19 நவம்பர் 2007

வங்கிகளில் கணினி - 3

 

வங்கி பரிவர்த்தனைகளை (transactions) வரவு(Receipts or Credits), பற்று (Payment or Debits) என இருவகைகளாக பிரிக்கலாம்.

வாடிக்கையாளர் செலுத்தும் பணம் அவர்களுடைய கணக்கில் வரவு வைப்பது மற்றும் அவர்களுக்கு வழங்கும் பணத்தை அவர்களுடைய கணக்கில் பற்று வைப்பது. இதை ரொக்க பரிவர்த்தனைகள் (Cash transactions) என்பர். வரவு வைக்கப்படும் கணக்குகள் வைப்பு நிதி (fixed deposits) சேமிப்பு கணக்கு (Savings accounts), வர்த்தக கணக்கு (Current Accounts), தனிநபர் மற்றும் நிறுவனங்களின் கணக்கு என பலவகைக் கணக்குகள் உள்ளன. இவற்றை அந்த காலத்தில் திட்டங்கள் என்றோம். இப்போது அவற்றையே நாகரீகமாக Products என்கிறோம். முன்பு Mobilisation of resources என்றதை இப்போது Selling of Products என்கிறோம். இத்திட்டங்கள் சேமிப்பு திட்டங்கள் (Deposit or Saving Products), கடன் திட்டங்கள் (Loan Products) என்று இருவகைப்படுத்தப்பட்டுள்ளன.  இவற்றின் எண்ணிக்கை வங்கிகளை பொருத்து மாறும். எங்களுடையதை போன்ற தனியார் வங்கிகளில் ஐம்பது திட்டங்கள் இருந்தன என்றால் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் இருந்தன.

இத்தகைய திட்டங்களின் கீழ் நடைபெறும் பரிவர்த்தனைகளை கணினிமயமாக்க முனைந்தபோது அவற்றை தனித்தனி Modules ஆக பிரித்து அதுவரை கைப்பட (Manually) செய்த அலுவல்களை (Processes) கணினி மூலமாக செய்வதற்கு ஏதுவாக வகைப்படுத்த வேண்டியிருந்தது. முன்பு சேமிப்பு திட்டங்களின் கீழ் இருந்த வைப்பு நிதி திட்டங்கள், சேமிப்பு நிதி கணக்குகள், வர்த்தக கணக்குகள் என ஒவ்வொரு திட்டத்தின் கீழ் நடைபெறும் பரிவர்த்தனைகளையும் பதிவு செய்ய (record) பிரத்தியேகமாக புத்தகங்கள் (Ledgers) இருந்தன. அத்தகைய புத்தகங்களே பிறகு கணினிமயமாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டபோது moduleகளாக வடிவமைக்கப்பட்டன.

இவை Deposit Modules, Loan Modules, DD Module, என பட்டியல் நீண்டுக்கொண்டே போய் முன்பு தேவைப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையை விட Moduleகளின் எண்ணிக்கை கூடியது. இன்றைய மத்திய வர்த்தக மென்பொருள் எனப்படும் Centralised or Core Banking Solutioனுள் நூற்றுக்கும் மேற்பட்ட moduleகள் உள்ளன என்றால் மிகையாகாது.

ஒரு கிளையின் அனைத்து அலுவல்களையும் கணினிமயமாக்க வேண்டும் என்பது அத்தனை எளிதல்ல என்பதை சுட்டிக்காட்டவே மேற்கூறியவற்றை குறிப்பிட்டுள்ளேன். ஆகவேதான் இன்று நாட்டின் முன்னணி நிறுவனங்களில் Infosys, TCS, Iflex போன்ற மிக சில நிறுவனங்களே வங்கிகளுக்கு தேவையான மென்பொருள் தயாரிப்பில் உலக அளவில் பெயர்பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட மென்பொருள் பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் உதவியுடன் சுமார் பதினைந்து ஆண்டுகள் மிகவும் சிரமப்பட்டே இந்த நிலையை அடைந்துள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே ஒரு வங்கியின் அனைத்து அலுவல்களையும் கணினிமயமாக்குவது ஒருசில அதிகாரிகளை மட்டுமே கொண்ட குழுவால் சாத்தியமில்லை. இப்போதும் கூட ஒரு கிளைக்கு தேவையான நூற்றுக்கணக்கான moduleகளையும் முடித்து ஒரு முழுமையான மென்பொருளை அறிமுகப்படுத்த குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் தேவைப்படுகிறது. அத்தகைய மென்பொருளும் கூட அதன் முழுமையை அடைய மேலும் இரண்டு, மூன்று ஆண்டுகள் தேவைப்படும்.  எனக்கு மிகவும் தெரிந்த வங்கியின் கணினி இலாக்கா தலைவர் சமீபத்தில் கூறியது இது: 'பெரிய கம்பெனின்னு பேரு. CBS introduce பண்ணி ஆறு வருசத்துக்கு மேல ஆச்சி. இன்னமும் version change பண்றப்ப run time error வருது. கேட்டா அதான் உடனே வந்து சரி செஞ்சி குடுத்துடறமேன்னு சொல்றாங்க. கோடி கணக்குல கொட்டியும் இதான் நிலமை.'

உண்மைதான்.

இந்த சூழலில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தங்களை வல்லுனர்கள் என்று கூறிக்கொண்ட சில அதிகாரிகள் தயாரித்து அளித்த மென்பொருளில் நொடிக்கு ஒரு பிரச்சினை வந்ததில் வியப்பில்லையே.

இதில் என்னைப் போன்ற வங்கி மேலாளர்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருந்தது குமாஸ்தாக்களின் அலுவல்களை மேற்பார்வையிடுவது. இதை Maker-Checker அலுவல் என்போம். அதாவது Maker எனப்படும் குமாஸ்தா கணக்கு புத்தகங்களில் பதிவு செய்யும் (enter) பரிவர்த்தனைகளை (transactions) அவை சரியான கணக்கில்தான் ஏற்றப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பது.

எங்களுடைய வங்கியில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் clipper மொழியில் தயாரிக்கப்பட்டிருந்ததால் அதில் screen transfer வசதி இருக்கவில்லை. அதாவது ஒரு குமாஸ்தா ஒரு பரிவர்த்தனையை (transaction) முடித்ததும் அந்த திரையை மேலதிகாரியின் கணினிக்கு மாற்றி அவருடைய ஒப்புதலை பெற முடிந்ததில்லை. ஆகவே ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவர் குமாஸ்தாவின் இருக்கையை நெருங்கி அவர் பதிவு செய்திருந்த பரிவர்த்தனையை சரிபார்த்து தன்னுடைய user id மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி ஒப்புதலை அளிக்க வேண்டியிருந்தது.

ஒவ்வொரு முறையும் இவ்வாறு செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் பெரும்பாலான அதிகாரிகள் தங்களுடைய user id மற்றும் passwordஐ குமாஸ்தாக்களிடமே கொடுத்துவிடுவார்கள். ஆக மேக்கர்-செக்கர் இருவருமே ஒருவரேதான்! இதன் விளைவு? குமாஸ்தா ஏதாவது தவறு இழைத்திருக்கும் பட்சத்தில் அது உடனே கண்டுபிடிக்கக் கூடிய வாய்ப்பு இல்லாமல் போனது.

அன்றைய அலுவல்கள் அனைத்தும் முடிந்து இறுதி அறிக்கைகள் (Day end reports) கிடைத்தபிறகே அதிகாரிகளால் அன்றைய பரிவர்த்தனைகளை சரிபார்க்கும் நிலை இருந்தது! பல வருடங்களுக்குப் பிறகே குமாஸ்தாக்கள் பதிவு செய்யும் பரிவர்த்தனைகளை வேறொரு இடைக்கால கோப்பில்/அட்டவணையில் (file/table) பதிவு செய்து அதை அதிகாரிகள் தங்களுடைய கணினியில் பார்வையிட்டு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒப்புதல் அளிக்கும் முறை வந்தது.

இத்துடன் இன்னும் பல சிக்கல்கள் இருந்தன....

தொடரும்...

21 கருத்துகள்:

  1. <--- கோடி கணக்குல கொட்டியும் இதான் நிலமை.' ---->

    :( :( :(

    பதிலளிநீக்கு
  2. <==
    இன்னமும் version change பண்றப்ப run time error வருது.==>

    விடயம் ரொம்ப எளிது. 2 பேருக்குமே(வங்கியாளர்,கணிப்பொறியாளர்) அடுத்தவரால் எதைசெய்ய முடியும்/வேண்டும் என்பது தெரியாது.பரஸ்பர புரிந்துகொள்ளுதலில் உள்ள பிரச்னையே இதற்க்குக் காரணம்.நான் 7 வருடஙகள் உற்பத்தித்துறை சார்ந்த நிறுவனங்களில் மேனுவலாக அதுவரை செய்தவற்றை கண்ணிமயமாக்குதலில் ஈடுபட்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  3. உண்மை - புரிதல் கம்மி - என்ன வேண்டும் வங்கியாளருக்கு என்பது கணிணியாளருக்குத் தெரியாது. என்ன கிடைக்கும் கணிணியில் என்பது வங்கியாளருக்குத் தெரியாது. இதுதான் பிரச்னையே

    பதிலளிநீக்கு
  4. //பரஸ்பர புரிந்துகொள்ளுதலில் உள்ள பிரச்னையே இதற்க்குக் காரணம்.//
    மற்றுமொரு விஷயமும் உண்டு.....

    அது கணணி வல்லுனர்களின் சோம்பல்..... இத்ற்கு முன் அவர்கள் வைத்திருக்கும் மென்பொருளை நம் தலையில் கட்ட முயல்வது....

    வங்கித்துறையில் தனியார் வங்கிகளுக்கும் அரசு வங்கிகளுக்கும் செயல்பாட்டில் எவ்வளவு வித்தியாசம் உண்டு என்று தெரியாது, ஆனால் ஒரு தனியார் மருத்துவமனையின் தேவைகளும் அரசு மருத்துவமனையின் தேவைககளும் பெருமலவில் மாறுபட்டவை....

    Many a projects in Government Setup has been failed because the Software concerns had cheated the not so tech savvy government officials and given the same product which they had already designed for a private firm.

    மென்பொருள் நிறுவனங்கள் செய்யும் மோசடிக்கு அளவே இல்லை

    பதிலளிநீக்கு
  5. வாங்க சிவா,

    விடயம் ரொம்ப எளிது. 2 பேருக்குமே(வங்கியாளர்,கணிப்பொறியாளர்) அடுத்தவரால் எதைசெய்ய முடியும்/வேண்டும் என்பது தெரியாது.பரஸ்பர புரிந்துகொள்ளுதலில் உள்ள பிரச்னையே இதற்க்குக் காரணம்.//

    இது ஓரளவுக்கு உண்மைதான். அதாவது வங்கியாளருக்கு மென்பொருளில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. ஆனால் இன்று முன்னனியில் இருக்கும் பல மென்பொருள் நிறுவனங்களிலும் வங்கித்துறையில் அனுபவம் வாய்ந்த பல ஆலோசகர்கள் உள்ளனர். மென்பொருளை வடிவமைக்கும் கட்டத்தில் இவர்களை கணினியாளர்கள் சரிவர பயன்படுத்துவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

    பதிலளிநீக்கு
  6. வாங்க டாக்டர் ப்ருனோ,

    இத்ற்கு முன் அவர்கள் வைத்திருக்கும் மென்பொருளை நம் தலையில் கட்ட முயல்வது....//

    இதுவும் சகஜம்தான். ஆனால் ஒன்று. எந்த ஒரு மென்பொருள் நிறுவனமுமே ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் புதிதாக ஒரு மென்பொருளை வடிவமைத்துக்கொண்டிருக்க முடியாது. வங்கித்துறையில் எடுத்துக்கொண்டால். எல்லா வங்கிகளுக்கும் பொதுவாக ஒரு மென்பொருளை வடிவமைத்து அதை ஒவ்வொரு வாடிக்கையாளருடைய தேவைக்கேற்ப மாற்றியமைத்து (customise) செய்து வழங்குவதுதான் வழக்கம். ஆனால் அந்த customisation எந்த அளவுக்கு சாத்தியம், சாத்தியமில்லை என்பதை பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் வங்கியாளர்களுக்கு விளக்குவதில்லை. மென்பொருளை விற்க முயலும் நேரத்தில் 'நீங்க என்ன சொன்னாலும் செஞ்சிரலாம் சார்' என்பார்கள். இவர்கள் மார்க்கெட்டிங் இலாக்காவை சார்ந்தவர்கள். வாய்ச்சாலகம் நிறைந்தவர்கள். விண்ணையும் உங்கள் காலடியில் வைக்கிறோம் என்கிற ரகம். வங்கி கிளையொன்றில் பணியாற்றி பல வருடங்கள் ஆன உயர் அதிகாரிகள் பலரும் இவர்களுடைய வார்த்தை ஜாலத்தில் மயங்கி ஒப்பந்தம் செய்துக்கொள்வார்கள். அடுத்து வருவது கணினியாளர்கள். அவர்களுக்கு எப்படியாவது அவர்களுடைய வேலைப்பளுவை குறைக்க வேண்டும். ஆகவே முடிந்த அளவுக்கு customisationஐ தவிர்க்கவே பார்ப்பார்கள். இவர்களை எதிர்கொள்வது மென்பொருளை அனுதினமும் பயன்படுத்தும் அடிப்படை ஊழியர்கள் மற்றும் இடைநிலை, கடைநிலை அதிகாரிகள். இவர்களுக்கு உயர் அதிகாரிகள் தங்களை கலந்துக்கொள்ளாமல் இந்த மென்பொருளை தங்கள் தலையில் கட்டிவிட்டார்களே என்கிற ஆதங்கம். ஆகவே இவர்கள் இருவருமே ஒருவரையொருவர் புரிந்துக்கொள்வதை தவிர்க்கவே முனைவார்கள். இதுதான் இன்றுவரை நடந்துவரும் போராட்டம்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க சீனா,

    உங்க பதிலும் சிவா அவர்களின் பதிலும் ஒன்றுதான்.

    இது முழுவதும் உண்மையில்லை என்பதும் உங்களுக்கு தெரியும். கணினியைப் பற்றி தெரிந்த பல வங்கியாளர்கள் உள்ளனர். ஆனால் வங்கித்துறையைப் பற்றி அதே அளவு விவரம் உள்ள கணினியாளர்கள் உள்ளனரா என்பது கேள்விக்குறிதான்.

    off the shelf மென்பொருளை வாங்கி customise செய்வதில் உள்ள சிக்கல்களை தவிர்க்க எங்களுடைய வங்கியும் ஒரு மென்பொருள் நிறுவனமும் இணைந்து ஒரு CBS தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். அதிலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. நான் டாக்டர் ப்ரூனோவுக்கு எழுதியுள்ள பதிலில் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள்...

    பதிலளிநீக்கு
  8. ப்ருனோ,
    <=அது கணணி வல்லுனர்களின் சோம்பல்..... >
    ஹா ஹா ஹா
    <--
    இத்ற்கு முன் அவர்கள் வைத்திருக்கும் மென்பொருளை நம் தலையில் கட்ட முயல்வது.... -->
    இதற்க்கு டிபிஆரின் பதில் போதுமானது.

    நான் இந்த மாதிரி சமயங்களில் அடிக்கடி சொன்னது.ரயில் முன்பதிவு,வங்கி போன்ற பெரிய அளவிளான பரிவர்த்தனைகளுக்கு மட்டும் கணிணி உபயோக்ப்படுத்த வேண்டும்.ஏனெனில் அவர்களுடைய வேலைகள் ஏற்க்கனவே பல வருடங்களாக ஒழுங்குமுறைப்படி பின்பற்றப்படுபவை.மேலும்,அந்த கணிணிமயமாவதற்க்கான செலவைத்தாங்குமளவுக்கு பொருளாதார பலமுள்ளவை.
    இப்போதும் என் கருத்தில் மாற்றமில்லை.

    என்னிடம் ஒரு விற்ப்பனைக் கணக்காளர் கேட்டது "ஒரு பட்டனை அமுக்கினால் அப்படியே பில் வெளியே வர வேண்டும்".இந்த அளவுக்கு பண்ணுவதற்க்கு (ஆடோமேட்ஷன்) எவ்வளவு செலவழிக்க வெண்டும்? நம் நாட்டில்தான் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஏராளமான ஆட்கள் இருப்பதால் கணிணி மற்றும் மென்பொருள் செலவு அதிகமாகத்தெரிகிறது.
    <==
    Many a projects in Government Setup has been failed because the Software concerns had cheated the not so tech savvy government officials
    =>
    பின்ன மென்பொருள் வாங்குவதற்க்கு லஞ்சம் வாங்கினால் மென்பொருள் எப்படி சரியா வேலை செய்யும்?

    ஒரு பிரிட்ஜ்,டிவி வாங்குவதற்க்கு எவ்வளவு மெனெக்கெடுகிறோம்.
    ஒரு 4 கடையாவது ஏறி விலை விசாரித்து வாங்குகிறோமா இல்லையா?
    அதையே ஏன் கணிணி மயமாக்கலில் நாம் பின்பற்றவில்லை? அந்த அளவுக்கு நம்மிடம் நிபுணத்துவம் இல்லையெனில் அதற்கென உளள நிபுணர்களை பணிக்கு அமர்த்திக்கொள்ளலாம்.

    நான் வேலை பார்த்த நிறுவனம்(சுமார் 3500 தொழிளார்கள்) டிசிஎஸ்-ஐ மென்பொருள் தயாரிக்க அமர்த்தியது, ஒரு வருடதிற்க்குள் வேலையை முடித்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன். நிறுவனப் பணியாளர்களின் ஈடுபாடின்மையால் அங்கு வந்து தயாரித்த மென்பொருளை 2 வருடமாகியும்
    அமுலாக்கம் செய்ய இயலவில்லை.



    <==
    மென்பொருள் நிறுவனங்கள் செய்யும் மோசடிக்கு அளவே இல்லை
    ==>
    இதேதான் மருத்துவர்கள்/மருத்துவமனைக்களைப்பற்றிய பொதுமக்களின் அபிப்ராயமும் =))).

    பதிலளிநீக்கு
  9. <==
    கணினியைப் பற்றி தெரிந்த பல வங்கியாளர்கள் உள்ளனர். ==>
    உஙகளை மாதிரி வங்கித்துறையில் உள்ளவர்களுக்கு எந்த அளவு கணிணி/மென்பொருள் பரிசயம் இருக்கிறதோ அதேபோல்தான் மற்றவர்களூக்கும் இருக்கும்.அவர்கள்தான் மென்பொருள்துறைக்கு வருகிறார்கள்(என்னுடன் வேலை பார்த்தவர் வங்கித்துறையில் சுமார் 10 வருட அனுபவம்)
    உபயோகிப்பாளர்க்கு என்ன வேண்டும் என்று அந்த உபயோகிப்பாளர்தான் தெளிவாகச் சொல்ல முடியும்.
    அதற்க்கான நிபுணத்துவம் இல்லையெனில்,(என்னை மாதிரி) நிபுணர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளவெண்டியதுதான்[சந்தடி சாக்குல ஒரு வேலைக்கு அப்படியே அப்ளீகேஷன் போட்டச்சு!].
    எந்த ஒரு மென்பொருளை வாங்குவதற்க்கு முன்பும் அதை சோதித்து(டெஸ்ட்) பார்க்க வேண்டும் தான் கேட்டுக்கொண்டபடி இருக்கிறதா என்று.இதற்க்கு இப்போவெல்லம் தனியாக நிறுவனங்களே உள்ளன. அதற்க்கும் பணம் செலவாகும்.
    நமக்கு என்ன வேண்டும் என்றே தெளிவாகச்சொல்ல முடியாதபோது எப்படி சோதிப்பதாம்.
    உற்பத்தி நிறுவனத்தில் ஒரு விற்பனை அதிகாரி சொன்ன மாதிரி "ஏனுங்க,அவஙக என்ன மாதிரி மென்பொருள் வேன்டும் எங்களிடம் கேட்கிறார்கள். அவர்களே எதாவது ஒன்றை செய்ய வேண்டியதுதானே...இவ்வளவு பெரிய மென்பொருள் நிறுவனம். அவர்களூக்குத் தெரியாதா?"
    டிசிஎஸ்,இன்ஃபோசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் ஓவ்வொரு கட்டத்திலும்
    (உபயோகிப்பாளருக்கு என்ன வேண்டும் என்பதில் ஆரம்பித்து அதை அமுலாக்கம் செய்யும்வரை) உபயோகிப்பாளரிடம் அவர்கள் கேட்டபடி மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது/வேலை செய்கிறது என்றூ சான்றொப்பம் பெற்றுக்கொள்வார்கள்.

    என் விடயத்தில் என் கிளயண்ட் உபயோகப்படுத்தும் மென்பொருளில் புதிய வசதிகள் தேவைப்பட்டது.மென்பொருள் அளித்த நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி வந்தார்.அவர் விற்பனைப்ப்பிரந்திநிதியாக பொருளை விற்பதிலேயே குறியாக இருந்தார். நான் கேட்ட தொழில் நுட்பரீதியான கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.தான் நிறுவனத்தில் கேட்டு சொல்வதாகப் போனவர் திரும்ப வரவே இல்லை. இந்த மாதிரி கிளயண்டுக்கு தேவையானற்றை அறிந்து பெறுவதற்க்குதான் என் நிறுவனத்துக்குப் பணம்(ஆலோசனைக்கட்டணம்), எனக்குச் சம்பளம்.

    பதிலளிநீக்கு
  10. <=
    எங்களுடைய வங்கியும் ஒரு மென்பொருள் நிறுவனமும் இணைந்து ஒரு CBS தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம்.
    =>
    இதுதான் நடைமுறையில் எளிதானதும் சாத்தியாமானதுமான செயல்.
    எங்களுடைய கிளையண்டுக்கு(வங்கி) தேவையான் மென்பொருளை நாங்கள் செய்துகொடுக்க வேண்டும்,அந்த மென்பொருளின் சொந்தக்காரர் என்ற உரிமையில் பாதி அவர்களுக்கு என்ற நிபந்தனையுடன்.அந்த மென்பொருள் வெற்றிகாரமாக் இயங்க ஆரம்பித்தவுடன், அதனை அந்தப்பகுதியில் உள்ள மற்ற வங்கிகளுக்கும் விற்க்கலாம்.அந்த மென்பொருளில் ஏதாவது பிரச்னை ஏற்ப்பட்டால் அதை சரி செய்ய வேண்டியது எங்கள் பொறுப்பு.இல்லாவிடில் முழு உரிமையையும் அவர்களே எடுத்துக்கொண்டிருக்கலாம்.
    அமெரிக்க,ஆஸ்த்திரேலியா போன்ற நாட்டு நிறுவனங்களை விட்டு விட்டு கிளையண்ட் ஏன் இந்திய நிறுவனத்தை இதற்க்கு அமர்த்த வெண்டும்?(கிளையண்ட் ஏற்கனவே உபயோகப்படுத்தும் மென்பொருள் இந்திய நிறுவனத்தினுடையது இல்லை) எல்லாம் விலைதான். நாம் மற்றவர்களின் விலையில் 10ல் ஒரு பங்கு அல்லது அதற்க்கும் கீழேதான் கேட்போம்.

    பதிலளிநீக்கு
  11. டிபிஆர்,
    எனக்கு சில சந்தேகங்கள்.
    ஃபைனன்சியல் அக்கௌண்டில் எல்லா நிறுவனங்களூக்கும் ஒரே மாதிரியான நடைமுறைதான்.அதாவது,ஜெனரல் லெட்ஜெர்,சப் லெட்ஜர்,ஜர்னல் புக்,கேஷ் புக்,
    வரவு - செலவு கணக்கு,பேலன்ஸ் ஷீட் மற்றும் இன்ன பிற.

    அதே மாதிரி வங்கிகளுக்கும் ஒரே மாதிரி நடைமுறைதானா? அல்லது வேறா?
    ஒரே மாதிரிதான் எனில், ஏன் இந்திய ரிசர்வ் வங்கியோ அல்லது இந்திய வங்கிகளின் கூட்டமைப்போ ஒரே பொதுவான மென்பொருளை உருவாக்கி(மென்பொருள் நிறுவனங்களின் உதவியுடந்தான்), நன்றாக சோதித்து எல்லா வங்கிகளும் செயல்படுத்துமாறு செய்யலாமே?

    பதிலளிநீக்கு
  12. I sent 3 more comments .I dont know what happend to that. I guess, it is lost in transit =)

    பதிலளிநீக்கு
  13. வாங்க சிவா,

    மூனு நாளா ஊர்ல இல்லை. அதான் ஒங்க பின்னூட்டங்கள பப்ளிஸ் பண்ண லேட்டாயிருச்சி.

    ஒங்க அப்சர்வேஷன் எல்லாம நல்லா, புத்திசாலித்தனமா!! இருந்தது.

    மூனு நாள் ஆஃபீஸ்ல இல்லாததால வேலை கொஞ்சம் ஜாஸ்தி!

    அதனால எல்லாத்துக்குமா சேர்த்து அடுத்த எப்பிசோட்ல பதில் சொல்றேன்.

    பதிலளிநீக்கு
  14. i wonder how i missed such a wonderful and useful blog, so far.
    in today's The Hindu there is an article about sub prime lending. can you explain that?
    and your post on 'maranam' touched me most as i too bear the pain.

    பதிலளிநீக்கு
  15. வாங்க செல்வன்,

    about sub prime lending. can you explain that?//

    முயற்சிக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  16. //பின்ன மென்பொருள் வாங்குவதற்க்கு லஞ்சம் வாங்கினால் மென்பொருள் எப்படி சரியா வேலை செய்யும்?//

    ஆதாரமில்லாமல் குற்றம் சாட்ட வேண்டாம்

    அப்படி அரசிடம் லஞ்சம் அளிக்கும் நிறுவனம் எதுவென்று உங்களால் கூற முடியுமா

    வலைப்பதிவு சுதந்திரத்தை இது போன்ற ஆதாரமில்லாத பொய்களை பரப்ப பயன்படுத்துவது அருவருப்பானது

    பதிலளிநீக்கு
  17. //. நிறுவனப் பணியாளர்களின் ஈடுபாடின்மையால் அங்கு வந்து தயாரித்த மென்பொருளை 2 வருடமாகியும்
    அமுலாக்கம் செய்ய இயலவில்லை. //

    அதற்கு காரணம் அந்த மென்பொருள் அந்த பணியாளர்களின் தேவைக்கு ஏற்றப்படி இல்லாமல் அவர்கள் முன்னர் (வேறு நிறுவனத்திற்கு) தயாரித்த மென்பொருளின் அடிப்படையில் இருப்பது காரணமா

    பதிலளிநீக்கு
  18. //இதேதான் மருத்துவர்கள்/மருத்துவமனைக்களைப்பற்றிய பொதுமக்களின் அபிப்ராயமும்//

    ஆதாரம் இருந்தால் கூறவும்

    பதிலளிநீக்கு
  19. //டிசிஎஸ்,இன்ஃபோசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் ஓவ்வொரு கட்டத்திலும்
    (உபயோகிப்பாளருக்கு என்ன வேண்டும் என்பதில் ஆரம்பித்து அதை அமுலாக்கம் செய்யும்வரை) உபயோகிப்பாளரிடம் அவர்கள் கேட்டபடி மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது/வேலை செய்கிறது என்றூ சான்றொப்பம் பெற்றுக்கொள்வார்கள்.
    //

    இதில் நடைபெறும் மோசடி தான் பெரிது.

    முதல் பக்கத்திலும் இறுதி பக்கத்திலும் கையொப்பம் வாங்கி விட்டு நடுவில் அவர்களுக்கு ஏற்றப்படி நிரப்பி கொள்வார்கள்

    பதிலளிநீக்கு
  20. //அதே மாதிரி வங்கிகளுக்கும் ஒரே மாதிரி நடைமுறைதானா? அல்லது வேறா?
    ஒரே மாதிரிதான் எனில், ஏன் இந்திய ரிசர்வ் வங்கியோ அல்லது இந்திய வங்கிகளின் கூட்டமைப்போ ஒரே பொதுவான மென்பொருளை உருவாக்கி(மென்பொருள் நிறுவனங்களின் உதவியுடந்தான்), நன்றாக சோதித்து எல்லா வங்கிகளும் செயல்படுத்துமாறு செய்யலாமே?//

    செய்யலாம்

    ஏன் அப்படி செய்ய வில்லை என்பதற்கு விடை மென்பொருள் நிறுவனங்களிடமே கேட்டுக்கொள்ளலாமா ??

    இதைத்தானே நான் கூறினேன் :) :) :)

    பதிலளிநீக்கு
  21. புருனோ,

    உங்க கமெண்ட்ஸ்ச இன்னைக்கி காலைலதான் பார்த்தேன். நான் ரொம்ப நாளைக்கி முன்னால எழுதிய பதிவாச்சே இது! இதுல எப்ப நீங்க கமெண்ட்ஸ் போட்டீங்க? நேத்தா?

    பதிலளிநீக்கு