14 பிப்ரவரி 2014

நான் தீண்டத்தகாதவனாய்ட்டேன்: மோடி

கணேஷும் ஜோசப்பும் ரஹீம்பாய் வீட்டுத் திண்ணையில் அமர்ந்துள்ளனர்.
 
கணேஷ்: என்னங்க சாதாரணமா நாமதான் லேட்டா வருவோம். இன்னைக்கி பாய காணோம்?
 
ஜோசப் பதிலளிப்பதற்கு முன் ரஹீம்பாய் வாசற்கதவைத் திறந்துக்கொண்டு அவசரமாக வந்து அமர்கிறார். கையில் அன்றைய தினத்தாள்: என்ன கணேஷ். அத்திப் பூத்தா மாதிரி இன்னைக்கி ஒரு அஞ்சி நிமிஷம் சீக்கிரமா வந்துட்டீர்ங்கறதுக்காக என் தலைய போட்டு உருட்றீராக்கும்?
 
கணேஷ்:(சிரிக்கிறார்) அதெல்லாம் இல்ல பாய். சாதாரணமா நாமத்தான லேட்டா வருவோம்னு ஜோசப் கிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்.
 
ஜோசப்: அதிருக்கட்டும். கையில என்ன பேப்பர்? ஏதாச்சும் ஸ்பெஷல் நியூசா?
 
ரஹீம்: (சிரிக்கிறார்) அதான் டெய்லி ஒரு இடத்துல கூட்டத்த போட்டு வாய்க்கு வந்தபடி பேசிக்கிட்டிருக்கார நம்ம ப்ரைம் மினிஸ்டர் கேன்டிடேட். அவர் நேத்தைக்கி தமிழ்நாட்டு கூட்டத்துல பேசனத படிச்சேன். சிரிப்புத்தான் வந்துது. அதான் கையோட கொண்டு வந்துருக்கேன். படிக்கட்டுமா?
 
கணேஷ்: இன்னைக்கி வந்ததும் வராததுமா ஆரம்பிச்சிட்டீராய்யா? அப்படியென்ன சொல்லக் கூடாதத சொல்லிட்டார்?
 
ரஹீம்: கோபப்படாதய்யா. பொறுமையா கேளு.
 
ஜோசப்: அவர் கிடக்கார் பாய். நீங்க படிங்க.
 
ரஹீம்: 'நான் இன்றும் பலருக்கும் தீண்டத் தகாதவனாகவே இருக்கிறேன்.'  இதுக்கு என்னங்க அர்த்தம்?
 
கணேஷ்: ஏன் ஒங்களுக்கு விளங்கலையோ? அவர் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்ங்க அதனாலத்தான் நான் அடுத்த பிரதமரா வர்றதுக்கு மேல் சாதிக்காரங்கள்ல நிறைய பேருக்கு புடிக்கலங்கறார். இதுல என்னங்க தப்பு?
 
ரஹீம்: தப்பே இல்லீங்க. ஆனா இத்தன நாள் இல்லாம இப்ப என்ன புதுசா நா ஒரு பேக்வேர்ட் கம்யூனிட்டி ஆளுங்கறதால நா நிறைய பேருக்கு தீண்டப்படாதவனாய்ட்டேங்கறார்? சரிங்க. நா ஒரு கேள்வி கேக்கறேன். இவரோட மாநிலத்துலயே தீண்டப்படாதவங்கன்னு இவங்க இதுவரைக்கும் ஒதுக்கி வச்சிருக்கற தலித்துங்க மேல திடீர்னு எதுக்கு இவ்வளவு அக்கறை? இதுக்குத்தான். இன்னைக்கி காலையில ஒக்காந்து என் மூத்த மகன வச்சி நெட்ல தேடிப்புடிச்சத படிக்கறேன் கேளுங்க.
 
நம்ம நாட்டுல தலித் மக்களோட வோட்டு பதினேழு சதவிகிதமாம்.
அதுல அம்பது சதவிகிதம் திமுக, அதிமுக மாதிரி ஸ்டேட் பார்ட்டிங்களுக்கு போயிருதாம்.
பிஜேபிக்கு பத்துலருந்து பன்னெண்டு சதவிகிதம்தான் கிடைக்கிதாம்.
மீதி காங்கிரசுக்காம்.
காங்கிரசுக்கு கிடைச்சிக்கிட்டிருக்கற தலித் ஓட்டுல பத்து பர்சென்ட் பிஜேபிக்கு கிடைச்சாக் கூட அம்பதுலருந்து அறுபது சீட் எக்ஸ்ட்ரா கிடைச்சிருமாம். அதான் திடீர்னு மோடிக்கு ஞானோதயம் வந்துருக்கு.
 
ஜோசப்: அட அப்படியா? இதத எந்த சைட்லருந்து எடுத்தீங்க?
 
ரஹீம்: தெஹெல்கா பத்திரிகையோட சைட்லருந்து.
 
கணேஷ்: (எரிச்சலுடன்) பாய், அதுவே ஒரு ஃப்ராடு பத்திரிக்கை. ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லைடி கண்ணேங்கறா மாதிரி கூட வேல பாத்த ஒரு பொண்ணெ கெடுக்க ட்ரை பண்ணிட்டு கம்பி எண்ணிக்கிட்டு இருக்கறவரோட பத்திரிக்கை. அதுல சொல்லியிருக்கறத எல்லாம் வச்சிக்கிட்டு... போங்க பாய்...
 
ரஹீம்: யோவ். அவர் அரெஸ்டானது போன மாசம். இந்த நியூஸ் வந்து நாலஞ்சி மாசம் ஆயிருச்சி. எனக்கென்னவோ இவங்க இந்த மாதிரியெல்லாம் நியூஸ் போடறாங்கன்னுதான் அந்த பொண்ணெ செட்டப் பண்ணி அந்தாள மாட்டி விட்டுட்டீங்களோன்னு கூட தோனுது. என்ன சொல்றீங்க ஜோசப்?
 
ஜோசப்: (சிரிக்கிறார்) இருக்கும் யார் கண்டா?
 
கணேஷ்: (எரிச்சலுடன்) என்ன ஜோசப் நீங்களும் இந்தாளோட சேந்துக்கிட்டு. மோடி சிஎம்மாருக்கற குஜராத்துல தலித்துங்களுக்குன்னு என்னல்லாம் செஞ்சிருக்கார் தெரியுமில்லே?
 
ரஹீம்: (சிரிக்கிறார்) நீ இந்த மாதிரி எதையாச்சும் எடுத்துவிடுவேன்னு தெரிஞ்சிதான் ஒங்க மோடி ராஜ்யத்துல தலித் ஆளுங்க எப்படியெல்லாம் அவஸ்தை பட்டுருக்காங்கன்னு தேடி புடிச்சிருக்கேன். அதையும் படிக்கறேன். கேட்டுட்டு சொல்லு. (தன் கையிலிருந்த பத்திரிக்கையுடன் இருந்த தாள்களில் ஒன்றை எடுத்து படிக்கிறார்).
 
ஜோசப்: (வியப்புடன்) என்ன பாய் ரொம்பத்தான் மெனக்கெட்டிருக்கீங்க போலருக்கு?
 
ரஹீம்: பின்ன என்னங்க? இந்தாளு திடீர்னு மகாத்மா மாதிரி பேச ஆரம்பிச்சிட்டா நாம எல்லாரும் முட்டாளுங்களா என்ன? அதான் காலையில எழுந்ததும் நம்ம பையன எழுப்பி தேட வச்சேன். இருங்க படிக்கறேன். கொஞ்ச நாளைக்கி முன்னால இந்தியன் எக்ஸ்பிரஸ்ல வந்த நியூஸ் இது. அதாவது குஜராத்ல நிறைய தலித் ஆளுங்க இஸ்லாமிய மதத்துக்கு மாறுனாங்களாம். ஏங்க இந்த முடிவுன்னு பத்திரிக்கை ஆளுங்க கேட்ருக்காங்க.அதுக்கு ஒரு முதியவர் இப்படி பதில் சொன்ன்னாராம். "இங்க இருக்கற பார்பருங்க கூட (முடி திருத்துபவர்) எங்களுக்கு முடி வெட்டி விட முடியாதுன்னு சொல்றாங்க. எங்களுக்கு வெட்டுனா ஊருக்குள்ள ஒரு ஜாதி இந்துவும் அவங்கக்கிட்ட வெடிக்க மாட்டேங்கறாங்களாம். ஊர் தலைவர், பஞ்சாயத்து பிரசிடென்ட்டுன்னு எல்லார் கிட்டயும் கம்ப்ளெய்ன்ட் பண்ணியாச்சு. ஒன்னும் பிரயொசனம் இல்ல. அது மட்டும் இல்லீங்க இங்கருக்கற டீக்கடை, ஹோட்டல் எதுலயும் எங்கள உள்ள விட மாட்டேங்கறாங்க. எத்தன நாளைக்கித்தான் இந்த அவமானத்த தாங்கிக்கறது? அதான் இன்னைக்கி எங்க ஆளுங்க எல்லாருமே முஸ்லீம்களாய்ட்டோம்."
 
ஜோசப்: அப்படியா? இவர் என்னமோ தலித்துங்களுக்கு அது செஞ்சிருக்கேன், இது செஞ்சிருக்கேன் எல்லா கூட்டத்துலயும் சொல்றாரு?
 
ரஹீம்: (சிரிக்கிறார்) அதெல்லாம் சும்மா. இன்னும் இருக்கு கேளுங்க. குஜராத்ல ஹெத்தா சோலாங்கின்னு ஒரு தலித் லீடர் கொஞ்ச நாளைக்கி முன்னால சொல்லியிருக்கறத படிக்கிறேன். "இங்க நடக்கற அக்கிரமத்தால எங்க ஆளுங்கள்ல  நிறைய பேர் பக்கத்து ஸ்டேட்டுக்கு குடி போய்ட்டாங்க. அதனால எங்க ஜனங்களோட எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சி போச்சி. இவங்களால நமக்கென்ன பிரயோசனம்னு எங்கள இன்னும் கேவலமா நடத்துறாங்க. அதனாலயே நிறைய பேர் இஸ்லாமிய மதத்துக்கு போய்க்கிட்டே இருக்காங்க.'
 
கனேஷ்: ஏங்க ஊர் பேர் தெரியாத ஆளுங்க சொல்றதையெல்லாம் பெருசா சொல்லிக்கிட்டு. யார்ங்க இந்த சோலாங்கி?
 
ரஹீம்: அவர் வேற யாருமில்ல. அந்த ஏரியாவோட சிட்டிங் பி.ஜே.பி. எம்.எல்.ஏ. போறுமா இல்ல இன்னும் வேணுமா? (தன் கைகளில் இருந்த இன்னும் சில தாள்களை புரட்டி பார்க்கிறார்) மூனு வருசத்துக்கு முன்னால டாட்டா இன்ஸ்ட்டியூட்டும் இந்தியன் எக்ஸ்பிரசும் சேந்து குஜராத்லருக்கற தலித்துங்கக்கிட்ட ஒரு சர்வே நடத்துனாங்களாம். அதுல என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா? இப்பவும் 12000 தலித் ஆளுங்க தோட்டி (scavengers) வேலை செஞ்சிக்கிட்டுருக்காங்களாம். இந்த அளவுக்கு அதிகமானவங்க இந்த கேவலமான வேலைய செய்யறவங்கள வேற எந்த மாகாணத்துலயும் பாக்க முடியலேன்னு சொல்லியிருக்காங்க. மேல் சாதி ஆளுங்களோட மலத்த எடுக்கறதுக்கு இவங்க புண்ணியம் செஞ்சிருக்கணும்னு ஒருதரம் மோடியே நக்கலடிச்சிருக்காராம். இத விட கேவலமான ஒரு ஆள பிரதமர் பதவிக்கு நிக்க வைக்க முடியுமாங்க?
 
கணேஷ்: பாய் பத்திரிகைக் காரங்க ஆயிரம் போடுவாங்க. அதையெல்லாம் பேசிக்கிட்டு. இதெல்லாம் அவருக்கு வேண்டாதவங்க செய்யிற வேலை.
 
ரஹீம்: (கோபத்துடன்) ஆமாய்யா உங்களுக்கு எதிரா எதாச்சும் பத்திரிகையில வந்தா அது வேண்டாதவங்க செய்யிற வேலை. இன்னைக்கி மோடிக்கு இந்த அளவுக்கு விளம்பரம் குடுக்கறதே இதே பத்திரிகைக்காரங்கதானய்யா? அது மட்டும் வேணுமோ?
 
ஜோசப்: (குறுக்கிட்டு) பாய், இத இத்தோட விட்ருவோம். தலித்துங்க விஷயத்துல ஏறக்குறைய எல்லா கட்சிங்களுமே ஓட்டு அரசியல்தான் செஞ்சிக்கிட்டிருக்காங்க. எப்பல்லாம் அவங்க ஓட்டு இவங்களுக்கு தேவையோ அந்த  டைம்ல மட்டுந்தான் இவங்க தேவைங்கள பத்தி கவலைப்படறா மாதிரி காண்பிப்பாங்க. அது மாதிரிதான் இப்பவும் நடக்குது. இதுல மோடிய மட்டுமே குத்தம் சொல்லி பிரயோசனம் இல்லீங்க. அதனால வேற ஏதாச்சும் இருந்தா பேசுவோம்.
 
கணேஷ்: கரெக்டா சொன்னீங்க ஜோசப்.
 
ரஹீம்: உங்களுக்கு சாதகமா யாராச்சும் பேசுனா ஒடனே கரெக்ட்டுன்னு ஒத்துக்குவீங்க. இல்லன்னா கோபம் வரும். நல்ல நியாயம்யா. பெரும்பான்மையான ஒங்களுக்கெல்லாம் எங்கள மாதிரி சிறுபான்மை ஆளுங்க படற கஷ்டம் தெரியாதுய்யா.
 
ஜோசப்: சரி பாய், விடுங்க. அடுத்த விஷயத்த பேசுவோம்.
 
ரஹீம்: (சலிப்புடன்) என்னத்த பேசறது? காலையிலருந்து இத படிச்சதும் வேற எதுலயுமே மனசு ஓட மாட்டேங்குதுங்க. நீங்களே சொல்லுங்க.
 
ஜோசப்: சரி. கொஞ்ச நாளா தில்லியில லோக்பால் மசோதா விஷயம் அடிபடுதே அதப்பத்தி ஏதாச்சும் பேசலாமா?
 
கணேஷ்: (உற்சாகத்துடன்) பேசலாம்.
 
ஜோசப்: (சிரித்தவாறே ரஹீம்பாயை பார்க்கிறார்) பாத்தீங்களா அவர் கட்சி சம்மந்தமில்லாத விஷயம்னா எவ்வளவு எந்தூவா பேசறார் பாருங்க?
 
கணேஷ்: அப்படியெல்லாம் இல்லீங்க. இதுவரைக்கும் எந்த சீஃப் மினிஸ்டரும் செய்யாத விஷயத்த நேத்து சிஎம்மானவரு செய்யறார் பாருங்க.  கவர்னர், பிரசிடென்ட்டுன்னு யாருமே வேணாம் நா வச்சதுதான் சட்டம்னு சொல்றத என்னன்னு சொல்றது?
 
ரஹீம்: ஜோசப் எனக்கு ஒரு சந்தேகம்.
 
ஜோசப்: சொல்லுங்க. சட்டசபையில மசோதாவ கொண்டு வர்றதுக்கு முன்னால கவர்னர் பர்மிஷன் வேணுமான்னா?
 
ரஹீம்: அதுவும் ஒரு சந்தேகம்தான். ஆனா இந்த மாதிரி எந்த பெர்மிஷனும் இல்லாமலே காங்கிரஸ் காலத்துல மூனு நாலு மசோதா நிறைவேறி இருக்குதுன்னு கெஜ்ரிவால் சொல்றாரே அது நிஜமா?
 
கணேஷ்:நீங்க ஒன்னு பாய். அதெல்லாம் அந்தாள் விடற எத்தனையோ டூப்புங்கள்ல ஒன்னு. அது எந்தெந்த மசோதான்னு சொல்லட்டுமே பாக்கலாம். 
 
ஜோசப்: அவர் டூப் அடிக்கிறாரோ இல்லையோ அதப் பத்தியெல்லாம் பேசி பிரயோசனம் இல்ல. நம்ம இந்திய அரசியல் சாசனத்துல ஒரு மசோதாவ ஸ்டேட் அசெம்ப்ளியில ப்ரசென்ட் பண்றதுக்கு கவர்னரோட பர்மிஷன் தேவைன்னு சொல்லல. ஆனா அந்த மசோதா சட்டமாகனும்னா அதுக்கு கவர்னரோட பர்மிஷன் நிச்சயம் தேவை.
 
கணேஷ்: அப்படியா? அப்போ அவர் சொல்றது சரிதானா?
 
ஜோசப்: இருங்க முழுசா கேளுங்க.  நா சொன்னது தனி மாநில அந்தஸ்த்து உள்ள ஸ்டேட் அசெம்ப்ளி. ஆனா தில்லி ஒரு யூனியன் டெரிட்டரி. தனி மாநிலம்னா மசோதவ சட்டசபையில வச்சி பாஸ் பண்ணி கவர்னர் பார்வைக்கு அனுப்பிருவாங்க. ஆனா தில்லி விஷயத்துல சட்டசபையில பிரசென்ட் பண்றதுக்கு முன்னாலயே சென்டர்ல இருக்கற சட்ட இலாக்காவுக்கு அனுப்பி அவங்களோட அப்ரூவல் வாங்கணுங்கறது அரசியல் சாசனத்துல சொல்லியிருக்கோ இல்லையோ அது ஒரு மரபுன்னு சொல்றாங்க. அதுக்காகத்தான் மசோதாவ டிராஃப்ட் பண்ணி அசெம்ப்ளியில சப்மிட் பண்றதுக்கு முன்னால அத தில்லி துணை ஆளுநருக்கு அனுப்பி அவர் வழியாத்தான் லா மினிஸ்ட்ரிக்கு அனுப்பணுமாம். இதுல நிதி மசோதா (financial bills) இல்ல ஏதாச்சும் அர்ஜன்டா பாஸ் பண்ண வேண்டிய மசோதாவா இருந்தா சட்டசபையில வச்சி பாஸ் பண்ணிட்டுக் கூட கவர்னருக்கு அனுபலாமாம். ஆனா லோக்பால் ஒரு நிதி மசோதாவும் இல்ல இவ்வளவு அவசரமா பாஸ் பண்ண வேண்டிய பில்லும் இல்ல. ஆனா  அதெல்லாம் தேவையில்லை. நா ஏற்கனவே நாலஞ்சி லா எக்ஸ்பேர்ட்டுங்கள கன்சல்ட் பண்ணித்தான் இந்த மசோதாவ டிராஃப்ட் பண்ணேன்னு கெஜ்ரிவால் சொல்றார். அது கூட பரவால்லை. ஆனா சட்டசபையில ஒரு பில்ல பிரசென்ட் பண்ணணும்னா அட்லீஸ்ட் ரெண்டு நாளைக்கி முன்னாலயாச்சும் அத்தோட காப்பிய ஒவ்வொரு சட்டமன்ற மெம்பருக்கும் படிக்க குடுக்கணும். அப்பத்தான அந்த பில் சட்டசபையில பிரசென்ட் பண்றப்போ அதப் பத்தி உருப்படியா டிஸ்கஸ் பண்ண முடியும்?
 
கணேஷ்: கரெக்ட்டுங்க. ஆனா அதுக்குக் கூட சான்ஸ் குடுக்காம இவர் செய்யிற பாத்தா அந்த மசோதாவுல இவர் ஏதோ எடக்கு மடக்கா செஞ்சி வச்சிருக்கார்னு அர்த்தம்.  அப்படி என்ன செஞ்சி வச்சிருப்பார்னு நினைக்கறீங்க?
 
ஜோசப்: அவர் என்ன செஞ்சி வச்சிருந்தாலும் அது அசெம்ப்ளியில டிஸ்கஷனுக்கு வர்றப்போ தெரிஞ்சிட்டுப் போவுது. அது இல்ல இப்ப விஷயம். இவர் எதுக்காக இப்படியெல்லாம் செய்யிறார்னு உங்களுக்கு தெரியலையா?
 
ரஹீம்: இது கூட தெரியாதுங்களா? இப்படியெல்லாம் அடாவடியா செஞ்சாத்தான் காங்கிரசும் பிஜேபியும் இவரோட மசோதாவ சப்போர்ட் பண்ண மாட்டேன்னு சொல்வாங்க. இதையே சாக்கா வச்சி இவர் சி.எம் போஸ்ட்ட ராஜினாமா செஞ்சிருவார். மினிஸ்ட்ரி கவுந்துரும். மறுபடியும் எலக்‌ஷன் வரும். இவர் ஜனங்கக் கிட்ட போயி நா உங்களுக்கு நல்லது செய்யணும்னா நா தனியா மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்ற அளவுக்கு எனக்கு மெஜாரிட்டி தாங்கன்னு கேப்பார்.

கணேஷ்: அவங்க உடனே இவருக்கு ஓட்ட தூக்கி போட்ருவாங்களாக்கும்? நீங்க வேற பாய். ஜனங்க அவ்வளவு முட்டாளுங்களா என்ன?
 
ரஹீம்: (சிரிக்கிறார்) யோவ், தலித் விஷய்த்துல மோடி சொல்றத மட்டும் ஜனங்க நம்பிருவாங்க. ஆனா இவர் விஷயத்துல நம்ப மாட்டாங்க.  உங்களுக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயம். அப்படித்தான?
 
ஜோசப்: பாய், மறுபடியும் ஆரம்பிச்சிராதீங்க.  அதான் ரெண்டு நாளைக்கி முன்னால தில்லி சட்டமன்ற சபாநாயகரே அந்த பில்ல அசெம்ப்ளியில டேபிள் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாரே. முதல்ல மெம்பர்ஸ்சுங்களுக்கு மசோதாவோட காப்பிய குடுங்க, அப்புறம் டேபிள் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாராம். கெஜ்ரிவாலால ஒன்னும் செய்ய முடியலை. அநேகமா இன்னைக்கி டேபிள் பண்ணுவாங்க போல தெரியுது. அது பாஸ் ஆகலன்னா இன்னிக்கே கெஜ்ரிவால் ரிசைன் பண்ணிருவாராம். பேப்பர்ல பாத்தேன்.
 
கணேஷ்: செஞ்சிட்டு போகட்டுங்க. அவர் தலையில அவரே மண்ண வாரி போட்டுக்கறேன்னு சொன்னா யார் என்ன பண்ண முடியும்? ஆனா ஒன்னு போன ரெண்டு மாசத்துல அவர் அடிச்ச கூத்துக்கப்புறமும் ஜனங்க இவருக்கே ஓட்டு போட்டாங்கன்னா அப்புறம் தில்லிய கடவுள்தான் காப்பத்தணும். .
 
ரஹீம்:  அப்புறம், கெஜ்ரிவால்  இன்னொரு கூத்து அடிக்கிறாரே பாத்தீங்களா?
 
ஜோசப்: கூத்தா அது என்னது?
 
ரஹீம்: அதாங்க அசெம்ப்ளி மீட்டிங்க அசெம்ப்ளிக்கு வெளியே ராம் லீலா மைதானத்துல நடத்தப் போறேன்னு நிக்கிறாரே. அதச் சொல்றேன்.
 
கணேஷ்: அதெல்லாம் ஒப்பேறாது பாய். அதான் போலீஸ் எங்களால பாதுகாப்பு குடுக்க முடியாதுன்னு கைய விரிச்சிட்டாங்களே.
 
ஜோசப்: போலீஸ் சொல்றதுக்காக மட்டும் இல்ல. சுதந்திர இந்தியாவுல இதுவரைக்கும் ஒரு ஸ்டேட் அசெம்ப்ளியோட மீட்டிங்க அசெம்ப்ளிக்கு வெளியே யாருமே நடத்துனது இல்லையாம். அதாவது பதவியேற்பு ஃபங்ஷன தவிர. அதனால இதுக்கு ப்ரொவிஷன் இருக்கான்னு கோர்ட்டே கேக்குது.
 
கணேஷ்: கேவலம்ங்க. தில்லியில செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கறப்போ இந்த மனுசன் அடிக்கற கூத்த தாங்க முடியல.  அதுக்குத்தான் சொல்றது ஆடத் தெரியாதவனையெல்லாம் மேடையில ஏத்தக் கூடாதுன்னு.  ஒரு கவர்ன்மென்ட்ட லீட் பண்றதுக்கு கொஞ்சமாவது எக்ஸ்ப்ரீயன்ஸ் இருக்கணுங்க.
 
ரஹீம்: (நக்கலுடன்) அதாவது ஒங்க மோடி ஐய்யா மாதிரி?
 
கணேஷ்: சும்மா இருங்க பாய். இவர்தான் ஜெயிச்சி பி.எம்மா ஆவப்போறார்னு தெரிஞ்சிக்கிட்டுத்தான இதுவரைக்கும் இவர இன்சல்ட் பண்ணிக்கிட்டிருந்த அமெரிக்காவே இன்னைக்கி அவர போயி பாத்து பேசிட்டு வான்னு அமெரிக்காவுலருந்து ஆளுங்கள அனுப்புது?
 
ரஹீம்:: (சிரிக்கிறார்) இதையெல்லாம் வச்சிக்கிட்டு இவர்தான் பி.எம்மா வருவார்ங்கற பில்டப்பெல்லாம் குடுக்காதீங்க.
 
கணேஷ்: அட ஏங்க நீங்க வேற. இன்னைக்கி நாட்டுலருக்கற எல்லா கருத்துக் கணிப்புலயும் என்ன சொல்றாங்க? பிஜேபி 250லருந்து 270 சீட் வரைக்கும் பிடிச்சி தனிக்கட்சியா ஆட்சி செய்வாங்களாம். அஞ்சோ பத்தோ  குறைஞ்சா இருக்கவே இருக்கு சிவசேனா கட்சி.
 
ரஹீம்: யோவ் அதுக்கு பேரு கருத்துக் கணிப்பு இல்ல கருத்து திணிப்பு. தில்லியிலயும் இதே மாதிரிதான்
சொல்லிக்கிட்டிருந்தாங்க. ஆம் ஆத்மி தனி பெரிய கட்சியா வந்துரும்னு. ஆனா பிஜேபிதான ஜாஸ்தி எடங்கள புடிச்சது? இந்த ராஹுல் மட்டும் பேசாம இருந்திருந்தார்னா இவங்க ஆட்சியே அமைச்சிருக்க முடியாதேய்யா? இந்த மாதிரிதான் இருக்கும் இப்ப இவங்க சொல்ற கணிப்பும்.
 
ஜோசப்: அப்போ இது எல்லாமே பொய்யின்னு சொல்றீங்களா பாய்?
 
ரஹீம்: அப்படி சொல்ல வரல. ஆனா இவங்க சொல்றா மாதிரியெல்லாம் அந்த அளவுக்கு பிஜேபி வராதுன்னு சொல்றேன். இருக்கற கட்சிங்கள்ல அவங்களுக்கு ஜாஸ்தி இடங்க கிடைக்கலாம். ஆனா தனியா ஆட்சி அமைக்கற அளவுக்கு வராதுன்னு சொல்றேன்.
 
ஜோசப்: அதென்னவோ உண்மைதான். சரி அத விடுங்க. எவ்வளவு நேரம்தான் தேர்தல பத்தியே பேசறது? வேற ஏதாச்சும் இருக்கா?
 
கணேஷ்: இருக்கே. நேத்து நம்ம சிவகெங்கை காரர் யாரோ ஐஏஎஸ் ஆஃபீசர நீ பேசற இங்க்லீஷ் கொடுமையாருக்கு ஹிந்தியிலயே பேசுன்னு சொல்லி இன்ஸல்ட் பண்ணிட்டாராமே? அவருக்கெதிரா ஐஏஎஸ் அதிகாரிங்க சங்கம் கம்ப்ளெய்ன்ட் பண்ணப் போறாங்களாம்?
 
ஜோசப்: (சிரிக்கிறார்) செஞ்சிருப்பார். நம்ம பசி பேசறது ஆக்ஸ்ஃபோர்ட் இங்க்லீஷ் ஆச்சே.
 
ரஹீம்: அட நீங்க வேற ஜோசப். அவர் சொன்னது ஒன்னு இந்த பத்திரிகைக் காரங்க போடறது ஒன்னு. அவர் அப்படியெல்லாம் இன்ஸல்ட்டா பேசற ஆள் இல்ல.
 
ஜோசப்: நா இன்ஸ்ல்ட் பண்ணியிருப்பார்னு சொல்ல வரல. அவர் இங்லீஷ் பேசற விதமே வேறயாச்சே. அவர் மாதிரி எல்லாரும் பேசணும்னு பாத்தா நடக்குமா?
 
கணேஷ்: கரெக்ட்டுங்க. அப்படியே அந்த ஆஃபீசர் கேவலமான இங்க்லீஷ்ல பேசியிருந்தாலும் அவர் அங்கருந்து போனதுக்கப்புறம் இவர் மத்தவங்கக் கிட்ட என்னய்யா சொன்னார் அந்தாள்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டிருக்கலாம்ல?
 
ஜோசப்: சரி விடுங்க. இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல. இந்த நியூஸ் பேப்பர்கார்ங்களுக்கு வேற எதுவும் நியூஸ் கிடைகலன்னா இந்த மாதிரி சில்லியான விஷயத்தையெல்லாம் பெருசா போடுவாங்க. அவங்களுக்கும் வியாபாரம் ஆவனுமா இல்லையா?
 
ரஹீம்: நேத்தைக்கி வந்த நம்ம ஸ்டேட் பட்ஜெட்டப்பத்தி நடிகர் சொன்னத பாத்தீங்களா? போற்றுறதுக்கு என்ன இருக்கு? தூத்துறதுக்குத்தான் இருக்குன்னு சிலேடையா சொல்லியிருக்காரே?
 
கணேஷ்: அது எப்பவுமே அப்படித்தானய்யா? பட்ஜெட் வந்தா ஆளுங்கட்சி ஆதரவாளர்ங்க ஆஹோ ஓஹோம்பாங்க. எதிர்கட்சிக்காரங்க இதெல்லாம் ஒரு பட்ஜெட்டான்னு கேப்பாங்க. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?
 
ஜோசப்: அது சரி. எனக்கொரு சந்தேகம்.
 
கணேஷ்: என்ன?
 
ஜோசப்: இங்க மட்டும் எதிர்க்கட்சிக்காரங்க சின்னதா எதாச்சும் பேசினா ஒடனே கூண்டோட வெளிய போங்கன்னு அனுப்பிடறாங்களே அங்க ராஜ்யசபாவுல இவங்களோட எம்பியே கையில கிடைக்கறதையெல்லாம் கிழிச்சி எறிஞ்சி ஆர்ப்பாட்டம் செய்யிறாரே?
 
ரஹீம்: கரெக்ட்டுங்க. எனக்கும் தோணும். எதுக்கு அங்க மட்டும் கலாட்டா பண்றவங்களையெல்லாம் வெளியேத்திட்டு கூட்டத்த நடத்தாம கூட்டத்தையே ஒத்தி வைக்கிறாங்க?
 
ஜோசப்: சரியா கேட்டீங்க. அதுவும் ஆளுங்கட்சி ஆளுங்களே தெலுங்கானான்னு ஒரு விஷயத்த வச்சி எத்தன நாள் கூட்டம் நடத்தவிடாம பண்றாங்க பாருங்க. அக்கிரமம்.
 
ரஹீம்: நேத்து கைகலப்பு, பெப்பர் ஸ்ப்ரே அடிக்கறதுன்னு ஒரு பெரிய கூத்தே நடந்துருக்கே? இதுவரைக்கும் இப்படியொரு அடிதடி கலாட்டா நடந்ததே இல்லையாமே?
 
கணேஷ்: ஏன் இல்ல? இதெல்லாம் நாங்க ஆட்சியில இருந்தப்பவும் காங்கிரஸ் செஞ்சதுதான். அதுதான் இப்ப திருப்பி கிடைக்கிது.
 
ஜோசப்: அதாவது அடுத்த எலெக்‌ஷன்ல நீங்க ஜெயிச்சி மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்ணாலும் காங்கிரசும் இப்படியெல்லாம் பண்ணலாம். அதான சொல்ல வறீங்க?
 
ரஹீம்: அப்படி போடுங்க அறுவாள!
 
ஜோசப்: சரி பாய். வேற எதுவும் இல்லன்னா அடுத்த வாரம் பாக்கலாமா?
 
ரஹீம் சரி என்று எழுந்து நிற்க கணேஷும் ஜோசப்பும் அவரிடமிருந்து விடைபெறுகின்றனர்.
 
**********
 

16 கருத்துகள்:

  1. சொல்ல வேண்டியதை சொல்லிட்டு, பிறகு சமாளித்து "கரெக்டா" நீங்களும் அரிவாளை போட்டுறீங்க...! ம்...

    பதிலளிநீக்கு
  2. நாட்டு நடப்பை உரையாடல் மூலம் பின்னி பெடல் எடுத்துட்டீங்க !
    த ம +1

    பதிலளிநீக்கு

  3. தமிழக பட்ஜெட் பற்றி இன்னும் விரிவாக விவாதித்திருக்கலாம்

    பதிலளிநீக்கு

  4. கணேஷும், ஜோசப்பும், ரஹீம்பாயும் நன்றாகவே நாட்டு நடப்பை அலசியிருக்கிறார்கள். பதிவை இரசித்தேன்.

    தேர்தல் சமயத்தில் தலித்கள் பற்றி கவலைப்படுவதும், சிறுபான்மை இனத்தவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதும் அரசியல்வாதிகளின் வாடிக்கை தானே. அதைத்தான் இந்தியாவின் முதன்மை அமைச்சராக வர விரும்புவரும் செய்துகொண்டு இருக்கிறார். இதில் இவரும் விதி விலக்கல்ல.

    காங்கிரஸ் ஆனாலும் பிஜேபி ஆனாலும் எதிர்க்கட்சியாய் இருக்கும்போது பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டார்கள். இது அவர்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட எழுதப்படாத ஒப்பந்தம். இந்த ‘சண்டை’யைப் பார்த்து ஏமாறுபவர்கள் நம்மைப்போன்ற பொது மக்கள் தான். இவர்களுக்கிடையே நம்முடைய வாய்ச்சொல் வீரரும் விளம்பரப் பிரியருமான கெஜ்ரிவால் வேறு. என் செய்ய! காலம் மாறும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  5. மோடியின் ராஜ்ஜியத்தில் உய்ய லாலா! என்று பாடத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  6. வட இந்தியாவில் தலித்துகளை நடத்தும் விதம் ரொம்பவே மோசம் !

    பதிலளிநீக்கு
  7. மீடியா எப்பொழுதும் அதிகாரவர்க்கத்தின் கையில்தான் உள்ளது. எனவே அவர்கள், அதிகாரவர்க்கத்தின் பிரச்சார பீரங்கியாகத்தான் இருக்கிறார்கள். இன்று இணையம் வந்துவிட்டதால் கொஞ்சமாவது உண்மைகள் வெளிவருகின்றன. இருந்தாலும் உண்மையை அறிந்துகொள்வது சிரமமாகத்தான் உள்ளது. தாங்கள் பகிர்ந்துள்ள அனைத்தையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்திருக்கிறேன். தொகுத்து கொடுத்துள்ளது சிலரைவாவது சிந்திக்கவைக்கும் என்று நினைக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா.
    சொல்ல வேண்டிய கருத்தை உரையாடல் வழியாக மிக நன்றாக சொல்லியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

  9. Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    சொல்ல வேண்டியதை சொல்லிட்டு, பிறகு சமாளித்து "கரெக்டா" நீங்களும் அரிவாளை போட்டுறீங்க...! ம்...//

    நான் சொல்ல முடியாததை என்னுடைய நண்பர்கள் மூலமாகவும் நான் சொல்ல விரும்புவதை ஜோசப் சொல்வதுபோலவும் சொல்வதுதான் என்னுடைய நோக்கம்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  10. Blogger Bagawanjee KA said...
    நாட்டு நடப்பை உரையாடல் மூலம் பின்னி பெடல் எடுத்துட்டீங்க !
    த ம +1 //

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. ஆனாலும் உங்கள மாதிரி தினம் ஒரு ஜோக் எழுதி மகிழ்விக்க என்னாலல்லாம் முடியவே முடியாது. எங்கருந்துதான் தேடி பிடிப்பீங்களோ. சூப்பர்.

    பதிலளிநீக்கு

  11. Blogger G.M Balasubramaniam said...

    தமிழக பட்ஜெட் பற்றி இன்னும் விரிவாக விவாதித்திருக்கலாம்//

    அடுத்த வாரம் பட்ஜெட் ஸ்பெஷல். இந்த வார பதிவை ஏற்கனவே எழுதி வைத்திருந்ததால் பட்ஜெட்டை முழுவதுமாக அலச முடியவில்லை.

    பதிலளிநீக்கு

  12. Blogger வே.நடனசபாபதி said...

    தேர்தல் சமயத்தில் தலித்கள் பற்றி கவலைப்படுவதும், சிறுபான்மை இனத்தவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதும் அரசியல்வாதிகளின் வாடிக்கை தானே. அதைத்தான் இந்தியாவின் முதன்மை அமைச்சராக வர விரும்புவரும் செய்துகொண்டு இருக்கிறார். இதில் இவரும் விதி விலக்கல்ல. //

    ஆனாலும் இவர் சற்று அதிகமாகவே நீலிக்கண்ணீர் வடிக்கிறார். காங்கிரஸ் இதையே செய்தாலும் அவர்கள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நிறையவே செய்துள்ளனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.

    காங்கிரஸ் ஆனாலும் பிஜேபி ஆனாலும் எதிர்க்கட்சியாய் இருக்கும்போது பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டார்கள். இது அவர்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட எழுதப்படாத ஒப்பந்தம். இந்த ‘சண்டை’யைப் பார்த்து ஏமாறுபவர்கள் நம்மைப்போன்ற பொது மக்கள் தான். இவர்களுக்கிடையே நம்முடைய வாய்ச்சொல் வீரரும் விளம்பரப் பிரியருமான கெஜ்ரிவால் வேறு. என் செய்ய! //

    அப்படியொரு ஒப்பந்தம் இருக்குமா என்ன? காங்கிரசும் இதற்கு முன் பார்லிமென்டை நடக்கவிடாமல் செய்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் இந்த அளவுக்கு தொடர்ச்சியாக செய்ததில்லை. இம்முறை பெரும்பான்மையான தடைகள் வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்யப்பட்டவை. தெலுங்கானா விவகாரம் முடிந்துபோன ஒன்று. ஆகவே அதை காரணம் காட்டி இரு அவைகளையும் நடக்க விடாமல் செய்யும் இவர்களுக்கு காங்கிரசும் அடுத்த முறை பாடம் புகட்டினாலும் அதில் தப்பே இல்லை.

    பதிலளிநீக்கு

  13. Blogger MANO நாஞ்சில் மனோ said...
    வட இந்தியாவில் தலித்துகளை நடத்தும் விதம் ரொம்பவே மோசம் !//

    தென்னிந்தியாவிலும் இது உள்ளதுதான் என்றாலும் பாஜக ஆளும் மாநிலங்களில் சற்று அதிகம்தான் என்கின்றனர்.

    இப்படியெல்லாம் செய்துவிட்டு ஏதோ இவர்தான் தலித்துகளின் ரட்சகன் என்பதுபோல் வேடம் போடுவதைத்தான் சகிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு

  14. Blogger Packirisamy N said...
    தாங்கள் பகிர்ந்துள்ள அனைத்தையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்திருக்கிறேன். தொகுத்து கொடுத்துள்ளது சிலரைவாவது சிந்திக்கவைக்கும் என்று நினைக்கிறேன்.//

    இதுதான் என்னுடைய நோக்கம். பொதுவாகவே அரசியல் விவகாரங்களில் பலரும் அக்கறைக் காட்டுவதில்லை. அதிகம் போனால் தேர்தல்கள் வரும் காலங்களில் இதைப் பற்றி பேசுவார்கள். ஆகவேதன் நாட்டின் பல இடங்களில் நடப்பவைகளைப் பற்றி சுவார்ஸ்யம் குறையாமல் எழுதினால் என்ன தோன்றியது.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  15. Blogger தி.தமிழ் இளங்கோ said...
    மோடியின் ராஜ்ஜியத்தில் உய்ய லாலா! என்று பாடத் தோன்றியது.//

    இது அவர் ஆட்சியை பிடித்தபிறகும் தொடருமா என்பதுதான் கேள்விக் குறி.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  16. Blogger Rupan com said...
    வணக்கம்
    ஐயா.
    சொல்ல வேண்டிய கருத்தை உரையாடல் வழியாக மிக நன்றாக சொல்லியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-//

    மிக்க நன்றி ரூபன்.

    பதிலளிநீக்கு