"எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் பரத்வாஜ், மில்லோடாமின், சுதீர்குமார் குப்தா உள்ளிட்டோர் கடந்த சனிக்கிழமை தருமபுரியில் மறு பிரேத பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை திங்கள்கிழமை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையில், இளவரசன் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார் என்றும், அவரை யாரும் தாக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன."
இது இன்றைய தினசரிகளில் வெளியாகியுள்ள செய்தி.
அப்படியானால் முதல் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அதன் பிறகு பிரேதத்தை மீண்டும் ஆய்வு செய்த இரு மருத்துவர்கள் அளித்த அறிக்கைகளிலும் இதைத்தான் தெரிவித்திருந்தனரா?
அந்த இரு மருத்துவர்களும் வெவ்வேறு விதமான அறிக்கைகளை சமர்ப்பித்ததால்தானே தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை மீண்டும் ஆய்வு செய்ய அழைத்தனர்? அப்படியானால் அந்த இரு மருத்துவர்கள் சமர்ப்பித்த அறிக்கைககளில் காணப்பட்ட முரண்பாடுகள் என்னென்ன? ஒருவர் தற்கொலை என்றும் மற்றொருவர் ரயில் விபத்து என்றும் அறிவித்திருந்தனரா?
அதுதான் உண்மை என்றால் தற்கொலை என்று ஏன் ஒருவர் மட்டும் அறிவித்திருக்க வேண்டும்?
சரி, ரயில் விபத்துதான் காரணம் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியிருந்தால் அந்த அறிக்கையின் முழுவிவரத்தையும் பத்திரிக்கைகள் வாயிலாக வெளியிட வேண்டாமா?. அப்போதுதானே இந்த விவகாரத்தில் உள்ள சர்ச்சை தீரும்?
இல்லையென்றால் திருமா முன்பே கூறியுள்ளதுபோன்று இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் இருக்க செய்யப்பட்ட நாடகம் என்பது உண்மை என்றாகிவிடக் கூடும்.
:இப்போது, இளவரசனின் இறப்பிலும் பா.ம.க.விற்கு எதிராக சிலர் அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இளவரசனின் இறப்பால் வேதனையடைந்தோம். தனது சாவிற்கு யாரும் காரணமில்லை என்று அவர் எழுதி வைத்த பின்னரும் நீதிவிசாரணை கோரி வருகின்றனர்."
இது அன்புமணியின் அறிக்கை. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் இருக்கிறது!
எது எப்படியோ, மூன்று மாத காலத்திற்கும் மேலாக தமிழகத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தால் அனைத்து தரப்பினருக்கும் நல்லது.
*********

//திருமா முன்பே கூறியுள்ளதுபோன்று இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் இருக்க செய்யப்பட்ட நாடகம் என்பது உண்மை என்றாகிவிடக் கூடும்.//
பதிலளிநீக்குஎது நாடகம்?
தற்கொலை என்பது தெரிந்தே, அதனை கொலையாக காட்ட முயன்றதன் காரணம் என்ன?
அரசாங்கம் "சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் இருக்க செய்ய" நாடகம் நடத்தவில்லை - திருமாதான் "சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரச்செய்ய வேண்டும்" என்பதற்காக நாடகம் நடத்தியுள்ளார்.
இன்னும் அதிகாரப்பூர்வமாக எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கை வெளிவராத நிலையில், அறிக்கை விவரம் முன்னதாகவே, வெளியே எப்படி வெளியானது என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குஅருளின் பசுமைப் பக்கங்களுக்குத் தான் இது
பதிலளிநீக்குநீங்கள் உண்மையான ஐயங்களைப் பட்டியலிட்டதால் உங்கள் மூலம் அருள் அவர்களுக்கு இது அனுப்பப்படுகிறது.. ஏற்கனவே இது அருளின் பக்கங்களுக்கும் அனுப்பபட்டள்ளது.
சட்டப்படி ஒரு மைனர் பெண்ணை அதே சட்டப்படி வயது வந்த ஒருவன் திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துக் கொண்டு போய் தன் வீட்டில் வைத்து எதுவுமே செய்யாமல் (அதாவது கன்னி கழியாமல்) வைத்திருந்து விட்டு பின்பு அவளை விட்டு பிரிந்து சென்றால் அதனால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு அந்த ஆணுக்குத் தண்டனை என்ன ??? கொஞ்சம் பச்சை யில்லாமல் விளக்கவும் அருள் மிகுந்தவரே
அரசாங்கம் "சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் இருக்க செய்ய" நாடகம் நடத்தவில்லை - திருமாதான் "சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரச்செய்ய வேண்டும்" என்பதற்காக நாடகம் நடத்தியுள்ளார்.//
பதிலளிநீக்குஅப்படியா?
சரிங்க திருமா கடந்த வாரம் தமிழ் செய்தி தொலைக்காட்சி நடத்திய மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில் இது சம்பந்தமாக சில கேள்விகளை முன்வைத்திருந்தார். அவர் தலைமையேற்று நடத்தும் கட்சியின் தொண்டனுமல்ல, அல்லது அவரை பின்பற்றும் சாதியினரைச் சார்ந்தவனுமல்ல நான். இருப்பினும் அதில் சில கேள்விகள் உண்மையிலேயே நியாயமானதாகத்தான் எனக்கு பட்டன. ஆகவே அவற்றில் எனக்கு நினைவில் நிற்பவைகளை இங்கே பட்டியலிடுகிறேன். பதில் தெரிந்தால் சொல்லுங்கள்:
1. ரயிலில் அடிபட்டு மரித்திருந்தால் அவருடைய சட்டையில் ஒரு துளி ரத்தக்கறை கூட இல்லையே ஏன்?
2. பிரேதப் பரிசோதனை அலுவலக நேரமான காலை பத்திலிருந்து ஐந்து மணிக்குள் முடிக்கப்படவேண்டும் என்ற நியதியை மீறி காலை ஏழு மணிக்கே துவங்கப்பட்டதாமே, உண்மையா? முதல் பிரேத பரிசோதனையை அவ்வளவு அவசர, அவசரமாக நடத்தக் காரணம் என்ன?
3. அந்த பிரதேச பரிசோதனையில் இளவரசனின் நுரையீரலும் இருதயமும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்ததாக கூறப்பட்டுள்ளதாமே, உண்மையா? விபத்தில் மரணித்த ஒருவரின் நுரையீரல் அடைபட்டிருக்க வேண்டுமாமே அல்லது மிக அதிக அளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமே. அப்படியிருக்க இருதயம் எப்படி பழுதடையாமல் இருந்திருக்க முடியும்?
4. சுமார் 75-90 கிமீ வேகத்தில் கடக்கும் ரயிலில் அடிபட்டு மரிக்கும் ஒருவரின் உடல் அலங்காமல் குலுங்காமல் ரயில் பாதைக்கு அருகிலேயே கிடக்குமா? அடிபட்ட வேகத்தில் பத்தடி தூரத்திற்காகவாவது தூக்கியெறியப்படாதா?
5. ஒரு மனித உயிர் பலி வாங்கப்பட்டிருக்கிற சூழலில் (அது எந்த சாதியைச் சார்ந்தவராயிருப்பினும்) ஒரு மனிதாபிமான முறையில் அதை அணுகாமல் அரசியலாக்கப் பார்ப்பது சரிதானா?
இன்னும் அதிகாரப்பூர்வமாக எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கை வெளிவராத நிலையில், அறிக்கை விவரம் முன்னதாகவே, வெளியே எப்படி வெளியானது என்று தெரியவில்லை. //
பதிலளிநீக்குஅதானே?
சட்டப்படி ஒரு மைனர் பெண்ணை அதே சட்டப்படி வயது வந்த ஒருவன் திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துக் கொண்டு போய் தன் வீட்டில் வைத்து எதுவுமே செய்யாமல் (அதாவது கன்னி கழியாமல்) வைத்திருந்து விட்டு பின்பு அவளை விட்டு பிரிந்து சென்றால் அதனால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு அந்த ஆணுக்குத் தண்டனை என்ன ??? கொஞ்சம் பச்சை யில்லாமல் விளக்கவும் அருள் மிகுந்தவரே//
பதிலளிநீக்குஉங்களுடைய கேள்வியும் நியாயமானதுதான். ஆனால் நீதிமன்றமும் இவ்விஷயத்தில் ஏன் மவுனமானது என்றுதான் புரியவில்லை. ஒரு மேஜரான ஆன் ஒரு மைனர் பெண்ணை திருமணம் செய்தால் அது சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கும்போது இதை மட்டும் ஏன் அப்படி அறிவிக்கவில்லை? அப்படி அறிவித்திருந்தால் இந்த சிக்கல்கள் எதுவுமே ஏற்பட்டிருக்காதே?
அருள் ஏற்கனவே தன்னுடைய கருத்தை முன்வைத்துவிட்டார். இனி என்னுடைய மற்றும் உங்களுடைய பிற கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நிச்சயமாக பதிலிளிக்கமாட்டார்.. எனது பின்னுட்டத்தை வெளியிடும் அளவுக்குக்கூட தைரியம் அற்ற ஒருவர் பொது வெளியில் கருத்து வெளியிட்டு வருவதை என்னவென்பது??... எனவே தான் எனது வினாக்களைக் உங்களுக்கும் அனுப்பி வைத்தேன்.... அவருக்கு தேவை செல்வி திவ்யா என்று யாவரும் ஒத்துக் கொள்ளவேண்டும்... அவ்வளவுதான்....
பதிலளிநீக்குநிச்சயமாக பதிலிளிக்கமாட்டார்.. எனது பின்னுட்டத்தை வெளியிடும் அளவுக்குக்கூட தைரியம் அற்ற ஒருவர் பொது வெளியில் கருத்து வெளியிட்டு வருவதை என்னவென்பது??..//
பதிலளிநீக்குமறுத்துச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை போலிருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
அல்லது வாதத்தை தொடர விருப்பமில்லாமல் இருக்கலாம்.