18 அக்டோபர் 2007

கார்ப்பரேட் பாட்காஸ்ட்டிங்

கடந்த நான்கு மாதங்களாக நானும் என்னுடைய வங்கி கணினி இலாக்காவைச் சார்ந்த அனைவரும் அயராது உழைத்ததன் பலனை நேற்று அனுபவிக்க முடிந்தது.

என்னுடைய வங்கி சென்னையைச் சார்ந்த மென்பொருள் நிறுவனத்துடன் இணைந்து கடந்த ஓராண்டு காலமாக எங்களுடைய மொத்த கிளைகளையும் முழுவதுமாக கணினி மயமாக்க தேவையான மென்பொருளை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளோம்.

அது தற்போது முடியும் தருவாயில் உள்ளது. அதை எங்களுடைய அனைத்து கிளைகளும் பயன்படுத்தும் வகையில் அவற்றை ஒருங்கிணைக்க (network) முடிவு செய்து அதற்கான ஆயத்த வேலைகளில் என்னுடைய இலாக்கா அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அதை நனவாக்கும் நோக்கில் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ இன்ஃபோடெக்கை எங்களுடைய அனைத்து கிளைகளையும் ஒருங்கிணைக்கும் நிறுவனமாக (networking and system integration) நியமித்து அவர்களுடனான ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையிலுள்ள GRT Grand Convention Centreல் நடைபெற்றது. எங்களுடைய வங்கி தலைவர் திரு வெங்கடராமன் அவர்களும் விப்ரோ இந்திய செயல்பாடுகளின் தலைவர் திரு கே.எஸ். விஸ்வநாதன் அவர்களும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

சென்னையிலுள்ள அனைத்து பத்திரிகை மற்றும் செய்தி இணணயதளங்களையும் சார்ந்த நிரூபர்கள் எங்களுடைய அழைப்பை ஏற்று வந்திருந்தனர். இன்று சுமார் பத்து பத்திரிகை/இணையதளங்களில் விழா தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.

விழாவை ஒருங்கிணைத்து நடத்திய என்னுடைய அருமை நண்பர் Primepoint சீனிவாசன் இந்திய வங்கித்துறையில் முதல் முறையாக இரு தலைவர்கள் கூறியவற்றை பாட்காஸ்ட் வடிவத்தில் வெளியிட்டுள்ளார்.

அதை இங்கே காணலாம்.

இன்னும் நான்கு மாதங்களில் எங்களுடைய அனைத்து கிளைகளும் சென்னையிலுள்ள மத்திய வழங்கியுடன் இணணக்கப்பட்டவுடன் மத்திய மென்பொருள் (centralised solution) செயல்படுத்தப்படும். இது எங்களுடைய கணினி இலாக்கா ஒரு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது என்பதும் இந்திய வங்கித் துறையில் ஒரு சாதனை.

*******

9 கருத்துகள்:

 1. சந்தோஷங்க!
  ஆனா நாலுமாதமா கண்டுக்காமெ
  விட்டுட்டீங்களே!
  சீக்கிரம் வாங்க சார்

  பதிலளிநீக்கு
 2. I too read recently abt ur bank tied up with a one of the top indian s/w co.Thanks to know abt PodCasting.

  பதிலளிநீக்கு
 3. வாங்க ஜி!

  ஆனா நாலுமாதமா கண்டுக்காமெ
  விட்டுட்டீங்களே!//

  அடடா அப்படியா?

  சீக்கிரம் வாங்க சார்//

  வந்துக்கிட்டே இருக்கேன்... வால் மட்டுந்தான் இன்னும் நுழையணும். அதுவும் நுழைஞ்சிட்டா நான் கொஞ்ச காலத்துக்கு ஃப்ரீ:-)

  பதிலளிநீக்கு
 4. வாங்க சிவா,

  I too read recently abt ur bank tied up with a one of the top indian s/w co.//

  ஆமாங்க... அதான் நம்ப வேலைய ஜாஸ்தியாக்கிரிச்சி... இன்னும் ரெண்டு மூனு வாரம்...

  பதிலளிநீக்கு
 5. Saarval,

  baleh, rombha naal kazhichu vandhurukinga...niraba sandhosham
  oru siru kurai (thappah ninaichukadhinga)

  "சென்னையிலுள்ள மத்திய வழங்கியுடன் இணணக்கப்பட்டவுடன் மத்திய மென்பொருள் (centralised solution) செயல்படுத்தப்படும்."

  Idhula madhhiya vangiyudan இணணக்கப்பட்டவுடன் thaneh varum...!

  பதிலளிநீக்கு
 6. வாங்க ஆணி,

  Idhula madhhiya vangiyudan இணணக்கப்பட்டவுடன் thaneh varum...!//

  இதுல 'வழங்கி' ன்னு நான் சொல்ல வந்தது 'Server' என்கிற வார்த்தைக்கு தமிழாக்கம்!! மத்திய வழங்கி என்றால் Central Server.

  பதிலளிநீக்கு
 7. I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள் ஜோசப் சார். மீண்டும் தங்களை வலையுலகில" கண்டது மகிழ்ச்சி. சீக்கிரம் நிறைய அனுபவங்க்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

  பதிலளிநீக்கு
 9. நன்றி வினையூக்கி.

  கடந்த மூன்றாண்டுகளில் கணினி இலாக்காவில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. அவற்றை நிச்சயம் பகிர்ந்துக்கொள்வேன்.

  மிக விரைவில்...

  பதிலளிநீக்கு