02 நவம்பர் 2007

வங்கிகளில் கணினி - என் அனுபவம் 1

வங்கி செயல்பாடுகளில் கணினியின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது என்றால் மிகையாகாது.

என்னுடைய திரும்பிப் பார்க்கிறேன் தொடரில் நான் குமாஸ்தாவாக சேர்ந்த காலத்தில் வழமையில் இருந்து வந்த வங்கியின் செயல்பாடுகளைக் குறித்தும் அச்சமயத்தில் என்னைப் போன்ற குமாஸ்தாக்கள் தினசரி அலுவல்களை முடிக்க பட்ட சிரமங்களையும் விரிவாக எழுதியுள்ளேன்.

நான் மும்பை வங்கி கிளையொன்றில் மேலாளராக இருந்த சமயத்தில்தான் - 1994ல் - என்னுடைய வங்கியின் கிளை செயல்பாடுகள் கணினி மயமாக்கப்பட்டன.

மான்யுவல் (Manual) ஆப்பரேஷன் என்ற சூழலிலிருந்து முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட ஆட்டோமேட்டட் (Automated) சூழலுக்கு மாறும் சமயத்தில் வங்கி ஊழியர்கள் சந்திக்க நேர்ந்த சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

சுமார் பத்தாயிரம் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் கணினியில் ஏற்றி முடிக்கவே மாதக்கணக்கானது. அதுவும் முழுக்க பெண்களை மட்டுமே கொண்டிருந்த என்னுடைய கிளையில்.... கேட்கவே வேண்டாம்.

முதல் நிலை அதிகாரிகள் ஐவரை மட்டும் வைத்துக்கொண்டு இரவும் பகலும், விடுமுறை நாட்களிலும் அமர்ந்து நேரம் காலம் பாராமல் அத்தனை விவரங்களையும் கண்னியில் தகவல்களத்தில் (database) ஏற்றியதை இப்போது நினைத்துப்பார்க்கவே மலைப்பாக உள்ளது.

ஆனால் ஒருமுறை பாடுபட்டு ஏற்றிவிட்டால் அதை காலாகாலத்துக்கும் பயன்படுத்த முடியும் அல்லது நம்முடைய தேவைகளுக்கேற்ப மிக எளிதாக மாற்றி அமைத்துவிடமுடியும், மேம்படுத்த முடியும் என்பதை அப்போது நானோ என்னுடைய துணை அதிகாரிகளோ உணரவில்லை.

அன்றுவரை ஒவ்வொரு மாதக்கடைசியிலும் ஒவ்வொரு கணக்கிலும் இருந்த மிகுதி (Balance) தொகையை வேறொரு புத்தகத்தில் குறித்து, கூட்டி அதன் கூட்டுத்தொகை கிளையின் பொது கணக்குப் புத்தகத்தில் (General Ledger) உள்ள கூட்டுத்தொகைக்கு சமமாக உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்வதற்குள் அடுத்த மாத இறுதி வந்துவிடும்.

ஆனால் கணினி மயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு தின இறுதியிலுமே (Day end) இந்த வேலை சில நிமிடங்களிலேயே முடிந்துவிடும் என்பதை உணர்ந்தபோதுதான் நாங்கள் அதுவரை அனுபவித்த சிரமங்கள் ஒரு பொருட்டே இல்லை என்பதை உணர்ந்தோம்.

அது மட்டுமா? ஒவ்வொரு கணக்கிலும் மூன்று மாத இடைவெளிகளில் வட்டித் தொகையை கணக்கிட்டு அதை ஒவ்வொரு கணக்கிலும் பற்று/வரவு வைத்து முடிப்பதற்கே இரண்டு மூன்று வாரங்கள் ஆகிவிடும். ஆனால் கணினி மயமாக்கப்பட்டதன் பிறகு கிளையிலுள்ள எல்லா வாடிக்கையாளர்களுடைய கணக்கிலும் அதனதற்குண்டான வட்டியை அரை மணியில் கணக்கிட்டு அந்தந்த கணக்கிலும் பற்று/வரவு வைத்து முடித்து உன்னுடைய கிளையின் மொத்த வட்டி வரவு/பற்று இதுதான் என்பதை அன்றைய மாத இறுதி நாளன்றே தெரிவித்துவிடும்!

அதுவரை சிம்மன சொப்பனமாக இருந்த அறையாண்டு மற்றும் ஆண்டிறுதி பணிகள் கணினி மயமாக்கப்பட்டதும் மற்ற வேலைநாட்களைப் போலவே ஆகிப்போனது.

ஆனால் இதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்போது பிரபலமாகவுள்ள மென்பொருள் நிறுவனங்கள் இருக்கவில்லை. இன்றைய கணினி யுகத்தில் வங்கிகளுக்கென்றே பிரத்தியேக மென்பொருட்களை தயாரித்து வழங்க பல நிறுவனங்கள் உள்ளன.

அன்றோ எங்களைப் போன்ற பெரும்பாலான வங்கிகளில் பணியாற்றிய ஒருசில அதிகாரிகள் தாங்களாகவே கற்று தயாரித்த மென்பொருட்களைத்தான் பயன்படுத்தி வந்தன. அவை பெரும்பாலும் அப்போது பழக்கத்தில் இருந்த Dbase, Foxpro, Informix, Cobol எனப்படும் மொழிகளிலேயே (Language) எழுதப்பட்டிருந்தன.

என்னுடைய வங்கியில்
Clipper
என்று அப்போது பழக்கத்திலிருந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்த மென்பொருள் முழுக்க, முழுக்க dbase கோப்புகளால் ஆனது. சேமிக்கப்படும் தகவல்கள் (data) .dbf கோப்புகளில் சேமிக்கப்பட்டிருப்பதால் சில அபாயங்களும் உண்டு.

ஆனால் அன்றைய சூழலில் அதன் தாக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் அதிக பொருட்செலவில்லாமல் உருவாக்கப்பட்ட பல மென்பொருட்களில் இதுவும் ஒன்று. அன்றையே அத்தியாவசிய தேவைக்கு - அதாவது ஒரு கிளையில் நடைபெறும் அன்றாட பரிவர்த்தனைகளை (transaction) நடத்தி முடித்து நாளிறுதியில் (at the end of the day) கணக்கு முடிக்கும் வரை - அது பயன்பட்டது.

இதன் இயங்கு தளம் (OS) விண்டோஸ் அறிமுகமாகும் வரை பிரபலமாக இருந்த disc operated system எனப்படும் DOS. ஆகவே இந்த மென்பொருளை பயன்படுத்த ஒருவர் DOS கட்டளைகளை (commands) ஒரளவுக்காவது அறிந்திருக்க வேண்டும்.

இதில்தான் சிக்கலே....

தொடரும்..

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் எங்கள் வங்கியின் கணினி இலாக்கா அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். படித்துவிட்டு சென்றுவிடாமல் உங்களுடைய எண்ணங்களையும் பகிர்ந்துக்கொண்டால் சந்தோஷம். கட்டாயமில்லை:-)

16 கருத்துகள்:

 1. :) :) :)
  தொடர்ந்து எழுதுங்கள் சார்

  பதிலளிநீக்கு
 2. வாங்க வினையூக்கி,

  தொடர்ந்து எழுதுங்கள் சார்//

  முடிந்தவரை முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா8:18 பிற்பகல்

  My father works for a govt. bank. few years back i know how hard its for him to cope up with tha computerized systems when tha management decided to introduce computers. But now he feels relaxed and no more late night shifts during the year endings or half year endings.. before that they used to work for almost 3-4 days continuously even without coming back to home. its really a revolution that computers made in the banking sector.

  பதிலளிநீக்கு
 4. வாங்க நரசிம்மன்,

  நீங்க சொல்றது முழுக்க, முழுக்க உண்மை. கணினி மயமாக்கம் உங்களுடைய தந்தையைப் போன்ற பல அதிகாரிகளுடைய வேலைப்பளுவை குறைத்துள்ளது.

  ஆனால் அந்த அறிமுக நாட்களில் எத்தனை பாடுபட்டிருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 5. வாங்க அரவிந்தன்,

  I started my career in Dbase clipper in 1989.../

  Is it? Then you should be able to understand and respond when I start writing about the deficiency in the language in my future episodes.

  பதிலளிநீக்கு
 6. டிபிஆர் அய்யா,
  நானும் எங்கள் வங்கியின் கணிணித்துறைக்கு 1989ல் மாற்றல் கிடைக்கப்பெற்றேன். MS DOS, dBase, Foxpro, COBOL, C, Informix, Unix இவற்றிலிருந்துதான் பொட்டி தட்ட ஆரம்பித்தேன். நானும் எங்கள் அனுபவங்களைப் பின்னூட்டமாக எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. வாங்க பாலா,

  MS DOS, dBase, Foxpro, COBOL, C, Informix, Unix இவற்றிலிருந்துதான் பொட்டி தட்ட ஆரம்பித்தேன். நானும் எங்கள் அனுபவங்களைப் பின்னூட்டமாக எழுதுகிறேன்.//

  அப்படியா.. சந்தோஷம். கண்டிப்பா எழுதுங்க.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் ஜோசப்

  நான் இன்றும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணி புரிந்து கொண்டு தான் இருக்கிறேன். நண்பர் பாலாவும் வங்கியில் பணி புரிகிறார் போல் இருக்கிறது. தாங்கள் இன்னும் பணியில் இருக்கிறீர்களா ? அல்லது ஓய்வு பெற்று விட்டீர்களா ?

  வங்கியில் கணிணி - ஒரு சுகானுபவம் - பார்க்கலாம் - உங்கள் அனுபவத்தையும், பாலாவின் அனுபவத்தையும்.

  தொடர்ந்து எழுதுங்கள் - வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 9. வாங்க சீனா,

  நான் இன்னும் பணியில்தான் இருக்கிறேன். பாலா இப்போது வங்கிப் பணியில் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. aaha, thala, vandhutingala, pattaiya kilapunga, kandippa vandhu paarpaen

  பதிலளிநீக்கு
 11. வாங்க ஆணி

  நன்றிங்க... தொடர்ந்து வாங்க.

  பதிலளிநீக்கு
 12. நீங்கள்தான் இந்த ப்ளாக்கில் எழுவதை நிறுத்தி விட்டீர்களே[போட்காஸ்டிங் பதிவு கணக்கில் சேர்த்தியில்லை]என்று உங்கள் ப்ளாகை சோதிக்காமல் இருந்தால்,தமிழ்மணத்தில் திரும்பிப் பார்கிரேன் - 8 என்று உங்கள் பெயெரில் வு(2005 வருத்திய] பதிவு.

  < ஒருவர் DOS கட்டளைகளை (commands) ஒரளவுக்காவது அறிந்திருக்க வேண்டும்.==>

  எங்கே DIR/P க்கும் DIR/W க்கும் வித்தியாசம் சொல்லுங்க.அப்பத்தான் ஒத்துக்கிடுவோம்.[ஒரு தமாஸ்தான் =) ]
  <==
  படித்துவிட்டு சென்றுவிடாமல் உங்களுடைய எண்ணங்களையும் பகிர்ந்துக்கொண்டால் சந்தோஷம் ==>
  அத விட வேற என்ன வேலை.எங்களுக்கு

  பதிலளிநீக்கு
 13. வாங்க சிவா,

  எங்கே DIR/P க்கும் DIR/W க்கும் வித்தியாசம் சொல்லுங்க.அப்பத்தான் ஒத்துக்கிடுவோம்.[ஒரு தமாஸ்தான் =) ]//

  தெரிஞ்சிருக்கணும்னு சொன்னா அது எனக்கு இல்லை... இது எப்படியிருக்கு?

  dir/p னா ஒவ்வொரு பக்கமா டைரக்டரியிலருக்கற கோப்புகளோட சைஸ் அடக்கம்.
  dir/w னா அகலமா டைரக்டரியிலருக்கற எல்லா கோப்புகளோட பேர் மட்டும். சைஸ்லாம் இல்லாம

  சரியா?

  பதிலளிநீக்கு
 14. TBR Sir,

  I remember that the Bank employees unions were agitating wildly against computerisation of banks in the mid-eighties. such is the narrow perception of 'leftists' and communists till date in many other vital matters too.

  Was there any opposistion in your bank too ? how was it handled and managed ?

  anbudan
  Athiyaman

  பதிலளிநீக்கு
 15. ரொம்ப மேலோட்டமாக எழுதுகிறீர்கள். கொஞ்சம் ஆழமாக எழுதவும்.

  சிவகாசி ஸ்ரீனிவாசன்

  பதிலளிநீக்கு