச்சி. இல்லையேல் வருத்தமில்லை.

    எனக்கு வயசாகி விட்டது இக்கொள்கையால்க் பாதிப்பு
    எனக்கு ஏதுமேற்படப்போவதில்லை//

    எனக்கும் அப்படித்தான். ஆனாலும் நம்முடைய பேரப் பிள்ளைகளை இது பாதிக்குமே. வருங்கால இந்தியாவின் கலாச்சார வளர்ச்சியையே பாதிக்கப்படக் கூடிய கொள்கையாயிற்றே. ஆகவே தான் நம்முடைய கருத்தை பதிவு செய்வோம் என்று நினைத்தேன்.

    இதுவே இன்றைய நிலை வலையில் பொழுதுபோக்கவே எழுதலாம் சீரியசாக ஏதுமெழுதினால் வரவேற்கப்படுவதில்லை முதலிலுங்கள் வாசகர்களூக்கு சென்றடைய வேண்டும் விஷ் யு லக் //

    நன்றி சார். நீண்ட நாட்கள் எழுதாமல் இருந்ததால் என்னுடைய வலைப்பூவே காணாமல் போய்விட்டது. மிகுந்த சிரமப்பட்டு தேடிப் பிடித்தேன். பிறகு என்னுடைய புதிய பதிவையும் தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. பிறகு வெறுத்துப் போய் விட்டுவிட்டேன். ஆனாலும் உங்களைப் போன்ற சிலரால் படிக்க முடிந்திருக்கிறதென்றால் வியப்பாக உள்ளது. தமிழ்மண முகப்பில் என்னுடைய பதிவை இன்றும் காணோம். நீங்கள் எப்படி படித்தீர்கள்?

    பதிலளிநீக்கு
  7. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பதிவிட வந்துள்ள தங்களை வரவேற்கிறேன்.

    ஆட்சியாளர்கள் மக்களுக்கு இருக்கின்ற முக்கியமான பிரச்சினைகளை தீர்க்காமல் தங்களின் செயல் திட்டங்களை அமுல்படுத்த அரசு முயற்சிப்பதை எல்லோரும் எதிர்க்கவேண்டிய நேரம் இது.

    எனவே இந்த அரசின் வரைவு கல்விக்கொள்கையை அலச இருக்கும் தங்களின் பதிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சார். ப்ளாகில் எழுதி வெகு நாட்கள் ஆகிவிட்டன.இது ஒரு முக்கியமான விஷயம் என்பதால் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.உங்களுடைய பின்னூட்டத்தை இப்போது தான் பார்த்தேன். வருகைக்கு மிக்க நன்றி சார்.

      நீக்கு
  8. //இது என்னை நேரடியாக பாதிக்கப் போவதில்லை என்று நான் வாளாவிருந்துவிட்டால் அது என்னுடைய மனசாட்சிக்கு எதிரான, ஒவ்வாத விஷயம் என்பதால் ஐந்தாண்டுகள் வனவாசத்தில் இருந்த என்னை மீண்டும் இங்கு வரவழைத்துள்ளது.// உங்கள் விஷயம் இப்படி என் விஷயம் : https://dharumi.blogspot.com/2019/05/1048.html

    ஆனால் ஆங்கிலத்திலிருந்து 12,13,15,16 என்ற பகுதிகளைத் தமிழ்ப்படுத்திக் கொடுத்திருக்கிறேன். விரைவில் அது தமிழில் வருமென எதிர்பார்த்திருக்கிறேன். நான் தமிழ்ப்படுத்திய பகுதிகள் B.Ed, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்களுக்கானது. இதில் எதிர்க்க அதிகம் இல்லை. ஆனால் ஏனைய பகுதிகளை உங்கள் ப்ளாக்கில் படித்துக் கொள்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  9. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி தருமி அவர்களே. மற்ற பகுதிகளையும் படித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு