04 செப்டம்பர் 2007

போலி சண்டை போதுங்க (நகைச்சுவை)

இது ஒரு நகைச்சுவை கலந்த கற்பனை உரையாடல்தான். ஆனால் இதன் மூலம் சொல்ல வருவது நிஜமான மனத்தாங்கலின் வெளிப்பாடு.

இதை இருதரப்பினரும் உணர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்..

அன்புடன்,
ஜோசஃப்


ஏ.வி.எம் ஸ்டுடியோவில் வடிவேலு தன்னுடைய அறையில் தனியாக அமர்ந்து கையில் இருந்த பேப்பரிலிருந்து அன்றைய காட்சிக்கான வசனத்தை உரக்க ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அறைக் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழையும் பார்த்திபன் உடம்பை வளைத்து, கை கால்களை ஆட்டியவாறு எதிரிலிருந்த முகக் கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிம்பத்துடன் பேசிக் கொண்டிருக்கும் வடிவேலுவைப் பார்க்கிறார்.

பார்: டேய்...

வடி: (திடுக்கிட்டு திரும்புகிறார். பார்த்திபனைப் பார்த்ததும் தனக்குள்) இவன் எங்க இங்க... இன்னைக்கி இவன் கூடவா கால்ஷீட்டு... கிளிஞ்சது போ... அந்த அஜிஸ்டெண்ட் டைரடக்கர் பய சொல்லவே இல்ல?

பார்: டேய் என்ன மொனகுற? சத்தமா பேசுன்னு எத்தன தரம் சொல்லியிருக்கேன்... (வடிவேலுக்கு பக்கத்திலிருந்த சோபாவில் அமர்ந்து கையோடு கொண்டு வந்திருந்த லேப்டாப்பை திறந்து 'ஆன்' செய்கிறார்.)

வடி: (ஆச்சரியத்துடன்) ஏய்யா.. நீ கம்ப்யூட்டர் எல்லாம் கூட பாப்பியா?

பார்: டேய்... இது என்ன டிவியா பாக்கறதுக்கு? கம்ப்யூட்டர்றா.... (அவருடைய வசனம் அடங்கியிருந்த கோப்பைத் திறந்து மேலோட்டமாக தனக்குள் ஒருமுறை வாசிக்கிறார். வடிவேலுவின் முகம் பிரகாசமடைகிறது)

வடி: ஏய்யா... இதென்ன புதுசாருக்கு... கம்ப்யூட்டர்ல தமிள்லயும் தெரியுதா? ((திரையை தொட்டுப் பார்க்க கையை நீட்டுகிறார்.)

பார்: டேய்.. தொடாத... தொடாம பாரு... சாரி படி..

வடி: இதுதான் ஒன் டயலாக்கா?

பார்: அதான் பார்த்தாலெ தெரியுதுல்லே... பிறவென்ன கேள்வி..

வடி: அது சரி... ஒனக்கு மட்டும் எப்படியா இந்த ஐடியாவெல்லாம் வருது?

பார்: (எரிச்சலுடன்) ஐடியா என்ன பெரிய ஐடியா, பொடலங்கா... நா இப்பல்லாம் தமிழ்ல ப்ளாகே எழுதறேன்....

வடி: (குழப்பத்துடன்) என்னது ப்ளாக்கா? அப்படின்னா... இந்த கருப்பும்பாங்களே அதா.. அதுல என்னய்யா எளுதறதுக்கு இருக்கு... சும்மாவே கருப்பாருக்கும்... அதுல எளுதுனா படிக்கவா முடியும்?

பார்: (கோபத்துடன்) டேய்.. வாணா... காலங்கார்த்தால அடி வாங்காத... போய் ஒழுங்கா ஒன் டயலாக்க பாரு... அப்புறம் ஷாட்ல வந்து சொதப்பாத... ஷாட் படி எங்கிட்ட நிறைய வாட்டி அடி வாங்கப் போற... அதுக்கும் சேத்து இப்பவே ஒத்திகை பாத்துருவேன்... மரியாதையா போயிரு...

வடி: (குழைந்து) கோச்சிக்காதய்யா.... நீ தான சொல்வே... நான் ஞானசூன்யம்னு... மருதையில சுத்திக்கிட்டு திரிஞ்ச பயதானய்யா... இந்த ப்ளாக்கு ஒய்ட்டுன்னா எனக்கென்ன தெரியப் போவுது... சொல்லுய்யா.... ப்ளாக்குன்னா என்னது?

(பார்த்திபன் உடனே தன்னுடைய ஏர்டெல் டேட்டா அட்டையை உபயோகித்து இணைப்பை ஏற்படுத்தி தன்னுடைய கிறுக்கனின் கிறுக்கல்கள்.ப்ளாக்ஸ்பாட்.காம் வலைப்பூவை திறக்கிறார். வடிவேலுவின் கண்கள் அகல விரிகின்றன. பார்த்திபன் அன்று காலை கிறுக்கிய கவிதை வரிகளை உரக்கப் படிக்கிறார்.)

வடி: இத நீயா எளுதின?

பார்: (திருவிளையாடல் நாகேஷ் பாணியில்) பின்னே... மண்டபத்துல யாராச்சும் எழுதிக் குடுத்ததையா போடறேன்... நான், நான், நாந்தாண்டா எழுதினேன்... இங்க பார், நா இத போட்டு ஒரு மணி நேரம் கூட ஆவலை... எத்தன பேர் படிச்சிட்டு பாராட்டியிருக்காங்க... (தனக்குத் தானே வெவ்வேறு பெயர்களில் பின்னூட்டம் இட்டு பாராட்டியவற்றையெல்லாம் காட்டுகிறார்)

வடி: என்னது நீ எளுதினத ஒரு மணி நேரத்துக்குள்ள இத்தன பேர் படிச்சிட்டு பாராட்டியிருக்கானுவளா? என்னய்யா இது நம்பவே முடியல? நீ இத எளுதறது அவனுங்களுக்கு எப்படிய்யா தெரியுது?

பார்: நா மட்டுமில்லடா... என்னையெ மாதிரி ஆளுங்க எழுதறதையெல்லாம் கலெக்ட் பண்ணி போடறதுக்குன்னே ஒரு சைட் இருக்கு... இரு காட்டறேன். (பார்த்திபன் தன்னுடைய வலைப்பூவிலிருந்த தமிழ்மணம் லிங்க்கை தட்டிவிட அடுத்த சில நொடிகளில் தமிழ்மணம் தளம் விரிகிறது.. முகப்பிலேயே 'போலி பிடிபட்டான்' என்ற தலைப்பில் காரசாரமான பதிவு கண்ணில் படுகிறது. பார்த்திபன் அவசரமாக ஸ்க்ரோல் செய்து தன்னுடைய பதிவை காட்ட முயல்கிறார்.)

வடி: யோவ் நில்லு, நில்லு... இதென்ன... போலி பிடிபட்டான்னு போட்டுருக்கு... அத தொறய்யா படிக்கலாம்....

பார் (எரிச்சலுடன்) டேய்... அந்த கண்றாவியெல்லாம் நமக்கு வேணாம்.... அதெல்லாம் நம்மள மாதிரி, இல்ல, என்னைய மாதிரி டீசெண்டான ஆளுங்க படிக்கறதுக்கு கிடையாது...

வடி: (முறைக்கிறார்) சரிய்யா... நா டீஜெண்ட் இல்லதான்... அதான் கேக்கேன்... அத தொற... படிச்சிட்டுத்தான் மறுவேலை...

பார் டேய்.. மொதல்ல இன்னைய டயலாக்க பார்ப்போம்... அப்புறமா படிக்கலாம்....

வடி (பிடிவாதத்துடன்) யோவ் ட்ராக்க மாத்தாத.... இதென்னா பிச்சாத்து டயலாக்.... நாம என்னைக்கி இவனுங்க எளுதுன டயலாக்க பேசியிருக்கோம்... தன்னால ஸ்பாட்டுல பேசறதுதானய்யா.... என்னமோ போலின்னு எளுதியிருந்துதே அத காட்டு.... என்னதான் போட்டுருக்கான்னு பார்ப்பம்...

பார் (சலிப்புடன்) இந்தா நீயே படி... ஆனா ஒன்னு...

வடி: என்னது?

பார் இதுலருக்கறத படிச்சுட்டு உடனே மறந்துறணும்... ஸ்பாட்டுல வந்து இதுலருக்கறத பேசின... மவனே ஷூட்டிங்குன்னு கூட பாக்காம சொருகிருவேன்...

வடி ஏன்... அப்படி என்ன எளுதியிருக்காய்ங்க... காட்டுய்யா பாப்பம்...

(பார்த்திபன் வேண்டா வெறுப்பாக முகப்பில் பிரதானமாக தெரிந்த பதிவை திறந்து வடிவேலுவிடம் கொடுத்துவிட்டு எழுந்து கண்ணாடியைப் பார்த்தவாறு நிற்க, வடிவேலு உரக்க வாசிக்க துவங்கிவிட்டு வாயை மூடிக்கொள்கிறார். அடுத்த சில நிமிடங்கள் அறையில் நிசப்தம்.)

வடி என்னய்யா இது அக்கிரமமா இருக்கு... இப்படி அசிங்கமா எளுதறாய்ங்க? ச்சை... நாமளே மேல் போலருக்கு? யார்யா இந்த டோண்டு... அந்தாளுக்கு போலின்னா... டூப்பா... எதுக்கு.. ?

பார் டேய்... அது ஒரு பெரிய கதை... தமிழ் சீரியல் மாதிரி எடுக்கலாம்.... ஆனா என்ன வீடே நாறிப் போயிரும்.... அவ்வளவு அசிங்கமா இருக்கும்... ஒரு வாரமா இதே அசிங்கம்தான்.. மொதல்ல அந்த போலி எல்லாத்தையும் நாறடிச்சான்... இப்ப இவங்க அவனெ...

வடி சரிய்யா.. இப்படி அசிங்க, அசிங்கமா எழுதறாங்களே.. இதுக்கெல்லாம் சென்சார்னு ஒன்னு கெடையாதா... நாம சும்மானாச்சும் பேசறதையெல்லாம் சென்சார்ல வெட்டிடறானுங்களேய்யா...

பார் (வியப்புடன்) தோ பார்றா... சமயத்துல நீ கூட புத்திசாலித்தனமாத்தான் பேசற.... ஆனாலும் நீ சொன்னது சரிதான்... இதுக்கும் சென்சார் வரணும்.... அப்பத்தான் இது சரி வரும்... படிச்சவங்க.. பொறுப்பா இருப்பாங்கன்னு பார்த்தா... ஹூம்... விட்டுத்தள்ளு.... நம்ம டயலாக்க பார்ப்பம்...

வடி இதுல போய்த்தான் நீயும் கிறுக்கிக்கிட்டு இருக்கியாக்கும்.... ஒனக்கு தேவையா? நாளைக்கி ஒனக்கே போலின்னு எவனாச்சும் முளைச்சி வந்துறப்போறான்...

பார் (கோபத்துடன்) டேய்... என்ன அப்படியொரு ஐடியா இருக்கா மனசுக்குள்ளே...

வடி: சேச்சே... சும்மா ஒரு வெளையாட்டுக்கு சொன்னேம்பா... சரி... சரி... நீ ஒன் டயலாக்க சொல்லு...

பார் (தன்னுடைய வசன கோப்பிலிருந்து வாசிக்கிறார்) போலியே போலின்னு ஒத்துக்கற வரைக்கும் போலி, போலி இல்லடா!

வடி அடச் சை... இங்கயும் போலிதானா!

பார்: அதான... நம்ம வசனகர்த்தாவும் ப்ளாக் எழுதறவர்தான் போலருக்கு (இருவரும் சிரிக்கின்றனர்)

******

14 கருத்துகள்:

  1. //பார்: நா மட்டுமில்லடா... என்னையெ மாதிரி ஆளுங்க எழுதறதையெல்லாம் கலெக்ட் பண்ணி போடறதுக்குன்னே ஒரு சைட் இருக்கு...//

    ஜோசப் ஐயா,

    கடைசி பஞ்ச் டயலாக் சூப்பர்.

    பார்த்தி ப்ளாக்கில் பேஜ் கவுண்டர் கூட வைத்திருக்கிறார்.
    :))

    பதிலளிநீக்கு
  2. :-)))))

    கடுகு தயாரா இருக்கா? :-)

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா ஹா நல்லாத்தான் இருக்கு.

    ஆனா சென்சாரெல்லாம் வேண்டாம். போலீஸ் மாதிரி நமக்குள்ள சில டெக்கி மக்கள் வெச்சுக்கலாம். யாருக்குப் பிரச்சனைன்னாலும் அவங்க கிட்ட போய்ச் சொல்லலாம். யாரு பிரச்சனை பண்றாங்கன்னு அவங்களே கண்டுபிடிப்பாங்க. பிடிச்சவன் பிடிக்காதவன் பேதம் இல்லாத மாதிரி. அதுதான் சரியான வழி. இப்பதான் போலிய எந்த ஐபில இருந்தாலும் நாட்டுல இருந்தாலும் கண்டுபிடிக்க முடியும்னு ஆயிருச்சுல்ல. அப்புறமென்ன. தமிழ்மணப் போலீஸ் ஸ்டேஷனச் சட்டபூர்வமாத் தெறக்க வேண்டியதுதானே. வாலண்டியர்ஸ் யாராவது?

    பதிலளிநீக்கு
  4. ரெண்டு பழமொழி
    "ஆடின காலும், பாடுகிற வாயும் சும்மா இருக்காது"
    "சொறிய ஆரம்பித்த விரல்களும், எழுத ஆரம்பித்த கையும் சும்மா இருக்காது" என்று.
    இருபத்தி நாலு மணி நேரத்திற்குள்
    மீண்டு(ம்) வந்த ஜோசப் சாரை வருக வருக வென்று வரவேற்கிறேன் :-)

    பதிலளிநீக்கு
  5. படிச்சவன் சூதும் வாதும் பண்ணினா
    போவான் போவான்
    அய்யோன்னு போவான் - பாரதி

    பதிலளிநீக்கு
  6. நாற்பது நாள் ம்வுனம் இதற்குத்தானா?

    பதிலளிநீக்கு
  7. //போலீஸ் மாதிரி நமக்குள்ள சில டெக்கி மக்கள் வெச்சுக்கலாம். யாருக்குப் பிரச்சனைன்னாலும் அவங்க கிட்ட போய்ச் சொல்லலாம். யாரு பிரச்சனை பண்றாங்கன்னு அவங்களே கண்டுபிடிப்பாங்க. //

    Adhu sari ragavan sir, andha டெக்கி மக்கள adhey madhiri thittama irupaanu enna nichayam.....!?

    பதிலளிநீக்கு
  8. மீண்டு(ம்) வந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. குட் பைன்னு ஸொல்லிட்டு போய்டீன்களேன்னு ஒரெ கவலையாப் போய்டுச்சி

    பதிலளிநீக்கு
  10. போலிச் சண்டையைப் பார்த்தா சென்சார் வேணும்ணு தோணுது. ஆனா பின்னாளில் இது வழியில் கிடந்த கோடாரியை வம்பாய் காலில் போட்டுக் கொண்டு கத்துவதைப் போலாகிடும்னு பயமாகுது.

    பதிலளிநீக்கு
  11. நண்பர்களே,

    கருத்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

    இந்த பதிவை எழுதியதுமே காரசாரமாக வசை பாடி பின்னூட்டங்கள் வரும் என்று எதிர்பார்த்தேன். நல்லவேளை ஒரேயொரு நண்பர் மட்டுமே அழகு தமிழில் எனக்கும் போலிக்கும் ஏதோ அண்டர்ஸ்டாண்டிங் இருப்பது போலவும் எனக்கும் அவருக்கும் நடந்த உரையாடலை வெளியிடட்டுமா என்று மிரட்டியும் பின்னூட்டம் இட்டிருந்தார். சுயகவுரவும் கருதி அதை வெளியிடவில்லை.

    சொல்லப்போனால் இந்த விளையாட்டில் எல்லாம் செலவிட எனக்கும் நேரம் இல்லை.

    ஆகவே இத்தகைய பின்னூட்டங்களை இட்டும் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா11:50 PM

    ஜோசப் சார் என்ன ஆச்சு "நாளை நமதே" தொடர். ரொம்ப நாளா நிக்குது இருபதாம் அத்தியாயத்தில்

    பதிலளிநீக்கு
  13. வாங்க நரசிம்மன்,

    நாளை நமதே தொடர் 15.9.07லிருந்து சனி, ஞாயிறுகளில் வெளிவரும்:-))

    பதிலளிநீக்கு
  14. ரொம்ப நாகரிகமாச் சொல்லியிருக்குறீய... புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி.

    பதிலளிநீக்கு