27 பிப்ரவரி 2014

மோடி கையாலாகாதவரா இல்ல......?

ஜோசப், கணேஷ் மற்றும் ரஹீம் பாய் அவருடைய வீட்டுத் திண்ணையில் அமர்ந்துள்ளனர். ஜோசப் கையிலிருந்து பத்திரிகை ஒன்றை வாசித்துக்கொண்டிருக்க ரஹீம் பாயும் கணேஷும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கணேஷ்: (கோபத்துடன்) அதெப்படிங்க ஒரு சென்ட்ரல் மினிஸ்டர் எதிர்கட்சி தலைவர் அதுவும் அடுத்து ப்ரைம் மினிஸ்டரா வரப்போற ஒருத்தர ஆண்மையில்லாதவர் (Impotent) அப்படீன்னு சொல்லலாம்? கேக்கறதுக்கே அசிங்கமாயில்ல?

ரஹீம்: (சிரிக்கிறார்) என்ன ஜோசப் அந்த வார்த்தைக்கு அதுவா அர்த்தம்?

ஜோசப்: அப்படி ஒரு அர்த்தமும் அந்த வார்த்தைக்கு இருக்கத்தான் செய்யிது. ஆனா கையாலாகாதவர்ங்கற அர்த்தமும் இருக்கு. 

ரஹீம்: அதான பார்த்தேன். ஒரு இஸ்லாமியர் இந்த மாதிரி தப்பான வார்த்தையெல்லாம் சொல்ல மாட்டாரே என்ன இவர் இப்படி சொல்றாரேன்னு நினைச்சேன். (கணேஷிடம்) யோவ், ஒரு மாநிலத்துல முதலமைச்சரா இருக்கறவர் அங்க நடக்கற கலவரத்துல மைனாரிட்டி இனத்த சேர்ந்தவங்கள மெஜாரிட்டிக்காரங்க அடிச்சி நொறுக்கறப்போ பாத்துக்கிட்டு இருந்தா வேற எப்படி சொல்வாங்க?

கணேஷ் மீண்டும் கோபத்துடன் மறுமொழி சொல்வதற்குள் ஜோசப்: (குறுக்கிட்டு) இருங்க கணேஷ், கோபப்படாதீங்க. அந்த மினிஸ்டரே நான் மோடியை கையாலாகதவர்ங்கற அர்த்தத்துல அந்த வார்த்தைய யூஸ் பண்ணேன், மத்தபடி அவர பெர்சனலா இன்சல்ட் பண்ற ஐடியா எதுவும் எனக்கில்லேன்னு க்ளாரிஃபை பண்ணிட்டாரே அதுக்கப்புறமும் இந்த ஆர்க்யூமென்ட் தேவைதானா?

ரஹீம்: இதெல்லாம் இவங்களுக்கு ஒரு எக்ஸ்க்யூஸ்ங்க. எங்க தலைவர தரக்குறைவா பேசிட்டார்னு சொல்லி ஜனங்கக்கிட்ட சிம்பத்தி வாங்கணும். அது ஒன்னுதான் இவங்க அஜன்டா.

ஜோசப்: சரி விடுங்க பாய். ஏற்கனவே அவர் கோபமா இருக்கார். நீங்க வேற அவர தூண்டி விடாதீங்க. 

ரஹீம்: சரிங்க. அப்புறம் இன்னொரு விஷயம். கெஜ்ரிவால் மோடிக்கி நேரடியா லெட்டர் எழுதி ரிலையன்ஸ் கம்பெனி உங்களையும் விலைக்கி வாங்கிட்டாரான்னு கேட்டுருக்காராமே? அதுக்கு என்ன சொல்லப் போறீங்க?

கணேஷ்: (எரிச்சலுடன்) பாய் உங்களுக்கும் வேலை இல்லை அந்த கெஜ்ரிவாலுக்கும் வேலையில்லை. வாராவாரம் எதையாவது செஞ்சி பப்ளிச்சிட்டி தேடறதே அந்த ஆளுக்கு வேலையா போச்சி. அந்தாள் சொல்றதையெல்லாம் நீங்களும் பெரிசா எடுத்துக்கிட்டு பேச வறீங்களே பாய்.

ரஹீம்: அப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க பாக்காதீங்க. இந்த விஷயத்துல கெஜ்ரிவால் சொல்றதுல நியாயம் இருக்கத்தான் செய்யிது. எரிவாயு விலைய யூனிட்டுக்கு நாலு டாலர்லருந்து ஒரேயடியா எட்டு டாலர்னு ஏத்துனது எந்த விதத்துல நியாயங்க? அதால ரிலையன்சுக்கு வருசத்துக்கு நாப்பதாயிரம் டாலர் லாபமாமே? என்ன அநியாயம்? இது யார் காசுங்க? நம்மள மாதிரி ஆளுங்க காசு தான? அந்த கம்பெனியோட காஸ் ப்ரொடக்‌ஷன கூட்டமாட்டேங்குதுங்கறதுக்காக இது கவர்ன்மென்ட் குடுக்கற லஞ்சமா? இப்படி ஏத்துனா ஏப்ரல் ஒன்னாந்தேதியிலருந்து காஸ் சிலின்டர் விலையும் அநியாயத்துக்கு ஏறிடுமே?

கணேஷ்: பாய், விவரம் தெரியாம பேசாதீங்க.  ரிலைன்ஸ் தயாரிக்கறது இயற்கை எரிவாயு (Liquified Natural Gas-LNG), நாம யூஸ் பண்ற எல்.பி.ஜி. இல்ல. இயற்கை எரிவாயுங்கறது ஆழ்கடல் அப்புறம் கோதாவரி ஆத்துப் படுகையிலருந்து எடுக்கறது.  இத முக்கியமா தில்லி, மும்பையில பைப் வழியா வீடுகளுக்கும் எலக்ட்ரிக் கம்பெனிங்களுக்கும் சப்ளை பண்றாங்க. இத முதல்ல தெரிஞ்சிக்குங்க. அத்தோட இது ஏதோ ரிலையன்ஸ் கம்பெனிக்கு லாபம் குடுக்கணுமேன்னு கவர்ன்மென்ட் செய்யல. ஏன்னா இந்த இயற்கை எரிவாயுவ ரிலையன்ஸ் மட்டுமில்ல, கவர்ன்மென்ட் கம்பெனிங்களும் எடுக்கறாங்க.

ரஹீம்: அப்படியா? ஆனா இந்த பேப்பர்ல (தன் கையிலிருந்த தமிழ் தினத்தாளை காட்டுகிறார்) அப்படி போடலையே?

ஜோசப்: (தன் கையில் இருக்கும் ஆங்கில தினத்தாளைக் காட்டுகிறார்) இந்த பேப்பர்ல க்ளியரா போட்ருக்கான். இந்த விஷயத்த டிஸ்கஸ் பண்லாம்னுதான் கொண்டு வந்தேன். அதுக்குள்ள நீங்களே ஆரம்பிச்சிட்டீங்க.

ரஹீம்: என்ன போட்ருக்கான், கொஞ்சம் படிங்க.

ஜோசப்: இப்ப கணேஷ் சொன்ன மாதிரிதான் போட்ருக்கான். இதுக்குள்ள இன்னொரு விஷயமும் இருக்கு. கெஜ்ரிவால் சொல்றா மாதிரி இது ஏதோ மொய்லி மட்டும் திட்டம் போட்டு செஞ்ச விஷயம் இல்ல. இயற்கை எரி வாயுவானாலும் (LNG) சமையல் எரிவாயுவானாலும் (LPG) அதுக்கு எப்படி விலை நிர்ணயம் செய்யிறதுங்கறத சென்ட்ரல் பெட்ரோலியம் மினிஸ்ட்ரி அமைச்ச எக்ஸ்பர்ட் குழு ரொம்ப டிட்டெய்லா சொல்லியிருக்காங்க. அந்த அடிப்படையிலதான் பெட்ரோல், டீசல், கெரசின், குக்கிங் கேஸ் விலையெல்லாம் டிசைட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்போ ஒரு வருசமா பெட்ரோல் விலைய சந்தையிலருக்கற நிலவரத்துக்கேத்தாப்பல ஆயில் கம்பெனிங்களே டிசைட் பண்ணிக்கறாங்க. டீசல் விலையிலயும் மாசா மாசம் அம்பது பைசா வீதம் கூட்டுக்குங்கன்னு மத்திய அரசு சொல்லியாச்சு. ஆனா இப்பவும் சப்சிடி (subsidy)அதிகமா தேவைப்படற கெரசின், குக்கிங் கேஸ் விலைய மட்டும் இந்த குழு சொன்னா மாதிரி கவர்ன்மென்டேதான் ஃபிக்ஸ் பண்றாங்க. இயற்கை எரிவாயுவுக்கு ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு டாலர்னு ஃபிக்ஸ் பண்றாங்களாம். 

ரஹீம்: ஒரு யூனிட்டுன்னா?

ஜோசப்: ஒரு யூனிட்டுன்னா ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுன்னு அர்த்தம் (mBTU). 2012-13 உலக சந்தை விலை நிலவரப்படி இத தயாரிக்கறதுக்கு 3.6 அமெரிக்க டாலர் ஆவுதாம். அதாவது இந்திய மதிப்புல ரூ.223.45. அது இப்போ 4.2. டாலரா இன்க்ரீஸ் ஆயிருக்காம். இதுவும் உலக சந்தை நிலவரப்படி எஸ்ட்டிமேட்  பண்ணதுதான். கெஜ்ரிவால் சொல்றா மாதிரி இது ஏதோ ரிலையன்ஸ் லஞ்சம் குடுத்து செஞ்சது இல்ல. இந்த விலையே கட்டுப்படியாகலை, நஷ்டம்தான் வருதுங்கறதால ரிலையன்ஸ் மட்டுமில்லாம இந்திய அரசு கம்பெனிங்களான ONGCயும் இந்தியன் ஆயில் கம்பெனியும் கூட இயற்கை எரிவாயுவ ப்ரொட்யூஸ் பண்றதுல இன்ட்ரஸ்ட் காமிக்கிறதில்ல. அது மட்டுமில்லாம இந்த ஃபீல்டுல புதுசா கம்பெனிங்கள முதலீடு பண்ண வைக்கணும்னா இது ஒரு லாபகரமான முதலீடுதான்னு அரசு புரிய வைக்கணும். அதுக்கு இப்படி பெரிய முதலீடு பண்ணி ப்ரொட்யூஸ் பண்ற இயற்கை எரிவாயு விற்பனை விலைய கூட்டணும்னு இந்த எக்ஸ்பேர்ட் கமிட்டியே ரெக்கமன்ட் பண்ணியிருக்கு. அதனாலதான் வேற வழியில்லாம இந்த யூனிட் ரேட்ட டபுளாக்கியிருக்காங்களாம். ஆனா இந்த விலை ஏத்தம் நாங்க எதிர்பார்த்த விலைய விட நாப்பது பர்சன்ட் ஜாஸ்திதான்னு இந்தியன் ஆயில் அதிகாரி ஒருத்தரே சொல்லியிருக்கறத பாக்கறப்போ இந்த அளவுக்கு விலைய ஏத்தியிருக்க வேணாம்னுதான் தோனுது. ஆனா இந்த விலையேத்தத்த மனசுல வச்சிக்கிட்டுத்தான் ரிலையன்ஸ் கம்பெனி ப்ரொடக்‌ஷன குறைச்சிருக்குங்கற வாதம்லாம் சரியில்லேன்னுதான் தோனுது. ஏன்னா மார்கெட்ல சரியான விலை கிடைக்காத பொருள யாருமே உற்பத்தி பண்றதுக்கு தயங்கத்தான செய்வாங்க? அதுமாதிரிதான்  விலைய ஏத்தி குடுத்தா ப்ரொடக்‌ஷன கூட்டுவோம்னு ரிலையன்சும் சொல்லியிருக்காங்க. அதனால விலைய ஏத்துன கையோட நீங்க ஏற்கனவே கமிட் பண்ணியிருக்கற ப்ரொடக்‌ஷன் லிமிட்ட முழுசா செய்யணும்னுதான் பேங்க் காரன்டியெல்லாம் வாங்கிக்கிட்டுத்தான் கவர்ன்மென்ட் விலைய ஏத்தியிருக்காங்க. அதனால கெஜ்ரிவால் சொல்றா மாதிரி இதுல ஏதோ ஃப்ராடு இருக்கும்கறதல்லாம் சும்மா பப்ளிச்சிட்டிக்காகன்னுதான்னு நினைக்கிறேன். 

கணேஷ்: கரெக்ட். நானும் படிச்சேன். இந்த விஷயத்த எல்லாம் டீட்டெய்லா ப்ரைம் மினிஸ்டருக்கு பதினேழு பக்க லெட்டராவே மொய்லி எழுதியிருக்காராமே?

ஜோசப்: ஆமா. 

ரஹீம்: அப்போ கெஜ்ரிவால் அடிச்சிக்கிட்டிருக்கற ஸ்டன்டுல்ல இதுவும் ஒன்னுதான்னு சொல்லுங்க. 

கணேஷ்: இப்பவாவது புரிஞ்சிதே. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கறா மாதிரிதாங்க. முதல்ல தில்லியில கரண்ட் விலைய அப்பப்போ கூட்டி லாபம் பாக்கறாங்கன்னு சொல்லி ரிலையன்ஸ் மேல புகார் சொன்னார். இப்போ கேஸ் (gas). நாளைக்கி என்னவோ? 

ரஹீம்: நீங்க சொல்றதும் ஒருவகையில சரிதான் போலருக்கு. இவருக்கும் ரிலையன்ஸ் அம்பானிக்கும் இடையில வேற ஏதோ பர்சனலா க்ரீவன்ஸ் இருக்குமோன்னு கூட தோனுது. ஏன்னா கொஞ்ச நாளைக்கி முன்னால அம்பானிக்கு இவர் எழுதுன லெட்டர் ஒன்ன ஃபேஸ்புக்லதான் பாத்ததா என் பையன் சொன்னான். அதுலயும் கூட ஸ்விஸ் பேங்க்ல உங்களுக்கு அக்கவுன்ட் இருக்கு அப்படி இப்படீன்னு ஆதாரம் காமிக்க முடியாத நிறைய குற்றச்சாட்ட சொல்லியிருந்தாராமே? இப்படியெல்லாம் செய்யிறத விட்டுட்டு ரியல் இஷ்யூஸ பத்தி பேசினா நல்லாருக்கும். பாக்கப்போனா இவர் மேல பர்சனலாவே எவ்வளவோ புகார சொல்லலாம். 

ஜோசப்: (சிரிக்கிறார்) கரெக்ட். பைபிள்ல இதப்பத்தி ஒரு வாசகம் இருக்கு. முதல்ல உன் கண்ணுலருக்கற உத்தரத்த எடுத்துட்டு அடுத்தவன் கண்ணுலருக்கற தூசிய பாருன்னு... அதுமாதிரிதான் இருக்கு இவர் பேசறதும். 

கணேஷ்: சரி அவர விடுங்க. இங்க மேடம் நாப்பது தொகுதிக்கும் ஒரே லிஸ்டா ரிலீஸ் பண்ணியிருக்காங்களே படிச்சீங்களா?

ஜோசப்: படிக்காம? இதுவும் ஒரு ப்ரஷர் டாக்ட்டீஸ்தான்.

ரஹீம்: எதுக்கு அப்படி சொல்றீங்க?

ஜோசப்: அப்பத்தான கூட்டணி கட்சிக்காரங்க இவங்க குடுத்த தொகுதிய வாங்கிக்கிட்டு பேசாம இருப்பாங்க? அதான். கணேஷ்: (சிரிக்கிறார்) இருக்கும். மிஞ்சிப் போனா நாலஞ்சி இடம் குடுப்பாங்களா?

ஜோசப்: ரெண்டு கம்யூனிஸ்ட் கட்சிங்களும் ஆளுக்கு மூனு சீட் கேட்ருக்காங்களாம்! அப்படியான்னு கேட்டுட்டு நீங்க கேட்டத அப்படியே மேடத்துக்கிட்ட சொல்லிடறோம்னு சொன்னாங்களாம் பேச்சுவார்த்தையில கலந்துக்கிட்ட அதிமுக டீம்! இதுலருந்து என்ன தெரியுது? பேருக்குத்தான் கூட்டணி பேச்சுவார்த்தை. கடைசியில டிசைட் பண்றது மேடம்தான். 

ரஹீம்: ஒரு தேசிய கட்சின்னு சொல்லிக்கறவங்க ஒரு மாநில கட்சிக்கிட்ட இந்த அளவுக்கு இறங்கி போவணுமான்னுதான் தெரியல.

கணேஷ: அட நீங்க வேற பாய். ராஜ்யசபா எலெக்‌ஷன்ல ஒரு சீட்டுக்கே மேடத்துக்கிட்ட நடையா நடக்கற ஆளுங்கதான அவங்க? முந்தியெல்லாம் கம்யூனிஸ்ட்காரங்கன்னா அவங்க கொள்கையில விடாப்பிடியா நிப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனா இப்ப யார் சீட் ஜாஸ்தி குடுக்கறாஙக்ளோ அவங்க பக்கம் தாவிடறாங்க. கேக்கவே கேவலமா இருக்கு. 

ஜோசப்: (சிரிக்கிறார்) பதவி ஆசை யாரத்தான் விட்டுது!

ரஹீம்: அப்புறம் இன்னொரு விஷயம் ஜோசப்.

ஜோசப்: சொல்லுங்க. 

ரஹீம்: அதிமுகவோட தேர்தல் அறிக்கையப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

ஜோசப்: (சிரிக்கிறார்) எனக்கு அதுல புடிச்ச ஒரே விஷயம் இன்கம்டாக்ஸ் லிமிட்ட அஞ்சி லட்சமா கூட்டுவோம்னு சொன்னதுதான். மத்ததெல்லாம் எல்லா கட்சிங்களும் சொல்லப் போற விஷயம்தான். கட்சத் தீவ மறுபடியும் மீட்டுத் தருவோம், ராஜபக்‌ஷேவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வாங்கித் தருவோம்கறதெல்லாம் தமிழ்நாட்டுல உள்ளவங்களுக்கு வேணும்னா அட்ராக்‌ஷனா இருக்கலாம். 

கணேஷ்: அதானங்க இப்ப முக்கியம்? மேடத்துக்கு நாப்பது சீட்டும் கிடைக்கணும்னா இந்த மாதிரியெல்லாம் வாக்குறுதிங்கள குடுத்தாத்தான நடக்கும்?

ரஹீம்: நல்ல வேளை இந்தியாவுல இருக்கற எல்லாத்துக்கும் மிக்ஸி, க்ரைன்டர் குடுப்போம்னு சொல்லாம விட்டாங்களே!

(மூவரும் சிரிக்கின்றனர்.)

ரஹீம்: சிறிசேரி சிப்காட் ஏரியாவுல டிசிஎஸ்ல வேலை செஞ்ச பொண்ண கொலை செஞ்சி போட்ருந்தாங்களாமே, படிச்சீங்களா?

கணேஷ்: நானும்  படிச்சேன். கேக்கறதுக்கே மனசுக்கு கஷ்டமா இருந்துது. அதுலயும் அந்த ஏரியா எஸ்.ஐ. புகார் குடுக்க போனவங்கள நக்கல் பண்ணி புகார வாங்காம இழுத்தடிச்சாராமே அதையும் படிச்சேன்.  பொண்ணுங்க காணோம்னு ஸ்டேஷனுக்கு போய் நின்னா ஒம் பொண்ணு எவன் கூடயாவது ஓடிப்போயிருப்பான்னு கிண்டலடிக்கிறது மனுஷத் தன்மையே இல்ல. இந்த மாதிரி போலீஸ் ஆஃபீசர்ங்கள சஸ்பென்ட் பண்ணா மட்டும் போறாதுங்க, ஸ்ட்ரெய்ட்டா டிஸ்மிசே பண்ணணும். அப்பத்தான் மத்த ஸ்டேஷன்ல இருக்கறவங்களும் பயப்படுவாங்க. அந்தாள் மட்டும் கம்ப்ளெய்ன்ட் கிடைச்ச உடனே தேடிப்பார்த்திருந்தா காப்பாத்த முடியலேன்னாலும் உடல் அழுகிப் போறதுக்குள்ளயாவது கண்டுபிடிச்சிருக்கலாம்.

ரஹீம்: ஆமாங்க. இப்ப இருக்கற டெக்னாலஜிய வச்சி யார் தொலைஞ்சிப் போனாலும் ஒரே வாரத்துலயே கண்டுபிடிச்சிற முடியுமே. இந்த கேஸ்லயும் அதான நடந்துருக்கு? சிபிசிஐடிக்கு மாத்தி முழுசா ரெண்டு நாள் ஆகல. அதுக்குள்ள எல்லாரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்களே? பதினாலாம் தேதி ராத்திரி பத்தரைக்கி கொலை செஞ்சிட்டு அரை மணி நேரத்துக்குள்ள அந்த பொண்ணோட கார்ட யூஸ் பண்ணி ஏடிஎம்லருந்து பணம் எடுத்துருக்கான் பாருங்க. அத்தோட அந்த பொன்ணோட மொபைலையும் யூஸ் பண்ணியிருக்காங்க. இந்த ரெண்ட வச்சே கம்ப்ளெய்ன்ட் பண்ண உடனயே கண்டுபிடிச்சிருக்கலாம். பாவம் பத்து நாளைக்கி மேல வெயில்ல பாடி கிடந்து அழுகிப்போயி.... அத பாத்த பெத்தவங்க மனசு என்ன பாடுபட்டுருக்கும்?  

ஜோசப்: அது மட்டுமா? இந்த பத்து நாளும் பொண்ணுக்கு என்ன ஆச்சோன்னு அவங்க ரெண்டு பேரும் எவ்வளவு டென்ஷனாயிருப்பாங்க? 

கணேஷ்: வாஸ்தவம்தான். இது ஏங்க இந்த போலீஸ்காரங்களுக்கு மட்டும் தெரிய மாட்டேங்குது? காக்கிச் சட்டைய போட்டதுமே மனசையும் கழட்டி வச்சிருவாங்க போலருக்கு. 

ஜோசப்: சரி விடுங்க. இன்னைக்கி நேத்தா இப்படி நடக்குது? இந்த மாதிரி எத்தனை, எத்தனை கம்ப்ளெய்ன்ட்ஸ வாங்காம விட்டதால எத்தனை பேர் ட்ரேஸ் பண்ணவே முடியாம போயிருக்கும்? இதுக்கு போலீஸ் ஸ்டேஷன்ல சரியான அளவுக்கு மேன்பவர் இல்லாததும் ஒரு காரணமாயிருக்கலாம். யாருக்கு தெரியும்?

கணேஷ்: இந்த மாதிரி எக்ஸ்க்யூஸ்லாம் சொல்லி என்னங்க பிரயோசனம்? இந்த கேஸ பொறுத்தவரை அந்த பொண்ணு ஒரு பெரிய கம்பெனியில வேல செஞ்சிக்கிட்டிருந்துருக்கு. புகார் கிடைச்சதுமே ஒரு கான்ஸ்டபிள அந்த கம்பெனிக்கி அனுப்பி விசாரிச்சிருந்தாலே போதும் அந்த பொண்ணு அன்னைக்கி ஆஃபீஸ் வந்துருந்தாங்களா? அப்படீன்னா எத்தன மணிக்கி போனாங்க அப்படீன்னு தெரிஞ்சிக்கிட்டிருக்கலாம். அப்புறம் அந்த பொண்ணோட மொபைல் ஃபோன் நம்பர வச்சி அதுலருந்து போன கால்ஸ ட்ரேஸ் பண்ணியிருந்தாலே அன்னைக்கி ராத்திரி பத்து மணிக்கி மேல போயிருந்த கால்ஸ வச்சே அந்த பொண்ணு அவங்க எங்க  இருந்தாங்க யார்கிட்ட பேசினாங்கன்னுல்லாம் கண்டுபிடிச்சிருக்கலாமே. ஊர் பேர் தெரியாத பொண்ணுன்னா பரவால்லை. 

ரஹீம்: சரிங்க. எல்லாம் தலையெழுத்து வேற என்ன சொல்றது? அப்புறம் உங்க ராஜ்நாத் திடீர்னு இஸ்லாமியர்ங்க கிட்ட மன்னிப்பு கேக்கக் கூட நாங்க தயார், தயவு செஞ்சி எங்களுக்கு ஒரு தடவ ஆட்சி பண்றதுக்கு சான்ஸ் குடுங்கன்னு கெஞ்சிற அளவுக்கு வந்துட்டாரே?

ஜோசப்: (சிரிக்கிறார்) காரியம் பெருசா வீரியம் பெருசான்னு பாத்துருப்பார் அதான் கால்ல விழக்கூட ரெடியாருக்கார். என்ன கணேஷ்?

ரஹீம்: (குறுக்கிட்டு) கரெக்டா சொன்னீங்க. இப்ப கால்ல விழுவார் ஆட்சிக்கு வந்தப்புறம் கால வாரி விட்ருவார். என்னங்க அப்படித்தான?

கணேஷ்: (எரிச்சலுடன்) பாய், கடுப்படிக்காதிங்க. அவர் சொன்னது இதுதான் குஜராத் கலவரத்துக்கு நாங்க காரணம்னு நீங்க நினைச்சீங்கன்னா அதுக்கு மன்னிப்பு கேக்க தயார்னுதான் சொன்னார். ஆனா அந்த மாதிரி கூட தில்லி கலவரத்துக்கு நாங்க மன்னிப்பு கேக்க தயார்னு ராகுல் சொல்ல மாட்டேங்கறாரே அதுக்கு என்ன சொல்றீங்க?

ஜோசப்: சரி அத விடுங்க. ரெண்டு நாளைக்கி முன்னால VHP லீடர் அஷோக் சிங்கால் இந்துக்கள் குறைஞ்சது அஞ்சி பிள்ளைங்களையாவது பெத்துக்கணும். அப்பத்தான் இந்து மதத்த காப்பாத்த முடியும்னு சொன்னத படிச்சீங்களா?

ரஹீம்: (சிரிக்கிறார்) நானும் படிச்சேன். அத்தோட நின்னுருந்தா பரவால்லை இஸ்லாமியர்களும் கிறிஸ்த்துவங்களும் ரெண்டோட நிறுத்திக்கறதில்லையாம். அதனால இப்படியே போனா அந்த ரெண்டு மதத்த சேந்தவங்களும் இந்து மதத்த சேந்தவங்கள விட ஜாஸ்தியாயிருவாங்களாம். சிரிக்கிறதா அழுவறதான்னே தெரியல. இப்படிப்பட்ட ஆளுங்கதான மோடிக்கி பின்னால நிக்கிறாங்க? அத நினைச்சாத்தான் பயமாருக்கு.  

கணேஷ் பதிலளிக்காமல் அமர்ந்திருக்கிறார்.

ஜோசப்: உங்களாலயே பதில் சொல்ல முடியல இல்லே? பாஜக ஜெயிச்சி ஆட்சிய புடிச்சா அஷோக் சிங்கால் மாதிரியான ஆளுங்களாலதான் பிரச்சினை வரும். மதமாற்ற தடுப்புச் சட்டம் இன்னைக்கி பல ஸ்டேட்ஸ்ல இருந்தாலும் அத யாருமே பெருசா யூஸ் பண்றதில்லை. இவர் சொல்றத பாத்தா இதே மாதிரி ஃப்யூச்சர்லயும் இருக்குமாங்கற க்வெஸ்ச்சின வருது. 

ரஹீம்: இந்து மதத்திலருந்து யாராச்சும் இஸ்லாமிய மதத்துக்கோ இல்ல கிறிஸ்த்துவ மதத்துக்கோ மாறுனா அதுக்கு முக்கியமான காரணம் கிராமப்புறங்கள்ல இப்பவும் இருக்கற சாதி கொடுமைதாங்க. மத்தப்படி யாரும் போயி எங்க மதத்துக்கு மாறுங்கன்னு கம்பெல் பண்றது இல்ல. இந்த சாதிக் கொடுமைய முழுசா ஒழிச்சாலே போறும். அத விட்டுப் போட்டு இந்த மாதிரி அஞ்சி குழந்தைங்கள பெத்துக்குங்கன்னுல்லாம் சொல்றது முட்டாள்தனம். என்ன சொல்றீங்க?

ஜோசப்: அது நம்ம கணேஷுக்கே தெரியுதே? அதனாலதான பதில் பேச முடியாம ஒக்காந்துருக்கார்? விடுங்க. வேற விஷயத்த பேசுவோம். 

ரஹீம்: ஆந்திரா விஷயம் ஒரு வழியா முடிஞ்சிருச்சி. கிரண்குமாரும் ராஜிநாமா செஞ்சிட்டார். ஆனா தில்லியில செஞ்சா மாதிரியே சட்டசபைய கலைக்கற ஐடியா இல்ல போலருக்கே?

ஜோசப்: அப்படித்தான் பேப்பர்ல போட்ருக்கான். தெலுங்கானா காங்கிரஸ்காரங்க இந்த நேரத்துல பிரசிடென்ட் ரூல் வச்சா அது காங்கிரசுக்கு பாதகமாத்தான் முடியும் அதனால தாற்காலிகமா ஒருத்தர சீஃப் மினிஸ்டரா போடலாம்னு சிபாரிசு செஞ்சிருக்காங்களாமே.

கணேஷ்: (கேலியுடன்) அப்பத்தான கவர்ன்மென்ட் மெஷினரிய யூஸ் பண்ணி ஜெயிக்க முடியும்? எப்போ ஸ்டேட்டையே ரெண்டா பிரிச்சாச்சோ அப்பவே ரெண்டு ஸ்டேட்டுக்கும் புதுசா எலக்‌ஷன் நடத்தறதுதானங்க முறை?

ரஹீம்: அப்போ நீங்க ஆட்சியிலருக்கற ஸ்டேட்ஸ்ல எல்லாம் கவர்ன்மென்ட் மெஷினரிய யூஸ் பண்ண மாட்டீங்க, அப்படித்தான?

கணேஷ்: காங்கிரஸ் யூஸ் பண்ணலாம் நாங்க பண்ணக் கூடாதா? இதென்னங்க நியாயம்?

ஜோசப்: (சிரிக்கிறார்) அதனாலதானோ என்னவோ தற்போதைக்கி பிரசிடென்ட் ரூல் வேணாம்னு காங்கிரஸ்காரங்களும் ரெக்கமன்ட் பண்ணியிருக்காங்க. அத மட்டும் குத்தம் சொல்றீங்க?

கணேஷ்: அப்போ கிரண்குமார் ரெட்டியவே புது எலக்‌ஷன் நடக்கற வரைக்கும் கன்டினியூ பண்ணுங்கன்னு கவர்னர் சொல்லியிருக்க வேண்டியதுதான?

ரஹீம்: அதெப்படி? கவர்ன்மென்ட் தானா கவிழ்ந்துருந்தா நீங்க சொன்னா மாதிரி செய்யலாம். இன்னமும் அங்க காங்கிரசுக்கு ஸ்ட்ரெங்த் இருக்கு. அப்படியிருக்கறப்போ சட்டசபையை எதுக்கு கலைக்கறது? கிரண் குமாருக்கு பதிலா சிரஞ்சீவி மாதிரி யாரையாச்சும் சீஃப் மினிஸ்டரா போட்ற வேண்டியதுதான். என்ன சொல்றீங்க ஜோசப்?

ஜோசப்: கரெக்ட். ஆனா ஜெனரல் எலக்‌ஷனோடயே ரெண்டு ஸ்டேட் எலக்‌ஷனையும் நடத்திறணும். 

ரஹீம்: பார்லி எலக்‌ஷனோடவே இந்த ரெண்டு ஸ்டேட் எலக்‌ஷனையும் நடத்த நாங்க தயார்னு எலக்‌ஷன் கமிஷனே சொல்லிருச்சே?

ஜோசப்: அப்படியா நா மிஸ் பண்ணிட்டேன் போலருக்கு. அப்படின்னா சரி. 

கணேஷ்: சரிங்க வேற ஏதாச்சும் இருக்கா. இன்னைக்கி நா கொஞ்சம் அர்ஜன்டா போகணும். (எழுந்து நிற்கிறார்)

ரஹீம்: என்ன கணேஷ், இன்னைக்கி ரொம்ப டல்லாய்ட்டீங்க போலருக்கு? அந்த VHP விஷயமா?

கணேஷ்: பாய், எரிச்சல் மூட்டாதீங்க. உண்மையாவே எனக்கு வேற வேலை இருக்கு, நா வரேன். (அவர் அவசர அவசரமாக்க திண்ணையிலிருந்து இறங்கி நடக்கிறார்)

ஜோசப்: சரி விடுங்க பாய். இந்த கோவம்லாம் எத்தன நாளைக்கி? அடுத்த வாரம் வருவார் பாருங்க. 

ரஹீம்: (சிரிக்கிறார்) அதுவும் சரிதான். நமக்குள்ள இன்னைக்கி நேத்தா பழக்கம்? வந்துருவார். 

ஜோசப்பும் ரஹீம்பாயிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு சாலையில் இறங்க, ரஹீம்பாய் வீட்டுக்குள் நுழைகிறார்.

*******



20 பிப்ரவரி 2014

தமிழக முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!!

ரஹீம் பாயும் கணேஷும் திண்ணையில் அமர்ந்து அன்றைய பத்திரிகையை எதிரும் புதிருமாக அமர்ந்துக்கொண்டு வாசித்துக்கொண்டிருக்க ஜோசப் வந்து அமர்கிறார். 

ரஹீம்: (எரிச்சலுடன்) என்னய்யா படிச்சி முடிச்சாச்சா?

கணேஷ்: (நிமிர்ந்து பார்க்கிறார்) இல்லை. கொஞ்சம் பொறுங்க.

ரஹீம்: (எரிச்சலுடன்) ஏங்க  நீங்க என்ன எல்கேஜி குழந்தையா எழுத்துக்கூட்டி படிக்க? இதுக்குத்தான் ஒரு ஆளு படிச்சிக்கிட்டிருக்கறப்ப எதுத்தாப்பல ஒக்காந்து படிக்கக் கூடாதுங்கறது.

ஜோசப் (சிரிக்கிறார்) அப்படி என்னங்க இருக்கு ரெண்டு பேரும் ஒரே நேரத்துல படிக்கறீங்க?

அப்போதுதான் ஜோசப் வாசலில் நிற்பதை ரஹீம் பாய் பார்க்கிறார். : வாங்க ஜோசப். ஒரு பேஜ படிச்சி முடிக்கறதுக்கு கால் மணி நேரம் போறாது? சும்மா தலைப்ப பாத்துட்டு போகாம விழுந்து விழுந்து படிக்கறத பாருங்க. அதுவும் ஓசியில.

கணேஷ்: (பேப்பரை தள்ளிவிட்டு நிமிர்கிறார்) இந்தாய்யா பாய், ஏதோ நியூஸ் இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கேன்னுட்டு பாத்தேன். ஒரேயடியா பிகு பண்ணிக்காத, நாங்களும் வீட்ல பேப்பர வாங்கத்தான் செய்யிறோம். 

ரஹீம்: அப்போ அங்கயே ஒக்காந்து படிச்சிட்டு வர வேண்டியதுதானய்யா?

கணேஷ்: நாங்க இங்க்லீஷ் பேப்பர்ல வாங்கறோம்? அதுல இந்த மாதிரி நீயூஸ்லாம் விலாவாரியா போடறதில்லையேய்யா!

ரஹீம்: அது சரி. அப்போ நாளையிலருந்து தமிழ் பேப்பர போடச் சொல்லு. 

ஜோசப்: சரி சரி சண்டைய ஆரம்பிச்சிறாதீங்க. அப்படி என்ன போட்ருக்கான் சொல்லுங்களேன் கேப்போம். 

ரஹீம்: அதாங்க நேத்து பார்லிமென்ட் ஒளிபரப்ப சொல்லாம கொள்ளாம நிறுத்திட்டாங்களே அதப் பத்தித்தான்.

ஜோசப்: சரிதான? அதுல ஒன்னும் தப்பு இருக்கறாப்பல எனக்கு தெரியல. ஆந்திரா எம்.பிங்க. சீமாந்திரா பேனர புடிச்சிக்கிட்டு நிக்கறதே அவங்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்கணுங்கறதுக்குத்தான? அதுமட்டுமில்லாம நாம போன வாரம் இந்த மாதிரி சில்லியா பிகேவ் பண்ற எம்பிங்கள இங்க நம்ம சட்டசபையில செய்யிறா மாதிரி கூண்டோட வெளியேத்தணும் சொல்லிக்கிட்டிருந்தோம்ல, அது ஸ்பீக்கர் அம்மா காதுவரைக்கும் போயிருச்சோ என்னவோ? அந்த மாதிரி வெளியேத்துற சீனையெல்லாம் எதுக்கு டெலிக்காஸ்ட் பண்றதுன்னு நினைச்சிருப்பாங்க. எதுக்குங்க தேவையில்லாம இந்த மாதிரியான கூத்தையெல்லாம் கவர்ன்மென்ட் பணத்துல டெலிகாஸ்ட் பண்றது?

கணேஷ்: (கோபத்துடன்) அதெப்படிங்க? ஆந்திரா எம்பிங்க மட்டுமா இத எதுக்குறாங்க? 

ரஹீம்: அது இருக்கட்டும் நேத்து வரைக்கும் நாங்க இந்த பில்ல பாஸ் பண்ண விடமாட்டோம்னு பிஜேபி சொல்லிக்கிட்டிருந்தாங்களே அது என்னாச்சி? திடீர்னு நாங்க சப்போர்ட் பண்றோம்னு சொல்லிட்டாங்க? எதாச்சும் அன்டர்க்ரவுன்ட் டீலிங்கா?

ஜோசப்: (சிரிக்கிறார்) அன்டர்க்ரவுன்டோ அப்பர் க்ரவுன்டோ பில் பாசாயிருச்சி. ஆனா ஒரு டவுட்டுங்க.

ரஹீம்: என்ன?

ஜோசப்: இந்த விஷயத்துல காங்கிரஸ் அவசரப்படறதே புரியல. அப்படி இருக்கறப்போ பிஜேபி எதுக்காக அவசரப்படறாங்க?

ரஹீம்: அட நீங்க ஒன்னு ஜோசப். இது ஒரு கான்ட்ரவர்சியல் பில்லாச்சே. எப்படியோ நாம ஆட்சிக்கு வர்றதுக்குள்ள இது முடிஞ்சிரட்டுமேன்னு பாத்துருப்பாங்க. அப்படியே இதால ஏதாச்சும் பெருசா பிரச்சினை வந்துதுன்னா நாங்க அப்பவே சொன்னோம் காங்க்ரஸ்தான் கேக்கலேன்னுட்டு பழிய அவங்க மேல தூக்கி போட்ருலாமே?

ஜோசப்: ஆனா காங்கிரசுக்கு இது ஒரு பெரிய நஷ்டமாகும் போலருக்கு. தெலுங்கானாவுலருந்தும் இவங்களுக்கு சீட் எதுவும் கிடைக்காது, சீமாந்தாராவுலருந்தும் ஒன்னும் கிடைக்கப் போறதில்ல. எல்லாமே ரெண்டு சைட்லயும் இருக்கற ரீஜியனல் பார்ட்டீசுக்குத்தான் போகப் போகுது. அந்த சீட்டுங்களால அவங்களுக்கும் பிரயோஜனம் இருக்காது காங்கிரசுக்கும் பிரயோஜனம் இருக்காது. 

கணேஷ்: (சிரிக்கிறார்) இதுதானங்க எங்களுக்கு வேணும்? அதுக்குத்தான் கடைசி நிமிஷத்துல இந்த மசோதாவ சப்போர்ட் பண்றதுன்னு டிசைட் பண்ணோம். இதான் மோடி ஸ்ட்ரோக்குங்கறது!

ரஹீம்: (எரிச்சலுடன்) இந்த மாதிரி கலங்குன குட்டையில மீன் பிடிக்கிற புத்தி உங்கள விட்டு எங்கங்க போவும்? இதுல மோடி ஸ்ட்ரோக்குன்னு வேற பீத்திக்கிறீங்க? 

கணேஷ்: என்ன வேணா சொல்லிக்குங்க பாய். இந்த தெலுங்கானா காங்கிரஸ் தனக்குத்தானே அடிச்சிக்கிற இன்னொரு ஆணி. அப்போ தமிழ்நாடு மாதிரியே ஆந்திராவையும் காங்கிரஸ் சுத்தமா இழந்தாச்சின்னு சொல்லலாம். இனி எத்தன வருசம் ஆனாலும் அங்க காங்கிரஸ் வர சான்சே இல்ல.

ஜோசப்: அதென்னவோ உண்மைதான். சரிங்க, இந்த வாரம் இன்னொரு ஹாட் நியூஸ் ராஜீவ் காந்தி கொலை கேஸ்ல தூக்குத் தண்டனை விதிச்சிருந்தவங்களுக்கு லைஃப் சென்டன்ஸாக்குனதுதான? இதப்பத்தி நீங்க என்ன சொல்றீங்க?

கணேஷ்: எனக்கென்னவோ அது சரியான டிசிஷன்னுதான் தோனுது. மொதல்ல இவங்கள ராஜீவ் காந்தி கொலையாளிகள்னு கூட சொல்லக்கூடாது. விவரமில்லாம அந்த கொலையாளிங்களுக்கு ஏதோ ஒரு விஷயத்துல ஹெல்ப் பண்ணிக்கிட்டு மாட்டிக்கிட்ட அப்பாவிங்கன்னுதான் சொல்லணும். குறிப்பா இந்த பேரறிவாளன். அவர் சப்ளை பண்ண பேட்டரிய யூஸ் பண்ணித்தான் அந்த குண்ட வெடிக்க வச்சாங்களாம். அத நாந்தான் சப்ளை பண்ணேன்னு அறிவு ஒத்துக்கிட்டாலும் அது எதுக்கு யூஸ் பண்ணப் போறாங்கன்னு எனக்கு தெரியாதுங்கன்னு அவர் சொன்னத சிபிஐ ஒத்துக்கலையாம். இதுல இன்னொரு விஷயமும் இருக்குங்க. இந்த கேஸ்ல அரெஸ்டான எல்லாரையுமே அவங்க போலீஸ் கிட்ட குடுத்த ஒப்புதல் வாக்குமூலத்த வச்சித்தான் கன்விக்ட் பண்ணியிருக்காங்க.

ரஹீம்: அப்படியா? சாதாரணமா ஒரு ஜூடிஷியல் மஜிஸ்டிரேட்டுக்கு முன்னால எழுத்து மூலமா குடுக்கற வாக்குமூலம் மட்டுந்தான செல்லுபடியாகும்? 

ஜோசப்: அது என்னவோ உண்மைதான். ஆனா தடா (TADA) சட்டத்துல கைதான குற்றவாளிங்களுக்கு இந்திய எவிடென்ஸ் ஆக்ட்ல இருக்கற இந்த கண்டிஷன் பொருந்தாதாம். எஸ்.பி. ராங்க்ல இருக்கற ஒரு போலீஸ் அதிகாரி முன்னால குற்றவாளிங்க குடுக்கற வாக்குமூலம் மட்டுமே போறுமாம். அதனாலதான் அவங்க வாக்குமூலத்த வச்சே அவங்க எல்லாரையும் கன்விக்ட் பண்ணிட்டாங்க.

ரஹீம்: சரிங்க. எனக்கு ஒரு டவுட்டு. இந்த கேஸ லோக்கல் போலீஸ் மட்டுமில்லாம டாக்டர். கார்த்திக்கேயன் தலைமையில சிபிஐ ஒரு ஸ்பெஷல் இன்வெஸ்ட்டிகேஷன் டீமையே போட்டு விசாரிச்சி குடுத்த ரிப்போர்ட்ட வச்சித்தான சுப்ரீம் கோர்ட்டும் நம்ம தடா கோர்ட்டோட தீர்ப்ப கன்ஃபர்ம் பண்ணாங்க? இப்ப திடீர்னு இவங்க எல்லாரும் அப்பாவிங்கன்னு சொன்னா அத எப்படி ஏத்துக்கறது? அதுவும் இல்லாம இந்த மூனு பேர்ல பேரறிவாளன் மட்டும்தாங்க தமிழ் ஆளு.  சாந்தனும் முருகனும் LTTEகாரங்களாமே. அவங்க அந்த டைம்ல இங்க என்னாங்க செஞ்சிக்கிட்டு இருந்தாங்க?

ஜோசப்: வாஸ்தவம்தான். ஆனா இன்னைக்கி இருக்கற சூழல்ல இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேக்க யாருக்குங்க தைரியம் இருக்கு? இப்ப இவங்க உண்மையிலேயே குத்தவாளிங்களா இல்லையாங்கறது ஒரு விஷயமே இல்ல. சுப்ரீம் கோர்ட்டே அவங்க தூக்கு தண்டனையை ரத்து பண்ணிட்டாங்க. ஏற்கனவே இருபது வருசத்துக்கும் மேல ஜெயில்ல இருந்துருக்கறதால இனிமேலும் இவங்கள உள்ள வச்சிக்கிட்டிருக்கணுமாங்கறதுதான் கேள்வியே?

ரஹீம்: உண்மைதான். ஆனா தீர்ப்பு வந்த அடுத்த நாளே நளினி உட்பட இவங்க எல்லாரையும் ரிலீஸ் பண்ணிறலாம்னு மேடம் டிசிஷன் எடுத்தது கொஞ்சம் ஆச்சரியம்தான். 

கணேஷ்: அதுவும் ஒரு பப்ளிசிட்டி ஸ்டன்ட்டுத்தான். 

ஜோசப்: காலத்தின் கட்டாயம்னும் சொல்லலாம். இப்போ வைக்கோ மாதிரி ஆளுங்க நாங்க சொன்னதுக்கப்புறந்தான் இவங்கள ரிலீஸ் பண்ணாங்கன்னு சொல்லிக்க முடியாதுல்ல? அதான் அடுத்த நாளே இவங்கள ரிலீஸ் பண்றதுன்னு டிசைட் பண்ணி சென்டருக்கு அனுப்பிட்டாங்க. இனி சென்டர்தான் பொறுப்பு. 

ரஹீம்: ஆனா அதுக்கும் மேடம் ஒரு செக் வச்சிருக்காங்களே? ஏதாச்சும் சொல்றதா இருந்தா மூனு நாளைக்குள்ள சொல்லிறணும். இல்லன்னா நா ரிலீஸ் பண்ணிருவேன்னுல்ல மிரட்டியிருக்காங்க?

கணேஷ்: அதுக்கும் ஷிண்டே பதில் குடுத்துருக்காரே. எனக்கு இதுவரைக்கும் எந்த லெட்டரும் வரல. அப்படியே இருந்தாலும் சிபிஐ விசாரிச்ச கேஸ்லருந்து விடுவிக்கிற அதிகாரம் ஸ்டேட் கவர்ன்மென்ட்டுக்கு இல்லேன்னும் சொல்லிட்டாரே. பாப்போம் என்ன நடக்குதுன்னு.

ஜோசப்: இதுக்கிடையில அவங்க தூக்குத் தண்டனையை ரத்து பண்ணி போர்ட்ட ஆர்டர மறுபரிசீலனை செய்யணும்னு சென்டரலருந்து பெட்டிஷன் பைல் பண்றாங்களாமே? அதனால அதுக்கு கோர்ட்லருந்து தீர்ப்பு வர வரைக்கும் இவங்கள ரிலீஸ் பண்றதுக்கு சான்ஸ் இல்லேன்னுதான் நினைக்கிறேன்.

ரஹீம்: ஓ! இது வேற இருக்கா? 

ஜோசப்: ஆமா. இன்னும் ரெண்டொரு நாள் வெய்ட் பண்ணித்தான் பாக்கணும். இது எப்படி முடியப் போவுதுன்னு.

கணேஷ்: எது எப்படியோ இந்த விஷய்த்துல மேடத்துக்கு நல்ல மைலேஜ் கிடைச்சிருச்சி. 

ரஹீம்: அப்புறம் இந்த விஷயத்த படிச்சீங்களா?

கணேஷ்: இந்த விஷயம்னா? 

ரஹீம்: அன்னா ஹசாரே மமதா மேடம் மாதிரி சிம்பிளான ஆளுதான் இந்தியாவுக்கு தேவைன்னு சொல்லியிருக்காரே? 

கணேஷ்: (எரிச்சலுடன்) அவருக்கு புத்தி பிசகிருச்சின்னு நினைக்கறேங்க. மமதா மேடம் டிரஸ் வேணும்னா சிம்பிளா பண்ணிக்கிட்டிருக்கலாம். அவங்கள மாதிரி ஈகோ புடிச்சவங்கள நா பாத்ததே இல்ல. என்னமா கோவம் வருது அந்தம்மாவுக்கு? யார் எதிர்த்து கேள்வி கேட்டாலும் ஒன்னு அடி உதை, இல்லன்னா உள்ள தள்ளிடறது. இவங்களா சிம்பிள் லேடி? அன்னாவுக்கு சம்திங் ராங்.

ஜோசப்: (சிரிக்கிறார்) ஒருவேளை கெஜ்ரிவால இன்ஸல்ட் பண்றதா நினைச்சிக்கிட்டு அன்னா இப்படி செய்றாரோ என்னவோ?

கணேஷ்: அதுக்காக இப்படியா? இப்படியே பேசிக்கிட்டிருந்தார்னா அன்னாவ ஒரு பய மதிக்க மாட்டான். இதுக்கு அவர் பேசாம இருந்துருக்கலாம். 

ரஹீம்: இந்த விசயத்துல மட்டும்தான் நாம மூனு பேரும் ஒத்துப்போறோம் போலருக்கு. (சிரிக்கிறார்)

ஜோசப்: சரிங்க. போன வாரமே இதப் பத்தி டிஸ்கஸ் பண்லாம்னு நினைச்சேன். 

ரஹீம்: எதப்பத்தி?

ஜோசப்: அதாங்க நம்ம ஸ்டேட் கவர்ன்மென்டோட பட்ஜட்ட பத்தி.

கணேஷ்: அதுல என்ன டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கு? எப்பவும் போல சொதப்பல்தான். எலக்‌ஷன் வருசம்கறதால புதுசா வரி எதுவும் போடாம பாவ்லா பண்ணியிருக்காங்க. எலெக்‌ஷன் முடியட்டும் மறுபடியும் பால், பஸ் கட்டணம், எலக்ட்ரிக் சார்ஜஸ் எல்லாத்தையும் ஏத்திருவாங்க பாருங்க. 

ரஹீம்: அப்படின்னு ஒரேயடியா சொல்லிற முடியாது. சில நல்லதுங்களும் இருக்கத்தான் செய்யிது. 

கணேஷ்: (எரிச்சலுடன்) எது, மிக்ஸி, க்ரைன்டர், ஆடு, மாடுன்னு  குடுக்கறதுக்கு போன வருசம் மாதிரியே ஒரு பெரிய தொகைய ஒதுக்குனத சொல்றீராக்கும்? இதெல்லாம் ஒரு திட்டமாய்யா? யார் வீட்டு காச எடுத்து யாருக்கு குடுக்கறது?

ரஹீம்: அப்போ முந்தைய கவர்ன்மென்ட் டிவி, கேஸ்னு குடுத்தது மட்டும் சரியா?

கணேஷ்: அதுவும் தப்புத்தாங்க. ஸ்கூல் பசங்களுக்கு மடிக்கணினி குடுக்கறது கூட தேவையில்லாத விஷயம்தான். பாதிக்கு மேல வித்துட்டாங்க தெரியுமா? ப்ளஸ் டூ படிக்கறவங்களுக்கு சைக்கிள் குடுக்கறத ஏத்துக்கலாம். ஆனா லேப்டாபுங்கறதெல்லாம் ரொம்ப ஓவர். இந்த ரெண்டு திட்டங்களுக்குமே ஏறக்குறைய ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்காங்க போலருக்கு.

ரஹீம்: சரிங்க. ரோடு போடறதுக்குன்னே 2800 கோடிய ஒதுக்கியிருக்காங்களாமே அது நல்லதில்லையா?

கணேஷ்: (எரிச்சலுடன்) பாய், விவரம் புரியாம பேசாதீங்க. எங்க ஏரியாவுல ட்ரெய்னேஜ் போடறேன்னுட்டு ரோடுங்களையெல்லாம் தோண்டி போட்டு ரெண்டு வருசத்துக்கு மேல ஆவுது. சரி ட்ரெய்னேஜாவது வேலை செய்யிதான்னு பாத்தா அதுவும் இல்லை. நிறைய எடத்துல அந்த திட்டமே ஃபெய்லாயிருச்சாம். தெரியாமத்தான் கேக்கறேன். இதே மாதிரிதானங்க போன தடவையும் ஒதுக்குனாங்க? அந்த திட்டத்தோட இன்றைய ஸ்டேட்டஸ் என்னங்க? அதப் பத்தி எதுவுமே சொல்லாம மறுபடியும் மறுபடியும் ரெண்டாயிரம் மூனாயிரம் கோடின்னு ஒதுக்கிட்டே போனா என்னங்க அர்த்தம்? மொதல்ல இவங்க ஆட்சிக்கு வந்ததுலருந்து இந்த விஷயத்துக்கு எத்தன கோடி ஒதுக்குனாங்க அதுல எத்தன கோடி செலவு செஞ்சாங்கன்னு ஒரு ஆக்‌ஷன் டேக்கன் ரிப்போர்ட் தரட்டும். 

ஜோசப்: கணேஷ் சொல்றத நூத்துக்கு நூறு நா சப்போர்ட் பண்றேங்க. ஒன்னும் வேணாம். சென்னையிலருந்து இருபது கி.மீட்டர் தூரத்துல இருக்குற அம்பத்தூர், ஆவடியிலயே இதுவரைக்கும் ட்ரெய்னேஜுக்கு தோண்டுன ரோட்டுல பெரும்பாலான ரோடுங்க அப்படியேதான் கிடக்குது. ஏறக்குறைய பத்துவருசத்துக்கு முன்னால அம்பத்தூர் ஏரியாவுல தொடங்குன ட்ரெய்னேஜே திட்டமே இன்னைக்கி வரைக்கும் இம்ப்ளிமென்ட் பண்ணல. அப்படியிருக்கறப்போ எதுக்கு இதே மாதிரி ஸ்கீம்ஸ மத்த எடங்கள்லயும் ஸ்டார்ட் பண்றாங்க?

ரஹீம்: இது இங்க மட்டுமில்ல ஜோசப், ஏறக்குறைய தமிழ்நாடு முழுசுமே இதே மாதிரிதான் செஞ்சி வச்சிருக்காங்களாம். கவர்ன்மென்ட் பணம் கோடி கணக்குல செலவாயிருக்காம். இதுல பெரும் பகுதி யார் யாருக்கோ போயிருக்காம். 

கணேஷ்: இருக்கும். எங்க ஏரியாவுல ஆளுங்கட்சி ஆள் ஒருத்தர் இருக்கார். அவர் போன ரெண்டு வருசத்துல ரெண்டு பெரியா லாரி, ஒவ்வொரு பையனுக்கு புதுசா கார்னு ஜமாய்க்கிறாருங்க. எங்கருந்துதான் இவங்களுக்கு காசு வருதுன்னு நானும் நினைச்சிருக்கேன். இப்பத்தான் புரியுது எங்கருந்து வருதுன்னு.

ரஹீம்: அவரே ஒரு ரோடு கான்ட்ராக்டரோ என்னவோ?

கணேஷ்: (சிரிக்கிறார்) கரெக்ட் பாய்.

ஜோசப்; கவர்ன்மென்ட் இந்த மாதிரி திட்டங்கள கொண்டு வரப்போ அதுல இத்தன பர்சென்ட் இந்த மாதிரி ஆளுங்க கபளீகரம் பண்றது நடக்கறதுதான? அதுக்காக திட்டங்களே வேணாம்னு சொல்லிற முடியுமா என்ன?  பட்ஜெட்ல நல்ல திட்டங்களும் இல்லாம இல்லீங்க. குறிப்பா சொல்லணும்னா இந்த திட்டங்கள சொல்லலாம். 

1. காற்றாலையிலருந்து கிடைக்கற எலக்ட்ரிசிட்டிய கொண்டு போறதுக்கு பாதை (transmission channels) ஜெர்மன் நாட்டு கம்பெனி கே.எப்.டபிள்யூவோட சேந்து 1600 கோடி செலவுல போடப் போறாங்களாம்.  

2. மீடியம் மற்றும் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ மேப்படுத்துறதுக்கு ரூ.750 கோடி.

3.தமிழ்நாடு முழுசும் ஆதரவில்லாதவங்க தங்கறதுக்கு ரூ.65 கோடியில விடுதிங்க கட்டப்போறாங்களாம். 

4.சூரியன்லருந்து எலக்ட்ரிசிட்டி தயாரிக்கற ஆலைகளை அமைக்கறதுக்கு ரூ.100 கோடியில திட்டம். 

5. ஸ்டேட்டுக்குள்ளருக்கற எல்லா ரிவர்ஸ்சையும் (rivers) ஒன்னு சேக்கற திட்டத்துக்கு ரூ.100 கோடியில திட்டம். 

கணேஷ்: அப்படீங்களா? நீங்க சூரியன்லருந்து எலக்ட்ரிசிட்டி தயாரிக்கற திட்டம்னு சொன்னதும் எனக்கு ரெண்டு நாளைக்கி முன்னால டிஸ்கவரி டிவியில பாத்த ப்ரோக்ராம் ஞாபகத்துக்கு வருதுங்க.  வேர்ல்ட்லயே பெரிய சோலார் பவர் ஜெனரேட்டிங் யூனிட் ஒன்ன காமிச்சான். அட்டகாசமா இருந்துது. அங்கருந்து ப்ரொட்யூஸ் பண்ணப்போற பவர வச்சி ஏறக்குறைய பத்து பெரிய இன்டஸ்ட்ரீயல் யூனிட்ஸ ரன் பண்லாமாம். வருசத்துல ஆறு மாசம் இருக்கற வெயில வச்சே அவங்களால எலக்ட்ரிசிட்டி தயார் பண்ண முடியும்னா வருசத்துல ஒம்போது மாசத்துக்கு மேல சுட்டெரிக்கற சூரியன வச்சி நாம எவ்வளவு எலக்ட்ரிசிட்டி தயாரிக்கலாம்? 

ரஹீம்: ஜோசப் கூவம் ரிவர மேம்படுத்தறதுக்கு ரூ. 4000 கோடியில புதுசா ஒரு மெகா திட்டம் வருதாமே அத நீங்க மென்ஷன் பண்ணவே இல்லையே?

கணேஷ்: அடப்போய்யா. இந்த மாதிரி இதுவரைக்கும் நிறைய கோடிங்கள செலவு பண்ணதுதான் மிச்சம். நாலாயிரம் கோடி! இத வச்சி உருப்படியா என்னவெல்லாம் செஞ்சிருக்கலாம்? 

ஜோசப்: ஏன் அப்படி சொல்றீங்க? நாமல்லாம் சின்னப் பசங்களா இருந்தப்போ இதே கூவம் வழியா சரக்கு போட்டெல்லாம் போவுமே பாத்ததில்ல? நா பாத்துருக்கேன். அதே மாதிரி  இப்பவும் செய்யலாங்க. அத்தோட இத ஒரு பெரிய டூரிஸ்ட் அட்ராக்‌ஷனா கூட மாத்தலாம். 

கணேஷ்: அட நீங்க வேற. அப்பல்லாம் கூவத்துக்கு ரெண்டு பக்கத்துலயும் காலியா இருந்தது. ஆனா இப்ப அப்படியா? ஒரு இஞ்ச் இடம் பாக்கியில்லாம குடிசைய போட்டு அங்கயே குடும்பம் நடத்தறாங்களே பாத்ததில்ல? இந்த ஆளுங்க போடற வேஸ்ட்டுங்கதாங்க கூவம் இப்படி இருக்கறதுக்கு காரணம். அதுமட்டுமா? ஸ்டேட் கவர்ன்மென்டே ஸ்லம் க்ளியரன்ஸ்னு சொல்லி ரெண்டு பக்கத்துலயும் ஃப்ளேட்டுங்கள கட்டி குடிசை வாசிங்கள குடிவச்சாங்களே அவங்க என்ன பண்றாங்க? வீட்டுக்குள்ள ஜாமான்களையெல்லாம் வச்சிட்டு சாப்டறது, தூங்கறதுன்னு எல்லாமே வெளியிலதான? இந்த மாதிரி ஆளுங்கள ஒட்டுமொத்தமா அங்கருந்து ரிமூவ் பண்ணாம எத்தன கோடி செலவு செஞ்சாலும் கூவம் இப்ப மாதிரியே நாறிக்கிட்டுத்தான் இருக்கும். இந்த மாதிரி திட்டம்னு சொல்றதெல்லாம் அதிகாரத்துலருக்கற சில பேரோட பாக்கட்ட நிறைக்கறதுக்குத்தான் யூஸ் ஆவும். 

ரஹீம்: கணேஷ் சொல்றா மாதிரிதான் நடக்கும்னு நானும் நினைக்கிறேன்.

ஜோசப்: (சிரிக்கிறார்) உங்கள மாதிரிதான் நிறைய பேர் நினைக்கிறாங்க.  இந்த தடவ அப்படி நடக்காதுன்னு நினைக்கிறேன். பாக்கலாம்.

ரஹீம்: எனக்கொரு சந்தேகம் ஜோசப்.

ஜோசப்: சொல்லுங்க.

ரஹீம்: பட்ஜெட்ல ரெவென்யூ சர்ப்ளஸ்னு(Revenue surplus) காமிச்சிட்டு கடைசியில பத்தாக்குறை (fiscal deficit) பட்ஜெட்னு சொல்றாங்க, அது ஏன்?

ஜோசப்: ரெவின்யூ சர்ப்ளஸ்ங்கறது அரசாங்கத்தோட வருமானம் அரசாங்கத்தோட செலவ விட ஜாஸ்தியாருக்கறப்போ வர்ற தொகை. ஆனா fiscal defecitங்கறது அரசாங்கத்தோட மொத்த வரவு (Receipts) அதோட செலவுத் திட்டங்கள (Plan and Non plan Expnditure + Capital investments) விட குறைவா இருக்கறப்போ வரும். 

ரஹீம்: புரியலீங்க. அரசாங்கத்தோட செலவு அவங்க வருமானத்தோட ஜாஸ்தியாத்தான இருக்கு?

ஜோசப்: கொஞ்சம் டீட்டெய்லாவே சொல்றேன். அரசாங்கத்தோட வருமானம்கறது நம்மள மாதிரி ஆளுங்கக் கிட்டருந்து வசூல் பண்ற வரி (சாலை வரி, சொத்து வரி, வாகன வரி). . அத்தோட சென்ட்ரல் கவர்ன்மென்ட் கலெக்ட் பண்ற வரியிலருந்து கிடைக்கற பங்கு, இதான் ஒரு ஸ்டேட் கவர்ன்மென்டோட  மெய்ன் வருமானம். அதுக்கப்புறம் நம்மள மாதிரி ஜனங்களுக்கு குடுக்கற சர்வீஸ்ங்களுக்காக வசூல் பண்ற சார்ஜஸ் (பர்த் சர்ட்டிஃபிக்கேட், ஜாதி சர்டிஃபிக்கேட் மாதிரி சான்றிதழ் குடுக்கறப்போ வசூல் பண்ற சார்ஜஸ், கவர்ன்மென்ட் செஞ்சிருக்கற இன்வெஸ்ட்மென்ட்லருந்து கிடைக்கற டிவிடன்ட், கடன்லருந்து கிடைக்கற வட்டி இப்படி நிறைய இருக்கு. இதெல்லாம் சேந்து வர்றதுதான் கவர்ன்மென்டோட ரெவின்யூன்னு சொல்றாங்க. இதுல பாதிக்கி மேல  கவர்ன்மென்ட் ஸ்டாஃபுக்கு  குடுக்கற சம்பளமாவே போயிருதாம். மீதியிருக்கறதுல கவர்ன்மென்ட் நடத்தறதுக்கு ஆகற மத்த செலவு எல்லாம் நடக்குது. கவர்ன்மென்ட் சிக்கனமா இருந்தா  வருமானத்த விட செலவு குறைவா இருக்க சான்ஸ் இருக்கு. அந்த மாதிரிதான் வர்ற வருசமும் இருக்கும்னு இந்த பட்ஜெட்லயும் சொல்லியிருக்காங்க. ஆனா வருச முடியறப்போதான் இந்த யூகம சரியா இல்லையான்னு தெரியவரும். 



ரஹீம்: லேசா புரியறா மாதிரி இருக்கு. அப்போ ஃபிஸ்கல் டெஃபிசிட்ங்கறது (fiscal deficit) என்னது?

ஜோசப்: சாதாரணமா பட்ஜெட்ல சொல்ற திட்டங்கள செஞ்சி முடிக்கிறதுக்கு அரசாங்கத்துக்கு கிடைக்கற ரெவின்யூ மட்டும் போறாது. அதனால அவங்க ஜனங்கக்கிட்டருந்தும் சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஏன் வேர்ல்ட் பேங்க்லருந்து கூட  கடன் வாங்குவாங்க. அந்த மாதிரி வாங்குற கடன்லருந்து ஏற்கனவே வாங்கியிருக்கற கடனுக்குண்டான வட்டி அப்புறம் ஏற்கனவே ட்யூவாயிருக்கற லோனையெல்லாம் திருப்பி அடைச்சிட்டு மீதியிருக்கற தொகைய வச்சித்தான் வரப்போற வருசத்துல செய்யப் போறதா பட்ஜெட்ல சொல்லியிருக்கற எல்லா திட்டங்களையும் செஞ்சாவணும். நாம கொஞ்ச நேரத்துக்கு முன்னால டிஸ்கஸ் பண்ணமே கூவம் மேம்பாட்டு திட்டம். ஸ்டூடன்சுக்கு லேப்டாப், லேடீசுக்கு மிக்ஸி, க்ரைன்டர் அப்படீன்னு இது எல்லாத்தையும் செஞ்சாவணும். ஆனா பட்ஜெட்ல சொல்லியிருக்கற எல்லா திட்டத்துக்கும் போதுமான கடன் கிடைக்காதில்லையா? அப்பத்தான் பற்றாக்குறை பட்ஜெட் வருது. இந்த பற்றாக்குறையத்தான் fiscal deficitனு சொல்றாங்க. ஆனா இதுக்கும் ஒரு லிமிட் வச்சிருக்காங்க. அதாவது நம்ம தமிழ்நாட்டோட மொத்த உற்ப்பத்தி மதிப்புல (GDP) மூனு சதவிகிதத்துக்கு மேல போகக் கூடாது. இவங்க ஆட்சிக்கு வந்ததுலருந்து அதுக்குள்ளவேதான் இருக்குதுன்னு பட்ஜெட்லயே பெருமையடிச்சிருக்காரு நம்ம பன்னீர் செல்வம். 



ரஹீம்: ஆனா ஸ்டேட்டோட மொத்த கடன் தொகை நாங்க இருந்த அளவ விட ரொம்ப ஜாஸ்தின்னு ஸ்டாலின் சொல்றாரே?

கணேஷ்: ஏங்க, வருசா வருசம் திட்டங்கள் ஜாஸ்தியாய்ட்டே போய்க்கிட்டிருக்கறப்போ கடனும் ஜாஸ்தியாத்தான ஆவும்? . ஆனா ஒன்னு. கடன வாங்கித்தான் விலையில்லா லேப்டாப், மிக்ஸி, க்ரைன்டர்னு குடுக்கணுமான்னுதான் கேள்வி. அதுவும் ரெண்டாயிரம் கோடி அளவுக்கு இந்த மாதிரி வேஸ்ட் பண்றது ரொம்ப பெரிய க்ரைம்தான். 

ஜோசப்: வாஸ்தவம்தான். ஆனா இத துவக்கி வச்சது மு.க.தான? அதுக்கு முன்னாலல்லாம் இப்படி யாரும் செஞ்சதில்லையே? ஆடு, மாடு, கோழின்னு குடுப்பாங்க.  அவர் ஆரம்பிச்சி வச்சார். ஆனா அது அவருக்கும் லாபமா இல்ல, ஜனங்களுக்கும் லாபமா இல்ல! அதுமாதிரிதான் இவங்க குடுக்கறதும். இது எப்பத்தான் முடிவுக்கு வருமோ தெரியல.

ரஹீம்: இவங்கள பாத்து உ.பியில கூட ஸ்கூல், காலேஜ் பசங்களுக்கு லேப்டாப் குடுக்கறாங்களாமே?

ஜோசப்: (சிரிக்கிறார்) இந்த மாதிரி எல்லா ஸ்டேட்லயும் செய்ய ஆரம்பிச்சா எல்லா கவர்ன்மென்ட்டும் திவாலாவாக வேண்டியதுதான். 

கணேஷ்: இவ்வளவு சொல்றீங்களே சென்ட்ரல் பட்ஜெட்ல மட்டும் என்னவாம்? நம்ம ப.சி. குடுத்துறுக்கறது இன்டரிம் பட்ஜெட் மாதிரியா இருக்கு? 

ரஹீம்: ஏன் அப்படி சொல்றீங்க? எக்சைஸ் வரிய குறைச்சதால ஏறக்குறைய எல்லாமே விலை குறைஞ்சிருமே?

கணேஷ்: அட நீங்க வேற? எத்தன பேருக்கு இதனால லாபம் இருக்கப் போவுது? அரிசி, பருப்பு விலையா குறைய போவுது? பணக்காரங்க வாங்கற கார், மொபைல் ஃபோன், டிவி, ஃபிரிட்ஜ் இதுங்க விலைதான குறையப் போவுது? 

ஜோசப்: இதே ரேட்டுல வருமான வரி லிமிட்டையும் கொஞ்சம் ஏத்தியிருக்கலாம்.

ரஹீம்: இது நல்லாருக்கே. சந்தடி சாக்குல ஒங்களப் பத்தியும் சொல்லிக்கிறீங்களோ? (சிரிக்கிறார்)

ஜோசப்: பின்ன என்னங்க? சர்வீஸ்ல இருக்கறப்பத்தான் கட்டிக்கிட்டிருந்தோம். அதே ரேட்டுல பென்ஷன்லருந்து புடிச்சா நியாயமாங்க? 

ரஹீம்: ஏங்க அந்த அளவுக்கு பென்ஷன் வந்தா கட்ட வேண்டியதுதான?

கணேஷ்: (கோபத்துடன் முறைக்கிறார்) யோவ் பாய், மனசாட்சிய தொட்டு சொல்லு. நீ என்னைக்காவது இன்கம் டாக்ஸ் கட்டியிருக்கியா?

ரஹீம்: எனக்கு அந்த அளவுக்கு வருமானம் இல்லீங்களே அப்புறம் எதுக்கு கட்டணும்?

ஜோசப்: (சிரிக்கிறார்) அதான! இவர் சொல்றதும் நியாயம்தான கணேஷ்?

கணேஷ்: (கடுப்புடன்) ஜோசப் கடுப்படிக்காதீங்க. வருமானம் இல்லாமத்தான் பெரிய பொண்ணுக்கு நூறு பவுன் நகைய போட்டு கட்டிக்குடுத்தாரா? சிட்டியில சென்டர்ல இவ்வளவு பெரிய வீடு இருக்கு? சிட்டியில ஒன்னும் அவுட்டர்ல ஒன்னுன்னு ரெண்டு பெரிய கடை இருக்கு. இவருக்கு இன்கம் டாக்ஸ் கட்ற அளவுக்கு வருமானம் இல்லேன்னு இவரும் சொல்றார் நீங்களும் ஜால்ரா அடிக்கறீங்க. அக்கிரமம்யா.

ஜோசப்: (சிரிக்கிறார்) சரி, சரி, டென்ஷன் ஆகாதீங்க. நாம ஒன்பதுலருந்து அஞ்சி வரைக்கும் வேல செய்யிறோம். ஆனா இவரு? ஒரு நாளைக்கி பதினஞ்சி மணி நேரமில்ல ஒழைக்கிறாரு? அத்தோட இவர் எடுக்கற அளவுக்கு ரிஸ்க் நாம என்னைக்காவது எடுத்துருக்கமா? பிசினஸ்னா லாபம் மட்டுமா வரும்? நஷ்டமும் வருதுல்ல? அப்போ இவருக்கு கவர்ன்மென்டா காம்பன்ஸேட் பண்ணுது? அதான் லாபத்த குறைச்சி காட்டி டாக்ஸ அவாய்ட் பண்றாங்க. மத்தவங்கள மாதிரி டாக்ஸ எவேட் (evade) பண்ணல இல்ல?

ரஹீம்: சூப்பர்ங்க. இதெல்லாம் இவருக்கு எங்க தெரியுது? நானெல்லாம் ஆரம்ப காலத்துல ஓட்ட ஒடசல் சைக்கிள்லதாங்க போவேன், வருவேன்.  ஒரு நாளைக்கு ஒருவேளை கூட ஒழுங்கா சாப்டது கிடையாது. அப்படியெல்லாம் பாடு பட்டுத்தான் இன்னைக்கி ஓரளவுக்கு நல்லாருக்கேன். இப்ப வர்றா மாதிரியே என்னைக்கும் வருமானம் இருக்கும்னுல்லாம் சொல்லிற முடியாது. 

கணேஷ்: என்னது இவங்க பண்றது எவேஷன் இல்லையா? வருமான வரி கட்ற அளவுக்கு வருமானம் இருந்தாலும் வரி கட்டாம இருக்கறதுக்காக அரசாங்கம் அலவ் பண்ற மொத்த ரிபேட்டையும் சம்பாதிக்கற அளவுக்கு சேவ் (Save) பண்றாங்களே அவங்க பண்றதுதான் tax avoidance. வருமான வரி கட்ற அளவுக்கு வருமானம் இருந்தும் அத குறைச்சி காமிக்கற இவங்க செய்றதெல்லாம் சுத்தமான, வடிகட்டுன tax evasion. 

ஜோசப்: விடுங்க கணேஷ். இதப் பத்தி பேச ஆரம்பிச்சா என்டே (end) இருக்காது. சரி வேற ஏதாச்சும் இருக்கா. 

இல்லன்னா அடுத்த வாரம் மீட் பண்லாம். என்ன பாய்?

ரஹீம்: வேற என்ன இருக்கு? அடுத்த வாரம் பாக்கலாம்.  

ஜோசப்பும் கணேஷும் அவரிடம் இருந்து விடைபெற்று செல்ல அவர்கள் இருவரும் சென்று மறையும் வரை வாசலில் 

நிற்கிறார் ரஹீம். 

************


















14 பிப்ரவரி 2014

நான் தீண்டத்தகாதவனாய்ட்டேன்: மோடி

கணேஷும் ஜோசப்பும் ரஹீம்பாய் வீட்டுத் திண்ணையில் அமர்ந்துள்ளனர்.
 
கணேஷ்: என்னங்க சாதாரணமா நாமதான் லேட்டா வருவோம். இன்னைக்கி பாய காணோம்?
 
ஜோசப் பதிலளிப்பதற்கு முன் ரஹீம்பாய் வாசற்கதவைத் திறந்துக்கொண்டு அவசரமாக வந்து அமர்கிறார். கையில் அன்றைய தினத்தாள்: என்ன கணேஷ். அத்திப் பூத்தா மாதிரி இன்னைக்கி ஒரு அஞ்சி நிமிஷம் சீக்கிரமா வந்துட்டீர்ங்கறதுக்காக என் தலைய போட்டு உருட்றீராக்கும்?
 
கணேஷ்:(சிரிக்கிறார்) அதெல்லாம் இல்ல பாய். சாதாரணமா நாமத்தான லேட்டா வருவோம்னு ஜோசப் கிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்.
 
ஜோசப்: அதிருக்கட்டும். கையில என்ன பேப்பர்? ஏதாச்சும் ஸ்பெஷல் நியூசா?
 
ரஹீம்: (சிரிக்கிறார்) அதான் டெய்லி ஒரு இடத்துல கூட்டத்த போட்டு வாய்க்கு வந்தபடி பேசிக்கிட்டிருக்கார நம்ம ப்ரைம் மினிஸ்டர் கேன்டிடேட். அவர் நேத்தைக்கி தமிழ்நாட்டு கூட்டத்துல பேசனத படிச்சேன். சிரிப்புத்தான் வந்துது. அதான் கையோட கொண்டு வந்துருக்கேன். படிக்கட்டுமா?
 
கணேஷ்: இன்னைக்கி வந்ததும் வராததுமா ஆரம்பிச்சிட்டீராய்யா? அப்படியென்ன சொல்லக் கூடாதத சொல்லிட்டார்?
 
ரஹீம்: கோபப்படாதய்யா. பொறுமையா கேளு.
 
ஜோசப்: அவர் கிடக்கார் பாய். நீங்க படிங்க.
 
ரஹீம்: 'நான் இன்றும் பலருக்கும் தீண்டத் தகாதவனாகவே இருக்கிறேன்.'  இதுக்கு என்னங்க அர்த்தம்?
 
கணேஷ்: ஏன் ஒங்களுக்கு விளங்கலையோ? அவர் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்ங்க அதனாலத்தான் நான் அடுத்த பிரதமரா வர்றதுக்கு மேல் சாதிக்காரங்கள்ல நிறைய பேருக்கு புடிக்கலங்கறார். இதுல என்னங்க தப்பு?
 
ரஹீம்: தப்பே இல்லீங்க. ஆனா இத்தன நாள் இல்லாம இப்ப என்ன புதுசா நா ஒரு பேக்வேர்ட் கம்யூனிட்டி ஆளுங்கறதால நா நிறைய பேருக்கு தீண்டப்படாதவனாய்ட்டேங்கறார்? சரிங்க. நா ஒரு கேள்வி கேக்கறேன். இவரோட மாநிலத்துலயே தீண்டப்படாதவங்கன்னு இவங்க இதுவரைக்கும் ஒதுக்கி வச்சிருக்கற தலித்துங்க மேல திடீர்னு எதுக்கு இவ்வளவு அக்கறை? இதுக்குத்தான். இன்னைக்கி காலையில ஒக்காந்து என் மூத்த மகன வச்சி நெட்ல தேடிப்புடிச்சத படிக்கறேன் கேளுங்க.
 
நம்ம நாட்டுல தலித் மக்களோட வோட்டு பதினேழு சதவிகிதமாம்.
அதுல அம்பது சதவிகிதம் திமுக, அதிமுக மாதிரி ஸ்டேட் பார்ட்டிங்களுக்கு போயிருதாம்.
பிஜேபிக்கு பத்துலருந்து பன்னெண்டு சதவிகிதம்தான் கிடைக்கிதாம்.
மீதி காங்கிரசுக்காம்.
காங்கிரசுக்கு கிடைச்சிக்கிட்டிருக்கற தலித் ஓட்டுல பத்து பர்சென்ட் பிஜேபிக்கு கிடைச்சாக் கூட அம்பதுலருந்து அறுபது சீட் எக்ஸ்ட்ரா கிடைச்சிருமாம். அதான் திடீர்னு மோடிக்கு ஞானோதயம் வந்துருக்கு.
 
ஜோசப்: அட அப்படியா? இதத எந்த சைட்லருந்து எடுத்தீங்க?
 
ரஹீம்: தெஹெல்கா பத்திரிகையோட சைட்லருந்து.
 
கணேஷ்: (எரிச்சலுடன்) பாய், அதுவே ஒரு ஃப்ராடு பத்திரிக்கை. ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லைடி கண்ணேங்கறா மாதிரி கூட வேல பாத்த ஒரு பொண்ணெ கெடுக்க ட்ரை பண்ணிட்டு கம்பி எண்ணிக்கிட்டு இருக்கறவரோட பத்திரிக்கை. அதுல சொல்லியிருக்கறத எல்லாம் வச்சிக்கிட்டு... போங்க பாய்...
 
ரஹீம்: யோவ். அவர் அரெஸ்டானது போன மாசம். இந்த நியூஸ் வந்து நாலஞ்சி மாசம் ஆயிருச்சி. எனக்கென்னவோ இவங்க இந்த மாதிரியெல்லாம் நியூஸ் போடறாங்கன்னுதான் அந்த பொண்ணெ செட்டப் பண்ணி அந்தாள மாட்டி விட்டுட்டீங்களோன்னு கூட தோனுது. என்ன சொல்றீங்க ஜோசப்?
 
ஜோசப்: (சிரிக்கிறார்) இருக்கும் யார் கண்டா?
 
கணேஷ்: (எரிச்சலுடன்) என்ன ஜோசப் நீங்களும் இந்தாளோட சேந்துக்கிட்டு. மோடி சிஎம்மாருக்கற குஜராத்துல தலித்துங்களுக்குன்னு என்னல்லாம் செஞ்சிருக்கார் தெரியுமில்லே?
 
ரஹீம்: (சிரிக்கிறார்) நீ இந்த மாதிரி எதையாச்சும் எடுத்துவிடுவேன்னு தெரிஞ்சிதான் ஒங்க மோடி ராஜ்யத்துல தலித் ஆளுங்க எப்படியெல்லாம் அவஸ்தை பட்டுருக்காங்கன்னு தேடி புடிச்சிருக்கேன். அதையும் படிக்கறேன். கேட்டுட்டு சொல்லு. (தன் கையிலிருந்த பத்திரிக்கையுடன் இருந்த தாள்களில் ஒன்றை எடுத்து படிக்கிறார்).
 
ஜோசப்: (வியப்புடன்) என்ன பாய் ரொம்பத்தான் மெனக்கெட்டிருக்கீங்க போலருக்கு?
 
ரஹீம்: பின்ன என்னங்க? இந்தாளு திடீர்னு மகாத்மா மாதிரி பேச ஆரம்பிச்சிட்டா நாம எல்லாரும் முட்டாளுங்களா என்ன? அதான் காலையில எழுந்ததும் நம்ம பையன எழுப்பி தேட வச்சேன். இருங்க படிக்கறேன். கொஞ்ச நாளைக்கி முன்னால இந்தியன் எக்ஸ்பிரஸ்ல வந்த நியூஸ் இது. அதாவது குஜராத்ல நிறைய தலித் ஆளுங்க இஸ்லாமிய மதத்துக்கு மாறுனாங்களாம். ஏங்க இந்த முடிவுன்னு பத்திரிக்கை ஆளுங்க கேட்ருக்காங்க.அதுக்கு ஒரு முதியவர் இப்படி பதில் சொன்ன்னாராம். "இங்க இருக்கற பார்பருங்க கூட (முடி திருத்துபவர்) எங்களுக்கு முடி வெட்டி விட முடியாதுன்னு சொல்றாங்க. எங்களுக்கு வெட்டுனா ஊருக்குள்ள ஒரு ஜாதி இந்துவும் அவங்கக்கிட்ட வெடிக்க மாட்டேங்கறாங்களாம். ஊர் தலைவர், பஞ்சாயத்து பிரசிடென்ட்டுன்னு எல்லார் கிட்டயும் கம்ப்ளெய்ன்ட் பண்ணியாச்சு. ஒன்னும் பிரயொசனம் இல்ல. அது மட்டும் இல்லீங்க இங்கருக்கற டீக்கடை, ஹோட்டல் எதுலயும் எங்கள உள்ள விட மாட்டேங்கறாங்க. எத்தன நாளைக்கித்தான் இந்த அவமானத்த தாங்கிக்கறது? அதான் இன்னைக்கி எங்க ஆளுங்க எல்லாருமே முஸ்லீம்களாய்ட்டோம்."
 
ஜோசப்: அப்படியா? இவர் என்னமோ தலித்துங்களுக்கு அது செஞ்சிருக்கேன், இது செஞ்சிருக்கேன் எல்லா கூட்டத்துலயும் சொல்றாரு?
 
ரஹீம்: (சிரிக்கிறார்) அதெல்லாம் சும்மா. இன்னும் இருக்கு கேளுங்க. குஜராத்ல ஹெத்தா சோலாங்கின்னு ஒரு தலித் லீடர் கொஞ்ச நாளைக்கி முன்னால சொல்லியிருக்கறத படிக்கிறேன். "இங்க நடக்கற அக்கிரமத்தால எங்க ஆளுங்கள்ல  நிறைய பேர் பக்கத்து ஸ்டேட்டுக்கு குடி போய்ட்டாங்க. அதனால எங்க ஜனங்களோட எண்ணிக்கை ரொம்ப குறைஞ்சி போச்சி. இவங்களால நமக்கென்ன பிரயோசனம்னு எங்கள இன்னும் கேவலமா நடத்துறாங்க. அதனாலயே நிறைய பேர் இஸ்லாமிய மதத்துக்கு போய்க்கிட்டே இருக்காங்க.'
 
கனேஷ்: ஏங்க ஊர் பேர் தெரியாத ஆளுங்க சொல்றதையெல்லாம் பெருசா சொல்லிக்கிட்டு. யார்ங்க இந்த சோலாங்கி?
 
ரஹீம்: அவர் வேற யாருமில்ல. அந்த ஏரியாவோட சிட்டிங் பி.ஜே.பி. எம்.எல்.ஏ. போறுமா இல்ல இன்னும் வேணுமா? (தன் கைகளில் இருந்த இன்னும் சில தாள்களை புரட்டி பார்க்கிறார்) மூனு வருசத்துக்கு முன்னால டாட்டா இன்ஸ்ட்டியூட்டும் இந்தியன் எக்ஸ்பிரசும் சேந்து குஜராத்லருக்கற தலித்துங்கக்கிட்ட ஒரு சர்வே நடத்துனாங்களாம். அதுல என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா? இப்பவும் 12000 தலித் ஆளுங்க தோட்டி (scavengers) வேலை செஞ்சிக்கிட்டுருக்காங்களாம். இந்த அளவுக்கு அதிகமானவங்க இந்த கேவலமான வேலைய செய்யறவங்கள வேற எந்த மாகாணத்துலயும் பாக்க முடியலேன்னு சொல்லியிருக்காங்க. மேல் சாதி ஆளுங்களோட மலத்த எடுக்கறதுக்கு இவங்க புண்ணியம் செஞ்சிருக்கணும்னு ஒருதரம் மோடியே நக்கலடிச்சிருக்காராம். இத விட கேவலமான ஒரு ஆள பிரதமர் பதவிக்கு நிக்க வைக்க முடியுமாங்க?
 
கணேஷ்: பாய் பத்திரிகைக் காரங்க ஆயிரம் போடுவாங்க. அதையெல்லாம் பேசிக்கிட்டு. இதெல்லாம் அவருக்கு வேண்டாதவங்க செய்யிற வேலை.
 
ரஹீம்: (கோபத்துடன்) ஆமாய்யா உங்களுக்கு எதிரா எதாச்சும் பத்திரிகையில வந்தா அது வேண்டாதவங்க செய்யிற வேலை. இன்னைக்கி மோடிக்கு இந்த அளவுக்கு விளம்பரம் குடுக்கறதே இதே பத்திரிகைக்காரங்கதானய்யா? அது மட்டும் வேணுமோ?
 
ஜோசப்: (குறுக்கிட்டு) பாய், இத இத்தோட விட்ருவோம். தலித்துங்க விஷயத்துல ஏறக்குறைய எல்லா கட்சிங்களுமே ஓட்டு அரசியல்தான் செஞ்சிக்கிட்டிருக்காங்க. எப்பல்லாம் அவங்க ஓட்டு இவங்களுக்கு தேவையோ அந்த  டைம்ல மட்டுந்தான் இவங்க தேவைங்கள பத்தி கவலைப்படறா மாதிரி காண்பிப்பாங்க. அது மாதிரிதான் இப்பவும் நடக்குது. இதுல மோடிய மட்டுமே குத்தம் சொல்லி பிரயோசனம் இல்லீங்க. அதனால வேற ஏதாச்சும் இருந்தா பேசுவோம்.
 
கணேஷ்: கரெக்டா சொன்னீங்க ஜோசப்.
 
ரஹீம்: உங்களுக்கு சாதகமா யாராச்சும் பேசுனா ஒடனே கரெக்ட்டுன்னு ஒத்துக்குவீங்க. இல்லன்னா கோபம் வரும். நல்ல நியாயம்யா. பெரும்பான்மையான ஒங்களுக்கெல்லாம் எங்கள மாதிரி சிறுபான்மை ஆளுங்க படற கஷ்டம் தெரியாதுய்யா.
 
ஜோசப்: சரி பாய், விடுங்க. அடுத்த விஷயத்த பேசுவோம்.
 
ரஹீம்: (சலிப்புடன்) என்னத்த பேசறது? காலையிலருந்து இத படிச்சதும் வேற எதுலயுமே மனசு ஓட மாட்டேங்குதுங்க. நீங்களே சொல்லுங்க.
 
ஜோசப்: சரி. கொஞ்ச நாளா தில்லியில லோக்பால் மசோதா விஷயம் அடிபடுதே அதப்பத்தி ஏதாச்சும் பேசலாமா?
 
கணேஷ்: (உற்சாகத்துடன்) பேசலாம்.
 
ஜோசப்: (சிரித்தவாறே ரஹீம்பாயை பார்க்கிறார்) பாத்தீங்களா அவர் கட்சி சம்மந்தமில்லாத விஷயம்னா எவ்வளவு எந்தூவா பேசறார் பாருங்க?
 
கணேஷ்: அப்படியெல்லாம் இல்லீங்க. இதுவரைக்கும் எந்த சீஃப் மினிஸ்டரும் செய்யாத விஷயத்த நேத்து சிஎம்மானவரு செய்யறார் பாருங்க.  கவர்னர், பிரசிடென்ட்டுன்னு யாருமே வேணாம் நா வச்சதுதான் சட்டம்னு சொல்றத என்னன்னு சொல்றது?
 
ரஹீம்: ஜோசப் எனக்கு ஒரு சந்தேகம்.
 
ஜோசப்: சொல்லுங்க. சட்டசபையில மசோதாவ கொண்டு வர்றதுக்கு முன்னால கவர்னர் பர்மிஷன் வேணுமான்னா?
 
ரஹீம்: அதுவும் ஒரு சந்தேகம்தான். ஆனா இந்த மாதிரி எந்த பெர்மிஷனும் இல்லாமலே காங்கிரஸ் காலத்துல மூனு நாலு மசோதா நிறைவேறி இருக்குதுன்னு கெஜ்ரிவால் சொல்றாரே அது நிஜமா?
 
கணேஷ்:நீங்க ஒன்னு பாய். அதெல்லாம் அந்தாள் விடற எத்தனையோ டூப்புங்கள்ல ஒன்னு. அது எந்தெந்த மசோதான்னு சொல்லட்டுமே பாக்கலாம். 
 
ஜோசப்: அவர் டூப் அடிக்கிறாரோ இல்லையோ அதப் பத்தியெல்லாம் பேசி பிரயோசனம் இல்ல. நம்ம இந்திய அரசியல் சாசனத்துல ஒரு மசோதாவ ஸ்டேட் அசெம்ப்ளியில ப்ரசென்ட் பண்றதுக்கு கவர்னரோட பர்மிஷன் தேவைன்னு சொல்லல. ஆனா அந்த மசோதா சட்டமாகனும்னா அதுக்கு கவர்னரோட பர்மிஷன் நிச்சயம் தேவை.
 
கணேஷ்: அப்படியா? அப்போ அவர் சொல்றது சரிதானா?
 
ஜோசப்: இருங்க முழுசா கேளுங்க.  நா சொன்னது தனி மாநில அந்தஸ்த்து உள்ள ஸ்டேட் அசெம்ப்ளி. ஆனா தில்லி ஒரு யூனியன் டெரிட்டரி. தனி மாநிலம்னா மசோதவ சட்டசபையில வச்சி பாஸ் பண்ணி கவர்னர் பார்வைக்கு அனுப்பிருவாங்க. ஆனா தில்லி விஷயத்துல சட்டசபையில பிரசென்ட் பண்றதுக்கு முன்னாலயே சென்டர்ல இருக்கற சட்ட இலாக்காவுக்கு அனுப்பி அவங்களோட அப்ரூவல் வாங்கணுங்கறது அரசியல் சாசனத்துல சொல்லியிருக்கோ இல்லையோ அது ஒரு மரபுன்னு சொல்றாங்க. அதுக்காகத்தான் மசோதாவ டிராஃப்ட் பண்ணி அசெம்ப்ளியில சப்மிட் பண்றதுக்கு முன்னால அத தில்லி துணை ஆளுநருக்கு அனுப்பி அவர் வழியாத்தான் லா மினிஸ்ட்ரிக்கு அனுப்பணுமாம். இதுல நிதி மசோதா (financial bills) இல்ல ஏதாச்சும் அர்ஜன்டா பாஸ் பண்ண வேண்டிய மசோதாவா இருந்தா சட்டசபையில வச்சி பாஸ் பண்ணிட்டுக் கூட கவர்னருக்கு அனுபலாமாம். ஆனா லோக்பால் ஒரு நிதி மசோதாவும் இல்ல இவ்வளவு அவசரமா பாஸ் பண்ண வேண்டிய பில்லும் இல்ல. ஆனா  அதெல்லாம் தேவையில்லை. நா ஏற்கனவே நாலஞ்சி லா எக்ஸ்பேர்ட்டுங்கள கன்சல்ட் பண்ணித்தான் இந்த மசோதாவ டிராஃப்ட் பண்ணேன்னு கெஜ்ரிவால் சொல்றார். அது கூட பரவால்லை. ஆனா சட்டசபையில ஒரு பில்ல பிரசென்ட் பண்ணணும்னா அட்லீஸ்ட் ரெண்டு நாளைக்கி முன்னாலயாச்சும் அத்தோட காப்பிய ஒவ்வொரு சட்டமன்ற மெம்பருக்கும் படிக்க குடுக்கணும். அப்பத்தான அந்த பில் சட்டசபையில பிரசென்ட் பண்றப்போ அதப் பத்தி உருப்படியா டிஸ்கஸ் பண்ண முடியும்?
 
கணேஷ்: கரெக்ட்டுங்க. ஆனா அதுக்குக் கூட சான்ஸ் குடுக்காம இவர் செய்யிற பாத்தா அந்த மசோதாவுல இவர் ஏதோ எடக்கு மடக்கா செஞ்சி வச்சிருக்கார்னு அர்த்தம்.  அப்படி என்ன செஞ்சி வச்சிருப்பார்னு நினைக்கறீங்க?
 
ஜோசப்: அவர் என்ன செஞ்சி வச்சிருந்தாலும் அது அசெம்ப்ளியில டிஸ்கஷனுக்கு வர்றப்போ தெரிஞ்சிட்டுப் போவுது. அது இல்ல இப்ப விஷயம். இவர் எதுக்காக இப்படியெல்லாம் செய்யிறார்னு உங்களுக்கு தெரியலையா?
 
ரஹீம்: இது கூட தெரியாதுங்களா? இப்படியெல்லாம் அடாவடியா செஞ்சாத்தான் காங்கிரசும் பிஜேபியும் இவரோட மசோதாவ சப்போர்ட் பண்ண மாட்டேன்னு சொல்வாங்க. இதையே சாக்கா வச்சி இவர் சி.எம் போஸ்ட்ட ராஜினாமா செஞ்சிருவார். மினிஸ்ட்ரி கவுந்துரும். மறுபடியும் எலக்‌ஷன் வரும். இவர் ஜனங்கக் கிட்ட போயி நா உங்களுக்கு நல்லது செய்யணும்னா நா தனியா மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்ற அளவுக்கு எனக்கு மெஜாரிட்டி தாங்கன்னு கேப்பார்.

கணேஷ்: அவங்க உடனே இவருக்கு ஓட்ட தூக்கி போட்ருவாங்களாக்கும்? நீங்க வேற பாய். ஜனங்க அவ்வளவு முட்டாளுங்களா என்ன?
 
ரஹீம்: (சிரிக்கிறார்) யோவ், தலித் விஷய்த்துல மோடி சொல்றத மட்டும் ஜனங்க நம்பிருவாங்க. ஆனா இவர் விஷயத்துல நம்ப மாட்டாங்க.  உங்களுக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயம். அப்படித்தான?
 
ஜோசப்: பாய், மறுபடியும் ஆரம்பிச்சிராதீங்க.  அதான் ரெண்டு நாளைக்கி முன்னால தில்லி சட்டமன்ற சபாநாயகரே அந்த பில்ல அசெம்ப்ளியில டேபிள் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாரே. முதல்ல மெம்பர்ஸ்சுங்களுக்கு மசோதாவோட காப்பிய குடுங்க, அப்புறம் டேபிள் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாராம். கெஜ்ரிவாலால ஒன்னும் செய்ய முடியலை. அநேகமா இன்னைக்கி டேபிள் பண்ணுவாங்க போல தெரியுது. அது பாஸ் ஆகலன்னா இன்னிக்கே கெஜ்ரிவால் ரிசைன் பண்ணிருவாராம். பேப்பர்ல பாத்தேன்.
 
கணேஷ்: செஞ்சிட்டு போகட்டுங்க. அவர் தலையில அவரே மண்ண வாரி போட்டுக்கறேன்னு சொன்னா யார் என்ன பண்ண முடியும்? ஆனா ஒன்னு போன ரெண்டு மாசத்துல அவர் அடிச்ச கூத்துக்கப்புறமும் ஜனங்க இவருக்கே ஓட்டு போட்டாங்கன்னா அப்புறம் தில்லிய கடவுள்தான் காப்பத்தணும். .
 
ரஹீம்:  அப்புறம், கெஜ்ரிவால்  இன்னொரு கூத்து அடிக்கிறாரே பாத்தீங்களா?
 
ஜோசப்: கூத்தா அது என்னது?
 
ரஹீம்: அதாங்க அசெம்ப்ளி மீட்டிங்க அசெம்ப்ளிக்கு வெளியே ராம் லீலா மைதானத்துல நடத்தப் போறேன்னு நிக்கிறாரே. அதச் சொல்றேன்.
 
கணேஷ்: அதெல்லாம் ஒப்பேறாது பாய். அதான் போலீஸ் எங்களால பாதுகாப்பு குடுக்க முடியாதுன்னு கைய விரிச்சிட்டாங்களே.
 
ஜோசப்: போலீஸ் சொல்றதுக்காக மட்டும் இல்ல. சுதந்திர இந்தியாவுல இதுவரைக்கும் ஒரு ஸ்டேட் அசெம்ப்ளியோட மீட்டிங்க அசெம்ப்ளிக்கு வெளியே யாருமே நடத்துனது இல்லையாம். அதாவது பதவியேற்பு ஃபங்ஷன தவிர. அதனால இதுக்கு ப்ரொவிஷன் இருக்கான்னு கோர்ட்டே கேக்குது.
 
கணேஷ்: கேவலம்ங்க. தில்லியில செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கறப்போ இந்த மனுசன் அடிக்கற கூத்த தாங்க முடியல.  அதுக்குத்தான் சொல்றது ஆடத் தெரியாதவனையெல்லாம் மேடையில ஏத்தக் கூடாதுன்னு.  ஒரு கவர்ன்மென்ட்ட லீட் பண்றதுக்கு கொஞ்சமாவது எக்ஸ்ப்ரீயன்ஸ் இருக்கணுங்க.
 
ரஹீம்: (நக்கலுடன்) அதாவது ஒங்க மோடி ஐய்யா மாதிரி?
 
கணேஷ்: சும்மா இருங்க பாய். இவர்தான் ஜெயிச்சி பி.எம்மா ஆவப்போறார்னு தெரிஞ்சிக்கிட்டுத்தான இதுவரைக்கும் இவர இன்சல்ட் பண்ணிக்கிட்டிருந்த அமெரிக்காவே இன்னைக்கி அவர போயி பாத்து பேசிட்டு வான்னு அமெரிக்காவுலருந்து ஆளுங்கள அனுப்புது?
 
ரஹீம்:: (சிரிக்கிறார்) இதையெல்லாம் வச்சிக்கிட்டு இவர்தான் பி.எம்மா வருவார்ங்கற பில்டப்பெல்லாம் குடுக்காதீங்க.
 
கணேஷ்: அட ஏங்க நீங்க வேற. இன்னைக்கி நாட்டுலருக்கற எல்லா கருத்துக் கணிப்புலயும் என்ன சொல்றாங்க? பிஜேபி 250லருந்து 270 சீட் வரைக்கும் பிடிச்சி தனிக்கட்சியா ஆட்சி செய்வாங்களாம். அஞ்சோ பத்தோ  குறைஞ்சா இருக்கவே இருக்கு சிவசேனா கட்சி.
 
ரஹீம்: யோவ் அதுக்கு பேரு கருத்துக் கணிப்பு இல்ல கருத்து திணிப்பு. தில்லியிலயும் இதே மாதிரிதான்
சொல்லிக்கிட்டிருந்தாங்க. ஆம் ஆத்மி தனி பெரிய கட்சியா வந்துரும்னு. ஆனா பிஜேபிதான ஜாஸ்தி எடங்கள புடிச்சது? இந்த ராஹுல் மட்டும் பேசாம இருந்திருந்தார்னா இவங்க ஆட்சியே அமைச்சிருக்க முடியாதேய்யா? இந்த மாதிரிதான் இருக்கும் இப்ப இவங்க சொல்ற கணிப்பும்.
 
ஜோசப்: அப்போ இது எல்லாமே பொய்யின்னு சொல்றீங்களா பாய்?
 
ரஹீம்: அப்படி சொல்ல வரல. ஆனா இவங்க சொல்றா மாதிரியெல்லாம் அந்த அளவுக்கு பிஜேபி வராதுன்னு சொல்றேன். இருக்கற கட்சிங்கள்ல அவங்களுக்கு ஜாஸ்தி இடங்க கிடைக்கலாம். ஆனா தனியா ஆட்சி அமைக்கற அளவுக்கு வராதுன்னு சொல்றேன்.
 
ஜோசப்: அதென்னவோ உண்மைதான். சரி அத விடுங்க. எவ்வளவு நேரம்தான் தேர்தல பத்தியே பேசறது? வேற ஏதாச்சும் இருக்கா?
 
கணேஷ்: இருக்கே. நேத்து நம்ம சிவகெங்கை காரர் யாரோ ஐஏஎஸ் ஆஃபீசர நீ பேசற இங்க்லீஷ் கொடுமையாருக்கு ஹிந்தியிலயே பேசுன்னு சொல்லி இன்ஸல்ட் பண்ணிட்டாராமே? அவருக்கெதிரா ஐஏஎஸ் அதிகாரிங்க சங்கம் கம்ப்ளெய்ன்ட் பண்ணப் போறாங்களாம்?
 
ஜோசப்: (சிரிக்கிறார்) செஞ்சிருப்பார். நம்ம பசி பேசறது ஆக்ஸ்ஃபோர்ட் இங்க்லீஷ் ஆச்சே.
 
ரஹீம்: அட நீங்க வேற ஜோசப். அவர் சொன்னது ஒன்னு இந்த பத்திரிகைக் காரங்க போடறது ஒன்னு. அவர் அப்படியெல்லாம் இன்ஸல்ட்டா பேசற ஆள் இல்ல.
 
ஜோசப்: நா இன்ஸ்ல்ட் பண்ணியிருப்பார்னு சொல்ல வரல. அவர் இங்லீஷ் பேசற விதமே வேறயாச்சே. அவர் மாதிரி எல்லாரும் பேசணும்னு பாத்தா நடக்குமா?
 
கணேஷ்: கரெக்ட்டுங்க. அப்படியே அந்த ஆஃபீசர் கேவலமான இங்க்லீஷ்ல பேசியிருந்தாலும் அவர் அங்கருந்து போனதுக்கப்புறம் இவர் மத்தவங்கக் கிட்ட என்னய்யா சொன்னார் அந்தாள்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டிருக்கலாம்ல?
 
ஜோசப்: சரி விடுங்க. இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல. இந்த நியூஸ் பேப்பர்கார்ங்களுக்கு வேற எதுவும் நியூஸ் கிடைகலன்னா இந்த மாதிரி சில்லியான விஷயத்தையெல்லாம் பெருசா போடுவாங்க. அவங்களுக்கும் வியாபாரம் ஆவனுமா இல்லையா?
 
ரஹீம்: நேத்தைக்கி வந்த நம்ம ஸ்டேட் பட்ஜெட்டப்பத்தி நடிகர் சொன்னத பாத்தீங்களா? போற்றுறதுக்கு என்ன இருக்கு? தூத்துறதுக்குத்தான் இருக்குன்னு சிலேடையா சொல்லியிருக்காரே?
 
கணேஷ்: அது எப்பவுமே அப்படித்தானய்யா? பட்ஜெட் வந்தா ஆளுங்கட்சி ஆதரவாளர்ங்க ஆஹோ ஓஹோம்பாங்க. எதிர்கட்சிக்காரங்க இதெல்லாம் ஒரு பட்ஜெட்டான்னு கேப்பாங்க. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?
 
ஜோசப்: அது சரி. எனக்கொரு சந்தேகம்.
 
கணேஷ்: என்ன?
 
ஜோசப்: இங்க மட்டும் எதிர்க்கட்சிக்காரங்க சின்னதா எதாச்சும் பேசினா ஒடனே கூண்டோட வெளிய போங்கன்னு அனுப்பிடறாங்களே அங்க ராஜ்யசபாவுல இவங்களோட எம்பியே கையில கிடைக்கறதையெல்லாம் கிழிச்சி எறிஞ்சி ஆர்ப்பாட்டம் செய்யிறாரே?
 
ரஹீம்: கரெக்ட்டுங்க. எனக்கும் தோணும். எதுக்கு அங்க மட்டும் கலாட்டா பண்றவங்களையெல்லாம் வெளியேத்திட்டு கூட்டத்த நடத்தாம கூட்டத்தையே ஒத்தி வைக்கிறாங்க?
 
ஜோசப்: சரியா கேட்டீங்க. அதுவும் ஆளுங்கட்சி ஆளுங்களே தெலுங்கானான்னு ஒரு விஷயத்த வச்சி எத்தன நாள் கூட்டம் நடத்தவிடாம பண்றாங்க பாருங்க. அக்கிரமம்.
 
ரஹீம்: நேத்து கைகலப்பு, பெப்பர் ஸ்ப்ரே அடிக்கறதுன்னு ஒரு பெரிய கூத்தே நடந்துருக்கே? இதுவரைக்கும் இப்படியொரு அடிதடி கலாட்டா நடந்ததே இல்லையாமே?
 
கணேஷ்: ஏன் இல்ல? இதெல்லாம் நாங்க ஆட்சியில இருந்தப்பவும் காங்கிரஸ் செஞ்சதுதான். அதுதான் இப்ப திருப்பி கிடைக்கிது.
 
ஜோசப்: அதாவது அடுத்த எலெக்‌ஷன்ல நீங்க ஜெயிச்சி மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்ணாலும் காங்கிரசும் இப்படியெல்லாம் பண்ணலாம். அதான சொல்ல வறீங்க?
 
ரஹீம்: அப்படி போடுங்க அறுவாள!
 
ஜோசப்: சரி பாய். வேற எதுவும் இல்லன்னா அடுத்த வாரம் பாக்கலாமா?
 
ரஹீம் சரி என்று எழுந்து நிற்க கணேஷும் ஜோசப்பும் அவரிடமிருந்து விடைபெறுகின்றனர்.
 
**********
 

11 பிப்ரவரி 2014

கொட்டித் தீர்த்துவிடு!

Laugh the world laughs with you weep and you weep alone என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நீ சிரிக்கும்போது உலகமே உன்னுடைய இணைந்து சிரிக்கும் அழும்போதோ நீ தனிமையில்தான் அழவேண்டும்.
 
ஆனால் ஓஷோ இதையே மாற்றி கூறுவதைப் பார்க்கிறோம். நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது உலகம் உன்னுடன் சேர்ந்து மகிழ்ச்சியடைவதில்லை. மாறாக உன்னைப் பார்த்து பொறாமை கொள்கிறது. ஆனால் நீ துயரத்தில் இருக்கும்போது உன் மீது ஏற்படும் பச்சாதாப உணர்வினால் உன்னுடைய துயரத்தில் பங்கு கொள்ள வருகிறது என்கிறார்.
 
இவ்விரு நேர் மாறான கருத்துக்களுமே உண்மைதான்.
 
நம்முடைய சிரிப்பு நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் தொற்றிக்கொள்வதை பார்த்திருக்கிறோம். அதாவது நம்முடைய வெற்றியை தங்களுடைய வெற்றியாக ஏற்றுக்கொள்பவர்கள் நம்முடைய வெற்றிச் சிரிப்பில் மகிழ்வுடன் கலந்துக்கொள்கிறார்கள். குறிப்பாக ஒரு கட்சியின் வேட்பாளர் தேர்தலில் வெற்றியடையும்போது அவர் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்கள் அதை தங்களுடைய வெற்றியாக மகிழ்ந்து கொண்டாடுவதை பார்க்கிறோம். அதே போல் ஒரு நடிகரின் வெற்றியை அவருடைய ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். ஓரு மாணவனின் வெற்றியை அவனுடைய ஆசிரியர் அதை தன்னுடைய வெற்றியாக கருதுகிறார். ஒரு மகனின் வெற்றியை அவனுடைய தாய், தந்தையர் கொண்டாடுகின்றனர்.
 
துயரமும் ஒரு வகையில் அப்படித்தான். ஒருவருடைய இறப்பால் ஏற்படும் துயரம் அவரை சார்ந்துள்ளவர்களை மட்டுமல்லாமல் அந்த இறப்பால் எவ்வித இழப்பும் ஏற்பட வாய்ப்பில்லாதவர்களையும் கூட தொற்றிக் கொள்கிறது. மகிழ்ச்சிக்கு கூறிய அதே சான்றுகளை துயரத்திற்கும் கூறலாம். ஒரு தலைவனின் தோல்வி அவனுடைய தொண்டர்களையும் ஒரு தனிமனிதனின் தோல்வி அவனுடைய நண்பர்களையும் ஒரு மகனின், ஒரு மகளின் தோல்வி அவனுடைய பெற்றோர்களையும் ஒரு மாணவனின் தோல்வி அவனுடைய ஆசிரியரையும் துயருறச் செய்கிறது.
 
அப்படியிருக்கும் போது இந்த ஆங்கிலப் பழமொழி எப்படி உருவானது?
 
மகிழ்ச்சி என்பது ஒருவருடைய விடாமுயற்சியின் பயனாக கிடைத்த வெற்றியாக இருக்கும் சூழலில் உலகம் அவருடைய விடாமுயற்சியை பாராட்டுகிறது. அவனுடைய வெற்றியில் தன்னை இணைத்துக்கொள்ள விரும்புகிறது. ஆகவேதான் நீ சிரிக்கும்போது உலகம் உன்னுடைய சிர்ப்பில் இணைந்துக்கொள்கிறது என்கிறார்கள்.
 
மாறாக துயரம் ஒருவருடைய தோல்வியால் அதாவது எவ்வித உழைப்பும் இல்லாமல் ஏற்படும் தோல்வியாலோ அல்லது நம்முடைய கவனக் குறைவால் ஏற்படும் இழப்பாலோ ஏற்படும் சூழலில் உலகம் உன்னுடைய இழப்புக்கு நீதானே பொறுப்பு என்று நம்மை விட்டு விலகிச் செல்ல நினைக்கிறது. நம்மை நம்முடைய துயரத்திலேயே விட்டு விலகி விடுகிறது.
 
இதற்கு இன்னும் ஒரு காரணம் உள்ளது.
 
வெற்றியால் கிடைக்கும் மகிழ்ச்சியை நாம் விரும்பிச் சென்று பிறருடன் பகிர்ந்துக் கொள்கிறோம். உலகிற்கு பறைசாற்றுகின்றோம். ஆனால் நம்முடைய தோல்வியை நம்முடைய இழப்பை நமக்குள்ளேயே வைத்து புழுங்குகிறோம். நான் தோல்வியடைந்துவிட்டேன் என்பதை யாரும் உலகிற்கு பறைசாற்றுவதில்லை. நம்முடைய இழப்பில் துயருறும் நம்முடைய சொந்தங்களிடம் மட்டுமே பகிர்ந்துக்கொள்ள முன்வருகிறோம்.  ஆகவேதான் உலகம் நம்முடைய துயரத்தில் பங்கு கொள்வதில்லை.
 
எப்போதும் முக மலர்ச்சியுடன் காணப்படும் ஒருவர் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் கவனத்தை கவர்வதைப் பார்க்கிறோம். மாறாக எப்போதும் சோகத்துடன் அழுது வடிந்துக்கொண்டிருப்பவரை விட்டு அனைவரும் விலகிச் செல்லவே விரும்புகின்றனர்.
 
மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும்போது அது மென்மேலும் பெருகும் என்பார்கள். மாறாக துக்கத்தை பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும்போது அது குறையுமாம்!
 
ஆனால் நம்மில் பலரும் இதை உணர்வதில்லை. நம்மில் பலருக்கும் நம்முடைய துயரத்திலேயே மூழ்கி இருப்பது ஒருவித நிம்மதியை அளிக்கிறது. என்னுடைய துயரம் என்னுடனேயே போகட்டும் உங்களுக்கு வேண்டாம் என்று ஆறுதல் கூற வருபவர்களையும் ஒதுக்கி விடுவதை பார்க்கிறோம். துயரத்தில் மூழ்கிப் போவதும் ஒரு சுகமான அனுபவம்தான் என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
 
மகிழ்ச்சியும் துயரமும் துக்கமும் இரவும் பகலும் போல மாறி மாறி வரும் உணர்வுகள். இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பது எவ்வாறு சாத்தியமில்லையோ அதே போல எப்போதும் துயரத்திலேயே மூழ்கியிருப்பதும் சாத்தியமில்லை.
 
ஆங்கிலத்தில் down in the dump என்பார்கள். சோகத்தின் அடிமட்டத்திற்கே சென்றுவிடுவது மனித இயல்புதான். அதிலிருந்து உடனே மீள்வது என்பது ஒரு சராசரி மனிதனால்  எளிதில் முடியாது என்பதும் உண்மைதான். ஆகவேதான் அதீத கோபத்தை கையாள்வது எப்படி என்று பயிற்றுவிப்பதைப் போலவே அதீத துயரத்திலிருந்து மீள்வது எப்படி என்பதை பயிற்றுவிப்பதற்கும் பல பயிற்சியாளர்கள் உள்ளனர்.
 
அதீத கோபம் ஒரு சிலருக்குத்தான் வரும் என்பார்கள். ஆனால் துயரம், சோகம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். Born with the silver spoon எனப்படும் செல்வந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவருக்கும் வரலாம். ஏனெனில் உலகில் தோல்வியைச் சந்திக்காத மனிதர்களே இல்லையே. தோல்விதான் வெற்றி என்னும் உச்சத்தை அடைய உதவும் ஏணியின் முதல் படி என்கிறார்களே!
 
நாம் சோகத்தில் இருக்கும்போது எதற்கு எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது என்கிற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. ஆனால் சோகம் நமக்கு மட்டுமே சொந்தமானதல்ல. இந்த அடிப்படை உண்மையை நான் எப்போது உணர்கிறோமோ அப்போதே அதிலிருந்து மீள துவங்கிவிட்டோம் என்று பொருள்.
 
நம்முடைய துயரத்திலிருந்து மீண்டு வர யோகா, ஆழ்நிலை தியானம் என பல நிவாரணிகள் உள்ளன என்கிறார்கள். ஆனால் இவை அனைத்துமே நம்முடைய துயரத்தை ஓரளவுக்கு மட்டுமே குறைக்கும். ஏனெனில் இத்தகைய மனநிலையில் நாள் முழுவதும் இருக்க முடிவதில்லை. இவற்றிலிருந்து மீண்டு வந்தவுடனேயே நம் உள் மனதில் ஒளிந்துக்கொண்டிருக்கும் சோகம் மீண்டும் நம்மை வந்து தொற்றிக்கொள்வதை உணர்கிறோம். ஆக இத்தகைய முயற்சிகள் நிரந்தர தீர்வுகள் இல்லை என்பது தெளிவாகிறது.
 
பிறகு இதற்கு என்னதான் தீர்வு?
 
நம்முடைய சோகத்தை நமக்குள்ளேயே வைத்திருக்காமல் அதாவது நம்முடைய சோகத்திலேயே சுகம் காணாமல் அதனுடைய அடிப்படைக் காரணத்தை கண்டறிய வேண்டும். ஒருவேளை இது நம்மால் முடியாமல் போகலாம். அத்தகைய சூழலில் நம்முடைய சோகத்தை பிறருடன் மனம் திறந்து கூறுவதுதான் நல்லது. குறிப்பாக நம்முடைய நலனில் அக்கறையுள்ளவர்களிடம். இதைத்தான் மனதிலுள்ளவற்றைக் கொட்டித் தீர்த்துவிடு என்கிறார்கள். சோகத்தை பகிர்ந்துக்கொள்ளும்போது அதனுடைய தாக்கம் குறையும் என்பதுடன் அதற்கு தீர்வும் பிறரிடமிருந்து கிடைக்க வாய்ப்புள்ளது. நாம் எத்தனை முறை முயன்றாலும் நமக்கு புலப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு பிறரிடம் பகிர்ந்துக்குள்ளும்போது ஒரு நொடியில் கிடைத்துவிடுவதை நாம் கண்டுணர்ந்திருக்கிறோமே? எப்படி இது எனக்கு புலப்படாமல் போயிற்று என்று மகிழும் அளவுக்கு பல சமயங்களில் தோன்றுவதில்லையா?
 
ஆம். நம்முடைய துயரத்திற்கு காரணிகளாக உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பிறரிடமிருந்துதான் வருகின்றன என்பதை நாம் உணர வேண்டும். ஆகவே நம்முடைய உள்ளத்தில் மண்டிக்கிடக்கும் சோகத்தை, துயரத்தை பிறரிடம் கொட்டி விட வேண்டும். நம்முடைய சோகம் முழுவதுமாக தீர்ந்துவிடவில்லையென்றாலும் அது நிச்சயம் குறையும். நாம் சற்றும் எதிர்பார்த்திராத தீர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு.
 
இன்று குடும்பங்களிலும் தனி மனித உறவுகளிலும் ஏற்படும் பல மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படாமல் போவதற்கு முக்கிய காரணம் பிரச்சினைகளை மனம்விட்டு பேச முன்வராத மனநிலைதான் என்றால் மிகையாகாது. தங்களுடைய சோகத்தை நெருங்கிய நண்பர்களுடனோ அல்லது சொந்தங்களுடனோ பகிர்ந்துக்கொள்ள மனமில்லாத பலரும் இப்போது மனநல மருத்துவர்களையும் ஆலோசகர்களையும் அணுகுவதைப் பார்க்கிறோம். அது தேவையல்ல என்பதல்ல என்னுடைய கருத்து. ஆனால் அவர்களுக்கு அது ஒரு தொழில். எவ்வித ஈடுபாடும் (involvement) இல்லாமல் இயந்திரத்தனமாக (mechanically) வழங்கப்படும் அறிவுரைகளால் நமக்கு கிடைக்கும் நிம்மதியை விட நம்மை நன்கு அறிந்தவர்கள், நம்முடைய நலனில் அக்கரை உள்ளவர்கள் அளிக்கும் அறிவுரையும் ஆறுதலும் பாமரத்தனமாகவோ (ameturish) அல்லது சிறுபிள்ளைத்தனமாகவோ (childish) இருந்தாலும் பல சமயங்களில் அவை நமக்கு பயனுள்ளதாகவும் அமைய வாய்ப்புள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது.
 
*************
 

07 பிப்ரவரி 2014

திண்ணை பேச்சு

தன்னுடைய நண்பர் ரஹீம்பாய் வீட்டுக்கு நடந்துச் சென்றுக்கொண்டிருக்கும் ஜோசப்  யாரோ தன்னை அழைப்பதை கேட்டு நின்று திரும்பிப் பார்க்கிறார். சற்று தொலைவில் அவருடைய நண்பர் கணேஷ் தன்னை நோக்கி வந்துக்கொண்டிருப்பது தெரிகிறது.  அவர் தன்னை நெருங்கும் வரையில் காத்திருந்த ஜோசப், 'என்ன கணேஷ் கோவம் எல்லாம் போயிருச்சா?' என்கிறார்.

கணேஷ்: 'எது, கோபமா?'

ஜோசப்: 'ஆமாங்க. போன வாரம் பேசிக்கிட்டே இருந்தவர் கோபத்தோட எறங்கி போனீங்களே? எங்க இனிமே இந்த பக்கமே வராம இருந்துருவீங்களோன்னு நானும் பாயும் நினைச்சோம்'

கணேஷ் சிரிக்கிறார். 'ஓ! அதுவா. அதெல்லாம் ஒரு கோபமா?  அதுக்காக இத்தன வருசத்து பழக்கத்த விட்ற முடியுமா? என் கோபத்த பத்தி ஒங்களுக்கு தெரியாதா என்ன? திடீர்னு வரும், வந்த மாதிரியே போயிரும்.'

ஜோசப்பும் அவருடைய சிரிப்பில் கலந்துக்கொள்கிறார். 'நம்மள மாதிரிதான்னு சொல்லுங்க.'

கணேஷ்: 'ஏன் ரஹீம் பாய் மட்டும் என்னவாம்? பிஜேபின்னு சொன்னால பாய்றாரே?'

ஜோசப் சிரித்தவாறே கணேஷின் தோளில் தட்டுகிறார். 'சரி, சரி விடுங்க.  அங்க பாருங்க, பாய் வாசல்ல நின்னுக்கிட்டு நம்மளையே பாத்துக்கிட்டிருக்கார்.  இன்னைக்கிம் நாம லேட்டுதான். போனதும் சொல்வார் பாருங்க.'

அவர் நினைத்த மாதிரியே அவர்கள் வீட்டை நெருங்கியதுமே ரஹீம் பாய், 'ஏங்க  என்னையும் ஒங்கள மாதிரி நினைச்சிட்டீங்களா? ஒங்க ரெண்டு பேருக்கும் பென்ஷன் வீடு தேடி வந்துரும். ஆனா நமக்கு அப்படி இல்லீங்க, டெய்லி போயி கடைய தொறந்தாத்தான் வீட்ல அடுப்பு எரியும். கணேஷ்தான் எப்பவுமே லேட்டுன்னு பாத்தா நீங்களுமா? வர்றது வாரத்துக்கு ஒரு நாள். கொஞ்சம் சீக்கிரம் வந்தாத்தான் என்னவாம்?'

ஜோசப் நா சொல்லல என்பதுபோல் கணேஷை பார்த்து புன்னகைக்கிறார்.  'சாரி பாய்.'

ரஹீம்: 'சரி. கணேஷ் வர்ற வழியில என்னத்தையோ சொல்லிக்கிட்டு வந்தாரே என்னெ பத்தித்தான?'

ஜோசப் சிரிக்கிறார். 'என்ன பாய் உங்களுக்கும் அந்த நோய் வந்துருச்சா?

ரஹீம்: 'நோயா, என்ன நோய்?'

ஜோசப்: 'அதான் பாய், யார் என்ன பேசிக்கிட்டிருந்தாலும் நம்மளப் பத்தித்தான் பேசறாங்களோன்னு நினைக்கற நோய். '

கணேஷ் சிரிக்கிறார்.  ரஹீம் பாய் முறைக்கிறார்.

ஜோசப் நிலைமையை சமாளிக்க பேச்சை மாற்றுகிறார். 'சரி அத விடுங்க. இந்த வாரம் சூடா டிஸ்கஸ் பண்றதுக்கு ஏதாச்சும் இருக்கா அதச் சொல்லுங்க.'

கணேஷ்: ஏன் இல்லாம? நம்ம 'போராளி' முதலமைச்சர், 'அகல-வாய்' கெஜ்ரிவால் ஒரு லிஸ்ட் வுட்ருக்காரே பாத்தீங்களா?'

ஜோசப்பும் ரஹீம் பாயும் உரக்க சிரிக்கின்றனர்

ஜோசப்: என்ன கணேஷ், அவருக்கு நிறைய பட்டப் பெயர்லாம் வச்சிட்டீங்க போலருக்கு?

கணேஷ்: பின்ன என்னங்க, ஒரு சீஃப் மினிஸ்டர் மாதிரியா நடந்துக்கிறார்? இன்னும் கூட நாம ஆளுங்கட்சிங்கற நினைப்பு வரல போலருக்கு. எதிர்கட்சிங்கள மாதிரியே எதுக்கெடுத்தாலும் ரோட்ல இறங்கி போராட்டம்கறார். அவருக்கு வாயும் ரொம்ப பெரிசுங்க. என்ன பேசறோம், எத பேசறோம்கற விவஸ்தையே இல்லாம....'

ரஹீம்: நீங்க சொல்றது சரிதான் கணேஷ். அவர் லிஸ்ட் போடற ஸ்டைல  பார்த்தா பார்லிமென்ட்ல இருக்கற எல்லா எம்பிங்களுமே ஊழல்வாதிங்கன்னு சொல்லிருவார் போலருக்கு.

கணேஷ்: அப்படி சொல்லிட்டாலும் பரவால்லை. இன்னார், இன்னார்னு எந்த எவிடென்சும் இல்லாம இவருக்கு புடிக்காதவங்க பேரையெல்லாம் பட்டியல் போட்டுக்கிட்டு....'

ஜோசப்: நேஷனல் லெவல்ல சொன்னது போறாதுன்னு ஸ்டேட் லெவல் லிஸ்ட்டையும் வெளியிடப் போறாராமே?

கணேஷ்: செய்யட்டும். நாடு முழுசும் கொடும்பாவி எரிக்கப்பட்ட ஒரே இந்திய தலைவர்ங்கற பேர் கிடைச்சிரும்.

ரஹீம்: சரிங்க.  கொஞ்ச நாளைக்கி முன்னால ஒங்க ப்ரைம் மினிஸ்டர் கேன்டிடேட்டும் ஜெயந்தி டாக்ஸ்னு என்னத்தையோ சொன்னாரே? அது மட்டும் சரியா? அவர் மட்டும் எவிடென்ஸ் வச்சிக்கிட்டுத்தான் சொன்னாரா?

ஜோசப்: சரியான கேள்வி. பதில் சொல்லுங்க கணேஷ்.

கணேஷ்: அதுவும் தப்புதாங்க.  ஆனா எவிடென்ஸ் இல்லாம அவர் அப்படி பேசியிருக்க மாட்டார்.

ரஹீம்: அதான! என்னடா சடக்குன்னு தப்புன்னு ஒத்துக்கிட்டீங்களேன்னு பாத்தேன்.

ஜோசப்: எவிடென்ஸ்சுன்னு எத சொல்றீங்க கணேஷ்?

கணேஷ்: பின்ன என்னங்க? அவரோட ஸ்டேட்லருந்து அனுப்புன இன்டஸ்ட்ரியல்  ப்ரொப்போசல்ஸ இந்தம்மா க்ளியரே பண்ணாம வருசக் கணக்கா வச்சிருந்தாங்களாமே? அத எல்லாம் இவர டிஸ்மிஸ் பண்ணதுக்கப்புறம் மொய்லி ஒரே வாரத்துல க்ளியர் பண்ணிட்டார்னா அப்போ இவங்க எதுக்கு பென்டிங் வச்சிருந்தாங்க? '

ரஹீம்: என்னங்க இது அநியாயமா இருக்கு? சீக்கிரமா குடுத்தா இவர் எதையுமே பாக்காம வாங்கறத வாங்கிக்கிட்டு ஃபைல க்ளியர் பண்ணிட்டார்னு சொல்வீங்க. இல்லன்னா குடுக்க வேண்டியத குடுக்கலையேன்னு லேட்டாக்கறார்னு சொல்வீங்க? ஏங்க என்வய்ரன்மென்ட் க்ளியரன்ஸ்னா அவ்வளவு லேசான விஷயமா? சாதாரணமாவே லேடீஸ் அவ்வளவு ஈசியா டிசிஷன் எடுக்க மாட்டாங்க. அந்த மாதிரி அந்தம்மா எல்லாத்தையும் பாத்துட்டு தனக்கு திருப்தியானதுக்கப்புறம் க்ளியர் பண்லாம்னு நினைச்சிருப்பாங்க. அதுக்காகவே அவங்க 'டாக்ஸ்'  போட்டாங்கன்னு சொல்லிற முடியுமா? சரி எவிடென்ஸ் இருந்தா இன்ன கம்பெனிக்கிட்டருந்து இன்ன தொகைய வாங்குனாங்க, இல்ல கேட்டாங்கன்னு மோடி சொல்ல வேண்டியதுதானே?

கணேஷ்: பாய் விவரம் தெரியாம பேசாதீங்க.  அப்படீன்னா அந்தம்மாவ எதுக்கு திடீர்னு போஸ்ட்லருந்து தூக்குனாங்க?

ஜோசப்: இல்ல கணேஷ். அவங்கள யாரும் தூக்கல. அவங்களேதான் ரிசைன் பண்னாங்க. அதுக்கும் காரணம் இருக்கலாம். வாசன் மாதிரியே அவங்களுக்கும் ராஜ்ய சபா டேர்ம் இந்த மாசத்தோட முடிஞ்சிருது. எப்படியிருந்தாலும் அவங்க மினிஸ்டரா கன்டினியூ பண்ண முடியாது. ஏன்னா இங்க சட்டசபையில இருக்கற எம்.எல்.ஏ ஸ்ட்ரெங்த வச்சி ஒரு சீட்டுக்கே திண்டாட்டம். ஏற்கனவே வாசன்தான் அந்த சீட்டுக்கு போட்டி போடுவார்னு பேசிக்கிட்டாங்க. கடைசியில பாத்தா அவராலயே போட்டி போட முடியல. இத ஜெயந்தி நடராஜன் முன்னாலயே எதிர்பார்த்துத்தான் நாமளாவே ரிசைன் பண்ணிருவோம்னு செஞ்சிருப்பாங்க. இத மட்டுமே வச்சிக்கிட்டு அவங்க லஞ்சம் வாங்கனாங்கன்னு சொல்றது ஒரு பிரைம் மினிஸ்டர் கேன்டிடேட்டுக்கு அழகே இல்லீங்க.

ரஹீம்: கரெக்ட். ஏறக்குறைய இருபத்தஞ்சி வருசமா அரசியல்ல இருக்கற இவரே இப்படி பொறுப்பில்லாம பேசறப்போ நேத்து அரசியலுக்கு வந்த கெஜ்ரிய எப்படீங்க குறை சொல்ல முடியும்? சரி. அது இருக்கட்டும். ஆம் ஆத்மி கட்சி வர்றதுக்கு முன்னால பிஜேபியும் ஊழல ஒழிக்கறதுதான் எங்க முதல் வேலைன்னு சொல்லிக்கிட்டிருந்தீங்களே, இப்ப ஒங்க கட்சிக்குள்ளவே நிறைய ஊழல்வாதிங்க இருக்கறார்னு அவர் சொல்றாரே அதுக்கு என்ன சொல்லப் போறீங்க?

கணேஷ்: அவர் ஒரு பொறுப்பில்லாதவர்ங்க. அவர் கிட்ட ஏதாச்சும் எவிடென்ஸ் இருந்தா சொல்லட்டும் அப்புறம் பாக்கலாம்.

ஜோசப்: (சிரிக்கிறார்) அப்போ நீங்க சோனியாவையும் ராகுலையும் ஊழல்வாதிஙக்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்களே இதுவரைக்கும் அதுக்கு  ஏதாவது உருப்படியா எவிடென்ஸ் குடுத்துருக்கீங்களா?  நீங்க சொன்னா அத அப்படியே  மத்தவங்க ஏத்துக்கணும். ஆனா அதையே மத்தவங்க சொன்னா எவிடென்ஸ் கேப்பீங்க அப்படித்தான?

கணேஷ்: (கோபத்துடன்) ஜோசப், சும்மா ஆர்க்யூ பண்ணணுமேன்னுட்டு எதையாச்சும் பேசாதீங்க. அவங்க விஷயமே வேற. 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், போஃபோர்ஸ் ஊழல் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். இதுல எல்லாத்துக்கும் இவங்க ரெண்டு பேருக்கும் பங்கு இருக்கத்தான் செய்யிது. இல்லேன்னு சொல்லிற முடியுமா?

ரஹீம்: (கோபத்துடன்) அப்படீன்னா ராஜாவையும் கனிமொழியையும் அரெஸ்ட் பண்ணா மாதிரி அவங்கள ஏன் அரெஸ்ட் பண்ணல?

கணேஷ்: நாங்க மட்டும் ஆட்சிக்கு வரட்டும் செய்யிறமா இல்லையான்னு பாருங்க.

ஜோசப்: அதாவது நீங்க வந்து எவிடென்சையெல்லாம் தோண்டி எடுத்தப்புறம். அப்படித்தான?

கணேஷ்: ஆமா.

ரஹீம்: அப்போ அதுக்கு அர்த்தம் இதுவரைக்கும் அவங்க ரெண்டு பேரும் ஊழல்வாதிங்கன்னு சொல்றதுக்கு எந்த எவிடென்சும் கிடைக்கல. சரிதானே?

கணேஷ்: (சமாளிக்கிறார்) அப்படீன்னும் வச்சிக்கலாம். ஆனா அதுக்கு ரொம்ப நாளாகாது.

ஜோசப்: (சிரிக்கிறார்) நல்ல நியாயம்யா. அதையேத்தான் கெஜ்ரிவாலும் செய்றார். நாங்க ஆட்சிக்கு வந்தா இவங்களை சும்மா விடமாட்டோம். கேஸ் போட்டு உள்ள தள்ளிறுவோம்னு டெய்லி ஒரு லிஸ்ட் விடறார். இந்த விஷயத்துல உங்க ரெண்டு கட்சியுமே ஒன்னுதாங்க.

கணேஷ்: அப்படி பாக்கப் போனா காங்கிரசும் ஒன்னுதான். எடியூரப்பாவ ஊழல்வாதின்னு சொல்றதுக்கு ஏதாச்சும் எவிடென்ஸ் இருக்கா இவங்கக்கிட்ட?

ரஹீம்: யோவ், அதான் அவர் மேல கர்நாடகா லோக்பால் கேஸே ஃபைல் பண்ணியிருக்காங்களே? எவிடென்ஸ் இல்லாமயா கேஸ் ஃபைல் பண்ணியிருப்பாங்க?

கணேஷ்: இப்பல்லாம் தொத்தல் எவிடென்ஸ் இருந்தாலே கேஸ் போட்ற முடியும். விசாரணை முடிஞ்சி தீர்ப்புல கில்ட்டின்னு வந்தாத்தான் அவர் ஊழல்
பண்ணாரா இல்லையான்னு தெரியும்.

ஜோசப்: அதையேத்தான் நானும் சொல்றேன். எடியூரப்பா மேல போட்ட கேஸ் நடந்துக்கிட்டிருக்கறப்பவே அவர் ஊழல்வாதின்னு சொல்ல முடியாதுன்னு சொல்ற நீங்க இதுவரைக்கும் எந்த கேசும் இல்லாம இருக்கற சோனியா, ராகுல எப்படீங்க வாய் கூசாம ஊழல்வாதிங்கன்னு சொல்றீங்க?

கணேஷ்: (சலிப்புடன்) சரிங்க. இன்னைக்கி முழுசும் இதையேத்தான் பேசிக்கிட்டு இருக்கப் போறாமா? அப்படீன்னா நா கிளம்பறேன். (திண்ணையிலிருந்து எழுந்து நிற்கிறார்.)

ஜோசப்: இருங்க கணேஷ். மறுபடியும் கோச்சிக்கிட்டு பாதியிலயே எழுந்து போயிராதீங்க.

கணேஷ் மனமில்லாமல் மீண்டும் திண்ணையில் அமர்கிறார். 

ரஹீம்: ஆர்க்யூமென்ட்டுன்னு வந்துருச்சின்னா ஒக்காந்து பேசறத விட்டுப்போட்டு பொசுக், பொசுக்குன்னு போய்ட்டா ஆச்சா? இந்த விஷயமா கடைசியா ஒரேயொரு கேள்வி. அதுக்கப்புறம் மத்த விஷயத்த பேசலாம். என்ன கேக்கவா?

கணேஷ்: (சலிப்புடன்) சரி, சரி. கேளுங்க.

ரஹீம்: கொஞ்ச நாளைக்கி முன்னால சோனியா காந்திக்கு ஸ்விஸ் பாங்குல அக்கவுன்ட் இருக்குன்னு ஒங்க அத்வானிஜியே ஒரு அறிக்கை விட்டாரே ஞாபகம் இருக்கா?

கணேஷ்: இல்லாம என்ன? இப்ப அதுக்கு என்ன?

ரஹீம்: அதுக்கு என்னவா? இவர் சொன்ன சமயத்துல அந்தம்மா யுஎஸ்சுக்கு ட்ரீட்மென்ட் போயிர்ந்தாங்க. அங்கருந்து திரும்பி வந்ததும் அத்வானிக்கு நேரடியா லெட்டர் எழுதி அந்த மாதிரி எந்த கணக்கும் என் பேர்ல இல்லேன்னு சொன்னாங்க. அத்வானியும் உடனே நான் சொன்னது தப்புன்னு சரண்டர் ஆனாரே? அதுவும் ஞாபகம் இருக்குல்ல?

கணேஷ்: ஒன்றும் சொல்லாமல் தலை குணிந்து அமர்ந்திருக்கிறார்.

ஜோசப்: சரி விடுங்க பாய். அவர்தான் பதில் பேச முடியாம ஒக்காந்துருக்காரே.

ரஹீம்: அதுக்கில்ல ஜோசப். நா என்ன சொல்ல வரேன்னா இந்த மாதிரிதான் இவங்க சொல்ற எல்லா ஊழல் குற்றச்சாட்டுமே. எந்த எவிடென்சும் இல்லாம சும்மா கல்ல எறிஞ்சி பாப்போம்னு விடறது. கல்லடிப் பட்டவன் பேசாம இருந்துட்டானா பாத்தியா அடிச்ச அடியில ஆள் அமுங்கிப் போய்ட்டான்னு சொல்றது. அவன் திருப்பி அடிச்சான்னா சைலன்டா சரன்டராயிடறது. இதையே இவங்க எத்தன நாளைக்கித்தான் செய்வாங்களோ தெரியல.

ஜோசப்: சரிங்க. வேற ஏதாச்சும் பேசறதுக்கு இருக்கா?

ரஹீம்: இருக்கே. இப்ப மறுபடியும் மூனாவது அணின்னு சொல்லிக்கிட்டு கிளம்பியிருக்காங்களே அதப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

ஜோசப் மவுனமாக அமர்ந்திருக்கும் கணேஷை பார்க்கிறார்: இருங்க. அதப்பத்தி கணேஷ் என்ன சொல்றார்னு கேப்போம். என்ன கணேஷ்?

கணேஷ்: அதெல்லாம் ஒன்னும் ஒப்பேறாதுங்க. இந்த மாதிரி ஒவ்வொரு எலக்‌ஷன் டைம்லயும் இவங்க அடிக்கற கூத்தத்தான் பாத்துக்கிட்டு இருக்கிறோமே. அதுமாதிரிதான் இப்பவும். அங்கருக்கற எல்லாத்துக்குமே பிரைம் மினிஸ்டராகணும்னு ஆசை. இந்த ஒரு விஷயத்துல அடிபட்டு போயிரும்.

ஜோசப்: ஆனா இந்த தடவ அப்படி இல்ல போலருக்கே. சாதாரணமா அதிமுக இதுலல்லாம் எந்த இன்ட்ரஸ்ட்டும் காமிக்க மாட்டாங்க. ஆனா இந்த தடவ அவங்களும் இல்ல ஆர்வம் காட்றா மாதிரி தெரியுது?

ரஹீம்: நீங்க சொல்றது சரிதான். இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு இந்த தடவ இது கொஞ்சம் சீரியசாத்தான் தெரியுது. அதுக்கு காரணம் இல்லாம இல்ல .
கணேஷ்: (எரிச்சலுடன்) என்னங்க காரணம் புடலங்கா?

ஜோசப்: இருங்க கணேஷ், மறுபடியும் கோபமா? நீங்க சொல்லுங்க பாய்.

ரஹீம்: நா சொல்றது இதுதான். இந்த தடவ காங்கிரசும் சரி பிஜேபியும் சரி தனியாத்தான் எலெக்‌ஷன சந்திக்கற சூழல்ல இருக்காங்க. ரெண்டு கட்சிங்களோடயும் தேர்தலுக்கு முன்னால கூட்டணி வச்சிக்க யாருமே விருப்பப் படலேங்கறா மாதிரிதான் தெரியுது. போறாததுக்கு புதுசா முளைச்சிருக்கற ஆம் ஆத்மி கட்சி வேற. அதனால 533 பார்லிமென்ட் சீட்ல போன எலெக்‌ஷன்ல 200 சீட்டுக்கு மேல ஸ்டேட் லெவல்ல கட்சிங்களுக்கு கிடைச்சும் அவங்களுக்குள்ள ஒத்துமை இல்லாம கடைசியில வேற வழி இல்லாம இவங்கள்ல நிறைய பேர் காங்கிரஸ் சப்போர்ட் பண்ண போய்ட்டாங்க.   ஆனா இந்த தடவ அப்படி நடக்க சான்ஸ் இல்ல. தனித்தனியா நிப்போம். தேர்தலுக்கப்புறம் இருக்கற நிலவரத்த பாத்துட்டு நாம சேர்ந்து மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்றத பத்தி பேசுவோம்னு டிசைட் பண்ணியிருக்கற மாதிரி தெரியுது.  காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் தனியா மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்ற அளவுக்கு சீட் வரா மாதிரி தெரியல. அதனால  இவங்கக்கிட்டத்தான் வந்து நின்னாகணும்.  அப்போ நாங்களே மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்றோம் நீங்க வெளியிலருந்து ஆதரவு தாங்கன்னு இவங்க  கேட்டா எதிரிக்கி எதிரி நண்பன்கறா மாதிரி, அதாவது இப்ப தில்லியில நடக்கறா மாதிரி, ரெண்டு பேருமே போட்டி போட்டுக்கிட்டு ஆதரவு குடுப்பாங்கன்னு நினைக்கிறேன்.  ன்ன சொல்றீங்க?

கணேஷ்: (எரிச்சலுடன்) கேக்கறதுக்கே அபத்தமா இருக்கு.

ஜோசப்: (சிரிக்கிறார்) ஆனா எனக்கு அப்படி தெரியல.

கணேஷ்: நீங்க வேற ஜோசப். நா போன வாரமே சொன்னா மாதிரி இப்ப இருக்கற மோடி அலையில இந்த பார்ட்டிங்க  எல்லாமே இருக்கற இடம் தெரியாம போயிரும். வேணும்னா பாருங்க.

ஜோசப்: பாக்கத்தான போறோம்.  வேற என்ன பாய்?

ரஹீம்: நம்ம ஃபிஷர் மேன தொடர்ந்து இலங்கைக்காரன் அடிச்சிக்கிட்டே இருக்கானே இதுக்கு விடிவு காலமே இல்லையா?

கணேஷ்: (குறுக்கிட்டு) முதுகெலும்பே இல்லாத பி.எம் சென்டர்ல இருக்கற வரைக்கும் இதுக்கு முடிவே வராது பாய். மோடி மாதிரி ஒரு ஆள் பிஎம் மா வந்தாத்தான் இலங்கைக்காரன் பயப்படுவான்.

ஜோசப்: மோடி வந்தா என்ன செய்வார்னு சொல்றீங்க?

கணேஷ்: ஏதாச்சும் செய்வார். இந்த மாதிரி வழவழா கொழகொழான்னு பேசிக்கிட்டு இருக்க மாட்டார்.

ரஹீம்: இந்த மாதிரி சால்ஜாப்பெல்லாம் வேணாம். ஜோசப் கேட்ட கேள்விக்கி ஸ்ட்ரெய்ட்டா பதில் சொல்லுங்க. மோடி என்ன செஞ்சி கிழிச்சிருவார்?

கணேஷ்: சங்கடத்துடன் நெளிகிறார்.

ரஹீம்: பாத்தீங்களா ஜோசப் நெளியறத! சும்மா அடாவடியா பேசிட்டா ஆயிருச்சா?

ஜோசப்: எனக்கென்னவோ ஶ்ரீலங்காவுல இப்ப இருக்கற கவர்ன்மென்ட் இருக்கறவரைக்கும் இதுக்கு சொலூஷன் கிடைக்க சான்ஸே இல்ல. மீனவர்ங்களுக்குள்ளவே  பேசி தீர்த்துக்கக் கூட அவங்க விட மாட்டாங்க போல தெரியுது. மோடி வந்தாக்கூட இதுல பெருசா எதையும் செய்ய சான்ஸ் இல்ல. இன்னைக்கி அங்க பெரிய அளவுல, அதாவது சுமார் ரூ.2400 கோடி அளவுக்கு,  இன்வெஸ்ட் பண்ணியிருக்கற டாட்டா,  பார்த்தி, அஷோக் லெய்லேன்ட் மாதிரியான  இன்டியன் கம்பெனிங்களுக்கு அவங்களோட இன்வெஸ்ட்மென்ட்தாங்க முக்கியம். அதனால அரசாங்கத்த, அது காங்கிரசாருந்தாலும் பிஜேபியாருந்தாலும் அடாவடியா எந்த முடிவும் எடுக்க விடமாட்டாங்க. மோடி வந்தா அந்த இன்வெஸ்ட்மென்ட் இன்னும் ஜாஸ்தியாகத்தான் சான்ஸ் இருக்கு. அதனால  நம்ம மீனவர்ங்க கச்சதீவுக்கிட்ட போயி மீன் புடிக்காம இருக்கறதத்தவிர வேற எந்த வழியும் இருக்கறா மாதிரி எனக்கு தெரியல.

ரஹீம்: என்ன ஜோசப் இப்படி சொல்லிட்டீங்க? பிஜேபி வந்தா இதுக்கு நிரந்தர தீர்வு கிடைச்சிரும்னு நினைச்சித்தான இங்க பாமகவும் மதிமுகவும் அவங்களோட கூட்டு வச்சிக்கறா மாதிரி தெரியுது!

ஜோசப்: அப்படியெல்லாம் இவங்களா நினைச்சிக்கிட்டா அவங்க என்ன பண்ணுவாங்க?

கணேஷ்: இவர் எப்பவும் இப்படித்தான் எதையாச்சும் சொல்லிக்கிட்டே இருப்பார் பாய். முதல்ல எல்லாரும் சேந்து மோடிய பிஎம்மா கொண்டு வரட்டும். அப்புறம் பாருங்க நடக்கறத.

ஜோசப் சிரிக்கிறார்: பாக்கத்தான போறோம்.

ரஹீம்: சரிங்க. இன்னொரு விஷயம். ரெண்டு நாளைக்கி முன்னால காங்கிரஸ் லீடர் ஒருத்தர் இந்தியாவுல இருக்கற சாதி அடிப்படையிலான ஒதுக்கீடு முறைய மாத்தி அமைக்கணும்னு ஏதோ சொன்னாரே அதப்பத்தி என்ன நினைக்கறீங்க?

கணேஷ்: கரெக்ட். சாதி அடிப்படையில இன்னும் எத்தன நாளைக்கித்தான் சலுகைக் குடுத்துக்கிட்டே இருக்கறது? ஜனார்தன் த்ரிவேதி சொல்றா மாதிரி இனிமே  பொருளாதார அடிப்படையில சலுகை குடுக்கற மெத்தேட் வரணும். அப்பத்தான் உண்மையிலயே ஏழையா இருக்கறவங்களுக்கு இந்த சலுகை போய் சேரும். என்ன சொல்றீங்க ஜோசப்?

ஜோசப்: சோனியா நேத்தைக்கி ஒரு அறிக்கை விட்டத பாக்கலையா? ஜனார்தன் சொன்னது அவரோட சொந்த ஐடியா. காங்கிரஸ் தலைமையில ஆட்சி இருக்கற வரைக்கும் இன்னைக்கி இருக்கறா மாதிரியேதான் ரிசர்வேஷன் பாலிசி தொடரும்னு சொன்னாரே. எனக்கும் இப்போதைக்கி அந்த மெத்தேட்தான் சரியா இருக்கும்னு தோனுது. ஏன் கேளுங்க, எல்லாருடைய ஆண்டு வருமானத்தையும் அவ்வளவு ஈசியா எஸ்டிமேட் பண்ண முடியாதுங்க.

கணேஷ்: எதுக்கு அப்படி சொல்றீங்க? தாசில்தார் கிட்ட வருமான செர்ட்டிஃபிக்கேட் வாங்கிட்டு வரணும்னு கண்டிஷன் போட வேண்டியதுதானே?

இப்பக் கூட எங்கல்லாம் வருமான சர்ட்டிஃபிகேட் வேணுமோ அங்கல்லாம் தாசில்தார் குடுக்கற சர்ட்டிஃபிக்கேட்தான செல்லுபடியாகுது?

ஜோசப்: (சிரிக்கிறார்) ஏங்க, குடுக்க வேண்டியத குடுத்தா எந்த மாதிரியான சர்ட்டிஃபிக்கேட்டையும் குடுக்கறதுக்கு இங்க ஆளுங்க இருக்காங்களே?ஏன்னமோ தெரியாத மாதிரி சொல்றீங்க?

கணேஷ்: அப்போ வருமான வரி ரிட்டன்ஸ் காப்பி கேளுங்க!

ரஹீம்: யோவ், வருமான வரி கட்ற அளவுக்கு வருமானம் இருக்கறவனுக்கு எதுக்குய்யா சலுகை? அத விட கீழ இருக்கறவங்களுக்குத்தான் இந்த மாதிரியான சலுகைங்க போய் சேரணும்? அதனால ஜோசப் சொல்றா மாதிரி இன்னும் கொஞ்ச நாளைக்கி சாதி அடிப்படையில ரிசர்வேஷன் குடுக்கறதுதான் சரி.  ஜோசப் இன்னொரு விஷயம்.

ஜோசப்: என்ன பாய் இன்னைக்கி ரொம்ப ஃபார்ம்ல இருக்கீங்க போலருக்கு. கடைக்கி போற ஐடியா ஏதும் இல்லையா?

ரஹீம்பாய் மணிக்கட்டை பார்க்கிறார்.  ஒரேயொரு விஷயம் அத்தோட முடிச்சிக்கலாம்.

ஜோசப்: சொல்லுங்க.

ரஹீம்: ஒரு வாரத்துக்கும் மேல நர்ஸ் ஸூடூடன்ஸ் எல்லாம் ஸ்ட்ரைக் பண்ணிக்கிட்டு இருக்காங்களே. யாருமே கண்டுக்கறா மாதிரி தெரியலையே?

கணேஷ்; ஏன்னா அவங்க கேக்கறதுல நியாயமே இல்ல, அதனாலதான்
.
ஜோசப்: அப்படி சொல்லிற முடியாதுங்க. கவர்ன்மென்ட் இன்ஸ்டிட்டியூட்ல படிக்கற நர்சுங்களுக்கு டெய்லி ஆறு மணி நேரம் ட்யூட்டி போட்டுட்டு ரெண்டு மணி நேரம் தான் தியரி க்ளாஸ் எடுக்கறாங்களாம். இந்த லட்சணத்துல அவங்களுக்கும் ப்ரைவேட்ல படிக்கறவங்களோட சேர்த்து என்ட்ரி எக்ஸாம் மாதிரி வச்சா எப்படிங்க? தியரியில ஸ்ட்ராங்கா இருக்கற ப்ரைவேட் ஸ்டூடன்ஸ்தான் எக்ஸாம்ல நல்லா பண்ணிருவாங்களே? அப்போ மாடு மாதிரி வேலை செஞ்ச கவர்ன்மென்ட் ஸ்டூடன்ஸ் என்னாவறது? என்னெ கேட்டா கவர்ன்மென்ட் ஹாஸ்ப்பிட்டல்ஸ்ல இருக்கற போஸ்ட்டுங்களுக்கு கவர்ன்மென்ட் இன்ஸ்ட்டியூட்ஸ்ல படிக்கறவங்களுக்குத்தான் ப்ரெஃபரன்ஸ் குடுக்கணும். ப்ரைவேட்ல படிக்கறவங்களுக்குத்தான் எத்தனையோ ப்ரைவேட் ஹாஸ்ப்பிட்டல்ஸ் இருக்கே. அங்க போகட்டும். இல்லன்னா ஃபாரினுக்கு போகட்டும். கவர்ன்மென்ட்ல படிக்கறவங்கள்ல நிறைய பேர் பேக்வேர்ட் கம்யூனிட்டியிலருந்து அதுவும் ஏழை குடும்பங்கள்லருந்து வர்றவங்க. இவங்களுக்கு ப்ரைவேட் ஹாஸ்ப்பிட்டல்ஸ்ல ஜாப் கிடைக்கறதுக்கு சான்ஸ் ரொம்பவே கம்மி. அதனால ஹைகோர்ட் என்ன சொல்லியிருந்தாலும் கவர்ன்மென்ட்ல படிக்கறவங்களுக்குன்னு  எழுபத்தஞ்சி சதவிகிதம் சீட்ஸ் ரிசர்வ் பண்ணிட்டு மீதி இருக்கற சீட்டுக்கு வேணும்னா காமன் எக்ஸாம் வச்சி செலக்ட் பண்ணிக்கலாம்.

ரஹீம்: கரெக்ட்டுங்க. அத விட்டுப்போட்டு பரீட்சையில அஞ்சி மார்க் ஜாஸ்தி தரேன், பத்து மார்க் ஜாஸ்தி தரேன்னு சொல்றதெல்லாம் அவங்கள இன்சல்ட் பண்றா மாதிரி இருக்கு.

கணேஷ்:  எதையும் உருப்பட விடமாட்டீங்களே? அப்புறம் கவர்ன்மென்ட் ஆஸ்ப்பிட்டல்ஸ்ல ட்ரீட்மென்ட் நல்லால்லேன்னு சொல்றதுல என்ன நியாயம் இருக்குது?

ரஹீம்: உங்கள மாதிரி ஆளுங்களுக்கு ஏழைங்க நல்லாவறதே புடிக்காதே? சரிங்க டைம் ஆயிருச்சி.  அடுத்த வாரம் பாக்கலாம்.

ரஹீம் பாய் வீட்டிற்குள் செல்ல ஜோசப்பும் கணேஷும் சாலையில் இறங்கி தத்தம் வீடு நோக்கி செல்கின்றனர்.

**************