தன்னுடைய நண்பர் ரஹீம்பாய் வீட்டுக்கு நடந்துச் சென்றுக்கொண்டிருக்கும் ஜோசப் யாரோ தன்னை அழைப்பதை கேட்டு நின்று திரும்பிப் பார்க்கிறார். சற்று தொலைவில் அவருடைய நண்பர் கணேஷ் தன்னை நோக்கி வந்துக்கொண்டிருப்பது தெரிகிறது. அவர் தன்னை நெருங்கும் வரையில் காத்திருந்த ஜோசப், 'என்ன கணேஷ் கோவம் எல்லாம் போயிருச்சா?' என்கிறார்.
கணேஷ்: 'எது, கோபமா?'
ஜோசப்: 'ஆமாங்க. போன வாரம் பேசிக்கிட்டே இருந்தவர் கோபத்தோட எறங்கி போனீங்களே? எங்க இனிமே இந்த பக்கமே வராம இருந்துருவீங்களோன்னு நானும் பாயும் நினைச்சோம்'
கணேஷ் சிரிக்கிறார். 'ஓ! அதுவா. அதெல்லாம் ஒரு கோபமா? அதுக்காக இத்தன வருசத்து பழக்கத்த விட்ற முடியுமா? என் கோபத்த பத்தி ஒங்களுக்கு தெரியாதா என்ன? திடீர்னு வரும், வந்த மாதிரியே போயிரும்.'
ஜோசப்பும் அவருடைய சிரிப்பில் கலந்துக்கொள்கிறார். 'நம்மள மாதிரிதான்னு சொல்லுங்க.'
கணேஷ்: 'ஏன் ரஹீம் பாய் மட்டும் என்னவாம்? பிஜேபின்னு சொன்னால பாய்றாரே?'
ஜோசப் சிரித்தவாறே கணேஷின் தோளில் தட்டுகிறார். 'சரி, சரி விடுங்க. அங்க பாருங்க, பாய் வாசல்ல நின்னுக்கிட்டு நம்மளையே பாத்துக்கிட்டிருக்கார். இன்னைக்கிம் நாம லேட்டுதான். போனதும் சொல்வார் பாருங்க.'
அவர் நினைத்த மாதிரியே அவர்கள் வீட்டை நெருங்கியதுமே ரஹீம் பாய், 'ஏங்க என்னையும் ஒங்கள மாதிரி நினைச்சிட்டீங்களா? ஒங்க ரெண்டு பேருக்கும் பென்ஷன் வீடு தேடி வந்துரும். ஆனா நமக்கு அப்படி இல்லீங்க, டெய்லி போயி கடைய தொறந்தாத்தான் வீட்ல அடுப்பு எரியும். கணேஷ்தான் எப்பவுமே லேட்டுன்னு பாத்தா நீங்களுமா? வர்றது வாரத்துக்கு ஒரு நாள். கொஞ்சம் சீக்கிரம் வந்தாத்தான் என்னவாம்?'
ஜோசப் நா சொல்லல என்பதுபோல் கணேஷை பார்த்து புன்னகைக்கிறார். 'சாரி பாய்.'
ரஹீம்: 'சரி. கணேஷ் வர்ற வழியில என்னத்தையோ சொல்லிக்கிட்டு வந்தாரே என்னெ பத்தித்தான?'
ஜோசப் சிரிக்கிறார். 'என்ன பாய் உங்களுக்கும் அந்த நோய் வந்துருச்சா?
ரஹீம்: 'நோயா, என்ன நோய்?'
ஜோசப்: 'அதான் பாய், யார் என்ன பேசிக்கிட்டிருந்தாலும் நம்மளப் பத்தித்தான் பேசறாங்களோன்னு நினைக்கற நோய். '
கணேஷ் சிரிக்கிறார். ரஹீம் பாய் முறைக்கிறார்.
ஜோசப் நிலைமையை சமாளிக்க பேச்சை மாற்றுகிறார். 'சரி அத விடுங்க. இந்த வாரம் சூடா டிஸ்கஸ் பண்றதுக்கு ஏதாச்சும் இருக்கா அதச் சொல்லுங்க.'
கணேஷ்: ஏன் இல்லாம? நம்ம 'போராளி' முதலமைச்சர், 'அகல-வாய்' கெஜ்ரிவால் ஒரு லிஸ்ட் வுட்ருக்காரே பாத்தீங்களா?'
ஜோசப்பும் ரஹீம் பாயும் உரக்க சிரிக்கின்றனர்
ஜோசப்: என்ன கணேஷ், அவருக்கு நிறைய பட்டப் பெயர்லாம் வச்சிட்டீங்க போலருக்கு?
கணேஷ்: பின்ன என்னங்க, ஒரு சீஃப் மினிஸ்டர் மாதிரியா நடந்துக்கிறார்? இன்னும் கூட நாம ஆளுங்கட்சிங்கற நினைப்பு வரல போலருக்கு. எதிர்கட்சிங்கள மாதிரியே எதுக்கெடுத்தாலும் ரோட்ல இறங்கி போராட்டம்கறார். அவருக்கு வாயும் ரொம்ப பெரிசுங்க. என்ன பேசறோம், எத பேசறோம்கற விவஸ்தையே இல்லாம....'
ரஹீம்: நீங்க சொல்றது சரிதான் கணேஷ். அவர் லிஸ்ட் போடற ஸ்டைல பார்த்தா பார்லிமென்ட்ல இருக்கற எல்லா எம்பிங்களுமே ஊழல்வாதிங்கன்னு சொல்லிருவார் போலருக்கு.
கணேஷ்: அப்படி சொல்லிட்டாலும் பரவால்லை. இன்னார், இன்னார்னு எந்த எவிடென்சும் இல்லாம இவருக்கு புடிக்காதவங்க பேரையெல்லாம் பட்டியல் போட்டுக்கிட்டு....'
ஜோசப்: நேஷனல் லெவல்ல சொன்னது போறாதுன்னு ஸ்டேட் லெவல் லிஸ்ட்டையும் வெளியிடப் போறாராமே?
கணேஷ்: செய்யட்டும். நாடு முழுசும் கொடும்பாவி எரிக்கப்பட்ட ஒரே இந்திய தலைவர்ங்கற பேர் கிடைச்சிரும்.
ரஹீம்: சரிங்க. கொஞ்ச நாளைக்கி முன்னால ஒங்க ப்ரைம் மினிஸ்டர் கேன்டிடேட்டும் ஜெயந்தி டாக்ஸ்னு என்னத்தையோ சொன்னாரே? அது மட்டும் சரியா? அவர் மட்டும் எவிடென்ஸ் வச்சிக்கிட்டுத்தான் சொன்னாரா?
ஜோசப்: சரியான கேள்வி. பதில் சொல்லுங்க கணேஷ்.
ஜோசப்: சரியான கேள்வி. பதில் சொல்லுங்க கணேஷ்.
கணேஷ்: அதுவும் தப்புதாங்க. ஆனா எவிடென்ஸ் இல்லாம அவர் அப்படி பேசியிருக்க மாட்டார்.
ரஹீம்: அதான! என்னடா சடக்குன்னு தப்புன்னு ஒத்துக்கிட்டீங்களேன்னு பாத்தேன்.
ஜோசப்: எவிடென்ஸ்சுன்னு எத சொல்றீங்க கணேஷ்?
கணேஷ்: பின்ன என்னங்க? அவரோட ஸ்டேட்லருந்து அனுப்புன இன்டஸ்ட்ரியல் ப்ரொப்போசல்ஸ இந்தம்மா க்ளியரே பண்ணாம வருசக் கணக்கா வச்சிருந்தாங்களாமே? அத எல்லாம் இவர டிஸ்மிஸ் பண்ணதுக்கப்புறம் மொய்லி ஒரே வாரத்துல க்ளியர் பண்ணிட்டார்னா அப்போ இவங்க எதுக்கு பென்டிங் வச்சிருந்தாங்க? '
ரஹீம்: என்னங்க இது அநியாயமா இருக்கு? சீக்கிரமா குடுத்தா இவர் எதையுமே பாக்காம வாங்கறத வாங்கிக்கிட்டு ஃபைல க்ளியர் பண்ணிட்டார்னு சொல்வீங்க. இல்லன்னா குடுக்க வேண்டியத குடுக்கலையேன்னு லேட்டாக்கறார்னு சொல்வீங்க? ஏங்க என்வய்ரன்மென்ட் க்ளியரன்ஸ்னா அவ்வளவு லேசான விஷயமா? சாதாரணமாவே லேடீஸ் அவ்வளவு ஈசியா டிசிஷன் எடுக்க மாட்டாங்க. அந்த மாதிரி அந்தம்மா எல்லாத்தையும் பாத்துட்டு தனக்கு திருப்தியானதுக்கப்புறம் க்ளியர் பண்லாம்னு நினைச்சிருப்பாங்க. அதுக்காகவே அவங்க 'டாக்ஸ்' போட்டாங்கன்னு சொல்லிற முடியுமா? சரி எவிடென்ஸ் இருந்தா இன்ன கம்பெனிக்கிட்டருந்து இன்ன தொகைய வாங்குனாங்க, இல்ல கேட்டாங்கன்னு மோடி சொல்ல வேண்டியதுதானே?
கணேஷ்: பாய் விவரம் தெரியாம பேசாதீங்க. அப்படீன்னா அந்தம்மாவ எதுக்கு திடீர்னு போஸ்ட்லருந்து தூக்குனாங்க?
ஜோசப்: இல்ல கணேஷ். அவங்கள யாரும் தூக்கல. அவங்களேதான் ரிசைன் பண்னாங்க. அதுக்கும் காரணம் இருக்கலாம். வாசன் மாதிரியே அவங்களுக்கும் ராஜ்ய சபா டேர்ம் இந்த மாசத்தோட முடிஞ்சிருது. எப்படியிருந்தாலும் அவங்க மினிஸ்டரா கன்டினியூ பண்ண முடியாது. ஏன்னா இங்க சட்டசபையில இருக்கற எம்.எல்.ஏ ஸ்ட்ரெங்த வச்சி ஒரு சீட்டுக்கே திண்டாட்டம். ஏற்கனவே வாசன்தான் அந்த சீட்டுக்கு போட்டி போடுவார்னு பேசிக்கிட்டாங்க. கடைசியில பாத்தா அவராலயே போட்டி போட முடியல. இத ஜெயந்தி நடராஜன் முன்னாலயே எதிர்பார்த்துத்தான் நாமளாவே ரிசைன் பண்ணிருவோம்னு செஞ்சிருப்பாங்க. இத மட்டுமே வச்சிக்கிட்டு அவங்க லஞ்சம் வாங்கனாங்கன்னு சொல்றது ஒரு பிரைம் மினிஸ்டர் கேன்டிடேட்டுக்கு அழகே இல்லீங்க.
ரஹீம்: கரெக்ட். ஏறக்குறைய இருபத்தஞ்சி வருசமா அரசியல்ல இருக்கற இவரே இப்படி பொறுப்பில்லாம பேசறப்போ நேத்து அரசியலுக்கு வந்த கெஜ்ரிய எப்படீங்க குறை சொல்ல முடியும்? சரி. அது இருக்கட்டும். ஆம் ஆத்மி கட்சி வர்றதுக்கு முன்னால பிஜேபியும் ஊழல ஒழிக்கறதுதான் எங்க முதல் வேலைன்னு சொல்லிக்கிட்டிருந்தீங்களே, இப்ப ஒங்க கட்சிக்குள்ளவே நிறைய ஊழல்வாதிங்க இருக்கறார்னு அவர் சொல்றாரே அதுக்கு என்ன சொல்லப் போறீங்க?
கணேஷ்: அவர் ஒரு பொறுப்பில்லாதவர்ங்க. அவர் கிட்ட ஏதாச்சும் எவிடென்ஸ் இருந்தா சொல்லட்டும் அப்புறம் பாக்கலாம்.
ஜோசப்: (சிரிக்கிறார்) அப்போ நீங்க சோனியாவையும் ராகுலையும் ஊழல்வாதிஙக்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்களே இதுவரைக்கும் அதுக்கு ஏதாவது உருப்படியா எவிடென்ஸ் குடுத்துருக்கீங்களா? நீங்க சொன்னா அத அப்படியே மத்தவங்க ஏத்துக்கணும். ஆனா அதையே மத்தவங்க சொன்னா எவிடென்ஸ் கேப்பீங்க அப்படித்தான?
கணேஷ்: (கோபத்துடன்) ஜோசப், சும்மா ஆர்க்யூ பண்ணணுமேன்னுட்டு எதையாச்சும் பேசாதீங்க. அவங்க விஷயமே வேற. 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், போஃபோர்ஸ் ஊழல் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இதுல எல்லாத்துக்கும் இவங்க ரெண்டு பேருக்கும் பங்கு இருக்கத்தான் செய்யிது. இல்லேன்னு சொல்லிற முடியுமா?
ரஹீம்: (கோபத்துடன்) அப்படீன்னா ராஜாவையும் கனிமொழியையும் அரெஸ்ட் பண்ணா மாதிரி அவங்கள ஏன் அரெஸ்ட் பண்ணல?
கணேஷ்: நாங்க மட்டும் ஆட்சிக்கு வரட்டும் செய்யிறமா இல்லையான்னு பாருங்க.
ஜோசப்: அதாவது நீங்க வந்து எவிடென்சையெல்லாம் தோண்டி எடுத்தப்புறம். அப்படித்தான?
கணேஷ்: ஆமா.
ரஹீம்: அப்போ அதுக்கு அர்த்தம் இதுவரைக்கும் அவங்க ரெண்டு பேரும் ஊழல்வாதிங்கன்னு சொல்றதுக்கு எந்த எவிடென்சும் கிடைக்கல. சரிதானே?
கணேஷ்: (சமாளிக்கிறார்) அப்படீன்னும் வச்சிக்கலாம். ஆனா அதுக்கு ரொம்ப நாளாகாது.
ஜோசப்: (சிரிக்கிறார்) நல்ல நியாயம்யா. அதையேத்தான் கெஜ்ரிவாலும் செய்றார். நாங்க ஆட்சிக்கு வந்தா இவங்களை சும்மா விடமாட்டோம். கேஸ் போட்டு உள்ள தள்ளிறுவோம்னு டெய்லி ஒரு லிஸ்ட் விடறார். இந்த விஷயத்துல உங்க ரெண்டு கட்சியுமே ஒன்னுதாங்க.
கணேஷ்: அப்படி பாக்கப் போனா காங்கிரசும் ஒன்னுதான். எடியூரப்பாவ ஊழல்வாதின்னு சொல்றதுக்கு ஏதாச்சும் எவிடென்ஸ் இருக்கா இவங்கக்கிட்ட?
ரஹீம்: யோவ், அதான் அவர் மேல கர்நாடகா லோக்பால் கேஸே ஃபைல் பண்ணியிருக்காங்களே? எவிடென்ஸ் இல்லாமயா கேஸ் ஃபைல் பண்ணியிருப்பாங்க?
கணேஷ்: இப்பல்லாம் தொத்தல் எவிடென்ஸ் இருந்தாலே கேஸ் போட்ற முடியும். விசாரணை முடிஞ்சி தீர்ப்புல கில்ட்டின்னு வந்தாத்தான் அவர் ஊழல்
பண்ணாரா இல்லையான்னு தெரியும்.
ஜோசப்: அதையேத்தான் நானும் சொல்றேன். எடியூரப்பா மேல போட்ட கேஸ் நடந்துக்கிட்டிருக்கறப்பவே அவர் ஊழல்வாதின்னு சொல்ல முடியாதுன்னு சொல்ற நீங்க இதுவரைக்கும் எந்த கேசும் இல்லாம இருக்கற சோனியா, ராகுல எப்படீங்க வாய் கூசாம ஊழல்வாதிங்கன்னு சொல்றீங்க?
கணேஷ்: (சலிப்புடன்) சரிங்க. இன்னைக்கி முழுசும் இதையேத்தான் பேசிக்கிட்டு இருக்கப் போறாமா? அப்படீன்னா நா கிளம்பறேன். (திண்ணையிலிருந்து எழுந்து நிற்கிறார்.)
ஜோசப்: இருங்க கணேஷ். மறுபடியும் கோச்சிக்கிட்டு பாதியிலயே எழுந்து போயிராதீங்க.
கணேஷ் மனமில்லாமல் மீண்டும் திண்ணையில் அமர்கிறார்.
ரஹீம்: ஆர்க்யூமென்ட்டுன்னு வந்துருச்சின்னா ஒக்காந்து பேசறத விட்டுப்போட்டு பொசுக், பொசுக்குன்னு போய்ட்டா ஆச்சா? இந்த விஷயமா கடைசியா ஒரேயொரு கேள்வி. அதுக்கப்புறம் மத்த விஷயத்த பேசலாம். என்ன கேக்கவா?
கணேஷ்: (சலிப்புடன்) சரி, சரி. கேளுங்க.
ரஹீம்: கொஞ்ச நாளைக்கி முன்னால சோனியா காந்திக்கு ஸ்விஸ் பாங்குல அக்கவுன்ட் இருக்குன்னு ஒங்க அத்வானிஜியே ஒரு அறிக்கை விட்டாரே ஞாபகம் இருக்கா?
கணேஷ்: இல்லாம என்ன? இப்ப அதுக்கு என்ன?
ரஹீம்: அதுக்கு என்னவா? இவர் சொன்ன சமயத்துல அந்தம்மா யுஎஸ்சுக்கு ட்ரீட்மென்ட் போயிர்ந்தாங்க. அங்கருந்து திரும்பி வந்ததும் அத்வானிக்கு நேரடியா லெட்டர் எழுதி அந்த மாதிரி எந்த கணக்கும் என் பேர்ல இல்லேன்னு சொன்னாங்க. அத்வானியும் உடனே நான் சொன்னது தப்புன்னு சரண்டர் ஆனாரே? அதுவும் ஞாபகம் இருக்குல்ல?
கணேஷ்: ஒன்றும் சொல்லாமல் தலை குணிந்து அமர்ந்திருக்கிறார்.
ஜோசப்: சரி விடுங்க பாய். அவர்தான் பதில் பேச முடியாம ஒக்காந்துருக்காரே.
ரஹீம்: அதுக்கில்ல ஜோசப். நா என்ன சொல்ல வரேன்னா இந்த மாதிரிதான் இவங்க சொல்ற எல்லா ஊழல் குற்றச்சாட்டுமே. எந்த எவிடென்சும் இல்லாம சும்மா கல்ல எறிஞ்சி பாப்போம்னு விடறது. கல்லடிப் பட்டவன் பேசாம இருந்துட்டானா பாத்தியா அடிச்ச அடியில ஆள் அமுங்கிப் போய்ட்டான்னு சொல்றது. அவன் திருப்பி அடிச்சான்னா சைலன்டா சரன்டராயிடறது. இதையே இவங்க எத்தன நாளைக்கித்தான் செய்வாங்களோ தெரியல.
ஜோசப்: சரிங்க. வேற ஏதாச்சும் பேசறதுக்கு இருக்கா?
ரஹீம்: இருக்கே. இப்ப மறுபடியும் மூனாவது அணின்னு சொல்லிக்கிட்டு கிளம்பியிருக்காங்களே அதப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?
ஜோசப் மவுனமாக அமர்ந்திருக்கும் கணேஷை பார்க்கிறார்: இருங்க. அதப்பத்தி கணேஷ் என்ன சொல்றார்னு கேப்போம். என்ன கணேஷ்?
கணேஷ்: அதெல்லாம் ஒன்னும் ஒப்பேறாதுங்க. இந்த மாதிரி ஒவ்வொரு எலக்ஷன் டைம்லயும் இவங்க அடிக்கற கூத்தத்தான் பாத்துக்கிட்டு இருக்கிறோமே. அதுமாதிரிதான் இப்பவும். அங்கருக்கற எல்லாத்துக்குமே பிரைம் மினிஸ்டராகணும்னு ஆசை. இந்த ஒரு விஷயத்துல அடிபட்டு போயிரும்.
ஜோசப்: ஆனா இந்த தடவ அப்படி இல்ல போலருக்கே. சாதாரணமா அதிமுக இதுலல்லாம் எந்த இன்ட்ரஸ்ட்டும் காமிக்க மாட்டாங்க. ஆனா இந்த தடவ அவங்களும் இல்ல ஆர்வம் காட்றா மாதிரி தெரியுது?
ரஹீம்: நீங்க சொல்றது சரிதான். இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு இந்த தடவ இது கொஞ்சம் சீரியசாத்தான் தெரியுது. அதுக்கு காரணம் இல்லாம இல்ல .
கணேஷ்: (எரிச்சலுடன்) என்னங்க காரணம் புடலங்கா?
ஜோசப்: இருங்க கணேஷ், மறுபடியும் கோபமா? நீங்க சொல்லுங்க பாய்.
ரஹீம்: நா சொல்றது இதுதான். இந்த தடவ காங்கிரசும் சரி பிஜேபியும் சரி தனியாத்தான் எலெக்ஷன சந்திக்கற சூழல்ல இருக்காங்க. ரெண்டு கட்சிங்களோடயும் தேர்தலுக்கு முன்னால கூட்டணி வச்சிக்க யாருமே விருப்பப் படலேங்கறா மாதிரிதான் தெரியுது. போறாததுக்கு புதுசா முளைச்சிருக்கற ஆம் ஆத்மி கட்சி வேற. அதனால 533 பார்லிமென்ட் சீட்ல போன எலெக்ஷன்ல 200 சீட்டுக்கு மேல ஸ்டேட் லெவல்ல கட்சிங்களுக்கு கிடைச்சும் அவங்களுக்குள்ள ஒத்துமை இல்லாம கடைசியில வேற வழி இல்லாம இவங்கள்ல நிறைய பேர் காங்கிரஸ் சப்போர்ட் பண்ண போய்ட்டாங்க. ஆனா இந்த தடவ அப்படி நடக்க சான்ஸ் இல்ல. தனித்தனியா நிப்போம். தேர்தலுக்கப்புறம் இருக்கற நிலவரத்த பாத்துட்டு நாம சேர்ந்து மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்றத பத்தி பேசுவோம்னு டிசைட் பண்ணியிருக்கற மாதிரி தெரியுது. காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் தனியா மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்ற அளவுக்கு சீட் வரா மாதிரி தெரியல. அதனால இவங்கக்கிட்டத்தான் வந்து நின்னாகணும். அப்போ நாங்களே மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்றோம் நீங்க வெளியிலருந்து ஆதரவு தாங்கன்னு இவங்க கேட்டா எதிரிக்கி எதிரி நண்பன்கறா மாதிரி, அதாவது இப்ப தில்லியில நடக்கறா மாதிரி, ரெண்டு பேருமே போட்டி போட்டுக்கிட்டு ஆதரவு குடுப்பாங்கன்னு நினைக்கிறேன். ன்ன சொல்றீங்க?
கணேஷ்: (எரிச்சலுடன்) கேக்கறதுக்கே அபத்தமா இருக்கு.
ஜோசப்: (சிரிக்கிறார்) ஆனா எனக்கு அப்படி தெரியல.
கணேஷ்: நீங்க வேற ஜோசப். நா போன வாரமே சொன்னா மாதிரி இப்ப இருக்கற மோடி அலையில இந்த பார்ட்டிங்க எல்லாமே இருக்கற இடம் தெரியாம போயிரும். வேணும்னா பாருங்க.
ஜோசப்: பாக்கத்தான போறோம். வேற என்ன பாய்?
ரஹீம்: நம்ம ஃபிஷர் மேன தொடர்ந்து இலங்கைக்காரன் அடிச்சிக்கிட்டே இருக்கானே இதுக்கு விடிவு காலமே இல்லையா?
கணேஷ்: (குறுக்கிட்டு) முதுகெலும்பே இல்லாத பி.எம் சென்டர்ல இருக்கற வரைக்கும் இதுக்கு முடிவே வராது பாய். மோடி மாதிரி ஒரு ஆள் பிஎம் மா வந்தாத்தான் இலங்கைக்காரன் பயப்படுவான்.
ஜோசப்: மோடி வந்தா என்ன செய்வார்னு சொல்றீங்க?
கணேஷ்: ஏதாச்சும் செய்வார். இந்த மாதிரி வழவழா கொழகொழான்னு பேசிக்கிட்டு இருக்க மாட்டார்.
ரஹீம்: இந்த மாதிரி சால்ஜாப்பெல்லாம் வேணாம். ஜோசப் கேட்ட கேள்விக்கி ஸ்ட்ரெய்ட்டா பதில் சொல்லுங்க. மோடி என்ன செஞ்சி கிழிச்சிருவார்?
கணேஷ்: சங்கடத்துடன் நெளிகிறார்.
ரஹீம்: பாத்தீங்களா ஜோசப் நெளியறத! சும்மா அடாவடியா பேசிட்டா ஆயிருச்சா?
ஜோசப்: எனக்கென்னவோ ஶ்ரீலங்காவுல இப்ப இருக்கற கவர்ன்மென்ட் இருக்கறவரைக்கும் இதுக்கு சொலூஷன் கிடைக்க சான்ஸே இல்ல. மீனவர்ங்களுக்குள்ளவே பேசி தீர்த்துக்கக் கூட அவங்க விட மாட்டாங்க போல தெரியுது. மோடி வந்தாக்கூட இதுல பெருசா எதையும் செய்ய சான்ஸ் இல்ல. இன்னைக்கி அங்க பெரிய அளவுல, அதாவது சுமார் ரூ.2400 கோடி அளவுக்கு, இன்வெஸ்ட் பண்ணியிருக்கற டாட்டா, பார்த்தி, அஷோக் லெய்லேன்ட் மாதிரியான இன்டியன் கம்பெனிங்களுக்கு அவங்களோட இன்வெஸ்ட்மென்ட்தாங்க முக்கியம். அதனால அரசாங்கத்த, அது காங்கிரசாருந்தாலும் பிஜேபியாருந்தாலும் அடாவடியா எந்த முடிவும் எடுக்க விடமாட்டாங்க. மோடி வந்தா அந்த இன்வெஸ்ட்மென்ட் இன்னும் ஜாஸ்தியாகத்தான் சான்ஸ் இருக்கு. அதனால நம்ம மீனவர்ங்க கச்சதீவுக்கிட்ட போயி மீன் புடிக்காம இருக்கறதத்தவிர வேற எந்த வழியும் இருக்கறா மாதிரி எனக்கு தெரியல.
ரஹீம்: என்ன ஜோசப் இப்படி சொல்லிட்டீங்க? பிஜேபி வந்தா இதுக்கு நிரந்தர தீர்வு கிடைச்சிரும்னு நினைச்சித்தான இங்க பாமகவும் மதிமுகவும் அவங்களோட கூட்டு வச்சிக்கறா மாதிரி தெரியுது!
ஜோசப்: அப்படியெல்லாம் இவங்களா நினைச்சிக்கிட்டா அவங்க என்ன பண்ணுவாங்க?
கணேஷ்: இவர் எப்பவும் இப்படித்தான் எதையாச்சும் சொல்லிக்கிட்டே இருப்பார் பாய். முதல்ல எல்லாரும் சேந்து மோடிய பிஎம்மா கொண்டு வரட்டும். அப்புறம் பாருங்க நடக்கறத.
ஜோசப் சிரிக்கிறார்: பாக்கத்தான போறோம்.
ரஹீம்: சரிங்க. இன்னொரு விஷயம். ரெண்டு நாளைக்கி முன்னால காங்கிரஸ் லீடர் ஒருத்தர் இந்தியாவுல இருக்கற சாதி அடிப்படையிலான ஒதுக்கீடு முறைய மாத்தி அமைக்கணும்னு ஏதோ சொன்னாரே அதப்பத்தி என்ன நினைக்கறீங்க?
கணேஷ்: கரெக்ட். சாதி அடிப்படையில இன்னும் எத்தன நாளைக்கித்தான் சலுகைக் குடுத்துக்கிட்டே இருக்கறது? ஜனார்தன் த்ரிவேதி சொல்றா மாதிரி இனிமே பொருளாதார அடிப்படையில சலுகை குடுக்கற மெத்தேட் வரணும். அப்பத்தான் உண்மையிலயே ஏழையா இருக்கறவங்களுக்கு இந்த சலுகை போய் சேரும். என்ன சொல்றீங்க ஜோசப்?
ஜோசப்: சோனியா நேத்தைக்கி ஒரு அறிக்கை விட்டத பாக்கலையா? ஜனார்தன் சொன்னது அவரோட சொந்த ஐடியா. காங்கிரஸ் தலைமையில ஆட்சி இருக்கற வரைக்கும் இன்னைக்கி இருக்கறா மாதிரியேதான் ரிசர்வேஷன் பாலிசி தொடரும்னு சொன்னாரே. எனக்கும் இப்போதைக்கி அந்த மெத்தேட்தான் சரியா இருக்கும்னு தோனுது. ஏன் கேளுங்க, எல்லாருடைய ஆண்டு வருமானத்தையும் அவ்வளவு ஈசியா எஸ்டிமேட் பண்ண முடியாதுங்க.
கணேஷ்: எதுக்கு அப்படி சொல்றீங்க? தாசில்தார் கிட்ட வருமான செர்ட்டிஃபிக்கேட் வாங்கிட்டு வரணும்னு கண்டிஷன் போட வேண்டியதுதானே?
இப்பக் கூட எங்கல்லாம் வருமான சர்ட்டிஃபிகேட் வேணுமோ அங்கல்லாம் தாசில்தார் குடுக்கற சர்ட்டிஃபிக்கேட்தான செல்லுபடியாகுது?
ஜோசப்: (சிரிக்கிறார்) ஏங்க, குடுக்க வேண்டியத குடுத்தா எந்த மாதிரியான சர்ட்டிஃபிக்கேட்டையும் குடுக்கறதுக்கு இங்க ஆளுங்க இருக்காங்களே?ஏன்னமோ தெரியாத மாதிரி சொல்றீங்க?
கணேஷ்: அப்போ வருமான வரி ரிட்டன்ஸ் காப்பி கேளுங்க!
ரஹீம்: யோவ், வருமான வரி கட்ற அளவுக்கு வருமானம் இருக்கறவனுக்கு எதுக்குய்யா சலுகை? அத விட கீழ இருக்கறவங்களுக்குத்தான் இந்த மாதிரியான சலுகைங்க போய் சேரணும்? அதனால ஜோசப் சொல்றா மாதிரி இன்னும் கொஞ்ச நாளைக்கி சாதி அடிப்படையில ரிசர்வேஷன் குடுக்கறதுதான் சரி. ஜோசப் இன்னொரு விஷயம்.
ஜோசப்: என்ன பாய் இன்னைக்கி ரொம்ப ஃபார்ம்ல இருக்கீங்க போலருக்கு. கடைக்கி போற ஐடியா ஏதும் இல்லையா?
ரஹீம்பாய் மணிக்கட்டை பார்க்கிறார். ஒரேயொரு விஷயம் அத்தோட முடிச்சிக்கலாம்.
ஜோசப்: சொல்லுங்க.
ரஹீம்: ஒரு வாரத்துக்கும் மேல நர்ஸ் ஸூடூடன்ஸ் எல்லாம் ஸ்ட்ரைக் பண்ணிக்கிட்டு இருக்காங்களே. யாருமே கண்டுக்கறா மாதிரி தெரியலையே?
கணேஷ்; ஏன்னா அவங்க கேக்கறதுல நியாயமே இல்ல, அதனாலதான்
.
கணேஷ்; ஏன்னா அவங்க கேக்கறதுல நியாயமே இல்ல, அதனாலதான்
.
ஜோசப்: அப்படி சொல்லிற முடியாதுங்க. கவர்ன்மென்ட் இன்ஸ்டிட்டியூட்ல படிக்கற நர்சுங்களுக்கு டெய்லி ஆறு மணி நேரம் ட்யூட்டி போட்டுட்டு ரெண்டு மணி நேரம் தான் தியரி க்ளாஸ் எடுக்கறாங்களாம். இந்த லட்சணத்துல அவங்களுக்கும் ப்ரைவேட்ல படிக்கறவங்களோட சேர்த்து என்ட்ரி எக்ஸாம் மாதிரி வச்சா எப்படிங்க? தியரியில ஸ்ட்ராங்கா இருக்கற ப்ரைவேட் ஸ்டூடன்ஸ்தான் எக்ஸாம்ல நல்லா பண்ணிருவாங்களே? அப்போ மாடு மாதிரி வேலை செஞ்ச கவர்ன்மென்ட் ஸ்டூடன்ஸ் என்னாவறது? என்னெ கேட்டா கவர்ன்மென்ட் ஹாஸ்ப்பிட்டல்ஸ்ல இருக்கற போஸ்ட்டுங்களுக்கு கவர்ன்மென்ட் இன்ஸ்ட்டியூட்ஸ்ல படிக்கறவங்களுக்குத்தான் ப்ரெஃபரன்ஸ் குடுக்கணும். ப்ரைவேட்ல படிக்கறவங்களுக்குத்தான் எத்தனையோ ப்ரைவேட் ஹாஸ்ப்பிட்டல்ஸ் இருக்கே. அங்க போகட்டும். இல்லன்னா ஃபாரினுக்கு போகட்டும். கவர்ன்மென்ட்ல படிக்கறவங்கள்ல நிறைய பேர் பேக்வேர்ட் கம்யூனிட்டியிலருந்து அதுவும் ஏழை குடும்பங்கள்லருந்து வர்றவங்க. இவங்களுக்கு ப்ரைவேட் ஹாஸ்ப்பிட்டல்ஸ்ல ஜாப் கிடைக்கறதுக்கு சான்ஸ் ரொம்பவே கம்மி. அதனால ஹைகோர்ட் என்ன சொல்லியிருந்தாலும் கவர்ன்மென்ட்ல படிக்கறவங்களுக்குன்னு எழுபத்தஞ்சி சதவிகிதம் சீட்ஸ் ரிசர்வ் பண்ணிட்டு மீதி இருக்கற சீட்டுக்கு வேணும்னா காமன் எக்ஸாம் வச்சி செலக்ட் பண்ணிக்கலாம்.
ரஹீம்: கரெக்ட்டுங்க. அத விட்டுப்போட்டு பரீட்சையில அஞ்சி மார்க் ஜாஸ்தி தரேன், பத்து மார்க் ஜாஸ்தி தரேன்னு சொல்றதெல்லாம் அவங்கள இன்சல்ட் பண்றா மாதிரி இருக்கு.
கணேஷ்: எதையும் உருப்பட விடமாட்டீங்களே? அப்புறம் கவர்ன்மென்ட் ஆஸ்ப்பிட்டல்ஸ்ல ட்ரீட்மென்ட் நல்லால்லேன்னு சொல்றதுல என்ன நியாயம் இருக்குது?
ரஹீம்: உங்கள மாதிரி ஆளுங்களுக்கு ஏழைங்க நல்லாவறதே புடிக்காதே? சரிங்க டைம் ஆயிருச்சி. அடுத்த வாரம் பாக்கலாம்.
ரஹீம் பாய் வீட்டிற்குள் செல்ல ஜோசப்பும் கணேஷும் சாலையில் இறங்கி தத்தம் வீடு நோக்கி செல்கின்றனர்.
**************
எது எப்படியோ, மீனவர் நிலை மாறினால் கோடி புண்ணியம்...!
பதிலளிநீக்குநாட்டு நடப்பு உரையாடல் அருமை... உரையாடல் போல சுவாரஸ்யமாக எழுதுவதும் சிறிது சிரமம் தான்... பாராட்டுக்கள்...
மூன்றாவது அணி, எலியும் தவளையும் நண்பர்களாக ஆக நினைத்து கால்களைக் கட்டிக்கொண்டு காணாமல் போனதுபோல் ஆகாமல் இருந்தால் சரிதான். திண்ணைப் பேச்சு சுவாரஸ்யமாக, நாட்டு நடப்பைஅலசுகிறது. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்களோடு இரண்டு வலைபதிவர்கள் சேர்ந்து மூவரும் மெரீனா பீச்சில் உரையாடியது போல் இருந்தது. நாட்டு நடப்போடு நல்ல கற்பனை.
பதிலளிநீக்கு//ரஹீம்: யோவ், வருமான வரி கட்ற அளவுக்கு வருமானம் இருக்கறவனுக்கு எதுக்குய்யா சலுகை? அத விட கீழ இருக்கறவங்களுக்குத்தான் இந்த மாதிரியான சலுகைங்க போய் சேரணும்? அதனால ஜோசப் சொல்றா மாதிரி இன்னும் கொஞ்ச நாளைக்கி சாதி அடிப்படையில ரிசர்வேஷன் குடுக்கறதுதான் சரி.//
பதிலளிநீக்குஒருவன் கீழே இருக்கிறானா உயர்ந்து விட்டானா என்பதை அவங்க பொருளாதார அளவு கோலை வைத்தே கணிக்க முடியும். எக்ஸ் என்ற ஜாதியினர் பொருளாதரத்தில் மிக பின் தங்கிய நிலையிலிருந்தா பொருளாதார அடிப்படையில் அமைந்த இடஒதுக்கீட்டில் அவர்களுக்கு தான் பயன் கிடைக்கும்.அது தான் நீதியானது. அப்படியிருக்க ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு ஜாதி வேற்றுமைகளை அதிகரித்து பாதுகாத்தும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு பகுதி மக்களுக்கு உதவி சேரவிடாம செய்கிறது.
வணக்கம்
பதிலளிநீக்குகதைக்களம் நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இது நம்ம தினமலரில் வரும் தொடர்போல இருக்கு, கெஜ்ரிவாலுக்கு நல்லாத்தான் பெயர் வச்சிருக்கார் நண்பர், நல்லவேளை குரங்குவால்"ன்னு சொல்லல.
பதிலளிநீக்குநாட்டு நடப்புகளை அலசும்
பதிலளிநீக்குஅருமையான திண்ணைப் பேச்சு நண்பரே...
Blogger திண்டுக்கல் தனபாலன் said...
எது எப்படியோ, மீனவர் நிலை மாறினால் கோடி புண்ணியம்...!//
மீனவர் பிரச்சினைக்கு இந்திய தலைமையின் தைரியமின்மையும் ஒரு காரணம். மேலும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் மிரட்டல்களுக்கே அடிபணிய மறுக்கும் இலங்கையின் தலைமையை எப்படி கையாள்வது? சிரமம்தான்.
Blogger வே.நடனசபாபதி said...
மூன்றாவது அணி, எலியும் தவளையும் நண்பர்களாக ஆக நினைத்து கால்களைக் கட்டிக்கொண்டு காணாமல் போனதுபோல் ஆகாமல் இருந்தால் சரிதான். //
இந்த அணி அப்படியே அதிக இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தாலும் அது ஒரு அலங்கோல ஆட்சியாகவே இருக்கும்.
Blogger தி.தமிழ் இளங்கோ said...
உங்களோடு இரண்டு வலைபதிவர்கள் சேர்ந்து மூவரும் மெரீனா பீச்சில் உரையாடியது போல் இருந்தது. நாட்டு நடப்போடு நல்ல கற்பனை.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
Blogger வேகநரி said...
ஒருவன் கீழே இருக்கிறானா உயர்ந்து விட்டானா என்பதை அவங்க பொருளாதார அளவு கோலை வைத்தே கணிக்க முடியும். எக்ஸ் என்ற ஜாதியினர் பொருளாதரத்தில் மிக பின் தங்கிய நிலையிலிருந்தா பொருளாதார அடிப்படையில் அமைந்த இடஒதுக்கீட்டில் அவர்களுக்கு தான் பயன் கிடைக்கும்.அது தான் நீதியானது. அப்படியிருக்க ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு ஜாதி வேற்றுமைகளை அதிகரித்து பாதுகாத்தும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு பகுதி மக்களுக்கு உதவி சேரவிடாம செய்கிறது.//
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால் இந்த பொருளாதார நிலையை எப்படி கணிப்பது என்பதில்தான் சிக்கலே. அதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்குமானால் இந்த பிரச்சினையும் தீர்ந்துவிடும். ஜனார்தன் திரிவேதி சொல்வதுபோன்று இப்போதைய முறையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலுள்ள வசதி படைத்தவர்களே இந்த சலுகையை முழுவதுமாக அனுபவிக்கின்றனர்.
OpenID 2008rupan said...
வணக்கம்
கதைக்களம் நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்//
இது நாட்டு நடப்புங்க. இருப்பினும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Blogger MANO நாஞ்சில் மனோ said...
இது நம்ம தினமலரில் வரும் தொடர்போல இருக்கு,//
அந்த தொடர்தான் இதனுடைய இன்ஸ்ப்பிரேஷன்.
கெஜ்ரிவாலுக்கு நல்லாத்தான் பெயர் வச்சிருக்கார் நண்பர், நல்லவேளை குரங்குவால்"ன்னு சொல்லல. //
நீங்கள் அளித்துள்ள பட்டப்பெயரும் அவருக்கு பொருந்தும் :) படித்த முட்டாள் என்றும் சொல்லலாம். எதை, எவ்வாறு, எப்போது செய்ய வேண்டும் அல்லது பேச வேண்டும் என்ற விவரம் தெரியாத விவஸ்தை கெட்ட மனிதர் என்றும் சொல்லலாம்.
Blogger மகேந்திரன் said...
நாட்டு நடப்புகளை அலசும்
அருமையான திண்ணைப் பேச்சு நண்பரே...//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
//கவர்ன்மென்ட்ல படிக்கறவங்கள்ல நிறைய பேர் பேக்வேர்ட் கம்யூனிட்டியிலருந்து அதுவும் ஏழை குடும்பங்கள்லருந்து வர்றவங்க.//
பதிலளிநீக்குஎனக்குத் தெரிந்தவரை இது உண்மைதான் என்று நினைக்கிறேன். கவர்ன்மெண்ட் காலேஜில் படிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தால்தான், நல்ல மாணவர்களும் கவர்ன்மெண்ட் காலேஜில் சேர்வார்கள்.
மீனவங்க பிரச்சனயில் உங்க கதை பாத்திரத்தில் ஒருவர் சொன்ன மாதிரி நம்ம மீனவர்ங்க கச்சதீவுக்கிட்ட போயி மீன் புடிக்காம இருக்கறதத்தவிர வேற எந்த வழியும் இருக்கறா மாதிரி எனக்கு தெரியல என்பது சரியானது. பேச்சுவார்த்தை வெற்றியழித்தால் கச்சதீவுக்கிட்ட போய் மீன் தாராளமா பிடிச்சுகலாம்.
பதிலளிநீக்குஆனா அவங்க கடந்த பல காலாம சண்டையே போட்டுக்கிட்டே இருந்தாங்க. மீனே சரியா புடிக்கல்ல. அதனாலே நாம போய் அவங்க எல்லைக்குள்ளே போய் மீன் புடிச்சோம். அது மாதிரி தொடர்ந்தும் பிடித்தாலென்னா என்ற பேராசை தோன்றலாம்.எந்த ஒரு நாடுமே இந்த தவறை ஏற்று கொள்ள மாட்டாது.