பாரதியார்
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியதை
வைத்து ஆண் ஜாதி, பெண்
ஜாதி என்ற இரு சாதிகளைத்
தவிர வேறு சாதிகள் இருக்கலாகாது
என்று பொருள்கொள்ளலாகாது.
இந்த
உலகம் உள்ளவரையில் இந்தியா போன்ற பலதரப்பட்ட
மக்கள் வாழும் நாட்டில் சாதி
இருக்கத்தான் செய்யும். சாதிகளுக்கிடையில் மோதல்களும் இருக்கத்தான் செய்யும்.
இந்தியா
மட்டுமல்ல உலகெங்கும் ஆண், பெண் ஜாதிகள்
மட்டுமல்லாமல் பகுத்துணரும் அடிப்படையில் படித்தவன்-படிக்காதவன் என்ற பாகுபாடும் பொருளாதார
அடிப்படையில் பணக்காரன் - ஏழை என்கிற பாகுபாடும்
இருக்கத்தான் செய்கிறது.
சாதி
அடிப்படையில் மனிதர்களை இழிவுபடுத்துவதைத்தான் அன்றைய பாரதியாரும் அவருக்கு
பின்னால் வந்த பல பகுத்தறிவுவாதிகளும்
தவறு என்று உரைத்தார்கள்.
சாதி
அடிப்படையில் மனிதர்களை பிரித்துப்பார்ப்பதும் இழிவான செயல் என்பதில்
எனக்கு எவ்வித மாற்றுக் கருத்து
இல்லை.
ஆனால்
இருவேறு சாதிகளைச் சார்ந்த இருவர் இணைந்து
வாழ்வது என்பது நடைமுறைக்கு சாத்தியம்தானா
என்பதில்தான் எனக்கு கருத்து வேறுபாடு
உள்ளது. இதைத்தான் என் கணவர் இளவரசனுடன்
எனக்கு compatibility இல்லை ஆகவே அவருடன்
இணியும் இணைந்து வாழ்வது சாத்தியாமாகாது
என்றார் வித்யா. அவர் உணர்ந்துதான்
இதை கூறினாரா அல்லது சாதீய வெறி
பிடித்த சிலர் இதை ஒரு
சாக்காக கூறுமாறு அவரை வற்புறுத்தினார்களா என்பது
தர்க்கத்துக்குரிய விஷயம். அதைப்பற்றி தர்க்கிப்பதல்ல
என்னுடைய நோக்கம்.
Compatibility என்ற ஆங்கில வார்த்தையை
கருத்தொருமித்தல் என்று மட்டும் பொருள்கொள்வதில்
அர்த்தமில்லை. அது இன்னும் பல
உள்ளர்த்தங்களைக் கொண்ட வார்த்தை என்றும்
கூறலாம். கருத்தில் ஒற்றுமை, அவற்றை செயல்படுத்தும் விதங்களில்
ஒற்றுமை, பழக்க வழக்கங்களில் ஒற்றுமை,பேசும் விதங்களில் உள்ள
ஒற்றுமை, அணுகுமுறையில் உள்ள ஒற்றுமை, பிறரை
அனுசரித்துப் போவதில் உள்ள ஒற்றுமை
என பல்வேறு விஷயங்களைக் கூறலாம்.
நட்பு
அடிப்பைடையில் இரு வேறு சாதியினர்
பழகுவது என்பது எளிது. நட்பிலும் கூட சாதீயத்தை புகுத்த
எந்த சாதி கட்சிகளோ அல்லது
சாதீய சமூக அமைப்புகளோ முயல்வதில்லை
என்பதும் உண்மை.
ஒருவனை
அல்லது ஒருத்தியை அவர்களிடமுள்ள நிறை, குறைகளோடு ஏற்றுக்கொள்வது
என்பது நட்பில் வேண்டுமானால் சாத்தியமாகலாம்.
ஆனால் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ வேண்டும்
என்கிற சூழலில் உடலளவில் மட்டுமல்லாமல்
உள்ளத்தளவிலும் என்னுடன் ஒத்துப்போகவேண்டும் என்று நினைக்க எனக்கு
எல்லாவித உரிமையும் உண்டு.
அப்படியானால்
காதலிக்கும்போது இது தெரியவில்லையா என்று
கேட்டால் நிச்சயம் எனக்கு தெரிந்திருக்கவில்லை என்றுதான்
காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பலரிடம் இருந்தும் பதில்
வரும். காதல் என்பது யார்,
எவர் என்று புரிந்துக்கொள்ளும் முன்பே
வருவது. இவன் இன்னான், இன்னாருடைய
மகன் என்பதையெல்லாம் தெரிந்துக்கொண்டு வருவதல்ல காதல்.
நம்முடைய
தினசரி வாழ்க்கையில் பலரை சந்திக்கிறோம், பலருடன்
பழகுகிறோம் ஆனால் ஒருவனை, ஒருத்தியைத்தான்
திருமணம் செய்துக்கொள்கிறோம். பலருடன் பழகினாலும் ஒருசிலருடன்தான்
நட்பு வைத்துக்கொள்கிறோம். அவர்களுள் ஒருசிலருடன்தான் நெருங்கிப் பழகி நம்முடைய சுக,
துக்கங்களைப் பகிர்ந்துக்கொள்கிறோம். நட்பிலேயே இவ்வளவு பகுத்துப் பார்த்தல்
தேவை என்கிறபோது என்னுடன் இணைந்து வாழ்கிறவன்/ள்
என் கருத்துடன் மட்டுமல்லாமல், நடை, உடை, பாவனை,
என அனைத்திலுமே ஒத்துப்போக வேண்டும் என்று நினைப்பதில் தவறேதும்
இல்லையே.
இதற்கும்
சாதிக்கும் என்ன உறவு என்கிறீர்களா?
நிச்சயம்
உண்டு.
நான்
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வங்கி
மேலாளராக பணியாற்றி பலதரப்பட்ட மக்களை சந்தித்திருக்கிறேன். பல சாதிகளைச்
சார்ந்த வாடிக்கையாளர்களின் வீடுவரை சென்று பழகியிருக்கிறேன்.
உண்டு உறவாடியிருக்கிறேன். அவர்களுடைய திருமணங்களில், புகுமுனை விழாக்களில், ஈமச்சடங்குகளில் கலந்துக்கொண்டிருக்கிறேன்.
அந்த
அடிப்படையில் சொல்கிறேன். ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு
பிரத்தியேக குணம், பேச்சு, நடை,
உடை, பாவனை என இருக்கத்தான்
செய்கிறது. அவர்கள் பேசும் பாணியிலிருந்து,
உண்பது, உறங்குவது, சிந்திப்பது ஆகியவற்றை மட்டும்
வைத்து இவர்கள் இன்ன சாதியைச்
சார்ந்தவர்கள் என்பதை கூற முடியாவிட்டாலும்
இன்ன சாதியைச் சார்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை கணிப்பது சாத்தியம்.
1. சில
சாதிகளைச் சார்ந்தவர்கள் மிகவும் பொறுமைசாலிகளாக இருப்பார்கள்.
கோபம் என்பது அறவே வராது.
தானுண்டு தன் வேலயுண்டு என்று
இருப்பார்கள். தன் வீடு, தன்
குடும்பம் என்பதில்தான் அவர்களுடைய சிந்தனை, சொல், செயல் எல்லாமே.
2. சில
சாதிகளைச் சார்ந்தவர்களுக்கு எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும். பேசிக்கொண்டிருக்கும்போதே
கையை நீட்டுவார்கள். பேசி தீர்க்கும் பேச்சுக்கே
இடமிருக்காது. எல்லாவற்றிற்கும் வெட்டும் குத்தும் தான் தீர்வு.
3. இன்னும்
சிலர் ஒழுங்கீனத்திற்கு பெயர்போனவர்கள். சொல்லிலும் ஒழுக்கம் இருக்காது செயலிலும் ஒழுக்கம் இருக்காது. வீடு, வாசலிலும் சுத்தம்
இருக்காது. அவர்களுடைய வீட்டிற்குள் சென்றுவிட்டால் எது எங்கும் இருக்கவேண்டும்
என்ற விவஸ்தையே இல்லாமல் எங்கும் எதுவும் இறைந்து
கிடக்கும்.
4. வேறு
சிலர் சுத்தத்திற்கு பெயர்போனவர்கள். உள்ளத்தில் சுத்தம் உள்ளதோ இல்லையோ,
இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வார்கள்.
அவர்களை பிற சாதியினர் தொட்டாலும்
தீட்டு, அவர்களை இவர்கள் தொட்டாலும்
தீட்டு என்பார்கள். பார்ப்பதற்கும் பாங்காக, சுத்தமாக இருப்பார்கள்.
இப்படி
பலதரப்பட்ட குணாதிசயங்கள் அடைப்படையிலேயே இவர்கள் இன்ன சாதியைச்
சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்ப்ள்ளது என
கணித்துவிட அனுபவம் உதவுகின்றது.
இதில்
ஒன்றாம் மற்றும் இரண்டாம் பிரிவினைச்
சார்ந்தவர்களுக்கிடையிலோ அல்லது மூன்றாம் மற்றும்
நான்காம் பிரிவினைச் சார்ந்தவர்களுக்கிடையிலோ எந்தவிதத்திலும்
compatibility (கருத்தொற்றுமை)
இருக்கப் போவதில்லை என்பது நிச்சயம்.
காதலிக்கிற
ஒருசில மாதங்களிலோ அல்லது ஒருசில வருடங்களிலோ
தெரிந்துக்கொள்ள முடியாத இத்தகைய வேற்றுமைகளை
திருமணம் முடிந்து இணைந்து வாழ்கிறபோதுதான் பலராலும்
உணர்ந்துக்கொள்ள முடிகிறது. முந்தைய தலைமுறைகளில் இதைத்தான்
'வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்' என்றார்கள்
போலிருக்கிறது. எள்ளளவும் கருத்தொற்றுமை இல்லாவிடினும் குடும்பம் பிளவுபடலாகாது என்பதை உணர்த்தத்தான் 'கண்ணாலானாலும்
கணவன், புல்லானாலும் புருஷன்' அல்லது 'அடிக்கிற கைதான்
அணைக்கும்' அல்லது 'கோபம் இருக்கும்
இடத்தில்தான் குணம் இருக்கும்' என்ற
பழமொழிகளையும் சொல்லி வைத்தார்கள் போலிருக்கிறது.
இந்த பழமொழிகள் எல்லாமே ஆடவன் எத்தனை
குணக்கேடுள்ளவன் என்றாலும் பெண் அதை பொருட்படுத்தலாகாது
என்பதைத்தான் உணர்த்துகின்றன என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
இந்த
வேற்றுமைகளை பொருட்படுத்தாமல் அனுசரித்துச் செல்வதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது
என்று எண்ணுபவர்களும் நமக்காக இல்லாவிட்டாலும் நம்
குழந்தைகளுக்காகவது இணைந்து வாழத்தான் வேண்டும்
என கருதுபவர்களும் இந்த வேற்றுமைகளை பெரிதாக
எண்ணாமல் தாம்பத்திய சிறையிலேயே அடைபட்டு கிடக்கின்றனர். அதெல்லாம் எங்களால் முடியாது என்று எண்ணுகிறவர்கள் compatibility இல்லை என்று எளிதாக
கூறிவிட்டு பிரிந்துவிடுகின்றனர்.
அப்படித்தான்
வித்யாவும் கூறினார் என்று நினைக்கிறேன். கணவன்-மனைவி இருவருக்கிடையில் திருமணத்திற்குப்
பிறகு சாதி பேதத்தை விட
தங்களுக்கிடையில் அன்றாடம் ஏற்படும் கருத்து பேதங்கள்தான் பெரிதாக
தெரியும். இதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.
ஆகவேதான்
சொல்கிறேன். திருமணங்களைப் பொருத்தவரை 'சாதிகள் உள்ளதடி...' என்று.
ஒரே சாதிக்குள் திருமணம் செய்துக்கொள்வதற்கே நாள்,நட்சத்திரம், பொருத்தம்
என்றெல்லாம் பார்க்கிற இந்த சமுதாயத்தில் இருவேறு
சாதியினர் திருமணம் செய்துக் கொண்டு அனுசரித்துச் செல்வது
என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல என்பதும் என்னுடைய கருத்து.
இன்று
சமூக வலைத்தளங்களில் ஆர்ப்பரிக்கின்றவர்களும் தங்களுடைய சொந்த வாழ்க்கையை சிறிது
நேரம் திரும்பிப் பார்த்தாலே போதும், இதை உணர்ந்துக்கொள்வார்கள்.
அன்றைய மேடைப் பேச்சாளர்கள் பேச்சில்
ஒன்று செயலில் ஒன்று என்று
வாழ்ந்ததைப் போன்றுதான் இன்றைய சமூகவலைத்தளங்களில் சாதீயம்
இல்லை என்று கூப்பாடு போடுபவர்களும்
என்றாலும்
மிகையாகாது. ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கில்லையடி கண்ணே
என்பதுபோல்தான் இந்த அறைகூவல்களும்.
இதனால்
மட்டுமே இன்றைய சாதீய கட்சிகளையும்
அவர்கள் செய்யும் அக்கிரமங்களையும் சரி என்று ஏற்றுக்கொள்கிறவன்
என்று முத்திரை குத்திவிடாதீர்கள்! கலப்பு திருமணத்தை குடும்பத்திற்குள்ளேயே
நடைமுறைப்படுத்தியவன் நான் என்பது என்னுடைய
நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும்.
*****
பதிலளிநீக்குபல நடப்புகளைக் கண்டு சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள். சாதிகள் வேண்டாம் என்று சொல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாய்ப் போனாலும் சாதிகளைச் சேர்ந்த அமைப்புக்களின் எண்ணிக்கை கூடிவிட்டது. compatibility இல்லாமல் போக நீங்கள் கூறியிருக்கும் காரணங்களில் இரண்டுமுக்கியமாகப் படுகிறது . ஒன்று கல்வி மற்றது சுத்தம் சுகாதாரம்.இவற்றை மாற்ற முனைந்தால் சாதிகளை ஒழிக்கமுடியும்.
எனக்கொரு நண்பர் இருந்தார். பிராமண சாதி. அவர் பிரஹசரணம் என்னும் பிரிவைச் சேர்ந்தவர். அவருடைய மகனுக்குப் பெண் தேடும்போது அவர் போட்ட முதல் கண்டிஷன் பெண் வடமா பிரிவாக இருக்கக் கூடாது என்பதுதான். அவர்கள் இன்னின்ன விஷயங்களில்சேர்ந்து போக மாட்டார்கள் என்று ஒரு லிஸ்டே போட்டார்....!நன்கு படித்து நல்ல நிலையில் இருக்கும் அவரை மாதிரி மக்கள் எண்ணமே அப்படி என்றால் சாதிகளை ஒழிப்பது முடியாத காரியம் என்றே தோன்றுகிறது.நானும் என் மனைவியும் வேறு வேறு சாதி, வேறு வேறு மொழி . கடந்த ஐம்பது ஆண்டுகளாக நல்லறம் நடத்தி வருகிறோம். .பின்னூட்டமே ஒரு பதிவு போல் ஆகிவிட்டது. .வாழ்த்துக்கள்.ப்ரொஃபைலில் உங்களைப் பற்றிய சேதிகள் இல்லையே.
வாங்க பாலசுப்பிரமணியம் சார்,
பதிலளிநீக்கு.பின்னூட்டமே ஒரு பதிவு போல் ஆகிவிட்டது. .//
பின்னூட்டம் பெரிசா சிறிசாங்கறது முக்கியமில்லை. எப்படி இருந்ததுங்கறதுதான் முக்கியம். பேருக்கு நல்லாருக்குன்னு சொல்லிட்டு போகாம மெனக்கெட்டு உங்க அனுபவத்தையும் பகிர்ந்துருக்கீங்க பாருங்க, ரொம்பவ நன்றி.
நீங்க வெளிப்படையா சொன்னத நான் மறைமுகமா சொல்லியிருக்கேன். அவ்வளவுதான் வித்தியாசம். கலப்பு மணத்த விடுங்க. ஒரே சாதிக்குள்ளவே பேர், நட்சத்திர பொருத்தம் பாக்கறது, சாமிக்கிட்ட பூ போட்டு பாக்கறது இதெல்லாம் கூட இன்னமும் இருக்கே. மணப்பொருத்தம் பாக்கறவங்க சேர்ந்து வாழப் போறவங்களோட மனப்பொருத்தத்த பாக்கறதில்லையே. அது எவ்வளவு பெரிய வேதனை?
உங்கள மாதிரி கலப்புத் திருமணத்தில் மகிழ்ச்சியுடன் வாழும் நிறைய பேரை சந்தித்திருக்கிறேன். என்னுடைய குடும்பத்திலும் நிறைய, ஏன், ஏறக்குறைய எல்லாமே கலப்பு திருமணங்கள்தான். அபிப்பிராய பேதங்கள் அவ்வப்போது ஏற்பட்டாலும் (இது எந்த திருமணத்தில்தான் இல்லை!) யாருமே பிரிந்து போகிற அளவுக்கு இதுவரை துணியவில்லை.
வாழ்த்துக்கள்.ப்ரொஃபைலில் உங்களைப் பற்றிய சேதிகள் இல்லையே.//
பழைய ப்ரொஃபைலை சிறிதுநாட்களுக்கு முன்புதான் மாற்றினேன். கூடிய விரைவில் விவரங்களை சேர்த்துவிடுகிறேன்.