ஊழல் என்றால் கையூட்டு பெறுவது என்பது மட்டுமல்ல.
1. வேண்டுமென்றே அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது
2. தனிமனித ஒழுக்கம் இல்லாமலிருப்பது
3. ஆடம்பர வாழ்க்கை நடத்துவது
4. உண்மைகளை மறைப்பது
5. மதத் துவேஷம் மற்றும் இனத்துவேஷம் காட்டுவது
இவை எல்லாமே ஊழலைச் சார்ந்தவைதான்.
நாட்டின் அடுத்த பிரதமராக வருவதற்கு தகுதியானவர் என இன்று பலராலும் கருதப்படும் நரேந்திர மோடி அவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஒழுங்கீனங்களுக்கும் சொந்தக்காரர்.
நான் திருமணமாகாத ஒண்டிக்கட்டை, எனக்கு குடும்பம் என்று ஏதும் இல்லை. ஆகவே ஊழலில் ஈடுபட்டு பொருள் சேர்க்கும் தேவை எனக்கு இல்லை என்று நரேந்திர மோடி பல தடவை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இதே போன்றதொரு அறிவிப்பை முன்னொரு காலத்தில் நம்முடைய மேடமும் வெளியிட்டவர்தான். ஆனால் இன்று அவர் நாட்டின் மிகப்பெரிய சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பது நமக்கெல்லாம் தெரியும். இந்த வழக்கில் மட்டுமல்லாமல் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யாத வழக்கிலும் வெளிநாட்டிலிருந்து மூன்று லட்சம் டாலர்கள் நன்கொடையாக பெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கிலும் அவர் தண்டனை பெறப்போவது உறுதி. இதே நிலை நரேந்திர மோடிக்கும் ஏற்படுமா என்பதைக் காலம்தான் பதில் சொல்லும்.
ஆனால் அவர் ஊழலற்றவர் மட்டுமல்ல ஊழலுக்கு அப்பாற்பட்டவர் (incorruptible) என்றெல்லாம் பாஜகவும் கூறிவருவது எந்த அளவுக்கு உண்மை என்பதை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து ஒன்றை மட்டும் இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
2006ம் ஆண்டு.
தமிழகத்தைப் போலவே நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தும் மின் பற்றாக்குறையால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தது. அரசு மின் உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லாமையாலும் அரசு நிறுவனங்களின் உற்பத்தித் திறனை உடனடியாக அதிகரிக்க தேவையான நிதி அரசின் வசம் இல்லாமையாலும் தனியார் நிறுவனங்களிடமிருந்து சுமார் 3000 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவது என அரசு தீர்மானித்தது.
இதற்காக அதே மாநிலத்தைச் சார்ந்த அடானி குழுமத்துடன் (Adani Group of Companies) தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கென இரண்டு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. அதன்படி முதல் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.2.89 என்றும் அடுத்த ஆயிரம் யூனிட் ஒன்றிற்கு ரூ. 2.35 என்றும் முடிவானது. அதாவது, அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு அதிக விலையும் உள்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு குறைந்த விலை என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரென கருதப்படும் திரு அடானி அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களுடனான இந்த இரண்டு ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு குஜராத் மின் வினியோக கழகம் (Gujarat Urja Vikas Nigam Limited (GUVNL)-இது நம் தமிழ்நாட்டின் TANGEDCO போன்ற அரசு மின் வினியோக நிறுவனம்) டாடா குழுமத்தைச் சார்ந்த Coastal Gujarat Power Project என்ற மின் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து யூனிட் ஒன்றிற்கு ரூ. 2.26 வாங்குவதென ஒப்பந்தத்தை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் இது அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரம் என்பதுதான்.
இவ்விரண்டு நிறுவனங்கள் அல்லாமல் யூனிட் ஒன்றிற்கு ரூ.2.20க்கும் மின்சரத்தை விற்பதற்கு குஜராத் மற்றும் அண்டைய மாநிலத்தில் இயங்கிவந்த பல தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் முன்வந்தும் அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு அடானி குழமத்திற்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றிற்கு சுமார் ஐம்பதிலிருந்து அறுபது காசுகள் கூடுதலாக விலை நிர்ணயித்தது ஏன்? இந்த அடாவடியான முடிவின் மூலம் குஜராத் அரசுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.700 கோடி நஷ்டம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுடனான ஒப்பந்தம் இரண்டும் நீண்ட கால ஒப்பந்தம் என்பதால் அடுத்த இருபது ஆண்டுகளில் அரசுக்கு சுமார் ரூ.15,000/- கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது இதை முதன் முதலில் கண்டுபிடித்து அறிவித்த குலெய்ல் என்ற தான்னார்வு தொண்டு நிறுவனம்.
இது ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதற்கு ஒப்பானது.
ஆகவே மோடி ஒன்றும் நம்மில் பலரும் நினைப்பதைப் போன்று ஊழலற்றவரோ அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக முடியாதவரோ அல்ல.
ஆனால் இந்த சலுகைகள் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட வகையில் எவ்வித இலாபமும் கிடைத்திருக்க வழியில்லை என்று சிலர் வாதிடலாம். அடானி குழுமத்திற்கு மட்டுமல்லாமல் டாட்டா, அம்பானி போன்ற பல பெரும் பண முதலைகளுக்கு இவர் அளித்து வந்த சலுகைகள் ஒவ்வொன்றிற்கும் கைமாறாக பல நூறு கோடிகள் RSS மற்றும் பாஜகவுக்கு நன்கொடையாக சென்று சேர்ந்துள்ளது என கூறப்படுகிறது.
ஆகவேதான் ஒருவகையில் பார்த்தால் ஊழலில் நரேந்திர மோடியும் நம்மூர் ஆ. இராசாவும் ஒன்றுதான் என்று தலைப்பில் குறிப்பிட்டேன். ஏனெனில் ஆ. இராசாவுக்கும் 2ஜி ஊழல் மூலம் தனிப்பட்ட வகையில் எவ்வித இலாபமும் க்டைக்கவில்லை. இலாபம் அடைந்தது கலைஞரும், அவருடைய கட்சியும், அவருடைய குடும்ப தொலைக்காட்சியும்தான்.
இன்றைய பதிவு 'வேண்டுமென்றே அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் வகையில் செயல்படுவது' என்ற குற்றச்சாட்டிற்கு சான்று. நாளை அடுத்த குற்றச்சாட்டான தனிமனித ஒழுக்கம் இல்லாதிருப்பதைப் பற்றி...
**********
ஆதாரபூர்வமாக சொல்லியுள்ளீர்கள். இந்த தகவல் வாக்களிக்கும் மக்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டில் அவர் புகழ் பாடுவோருக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை.
பதிலளிநீக்குஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
அரசியல்வாதிகள் சொல்வதெல்லாம் வடி கட்டின பொய்கள்,ஆனால் அவர்களுக்கும் காவடி தூக்க ஆள் கிடைத்தது விடுகிறார்கள் !
பதிலளிநீக்குத ம 1
நீங்கள் எழுதியது அனைத்தும் மோடி துதிகள் அல்லவா படிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாஜ கட்சி முகவரி இல்லாதது. விளக்கங்களைத் தெரிந்து கொள்ளும் நிலையில் அவரது அடிவருடிகள் இல்லையே. செல்வி. ஜெயலலிதா கூறியதுபோல மோடி எனும் பெயர் நன்றாகவே மார்கெட்டிங் செய்யப் பட்டிருக்கிறது.
ராஜாவிற்கு தனிப்பட்ட முறையில் பணம் கிடைக்கவில்லை என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? இன்னும் எதுவும் பிடிபடாததை வைத்தா?
பதிலளிநீக்குஅதே போல, தமிழகத்தில் வாங்கும் மின்சாரம் யூனிட் ஒன்றிற்கு 7.80 கொடுக்கப் படுவதாக செய்தி வந்தது.. இப்போது கூகிளில் தேடினால் 9.50 வரை கொடுத்து வாங்குவதாக தெரிகிறது.. அங்கே என்னடா என்றால் மூன்றுக்கும் கீழே!
என்ன தான் நடக்கிறது?
அலையில் பலவற்றும் காணாமல் தான் போகின்றன... ம்...
பதிலளிநீக்குநாட்டுக்கு சேவை செய்ய வேண்டுமென்று, ரஜினிகாந்த், விஜய் எல்லோரையும் சந்தித்து வருங்காலத்தில் எப்படி திரைப்படங்கள் இருக்குமென்றெல்லாம் விசாரித்துவிட்டு வந்திருக்கிறார். அவரைப்பற்றி இப்படியெல்லாம் சொல்கிறீர்களே. அதைப்போல மின்சாரத்திலும் ஏதாவது செய்திருப்பார். தமிழ் நாட்டில் மோடிக்கு அவ்வளவு ஆதரவு இருக்குமென்று நான் நினைக்கவில்லை.
பதிலளிநீக்குமோடி தான் 'திருமணமாகாத' ஒண்டிக்கட்டை என்று கூறியதாக எழுதியிருக்கிறீர்கள்!எனக்கு சரியாக தெரியவில்லை. ஆதாரம்அளித்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.
பதிலளிநீக்குஊழல் விஷயத்தில் ஒரேயொரு சோற்றை மட்டுமே காட்டிவிட்டு,ஒரு பானை சோற்றை காட்டாமல் விட்டிருக்கிறீர்கள்.தொடர்ந்து மூன்றாவது முறையும் உலை வைத்து சோறாக்கிக் கொண்டிருக்கும் அவர் பானையிலிருந்து இன்னும் சில சோறுகளையும் காட்டியிருக்கலாம்.
Blogger வே.நடனசபாபதி said...
பதிலளிநீக்குஆதாரபூர்வமாக சொல்லியுள்ளீர்கள். இந்த தகவல் வாக்களிக்கும் மக்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டில் அவர் புகழ் பாடுவோருக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை.//
இதுபோன்ற தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. பத்தாண்டுகளில் தகுந்த உரிமம் பெறாமல் தன்னுடைய உற்பத்தித் திறனை (Production capacity) இரண்டு மடங்காக அதிகரித்துக்கொண்ட அம்பானிக்கு இவர் துணை சென்றது, இருபது ஆண்டுகளில் சில்லறை வைர வியாபாரியாக இருந்த அடானி இப்போது சுமார் 20000 கோடி பெருமான சொத்துக்களுக்கு அதிபதியாகியது, கொல்கொத்தாவில் இடம் கிடைக்காமல் குஜராத்துக்கு இடம் பெயர்ந்த டாட்டா கார் நிறுவனத்திற்கு அடிமாட்டு விலையில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி உதவியது என எழுதிக்கொண்டே போகலாம். இதெல்லாம் அவரை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லாமல் இல்லை. ஊழலில் சிக்கி சீரழிந்த காங்கிரசுக்கு மாற்றாக பிஜேபி என்று நினைக்கும் அவர்களுக்கு சட்டியிலிருந்து எரியும் அடுப்பிற்குள் விழுகிறோம் என்பது தெரியவில்லை.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Blogger Bagawanjee KA said...
பதிலளிநீக்குஅரசியல்வாதிகள் சொல்வதெல்லாம் வடி கட்டின பொய்கள்,ஆனால் அவர்களுக்கும் காவடி தூக்க ஆள் கிடைத்தது விடுகிறார்கள் !//
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. கட்சித் தொண்டர்களுக்கு காவடி தூக்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் நம்மைப் போன்றவர்களுக்கு இது தேவையா என்பதுதான் என்னுடைய கேள்வி!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Blogger G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குஜெயலலிதா கூறியதுபோல மோடி எனும் பெயர் நன்றாகவே மார்கெட்டிங் செய்யப் [பட்டிருக்கிறார்.//
எப்போதுமே விலைபோகாத தரக்குறைவான பொருட்களுக்குத்தான் அதிக பொருட்செலவில் மார்க்கெட்டிங் செய்வார்கள். அது பாஜகவுக்கு மிக நன்றாகவே தெரிந்துள்ளது.
டேபிள் மேட் என்ற ஒரு குறு மேசையை இப்படி மடக்கலாம், அப்படி நீட்டலாம் என்றெல்லாம் வந்த விளம்பரங்களை நம்பி நானும் அதை ரூ.2,500/- கொடுத்து வாங்கினேன். பிறகுதான் தெரிந்தது அது அத்தனை தரமான, பயனுள்ள பொருள் இல்லை என்பது. அதுபோலத்தான் மோடியும். வீட்டு உபயோகப் பொருள் ஒன்று பயனில்லாமல் போய்விட்டால் அதை தூக்கி எறிந்துவிடலாம். ஆனால் இவரை அப்படி செய்ய முடியாதே? ஐந்தாண்டுகள் அல்லவா காத்திருக்க வேண்டும்!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Blogger G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குஜெயலலிதா கூறியதுபோல மோடி எனும் பெயர் நன்றாகவே மார்கெட்டிங் செய்யப் [பட்டிருக்கிறார்.//
எப்போதுமே விலைபோகாத தரக்குறைவான பொருட்களுக்குத்தான் அதிக பொருட்செலவில் மார்க்கெட்டிங் செய்வார்கள். அது பாஜகவுக்கு மிக நன்றாகவே தெரிந்துள்ளது.
டேபிள் மேட் என்ற ஒரு குறு மேசையை இப்படி மடக்கலாம், அப்படி நீட்டலாம் என்றெல்லாம் வந்த விளம்பரங்களை நம்பி நானும் அதை ரூ.2,500/- கொடுத்து வாங்கினேன். பிறகுதான் தெரிந்தது அது அத்தனை தரமான, பயனுள்ள பொருள் இல்லை என்பது. அதுபோலத்தான் மோடியும். வீட்டு உபயோகப் பொருள் ஒன்று பயனில்லாமல் போய்விட்டால் அதை தூக்கி எறிந்துவிடலாம். ஆனால் இவரை அப்படி செய்ய முடியாதே? ஐந்தாண்டுகள் அல்லவா காத்திருக்க வேண்டும்!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Blogger G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குஜெயலலிதா கூறியதுபோல மோடி எனும் பெயர் நன்றாகவே மார்கெட்டிங் செய்யப் [பட்டிருக்கிறார்.//
எப்போதுமே விலைபோகாத தரக்குறைவான பொருட்களுக்குத்தான் அதிக பொருட்செலவில் மார்க்கெட்டிங் செய்வார்கள். அது பாஜகவுக்கு மிக நன்றாகவே தெரிந்துள்ளது.
டேபிள் மேட் என்ற ஒரு குறு மேசையை இப்படி மடக்கலாம், அப்படி நீட்டலாம் என்றெல்லாம் வந்த விளம்பரங்களை நம்பி நானும் அதை ரூ.2,500/- கொடுத்து வாங்கினேன். பிறகுதான் தெரிந்தது அது அத்தனை தரமான, பயனுள்ள பொருள் இல்லை என்பது. அதுபோலத்தான் மோடியும். வீட்டு உபயோகப் பொருள் ஒன்று பயனில்லாமல் போய்விட்டால் அதை தூக்கி எறிந்துவிடலாம். ஆனால் இவரை அப்படி செய்ய முடியாதே? ஐந்தாண்டுகள் அல்லவா காத்திருக்க வேண்டும்!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Blogger bandhu said...
பதிலளிநீக்குராஜாவிற்கு தனிப்பட்ட முறையில் பணம் கிடைக்கவில்லை என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? இன்னும் எதுவும் பிடிபடாததை வைத்தா?//
ஆமாம். ஏனெனில் சிபிஐயும் வருமான வரித் துறையும் சல்லடைப் போட்டு தேடியும் ஒன்றும் அகப்படவில்லையே?
அதே போல, தமிழகத்தில் வாங்கும் மின்சாரம் யூனிட் ஒன்றிற்கு 7.80 கொடுக்கப் படுவதாக செய்தி வந்தது.. இப்போது கூகிளில் தேடினால் 9.50 வரை கொடுத்து வாங்குவதாக தெரிகிறது.. அங்கே என்னடா என்றால் மூன்றுக்கும் கீழே!//
நான் குறிப்பிட்டுள்ள ஒப்பந்தங்கள் 2006ல் இடப்பட்டவை. அதாவது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு. அன்று ஒரு கிராம் சவரம் 600 ரூபாய். இன்று அதன் விலை என்ன? அது போலத்தான் இதுவும் எகிறியிருக்கும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Blogger திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குஅலையில் பலவற்றும் காணாமல் தான் போகின்றன... ம்...//
கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் இருந்தால் சரி.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Blogger Packirisamy N said...
பதிலளிநீக்குஅதைப்போல மின்சாரத்திலும் ஏதாவது செய்திருப்பார்.//
நிச்சயமாக செய்திருப்பார். ஊழல் செய்துவிட்டு சிக்கிக்கொள்பவர்கள் காங்கிரசார். இவர்கள் அப்படியில்லை. பலே கில்லாடிகள்.
தமிழ் நாட்டில் மோடிக்கு அவ்வளவு ஆதரவு இருக்குமென்று நான் நினைக்கவில்லை.//
இம்முறை அப்படி நிச்சயமாக சொல்வதற்கில்லை.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Blogger Vetrivendan said...
பதிலளிநீக்குமோடி தான் 'திருமணமாகாத' ஒண்டிக்கட்டை என்று கூறியதாக எழுதியிருக்கிறீர்கள்!எனக்கு சரியாக தெரியவில்லை. ஆதாரம்அளித்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.//
நீங்கள் திருமணமானவரா இல்லையா என்ற பகுதியில் ஒன்றுமே சொல்லாமல் இருந்ததன் காரணத்தை நீங்கள் சொல்லுங்களேன். எனக்கு சொல்ல விருப்பமில்லை என்று விட்டுவிட்டாரா அல்லது மறைத்தாரா? சொல்லாமல் விடுவது மறைப்பதற்குச் சமம். இப்படியெல்லாம் ஒரு மோசடி பேர்வழிக்கு வக்காலத்து வாங்கி உங்களுடைய தரத்தை இறக்கிக்கொள்ளாதீர்கள் நண்பரே. உங்களுக்கு காங்கிரசுக்கு வாக்களிக்க விருப்பமில்லையென்றால் நோட்டாவுக்கு வாக்களியுங்கள். அதை விட்டுவிட்டு கடைந்தெடுத்த ஒரு மோசடி பேர்வழிக்கு வாக்களிக்காதீர்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்வதற்காகத்தான் எழுதுகிறேன். இல்லை அப்படித்தான் செய்வோம் என்றால் பிறகு உங்கள் தலையெழுத்து.
ஊழல் விஷயத்தில் ஒரேயொரு சோற்றை மட்டுமே காட்டிவிட்டு,ஒரு பானை சோற்றை காட்டாமல் விட்டிருக்கிறீர்கள்.//
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போறும்.
தொடர்ந்து மூன்றாவது முறையும் உலை வைத்து சோறாக்கிக் கொண்டிருக்கும் அவர் பானையிலிருந்து இன்னும் சில சோறுகளையும் காட்டியிருக்கலாம்.//
தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டாலே அவர் நல்லவர் என்றோ, திறமையுள்ளவர் என்றோ பொருளல்ல. அப்படிப் பார்த்தால் முன்னாள் தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தையும், ஏழு முறை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் ஒரே தொகுதியில் போட்டியிட்டு ப. சிதம்பரத்தையும் கூட சொல்லலாம். ஒரு கட்சி தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு அவர்களுக்கு சரியான எதிரணி இல்லாமல் இருந்தாலும் போதும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
'காங்கிரஸுக்கு வாக்களிக்கா விட்டாலும் பரவாயில்லை' என்பதன் மூலம் உங்கள் நோக்கத்தை தெளிவு படுத்தி இருக்கிறீர்கள். நன்றி.
பதிலளிநீக்கு