09 April 2006

வாருங்கள் நண்பர்களே!

ஆங்கிலத்திலும் கதைக்கலாம்!!

திரு. காசி அவர்களின் முயற்சியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது தளம் ‘ப்ளாக் தேசம்’ என்ற ஆங்கில வலைப்பதிப்பாளர்களின் சங்கமம்.

தமிழ்மணத்தில் இதைக் குறித்தான விளம்பரம் வந்தவுடனே பதிவு செய்த வலைப்பதிவார்களில் நானும் ஒருவன்.

தமிழ்மணத்தில் பிரபலாமாகவிருக்கும் பல நண்பர்களும் குறிப்பாக டோண்டு, தருமி (சாம் என்ற பெயரில்), பாஸ்டன் பாலா, பச்சோந்தி, குமரன், சிறில் அலெக்ஸ், இளா(ILA), மதி கந்தசாமி மற்றும் பலரும் தங்களுடயை ஆங்கிலப்பதிவுகளை பதிவு செய்திருப்பினும தொடர்ந்து எழுதுவது வெகு சிலரே. என்னால் முடிந்தவரை அதற்கென நேரம் ஒதுக்கி வாரத்தில் மூன்று, நான்கு இடுகைகளை இடுகின்றேன்.

இதைப் பார்க்கும்போது நமக்கு தமிழின் மீதான பற்று சற்று அதிகமாகிவிட்டதோ என்றுகூட தோன்றுகிறது. இல்லையென்றால் நேரமின்மையோ?

நேரமின்மைதான் காரணமென்றால் அதை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வாரத்தில் இரண்டு நாட்களாக இதற்கென நேரம் ஒதுக்கி கதைக்க வாருங்கள்.

நம்மில் யாருமே உண்மையான ஆங்கிலத்தில் எழுதிவிடுவதில்லை. பெரும்பாலோனோர் நம்முடைய தாய்மொழியில் சிந்தித்து ஆங்கிலத்தில் வடித்தெடுப்பதால் நம்முடைய இங்க்லீஷ் தங்க்லீஷாகத்தான் இருக்கிறது.

ஆனாலும் மொழி என்பது நம்முடைய எண்ணங்களைப் பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும் ஒரு மீடியம்தானே. ஆகவே பெரிதாக பிரிட்டிஷ் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்பதில்லை. மற்றவர்கள் படிக்கும்போது புரிந்துக்கொள்ளக்கூடியவகையில் எளிமையான ஆங்கிலத்தில் எழுதினாலே போதுமானது.

என்னுடைய நான்காண்டுகால மும்பை வாசத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை Looking back என்ற தொடராகவும் சமீப காலமாக தவிர்க்க முடியாததாகி வரும் கணினி நம்முடைய அன்றாட வாழ்க்கையை எப்படி ஸ்வாரஸ்யமில்லாததாக ஆக்கிவருகிறது என்பதை நகைச்சுவை உணர்வுடன்
ITEFFECT எழுதிவருகிறேன்.

ஆனால் படிக்கத்தான் ஆளில்லை. தமிழ்மணத்தில் வாசகர் பரிந்துரைத்த இடுகைகளின் பட்டியல் நீஈஈஈஈஈளமாக இருந்து நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ப்ளாக் தேசத்தில் பார்ப்பதற்கே பரிதாபமாக இரண்டோ அல்லது மூன்றோதான்

நான் வாரத்திற்கு மூன்று பதிவுகள் இட்டாலும் சில வேளைகளில் நான் இரண்டு மூன்று தினங்களுக்கு முன் இட்ட இடுகையும் முகப்பு பக்கத்திலேயே இருப்பதைக் கண்டிருக்கிறேன். நல்லவேளை, ‘என்ன சார் முகப்பு பக்கத்த நீங்களே பிடித்துக்கொள்கிறீர்களே’ என்று புகார் கூற அங்கு ஆள் இல்லை.


ஆங்கிலத்தில் எழுதுவதற்கு திறமையுள்ள (என்ன பெரிய திறமையிருக்குன்னு நீங்க எழுதறீங்கன்னு சில ஏளன குரல்கள் கேட்பது செவியில் விழுகிறது) நம்முடைய தமிழ்மண தளத்தில் பலர் இருக்கின்றனர் என்று எனக்குத் தெரியும்.

அவர்களையெல்லாம்தான் 'வாருங்கள் நண்பர்களே ஆங்கிலத்திலும் கதைக்கலாம்' என்று அழைக்கிறேன்.

வாருங்கள் நண்பர்களே, ஆங்கிலத்தில் கதைக்கிறோமோ இல்லையோ ஆங்கிலத்தை ஒருவழியாக்கலாம், வாருங்கள்.

குறைந்தபட்சம் காசி அவர்களின் முயற்சியை வெற்றியடையச் செய்த மகிழ்ச்சியாவது நமக்கு கிடைக்குமே...

13 comments:

முத்து(தமிழினி) said...

//இதைப் பார்க்கும்போது நமக்கு தமிழின் மீதான பற்று சற்று அதிகமாகிவிட்டதோ என்றுகூட தோன்றுகிறது//
என்னை சும்மா இருக்க விடமாட்டீங்க போலிருக்கு..இன்னும் இரண்டு பதிவு போடணுமா? :))))))

// தமிழ்மணத்தில் வாசகர் பரிந்துரைத்த இடுகைகளின் பட்டியல் நீஈஈஈஈஈளமாக இருந்து நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ப்ளாக் தேசத்தில் பார்ப்பதற்கே பரிதாபமாக இரண்டோ அல்லது மூன்றோதான் //
//நான் வாரத்திற்கு மூன்று பதிவுகள் இட்டாலும் சில வேளைகளில் நான் இரண்டு மூன்று தினங்களுக்கு முன் இட்ட இடுகையும் முகப்பு பக்கத்திலேயே இருப்பதைக் கண்டிருக்கிறேன். நல்லவேளை, ‘என்ன சார் முகப்பு பக்கத்த நீங்களே பிடித்துக்கொள்கிறீர்களே’ என்று புகார் கூற அங்கு ஆள் இல்லை.//
//(என்ன பெரிய திறமையிருக்குன்னு நீங்க எழுதறீங்கன்னு சில ஏளன குரல்கள் கேட்பது செவியில் விழுகிறது)//
என்ன நக்கல்? என்ன உள்குத்து? இவருக்கு மொழியில் லாவகம் இல்லையாம். யார்கிட்ட போய் நாம் அழ?

ஆங்கிலத்தை ஒழித்துக்கட்ட விரைவில் வருகிறேன்.

tbr.joseph said...

ஆங்கிலத்தை ஒழித்துக்கட்ட விரைவில் வருகிறேன்.
//

வாங்க வாங்க. ஆனா தனியா வந்தா போறாது, நண்பர்கள் படையோடு வாங்க :-)))))

sam said...

அட போங்க ஜோசப்,
நீங்க வேற!! அய்யா, ஆங்கிலத்தில் எழுத வேண்டாம்; வாசிக்கலாமில்லையா? அட வாசிக்க வேண்டாம். நான் சும்மா 'படம் மட்டும் காமிக்கிறேன்' அதையே பார்க்கக் கூட ஆளு இல்லை! என் சோகம் இப்படி?
அது சரி.."தமிழ்மணத்தில் பிரபலமாகவிருக்கும் பல நண்பர்களும்..." அப்டின்னு போட்டுட்டு ஒரு பேரைத் தப்பா - இல்லை, ஒரு தப்பானஆளு பேரை - போட்டிருக்கீங்க
:-(

tbr.joseph said...

வாசிக்கலாமில்லையா? அட வாசிக்க வேண்டாம். நான் சும்மா 'படம் மட்டும் காமிக்கிறேன்' அதையே பார்க்கக் கூட ஆளு இல்லை//

வருவாங்க, வருவாங்க. இப்பத்தான மார்க்கெட்டிங்க ஆரம்பிச்சிருக்கோம். இனி பாருங்க. ஒரே வாரத்தில ப்ளாக் தேசத்தின் முகப்பு பக்கம் நிறைஞ்சி வழியப்போவுது:-)

தமிழ்மணத்தில் பிரபலமாகவிருக்கும் பல நண்பர்களும்..." அப்டின்னு போட்டுட்டு ஒரு பேரைத் தப்பா - இல்லை, ஒரு தப்பானஆளு //

அதெப்படிங்க என் பேர நானே போட்டுக்காம இருக்கறது?

என்னை பத்தி நானே சொல்லிக்கலன்னா :0(

sam said...

நெனச்சேன்..இப்படித்தான் போகும்னு!! :-)

tbr.joseph said...

நெனச்சேன்..இப்படித்தான் போகும்னு//

வளர்ந்தது சென்னைன்னாலும் பொறந்தது மதுரையாச்சே.. அந்த ஊருக்கே உரிய நக்கலு, விக்கலு எல்லாம் இருக்கத்தான செய்யும்:-))

Dharumi said...

பொறந்தது மதுரையாச்சே..// it is a news for me!

ஆனா நான் அங்க பொறக்கலிங்க! இந்த 'நக்கலுன்னா' என்னங்க..

sivagnanamji(#16342789) said...

thro' nandhavanam.com i get thamizhmanam..how am i t enter english desam? pls inform me as early as possible

sivagnanamji(#16342789) said...

i got it
sory for the trouble

tbr.joseph said...

வாங்க ஜி!

http://www.blogdesam.com இந்த விலாசத்துல போய் பாருங்க.

tbr.joseph said...

இந்த 'நக்கலுன்னா' என்னங்க.. //

பாத்தீங்களா? இதத்தான் நாங்க சென்னையில நக்கல்ம்போம்..

நண்பர்களே யாராச்சும் வந்து விளக்கமா சொல்லுங்களேன்..

பினாத்தல் சுரேஷ் said...

தமிழே தடுமாறுது, இதுலே இங்க்லீஷ் வேறயா?

ஆபீஸ்லே தேவைப்படற லெட்டர் (As i am suffering from fever....) அளவுக்குதான்சார் என் ஆங்கில ஞானம்..

வேணுமுன்னா முத்து மாதிரி சொல்லி அடிக்கலாம்:-)

நக்கல்னா என்னான்னு னெஜமாவே தெரியாதா தருமி சார்? அப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆவி சார் நீங்க!

tbr.joseph said...

என்ன சுரேஷ் நீங்க,

தமிழ்ல தடுமாறிக்கிட்டு எழுதலையா? அதுமாதிரி இங்க்லீஷ்லயும் எழுத வேண்டியதுதானே.

இங்க எழுதறவங்க மட்டும் ஷேக்ஸ்பியர் இங்க்லீஷ்லயா எழுதறோம்?

சும்மா வந்து என்னத்தையாவது பினாத்துங்க:-)