01 செப்டம்பர் 2007

பிரிவோம்... சந்திப்போம்

பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை இல்லை.

சிலருக்கு அலுவலகத்தில் பிரச்சினை என்றால் சிலருக்கு வீட்டிலேயே பிரச்சினை.

அலுவலகத்தில் பிரச்சினை என்றால் எப்போது அலுவலகம் நேரம் முடியும் என்று காத்திருப்பார்கள். ஆனால் வீட்டிலேயே பிரச்சினை என்றால் அலுவலகமே கதி என்று கிடப்பார்கள். காலை ஏழு மணிக்கு அலுவலகத்திற்குள் நுழைந்துவிட்டால் அலுவலகத்தின் கதவுகள் சாத்தப்படும் வரை அமர்ந்திருப்பார்கள்.

முன்னவர்கள் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து அல்லது ஆறு மணி வரை அமர்ந்து செய்யும் அதே அளவு பணியைக் கூட பின்னவர்கள் செய்வதில்லை என்பது மேலதிகாரிகளுக்கு தெரிவதில்லை. 'Look at him. He is more dedicated to his work. You should try to emulate him.' என்பார்கள். Quality is more important than the quantity என்பது பல உயர் அதிகாரிகளுக்கு புரிவதில்லை.

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்பது போலத்தான் மேலாண்மையும். அனுபவத்தினால் வருவது இந்த கலை. ஆளைப் பார்த்து எடை போடாமல் அவனுடைய வேலையைப் பார்த்து எடை போடு என்பது நம்முடைய அலுவலக உயர் அதிகாரிகளுக்கு புரிவதில்லை.

வீட்டுப் பிரச்சினை எப்படி அலுவலகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை விடவும் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்துவது இந்த அலுவலகப் பிரச்சினை என்றால் மிகையாகாது.

அதுவும் Rat Race என்பார்களே அதுபோன்ற பிரச்சினைகள் இந்த அதிவேக உலகத்தில் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்!

ஆனால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு அல்லது வடிகால் நிச்சயம் இருக்கும்.

சினிமா, இசை, நண்பர்களுடன் அரட்டை, ஓவியம், பாட்டு, விளையாட்டு போன்றவைகளைப் போலத்தான் எழுத்தும்...

அலுவலகத்தில் சோர்வு ஏற்படும் நேரத்தில் எல்லாம் எனக்கு உற்சாகத்தை திருப்பித் தரும் மருந்தாக இருந்து வந்தது வலைப்பூக்களில் எழுதுவது.

விளையாட்டாக எழுத துவங்கி சுமார் இரண்டரை ஆண்டுகள்... வாரம் ஒருமுறை, இருமுறை என துவங்கியதுதான் சுமார் இரண்டாண்டு காலமாக தினமும் எழுதுவது என ஒருவிதத்தில் obsession என்பார்களே அதுபோன்ற நிலை ஏற்பட்டது.

தமிழ்மணத்தை ஒருமுறையாவது பார்க்காவிட்டால் தலையே வெடித்துவிடும் என்பது போன்ற நிலை...

ஒருகாலத்தில் என்னுடைய அலுவலக stressஐ (மன அழுத்தம் என்பது சற்று மிகையான சொல் என்று கருதுகிறேன்) குறைக்க முடிந்த வடிகாலே சமீபத்தில் சில பிரச்சினைகளுக்கு source (மூல காரணம் எனலாமா?) ஆகிப்போனதால் எழுத்துக்கு சற்று விடுப்பு கொடுக்க வேண்டிய சூழல்.... நிர்பந்தம் என்று கூட சொல்லலாம்.

அலுவலகத்தில் வேலைப்பளு என்கிற போர்வையில் இனியும் ஒளிந்துக் கொண்டிருக்க முடியாமல்தான் போட்டு உடைத்திருக்கிறேன்..

காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் என்கிற வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன..

பிரிகிறேன்... மீண்டும் சந்திக்க முடியும் என்கிற நினைவுடன்...

என் மனதுக்கு மிகவும் பிடித்த 'நாளை நமதே' என்கிற தொடரையும் தொடர முடியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.....

***********

15 கருத்துகள்:

  1. //அதுவும் Rate Race என்பார்களே//

    டி பி ஆர் அய்யா, அது Rat Race-தானே ?

    பதிலளிநீக்கு
  2. என்னங்க இது? நீங்களே இப்படிச் சொன்னா எப்படி?

    எதா இருந்தாலும் அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது இல்லையா?

    ஒருவேளை இல்லையோ(-:

    பதிலளிநீக்கு
  3. உங்களின் இந்த முடிவு சொல்லும் செய்திகள் அதிகம். நாம் இருவரும் எங்கும் பின்னூட்டங்களில்கூட சந்தித்துக்கொண்டதில்லை. உங்கள் நண்பர் ஒருவரின் மரணத்தால் எழுந்த மனவலியைப் பதிவு செய்திருந்த இடுகையில் மட்டும் நான் ஒரு பின்னூட்டமிட்டதாக நினைவு. ஆனாலும் எனக்கு நேரம் வாய்த்த பொழுதுகள் சிலதில் உங்கள் இடுகைகளைப் படித்ததுண்டு. உங்கள் வங்கி அலுவல், வாழ்வனுபவச் செய்திகளும், விவரிப்புகளும் என்போன்ற இளம்தலைமுறைக்குப் பயனுடையவையாக இருந்தன அதிலிருந்தும் கற்றுக்கொள்ளவிரும்பிய சமயங்களில். அதேசமயம் உங்களின் சமூகம்சார்ந்த பார்வைகளில், முடிவுகளில் நான் நிறைய முரண்பாடுடைய கருத்துக்களையும் கொண்டிருப்பவள். என்றபோதும் உங்கள் இருப்பில் மகிழ்ந்தவள்.

    மீண்டும் வரத்தோன்றுகிறபோது வாருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அனைத்திலிருந்தும் மீண்டு சீக்கிரம் திரும்ப வாருங்கள்

    பதிலளிநீக்கு
  5. விரைவில் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் ..

    அன்புடன்
    வினையூக்கி
    www.vinaiooki.com

    பதிலளிநீக்கு
  6. Dear TBR Sir,

    we will be missing you.
    Take care.

    பதிலளிநீக்கு
  7. ம். இனி தமிழ்மணத்தை மறந்துவிட்டு, வேறு வேலை பார்க்க வேண்டியதுதான்...முதலில் செல்வராஜ். தற்போது நீங்கள்...

    என்னடா, ஒரு மாதமாய் ஆளையே காணவில்லையே என்று நினைத்திருந்தேன். நெருக்கும் பணிச்சுமையின் காரணமாய், தொடர்பு கொள்ளமுடியாமல் இருந்தேன். இன்று ஏதாவது பதிவிருந்தால் பார்க்கலாம், இல்லையென்றால் தொலபேசலாம் என்றெண்ணியிருந்தேன்...இப்படி, பிரிவை அறிவித்திவிட்டடீர்கள்...

    உங்கள் அனுபவ எழுத்தால், மிகப்பல பயன் பெற்றுள்ளேன். அவ்வெழுத்துக்கள் மீண்டும் எப்போழுது வரும் என காத்திருப்பேன்.

    நம் தொடர்பு விலகாது என்ற நம்பிக்கையில் நான் துக்கத்தைக் குறைத்துக் கொள்வேன். :-(

    பதிலளிநீக்கு
  8. என்னங்க இது? நல்லா எழுதிக்கிட்டு இருக்கிற நீங்க திடீரென்று நிறுத்துவது ஏன்? குறைவாகவாவது எழுத முடியாதா?

    பதிலளிநீக்கு
  9. நண்பர்களே,

    என்னுடைய இந்த முடிவு ஒரு தற்காலிகமானதுதான்.

    என்னுடைய எழுத்து என்னுடைய வங்கியிலுள்ள சிலருக்கு என்னை குறை கூற வாய்ப்பளித்துவிட்டது. என்னுடைய அலுவலக நேரம் இப்படித்தான் செலவழிக்கப்படுகிறது என்பதை கேலியுடன் சொல்ல வாய்ப்பளித்துவிட்டது.

    அது கேலியுடன் சொல்லப்பட்டது என்றாலும் அதன் பின்னே இருந்த மறைமுக குற்றச்சாட்டு என்னை இந்த முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளது.

    மீண்டும் வருவேன்... விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும்....

    என்னுடைய ஆதங்கத்தில் பங்குபெற்ற அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. //சந்திப்போம் //

    உங்கள் மீது தனி மதிப்பு உண்டு.
    மீண்டும் சந்திப்போம் ஐயா !

    பதிலளிநீக்கு
  11. விரைவில் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்,


    Nadapavai yaavum nalladhukeynu ninaipoam.

    பதிலளிநீக்கு
  12. Dear TBR

    I have been a regular fan of your writings. Was wondering why there has been no posting for a few weeks.

    I understand your pressures on time and work.

    Hope to see your postings on a weekly basis if not daily.

    Take care.

    Murali

    பதிலளிநீக்கு
  13. என்னுடைய இயலாமையை புரிந்துக்கொண்டு ஆதரவாய் பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

    விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் எழுதுவேன்.

    பதிலளிநீக்கு