21 நவம்பர் 2019

கணினிக்கு ஏற்ற கிண்டில் மென்பொருள்

நான் அமேஜான் கிண்டிலில் என்னுடைய புத்தகத்தை வெளியிட்டுள்ள தகவலை என்னுடைய பல அலுவலக நண்பர்களுடன் பகிர்ந்திருந்தேன். அதில் பலரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பதால் எங்களால் கைப்பேசியில் இதை படிக்க முடியவில்லை, கண்கள் வலிக்கின்றன என்றார்கள். எனக்கும் அதே தொல்லை தான் என்றேன்.

வேறு சிலர் எங்களிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லை டிபிஆர் என்றார்கள். என்னிடமும்தான் இல்லை என்றேன்.

நானும் இதை நினைத்துத்தான் கிண்டில் பக்கமே செல்லாமல் இருந்தேன். ஆனால் என்னுடைய நண்பர்களுள் ஒருவர் கணினிக்கு என்றே அமேஜான் ஒரு கிண்டில் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதை தரவிறக்கம் செய்து படியுங்கள் என்றார்.

இதில் நம் வலை நண்பர் ஜோதிஜி அவர்களின் புத்தகத்தைத்தான் முதலில் படித்தேன். நம் கண்களுக்கு தேவையான அளவுக்கு எழுத்துக்களை பெரிதாக்கிக் கொள்ளும் வசதியும் இதில் இருப்பதால் கண்களுக்கு எவ்வித வலியும் ஏற்படவில்லை.

ஆகவே இத்தகையோர் பயனடையவே இந்த பதிவை எழுதுகிறேன்.

கீழ்காணும் திரை நகல்களை பார்த்தாலே போதும் என்று நினைக்கிறேன்.
இரண்டாவது திரையில் உங்கள் மின்னஞ்சல் விலாசத்தை கொடுத்தால் மென்பொருளின் சுட்டி (Link) வந்துவிடும். அதை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிவிடலாம்

உங்களுக்கு அமேஜான் கணக்கு இருந்தால் மென்பொருளை அங்கு பதிவு செய்துக்கொள்வது நல்லது.

அதன் பிறகு டெஸ்க்டாப்பிலுள்ள கிண்டில் சுட்டியை க்ளிக் செய்து கிண்டில் தளத்திலுள்ள எந்த மின்புத்தகத்தையும் வாங்கி படிக்கலாம். ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்பு இலவசமாகவே கிடைக்கிறது. அதே போல் பல பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.

அச்சு புத்தக விலையுடன் ஒப்பிடுகையில் இதில் பண்மடங்கு குறைந்த விலையிலேயே புத்தகங்கள் கிடைக்கின்றன. பல புதிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் ஐம்பது ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைப்பது எத்தனை அரிது!

இந்த மென்பொருளை பயன்படுத்தி மறைந்து வரும் வாசிப்பு பழக்கத்தை மீண்டும் தொடருங்கள்.

நன்றி,

டிபிஆர்.





16 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவல்

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. உங்கள் வரவுக்கும் கருத்துரை க்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு
  3. தங்களின் ஆலோசனைப்படி கிண்டிலின் செயலியை எனது மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்துவிட்டேன். பயனுள்ள தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. பலரும் அறிய பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  5. மிகவும் எளிமையாக சொல்லி விட்டீர்கள்... அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  6. தகவல் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  7. பயனுள்ள தகவல்.  நண்பர் ஜோதிஜி பதிவிலும் படித்திருக்கிறேன்.  நன்றி.

    பதிலளிநீக்கு
  8. சார்,
    நான் உங்களிடம் இருந்து ஒரு தொடர் பதிவை எதிர்பார்கிறேன் உங்கள் பணி அனுபவத்திலிருந்து, நீங்கள் எப்படி உங்கள் சக ஊழியர்கள் மற்றும் வாடிகையாளர்களை சில இக்கட்டான சந்தர்பங்களில் கையண்டிர்கள் என்பதைபற்றி. கண்டிப்பாக உங்களுக்கு பலவிதமான அனுபவங்கள் கிடைத்திருக்கும் அவை என்னை போன்ற இளம் தலைமுறை நிர்வாகிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் உங்கள் திரும்பி பார்கிறேன் தொடரின் தீவிர ரசிகன்.

    அன்புடன்,
    இளம்பரிதி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இளம்பரிதி,

      என்னுடைய இருபத்தைந்தாண்டு கால மேலாளர் அனுபவங்களை ஏற்கனவே என்னுடைய தி.பா. தொடரில் எழுதியுள்ளேன். ஆனால் அதையும் நீங்கள் படித்துள்ளீர்கள் படித்துள்ளீர்கள் போல் தெரிகிறது. அதற்குப் பிறகு நான் மேலாளர் பதவியிலிருந்து உயர்வு பெற்று நிர்வாக பொறுப்பில் அமர்ந்துவிட்டதால் கிளை வாடிக்கையாளர்களின் தொடர்பு விட்டுப்போனது. ஆகவேதான் அந்த தொடரை நிறுத்தினேன். மேலும் தமிழ்பதிவுகளின் பிரபல திரட்டியான தமிழ்மணம் முடக்கப்பட்டதற்குப்பிறகு நம்முடைய பதிவுகளின் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துபோனதால் எழுதும் ஆர்வமும் குறைந்துபோனது. இது தமிழ் பதிவுலகத்திற்கு போறாத காலம் போல. வேறொரு திரட்டி அறிமுகப்படுத்தப்படும் வரை காத்திருக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். உங்களுடைய ஆர்வத்திற்கு மிக்க நன்றி.

      நீக்கு