சமீபத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட புதிய வரைவு கல்விக் கொள்கையைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன் இப்போது நடப்பில் உள்ள கல்விக் கொள்கை (1968ல் அறிமுகப்படுத்தப்பட்டது)யின் நகலை தரவிறக்கம் செய்து படித்துப் பார்த்தேன்.
வரைவுக் கொள்கையில் குறிப்பிடப் பட்டுள்ள மும்மொழிக் கொள்கை தற்போது அமலிலுள்ள கல்விக் கொள்கையிலும் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகளுடன் ஹிந்தியையும் கட்டாய பாடமாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்பதை மிகத் தெளிவாக கூறியுள்ளனர். அதுமட்டுமல்ல ஹிந்தியுடன் சம்ஸ்கிருத மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடபட்டுள்ளது!
1968ம் ஆண்டுக்கு முன், அதாவது நான் பள்ளியில் பயிலும்போதே (1966ல்) ஹிந்தி கட்டாய பாடமாகத்தான் இருந்தது. பள்ளி இறுதி ஆண்டில் பொதுத்தேர்வில் ஹிந்தி பாடத்தில் தோற்றால் அனைத்து பாடங்களையும் மீண்டும் எழுதினால்தான் பள்ளி இறுதி சான்றிதழ் கிடைக்கும்!
அது 1968ல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விக் கொள்கையிலும் தொடர்ந்துள்ளது. இந்த ஆண்டிலிருந்துதான் 11+1+3 என்றிருந்த கல்வி திட்டம் 10+2+3 என்று மாற்றப்பட்டது.
ஆக, இந்த மும்மொழிக் கல்விக் கொள்கை ஏதோ தற்போதுள்ள பாஜக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூப்பாடு போடுவதில் அர்த்தமிருக்கிறதா என்கிற கேள்வியும் எழத்தானே செய்கிறது?
இதில் இருந்து என்ன தெரிகிறது? கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஷரத்துகளுமே அது அமல்படுத்தப்படுகையில் நடைமுறைக்கு வரும் என்பதில் நிச்சயமில்லை என்பதுதான்.
மும்மொழிக் கொள்கை சுமார் ஐம்பது ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தும் அது தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்பதால் இனியும் அப்படித்தானே நடக்கும் என்று வாளாவிருந்திட முடியுமா?
கடந்த ஐம்பதாண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி மாநில உரிமைகளுக்கு எப்போதுமே மதிப்பளித்து வந்துள்ளது அல்லவா? ஆகவே கொள்கையளவில் இருந்த மும்மொழிக் கொள்கையை தமிழகம் போன்ற மாநிலங்களில் நடைமுறைப் படுத்துவதில் அத்தனை தீவிரம் காட்டவில்லை போலிருக்கிறது.
ஆனால் இனி அப்படி இருக்க வாய்ப்பில்லை என்பது சமீபத்தில் தபால்துறையில் நடத்தப்பட்ட தேர்வில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதிலிருந்தே தெரிகிறது. திமுக போன்ற எதிர்கட்சிகளின் வலிமையான எதிர் குரலால்தான் அந்த தேர்வே ரத்து செய்யப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் மத்திய அரசால் நடத்தபெறவிருக்கும் பல தேர்வுகளிலும் மாநில மொழிகள் புறக்கணிக்கப்ப்ட வாய்ப்புள்ளது என்பதால் இப்போதே நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது மிக அவசியம் என்று எனக்கு தோன்றுகிறது.
நாளை தொடர்ந்து விவாதிக்கலாம்..

ஹிந்தியை மக்கள் எதிர்கவில்லை ஐயா.
பதிலளிநீக்குஅதை கட்டாயமாக்கும்போது மக்களுக்கு வெறுப்பு வருகிறது...
KILLERGEE Devakottai said...
பதிலளிநீக்குஹிந்தியை மக்கள் எதிர்கவில்லை ஐயா.
அதை கட்டாயமாக்கும்போது மக்களுக்கு வெறுப்பு வருகிறது...//
உண்மைதான். ஆனால் ஆட்சியாளர்களுக்கு ஏனோ இது புரிவதில்லை. எத்தனை முறை எதிர்த்தாலும் அதேயே மீண்டும் மீண்டும் செய்துக்கொண்டுள்ளனர்.
மொழி இனம் மதம் போன்றவை மிகவும் சென்சிடிவ்வான விஷயங்கள் சில நடவடிக்கைகளுக்கு மிகவும் எதிர்ப்பு இருக்கிறது ஏன் என்றால் அதை அமல் ர்டுத்த நினைப்பவர்களின் பின் புலம்இந்தியா ஹிந்தியாவாகும் வாய்ப்புகள்கூடிவருகிறதுபாஜகவின் (HEGEMONY) ஆதிக்கம் என்பதே தெரிய வருகிறது
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குBlogger G.M Balasubramaniam said...
மொழி இனம் மதம் போன்றவை மிகவும் சென்சிடிவ்வான விஷயங்கள் சில நடவடிக்கைகளுக்கு மிகவும் எதிர்ப்பு இருக்கிறது ஏன் என்றால் அதை அமல் ர்டுத்த நினைப்பவர்களின் பின் புலம்இந்தியா ஹிந்தியாவாகும் வாய்ப்புகள்கூடிவருகிறதுபாஜகவின் (HEGEMONY) ஆதிக்கம் என்பதே தெரிய வருகிறது//
இந்த கொள்கைக்கு பின்னால் இருப்பது பாஜக மற்றும் RSS ஆக இருக்கலாம் என்கிற எண்ணமே நம்மை இதை எதிர்க்க செய்கிறது. கடந்த ஐம்பதாண்டுகளாகவே இந்த மும்மொழி கொள்கை அமலில் இருந்துள்ளது என்பதும் அது தமிழகத்தில் இந்தி எதிரிப்பு போராட்டத்தின் விளைவாகவே அமல்படுத்தப்படவில்லை என்பதும் நமக்கு தெரிந்திருக்கவில்லை. ஏனெனில் நம்மை சுற்றியுள்ள அனைத்து தென்னிநிதிய மாநிலங்கலிலும் ஹிந்தி ஒரு கட்டாய பாடமாக பள்ளிகளில் இருந்து வருகிறது என்றால் நம்ப முடியவில்லை.
// நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது மிக அவசியம் //
பதிலளிநீக்குகண்டிப்பாக...
ஆனால், ஜனநாயகத்தை அழிக்க நினைப்பவர்கள்...?
இந்தியாவிற்கு என்று ஒரு பொது மொழி வேண்டுமென்றும் அதுவும் ஹிந்திதான் வேண்டுமென்று அதிகாரத்தில் எப்போதும் இருக்கும் ஹிந்திகாரர்கள் செயல்படுகிறார்கள்... என்னை பொறுத்தவரை பொது மொழியாக ஆங்கிலம்தான் இருக்க வேண்டும் அதுதான் உலகலாவிய மொழி அதன் பின் அவரவர் அவரவரின் தாய்மொழியை நன் கு படிக்க வேண்டும்.... அதன் பின் யாருக்கு எந்த மொழி அவசியமோ அந்த மொழியை அவரவர்கள் கற்ற்கவும் ஏர்பாடு செய்யலாம் அதைவிட்டுவிட்டு திணிப்பது என்றால் அதற்கு பதிலாக நாமி எதிர்ப்பு என்பதை கட்டாயமாக காட்ட வேண்டும்
பதிலளிநீக்குஇங்கு(அமெரிக்காவில் வசிக்கும் நான் என் குழந்தைக்கு தமிழ் கற்று தரவில்லை ஆனால் அதற்கு பதிலாக ஹிந்தி கற்றுக் கொடுத்தேன் காரணம் இங்கு பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் பழகுவதால் அதிலும் பெரும்பாலும் ஹிந்திகாரகள் அதிகமாக இருப்பதால் அந்த இடத்தில் மொழி தெரியாமல் இருக்க கூடாது என்பதால் அதைக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தேன் தமிழ் வீட்டில் பேசுவதாலும் தமிழ் சினிமாக்கள் பார்ப்பதாலும் அவளுக்கு தமிழ் பேச வருகிறது மகளுக்கு ஹிந்தி தெரியும் என்றாலும் அது தெரிந்த மாதிரி யாரிடமும் காட்டிக் கொள்ள மாட்டாள்
இந்த அரசு முழு மெஜாரட்டியுடன் இருப்பதாலும் தமிழக தலைவர்கள் அது அதிமுகவாக இருந்தாலும் சரி திமுகவாக இருந்தாலும் சரி அவரரவருக்கு தங்கள் சொந்த காரியம் நன்றாக நடந்தால் போது அவர்கள் இன்றைய அரசுக்கு அடிமையாக இருக்க தயாராக இருக்கிறார்கள் அதனால் ஹிந்தி வரவை நம்மால் தடுக்க முடியாது அதற்கான் உறுதியுள்ள தலைவன் எவனும் தமிழகத்தில் இல்லை
பதிலளிநீக்குஹிந்தியை நாம் கடுமையாக எதிர்க்கும் அதே நேரத்தில் தமிழை நேசிக்க நன்றாக வாசிக்க எழுத படிக்க குழந்தைகளுக்கு கற்றுதர தீவிர முயற்சிக்க வேண்டும் நமக்கு எப்போது ஹிந்தி தேவையோ அப்போது ஹிந்தியை உபயோக்கிக்க தெரிந்திருக்க வேண்டும் அதே நேரத்தில் நமக்கு அவசியம் இல்லாத நேரத்தில் நம்மானிலத்தில் வசிக்கும் வட மாநிலத்தோர் நம்மிடம் பேசினால் தமிழால் மட்டும் பதிலளிக்க வேண்டும் அப்படி செய்வதால் அவர்களும் தமிழ் கற்க வேண்டிய நிலமையை ஏர்படுத்த வேண்டும் இதை ஒவ்வொரு தமிழனும் உறுதியாக செய்தாலே போதும்
vargal Unmaigal said...
பதிலளிநீக்குஇந்தியாவிற்கு என்று ஒரு பொது மொழி வேண்டுமென்றும் அதுவும் ஹிந்திதான் வேண்டுமென்று அதிகாரத்தில் எப்போதும் இருக்கும் ஹிந்திகாரர்கள் செயல்படுகிறார்கள்... என்னை பொறுத்தவரை பொது மொழியாக ஆங்கிலம்தான் இருக்க வேண்டும் அதுதான் உலகலாவிய மொழி அதன் பின் அவரவர் அவரவரின் தாய்மொழியை நன் கு படிக்க வேண்டும்.... அதன் பின் யாருக்கு எந்த மொழி அவசியமோ அந்த மொழியை அவரவர்கள் கற்ற்கவும் ஏர்பாடு செய்யலாம் அதைவிட்டுவிட்டு திணிப்பது என்றால் அதற்கு பதிலாக நாமி எதிர்ப்பு என்பதை கட்டாயமாக காட்ட வேண்டும்//
சரியாக சொன்னீர்கள். புதிய கல்வி கொள்கையில் ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாகவே படித்தால் போதும் என்கிற தோரணையில்தான் காணப்படுகிறது. அதாவது அனைத்துப்பாடங்களும் தாய் மொழியில் பயிற்றுவித்தால் போதுமாம்! ஆனால் இது தனியார் பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்தப்படுமா என்பதுதான் கேள்விக்குறி.
இங்கு(அமெரிக்காவில் வசிக்கும் நான் என் குழந்தைக்கு தமிழ் கற்று தரவில்லை ஆனால் அதற்கு பதிலாக ஹிந்தி கற்றுக் கொடுத்தேன் காரணம் இங்கு பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் பழகுவதால் அதிலும் பெரும்பாலும் ஹிந்திகாரகள் அதிகமாக இருப்பதால் அந்த இடத்தில் மொழி தெரியாமல் இருக்க கூடாது என்பதால் அதைக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தேன் //
அதில் தவறேதும் இல்லை. நாம் விரும்பினால் எந்த மொழியையும் எப்போது வேண்டுமானாலும் எந்த வயதிலும் கற்றுக்கொள்ளலாம். நாம் எந்த மொழிக்கும் விரோதிகள் அல்ல. எங்கள் மீது எந்த மொழியையும் திணிக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறோம்
vargal Unmaigal said...
பதிலளிநீக்குஇந்த அரசு முழு மெஜாரட்டியுடன் இருப்பதாலும் தமிழக தலைவர்கள் அது அதிமுகவாக இருந்தாலும் சரி திமுகவாக இருந்தாலும் சரி அவரரவருக்கு தங்கள் சொந்த காரியம் நன்றாக நடந்தால் போது அவர்கள் இன்றைய அரசுக்கு அடிமையாக இருக்க தயாராக இருக்கிறார்கள் அதனால் ஹிந்தி வரவை நம்மால் தடுக்க முடியாது அதற்கான் உறுதியுள்ள தலைவன் எவனும் தமிழகத்தில் இல்லை//
உண்மைதான். திமுக தற்போது உரத்தக் குரலில் இதை எதிர்த்தாலும் தமிழகத்தில் ஆட்சியில் அமர நேர்ந்தால் இத்தனை உத்வேகத்துடன் மத்திய அரசை எதிர்ப்பார்களா என்று தெரியவில்லை.
ஹிந்தியை நாம் கடுமையாக எதிர்க்கும் அதே நேரத்தில் தமிழை நேசிக்க நன்றாக வாசிக்க எழுத படிக்க குழந்தைகளுக்கு கற்றுதர தீவிர முயற்சிக்க வேண்டும் நமக்கு எப்போது ஹிந்தி தேவையோ அப்போது ஹிந்தியை உபயோக்கிக்க தெரிந்திருக்க வேண்டும்//
என் கருத்தும் அதுவேதான். உங்களுடைய வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.
ஹிந்தியை நாம் கடுமையாக எதிர்க்கும் அதே நேரத்தில் தமிழை நேசிக்க நன்றாக வாசிக்க எழுத படிக்க குழந்தைகளுக்கு கற்றுதர தீவிர முயற்சிக்க வேண்டும் நமக்கு எப்போது ஹிந்தி தேவையோ அப்போது ஹிந்தியை உபயோக்கிக்க தெரிந்திருக்க வேண்டும் அதே நேரத்தில் நமக்கு அவசியம் இல்லாத நேரத்தில் நம்மானிலத்தில் வசிக்கும் வட மாநிலத்தோர் நம்மிடம் பேசினால் தமிழால் மட்டும் பதிலளிக்க வேண்டும் அப்படி செய்வதால் அவர்களும் தமிழ் கற்க வேண்டிய நிலமையை ஏர்படுத்த வேண்டும் இதை ஒவ்வொரு தமிழனும் உறுதியாக செய்தாலே போதும்
ண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குஆனால், ஜனநாயகத்தை அழிக்க நினைப்பவர்கள்...?//
நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள். பாஜகவையா அல்லது எதிர்கட்சிகளையா?
நாடாளுமன்றத்தில் அசுர பலம் இருப்பதால்தான் இப்படி பல மசோதாக்களை எவ்வித எதிர்ப்பும் இன்றி பாஜக நிறைவேற்றி வருகிறது. கல்விக் கொள்கை அவற்றுள் ஒன்று. திமுகவைத் தவிர வேறு எந்த மாநிலக் கட்சிகளும் இதை எதிர்ப்பதாக தெரியவில்லை.
பதிலளிநீக்கு//1968ம் ஆண்டுக்கு முன், அதாவது நான் பள்ளியில் பயிலும்போதே (1966ல்) ஹிந்தி கட்டாய பாடமாகத்தான் இருந்தது. பள்ளி இறுதி ஆண்டில் பொதுத்தேர்வில் ஹிந்தி பாடத்தில் தோற்றால் அனைத்து பாடங்களையும் மீண்டும் எழுதினால்தான் பள்ளி இறுதி சான்றிதழ் கிடைக்கும்!//
நான் பள்ளியிறுதி(SSLC) வகுப்பை முடித்தகாலத்தில்(1960 பிப்ரவரி) ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளியிறுதி வகுப்பு வரை இந்தி பாடம் இருந்தாலும் தேர்வு எழுதுவது கட்டாயமில்லை. அது optional பாடமாகவே கருதப்பட்டது எனது வகுப்பில் இருந்த பெரும்பாலோர் (என்னையும் சேர்த்து) SSLC தேர்வில் இந்தி தேர்வை எழுதவே இல்லை.
எனது பள்ளி இறுதி சான்றிதழில் இந்தி பாடத்திற்கு நேரே Absent என்று தான் குறிப்பிடப்பட்டிருந்தது. அது எந்த விதத்திலும் திருச்சி புனித வளவனார் கல்லூரியில் சேருவதற்கு தடையாக இல்லை. ஏனெனில் எனது சான்றிதழில் சென்னை மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகங்களில் சேரத் தகுதியுள்ளது என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
1987 இல் அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்ததும் Optional பாடமாக இருந்த இந்தி பாடத்தையே எடுத்துவிட்டார்கள். அதனால் இந்தி பாடம் நடத்திக்கொண்டு இருந்த இந்தி ஆசிரியர்கள் வேறு பணிக்கு மாற்றப்பட்டார்கள்.
எனவே தாங்கள் படிக்கும்போது இந்தி கட்டாய பாடமாக இருந்திருக்க வாய்ப்பில்லை எனது கருத்து.
இந்தி படித்தால் தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது தவறான வாதம். வங்கியில் சேர்ந்த பிறகு இந்தி தெரியாமல் தில்லி, உத்திர பிரதேசம் ஹரியானா சென்று பணியின் போது இந்தியை கற்றுக்கொண்டேன், இன்றோ கணினியின் அபார வளர்ச்சி காரணமாக ஆங்கிலம் தெரிந்துகொள்வது அவசியமாகிவிட்டதால் வடவர்கள் கூட ஆங்கிலம் படித்துவிட்டு இங்கே கணினி சார்ந்த துறைக்கு வேலைக்கு வருகிறார்கள். நான் கூட கன்னடத்தில் பேசவும் மலையாளத்தில் எழுதவும் படிக்கவும் பேசவும் கற்றுக்கொண்டேன்,தேவை ஏற்படால் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்தியை கட்டாயமாக படிக்கவேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
கண்டிப்பாக இந்தி பேசாத மாநிலங்கள் (குறிப்பாக தமிழகம்) இந்த மும்மொழிக் கொள்கையை எதிர்க்கவேண்டும்.
தமிழகத்தில் எப்படியோ நான் படித்த பள்ளியில் இந்தி கட்டாயமாகத் தான் இருந்தது. அது மட்டுமல்ல என்னுடைய உறவினரின் மகள் 1970?ல் மெட்ரிக் இறுதித் தேர்வில் இந்தியில் தேர்ச்சி பெறாததால் அனைத்து பாடங்களையும் தனித் தேர்வராக மீண்டும் எழுத நேர்ந்தது. ஒருவேளை மெட்ரிக் பள்ளிகளில் இத்தகைய நியதி நடைமுறையில் இருந்திருக்கலாம்.
பதிலளிநீக்குநீங்கள் கூறியுள்ளபடி எந்த மொழியையும் எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ள முடியும். அதற்காக மூன்று வயதிலிருந்தே குழந்தைகளை தொலை செய்ய தேவையில்லை.
In those days in matriculation and anglo Indian schools one could choose tamil or hindi as 2nd language. Tamil was not compulsory. Both my daughters also chose only hindi as 2nd language.
பதிலளிநீக்கு